டிஃப்தீரியா என்றால் என்ன? டிப்தீரியாவுக்கான வீட்டு வைத்தியம் – Home Remedies for Diphtheria in Tamil

Written by StyleCraze

மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சினைகள் வலிமிகுந்தவையாகவும், சிகிச்சை இல்லாத நிலையில் அவை மிகுந்த சிக்கலானதாக மாறக்கூடும். அத்தகைய ஒரு பிரச்சனை தொண்டை மற்றும் மூக்குடன் தொடர்புடைய டிப்தீரியா ஆகும். இந்த சிக்கலுடன் நீங்கள் போராடுகிறீர்களானால்,  இந்த கட்டுரை உங்களுக்கானது. இதில் டிப்தீரியா நோயிக்கு சில வீட்டு வைத்தியங்கள் கூறப்படுகின்றன. இது அந்த சிக்கலில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும். மேலும், டிப்தீரியாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் இந்த நோயிலிருந்து மீள உதவலாம். இந்த கட்டுரையில் டிப்தீரியா நோய் என்றால் என்ன மற்றும் டிப்தீரியாவின் காரணம் மற்றும் டிப்தீரியாவுக்கான வீட்டு வைத்தியம் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு தருகிறோம். டிப்தீரியா என்றால் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

டிஃப்தீரியா என்றால் என்ன? – diphtheria in Tamil

டிஃப்தீரியா என்பது கோரினேபாக்டீரியம் டிப்தீரியா என்ற பாக்டீரியத்தால் ஏற்படும் ஒரு வகை பாக்டீரியா தொற்று ஆகும். இது முக்கியமாக மூக்கு மற்றும் தொண்டையின் சளி சவ்வுகளை பாதிக்கிறது. இந்த பாக்டீரியா ஒரு பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவுகிறது (1) (2). அதன் பரவலுக்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன. அவை உங்களுக்கு அடுத்து விளக்கப்படும். மருத்துவ சிகிச்சை முறையாக செய்யப்பட்டால், இந்த சிக்கலை சமாளிக்க முடியும். மேலும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களும் இந்த சிக்கலைச் சமாளிக்க உதவும்.

டிப்தீரியாவின் காரணங்கள் என்ன? – Causes of Diphtheria in Tamil

மேலே குறிப்பிட்டுள்ளபடி டிப்தீரியா, ‘கோரினேபாக்டீரியம் டெப்டெரியா’ என்ற பாக்டீரியத்தால் ஏற்படுகிறது. பின்வரும் காரணங்களால் இந்த பாக்டீரியா பரவலாம்.

  • பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும்போது.
  • பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும்போது.
  • சுத்தமாக இல்லாத நிலையில் பரவும்
  • சரியான நேரத்தில் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பரவும்.
  • நெரிசலான இடத்திற்குச் செல்வதன் மூலம் பரவும்
  • இந்த பாக்டீரியாவைக் கொண்ட ஒரு பொருளைத் தொடும்போது பரவும்

டிப்தீரியாவின் அறிகுறிகள் – Symptoms of Diphtheria in Tamil

உங்களுக்கு டிப்தீரியா இருக்கும்போது, ​​சில பொதுவான அறிகுறிகளைக் உணரத் தொடங்கலாம். அவற்றில் ஒரு சிலவற்றை அடுத்து பார்க்கலாம்.

  • காய்ச்சல் மற்றும் குளிர் உணர்வு
  • தொண்டை புண் அல்லது தொண்டையில் விழுங்கும் பிரச்சனைகள்
  • இருமல்
  • வாய் வீக்கம்
  • தோல் நீலம்
  • மூக்கில் இரத்தப்போக்கு அல்லது நீர் வடிதல்
  • மூச்சு திணறல்
  • தோல் காயம்

டிப்தீரியாவுக்கான வீட்டு வைத்தியம் – Home Remedies for Diphtheria in Tamil

சில வீட்டு வைத்தியங்களை செய்வதன் மூலம் டிப்தீரியாவின் சிக்கலைத் தவிர்க்கலாம். இந்த வீட்டு வைத்தியம் நோயிலிருந்து மீள உதவக்கூடும் என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறோம். ஆனால் எந்தவொரு மருத்துவ சிகிச்சைக்கும் மாற்றாக இதனை முயற்சிக்கக்கூடாது.

