சுரைக்காய் மற்றும் அதன் சாறு தரும் நன்மைகள்

Written by StyleCraze

சுரைக்காய் சாறு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் கொண்ட அதாவது பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த உணவு ஆகும்; இருப்பினும், இதைப் பச்சையாக குடிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். பச்சையாக சுரைக்காய் சாறை பருகினால், வாந்தி, வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் இரத்தப்போக்கு போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படலாம் (1).

இந்தியில் lauki எனவும், பாட்டில் சுண்டைக்காய், கலபாஷ் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட சாறை சமைத்து பருகுவது அதிக நன்மைகளை அளிக்கக்கூடியது. இப்பதிப்பில், சுரைக்காயின் நன்மைகள் (lauki benefits) மற்றும் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க இந்த சுரைக்காயை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய தகவல்களையும், சுரைக்காய் சாறு தரும் நன்மைகளை பற்றியும் படித்து அறியலாம்.

சுரைக்காய் நமது ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது?

அதிக அளவு நீர் மற்றும் ஏராளமான தாதுக்கள், வைட்டமின்களை கொண்ட ஒரு காய்கறி சுரைக்காய்; இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி, சோடியம், இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடெண்ட்டாக செயல்படக்கூடிய பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்தை பராமரித்தல்(3), கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தல், இரத்த சர்க்கரை அளவுகளை நிலைப்படுத்துதல், இரத்த அழுத்தத்தை பராமரித்தல் போன்ற பல விஷயங்கள் பாட்டில் சுண்டைக்காயின் நன்மைகளுள் (lauki benefits) அடங்கும்.(2)  இந்த நன்மைகள் அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பவை ஆகும்.

சுரைக்காயின் நன்மைகள் – Benefits of Bottle Gourd in Tamil

சரியான முறையில் சுரைக்காய் சாறு தயாரித்து பயன்படுத்தினால், கீழ்க்கண்ட நன்மைகளை பெறலாம்.

நன்மை 1: உடல் எடையை குறைத்தல்

சுரைக்காயில் முற்றிலும் கொழுப்புகள் அற்ற மிகக்குறைவான கலோரிகள் உள்ளன. இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீசு போன்றவை அடங்கியுள்ளன. இந்த அனைத்து சத்துகளும் நமக்கு நல்ல உறக்கத்தை அளித்து, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன.

நன்மை 2: செரிமானம்

செரிமான பிரச்சனைகளை தீர்க்க சுரைக்காய் சாறு பயன்படுகிறது; இக்காய்கறியில் உள்ள உணவுமுறை நார்ச்சத்து மலச்சிக்கல், வாயுத்தொல்லை, மூல நோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது (7).

சுரைக்காய் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீர் (decoction) செரிமான இயக்கத்தை சுத்தப்படுத்தி, மலச்சிக்கலை போக்க உதவும் என சில ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன (1).

நன்மை 3: இதய ஆரோக்கியம்

ஆராய்ச்சிகளின்படி, சுரைக்காய் ஒரு சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மருந்தாக செயல்பட்டு கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகின்றன என்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன; கார்டியோவாஸ்குலார் நோயின் ஆபத்தை தடுக்க இந்த சாறை பயன்படுத்தலாம் (4).

கார்டியோவாஸ்குலார் ஆபத்து விகிதம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் போன்றவற்றை குறைத்து, வாழ்க்கை முறை நோய்க்குறைபாடுகளை போக்க சுரைக்காய் சாறு பயன்படுகிறது (4). அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் இரத்த அழுத்தத்தை குறைக்க இக்காய்கறிச்சாறு  உதவும் (4).

எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மாரடைப்பு நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்க சுரைக்காய் சாறு உதவும் மற்றும் தொடர்ந்து இந்த சாறை அதிக அளவு அளித்தால், இதய பாதுகாப்பு செயல்பாடுகளில் நன்மை அளிப்பதை உறுதி செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது (5).

