அத்திப்பழத்தின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Figs (Anjeer) Benefits, Uses and Side Effects in Tamil

Written by StyleCraze

மனிதர்களால் பழங்காலத்தில் இருந்தே உட்கொள்ளப்பட்டு வரும் ஒரு முக்கியமான பழ வகை அத்தி பழங்கள் ஆகும். பைபிளில் வரும் ஆதாம் – ஏவாள் கதையில், ஏவாள் பறித்து உண்ட பழம் ஆப்பிள் அல்ல, அது அத்திப்பழம் தான் என்று பலரும் இன்று வரை நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இது விசித்திரமாக இருக்கிறது அல்லவா! உலக அழகி கிளியோபாட்ராவுக்கு மிகவும் விருப்பமான ஒரு பழம் – அத்திப்பழம் என்று நீங்கள் அறிவீரா?

இன்னும் எத்தனை எத்தனையோ கதைகள் மற்றும் அறியப்படாத தகவல்களை உள்ளடக்கி கொண்டு இருக்கிறது இந்த அத்திப்பழம். அத்திப்பழம் குறித்த எல்லா வித சுவாரசியமான கதைகளையும், அது தரும் நன்மைகள், பயன்கள் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இப்பதிப்பில் படிக்கலாம், வாருங்கள்..!

அத்திப்பழத்தின் வகைகள்

பொதுவாக அத்தி பழம் ஐந்து வகைப்படும்; ஒவ்வொரு அத்திப்பழ வகையும் சுவையிலும், குணத்திலும் மாறுபட்டு காணப்படுகிறது. அத்திப்பழத்தின் வகைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்:

 1. பிளாக் மிஷன் – பிளாக் மிஷன் அத்தி பழங்கள், வெளிப்புறத்தில் கருப்பு கலந்த ஊதா (பர்ப்பிள்) நிறத்திலும், உட்புறத்தில் பிங்க் நிறத்திலும் இருக்கும். இவை நம்ப முடியாத வகையில் அதீத இனிப்பு மற்றும் சிரப் போன்ற தன்மையை கொண்டவை; இப்பழங்களை இனிப்புகளுடன் சேர்த்தோ அல்லது கேக்குகளுடன் கலந்தோ அல்லது குக்கீ சமையல்களில் சுவையை கூட்டுவதற்கோ பயன்படுத்தலாம்.
 1. கடோட்டா – கடோட்டா பழங்கள் பச்சை நிறம் மற்றும் ஊதா (பர்ப்பிள்) நிற சதையை கொண்டவை; இவை மற்ற எல்லா அத்தி பழ வகைகளை விட குறைவான இனிப்பு சுவையை கொண்டவை. இப்பழங்களை சமைக்காமல், சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
 1. காலிமிர்னா – காலிமிர்னா வகை அத்தி பழங்கள் பச்சை கலந்த மஞ்சள் நிற வெளித்தோற்றத்தையும், தேன் போன்ற (அம்பர்) நிற உட்புறத்தையும் கொண்டது; மற்ற அத்தி பழ வகைகளை காட்டிலும் இவை அளவில் பெரியவை மற்றும் தனித்த, பலமான பருப்பு சுவையை கொண்டவை.
 1. பிரவுன் டர்க்கி – பிரவுன் டர்க்கி வகை அத்தி பழங்கள் ஊதா (பர்ப்பிள்) நிற தோல் மற்றும் சிவப்பு நிற சதை பகுதியையும் கொண்டவை; இவை மற்ற அத்திப்பழ வகைகளை காட்டிலும் இலேசான இனிப்பு சுவை கொண்டவை. சாலட்டில் சேர்த்து சாப்பிட ஏற்றவை.
 1. அட்ரியாட்டிக் – அட்ரியாட்டிக் வகை அத்தி பழங்கள் இலேசான பச்சை நிற தோல் மற்றும் பிங்க் நிற உட்பகுதியையும் கொண்டவை; இப்பழங்கள் பொதுவாக அத்திப்பழ மிட்டாய்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் இலேசான நிறத்தில் காணப்படுவதால், வெள்ளை அத்தி பழங்கள் என்று அழைக்கப்படுகின்றன; இவை அதிகப்படியான இனிப்பு சுவையை கொண்டவை மற்றும் ஒரு நல்ல இனிப்பு உணவாக உண்ண ஏற்றவை.

