ஆலிவ் எண்ணெயின் நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் – Olive Oil Benefits, Uses and Side Effects in Tamil

Written by StyleCraze

ஆலிவ் எண்ணெய் என்ற பெயர் புதிதான விஷயம் போன்று ஒலித்தாலும், இந்த எண்ணெயை பழங்காலத்தில் இருந்தே மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்; பழங்கால மக்கள் ஆலிவ் எண்ணெயை ‘திரவ தங்கம்’ என்று அழைப்பர். ஆங்கிலத்தில் Olive oil என்று அழைக்கப்படும், ஆலிவ் எண்ணெயை தமிழில் இடலை எண்ணெய் என்று வழங்குவர்; இடலை எண்ணெய் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இடலை எண்ணெயை சங்க காலத்தில் இருந்தே மக்கள் சமையலுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர்; ஆனால், இந்த எண்ணெயை சருமத்திற்கு, தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் பல நன்மைகளை தருகிறது. அப்படி ஆலிவ் எண்ணெயால் ஏற்படும் முக்கிய நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் என்னென்ன என்று MomJunctioon வழங்கும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆலிவ் எண்ணெயின் வகைகள் – Types of Olive Oil in Tamil

ஒலியா யூரோபியா எனும் அறிவியல் பெயர் கொண்ட, ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த ஆலிவ் எண்ணெய், ஆலிவ் பழத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது; இந்த ஆலிவ் ஆயில் ஒரு சில குறிப்பிட்ட பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயின் வகைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

 1. விர்ஜின் ஆலிவ் ஆயில் – ஆலிவ் எண்ணெயின் மிக பிரபலமான, எல்லோராலும் அறியப்பட்ட ஒரு வகை விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆகும்; இது குறைந்த அமிலத்தன்மை கொண்டது. அதிகம் செலவழிக்காமல், ஆலிவ் எண்ணெயின் அத்தனை நன்மைகளையும் பெற இந்த வகை சிறந்தது
 2. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் – குளிர் அழுத்துதல் செய்யப்பட்ட ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் உடலுக்கு நல்லது என கருதப்படுகிறது. ஆனால், இது சற்று அதிக விலையுயர்ந்தது; எல்லோராலும் வாங்க முடியாத விதத்தில் இதன் விலை அமைந்துள்ளது.
 3. தூய ஆலிவ் ஆயில் – இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் ஆகியவை கலந்த கலவையாகும்; இதில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், இது பயன்படுத்த உகந்ததல்ல.
 4. லம்பாண்டே ஆலிவ் எண்ணெய் – இந்த வகை எண்ணெய் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; இது சமையலுக்கு ஏற்றதல்ல.

இப்பொழுது ஆலிவ் ஆயிலின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் – Benefits of Olive Oil in Tamil

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பல; இந்த எண்ணெயால் ஏற்படும் சரும, கூந்தல், ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஆலிவ் எண்ணெயினால் ஏற்படும் சரும நன்மைகள் – Skin Benefits of Olive Oil in Tamil

இணையதளத்தில், விளம்பரத்தில் பிரபல நட்சத்திரங்கள், தான் அழகாக பயன்படுத்தியது என காட்டும் அழகு சாதன பொருட்களை உண்மை என நம்பி வாங்கி பயன்படுத்த விரைந்திருக்கிறீர்களா? ஆம் எனில் இது நீங்கள் அறிவுக்கண்ணை திறக்க வேண்டிய நேரம் ஆகும்.

சந்தையில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களால் தற்காலிக அழகு கிடைப்பதுடன், ஆபத்தை விளைவிக்கும் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு; ஆனால், இந்த அழகு சாதன பொருட்கள் தரக்கூடிய அனைத்து வித நன்மையையும் ஒரு எண்ணெயால் – ஆலிவ் எண்ணெயால் அளிக்க முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

ஆலிவ் எண்ணெய் தரும் அருமையான சரும நன்மைகளை பற்றி இங்கு பார்த்து அறியலாம்.!

நன்மை 1: முகப்பரு/ பருக்கள்

Shutterstock

முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் போன்றவை மறைய ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவும்; ஆலிவ் எண்ணெய் கொண்டு தினமும் இரவில், முகத்தில் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன்களை பார்க்க முடியும்.

