பேக்கிங் சோடா – நன்மைகள் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

Written by StyleCraze

பேக்கிங் சோடா (baking soda in tamil) என்பது இலேசான உப்புச்சுவையையும் மற்றும் கசப்புச்சுவையையும் கொண்டுள்ளது. பொதுவாக எல்லோருடைய வீட்டு அலமாரியிலும் இருந்தாலும், இதுவரையில் யாரும் அதனுடைய முழு பலனையும் அனுபவித்து இருக்க மாட்டோம் என்பது மட்டும் நிச்சயம். அந்த அளவுக்கு பல வகைகளில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இது ரொட்டி சோடா, சமையல் சோடா மற்றும் சோடாவின் பை கார்பனேட்டு எனப் பல பெயர்களில் இடத்திற்கு தகுந்தவாறு அழைக்கப்படுகிறது.

முன்னர் காய்கறிகளை சமைக்கும் போது கூட அவற்றை மிருதுவாக்க பேக்கிங் சோடா பயன்படுத்தப்பட்டது. தற்போது, இவ்வாறு செய்யப்படுவது நடைமுறையில் இல்லை. இருப்பினும்,  ஆசியா  இலத்தீன் மற்றும் அமெரிக்க உணவகங்களில் உணவு தயாரிப்பில் இறைச்சியைப் பதப்படுத்த இன்னமும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது.

பேக்கிங் சோடாவை உணவுடன் மிதமான அளவில் இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால்,  ஒரு கை, ஒரு கால் இவற்றின் எலும்புகளுக்கீடான, கால்சிய சத்தை உடலுக்கு தருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகிறது. இன்னும் பேக்கிங் சோடா பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அடுத்து பார்க்கலாம்.

பேக்கிங் சோடா பயன்கள் (baking soda benefits in tamil)

சமையல் சோடாவின் பயன்களை தெரிந்து கொண்டால் அசந்து போவீர்கள். இதில் இவ்வளவு நன்மைகள் இருப்பது பலரும் அறியாத ரகசியமாகவே இருந்து வருகிறது. பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடா, சமையலில் மட்டுமல்லாமல், சமையலை தாண்டி அழகு மற்றும் வீட்டு குறிப்புகளிலும் அதிகமாக பங்கெடுத்துக் கொள்கிறது. வேறு சில உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. இதன் பயன்கள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

1. சருமத்தை பிரகாசிக்கச் செய்கிறது (uses of baking soda in tamil)

முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளிங்கு போல் மின்னச் செய்யும் வழிமுறை எப்படி என பார்க்கலாம்.

தேவையானவை

 • 2 டீஸ்பூன் ஆரஞ்சு சாறு
 • 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை:

 • மென்மையான பேஸ்ட் பதம் கிடைக்கும் வரை பேக்கிங் சோடா மற்றும் ஆரஞ்சு சாறினை நன்றாக கலக்கவும்.
 • பிறகு உங்கள் கைகளையும் முகத்தையும் கழுவ வேண்டும்.
 • ஒரு துண்டைப் பயன்படுத்தி, உங்கள் முகத்தில் இருந்து அதிகப்படியான ஈரப்பதத்தை துடைத்துஎடுக்க வேண்டும்.
 • பேஸ் மாஸ்க் போடுவது போல, தயாரித்து வைத்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். உங்கள் முகத்தில் எல்லா இடங்களிலும் சமமாக தடவப்பட்ட பிறகு, 15 நிமிடங்கள் காத்திருக்கவும்.
 • பிறகு உங்கள் முகத்தில் சிறிது தண்ணீர் தடவி,  ஃபேஸ் பேக்கை தளர்வாக தேய்க்கவும்.
 • பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துண்டுகொண்டு துடைக்க வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம்.

இது எப்படி வேலை செய்கிறது? 

