ஸே யெஸ் டு சீஸ் ! நாவின் சுவை அரும்புகள் மீண்டும் மீண்டும் தேடும் சீஸின் ஆரோக்கிய நன்மைகள் – Benefits of cheese in Tamil

by StyleCraze

சீஸ் எனும் பாலாடைக்கட்டி எட்டாம் 8-ஆம் நூற்றாண்டிலேயே எகிப்தியர்களால் தயாரிக்கப்பட்ட உணவு. கிட்டத்தட்ட மொத்தம் 1829 வகையான சீஸ்கள் உள்ளன என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை! அவற்றின் மணம், சுவை, நிறம், வடிவம், அளவு, விலை என இவற்றின் அடிப்படையில் 1829 சீஸ்களும் வேறுபடுகின்றன. சீஸ் எனும் பாலாடைக்கட்டி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றின் நன்மைகளை இங்கு காண்போம் வாங்க!

சீஸ் என்றால் என்ன? cheese in Tamil

இது பாலாடைக்கட்டி அல்லது சீஸ் என்றும் அழைக்கப்படும். இது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சீஸ், மென்மையான மற்றும் கடினமான சீஸ் என இரண்டு வகைகள் உள்ளன. இது பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு தான் இந்த சீஸ். உணவுகளில் பயன்படுத்தும் உணவை பொறுத்து இவை சுவை கூட்டியாக பயன்படுகிறது.

சீஸின் ஆரோக்கிய நன்மைகள் Benefits of Cheese in Tamil

1. பல் சிதைவு அல்லது கேவிட்டி

கிருமிகள் பல் சிதைவை ஏற்படுத்தக்கூடும். இதற்கு சீஸ் பயன்படுத்துவதன் மூலம் பற்களில் குழி ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும். செஸ்டோஸ்டேடிக் பண்புகள் பாலாடைக்கட்டியில் காணப்படுகின்றன, அவை பல் குழி அல்லது சிதைவை குறைக்க உதவும். சீஸ் கால்சியத்தின் ஒரு நல்ல மூலமாகும். இது உங்கள் பற்களுக்கு பயனளிக்கும். (1)

2. புற்றுநோய்

ஒரு ஆராய்ச்சியின் படி, சீஸ் உட்கொள்வதன் மூலம், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோயைத் தவிர்க்கலாம். பாலாடைக்கட்டி அல்லது சீஸ் ஆனது கால்சியம் மற்றும் வைட்டமின்-டி பண்புகளைக் கொண்டுள்ளது, இது புற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது (2)

3. எடை அதிகரிக்க சீஸ்

நீங்கள் மெலிதாக இருந்தால், உங்கள் எடையை அதிகரிப்பதில் சீஸ் முக்கிய பங்கு வகிக்கும். சீஸ்ஸில் புரதங்கள், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஏராளமாகக் காணப்படுகின்றன. இது உங்கள் எடையை அதிகரிக்க உதவக்கூடும் (3). இதனை சில காலம் உட்கொண்டாலே உடலின் எடையை கூட்டமுடியும்.

4. எலும்புகளை வலுப்படுத்த சீஸ்

பாலாடைக்கட்டி நன்மைகளுள் ஒன்று எலும்புகளுக்கும் நன்மை பயக்கும். ஒரு ஆய்வின்படி, பாலாடைக்கட்டியில் கால்சியம் நிறைய உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தும் வேலை செய்கிறது.

5. ஆஸ்டியோபோரோசிஸில்

எலும்பு தொடர்பான நோய்களான ஆஸ்டியோபோரோசிஸ் (4) போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க பாலாடைக்கட்டி உதவும். ஆஸ்டியோபோரோசிஸில் என்பது எலும்புகள் பலவீனமடைந்து அவை முறிந்து போகும் நோயாகும். அப்படி எலும்பு பலவீனமாக இருந்தால், உடனே உணவில் அடிக்கடி சீஸ் எடுத்துக்கொள்ளும்போது எலும்புகள் வலுவாவதை உணரலாம்.