1. தேன் மற்றும் எலுமிச்சை கொண்டு சிகிச்சை

தேவையானவை 

  • ஒரு ஸ்பூன் தேன்
  • ஒரு ஸ்பூன்ஃபுல் எலுமிச்சை சாறு
  • ஒரு கப் நீர்

என்ன செய்ய வேண்டும்? 

  • முதலில் தண்ணீரை லேசாக சூடாக்கவும். அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
  • பின்னர் இந்த கலவையை தொண்டையில் நன்கு இறங்கும் படி குடிக்கவும்.
  • இதை ஒரு நாளைக்கு 1 முதல் 2 முறை குடிக்கலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

திப்தீரியாவுக்கான வீட்டு வைத்தியத்தில் தேன் மற்றும் எலுமிச்சை பயனுள்ள பங்கைக் கொண்டிருக்கக்கூடும். டிப்தீரியாவின் முக்கிய காரணம் பாக்டீரியா தொற்று ஆகும். அதே நேரத்தில், தேன் மற்றும் எலுமிச்சை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது இந்த சிக்கலை சமாளிக்க உதவும் (3) (4).

2. துளசி கொண்டு சிகிச்சை

தேவையானவை 

  • சில துளசி இலைகள்
  • ஒரு கப் நீர்

என்ன செய்ய வேண்டும்? 

  • துளசி இலைகளை தண்ணீரில் சேர்க்கவும்.
  • பின்னர் அதை லேசாக சூடாக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.
  • டிப்டீரியா நீங்கும் வரை ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்க இதைப் பயன்படுத்தலாம்.

இது எப்படி வேலை செய்கிறது? 

துளசியில் பல்வேறு வகையான மூலிகை பண்புகள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். இந்த நன்மைகளில் டிப்தீரியாவும் சேர்க்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே அறிந்தபடி, இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் பாக்டீரியா தொற்று. அதே நேரத்தில், துளசி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. எனவே, டிப்தீரியா (5) சிகிச்சையில் துளசி உதவக்கூடும் என்று நம்பலாம்.

3. உப்பு கொண்டு சிகிச்சை

Shutterstock

தேவையானவை 

  • ஒரு டீஸ்பூன் உப்பு
  • ஒரு கப் நீர்

என்ன செய்ய வேண்டும்?

  • முதலில், தண்ணீரை லேசாக சூடாக்கவும். பின்னர் அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது இந்த கலவையை கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது? 

பொதுவான தொண்டை பிரச்சனைகளுக்கு சூடான நீரில் உப்பு கலப்பது நல்லது. இதேபோல், டிப்தீரியா விஷயத்திலும், உப்பு நீரையும் பயன்படுத்தலாம். உப்பு ஆண்டிமைக்ரோபியல் பண்புகளால் நிறைந்துள்ளது, இது பாக்டீரியாவைக் குறைக்க செயல்படும் (6). எனவே, டிப்தீரியாவுக்கு  உப்புடன் சிகிச்சையளிக்க முடியும்.

4. இஞ்சி சாறு கொண்டு சிகிச்சை

தேவையானவை 

  • ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • எலுமிச்சை சாறு ஒரு சில துளிகள்
  • அரை டீஸ்பூன் தேன்

என்ன செய்ய வேண்டும்? 

  • இஞ்சியை நன்கு அரைத்து அதன் சாற்றை வெளியே எடுக்கவும்.
  • பின்னர் அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும்.
  • அந்த கலவையை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வைத்தியத்தை தினமும் ஒரு முறை செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது? 

