இனி ஞாபக மறதி என்ற பேச்சுக்கே இடமில்லை… ஞாபக சக்தியை மேம்படுத்தும் ஜின்கோ பைலோபா! Benefits of Ginkgo Biloba in Tamil

by StyleCraze

ஞாபக மறதியை சரி செய்ய நாம் பல உணவுகளை உண்டு வருகிறோம். நம் நாட்டில் வல்லாரைக் கீரை ஞாபக சக்திக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு உணவாகும். இது நம் மூளையை சுறுசுறுப்படையச் செய்து அதனை சீராக செயல்பட செய்கிறது. அதேபோல் ஜிங்கோ எனப்படும் மரம் நம் மூளையை திறம்பட செயல்பட வைக்கிறது. இந்த மரம் சீனாவை பிறப்பிடமாக கொண்டது. இது மிகவும் பழமையான மரமாகும். இந்த மரம் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதாவது இது உடலுக்கு ஆற்றல் அளித்து பல நோய்களில் இருந்து விடுபட செய்கிறது.

ஜின்கோ எனப்படும் சீனாவில் வளரும் மரத்தின் இலைகள் மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக செயல்படுத்துகிறது. பூமியில் உள்ள மரங்களிலேயே மிக பழமையான மரமான ஜின்கோ சீனாவைத் தவிர தற்பொழுது ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பெரும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலைகள் பசுமை அல்லது மஞ்சள் வண்ணமுடையவை. இலைகள் மற்றும்  விதைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இலைகளும், கனிகளும், இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படுகின்றன. (ginkgo biloba in tamil).

ஜின்கோ பைலோபா என்றால் என்ன?

இது தமிழில் விசிறி மரம் அல்லது பாசில் மரம் என்றழைக்கப்படுகிறது. இதன் தாவரப்பெயர் ஜிங்கோ பைலோபா. இது ஜிங்கோபைட்டா என்ற இனத்தில் உள்ள ஒரே ஒரு உயிருள்ள மரமாகும். மற்றவை அனைத்தும் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இது ஒரு மிகவும் பழமையான மரமாகும். இதன் இலைகள் லேசாகவும் விசிறி போன்றும் இருப்பதாலேயே தமிழில் விசிறி மரம் என்று அழைக்கப்படுகிறது. நாம் எண்ணிக்கூட பார்க்க முடியாத மருத்துவ பயன்கள் இதன் இலைகளில் அடங்கியுள்ளது. அதனை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

ஜின்கோவில் உள்ள மருத்துவ பொருட்கள் யாவை?

ஜின்கோ இலைகளின் சாற்றில் பினோலிக் அமிலங்கள், ஃபிளாவனாய்டு கிளைக்கோசைடுகள், மைரிசெடின், கேம்ப்ஃபெரோல், குர்செடின் மற்றும் டெர்பீன் ட்ரைலாக்டோன்கள், ஜின்கோலைடுகள் மற்றும் பைலோபாலைடுகள் உள்ளன. இலைகளில் தனித்துவமான ஜின்கோ பிஃப்லாவோன்கள், அல்கைல் பெனோல்கள் மற்றும் பாலிபிரெனோல்கள் உள்ளன.

ஜின்கோவின் பயன்கள்(ginkgo biloba benefits in tamil)

பயன் 1: கண் பார்வை

ஜின்கோவை கூடுதலாக உணவில் சேர்ப்பது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று சில ஆரம்ப ஆராய்ச்சி கூறுகிறது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் நடத்திய ஒரு சிறிய ஆய்வில், ஜின்கோ சாறு பார்வைக்கு நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டது. மேலும் இதன் சோதனைகள் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது.

ஜின்கோ பைலோபா சாறு குளுக்கோமா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் திறனையும் கொண்டுள்ளது. குளுக்கோமா என்பது கண் திரவத்தின் அழுத்தம் அதிகரிக்கும் ஒரு நோயாகும். இதனால் பார்வை திறனை இழந்து விடவும் நேரிடலாம். பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஜின்கோ உண்மையிலேயே பயன் உள்ளதா என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. (1).