ஆலிவ் எண்ணெயில் இருக்கக்கூடிய வைட்டமின் இ மற்றும் ஏ சத்துக்கள் முகத்தின் அழகை பாதுகாத்து, மேம்படுத்த உதவும். இந்த வைட்டமின்கள் முகத்தில் ஏற்படும் பரு, வடு, தழும்புகள் போன்றவற்றை முற்றிலுமாக போக்க உதவும்.

நன்மை 2: தோலை ஒளிரச்செய்யும்

ஆலிவ் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ சத்து, தோலில் உள்ள செல்கள் சேதமடையாமல் பாதுகாத்து, சருமத்தை மிளிரச் செய்யும். ஆலிவ் ஆயிலை தினமும் சருமத்தில் தடவி, மசாஜ் செய்து வந்தால், சருமம் பொலிவான, மிளிரும் தோற்றத்தை பெறுவதை காணலாம்.

இவ்வாறு சருமத்தை மிளிரச் செய்து, வயதாவதை தடுத்து, இளமை தோற்றத்தை பெற முக்கிய உதவி புரிவது, ஆலிவ் எண்ணெயில் காணப்படும் ஸ்குவாலின் அமிலம் ஆகும்.

நன்மை 3: வயதாவதை எதிர்த்து போராடும்/ சுருக்கங்கள்

Shutterstock

வயது அதிகரிக்க தொடங்கினால், தோல் தளர்ந்து, தொங்கிப்போய் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும். இவ்வாறு தோலில் ஏற்படும் சுருக்கங்கள், வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறையை முயற்சித்து பார்க்கலாம்.

தேவையானவை:

 • 2 தேக்கரண்டிகள் ஆலிவ் எண்ணெய்
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • ஒரு சிட்டிகை கடல் உப்பு

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்து, தோலில் மசாஜ் செய்யுங்கள்
 2. மிஞ்சி இருக்கும் ஆலிவ் எண்ணெயை கடல் உப்புடன் கலந்து, ஒரு தளர்த்தியை தயாரித்து கொள்ளுங்கள்
 3. இக்கலவையில் புத்துணர்வுக்காக, எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளுங்கள்
 4. சருமத்தின் வறண்ட, கடினமான, செதிலான இடங்களில் இந்த கலவையை தேய்த்து கொள்ளுங்கள்

நன்மை 4: சருமத்தை ஈரப்படுத்தும்

சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள குளித்த பின் பல மணி நேரங்கள் செலவழிக்கிறீர்களா? தோலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவும் கிரீம் அல்லது லோஷன் பாட்டில் ஒரு மாதத்திற்குள்ளாகவே தீர்ந்து விடுகிறதா? இந்த செலவுகளை குறைத்து, செயற்கை பொருட்கள் சேர்க்கப்படாத ஒரு இயற்கையான சரும ஈரப்படுத்தியை முயற்சிக்க நீங்கள் தயாரா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களது பதில் ஆம் என்று இருந்தால், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முறையை முயற்சித்து பாருங்கள்!

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் இ சத்துக்கள் நல்ல அளவில் உள்ளன; இதன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்பு சருமத்தை வெளிப்புற காரணிகளான சூரிய ஒளி அல்லது காற்று மாசு போன்றவற்றால் பாதிப்படையாமல் பாதுகாக்க உதவும் (1), (2). ஆலிவ் ஆயிலின் பிசுபிசுப்பில்லாத தன்மை, எல்லா விதமான சருமத்தையும் ஈரப்பதத்துடன் வைக்க உதவும் (3).

தேவையானவை:

 • 1 ஸ்பூன் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. நீங்கள் குளித்த பின் உடலில் இலேசான ஈரப்பதத்தினை வைத்துக்கொண்டு, ஆலிவ் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்யவும்
 2. மசாஜ் செய்த பின் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் மிதமான வெந்நீர் கொண்டு சருமத்தை கழுவவும்

குறிப்பு: நீங்கள் வறண்ட சருமம் கொண்டவர்களாக இருந்தால், இரவு தூங்க போகும் முன் ஆலிவ் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்; பின் காலை எழுந்து, சருமத்தை மிதமான வெந்நீர் கொண்டு கழுவவும்.

