எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான 10 சிறந்த ஃபவுண்டேஷன் க்ரீம்கள்

by Deepa Lakshmi

நீங்கள் மேக்கப் போடும் பழக்கம் உடையவரா.. உங்கள் சருமம் எண்ணெய் பசை வாய்ந்ததா.. நீங்கள் அவசியம் இந்த கட்டுரையை படித்து விடுங்கள். சிறந்த தோற்றத்துக்கு உங்களுக்கு முதல் தேவையாக இருப்பது ஃபவுண்டேஷன் க்ரீம் தான். ஆனால் உங்கள் சரும நிறத்துக்கேற்ற சரும வகைக்கேற்ற சரியான ஃபவுண்டேஷனைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான காரியம்தான். அதிலும் நீங்கள் எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர் என்றால் இன்னமும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டி வரும்.

காரணம் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் அணிந்த சில நிமிடங்களுக்குள் ஃபவுண்டேஷன் க்ரீம் அதன் வீரியத்தை இழந்தது போல தோன்றும். இதனால் உங்கள் சருமம் பிசுபிசுப்பு தோற்றத்தை பெற்று விடும் அபாயம் உள்ளது. ஆகவே எண்ணெய் பசை சருமத்தினருக்கான சில பிரத்யேக ஃபவுண்டேஷன் க்ரீம்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ரீமை நீங்கள் தேர்ந்தெடுங்கள். உங்கள் தோற்றத்தை கம்பீரமாக்குங்கள்.

1. Pudaier Liquid Foundation

இந்த ஃபவுண்டேஷன் க்ரீம் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான சிறந்த பரிசு எனலாம். காரணம் இதில் எண்ணெய்பசையை கட்டுப்படுத்தும் பார்முலா இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் முதுமை தோற்றத்தை தடுக்கும் வகையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் சரும நிறத்தை மேம்படுத்தும் கூறுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே ஒரே ஃபவுண்டேஷனில் சருமத்திற்கான பலவிதமான தீர்வுகள் கிடைக்கின்றன.

நன்மைகள்

  • இது ஃபவுண்டேஷன் க்ரீம் மட்டுமே அல்ல
  • உங்கள் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது
  • வயது முதுமையில் இருந்து பாதுகாக்கிறது
  • சரும சுருக்கங்களை நீக்குகிறது
  • லிக்விட் பதத்தில் வெளியாகிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Maybelline New York Fit Me Matte+Poreless Liquid Foundation

இதன் பெயரே இந்த ஃபவுண்டேஷன் க்ரீமின் சிறப்பை உணர்த்துகிறது அல்லவா! இயற்கையான அழகு போலத் தோற்றமளிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த கிரீமினைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் சருமத்துளைகளை மறைய செய்வதில் வல்லது இந்த க்ரீம்.

நன்மைகள்

  • இயற்கை தோற்றம் கிடைக்கும்
  • அதிகளவு நிறத் தேர்வுகள் கொண்டது
  • மேட் பினிஷ் கொண்டது
  • அனைத்து ஸ்கின் டோன் கொண்டவர்களுக்கும் ஏற்றது
  • சருமத்துளைகளை மறைக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. L ‘Oreal Paris True Match Super Blendable Liquid Foundation

லோரியல் நிறுவனத்தின் இந்த ஃபவுண்டேஷன் க்ரீம் எண்ணெய் பசை சருமத்தினருக்கு மிகவும் ஏற்றது. நன்றாக சருமத்துடன் ப்ளெண்ட ஆகும் தன்மை வாய்ந்த க்ரீம் இது. இதில் SPF 17 இருப்பது இதன் சிறப்பை உறுதி செய்கிறது.