ஆரஞ்சு சற்று அமிலத்தன்மை கொண்ட pH  அளவை கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதில் நிறைய வைட்டமின் சி உள்ளது என்பதால், உங்கள் சருமத்திற்கு கொலாஜன் ஊக்கத்தை அளிக்க உதவுகிறது. பேக்கிங் சோடாவின் உரித்தல் மற்றும் சுத்திகரிப்பு பண்புகள் முகத்தில் உள்ள சரும துளைகளில் இருந்து அசுத்தங்கள் மற்றும் இறந்த தோல் செல்களை அகற்றி முகத்தை பிரகாசிக்க செய்கிறது. (1)

2. முகப்பருக்களை கட்டுப்படுத்துகிறது:

முகப்பருக்களை கட்டுப்படுத்துவதில் பேக்கிங் சோடா முக்கிய பங்குவகிக்கிறது. அது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை 

 • ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா
 • ஒரு ஸ்பூன் தண்ணீர்

செய்முறை

 • மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை கலக்கவும்.
 • உங்கள் கைகளையும், முகத்தையும் கழுவி சுத்தமான துண்டில் துடைத்து உலர வைக்கவும்.
 • உங்கள் மூக்கு மற்றும் பருக்கள், பிளாக்ஹெட்ஸ் அல்லது வைட் ஹெட்ஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தயாரித்து வைத்த பேஸ்டை கொண்டு மசாஜ் செய்யவும்.
 • சுமார் 2-3 நிமிடங்கள் அதை அப்படியே விட்டுவிட்டு,  பிறகு முகத்தில் உலர்ந்த நிலையில் இருக்கும் பேஸ்டை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
 • பிறகு உங்கள் முகத்தை இரண்டாவது முறையாக குளிர்ந்த நீரில் கழுவி, சுத்தமான துண்டு கொண்டு முகத்தை உலர வைக்க வேண்டும்.
 • பேக்கிங் சோடாவினால் முகம் வறண்ட மாதிரி இருந்தால், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். 3 நாள் இடைவெளியில் வாரம் இரண்டு முறை இப்படி செய்யலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?

பேக்கிங் சோடா பருக்கள் மற்றும் பிளாக்ஹெட்ஸுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது இறந்த செல்களை சருமத்திலிருந்து அகற்ற உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள துளைகளை சுத்தப்படுத்துகிறது. ஏற்கனவே முகத்தில் இருக்கும் முகப்பருவை உலர வைத்து குணப்படுத்த இது உதவுகிறது. பேக்கிங் சோடாவில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன, அவை முகப்பரு உருவாக்கப்படுவதை தடுக்கின்றன. (2)

3. கேன்சர் ஆபத்தை குறைக்கிறது:

புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை பெருமளவில் குறைப்பதில், பேக்கிங் சோடா முக்கிய பங்கு வகிக்கிறது. அது எப்படி என அடுத்து பார்க்கலாம்.

தேவையானவை

 • ஒரு கப் தண்ணீர்
 • 1 ஸ்பூன் பேக்கிங் சோடா
 • எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
 • சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

 • தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலந்து, சுவைக்கு சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 • பிறகு அதுனுடன் பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன் கலந்து, எலுமிச்சை சாறு போல அருந்தலாம்.

எப்படி வேலை செய்கிறது? 

2008 ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் இணையதள பக்கத்தில் வெளியீட்டுள்ளார். (3) சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. வேர்க்குருவை தடுக்க பயன்படுகிறது

பேக்கிங் சோடா பாக்டீரியாவால் உண்டாகும் பாதிப்பை எதிர்த்து போராடுகிறது. அது எப்படி என்பதை அடுத்து பார்க்கலாம்.

தேவையானவை

 • ஒரு கப் தண்ணீர்
 • 1 ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை:

 • ஒரு கப் தண்ணீருடன் பேக்கிங் சோடாவை கலந்து ஒரு கப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • வேர்க்குருவால் பாதிக்கப்பட்ட இடத்தில், தடவி சிறிது நேரம் கழிந்து சுத்தப்படுத்தினால் மாற்றத்தை காண முடியும்.

எப்படி வேலை செய்கிறது?