நன்மை 5: மேக்கப் நீக்கி

Shutterstock

எந்த பிராண்ட் மேக்கப் நீக்கி வாங்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? இனி நீங்கள் எந்த நிறுவன மேக்கப் நீக்கியையும் கடைகளில் வாங்க தேவையில்லை.

கடைகளில் எளிதாக, மலிவான விலையில் கிடைக்கக்கூடியது விர்ஜின் ஆலிவ் எண்ணெய். இது போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு சருமத்தை கையாளும் பொழுது, இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறைவு மற்றும் பணத்தை விரையமாகாமல் தடுப்பதுடன், ஆரோக்கியமான சருமத்தையும் பெறலாம்.

தேவையானவை:

 • 2 தேக்கரண்டிகள் ஆலிவ் எண்ணெய்
 • ⅓ கப் யோகர்ட்
 • ¼ கப் தேன்

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. இரண்டு காட்டன் பஞ்சுகளை ஆலிவ் எண்ணெயில் நனைத்து, அதனை முகத்தில் மேக்கப் அணிந்த இடங்களில் தேய்த்து கொள்ளுங்கள்
 2. ஒரு பருத்தி திண்டினை ஆலிவ் ஆயில் கொண்டு ஈரப்படுத்தி, அதை பயன்படுத்தி கண்களில் அணிந்த மேக்கப்பை நீக்கலாம்; ஆலிவ் எண்ணெய் மேக்கப்பை நீக்க பயன்படுவதுடன், உங்களது சருமத்தை மிருதுவாக்கவும் உதவுகிறது

நன்மை 6: உதடுகள்

அடிக்கடி புகைப்படம் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக நாம் மாறி வருகிறோம்; எடுத்த புகைப்படங்களை முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடும் பழக்கமும் நம்மில் பலருக்கு உண்டு. அப்படி எடுக்கும் புகைப்படங்களுக்கு அழகு சேர்ப்பது சிரிப்பும், அந்த சிரிப்பை ஏற்படுத்தும் உதடுகளும் தான். அப்படிப்பட்ட உதடுகளை வெடிப்புகளின்றி, அழகாக வைத்திருப்பது எப்படி என்றும், அதற்கு ஆலிவ் எண்ணெய் எப்படி உதவுகிறது என்றும் இங்கு பார்க்கலாம்.

தேவையானவை:

 • பொடித்த நாட்டு சர்க்கரை
 • ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய்
 • சிறிதளவு எலுமிச்சை சாறு

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் கலந்து, தூங்க போவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் இக்கலவையை உதட்டில் தேய்த்து கொள்ளுங்கள்
 2. ஆலிவ் எண்ணெய், வெடிப்புகளற்ற உதடுகளை பெற உதவும்; சர்க்கரை மற்றும் எலுமிச்சை போன்றவை நல்ல தளர்த்திகளாக செயல்படும்.

நன்மை 7: ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

Shutterstock

அழகான, பொலிவான தோற்றத்தை பெற வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பம்; அந்த அழகும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு, இயற்கை முறையில் கிடைக்க வேண்டும் என்பதே அனைவர் விரும்பும் ஒரு முக்கிய விஷயமாகும். கடைகளில் கிடைக்கும் எந்தவொரு அழகு சாதன பொருளும், ஏதேனும் ஒரு பழம் அல்லது காய்கறியில் இருந்து எடுக்கப்பட்ட சாறு கொண்டு தயாரிக்கப்பட்டதே! ஆகையால், நாம் இந்த செயற்கை அழகு சாதன பொருட்களை விடுத்து, அப்பழம் அல்லது காய்கறிகளையே நேரடியாக பயன்படுத்திவிடலாம்.

ஆலிவ் எண்ணெய் எப்படி உதவும்?

ஆலிவ் எண்ணெயில் காணப்படும் வைட்டமின் இ, சருமத்தில் ஏற்படும் அழற்சி, முகப்பரு போன்றவற்றை குணப்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்; மேலும் இது சருமத்தில் ஏற்படக்கூடிய தீவிர பிரச்சனைகளான சொரியாசிஸ் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும்(4). தேன் ஒரு ஈரப்படுத்தியாகவும், யோகர்ட் ஒரு நல்ல தளர்த்தியாகவும் செயல்பட்டு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்(5).