6. உயர் இரத்த அழுத்தத்திற்கு சீஸ்

cheese

Shutterstock

இரத்த அழுத்தம் அதிகரித்தால் இதய கோளாறுகள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், சீஸ் எடுத்துக்கொண்டால் இந்த சிக்கலை குறைக்கலாம். உண்மையில், சோடியம் மற்றும் புரதம் போன்றவை சீஸ்ஸில் காணப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் . எனவே, உயர் இரத்த அழுத்தத்திற்கும் சீஸ் நன்மை பயக்கும். ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் சீஸை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

7. கர்ப்ப காலத்தில் சீஸ்

கர்ப்ப காலத்தில் சீஸ் சாப்பிடுவது குறித்து உங்கள் மனதில் சில சந்தேகங்கள் இருக்கும். கர்ப்ப காலத்தில் மென்மையான சீஸ் பதிலாக கடினமான சீஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்கலாம்.

பாலாடைக்கட்டியில் கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது, இது கருவின் எலும்புகளின் கட்டமைப்பிற்கு உதவும் (5). மேலும், பிறப்பு குறைபாடுகளின் சிக்கலை (முதுகெலும்பு மற்றும் மூளை தொடர்பானது) தவிர்க்க சீஸ் உண்ணலாம்.

8. மாதவிடாய் தொடர்பான நோய்க்குறி (PMS)

கிட்டத்தட்ட ஒவ்வொரு இளம் பெண்ணும் PMS நோய்க்கு உட்படுகிறார்கள். இது ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்படும் உடல், மன மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் மாதவிடாய் தொடர்பான நோய்க்குறி அல்லது PMS என்று அழைக்கப்படுகின்றன. இந்த நிலையில், பெண்ணுக்கு எரிச்சல், வயிற்று வலி மற்றும் தலைவலி இருக்கலாம். ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, சீஸ் பயன்பாடு மாதவிடாய் தொடர்பான நோய்க்குறியின் போது ஏற்படும் சோர்வு, மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கும். பாலாடைக்கட்டியில் காணப்படும் கால்சியத்தின் அளவு காரணமாக மாதவிடாய் தொடர்பான நோய்க்குறியின் தீவிரத்தை குறைக்கலாம். (6)

9. ஹைப்பர் டென்ஷன்

சிலர் அடிக்கடி ஹைப்பர் டென்ஷனுக்கு உள்ளாவார்கள். இதற்கு முக்கிய காரணம், நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அதீத வேலைப்பளு மற்றும் மனநிலை மாறுபடுதல் தான். உணவு முறை மூலம் ஓரளவு இதனை (ஹைப்பர் டென்ஷன்) கட்டுப்படுத்த முடியும். அந்த உணவு வகைகளுள் சீஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்க அடிக்கடி உங்க உணவில் சீஸ் சேர்த்துக்கொள்ளும்போது, ஹைப்பர் டென்ஷனிலிருந்து மெதுவாக நிவாரணம் அடையலாம்.

10. ஒற்றைத் தலைவலி

ஒரு ஆராய்ச்சியின் படி, ஒற்றைத் தலைவலி பிரச்சினையை குறைக்க சில உணவுகள் உதவுகின்றன.. அவற்றுள் பாலாடைக்கட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. ரிபோஃப்ளேவின் எனும் கூறு பாலாடைக்கட்டியில் காணப்படுகிறது, இது ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (7)

11. நோயெதிர்ப்பு அமைப்பு

சீஸ் பயன்படுத்துவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும். மைனஸ் ஃப்ரெஸ்கலில் புரோபயாடிக்குகள் எனும் கூறு சீஸில் நிறைந்துள்ளன, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். நோய்த்தொற்று பிரச்சினையிலிருந்து விடுபட இது வேலை செய்யும். இது விளையாட்டு வீரர்களுக்கு முக்கியமாக பயனளிக்கும் (8)

12. தூக்கமின்மை பிரச்சினை

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை இருந்தால், சீஸ் உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். மெலடோனின் பாலாடைக்கட்டியில் காணப்படுகிறது. இது ஒரு வகை ஹார்மோன், இது தூக்கத்திற்கு உதவியாக இருக்கும் என்பதை நிரூபிக்கபட்டுள்ளது. எனவே, தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெற சீஸை உணவில் பயன்படுத்தலாம் (9).