நன்மை 4: நீரிழிவு நோய்/  சர்க்கரை நோய்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை எடுத்துக் கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை குறைக்கும். இவ்வாறு இரத்த சர்க்கரை அளவுகளை குறைப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுரைக்காய் மற்றும் சுரைக்காய் சாறு உதவும். இது பாட்டில் சுண்டைக்காய் நன்மைகளுள் (lauki benefits) மிகவும் முக்கியமானது ஆகும்.

நன்மை 5: UTI

சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை சரி செய்ய சுரைக்காய் உதவும்; புதிதாக தயாரிக்கப்பட்ட சுரைக்காய் சாறில், புதிய எலுமிச்சை சாறை சேர்த்து உட்கொண்டால், அது சிறுநீர் பாதை நோய் தொற்றுகளுக்கு ஒரு நல்ல மருந்தாக அமையும்.

நன்மை 6: கொலஸ்ட்ரால்

சுரைக்காய் மற்றும் சுரைக்காய் சாறில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவுகின்றன. 90 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறை எடுத்துக் கொண்டால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவும். இவ்வாறு கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

நன்மை 7: இரத்த அழுத்தம்

சுரைக்காய் காய்கறியில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் உடலின் இரத்த அழுத்தத்தை சரியான முறையில் பராமரிக்க முடியும். சுரைக்காய் சாறை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், அது உடலின் இரத்த அளவுகளை பராமரித்து, அதிகப்படியான இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

நன்மை 8: புற்றுநோய்

எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், சுரைக்காய் சாறு கீமோ பாதுகாப்பு விளைவை சரும புற்றுநோய் மேல் ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாறை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல், குறைவான அளவு உட்கொண்டாலே நல்ல பலன்களை பெறலாம் (6).

இந்த ஒரு ஆய்வு மட்டுமே சுரைக்காய் புற்றுநோயை தடுக்க உதவும் என்ற தகவலை தருகிறது; இது தவிர வேறு எந்த ஆராய்ச்சிகளும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

நன்மை 9: இயற்கையான மிளிரும் சருமம்

சுரைக்காய் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி, மிருதுவான, சுத்தமான சருமம் பெற உதவும்; இது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தி, சருமத்தை ஆரோக்கியமான நிலையில் வைத்து, தோலை மிளிரச்செய்கிறது. இது சருமத்திற்கு ஆழத்தில் இருந்து ஊட்டமளித்து, வெண்ணெய் போன்ற மிருதுத்தன்மையை அளிக்க பயன்படுகிறது.

நன்மை 10: முடி உதிர்வு

இது குறித்து மிகக்குறைவான ஆராய்ச்சிகளே உள்ளன; ஒரு சிறிய ஆய்வில், சுரைக்காய் சாறு மற்றும் எள் விதை எண்ணெய் ஆகியவற்றை கலந்து உச்சந்தலையில் தேய்த்தால், முடி உதிர்வு குறைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது (7).

இப்பொழுது வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுரைக்காய் சாறு தரும் நன்மைகளுள் சிலது மட்டுமே  கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், சுரைக்காய் சாறு குறித்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; சுரைக்காயில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து மதிப்பு பற்றி கீழே பார்க்கலாம்:

சுரைக்காயின் ஊட்டச்சத்து மதிப்பு –  Bottle Gourd Nutritional Value in Tamil

சுரைக்காய் காய்கறியில் நிறைந்துள்ள ஊட்டச்சத்து விவரம் (இயற்கையான நார்ச்சத்துடன், சர்க்கரை சேர்க்கப்படாத நிலையில்) பற்றி கீழ்க்கண்ட அட்டவணையில் பார்க்கலாம்:

கார்போஹைட்ரேட்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட பரிமாறும் அளவு%DV
மொத்த கார்போஹைட்ரேட்5.39 g2%
உணவுமுறை நார்ச்சத்து1.8g4%
வைட்டமின்கள் 
தேர்ந்தெடுக்கப்பட்ட பரிமாறும் அளவு%DV
வைட்டமின் சி12.4 mg21%
தையமின்0.042 mg1%
ரிபோஃபிளவின்0.032 mg1%
நியாசின்0.569 mg1%
வைட்டமின் பி60.055 mg1%
ஃபோலேட்6 mcg12%
தாதுச்சத்துக்கள் 
தேர்ந்தெடுக்கப்பட்ட பரிமாறும் அளவு%DV
கால்சியம்35 mg5%
இரும்பு0.36 mg1%
மெக்னீசியம்16 mg5%
பாஸ்பரஸ்19 mg3%
பொட்டாசியம்248 mg6%
சோடியம்3 mg1%
ஜிங்க்1 mg6%