தேவையானவை:

 • 2 தேக்கரண்டிகள் ஆலிவ் எண்ணெய்
 • ⅓ கப் யோகர்ட்
 • ¼ கப் தேன்

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அடர்த்தியான திரவத்தை உருவாக்கி கொள்ளுங்கள்
 2. இத்திரவத்தை சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்
 3. பின்னர், சருமத்தை மிதமான சூடு தண்ணீர் கொண்டு கழுவவும்.

இந்த செய்முறையை வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தால், நல்ல பலனை பெற முடியும்.

ஆலிவ் எண்ணெயினால் ஏற்படும் தலைமுடி நன்மைகள் – Hair Benefits of Olive Oil in Tamil

பெரும்பாலுமான பெண்களுக்கு அடர்த்தியான, நீண்ட கூந்தலை பெற வேண்டும் என்பதே ஆசை; பெருவாரியான ஆண்களும் தலை முடி பிரச்சனைகள் இல்லாத, ஆரோக்கியமான கூந்தலை பெற விரும்புகின்றனர். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி ஆரோக்கியமான தலைமுடியை பெறுவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

நன்மை 1: முடி வளர்ச்சி

Shutterstock

சிறு வயதிலிருந்தே தலைக்கு குளிக்கும் முன், எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்; அவர்கள் கூறியதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதே அக்காரணம் ஆகும்.

இப்பொழுது ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால், தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, எப்படி மசாஜ் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

தேவையானவை:

 • 1 சிறிய கப் ஆலிவ் எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. ஆலிவ் எண்ணெயை சூடு செய்து, அதனை உச்சந்தலை முழுவதும் தடவி, நன்கு மசாஜ் செய்து கொள்ளவும்
 2. பின் 20 நிமிடங்கள் நன்கு ஊற வைத்து, மிதமான சூடு நீர் கொண்டு தலைக்கு குளிக்கவும்

நன்மை 2: பொடுகு

ஆலிவ் எண்ணெயில் நிறைந்திருக்கும் வைட்டமின் இ மற்றும் இதர சத்துக்கள், உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளான பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை போக்க உதவும்.

ஆலிவ் ஆயில் தலைமுடிக்கு ஈரப்பதம் அளித்து, உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவுகிறது.

நன்மை 3: ஆரோக்கியமான கூந்தல்

ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு சில பொருட்களை கலந்து, தலைமுடிக்கு பயன்படுத்தும் பொழுது ஆரோக்கியமான தலைமுடி எனும் அற்புத மாற்றம் உண்டாகிறது; இவ்வெண்ணெயில் இருக்கும் வைட்டமின் இ சத்து, முடி உதிர்தலுக்கு எதிராக போராடுகிறது(6). தலைமுடியை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவுகிறது; மேலும் இதில் அடங்கியுள்ள மக்னீசியம், ஜிங்க், சல்ஃபர், கால்சியம், பி வைட்டமின்கள் போன்றவை கூந்தலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன(7). முட்டையின் வெள்ளைக்கருவில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு பிரதான உதவியை புரிகின்றன(8).

தேவையானவை:

 • ½ கப் ஆலிவ் எண்ணெய்
 • முட்டையின் வெள்ளைக்கரு
 • 2 தேக்கரண்டி தேன்

நீங்கள் செய்ய வேண்டியது:

 1. கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றாய் கலந்து, ஒரு மென்மையான பேஸ்ட்டை தயாரிக்கவும்
 2. தயார் செய்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி, 20 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும்
 3. பின்னர் மிதமான சூடு நீர் கொண்டு தலைக்கு குளிக்கவும் மற்றும் இதை தொடர்ந்து தலைமுடிக்கு கண்டிஷனரை பயன்படுத்தவும்

ஆலிவ் எண்ணெயினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் – Health Benefits of Olive Oil in Tamil

ஆலிவ் எண்ணெயால் ஏற்படும் அழகு சார்ந்த நன்மைகளை பற்றி இதுவரை பார்த்து அறிந்தோம். இப்பொழுது ஆலிவ் ஆயில் தரும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

நன்மை 1: உடல் எடையை குறைத்தல்

Shutterstock

உடல் எடையை குறைப்பது என்பது எப்பொழுதும் எளிதான காரியமாக இருப்பதில்லை; ஆனால், உங்களுக்கு விருப்பமான உணவுகளை உண்டே எடையை குறைக்க முடியும் என்று கூறினால் நம்புவீர்களா?