உடம்பில் இருக்கும் துர்நாற்றத்தை  உருவாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து,  வியர்வை அதிக அளவில் வெளியேறுவதை குறைந்து விடும். இதனால் வேர்க்குரு போன்றவை அதிகம் உண்டாவது தடுக்கப்படுகிறது(4).

5. நெஞ்செரிச்சலை தடுக்கிறது

நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு ஏற்படும் போது, அதனை குறைக்க பேக்கிங் சோடா பயன்படுகிறது. அது எப்படி என்பதை அடுத்து பார்க்கலாம்.

தேவையானவை

 • ஒரு கப் தண்ணீர்
 • ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை

 • ஒரு கப் தண்ணீருடன், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து கலக்கிக்கொள்ள வேண்டும்.
 • பேக்கிங் சோடாவை தண்ணீரில் சிறிதளவு சேர்த்து குடித்தால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் வராது.

எப்படி வேலை செய்கிறது?

பேக்கிங் சோடாவில் ஆன்டி- ஆசிட் இருப்பதால் நம்முடைய உடலில் ஏற்படும் அமிலத்தன்மை அதிகரிப்பால் உண்டாகும் பிரச்சனைகளை தடுத்து நிறுத்தி சீர் செய்வதற்கு உதவி புரிகிறது (5).

6. உதடுகளை அழகாக மாற்றுகிறது

பேக்கிங் சோடா சருமத்தின் மீதுள்ள இறந்த செல்களை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது எப்படி என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

தேவையானவை

 • ஒரு ஸ்பூன் தேன்
 • ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை

 • தேனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து, பேஸ்ட் போல மாறும் பதத்திற்கு கலக்கிக்கொள்ள வேண்டும்.
 • அதனை உதட்டின் மீது தடவுவதற்கு முன்னர், தண்ணீரில் உதட்டை கழுவி நன்கு உலரும்படி துடைத்துக்கொள்ள வேண்டும்.
 • பிறகு உதட்டின் மீது, பேக்கிங் சோடா கலவையை தடவ வேண்டும். பத்து நிமிடம் கழித்து துய நீரில் கழுவிவிட வேண்டும்.

எப்படி வேலை செய்கிறது?

தேன் மற்றும் பேக்கிங் சோடா கலந்த கலவையை உதட்டில் தேய்க்கும் போது, அது உதடுகளிலிருந்து இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. உங்கள் உதடுகளின் நிறத்தை இயற்கையாகவே ஒளிரச் செய்கிறது. இது உதடுகளை மென்மையாக்கிவிடுவதோடு, உங்கள் உதடுகளை இளஞ்சிவப்பாக மாற்றிவிடும்.

7. முகத்தில் உள்ள முடிகள் மற்றும் முடி உதிர்வுக்கு பயன்படுகிறது

உடலில் தேவையற்ற இடங்களில் வளரும் முடியை கட்டுப்படுத்த பேக்கிங் சோடா பயன்படுகிறது. அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையானவை

 • ஒரு கப் சூடான தண்ணீர்
 • ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை

 • சூடான நீரில் பேக்கிங் சோடாவை கலந்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும்.
 • சுத்தமான பருத்தி துணியை பேக்கிங் சோடா கரைசலில் நனைத்து எடுத்து, முகத்தில் தடவ வேண்டும்.
 • இரவு நேரத்தில் தடவினால் நல்லது. காலை வரை அப்படியே உலரவிட்டு, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பேக்கிங் சோடா மயிர்க்கால்களில் நீரிழப்பு செய்ய உதவுகிறது. மேலும் அவற்றை சேதப்படுத்துகிறது. இதன் விளைவாக முடி உதிர்ந்து விடும். இருப்பினும், பேக்கிங் சோடா தோல் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், இந்த தீர்வை முயற்சிக்கும் முன் பேட்ச் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும். கூந்தல் வறண்ட தன்மை கொண்டதாக இருந்தால், பேக்கிங் சோடா பயன்படுத்திய பிறகு ஒரு கண்டிஷனர் அப்பளை செய்வது மிக அவசியம். இதுவே உங்கள் கூந்தல் எண்ணெய் பசை கொண்டதாக இருந்தால், பேக்கிங் சோடா கூந்தலை சுத்தம் செய்து, தூசி, மாசுக்களை   அகற்றி மென்மையாக மாற்றிவிடும்.