அத்திப்பழத்தின் நன்மைகள்

அத்திப்பழம் பழங்காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு முக்கிய உணவு பொருள் ஆகும்; இது ஆங்கிலத்தில் Fig என்றும், இந்தி மொழியில் Anjeer என்றும் பரவலாக வழங்கப்படுகிறது. இது ஒரு பிரபலமான, ஆரோக்கியமான பழ வகையாகவும் இருந்து வருகிறது. இந்த பத்தியில் அத்தி பழத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள், பயன்கள் என்னென்ன என்று பார்த்து, படித்து அறியலாம்.!

அத்திப்பழம் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள்

அத்தி பழம் ஏராளமான நன்மைகளை அளிக்க கூடியது என்று பலர் சொல்ல கேள்வியுற்று இருப்போம்; ஆனால், நம்ப முடியாத அளவு ஏகப்பட்ட ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளை, நம்மால் அத்தி பழத்தில் இருந்து பெற முடியும். அவ்வகையில் அத்திப்பழம் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பயன்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

நன்மை 1: செரிமானம்

Shutterstock

அத்தி பழங்கள் மலச்சிக்கலை தடுத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன; 2-3 அத்திப்பழங்களை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, அவற்றுடன் தேன் கலந்து அடுத்த நாள் காலையில் உட்கொள்ளலாம். இது மலச்சிக்கலை முழுமையாக தடுத்து நிறுத்த உதவும்.

செரிமானத்தை மேம்படுத்த உதவும் முக்கிய சத்து நார்ச்சத்து ஆகும்; அஞ்சீர் என அழைக்கப்படும் அத்தி பழங்களில் அதிகப்படியான உணவு முறை நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் மலத்தை சரியான முறையில் வெளியேற்றி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க உதவும். இது மலக்குடலில் சேர்ந்திருக்கும் மலத்தை மிருதுவாக வெளியேற்றி, உடலின் ஓட்டத்தை மேம்படுத்துகிறது; அத்தி பழத்தில் இருக்கும் நார்ச்சத்து டையேரியா எனும் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கவும், உடலின் செரிமான அமைப்பை சரியான முறையில் வைத்து இருக்கவும் உதவுகிறது.

உடலின் செரிமான அமைப்பின் இயக்கத்தை சரிப்படுத்த அதிகளவு நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம் மற்றும் அத்தி பழங்களை உண்பது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து, வயிறு நிறைந்தது போன்ற உணர்வை அளிக்கவல்லது (1).

நன்மை 2: இதய ஆரோக்கியம்

இரத்தத்தில் காணப்படும் ட்ரை கிளிசரைட் அளவுகளை குறைத்து, இதய ஆரோக்கியத்தை முன்னேற்ற அத்திப்பழங்கள் உதவுகின்றன.

இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைட் கொழுப்பு உறுப்புகள் இதய நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை; அத்தி பழங்களில் நிறைந்து இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உடலில் காணப்படும் கரோனரி தமனியில் அடைப்பை ஏற்படுத்தும் தேவையற்ற செல்களை நீக்கி, இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கின்றது (2).

அத்தி பழங்களில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன; இவை இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் தன்மை கொண்டவை.

அத்திப்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இரத்த அழுத்தத்தை குறைத்து, கரோனரி தமனியை அடைக்கும் தன்மை கொண்ட உடலில் காணப்படும் தேவையற்ற செல்களை நீக்கி கரோனரி இதய நோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன (3).

மேலும் அத்தி பழங்களில் இருக்கும் பொட்டாசியம்,  ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பை தடுக்க பெரிதும் உதவுகின்றன (4).

நன்மை 3: உடல் எடை குறைத்தல்

Shutterstock

அத்தி பழத்தில் பல விதமான சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து உள்ளன; ஆனால், இப்பழங்களில் கொழுப்பு சத்து மிகக்குறைவாக உள்ளது அல்லது கொழுப்பு சத்துக்கள் இல்லவே இல்லை எனலாம். ஒரு பெரிய அத்தி பழத்தில் 47 கலோரிகள் மட்டுமே அடங்கியுள்ளன; எனவே உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள், அத்தி பழங்களை நொறுக்கு தீனிகளாக எடுத்து கொள்ளலாம்.

உலர்ந்த அத்தி பழங்களில் அதிக நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது; அத்தி பழத்தில் இருந்து உடல் 0.2 சதவிகித கொழுப்பை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஆகையால், இது உடல் எடை குறைத்தலுக்கு ஏற்ற ஒரு உணவு ஆகும்.

நன்மை 4: கொலஸ்ட்ரால்

அத்தி பழத்தில் இருக்கும் பெக்டின் ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும்; இது உடலின் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவுகிறது (5). அத்திப்பழத்தில் உள்ள இந்த நார்ச்சத்து உடலின் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து, மலக்குடலின் இயக்கத்தை மேம்படுத்தி, செரிமான அமைப்பை முறைப்படுத்துகிறது.

