எளிய எலுமிச்சை தரும் பெரிய நன்மைகள்

by StyleCraze

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட எலுமிச்சம் பழம் (lemon in tamil)  தற்போது உலகெங்கிலும் பயிரிடப்படுகிறது. நம் ஊரைப்பொறுத்தவரையில், புளியம் பழங்கள் உணவுக்கு உபயோகப்படுத்துவதற்கு முன்பாக உணவில் புளிப்பு சுவைக்கு எலுமிச்சை சாறு மட்டும் எலுமிச்சம் பழச்சாறு அதிகம் பயன்படுத்தப்பட்டது. எலுமிச்சை அதிக மருத்துவ குணம் கொண்டது. பொதுவாக சாறுகளுக்காக மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாக மரபு வைத்திய முறைகளில் பயன்படுகிறது.

எலுமிச்சை  இந்தியாவின் அசாம் மாநிலம், வடக்கு பர்மா,  சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என அறியப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும், கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் எலுமிச்சை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி பகுதியில் எலுமிச்சைகளுக்கு என்றே, தனியாக தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் என்ற கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் பெயர் பெற்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு குறைவதற்கு, மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.

எலுமிச்சையில் அடக்கியுள்ள சத்துக்கள் (lemon meaning in tamil):

எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் பிற சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.  அவற்றின் சாற்றில் 5% முதல் 6% சிட்ரிக் அமிலம் உள்ளது. எலுமிச்சையின் pH மதிப்பு 2.2 ஆகும். இதில் உயர் ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது. நம்முடைய உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள்,  இந்த உடல் நலக்குறைவைத் தகர்த்து விடுகிறது.

எலுமிச்சையின்  பயன்கள் (lemon benefits in tamil):

எலுமிச்சை பல நோய்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதனை வைத்து ஊறுகாய், மிட்டாய், மருந்துகள்,  குளிர்பானம்  முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும், சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அது எந்தெந்த வகையில் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை அடுத்து தொடர்ச்சியாக காணலாம்.

1. உடல் எடையை குறைக்க பயன்படுகிறது:

இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அவர்களின் வயதுக்கு மீறிய அதீத உடல் எடை பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. எலுமிச்சையில் உள்ள பாலிபினால்கள் உணவினால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த பாலிபினால்கள் உடல் எடை அதிகரிப்பையும்,  உடலில் கொழுப்பு குவிக்கப்படுவதையும் தடுப்பதாக தெரியவந்துள்ளது. உடல் எடையைக் குறைத்து இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.  (1)

தினமும் காலை நேரத்தில் இளம் சூடான நீரில், சிறிதளவு எலுமிச்சம் பழ சாறு பிழிந்து, அதனை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து,  உடல் எடை வெகு சீக்கிரமாக குறைய வழி வகை செய்கிறது. இருப்பினும், இது தொடர்பாக பெரும்பாலான ஆய்வுகள் விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனிதர்களைப் பற்றிய கூடுதல் ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது.

2. சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கிறது:

எலுமிச்சையில் சிட்ரேட் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாக்குவதைத் தடுக்கும். சிட்ரேட் பெரிய கற்களையும் உடைத்து,  சிறுநீர் வழியாக எளிதாக செல்ல அனுமதிக்கிறது. (2)

தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் சிட்ரேட் குறைந்த அளவு இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிர்காலங்களில் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. எலுமிச்சை சாறு அந்த வாய்ப்பை குறைக்கிறது.

ஒரு ஆய்வில், ஒவ்வொரு நாளும் இரண்டு லிட்டர் தண்ணீரில் நான்கு அவுன்ஸ் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால் கல் உருவாகும் விகிதம் குறைகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிட்ரேட் கால்சியத்துடன் பிணைப்பை ஏற்ப்படுத்தி, கல் உருவாக்கப்படுவதை தடுக்கிறது.

3. புற்றுநோய் வராமல் தடுக்கிறது:

சில ஆய்வுகள் மூலம், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளும் நபர்களுக்கு கணைய புற்றுநோய்க்கான ஆபத்து குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் புற்றுநோய் வருவதும் தடுக்கப்படுகிறது. (3)

எலுமிச்சையின் ஆன்டிகான்சர் பண்புகள் அவற்றில் உள்ள  ஃபிளாவனாய்டுகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சில விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலுமிச்சையில் உள்ள டி-லிமோனீன் என்ற கலவை ஆன்டிகான்சர் பண்புகளைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

4. செரிமானத்தை துண்டுகிறது:

காலையில் எலுமிச்சை சாறு கலந்த நீரைக் குடிப்பதால், அது செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் போக்கலாம். நீங்கள் எழுந்ததும் எலுமிச்சை சாறு கலந்த நீரைக் குடிப்பதால் உங்கள் செரிமான வேகமாக செயலாற்றும். (4)

இது குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. எலுமிச்சையின் எதிர் நச்சுத்தன்மை பண்புகள் செரிமானத்தை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

5. காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது:

எலுமிச்சை சாறு குளிர் காய்ச்சல் அல்லது சாதாரண காய்ச்சல் நோயால் அவதியுற்று நபர்களுக்கு சிகிச்சையளிக்க  பயன்படுகிறது. எலுமிச்சை சாறினை அருந்துவதன் மூலம் வியர்வை அதிகரித்து காய்ச்சல் குறையும்.

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் நிறைந்து இருப்பதால்,  டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

6. பல் வலியை குறைக்க உதவுகிறது:

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்து காணப்படுவதால், அது மனிதர்களின் உடலில் தீங்கு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள்,  கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டதாக விளங்குகிறது.

குறிப்பாக பற்கள் சொத்தை மற்றும் ஈறுகளில் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள், இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து,  தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டது எலுமிச்சை.

7. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

வைட்டமின் சி நிறைந்த உணவு ஆதாரங்களில் எலுமிச்சை முன்னிலையில் உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள், குறிப்பாக வைட்டமின் சி நிறைந்தவை,  இதய நோய்களைத் தடுக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. (5)

எலுமிச்சை சாறு உட்கொள்வதும், நடைபயிற்சி செய்வதும் இரத்த அழுத்த அளவைக் குறைப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி சிகிச்சையில் உதவும் அத்தியாவசிய ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இந்த சேர்மங்கள் உடலில் ஏற்படும் அழற்சிகளை எதிர்த்து போராடுகின்றன.

8. அனீமியாவிற்கு எதிராக போராடுகிறது:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, தாவர உணவுகளிலிருந்து இரும்பு சத்து உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கிறது. இதனால் இரத்த சோகை வருவது தடுக்கப்படுகிறது. (6)

தாவர உணவு ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, மனிதனின் குடல் விலங்கு மூலங்களிலிருந்து இரும்பு சத்தை மிக எளிதாக உறிஞ்சிவிடும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒட்டுமொத்த இரும்பு சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவும்.

9. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மனிதர்களில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இந்த வைட்டமின் சத்தானது சளியின் தாக்கத்தை குறைக்கக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சளி பிடித்தல் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக ஏற்படும் ஒரு வியாதியாகும். (7)

எலுமிச்சை ஆஸ்துமாவுக்கு எதிராக பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா மற்றும் பிற மூச்சுக்குழாய் பிரச்சினைகள் உள்ள நபர்கள் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடைந்ததாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

10. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது:

எலுமிச்சை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால், அவை கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு ஆய்வில்,  ஆல்கஹால் மூலம் பாதிக்கப்பட்ட கல்லீரல் காயத்துடன் இருந்த எலிகள் மீது, எலுமிச்சை சாறு கொடுத்து சோதனை செய்து பார்க்கப்பட்டதில் அது  பாதுகாப்பு விளைவுகளைக் காட்டியது. எலுமிச்சம் சாறு அருந்துபவர்களுக்கு, கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்கி, கல்லீரல் தூய்மையாகி உடல் நலத்தை மேம்படுத்துகிறது. (8)

11. சுவாசப்பாதையை சீரமைக்கிறது:

எலுமிச்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, சுவாச கோளாறுகள் குணமாகும் என கூறப்படுகிறது. எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும். குடல் நோய் மற்றும் சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு எலுமிச்சை நல்லது.

12. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது:

எலுமிச்சை சாறு உடலில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அது மட்டுமின்றி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து,  நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.

எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலம், இரத்த குழாய்களில் கொழுப்பு படலம் படிவத்தை தடுக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் உண்டாவது பெருமளவில் தடுக்கப்படுகிறது.

13. முகப்பருக்களை கட்டுப்படுத்துகிறது:

எலுமிச்சைகளில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமம் உலர்ந்து போவதை தடுக்கிறது. சிட்ரிக் அமிலத்தில் ஆண்டிசெப்டிக் பண்புகளும் இருப்பதால், அது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்றுகின்றது. (9)

வைட்டமின் சி அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், முகப்பரு வல்காரிஸ் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

எலுமிச்சை சில நபர்களிடமும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். தோல் எரிதல்,அரிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இதில் அடங்கும். எனவே, எலுமிச்சையை கவனமாகப் பயன்படுத்துங்கள். பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

14. தழும்புகளின் அடையாளத்தை குறைக்க பயன்படுகிறது:

தோல் சம்பந்தமான நோய்கள் பிரச்சனைகளுக்கு எலுமிச்சைப்பழச் சாறு சிறந்த தீர்வாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் பாதிப்புகளின் மீது, அதாவது சொறி, படர் தாமரை, பூஞ்சை போன்றவற்றில் எலுமிச்சம் பழ சாற்றை தடவி வருவதால் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்குகின்றன. (9)

15. தோல் சுருக்கங்களை தடுக்கிறது:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து, உடலில் கொலாஜனை அதிகரிப்பதால் தோல் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறு தினமும் அருந்துபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் தன்மை பாதுகாக்கப்பட்டு தோல் பளபளப்பையும், இளமையான தோற்றத்தையும் தருகிறது.

16. தோல் அலர்ஜி மற்றும் அரிப்பை தடுக்கிறது:

எலுமிச்சையில் இயற்கையான கிருமிநாசினியாக பார்க்கப்படுகிறது. இதில்  வேதிப் பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், எலுமிச்சை சாறு பயன்படுத்துவதால் சிறிது நிவாரணம் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவவும். ஒவ்வொரு முறையும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய விட வேண்டும்.

17. முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கு எலுமிச்சம் பழம் பெருமளவில் உதவுகிறது. தலைமுடிக்கு எலுமிச்சை சாறு தேய்ப்பது இயற்கையான பளபளப்பை உண்டாக்குகிறது. அதிக அளவில் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குகிறது.

எலுமிச்சையில் அடக்கியுள்ள சத்துக்களின் அட்டவணை:

எலுமிச்சை சாறில் சுமார் 5 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் வரையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. எலுமிச்சை சாறினுடைய தனித்துவமான புளிப்பு சுவை பல்வேறு வகையான உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எலுமிச்சை சாறின் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும் என்பதால், அமலத்தன்மை நிறைந்து காணப்படுகிறது. இது பல்வேறு வகையான சத்துக்களை உள்ளடக்கி இருப்பதால், பல நோய்களுக்கு இயற்கை சார்ந்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் எலுமிச்சையில் அடங்கியுள்ள சத்துக்களின் விவரம் குறித்து அடுத்து காணலாம்.

எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கலோரி அளவுகள்
Amounts Per Selected Serving%DV
கலோரிகள்61.5(257 kJ)3%
கார்போஹைட்ரேட்48.3(202 kJ)
கொழுப்பு5.3(22.2 kJ)
புரதம்7.8(32.7 kJ)
ஆல்கஹால்0.0(0.0 kJ)
கார்போஹைட்ரேட்
Amounts Per Selected Serving%DV
மொத்த கார்போஹைட்ரேட்19.8g7%
நார்ச்சத்து5.9g14%
ஸ்டார்ச்~
சர்க்கரை5.3g
வைட்டமின் சத்துக்கள்
Amounts Per Selected Serving%DV
வைட்டமின்  A46.6IU1%
வைட்டமின்  C112mg187%
வைட்டமின்  D~~
வைட்டமின்  E (Alpha Tocopherol)0.3mg2%
வைட்டமின்  K0.0mcg0%
தையமின்0.1mg6%
Riboflavin0.0mg2%
Niacin0.2mg1%
வைட்டமின்  B60.2mg8%
Folate23.3mcg6%
வைட்டமின் B120.0mcg0%
Pantothenic Acid0.4mg4%
Choline10.8mg
Betaine~
தாதுக்கள்
Amounts Per Selected Serving%DV
கால்சியம்55.1mg6%
அயர்ன்1.3mg7%
மெக்னீசியம்17.0mg4%
பாஸ்பரஸ்33.9mg3%
பொட்டாசியம்293mg8%
சோடியம்4.2mg0%
ஜிங்க்0.1mg4%
காப்பர்0.1mg0%
மாங்கனஸ்0.1mg3%
Selenium0.8mcg1%
புளூரைடு

எலுமிச்சையை எப்படி பயன்படுத்தலாம்

எலுமிச்சம் பழத்தை எலுமிச்சை சாறாகவோ அல்லது எலுமிச்சை பானம் சர்ந்ததகவோ பயன்படுத்தலாம். சிட்ரஸ் என்ற புளிப்பு சுவை என்பது குளிர்பான தொழில் துறையில் மிகவும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். பெரும்பாலன குளிர்பான நிறுவனங்கள் குறைந்தது ஒரு எலுமிச்சை சுவை கொண்ட குளிர்பானத்தையாவது விற்பனைக்கு வெளியிட்டுருக்கின்றன. எலுமிச்சையின் மேல்த்தோல் பரவலாக அதன் புளிப்பு மற்றும் கசப்பான சுவையின் காரணமாக அனைத்து இனிப்பு மற்றும் சுவையான உணவுகளிலும், உணவு அலங்கரம், கேக்குகள், பலகாரங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படுகிறது. முழு எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஊறுகாய் வடிவில் மாற்றினால், அதனை ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும்.