உங்களுக்கு பிடித்த உணவுகளின் மீது ஆலிவ் எண்ணெயை தூவி விட்டோ அல்லது உணவுகளில் ஆலிவ் எண்ணெயை சேர்த்தோ சமைத்து உண்பதால், எளிதில் எடையை குறைக்க முடியும்.

பொது ஆரோக்கிய ஹார்வர்ட் பள்ளி வெளியிட்ட அறிக்கையில், ஆலிவ் எண்ணெய் உடல் எடையை குறைக்க உதவும் என்பது தெளிவாகியுள்ளது. இந்த அறிக்கையில் இரு விதமான டயட் முறைகளும் (மிதமான கொழுப்புள்ள ஆலிவ் எண்ணெய் சேர்த்த டயட் மற்றும் குறைவான கொழுப்பு கொண்ட டயட்) உடல் எடையை குறைக்க பங்களித்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில், வெறும் 20 சதவிகித மக்கள் மட்டும் இன்னமும் இந்த கொழுப்பு குறைந்த டயட் உணவு முறையை பின்பற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்மை 2: மலச்சிக்கல்

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பல. மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க, ஆலிவ் ஆயில் பயன்படுகிறது; இரைப்பை குடல் மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு ஆலிவ் எண்ணெய் நன்மையளிக்கிறது(20). ஆலிவ் எண்ணெயின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைப்பு, உணவு பொருட்களை குடல் வழியாக மென்மையாக எடுத்துச் செல்வதன் மூலம், செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ஆலிவ் ஆயிலை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், மலச்சிக்கலை முற்றிலும் தடுத்து, அதிலிருந்து முழுமையாக விடுபடலாம். ஆலிவ் எண்ணெயில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன(21). பெருங்குடலில் உணவு எளிதாக, எப்பிரச்சனையும் இன்றி நகர இக்கொழுப்புகள் உதவுகின்றன. மேலும் இது மலத்தை விரைவாக வெளியேற செய்து, மலச்சிக்கலை தடுக்கிறது.

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் இ மற்றும் கே, இரும்பு, ஒமேகா – 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்களது செரிமான இயக்கம் உட்பட, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

நன்மை 3: நீரிழிவு நோய்/ இரத்த சர்க்கரை

Shutterstock

ஆலிவ் எண்ணெயை, உணவு முறையில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்; இதை பல ஆய்வறிக்கைகள் நிரூபித்துள்ளன.

பொது ஆரோக்கிய ஹார்வர்ட் பள்ளியின் கருத்துப்படி, மோனோ மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளை கொண்ட ஆலிவ் எண்ணெயை உணவு முறையில் சேர்த்து கொண்டால், அது நீரிழிவு நோயை தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது(12).

மருத்துவ ஊட்டச்சத்து அமெரிக்க மாதந்திர இதழ் வெளியிட்ட மற்றொரு ஆய்வு படிப்பினையில், ஆலிவ் ஆயில் உட்கொள்ளும் பெண்களில் சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது(13).

நன்மை 4: கண்கள்

ஆலிவ் ஆயிலில் பயன்கள் பல நிறைந்துள்ளன. ஆலிவ் எண்ணெய், குடல் பகுதிகளின் லூடெய்ன் சத்தினை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது; லூடெய்ன் சத்து கண் பார்வை மேம்பட பெரிதும் உதவும். லூடெய்ன் சத்தை உறிஞ்சும் திறனை அதிகம் கொண்டது ஆலிவ் எண்ணெய்; அதற்கு அடுத்தபடியாக திகழ்வது தேங்காய் எண்ணெய் ஆகும்.

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலில் எக்கச்சக்க ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உள்ளன; மேலும் இது லூடெய்ன் சத்தை அதிகம் உறிஞ்சும் திறன் கொண்டது. ஆலிவ் எண்ணெயின் இந்த பண்புகள் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிகம் உதவுகின்றன.