இஞ்சி பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் அடங்கும். இந்த பண்புகள் பாக்டீரியா தொற்றுநோய்களைத் தடுக்கலாம் மற்றும் சிகிச்சையளிக்கலாம், எனவே இது டிப்தீரியாவிலும் பயனளிக்கும்(7).

5. மூலிகை கொண்டு சிகிச்சை

தேவையானவை 

  • சில ஆமணக்கு இலைகள்
  • சில முருங்கைக்காய் இலைகள்
  • 2-3 பூண்டு கிராம்பு

என்ன செய்ய வேண்டும்? 

  • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து பேஸ்ட் தயார் செய்யவும்.
  • இந்த பேஸ்டுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தண்ணீரை வடிகட்டி குடிக்க பயன்படுத்தவும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது? 

இந்த மூலிகைகள் அனைத்தும் பல சிக்கல்களை அகற்ற பயன்படுகின்றன. அவற்றில் ஒன்று டிப்தீரியாவாகவும் இருக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள மூன்று மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை. இந்த மூன்று பொருட்கள் பாக்டீரியா தொற்றுகளை அகற்ற பயன்படுகின்றன (8) (9) (10).

குறிப்பு: இங்குள்ள வீட்டு வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பொருட்கள் டிப்தீரியா போன்ற நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எனினும் இதற்கு இன்னும் அதிகமான மருத்துவ ஆராய்ச்சி தேவைப்படுகிறது. எனவே, இந்த வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதற்கு முன், ஒரு மருத்துவரை அணுகவும்.

டிப்தீரியா சிகிச்சை – diphtheria treatment in Tamil

டிப்தீரியாவின் தீவிர நிலையைத் தவிர்க்க,  மருத்துவ சிகிச்சை அவசியம். ஒரு மருத்துவர் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்டி-டாக்ஸின் – ஒரு மருத்துவர் உங்களுக்கு டிப்தீரியாவுக்கு ஆன்டி-டாக்ஸின் சிகிச்சையை அளிக்கலாம். இந்த ஊசி தசையில் அல்லது நேரடியாக நரம்புக்குள் கொடுக்கப்படலாம்.

ஆண்டிபயாடிக் – சிகிச்சையை திறம்பட செய்ய, நச்சு எதிர்ப்பு ஊசிக்குப் பிறகு மருத்துவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுக்கலாம். இந்த மருந்துகளில் பென்சிலின் மற்றும் எரித்ரோமைசின் ஆகியவையாக இருக்கலாம்.

டிப்தீரியா தடுப்பு முறைகள் – Prevention Tips for Diphtheria in Tamil

ஒவ்வொரு நாளும் நம் உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இந்த சிக்கலைத் தவிர்க்கலாம். அது எவ்வாறு என்பதை அடுத்து பார்க்கலாம்.

சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தால் இந்த நோயைத் தவிர்க்கலாம். எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளலாம்.

சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த சிக்கலைத் தவிர்க்கலாம்.

டிப்தீரியாவால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து விலகியிருக்க வேண்டும்.

உங்களைச் சுற்றி தூய்மையை வைத்திருங்கள்.

எதையும் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கழுவ வேண்டும்.

முடிவாக

டிப்தீரியா என்றால் என்ன என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன் அறிகுறிகள் மற்றும் அதன் பரவலுக்கான பல்வேறு காரணங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். டிப்டீரியாவுக்கான சில வீட்டு வைத்தியங்களும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை இந்த சிக்கலில் இருந்து பாதுகாக்க உதவும். அதே சமயம், யாராவது டிப்தீரியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் வீட்டு வைத்தியம் மட்டும் எடுக்கக்கூடாது. மேலும், மருத்துவ சிகிச்சையும் அவசியம். இது தவிர, கட்டுரை தொடர்பான பிற கேள்விகள் அல்லது பரிந்துரைகளுக்கு, கீழேயுள்ள கருத்து பெட்டியின் உதவியை நீங்கள் பெறலாம்.

Sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
The following two tabs change content below.