அத்திப்பழங்களில், செரோடோனினை உற்பத்தி செய்யும் வைட்டமின் பி6 நிறைந்து உள்ளது; செரோடோனின் உங்களது மனநிலையை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. உலர்ந்த அத்தி பழங்களில் காணப்படும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் போன்றவை இயற்கை முறையில் உடலின் கொழுப்பை மட்டுப்படுத்தி, குறைக்க உதவுகின்றன.

நன்மை 5: இரத்த சோகை

Shutterstock

உடலில் இரும்புச்சத்து குறைவதால் இரத்த சோகை குறைபாடு ஏற்படுகிறது; உலர் அத்தி பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபினின் அடிப்படை உறுப்பு ஆகும். தேவையான அளவு உலர் அத்தி பழங்களை உண்பது, உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும் (6).

வளரும் குழந்தைகள், பருவ  வயதினர், மாதவிடாய் பருவத்தில் இருக்கும் & கர்ப்பமாக இருக்கும் நபர்களில் இரும்புச்சத்து குறைபாடு  ஏற்படலாம்; அவர்கள் முறையான மருத்துவ ஆலோசனையுடன் அத்தி பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவும், மேலும் இரத்த சோகை குறைபாட்டை முற்றிலுமாக போக்க உதவும் (7).

நன்மை 6: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

அத்தி பழம் மட்டுமில்லாமல், அத்தி மர இலைகளும் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கக்கூடியவை; உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க அத்தி மர இலைகள் பெரிதும் பயன்படுகின்றன. ஆய்வு படிப்பினையின் படி, உணவு முறையில் அத்தி மர இலைகளை சேர்த்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, இன்சுலினை அதிகரித்து நீரிழிவு நோயை போக்க உதவும்.

அத்தி மர இலைகளில் இருந்து தேநீர் தாயரித்தும் உட்கொள்ளலாம்; 4-5 இலைகளை எடுத்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அதை வடிகட்டி – வடிகட்டிய நீரை, தேநீர் போன்று பருகலாம். உலர்ந்த அத்தி மர இலைகளை எடுத்து, பொடி செய்தும் கூட பயன்படுத்தலாம்; அத்தி மர இலைப்பொடியை இரண்டு தேக்கரண்டி எடுத்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து பருகலாம். இச்செய்முறையை முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின் மேற்கொள்ளவும்.

நன்மை 7: புற்றுநோய்

அத்தி பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன மற்றும் பருவ வயதில் இருக்கும் பெண்கள் இந்த நார்ச்சத்துக்கள் நிறைந்த பழங்களை உட்கொள்வது, அவர்களில் மார்பக புற்றுநோய் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும் (8).

நார்ச்சத்துக்களை 16% -ற்கும் அதிகமாக எடுத்துக் கொள்வது மார்பக புற்றுநோய் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும் மற்றும் மெனோபாஸ் நிகழ்வதற்கு முன்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 24% குறைக்க உதவும் (9). அத்தி பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உலர் அத்தி பழங்கள் போன்றவை மெனோபாஸிற்கு பிறகு பெண்களில், மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.

அத்திப்பழங்களை தினசரியாக, தொடர்ந்து உட்கொண்டு வருவது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் (10). அத்தி பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, உடலில் உள்ள அசுத்தத்தை விரைந்து போக்க உதவுகிறது; மேலும் இது பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பை தடுத்து நிறுத்த உதவுகிறது. அத்தி பழத்தில் உள்ள எண்ணற்ற விதைகள், அதிகளவு மியூஸினை கொண்டுள்ளன; இவை பெருங்குடலில் உள்ள சளி மற்றும் அசுத்தங்களை சேகரித்து, அவற்றை வெளியேற்ற உதவுகின்றன.

நன்மை 8: எலும்புகளை பலப்படுத்தும்

அத்தி பழத்தில் காணப்படும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்த உதவுகின்றன. வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு உடைதலை தடுத்து, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க அத்தி பழங்கள் உதவுகின்றன; எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியத் தேவையான கால்சியம் அத்தி பழத்தில் நிறைந்து உள்ளது.

அத்தி பழங்களில் உள்ள பொட்டாசியம், உப்பு குறைந்த உணவு முறையால் ஏற்படும் யூரின் கால்சிய இழப்பை தடுக்க உதவுகிறது (11). இது எலும்புகள் மெலிதாவதை தடுக்க உதவுகிறது.