ஆதாரம்: அமெரிக்க விவசாய துறை, தேசிய ஊட்டச்சத்து தரவுதளம், சுண்டைக்காய், வெள்ளை பூக்கள், சமைத்தவை (1 கப் காய், 146 கிராம் அளவிற்கான மதிப்புகள்)

இச்சாறு அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது; இதில் மிகக்குறைந்த அளவு கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளன. ஆனால், இதை வெளியே வைத்தால் காய்கறி அல்லது சாறு கெட்டுப்போகலாம். முடிந்த அளவு இச்சாறை வீட்டிலேயே தயாரித்து உட்கொள்வது ஆபத்தை குறைக்கும்.

வீட்டில் சுரைக்காய் சாறு செய்வது எப்படி?

சுரைக்காய் சாறினை வெறும் வயிற்றில் உட்கொள்வது தான் மிகவும் பயன் தரக்கூடியது; இதனை தயாரிப்பது மிகவும் எளிய காரியமே!

கசப்பாக இருக்கும் சுரைக்காயை தேர்ந்தெடுக்க வேண்டாம்; சமைத்த  சுரைக்காயை பயன்படுத்தி சுரைக்காய் சாறு தயாரிப்பது நல்லது. மேலும் இவ்வாறு தயாரித்த சுரைக்காய் சாறினை 50ml அளவிற்கும் குறைவாகவே உட்கொள்ள வேண்டும்; இதன் மூலம் தேவையற்ற ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் (1).

தேவையான பொருட்கள் 

 • சமைத்த, தோல் நீக்கப்பட்ட, விதைகள் நீக்கப்பட்ட, நறுக்கப்பட்ட 2 நடுத்தர அளவு சுரைக்காய்கள்
 • நறுக்கப்பட்ட 4 இந்திய நெல்லிகள்
 • 15 – 20 புதினா இலைகள்
 • 1 மேஜைக்கரண்டி சீரக விதைகள்
 • 2 – 3 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு
 • நறுக்கப்பட்ட 2 சிறிய இஞ்சி துண்டுகள்
 • உப்பு, தேவையெனில்
 • ஐஸ் கியூப்ஸ், தேவையெனில்

செய்முறை

 1. சுரைக்காய், நெல்லி, இஞ்சி, புதினா, உப்பு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்; ஒரு கப் நீர் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு அரைக்கவும்
 2. இன்னொரு கப் தண்ணீர், எலுமிச்சை சாறு, ஐஸ் கியூப்ஸ் சேர்த்து, 2-3 நிமிடங்களுக்கு அரைக்கவும்
 3. இந்த கலவையை குளிர்ந்த நிலையில் பருகலாம்

சுரைக்காய் சாறை வீட்டில் தயாரிக்க தொடங்கும் முன், அதை எப்படி பயன்படுத்த வேண்டும், எந்த அளவு பருக வேண்டும் மற்றும் அதிகம் பருகினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பது பற்றி படித்து அறிந்து கொள்ளுங்கள்.

சுரைக்காயை பயன்படுத்துவது எப்படி?

lauki

Shutterstock

சுரைக்காய் காய்கறியை பயன்படுத்தி பல விதமான உணவு வகைகள் சமைக்கலாம்; கீழ்க்கண்ட சில வகைகளை வீட்டில் முயற்சிக்கலாம்.