நன்மைகள்

  • வைட்டமின் ஈ அதிகமாக இருக்கிறது.
  • இந்திய சரும வகைகளுக்கு ஏற்ற க்ரீம்.
  • SPF 17 இருக்கிறது.
  • கேக் போன்ற அடர்த்தி இதில் இருக்காது.
  • பல்வேறு நிறங்களுக்கு ஏற்ற தேர்வுகள் இதில் இருக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. Revlon Color Stay Makeup for Combination/Oily Skin SPF 15

ரெவ்லான் நீண்ட வருடங்களாக இந்திய அழகு சந்தையில் காலூன்றி நிற்கிறது. இதன் சிறந்த தரம் இதற்கான நிரூபணம் எனலாம். இந்நிறுவனம் எண்ணெய்ப்பசை மற்றும் காம்பினேஷன் சருமத்தினருக்காக வெளியிட்டிருக்கும் ஃபவுண்டேஷன் க்ரீம் அதன் பல செயல்களால் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

நன்மைகள்

  • இது மிகவும் லேசானது
  • மேட் பினிஷ் என்பதால் இயல்பான அழகு போல தோற்றம் தரும்
  • ஆயில் பிரீ
  • SPF 15 கொண்டுள்ளது
  • 24 மணி நேரம் நீடித்திருக்கக்கூடியது.

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Lakme Absolute Skin Natural Mousse

லக்மே நிறுவனம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இந்த ஃபவுண்டேஷன் க்ரீமானது ஆறு நிறங்களில் வெளியாகிறது. சூரியனின் புற ஊதாக்க கதிர்களின் பாதிப்பை போக்குகிறது. உங்கள் சிறந்த தருணங்களில் உங்களை ஸ்பெஷலாக மாற்றுகிறது.

நன்மைகள்

  • SPF 8 உள்ளது
  • ஆறு நிறங்களில் வெளியாகிறது
  • 16 மணி நேரம் நிலைத்து நிற்கிறது
  • இறகு போல லேசானது
  • விழாக்கால மேக்கப்பிற்கு ஏற்றது.

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Maybelline Fit Me Oil Free Stick Foundation

மேபிலைனின்  இந்த ஃபவுண்டேஷன் க்ரீமானது எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான தனித்தன்மை வாய்ந்த க்ரீமாகும். இதன் இயற்கையான தோற்றம் உங்கள் சருமத்திற்கு கெடுதல் விளைவிக்காமல் அழகூட்டுகிறது. உங்கள் சருமத்தை நிம்மதியாக சுவாசிக்க செய்து புத்துணர்ச்சி ஊட்டுகிறது.

நன்மைகள்

  • தனித்தன்மை வாய்ந்த ட்ரான்ஸ்குலன்ட் அடிப்படை கொண்டது
  • லிப்ஸ்டிக் வடிவத்தில் வருகிறது
  • கரும்புள்ளிகளை காணாமல் போக செய்கிறது
  • சருமத்தின் இயல்பான அழகை மீட்டெடுக்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Lakme Perfecting Liquid Foundation

இந்த லிக்விட் ஃபவுண்டேஷன் க்ரீம் தண்ணீரில் கரையாமல் உங்கள் அழகைக் காக்கிறது. மழை நாட்களுக்கு ஏற்றது. அனைத்து வகை சருமத்தினருக்கு பயன்படுத்தும் வகையில் இதன் தன்மையை உருவாக்கி இருக்கின்றனர். எண்ணெய் இல்லாத ஃபார்முலா என்பது கூடுதல் சிறப்பு.

நன்மைகள்

  • விட்டமின் ஈ அடங்கி உள்ளது
  • சிலிகான் இருக்கிறது
  • முயற்சியே இல்லாமல் சருமத்துடன் ஒன்றிணைகிறது.
  • கரும்புள்ளிகளை மறைக்கிறது
  • லேசானது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Wet ‘n Wild Photo Focus Foundation

இதன் பெயரே தன்னம்பிக்கை பெண்மணிகளுக்கான சிறந்த ஃபவுண்டேஷன் க்ரீம் என்பதை நிரூபிக்கிறது. ஆறு வண்ணங்களில் வெளியாகும் இந்த க்ரீமானது சருமத்தோடு ஒன்றிணைந்து உங்களுக்கு இயல்பான தோற்றத்தையும் அழகையும் அளிக்கிறது.