பயன் 2: இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது

உயர் இரத்த அழுத்தத்திற்கு ஜிங்கோ உதவ முடியுமா என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில ஆய்வுகள் இது இரத்த அழுத்தத்திற்கு பயனுள்ளது என்றும் சில ஆய்வுகள் இது எந்தவித மாற்றத்தையும் கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றன. எனினும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையில் இதனை பயன்படுத்துவது நல்லது.

பயன் 3: கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது

ஜின்கோ பைலோபா சாறு கவலை மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. நியூரோ டி ஜெனரேடிவ்(நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள்) கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க சீன பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் இந்த சாறு பயன்படுத்தப்பட்டது. ஜின்கோ பைலோபா சாற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கவலை அறிகுறிகளையும் பிற அறிவாற்றல் குறைபாடுகளையும் குறைக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஜிங்கோ மருந்து அளிக்கப்பட்ட நபர்களில் இது மன அழுத்தத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது(2).

பயன் 4: இதயம்

ஜின்கோ இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடும். இது மோசமான இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜின்கோ உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது.

ஜின்கோ பைலோபா சாறு இருதய நோய்களுக்கான ஒரு நம்பிக்கைக்குரிய சிகிச்சை ஆகும். இது வாஸ்குலர் (இரத்த நாளங்களின்) ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஹெபீ மருத்துவ பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மருத்துவமனை நடத்திய ஆய்வில், ஜின்கோ சாறு கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கரோனரி தமனி சுழற்சியை மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டது. இந்த சாறு இதய ஆரோக்கியத்தில் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குகிறது. இது நரம்பியல் மற்றும் கார்டியோ-செரிப்ரோவாஸ்குலர் கோளாறுகள் சிகிச்சையிலும் உதவக்கூடும்(3).

பயன் 5: வலியைக் குறைக்கிறது

இந்த ஜிங்கோ ஆனது உடல் வலியைக் குறைக்கும் திறன் கொண்டது. வலி ஏற்படும் போது நாம் பருகும் ஜிங்கோ சாறு வழியைக் குறைத்தும் ஆறுதல் அளிக்கிறது. சில நேரங்களில் சிகிச்சைகளால் ஏற்படும் வலியைக் குறைக்க இது வலி நிவாரணியாக உதவுகிறது. மேலும் இது வயிற்று வலி மற்றும் மற்ற உடல் வலிகளை சரி செய்ய உதவுகிறது. இது வலிகள் மட்டுமல்லாமல் உடல் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.

பயன் 6: மூளை ஆரோக்கியம்

அல்சிமர் நோய் மற்றும் வயது தொடர்பான அறிவாற்றல் குறைபாடுடன் தொடர்புடைய கவலை, மன அழுத்தம் மற்றும் பிற அறிகுறிகளைக் குறைக்கும் திறனை ஜிங்கோ கொண்டுள்ளது. பல பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வில் இது மூளை தொடர்பான நோய்களை குணப்படுத்தி நினைவாற்றலை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் ஜின்கோ முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன(4).

பயன் 7: ஆற்றல் அளிக்கிறது

Benefits of Ginkgo Biloba in Tamil

Shutterstock

சில ஆய்வுகள் ஜின்கோ பைலோபா ஆரோக்கியமான வழிகளில் விழிப்புணர்வு மற்றும் மன அமைதி உள்ளிட்ட மனநிலைகளை மேம்படுத்தக்கூடும் என்று கூறுகின்றன. உங்களை மேலும் எச்சரிக்கையாகவும் அமைதியாகவும் மாற்றுவதன் மூலம், இது உங்கள் ஆற்றல் உணர்வை அதிகரிக்கக்கூடும். இதனை அடிப்படையாகக் கொண்டு பல மருந்துகள் மற்றும் டானிக்குகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இப்பொழுது இணைய வழி வர்த்தகத்தில் ஜின்கோவில் இருந்து தயாரிக்கப்படும் ஆற்றல் நிறைந்த மருந்துகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையில் உள்ளன.

பயன் 8: மூச்சுக்குழாய்

அனைத்திலும் தனது பயன்பாட்டைக் கொண்ட ஜிங்கோ, மூச்சுக்குழாயிலும் தனது திறனைக் காட்டுகிறது. ஜின்கோ ஆஸ்துமா மற்றும் சிஓபிடி(COPD) போன்ற பிற அழற்சி சுவாச நோய்களை  கட்டுப்படுத்துவதாக  சில ஆராய்ச்சி கூறுகிறது. இது காற்றுப்பாதைகளின் வீக்கத்தைக் குறைக்கவும் நுரையீரல் திறனை அதிகரிக்கவும் செய்வதாக  ஆராய்ச்சிகள் கூறுகிறது.