 • சுரைக்காய் குழம்பு, இதை சாப்பாடுடன் சேர்த்து சாப்பிடலாம்.
 • சுரைக்காய் கூட்டு
 • சுரைக்காய் சேர்த்த காய்கறி சாலட்
 • சுரைக்காய் சூப்
 • சுரைக்காய் சட்னி
 • சுரைக்காய் சாறு
 • சுரைக்காய் கட்லெட்

சுரைக்காயின் பக்க விளைவுகள் – Side Effects of Bottle Gourd in Tamil

அதிகப்படியான அளவு சுரைக்காய் சாறை எடுத்துக்கொண்டால், அது விஷத்தன்மை மற்றும் ஆபத்தான தீங்கை ஏற்படுத்தலாம். தீவிர தலை சுற்றல், வியர்த்தல், மயக்கம் போன்ற பிரச்சனை உள்ள மக்கள் இதனை தவிர்ப்பது நல்லது; சரியான நேரத்திற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம், நோய்க்குறைபாடுகளின் தீவிரத்தை தவிர்க்க முடியும் (1).

சுரைக்காயில் குர்குர்பிட்டாசின்கள் எனப்படும் நச்சு ஏற்படுத்தும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு கலவைகள் தான் காய்கறியின் கசப்பான சுவை மற்றும் நச்சுத்தன்மைக்கு காரணமாகும். காய்கறியின் கசப்பான சுவையால், உட்கொண்ட ஒரு மணி நேரத்திற்குள் உடலில் வாந்தி, வயிற்றுப்போக்கு, ஹைப்போடென்சன், மேல் இரைப்பை குடல் இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் (8).

சுரைக்காய் சாறு பருகுவதால் உடலில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது; இந்த அறிகுறிகளின் தீவிரத்தை கட்டுப்படுத்த நரம்பு திரவங்கள் அளிக்கப்பட்டு, விரிவான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்படும் (1).

ஆய்வறிக்கைகளின் கருத்துப்படி, இச்சாறினால் ஏற்படும் விஷத்தன்மைக்கு மருந்து எதுவும் இல்லை; விஷத்தன்மையை போக்க இரத்த மாற்ற சிகிச்சை தேவைப்படலாம். உடலில் ஏற்படும் இந்த நோய்தொற்றுகளை தடுக்க, அவற்றிற்கு சிகிச்சை அளிக்க ஆன்டிபையாடிக் மருந்துகள் உதவுகின்றன (8).

சுரைக்காய் சாறினை 50ml பருகுவதனால் சில உடலியல் சிக்கல்கள் ஏற்படலாம்; 200 ml அளவு சாறினை பருகினால் மரணம் ஏற்படக்கூடிய அளவு ஆபத்து உண்டாகலாம் (1).

கசப்பாக இருக்கும் சுரைக்காய் சாறினை அருந்துவதை தவிர்க்க வேண்டும்; கசப்பாக இருக்கும் சுரைக்காயை உண்ணக்கூடாது. பச்சையான அல்லது சமைக்கப்படாத சுரைக்காய் சாறு ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவித்துவிடும் (1).

முடிவுரை

சுரைக்காய் மற்றும் சுரைக்காய் சாறு என்பது ஒரு ஊட்டச்சத்து மிகுந்த, தயாரிக்க எளிதான, சுலபத்தில் கிடைக்கக்கூடிய ஒரு உணவுப்பொருள் ஆகும்; இந்த காய்கறியை அல்லது சாறை தொடர்ந்து எடுத்துக் கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவும்.

ஆனால், இச்சாறை சரியான முறையில் தயாரிக்கவில்லை எனில் விஷத்தன்மையால் பாதிப்பு ஏற்படலாம்; அதனால் இச்சாறை வீட்டிலேயே தயாரித்து உட்கொள்ளலாம். பச்சையான காய்கறியில் இருந்து தயாரிக்கப்பட்ட சாறினை பருகுவதை தவிர்க்கவும்; சமைக்கப்பட்ட காய்கறி மற்றும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சாறை மட்டும் உட்கொள்ளவும்.

இக்காய்கறி அல்லது சாறை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து கொள்வது நல்லது. சுரைக்காய் மற்றும் சுரைக்காய் சாறு பற்றி இந்த பதிப்பில் அளிக்கப்பட்ட தகவல்கள் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இக்காய்கறி பற்றி உங்களுக்கு ஏதேனும் வேறு சில தகவல்கள் தெரிந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Was this article helpful?
The following two tabs change content below.