நன்மை 5: உயர் இரத்த அழுத்தம்

ஆலிவ் எண்ணெயை டயட் உணவு முறையில் சேர்த்துக் கொண்டால், உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம்; அதில் முக்கியமான மாற்றமாக இரத்த அழுத்தம் குறைவதை காணலாம்.

தொடர்ந்து, தினசரி ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்து கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்; இது சிஸ்டோலிக் (அதிகமான) மற்றும் டயஸ்டோலிக் (குறைந்த) ஆகிய இரண்டு இரத்த அழுத்தங்களையும் குறைக்க உதவுகிறது.

நன்மை 6: கொலஸ்ட்ரால்

Shutterstock

உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புகளை குறைக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. ஆலிவ் எண்ணெயில் தேவையான அளவு நிறைவுற்ற மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் காணப்படுகின்றன; ஆலிவ் எண்ணெயின் இந்த பண்பு இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 75-80% மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் நிறைந்துள்ளன; இவை உடலுக்கு நல்ல கொழுப்பு மற்றும் HDL போன்றவற்றை அளிக்கின்றன. இந்த கருத்துக்களை நிரூபிக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன; அதைக்குறித்து மேலும் படித்தறியுங்கள்.

மின்னெசோட்டா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், கிரீக், கிரேடன், மெடிட்டெர்ரனியன் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள், கிட்டத்தட்ட அமெரிக்கர்களின் அளவுக்கு கொழுப்பு உணவுகளை உண்டிருக்கின்றனர்; ஆனால், அவர்களில் இதய நோய் ஏற்படும் வீதம் மிகக்குறைவான அளவில் இருந்திருக்கிறது. இம்மக்கள் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது தான் இந்த வேறுபாட்டிற்கு காரணம் என்ற தகவல் நிரூபணமாகி உள்ளது.

ஸ்பெயினில் இருக்கும் யூனிவர்ஸிடட் அட்டோனோமா டி மாட்ரிட் வெளியிட்ட ஆய்வு படிப்பினையில், எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் சேர்க்கப்பட்ட டயட் உணவு முறை, மனித உடலில் LDL கொழுப்பு அளவுகளை குறைப்பதாகவும், மேலும் இது HDL எனும் நல்ல கொழுப்பை அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நன்மை 7: மூளை ஆரோக்கியம்

அமெரிக்க அறிவியலின் கருத்துப்படி, ஆலிவ் எண்ணெய் அல்சைமர் நோயைத் தடுத்து, மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்(14). அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியும் இதே போன்ற கருத்தை கண்டறிந்து வெளியிட்டுள்ளது(15).

அமெரிக்கன் படிப்பினையில், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் எலிகளில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் போன்றவற்றை அதிகரிக்க உதவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது(16).

நன்மை 8: எலும்புகளை பலப்படுத்தும்

எலும்புகளை பலப்படுத்த கால்சியம் மட்டுமே பயன்படும் என்று அறிந்திருப்போம் – ஆனால், ஆலிவ் எண்ணெயும் எலும்புகளை பலப்படுத்த உதவும்.

மெடிட்டெர்ரனியன் டயட் உணவு முறையை மேற்கொள்ளும் ஆண்களில், ஆலிவ் எண்ணெய் அவர்தம் எலும்புகளை பலப்படுத்தியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கருத்து தெரிவிக்கிறது. அவர்களின் இரத்தத்தில் ஆரோக்கியமான எலும்பு உருவாக்கம் மற்றும் அமைப்பை குறிக்கும் ஆஸ்டியோகால்சின் சத்து அதிக அளவு காணப்படுவதாக கூறப்படுகிறது(17), (18).

நன்மை 9: அழற்சி/ வீக்கம்

சருமத்தில் ஏற்படும் தழும்புகள், அழற்சி, வீக்கம் போன்றவற்றை போக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது; இந்த பாதிப்புகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் கொண்டு, தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இது சருமத்தின் தோற்றம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவும்; உடலில் ஏற்பட்டிருக்கும் வெளிப்புற மற்றும் உட்புற காயங்களை குணப்படுத்தி, அவற்றால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.