8. பற்களை வெண்மையாக்க பயன்படுகிறது

பற்களை வெண்மையாக்கவும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. அது எப்படி என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

தேவையானவை

 • ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா
 • சிறிதளவு எலுமிச்சை சாறு

செய்முறை

 • சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பேஸ்ட் போல மாறும் வரை கலக்க வேண்டும்.
 • அதனை பற்களில் தேய்த்தால் உங்கள் பற்கள் முன்பு இருந்ததை விட வெண்மையுடன் பளிச்சென்று மின்னும். ஆனால் இது அனைவருக்கும் ஒத்துப்போகும் என்று சொல்ல முடியாது.
 • ஏனெனில் சிலருக்கு பற்கள் சென்சிடிவாக இருக்கும் என்பதால் தேய்ந்தும் போகலாம்.

இது எப்படி வேலை செய்கிறது?

பேக்கிங் சோடாவில் உள்ள அல்கலைன் என்னும் பொருளானது பற்களின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. பேக்கிங் சோடாவை மவுத் வாஷாக கூட பயன்படுத்த முடியும். ஒரு டம்ளர் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து வாய் கொப்பளித்தால், அது உங்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து தூர்நாற்றத்தை  அகற்ற உதவுகிறது. (6)

9. அக்குள்களில் உண்டாகும் கருமை நிறத்தை போக்குகிறது (baking soda for skin in tamil)

உங்கள் அக்குள் சருமத்தின் மற்ற பகுதிகளை விட கருமையாக இருந்தால், பேக்கிங் சோடா கொண்டு அந்த குறையை நிவர்த்தி செய்யலாம். அது எப்படி என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

தேவையானவை

 • ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா
 • சிறிதளவு தண்ணீர்

செய்முறை

 • இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை போதுமான தண்ணீரில் கலந்து தடிமனான பேஸ்ட்டை உருவாக்குங்கள்.
 • கலவையை கருமையான பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் விடவும். பின்னர் மெதுவாக மசாஜ் செய்து, தண்ணீரைப் பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும்.
 • இந்த செயல்முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்தால் நல்ல மாற்றம் தென்படும்.

எப்படி வேலை செய்கிறது?

தோலின் மேல் பகுதியில் இருக்கும் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து தூர்நாற்றத்தை  அகற்ற உதவுகிறது. பூஞ்சை தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

10. நக பூஞ்சை தொற்றை கட்டுப்படுத்துகிறது

நக இடுக்குகளில் உருவாகும் பூஞ்சை தொற்றை தடுப்பதில் பேக்கிங் சோடா முக்கிய பங்கு வகிக்கிறது. அது எப்படி என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

தேவையானவை

 • வினிகர்
 • பேக்கிங் சோடா
 • சூடான தண்ணீர்

செய்முறை

 • முதலில் வினிகர் கலந்த நீரில் கால்கள் முழுகும் அளவிற்கு வைத்து, நன்றாக கழுவி சுத்தப்படுத்திய பின்னர், அடுத்து பேக்கிங் சோடா கலந்த நீரில் கால்களை மூழ்க வைக்க வேண்டும்.
 • சிறிது நேரம் கழித்து கால்களை வெளியே எடுத்து துடைத்துவிட வேண்டும். இப்படி செய்தால், நகங்களில் உண்டாகும் பூஞ்சை தொற்று நீங்கும்.

இது எப்படி வேலை செய்கிறது?

வினிகர் பூஞ்சைக் கொல்லும் அதே சமயம் பேக்கிங் சோடா வளரவோ அல்லது மீண்டும் உருவாகவோ தடுக்க உதவுகிறது (7).