நன்மை 9: ஆஸ்துமா

மூச்சுக்குழாய் ஆஸ்துமாவை சரி செய்ய, வெந்தய விதைகள், தேன், அத்தி பழம் கலந்த கலவையை உட்கொள்ள வேண்டும்; அத்தி பழத்தை சாறாகவும் உட்கொள்ளலாம், இது ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

அத்தி பழங்கள், உடலில் காணப்படும் சளிச்சவ்வினை ஈரப்படுத்தி, கபத்தை காய வைக்க உதவுகின்றன; இதனால் ஆஸ்துமாவின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும் இப்பழங்களில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் உடலில் ஆஸ்துமா உருவாக காரணமாக இருக்கும் தேவையற்ற செல்களை அழிக்க பயன்படுகின்றன.

நன்மை 10: இரத்த அழுத்தம்

Shutterstock

அத்தி பழத்தை தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்வது, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என பல ஆராய்ச்சி கட்டுரைகள் கருத்து தெரிவிக்கின்றன. அத்தி பழங்களில் நிறைந்து இருக்கும் நார்ச்சத்து உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைத்து, அத்தி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குறைந்த இரத்த அழுத்த அளவை அப்படியே பராமரிக்க உதவுகிறது (12).

பொட்டாசியத்தை தவிர, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றன (13), (14).

நன்மை 11: ஆன்டி ஆக்சிடென்ட்

ஆன்டி ஆக்சிடென்ட்டுகளின் சக்தி வீடாக, அத்தி பழங்கள் திகழ்கின்றன; உடலில் நோயை உண்டு செய்யும் தேவையற்ற செல்களை போக்க அத்தி பழங்கள் பெரிதும் உதவுகின்றன. பழுத்த அத்தி பழங்கள் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை கொண்டு உள்ளன.

அத்தி பழங்களில் அதிக அளவு ஃபினோலிக் ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் நிறைந்து உள்ளன; இந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பிளாஸ்மாவின் லிப்போ புரதங்களை மேம்படுத்தி, மேலும் ஆக்சிடேஷன் நிகழாமல் பாதுகாக்க உதவுகின்றன (15).

நன்மை 12: பாலியல் திண்மை

அத்தி பழங்கள் ஒரு சிறந்த இனப்பெருக்க மற்றும் பாலியல் சப்ளிமெண்ட்டாக கருதப்படுகின்றன; இவை அதிக அளவு கால்சியம், இரும்பு, பொட்டாசியம், ஜிங்க் போன்ற சத்துக்களை கொண்டுள்ளன. அத்தி பழங்களில் அதிகப்படியான மக்னீசியம் மற்றும் தாது பொருட்களும் நிறைந்து உள்ளன; இவை உடலில் பாலியல் ஹார்மோன்களான ஆன்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன.

பாலியல் செயல் பிறழ்ச்சிகளான, மலட்டுத்தன்மை, விறைப்புத்தன்மை, பாலியல் பசி போன்ற பிரச்சனைகளை போக்க அத்தி பழங்கள் உதவுவதாக கூறப்படுகிறது; ஆனால், இதை நிரூபிக்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. பல கலாச்சார முறைகளில் குழந்தையின்மை குறைபாட்டை போக்க அத்தி பழங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன; இப்பழங்களில் உள்ள அமினோ அமிலம் நைட்ரிக் அமில உற்பத்தியை அதிகரித்து, உடலின் எல்லா உடல் உறுப்புகளுக்கும், பாலின உறுப்புகளுக்கும் சரியான இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது. பாலில் அத்தி பழங்களை ஊற வைத்து, அதை அடுத்த நாள் காலையில் உண்டால், அது பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.

நன்மை 13: தொண்டை புண்

அத்தி பழங்களில் இருக்கும் அதிகப்படியான மியூஸிலேஜ், தொண்டை புண்ணை குணப்படுத்தி, தொண்டையை பாதுகாக்க உதவுகிறது. இப்பழங்கள் தொண்டையை மிருதுவாக்கி, அவற்றின் இயற்கை சாறுகள் மூலம் தொண்டை வலி மற்றும் குரல்வளையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை போக்க உதவுகின்றன.