13. தோல் ஒளிரும்

தோலின் நிறத்தை மேம்படுத்த பாலாடைக்கட்டி பயன்படுத்தலாம். வைட்டமின்-பி ஆனது தோல் நிறத்தை மேம்படுத்த உதவும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது (10). அதே நேரத்தில், மற்ற ஆராய்ச்சிகளின்படி, வைட்டமின் பி உள்ள சீஸை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் போது, தோலின் நிறம் மெல்ல மெல்ல கூடி பளபளப்பாக இருக்க முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

14. முடி ஆரோக்கியத்திற்கு சீஸ்

சீஸ் பயன்பாடு முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாலாடைக்கட்டி அல்லது சீஸில், வைட்டமின் பி, துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவவை நிறைந்துள்ளது, இது முடி உதிர்தலைத் தடுக்க உதவும் (11) என நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்க முடி உதிர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை உங்களது உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

பாலாடைக்கட்டி அல்லது சீஸ் ஊட்டச்சத்து மதிப்பு

பாலாடைக்கட்டி பல சத்தான பொருட்களைக் கொண்டுள்ளது, இந்த சத்தான கூறுகள் பின்வருமாறு:

சத்துகள் மொத்த அளவு
தண்ணீர்36.75 கிராம்
ஆற்றல்403 கிலோகலோரி
புரதம்22.87 கிராம்
மொத்த லிப்பிட் (கொழுப்பு)33.31 கிராம்
கார்போஹைட்ரேட்3.37 கிராம்
சர்க்கரை , மொத்தம்0.48 கிராம்
கனிமம்
கால்சியம்710 மி.கி.
இரும்பு0.14 மி.கி.
மெக்னீசியம்27 மி.கி.
பாஸ்பரஸ்455 மி.கி.
பொட்டாசியம்76 மி.கி.
சோடியம்653 மி.கி.
துத்தநாகம்3.64 மி.கி.
வைட்டமின்
தியாமின்0.029 மி.கி.
ரிபோஃப்ளேவின்0.428 மி.கி.
நியாசின்0.059 மி.கி.
வைட்டமின் பி- 60.066 மி.கி.
ஃபோலேட் , டி.எஃப்.இ.27 µg
வைட்டமின் பி – 121.10 .g
வைட்டமின் ஏ , ஆர்.ஏ.337µg
வைட்டமின் ஏ , . யு1242 . யு
வைட்டமின் ஈ (ஆல்பா-டோகோபெரோல்)0.71 மி.கி.
வைட்டமின் டி (டி 2 + டி 3 )0.6 .g
வைட்டமின் டி24 . யு
வைட்டமின் கே2.4 .g
கொழுப்புகள் 
கொழுப்பு அமிலம் , மொத்த நிறைவுற்றது18.867 கிராம்
கொழுப்பு அமிலம் , மொத்த மோனோசாச்சுரேட்டட்9.391 கிராம்
கொழுப்பு அமிலம் , மொத்த பாலிசேச்சுரேட்டட்0.942 கிராம்
கொழுப்பு99 மி.கி.

சீஸ் பயன்பாடு – சீஸ் சாப்பிடுவது எப்படி?

சீஸ் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இங்கே காண்போம். how to eat cheese in Tamil

சீஸை எப்படியெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

 • சீஸ் பீஸ்ஸா
 • சீஸ் சாண்ட்விச்
 • சீஸ் தோசை
 • சீஸ் பராத்தா
 • சீஸ் மக்ரோனி பாஸ்தா
 • சீஸ் பூண்டு ரொட்டி
 • சீஸ் ரொட்டி பாலாடை

சீஸை எப்போது சாப்பிட வேண்டும்:

 • காலை உணவாக உண்ணலாம்.
 • இதை மாலையில் சிற்றுண்டியாகவும் பயன்படுத்தலாம்.
 • இதை ப்ரெட்டில் தடவி காலை அல்லது பிற்பகலில் சாப்பிடலாம்.