11. வாய் புண்களை குணப்படுத்துகிறது

வாயில் புண் இருந்தால், அதன் வீரியத்தை குறைக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்

தேவையானவை

 • பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
 • தண்ணீர் வாய் கொப்பளிக்கும் அளவிற்கு

செய்முறை

 • மிதமான சூட்டில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதுனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • இந்தக் கரைசலை மவுத் வாஸ் போல வாய் கொப்பளிக்க பயன்படுத்த வேண்டும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பேக்கிங் சோடா உங்கள் வாயில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவுகிறது. அதே நேரத்தில் வீக்கத்தையும் குறைக்கிறது. இது வாயில் புண் இருந்தால், அதன் தாக்கத்தை தணிக்க உதவுவதோடு, தொற்றுநோயைத் தடுக்கிறது. பேக்கிங் சோடாவில் வாய் கொப்பளிப்பது, வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, மேலும் புண் உண்டாவதை தடுக்கிறது (8).

12. பொடுகு தொல்லையை நீக்க பயன்படுகிறது

தலைமுடிக்கு பேக்கிங் சோடா சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. அது எப்படி என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

தேவையானது

 • 3 கப் தண்ணீர்
 • 1 கப் பேக்கிங் சோடா

செய்முறை

 • உங்கள் தலைமுடியை தண்ணீரில் கழுவிய பிறகு, தயார் செய்து வைத்திருக்கும் பேக்கிங் சோடா கரைசலை உங்கள் உச்சந்தலையில் ஊற்றவும்.
 • உச்சந்தலையையும் தலைமுடியையும் ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
 • பிறகு அதனை அலசிவிட்டு, தலைமுடியிலிருந்து அதிகப்படியான தண்ணீரை ஒரு துண்டு கொண்டு துடைத்துவிட்டு உலர விடவும்.

இது எப்படி வேலை செய்கிறது?

ஷாம்பு போட்டு தலையை அலசுவதற்கு முன்பாக, தலையில் சிறிதளவு பேக்கிங் சோடாவை தூவி,  பின்னர் ஷாம்பு போட்டு அலசினால் கூந்தல் சிக்கு விழாமல் மின்னும். கூடவே தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி விடுவதால், பொடுகு தொல்லை குறைகிறது. ஆனால் வறண்ட சருமத்திற்கு பேக்கிங் சோடா ஏற்றது அல்ல. (7)

13. அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

பேக்கிங் சோடாவை ஆமணக்கு எண்ணெயுடன் பயன்படுத்தும் அடர்த்தியான முடியை வளரச்செய்கிறது. அது எப்படி என பார்க்கலாம்.

தேவையானது

 • 3 கப் தண்ணீர்
 • 1 கப் பேக்கிங் சோடா
 • 20 சொட்டுகள் ஆமணக்கு எண்ணெய்

செய்முறை

 • அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒரு ஷாம்பு பாட்டிலில் எடுத்துக்கொள்ளவும்.
 • உங்கள் தலைமுடியை தண்ணீரில் கழுவிய பிறகு, தயார் செய்து வைத்திருக்கும் பேக்கிங் சோடா கரைசலை உங்கள் உச்சந்தலையில் ஊற்றவும்.
 • உச்சந்தலையையும் தலைமுடியையும் ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
 • பிறகு அதனை அலசிவிட்டு, தலைமுடியிலிருந்து அதிகப்படியான தண்ணீரை ஒரு துண்டு கொண்டு துடைத்துவிட்டு உலர விடவும்.

இது எப்படி வேலை செய்கிறது? 

ஷாம்புவில் இருப்பது போல கடுமையான ரசாயனங்கள் இல்லாமல் பேக்கிங் சோடா உங்கள் தலைமுடியை மெதுவாக சுத்தப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தலைமுடியின் இயற்கை எண்ணெய் பிசுபிசுப்பை  அகற்றாமல் சுத்தப்படுத்தும். இந்த முறையானது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும்,  புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. (9)

பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்தலாம் (baking soda uses in tamil)

சமையல் பொருட்களை மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் பேக்கிங் சோடா பயன்படுகிறது. பேக்கரிகளில் மாவை உப்ப செய்ய பயன்படுகிறது. இட்லி மாவை புளிக்க வைக்கவும், கேக், பிஸ்கட், ரஸ்க், பிரட் போன்ற பேக்கரி வகைகளை தயார் செய்யவும் பெருமளவில் பயன்படுகிறது.