டான்ஸில்களை இயற்கையான முறையில் குணப்படுத்த அத்தி பழங்கள் பயன்படுகின்றன; டான்சில் குறைபாட்டால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்க இப்பழங்கள் உதவுகின்றன. வெந்நீர் மற்றும் அத்திப்பழம் கொண்டு ஒரு பேஸ்ட் தயாரித்து, அதை தொண்டையில் தடவவும்; இது தொண்டை வலியை குறைத்து, தொண்டையை மிருதுவாக்க உதவும்

நன்மை 14: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடலில் நோய்க்குறைபாடுகளை உருவாக்கும் பாக்டீரியா, வைரஸ், வட்ட புழுக்களை கொல்ல அத்தி பழங்கள் உதவுகின்றன; இவற்றில் இருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடென்ட் ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

நன்மை 15: ஆற்றலின் ஆதாரம்

அத்தி பழங்களை உணவு முறையில் சேர்த்து கொள்வது, உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும்; அத்தி பழங்களில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை, உடலின் ஆற்றல் சதவிகிதத்தை அதிகரிக்க உதவுகின்றன (16).

நன்மை 16: மலச்சிக்கல்

Shutterstock

அத்தி பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழ வகை ஆகும்; இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வது, உடலின் செரிமான இயக்கம் மற்றும் மலக்குடலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மலக்குடலில் ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்க நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிகவும் அவசியம்.

இவ்விரண்டு சத்துக்களும் அத்தி பழங்களில் நிறைந்து காணப்படுகின்றன; ஆகவே, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அத்தி பழங்களை தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அத்திப்பழம் தரும் சரும நன்மைகள்

அத்தி பழம் என்றாலே ஆரோக்கியம் தரும் பழம் என்ற எண்ணம் மட்டும் உங்களுக்குள் எழுகிறதா? இந்த பதிப்பின் இப்பகுதியை படித்து முடித்த பின் நிச்சயம் உங்கள் எண்ணத்தில் மாற்றம் நிகழும். இந்த பத்தியை படித்த பின் அத்திப்பழம் என்றால் அழகு என்ற விஷயமும் உங்கள் மனதில் இடம் பெறும்.

ஆம்! அத்திப்பழம் ஆரோக்கிய நன்மைகள் மட்டும் இல்லாமல், பல விதமான சரும, அழகு நன்மைகளையும் அளிக்கக்கூடியதாய் திகழ்கிறது. அத்தி பழம் அளிக்கும் சரும நன்மைகள் என்ன என்பதை நீங்களே படித்து பாருங்கள்!

நன்மை 1: சுருக்கங்கள்

ஒரு ஆய்வு படிப்பினையில், அத்தி பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி கொலாஜென்ஸ் பண்புகள், சருமத்தின் சுருக்கங்களை குறைத்து, அவற்றை ஆழமாக போக்க உதவுகின்றன (17).

பிறிதொரு ஆய்வு படிப்பினையில், அத்தி பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருள், சருமத்தில் மெலனின் அளவை குறைத்து, நீரிழப்பை தடுத்து, சருமத்தின் சீபத்தை பாதுகாக்க உதவுகிறது; மேலும் இது சருமத்தின் நீர்ச்சத்தை அதிகரித்து உள்ளது. எனவே, உடலின் நிறம், முகப்பரு, சுருக்கங்கள், விரிசல்கள் போன்ற எல்லா சரும பிரச்சனைகளையும் போக்க அத்திப்பழம் உதவுகிறது (18).

நன்மை 2: கொப்புளங்கள் & மருக்கள் (பாலுண்ணி)

Shutterstock

சருமத்தில் மருக்கள், பாலுண்ணிகள், கொப்புளங்கள் உள்ள இடங்களில், நேரடியாக அத்திப்பழங்களை தடவலாம்; இதில் உள்ள லேடெக்ஸ் மருக்களுக்கு எதிரான செயல்பாட்டை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இது லேடெக்ஸ் என்சைமின் புரோடியோலிடிக் செயல்பாடு காரணமாக நிகழலாம் (19).

நன்மை 3: சருமத்தை புத்துணர்வாக்கும்/ சருமத்தை மென்மையாக்கி, மிருதுவாக்கும்

சரும அழகை அதிகரிக்க அத்திப்பழங்கள் ஒரு சிறந்த தீர்வாகும்; அத்திப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் அல்லது அத்திப்பழ மாஸ்க்கை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சரும அழகை அதிகரிக்கலாம். இப்பொழுது அத்திப்பழ மாஸ்க் செய்வது எப்படி என பார்க்கலாம்:

ஒரு பெரிய அத்திப்பழம் அல்லது இரண்டு சிறிய அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளவும்; அத்திப்பழங்களை நறுக்கி, அதன் சதைப் பகுதியை எடுத்து நன்கு மசித்து கொள்ளவும். சருமத்தின் தன்மையை மேம்படுத்த விரும்பினால், அத்திப்பழத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது யோகர்ட்டை கலந்து கொள்ளவும்; இந்த கலவையை சருமத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊற வைத்து, பின் நீர் கொண்டு கழுவி விடவும். இதை செய்து முடித்த பின் புத்துணர்வான சருமத்தை பெறலாம்.