நன்மைகள்

  • எந்நேரமும் புகைப்படம் எடுக்கும் தன்னம்பிக்கை தருகிறது
  • அதிக பலன்களை கொடுக்க கூடியது
  • சருமத்தை ஊடுருவி செல்வதால் திட்டு திட்டான தோற்றம் தருவதில்லை

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. L’Oreal Paris Infallible Pro-Matte Foundation

மேட் பினிஷ் கொண்டது என்பதால் இயல்பான தோற்றம் பெறுவீர்கள். காற்றை போல லேசான டெக்ச்சர் உங்கள் சருமத்திற்கு இதமானது. எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்களுக்கு இதன் சிறப்பு செய்தி என்ன என்றால் அதிகளவு எண்ணெயை முகத்தில் இருந்து உறிஞ்சிக் கொள்கிறது.

நன்மைகள்

  • வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டது
  • ஸ்மட்ஜ் ப்ரூப் தன்மையுடையது
  • 24 மணி நேரம் நிலைத்து நிற்க கூடியது
  • அதிகப்படியான எண்ணெய் சுரப்பை உறிஞ்சிக் கொள்கிறது

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Nyx Professional Makeup Stay Matte

இதன் மேட் பினிஷ் உங்கள் அழகை சிறப்பான கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் எண்ணெய் கலவைகள் சேர்க்கப்படாமல் நீர் சேர்த்து தயாரித்திருப்பதால் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கு பாதுகாப்பு தருகிறது.

நன்மைகள்

  • மேட் பினிஷ் தோற்றம்
  • முகம் முழுதும் சரியாக படரும் தன்மை
  • எண்ணெய் இல்லாத ஃபார்முலா

தீமைகள்

  • எதுவும் இல்லை

Buy Now From Amazon

எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷனை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்

  • எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷன் க்ரீம் நீரை அடிப்படையாக கொண்ட வாட்டர் பேஸ் க்ரீமாக இருக்குமாறு வாங்கலாம்
  • அல்லது ஆயில் பிரீ ஃபவுண்டேஷன் க்ரீம்களை வாங்கலாம்
  • எந்த சருமமாக இருந்தாலும் மாய்ச்சுரைசர் அவசியமானது அதனை அணியாமல் ஃ[பவுண்டேஷன் போட வேண்டாம்.
  • அதே சமயம் எண்ணெய்ப்பசை சருமத்தினர் மாய்ச்சுரைசர்களுக்கு பதிலாகப் ப்ரைமர் பயன்படுத்தலாம்.
  • ஷைன் பிரீ ஆயில் பிரீ ஆயில் கண்ட்ரோல் என்கிற சலுகைகள் உள்ள க்ரீம்களை தேர்ந்தெடுங்கள்

எண்ணெய்ப்பசை சருமத்தினர் எப்படி ஃபவுண்டேஷனை அப்ளை செய்வது

  • நீங்கள் மேக்கப் செய்யத் தொடங்குமுன்னர் பிரைமர் தடவுவது நிச்சயம் அவசியமானது.
  • பிரைமர் அப்ளை செய்யும் முன்னர் நீங்கள் டோனர் பயன்படுத்துவது நன்மை தரும்.
  • இயற்கையான ஃபவுண்டேஷன் க்ரீம் ஸ்பான்ஜ் மூலம் முகத்தில் தடவ உகந்தது
  • பவுடர் பவுண்டேஷன்களை பயன்படுத்தும் சமயங்களில் ஷேட் கிடைக்க ப்ரஷ்களை உபயோகிக்கலாம்.
  • நீர்த்தன்மை கொண்ட ஃபவுண்டேஷன் க்ரீம்களை சிறிதாக கையில் எடுத்து முகம் முழுதும் பொட்டு வைத்தது போல வைக்கவும். அதன் பின்னர் ஸ்பான்ஜ் அல்லது ப்ரஷ் மூலம் முகம் முழுதும் பரவ விடவும்.

முடிவுரை

உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ப ஃபவுண்டேஷன் க்ரீம்களை தேர்ந்தெடுத்து உங்கள் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவு மற்றும் கவர்ச்சி கொடுங்கள். உங்கள் விழா அல்லது வெளியில் செல்லும் நிகழ்விற்கு ஏற்ப 16 மணி நேரம் நிலைத்து நிற்க வேண்டுமா அல்லது 24 மணி நேரம் வேண்டுமா என்பதை முடிவு செய்து வாங்குங்கள். அழகான தோற்றம் பெற என் வாழ்த்துக்கள்.

Was this article helpful?
scorecardresearch