ஆலிவ் எண்ணெயில் காணப்படும் ஓலியோகேந்தல், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டு எந்த ஒரு நோயையும் விரட்டியடிக்க உதவுகிறது(26).

நன்மை 10: இதய நோய்கள்

Shutterstock

மெடிட்டெர்ரனியன் டயட் உணவு முறையை மேற்கொள்ளும் நபர்களில் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது; இந்த உணவு முறையை மேற்கொண்டால், இதய நோய்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் இதய நோய்கள் குறையும் என்று பல ஆய்வுகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் உடலில் காணப்படும் LDL எனும் கெட்ட கொழுப்புக்களின் அளவை குறைத்து, இதய நோய்கள் ஏற்படும் பாதிப்பை பெருமளவு குறைக்கிறது; ஆலிவ் எண்ணெயில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பிற முக்கிய பண்புகள் உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. ஆலிவ் எண்ணெயில் இருக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், HDL எனும் நல்ல கொழுப்பின் அளவை உடலில் அதிகரிக்கின்றன.

நன்மை 11: புற்றுநோய்

ஆலிவ் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவுகளை உட்கொள்வது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்க உதவுகிறது; குறிப்பாக பெண்களில் ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்க இது உதவுகிறது.

சவூதி அரேபியன் ஆய்வறிக்கைகளில், ஆலிவ் இலைகளில் காணப்படும் ஒலேயூரோபியன் எனும் இயற்கையான பொருள், மார்பக புற்றுநோய்களுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது(10).

ஸ்பெயினில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், ஆலிவ் எண்ணெயை உட்கொண்ட 62 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது(11).

ஆலிவ் எண்ணெயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்ட, உடலில் காணப்படும் இறந்த அல்லது செயல்படாத செல்களை நீக்க அல்லது அவற்றை வெளியேற்ற உதவுகின்றன.

ஆலிவ் எண்ணெயில் இருக்கும் முக்கிய பொருட்கள், பண்புகள் புற்றநோயை ஏற்படுத்தும் செல்களுக்கு எதிராக போராடி, புற்றுநோயை தடுக்க மற்றும் போக்க உதவும் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன.

ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி? – How to Use Olive Oil in Tamil

Shutterstock

ஆலிவ் எண்ணெய் மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது; இதனை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்க்கலாம்:

1. சமைக்கப்படாத ஆலிவ் ஆயில்

ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயை இருமுறை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை காலையில், வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள்; மற்றொன்றை இரவு உறங்க செல்லும் முன் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால், உணவு உண்ட சில மணி நேரங்களுக்கு பிறகு ஆயிலை உட்கொள்ளலாம். இதை தினமும் செய்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

2. பழத்துடன் ஆலிவ் ஆயில்

சமைக்கப்படாத ஆலிவ் எண்ணெயின் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில், அதனை நார்ச்சத்து நிறைந்த பழங்களான ஆப்பிள் அல்லது ஆரஞ்சுடன் சேர்த்து உட்கொள்ளலாம். முதலில், காலையில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை உட்கொண்ட பின், பழத்தை உட்கொள்ளவும்; இல்லையேல் மாலை நார்ச்சத்து நிறைந்த காய்களான புரோக்கலி போன்றவற்றுடன் சேர்த்து ஆலிவ் எண்ணெயை உட்கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், உடல் கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

3. ஆரஞ்சு ஜூஸுடன் ஆலிவ் ஆயில்

ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறில், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்; இது மசகு அல்லது உயவு எண்ணெயாக செயல்பட்டு, நாள் முழுதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆலிவ் எண்ணெயை ஒரு கப் காஃபியுடன் சேர்த்தும் பருகலாம்.

4. எலுமிச்சை சாறுடன் ஆலிவ் ஆயில்

எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒரு தேக்கரண்டி எடுத்து – கலந்து பருகுவது மலச்சிக்கலில் இருந்து, இயற்கையான முறையில் விடுபட உதவும். தினமும் ஒருமுறை இந்த பானத்தை பருகுவது நல்லது; மாலையில் எலுமிச்சையுடன் ஆலிவ் ஆயிலை சேர்த்து அருந்துவது, பெருங்குடலை சுத்தப்படுத்தி, உறங்குகையில் உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

5. பாலுடன் ஆலிவ் ஆயில்

மலச்சிக்கலை குணப்படுத்த இது ஒரு மிகச்சிறந்த தீர்வு ஆகும்; ஒரு கப் சூடான பாலில், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை சேர்த்து வெறும் வயிற்றில், இதை தினமும் பருகி வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபட முடியும்.