எலுமிச்சையின் தோலினை சூரிய ஒளியில் பவுடர் போல மாற்றி முகம் மற்றும் மூடிகளில் பயன்படுத்தலாம். வினிகர் கலந்த எலுமிச்சை சாறு உடைகள் மற்றும் ஜன்னல்களை தூய்மையாக்க சிறந்த பொருளாக அறியப்படுகிறது. அரோமாதெரபி வல்லுநர்கள் எலுமிச்சை எண்ணெயை புத்துணர்ச்சி கொடுக்கும் வாசனை திரவியமாக பயன்படுகின்றனர். எலுமிச்சை வணிக ரீதியாக காப்சூல்கள் மற்றும் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. பொதுவாக எலுமிச்சை சாறு வடிவில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எலுமிச்சை ஜூஸ் எப்படி செய்யலாம் (lemon juice benefits in tamil)

எலுமிச்சம்பழத்தை சாதாரண ஜூஸ் போலவும் குடிக்க முடியும். சோடா கலந்தும் குடிக்க முடியும்.

எலுமிச்சை ஜூஸ் செய்ய எலுமிச்சம்பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான அளவுக்கு சாறு பிழிந்து எடுத்துக்கொண்டு, அதுனுடன் குளிர்ந்த நீரும், சர்க்கரையும் கலக்கினால் சாதாரண எலுமிச்சை ஜூஸ் ரெடியாகி விடும்.

சோடா கலந்து பயன்படுத்த வேண்டும் என்றால், பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறுடன் சோடா கலந்து, மேலே மிளகு பொடி தூவிவிட்டு குடிக்கலாம். இனிப்பு சுவை விரும்பாதவர்கள் இதனுடன் உப்பு சிறிதளவு சேர்த்தும் பருகலாம்.

எலுமிச்சை டீ செய்வது எப்படி

உடல் எடையை குறைக்கும் அருமையான பானம் இது. தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும். தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை டீ தயாரிக்க ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்கும்போது, அதனுள் இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.

வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். தேன் இல்லையென்றால், சர்க்கரை கலந்து பருகலாம்.

எலுமிச்சையை நீண்ட காலத்திற்கு எப்படி பாதுகாக்கலாம் (lemon uses in tamil)

நீங்கள் குளிர்சாதன பெட்டியில் சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் எலுமிச்சையை சேமிக்கலாம். அவற்றை இவ்வாறு சேமித்து வைப்பதால் அவற்றை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க முடியும். அறை வெப்பநிலையில், எலுமிச்சை ஒரு வாரம் புதியதாக இருக்கும். குளிர்சாதன பெட்டியில், அவை 3 வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் வெட்டப்பட்ட எலுமிச்சை ஒரு குளிர்சாதன பெட்டியில் 4 நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஒரு குளிர்சாதன பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பையில் எலுமிச்சையை சேமித்து வைப்பது அவற்றின் ஆயுளை நீட்டிக்கும்.

எலுமிச்சையின் பக்கவிளைவுகள்:

  • சிலருக்கு எலுமிச்சை சாறின் நேரடி பயன்பாடு தோலில் எரிச்சலை உண்டாக்கலாம்.
  • எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களில் அரிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் பற்கள் கூசும்.
  • எலுமிச்சை சாறு சிலருக்கு வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
  • நீங்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 எலுமிச்சை சாப்பிடலாம். அதற்கு அதிகமானால் வயிறு கோளாறு ஏற்படும். அரிதான சந்தர்ப்பங்களில், GERD ஐ கூட ஏற்படுத்தக்கூடும்.
  • எலுமிச்சை அதிகமாக உட்கொள்வது பல் எனாமலை சிதைந்துவிடும்.

இறுதியாக:

எலுமிச்சை மிகவும் பொதுவானது என்பதோடு, எளிதில் கிடைக்கக்கூடியதாகும். அவற்றின் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிப்பது அவ்வளவு கடினமானது அல்ல. எங்கு சென்றாலும் வாங்கவும், பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். சாதாரண தோல் பாதிப்பில் தொடங்கி, புற்றுநோயைத் தடுப்பது வரைக்கும் இதன் பங்கு இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட அதிகரிக்கச்செய்கிறது. எனவே எலுமிச்சையை அடிக்கடி பயன்படுத்த தொடங்கினால், உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்களை காண முடியும்.

9 References

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
scorecardresearch