அத்தி பழத்தில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும்; அது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, வெள்ளையான சருமம் ஏற்பட உதவும். ஐந்து அத்தி பழங்களை சேர்த்து கூழாக்கி, மிருதுவான பேஸ்ட் ஒன்றை தயாரித்து கொள்ளவும். இப்பேஸ்ட்டில் தலா ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் உணவு, பால் மற்றும் அரை தேக்கரண்டி உலர்ந்த இஞ்சி பொடி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலக்கி கொள்ளவும். இதை முகம் மற்றும் சருமத்திற்கு வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால், மென்மையான, மிருதுவான சருமத்தை பெறலாம்.

அத்திப்பழம் அளிக்கும் தலைமுடி நன்மைகள்

அத்தி பழம் உண்டால், உடலில் நல்ல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என அறிந்து இருப்போம்; ஆனால், நமக்கு அழகு மற்றும் ஒரு சரியான அடையாளத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் தலைமுடிக்கும் அத்தி பழம் பல நன்மைகளை வழங்குகிறது.

அத்தி பழத்தினால் தலைமுடிக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் மாறுதல்கள் யாவை என இங்கு காண்போம்.

நன்மை 1: முடி வளர்ச்சி

Shutterstock

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி இழப்பு ஆகும்; அத்தி பழத்தில் மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான அளவு நிறைந்து உள்ளன. இவ்வூட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன; மேலும் இவை உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உச்சந்தலையில் முடியின் வளர்ச்சியை முடுக்கி விட உதவுகின்றன.

நன்மை 2: தலைமுடியை நிலைப்படுத்தும்

அத்தி பழம் என்பது முடி பராமரிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் ஆகும்; இப்பழங்களில் இருந்து எடுக்கப்படும் சாறுகள், பொருட்கள் தலைமுடியின் நிலைப்பாட்டை மேம்படுத்த உதவும் ஹேர் கண்டிஷனர்களை தயாரிக்க உதவுகின்றன. பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்கவும், முடி பாதிப்பை போக்கவும் உதவுகின்றன. இவை தலையில் பார உணர்வை ஏற்படுத்தாமல், முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கின்றன.

அத்திப்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு

அத்தி பழத்தில் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன; அத்தி பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சக்தி மையமாக விளங்குகின்றன. இப்பழங்கள் அதிகளவு பைட்டோ ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின்கள் போன்றவற்றை கொண்டுள்ளன. உலர்ந்த அத்தி பழங்களில் அதிகளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

அத்தி பழங்களில் அதிக அளவு இயற்கை சர்க்கரை மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன; அத்தி பழத்தில் நிறைந்து காணப்படும் ஊட்டச்த்துக்களின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

கொள்கைஊட்டச்சத்து மதிப்புRDA –இன் சதவீதம்
ஆற்றல்74 kcal4%
கார்போஹைட்ரேட்19.18 g15%
புரதம்0.75 g1.5%
மொத்த கொழுப்பு0.30 g1%
கொலஸ்ட்ரால்0 mg0%
நார்ச்சத்து2.9 g7%
வைட்டமின்கள் 
ஃபோலேட்6 ug1.5%
நியாசின்0.400 mg2.5%
பேன்டோதெனிக் அமிலம்0.300 mg6%
பைரிடாக்சின்0.113 mg9%
ரிபோஃபிளோவின்0.050 mg4%
தையமின்0.0605%
வைட்டமின் ஏ142 IU5%
வைட்டமின் சி2 mg3%
வைட்டமின் இ0.11 mg1%
வைட்டமின் கே4.7 ug4%
எலக்ட்ரோலைட்டுகள் 
சோடியம்1 mg0%
பொட்டாசியம்232 mg5%
தாது பொருட்கள்
கால்சியம்35 mg3.5%
காப்பர்/ தாமிரம்0.070 mg8%
இரும்பு0.37 mg5%
மக்னீசியம்17 mg4%
மாங்கனீசு0.128 mg5.5%
செலினியம்0.2 ug<1%
ஜிங்க்/ துத்தநாகம்0.15 mg1%
பைட்டோ ஊட்டச்சத்துக்கள்
கரோட்டீனின் – B85 ug
லூடெய்ன் – ஜியாசாந்தின்9 ug

அத்திப்பழத்தை பயன்படுத்துவது எப்படி?