எவ்வளவு அல்லது எந்த அளவு சாப்பிட வேண்டும்?

 • சீஸ் சாப்பிட எந்த அளவும் இல்லை. இது நபரின் உணவுத் திறனைப் பொறுத்தது.
 • உடல் பருமனாக இருப்பவர்கள் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது உடல் எடையை அதிகரிக்க உதவும் என்பதால் பருமனாக உள்ளவர்கள் இதனை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சீஸ் பக்க விளைவுகள் Cheese side effects in Tamil

மேலே பாலாடைக்கட்டியின் நன்மைகளை பார்த்திருப்போம். சீஸ் சாப்பிடுவதில் சில குறைபாடுகளும் உள்ளன, அவை பின்வருமாறு:

 • பாலாடைக்கட்டி அதிகமாக உட்கொள்வது ஒவ்வாமை எதிர்விளைவுகளை அதிகரிக்கும்.
 • பாலாடைக்கட்டி அல்லது சீஸில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது, இதன் காரணமாக இது நீரிழிவு பிரச்சினை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், இதை அதிகமாக சாப்பிடுவது நீரிழிவு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
 • நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சீஸ் உட்கொள்ள வேண்டாம், ஏனெனில் இது எடையை அதிகரிக்கும்.

இறுதியாக…

சீஸ் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் இந்த பதிவில் உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். மேலும், இதனை உணவில் சேர்த்துக்கொண்டால், என்னென்ன பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க முடியும் என்பதை நீங்க தெரிந்திருக்க வேண்டும். இந்த கட்டுரையைப் படித்த பிறகு, சீஸை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தலைப்பு தொடர்பான வேறு ஏதேனும் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், கருத்து பெட்டி மூலம் எங்களை அணுகலாம். இந்தப்பதிவு பயனுள்ளதாக இருந்தால், நண்பரிகளிடம் பகிர்ந்துக்கொள்ளலாம்.

இது தொடர்பான கேள்விகள்

சீஸ் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

கண்டிப்பாக நல்லது. இதில் கால்சியம், கொழுப்பு மற்றும் புரதம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் ஆகியவற்றுடன் அதிக அளவு வைட்டமின்கள் ஏ மற்றும் பி -12 உள்ளன.

வீட்டில் சீஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

சுத்தமான காய்ச்சிய பாலில் எலுமிச்சை பழத்தை கொண்டு பாலை திரிக்கவிட்டு சீஸ் தயாரிக்கலாம்.

மக்களிடையே குறைந்த பிரபலமான சீஸ் எது? அல்லது மக்கள் குறைவாக பயன்படுத்தும் சீஸ் எது?

புலே சீஸ் தான் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இவற்றின் கூடுதலான விலை காரணமாக இதை யாரும் அதிகமாக அன்றாடம் பயன்படுத்துவதில்லை.

மிகவும் விலையுயர்ந்த சீஸ் எது?

புலே என்பது தான் உலகின் மிக விலையுயர்ந்த சீஸ் என்று கூறப்படுகிறது

சீஸ் நல்லதல்ல என்கிறார்களே?

உடல் எடை பருமனாக இருப்பவர்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை கூடும் என்பதால் தான் நல்லதல்ல என்கிறார்கள்.

வீட்டிலே சீஸ் தயாரிப்பது மலிவானதா?

உண்மையில் நாம் வீட்டிலே சீஸ் தயாரிப்பது கடையில் இருந்து சீஸ் வாங்குவதை விட மலிவானது. .

ரெனெட் இல்லாமல் சீஸ் தயாரிக்க முடியுமா?

முடியும். சில பாலாடைக்கட்டிகள், உண்மையில், ரெனெட் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் பால் புரதத்தை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கலாம்.

11 sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.
scorecardresearch