சமையலை தாண்டி மற்ற சில விஷயங்களுக்கும் பேக்கிங் சோடா பயன்படுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தப்படுத்தவும் பேக்கிங் சோடா பயன்படுகிறது. டைல்ஸ்,  வீட்டு சமையல் பாத்திரங்கள், பாத்திரங்கள் கழுவும் சிங்க், தண்ணீர்  குழாய்கள்,  வாஷிங் மெஷின், காஃபி மேக்கர், குளியலறை போன்ற இடங்களில் படிந்திருக்கும் விடாப்பிடியான கரைகளை நீக்க சிறிதளவு பேக்கிங் சோடா போட்டு நன்கு தேய்த்து விட்டால் போதும் கரைகள் முழுமையாக நீங்கி விடும். பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் துணிகளை ஊற வைத்து அலசினால் துணிகளில் படிந்திருக்கும் கறைகள் எளிதில் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடாவை எப்படி சேமிக்கலாம்?

பேக்கிங் சோடாவை முறையாக சேமித்தால் 3 ஆண்டுகள் வரைக்கும் அதன் ஆயுட்காலம் இருக்கும். பேக்கிங் சோடா  40 ° -70 ° C வெப்ப நிலையில் இருந்தாலும் ஒன்றும் ஆகாது. உலர்ந்த இடத்தில் ஈரப்பதம் இல்லாத கொள்கலனில் காலவரையின்றி சேமிக்கலாம். பேக்கிங் சோடா ஈரப்பதம் மற்றும் நாற்றங்களை உறிஞ்சும் பண்புஉடையதால், என்றைக்கும் திறந்த நிலையில் சேமிக்க கூடாது.

பேக்கிங்  சோடாவால் ஏற்படும்  பக்க விளைவுகள்

பேக்கிங் சோடாவை தேவைக்கேற்ப மட்டுமே உபயோகிப்பது நல்லது. அதிகமாக பயன்படுத்தினால் சில பக்க விளைவுகள் வரக்கூடும் .

பற்களை சுத்தப்படுத்த பயன்படுத்தும் போது, அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது, பல் எனாமலை அரித்துவிடும்.

கேக் , பிரட், பிஸ்கட் செய்ய பேக்கிங் சோடா பயன்படுத்தும் போது அதிகம் சோடியம் இருப்பதால் வாந்தி, பேதி போன்ற தொந்தரவுகளும் வரலாம்.

சில சமயங்களில் , வயிற்றில் ஆசிட் தொல்லை இருந்தால், இதை நீங்கள் உண்ணும் போது ஆசிட் எதிர்வினை அதிகரிக்கலாம்.

பேக்கிங் சோடா தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தாலும் இதை சென்ஸிடிவ் சருமத்தில் உபயோகிக்க முடியாது

சிலருக்கு பேக்கிங் சோடா பயன்படுத்தினால் சருமம் சிவந்து, தடிப்புகள் உடன் எரிச்சலை உண்டாக்கலாம் சருமம் மிகவும் வறண்டு போய்விடும்.

ஒவ்வொருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, இது பொருந்துமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இறுதியாக

இது நாள் வரைக்கும் நீங்கள் பேக்கிங் சோடாவை சமையல் அறையில் உணவு தயாரிக்கும்போது பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் ஏராளமான பலன்கள் அடங்கி உள்ளது. உண்மையில்,  பிராண்டட் என்று சொல்லப்படும் விலை உயர்ந்த பொருட்களை விட, பேக்கிங் சோடா பல விஷயங்களில் உங்கள் வேலையை எளிதில் முடித்துக்கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் விலையும் மலிவானதாகும். இனியும் நேரத்தை வீணடிக்காமல் எளிதாக கிடைக்கும் பேக்கிங் சோடாவின் அபிரிவிதமான நாமும் அனுபவிக்கலாம்.

Sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.