Shutterstock

அத்தி பழங்கள் ஜூஸி மற்றும் இனிப்பு சுவை கொண்டவை; இவற்றின் சதைகள் மற்றும் மொறுமொறுப்பான விதைகளை மென்று சாப்பிடலாம், இவற்றின் சுவை அட்டகாசமாக இருக்கும். இப்பழங்களை பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ உட்கொள்ளலாம்; புதிதான அத்தி பழங்களில், வறண்ட பழங்களை காட்டிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இப்பழங்களை அதிகம் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம்; செயற்கை இனிப்பூட்டிகளை சேர்க்காமலேயே இப்பழங்கள் மிகவும் சுவை வாய்ந்ததாக இருக்கும்.

அத்தி பழங்களை சாப்பிடும் முன், அவற்றை நன்றாக கழுவி, தண்டுப்பகுதியை மெதுவாக நீக்கி விடவும்; புதிதான அத்தி பழங்களை அப்படியே அல்லது தோலுரித்து கூட உண்ணலாம். உறைய வைக்கப்பட்ட அத்திப்பழங்களை நீரில் இடுவதன் மூலம், அவற்றை சாறு நிறைந்த பழங்களாக பெற இயலும்.

உலர்ந்த அத்தி பழங்களை நொறுக்குத்தீனி போல் உட்கொள்ளலாம்; இவற்றை அறுத்து, உடன் உலர்ந்த கிரான் பெர்ரிகள், சிக்கன் சாலட் அல்லது காய்கறி சாலட் ஆகியவற்றை சேர்த்து சாண்ட்விச் போன்ற உணவுகளை தயாரித்து உட்கொள்ளலாம்.

புதிதான, துண்டாக்கப்பட்ட அத்திப்பழங்களில், வெண்ணெயை தடவி நொறுக்குதீனியாக உண்ணலாம்; தூய அத்தி பழங்களை பால்சமிக் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் சேர்த்து, ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ‘ஹோம் மேட்’ சாலட் தயாரித்து உண்ணலாம். புதிதான அத்தி பழங்களை சாலட், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அத்தி பழங்கள் அதிகளவு அல்கலைன் சத்துக்களை கொண்டுள்ளதால், இவற்றை வேறு உணவு வகைகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம்; இவை உணவின் சுவையை மாற்றாது. உலர்ந்த அத்தி பழங்கள், புதிதானவற்றை காட்டிலும் அதிக இனிப்பு அளவினை கொண்டவை; இவற்றை துண்டுகளாக அறுத்து, உணவுகளில் இனிப்பு சுவைக்காக பயன்படுத்தி கொள்ளலாம்.

பதப்படுத்தப்பட்ட அத்தி பழங்களை கொண்டு, பை (pie) வகை உணவுகள், புட்டிங்குகள், கேக்குகள், ஜாம்கள், இதர பேக்கரி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; மேலும் உலர்ந்த அத்தி பழங்களை முசெலி மிட்டாய்கள், கஞ்சி, தானியக்கலவை கஞ்சி போன்றவை தயாரிக்க பயன்படுத்தலாம். மேலும் உலர்ந்த அத்தி பழங்களை சூப்கள், ஸ்டியூக்கள் மற்றும் இறைச்சி வகைகளை தயாரிக்க மற்றும் அவற்றின் சுவையை கூட்ட பயன்படுத்தலாம்; சில இடங்களில் சர்க்கரைக்கு பதிலாக அத்திப்பழ பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

சில முக்கிய குறிப்புகள்:

 • நல்ல பலன்களை பெற புதிய அத்தி பழங்களை பயன்படுத்த வேண்டும்.
 • பழங்களை எப்பொழுதும் சுத்தமாக, மெதுவாக கழுவி பயன்படுத்தவும்.
 • அத்திப்பழங்களை நறுக்கும் அல்லது வெட்டும் முன், கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்து பயன்படுத்த வேண்டும்.
 • சுண்ணாம்பு கலந்த அத்தி பழங்கள் உண்பதை தவிர்க்கவும்.
 • உலர்ந்த அத்தி பழங்கள் மிகவும் கடினமடைந்து விட்டால், அவற்றை நீரில் ஊற வைத்து உபயோகிக்கலாம்.
 • குளிர்சாதன பெட்டியின், குளிரான பகுதியில் ஒரு பையில் அத்தி பழங்களை போட்டு வைத்து, பழங்களை சேமிக்கலாம்.

அத்திப்பழத்தை சேமித்து வைப்பது எப்படி?