ஆலிவ் எண்ணெயினால் ஏற்படும் பக்க விளைவுகள் – Side Effects of Olive Oil in Tamil

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பலவற்றை பார்த்து, படித்தறிந்தோம்; ஒரு பொருளுக்கு நன்மை என்ற ஒரு பக்கம் இருந்தால், தீமை என்ற ஒரு பக்கமும் நிச்சயம் இருக்கும். இப்பொழுது ஆலிவ் ஆயிலினால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம்.

ஆலிவ் எண்ணெயின் பக்க விளைவுகளாவன:

ஒரு சில நபர்களுக்கு ஆலிவ் எண்ணெயால் ஒவ்வாமை ஏற்படலாம்; ஆலிவ் எண்ணெய் தொடர்பான ஒவ்வாமை கொண்ட ஒரு நபர், இந்த எண்ணெயை தனது சருமத்திற்கு பயன்படுத்தினால், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆலிவ் எண்ணெய்க்கு எதிராக போராட தொடங்கும். இதனால், அலர்ஜிகளுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்படும்; ஆலிவ் ஆயில் குறித்த ஒவ்வாமை உணர்வு கொண்டவர்கள், இதை பயன்படுத்தினால் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும் தடிப்புகள், சிரங்கு போன்றவை தோன்றி பரவலாம். ஆகையால் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்த தொடங்கும் முன், முறையான பேட்ச் பரிசோதனை, மருத்துவ கலந்தாய்வு போன்றவற்றை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.

ஆலிவ் எண்ணெயில் அதிக கலோரிகள் இருப்பதால், இதை அதிகம் உட்கொண்டால், இதனால் இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு; ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டிகளுக்கு மேல் ஆலிவ் ஆயிலை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளும் சர்க்கரை நோயாளிகள், ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தும் முன், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது; நீரிழிவு நோயாளிகள் ஆலிவ் ஆயிலை உட்கொண்டால், அது அவர்தம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிப்பது போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

அறிவுறுத்தபட்ட அளவுக்கு அதிகமாக ஆலிவ் ஆயிலை உட்கொண்டால், அது இரத்த அழுத்தத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தை பெருமளவு குறைத்து விடும்; மேலும் பித்தப்பை தடுப்பு போன்ற இதர நோய்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

ஆலிவ் ஆயிலை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அதிலிருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் உடல் எடையை அதிகரித்துவிடலாம்.

ஆலிவ் எண்ணெயை அதிக நேரத்திற்கு சூடு செய்யக்கூடாது (20 முதல் 30 நொடிகளுக்கு மேல்); ஏனெனில் இது விரைவில் எரிந்து, இதிலிருக்கும் நன்மை பயக்கும் பண்புகள் மறைந்துவிட வாய்ப்பு உண்டு.

சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல், எப்பொழுதும் ஆலிவ் எண்ணெயை காயங்கள் அல்லது புண்கள் மீது தடவ வேண்டாம்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆலிவ் எண்ணெயை குறைவான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆலிவ் எண்ணெயின் பயன்கள் பலவற்றை குறித்து இப்பதிப்பில் படித்து அறிந்தோம்; சருமம், கூந்தல், உடல் ஆரோக்கியம் என ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆலிவ் ஆயிலின் பயன்களை எண்ணிப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக உள்ளதல்லவா! தகுந்த மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொண்ட பின், மருத்துவரின் அறிவுரைப்படி ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.

நீங்கள் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தியிருக்கிறீர்களா? எவ்வகை எண்ணெயை பயன்படுத்தினீர்? உங்களின் அனுபவம் எப்படி இருக்கிறது? இது போன்ற கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..! ஆரோக்கியத்துடன் வளமாக வாழுங்கள்! வாழ்க வளமுடன்..!

Was this article helpful?
The following two tabs change content below.