அத்திப்பழத்தை கடைகளில் இருந்து வாங்கி வந்த பின், அவற்றை சேமித்து வைப்பது எப்படி என்று பார்க்கலாம்:

 • புதிதான அத்தி பழங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியாது; ஆகையால், அவற்றை வாங்கியவுடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து சேமிக்க வேண்டும். அத்தி பழங்களை ஒரு பிளாஸ்டிக் அல்லது ஜிப் பையில் போட்டு, அவற்றை அறுத்து விடாமல், அவற்றிற்கு சேதம் ஏற்படாத வகையில் சேமிக்க வேண்டும்.
 • இலேசாக பழுத்த அத்தி பழங்களை அறை வெப்பநிலையில், சூரிய ஒளி அவை மீது நேரடியாக படாத வகையில் வைக்க வேண்டும்; மீறி சூரிய ஒளி பட்டுவிட்டால் பழங்கள் விரைவில் பழுத்துவிடும்.
 • புதிதான அத்தி பழங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியாத காரணத்தால், அவற்றை 2 முதல் 3 நாட்களுக்குள் உண்டு விடுவது நல்லது.
 • குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்திருக்கும் அத்தி பழங்களை அவ்வப்போது வெளியே எடுத்து, ஒரு தண்ணீர் நிறைந்த பௌலில் இட்டு எடுக்கவும்; இது பழத்தின் சுவையையும், தன்மையையும் காக்க உதவும்.
 • உலர்ந்த அத்தி பழங்களை மாதக்கணக்கில் குளிர்சாதன பெட்டி அல்லது வறண்ட இடத்தில் சேமித்து வைக்கலாம்.
 • அத்தி பழங்களை முழுமையாகவோ, நறுக்கியோ அல்லது தோலுரித்தோ 3 மாத காலத்திற்கு சேமித்து வைக்கலாம்.
 • இப்பழங்கள் டப்பாக்களில் அடைக்கப்பட்டு 6 மாத காலத்திற்கு கெட்டுப்போகாத வகையில் கூட சேமிக்கப்படுகின்றன; ஆனால், அத்தி பழங்கள் நிறைந்த டப்பாவை திறந்து விட்டால், திறந்த தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் பழங்களை உண்டு முடித்து விட வேண்டியது மிகவும் அவசியம்.

அத்திப்பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்

அத்திப்பழம் ஃப்ரெக்டோஸ் சத்துக்களை கொண்டுள்ளது; ஆகையால், இதனை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் அத்தி பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன; எனவே இவை உடல்  எடை குறைப்பிற்கு பெரிதும் உதவாது. ஆகவே அத்தி பழங்களை உணவு முறையில் போதுமான, தேவையான அளவு மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.

பொதுவாக அத்தி பழம் பல வித ஆரோக்கிய, அழகு மற்றும் கூந்தல் நன்மைகளை வழங்குகிறது என்று பார்த்து அறிந்தோம். இந்த நன்மைகள் மட்டும் இல்லாமல், அத்திப்பழம் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குதல், உடலின் சருமத்தில் ஏற்படும் வெண்குஷ்டம், வெண்புள்ளிகள், தோலின் நிற மாற்றம் போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவுகிறது. இந்த தோல் சார்ந்த நன்மையில் முக்கிய இடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட அத்தி பழம் ஆகும்; இதனை சீமை அத்திப்பழம் என்றும் வழங்குவர். இந்த சீமை அத்தி பழத்தை தொடர்ந்து 40 நாட்களுக்கு உண்டு வந்தால் உடலின் பலம் அதிகம் ஆகும் என்று கூறுகின்றனர்.

நம் அனைவரின் உடலமைப்பும் வேறுபட்ட ஒன்று; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித உணவு முறை பிடிக்கும். மேலும் உட்கொள்ளும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளும் ஒவ்வொரு வகையில் இருக்கும்; எனவே, அத்தி பழங்களை உங்களது உணவு முறையில் சேர்த்து கொள்ளும் முன்னர், உங்களது மருத்துவரிடம் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். இந்த அத்தி பழத்தால் உடலில் ஒவ்வாமை போன்ற குறைபாடுகள் ஏற்படுமா என்று சோதித்து அறிந்த பின், இவற்றை உண்ண தொடங்குங்கள்; அதுவே நலம் பயக்கும்.

அத்திப்பழத்தை நீங்கள் முன்னரே உண்டதுண்டா? அதன் சுவை உங்களுக்கு பிடிக்குமா? அத்தி பழத்தால் உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Was this article helpful?
The following two tabs change content below.