பயன் 9: வீக்கங்களைக் குறைக்கும் திறன் கொண்டது

பல்வேறு நிலைகளால் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும் திறன் ஜின்கோவுக்கு உண்டு.

கீல்வாதம் அல்லது மூட்டுவலி: எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், ஜின்கோ சாறு கீல்வாதத்தை குணப்படுத்த  உதவும் என்று கண்டறியப்பட்டது.

பக்கவாதம்: கடுமையான பக்கவாதம் கொண்ட நோயாளிகளுக்கு ஜின்கோ பைலோபா சாறு பரிந்துரைக்கப்படுகிறது (பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு திடீரென இரத்த ஓட்டம் இழப்பு). இந்த மூலிகை நோயாளிகளுக்கு அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் மேலும் நியூரோபிராக்டிவ் (நரம்பு சம்பந்தப்பட்ட ) பண்புகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

எரிச்சல் கொண்ட குடல் நோய் (ஐபிடி): கெய்ரோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், குர்குமின்(மஞ்சளில் உள்ள வேதிப்பொருள்) மற்றும் ஜின்கோ ஆகியவை இந்த நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது(5).

பயன் 10 : தலைவலி

ஜின்கோ பைலோபா வீக்கத்தைக் குறைத்து மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது சில வகையான தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கக்கூடும். ஒற்றைத் தலைவலி மற்றும் இதர தலைவலிக்கான சிகிச்சைக்காக  பாரம்பரிய சீன மருத்துவத்தில் அழற்சியை எதிர்த்துப் போராடும் மூலிகைகளுள் இந்த சாறு மிகவும் பிரபலமாக இருந்துள்ளது.

ஜின்கோலைடு பி (gingkolide B) பற்றி நடத்திய ஆய்வில், இது ஜின்கோ பைலோபா மர இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு மூலிகை கூறு ஆகும். இளம் வயதிலேயே ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைத் தடுக்க உதவும் வகையில் இது கண்டறியப்பட்டது. மற்றொரு ஆய்வில், ஜின்கோலைடு பி ஒற்றைத் தலைவலியின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படலாம் என்று கண்டறியப்பட்டது(6).

பயன் 11: PMS அறிகுறிகளை குறைக்கிறது

பி.எம்.எஸ் அறிகுறிகளைக் குறைக்க ஜின்கோ பைலோபா உதவுகிறது. ஜின்கோ சாறு உட்கொண்ட பிறகு பி.எம்.எஸ் அறிகுறிகளை 23% குறைப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஜின்கோ லைடுபி பிஎம்எஸ் அறிகுறிகளைக் குறைப்பதாக கூறப்படுகிறது. pms என்பது மாதவிடாய் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் ஒரு பாதிப்பாகும். அதாவது மாதவிடாய் ஏற்படுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு சோர்வு மற்றும் சில அறிகுறிகள் தோன்றுவதாகும்(7).

பயன் 12: ADHD நோயைத் தடுக்கிறது

Attention deficit hyperactivity disorder (ADHD)

ADHD என்பது குழந்தை பருவத்தின் மிகவும் பொதுவான நரம்பியல் வளர்ச்சி கோளாறுகளில் ஒன்றாகும். இது பொதுவாக குழந்தை பருவத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டு பெரும்பாலும் இளமைப் பருவத்தில் அதிகரிக்கும். ADHD  உள்ள குழந்தைகளுக்கு கவனம் செலுத்துவதில் சிக்கல் இருக்கலாம் மற்றும் மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் போகலாம். இவர்களுக்கு ஜிங்கோ பைலோபா அளிக்கும்போது அது இந்த நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி விடலாம்..

பயன் 13: எடைக்குறைப்பு

ஜின்கோ பைலோபா சாறு உடல் பருமனைக் குறைக்க உதவும். எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உடல் பருமனிற்கும் அதனால் உண்டாகும் நோய்களுக்கும் ஜின்கோ பைலோபா சாறு திறமையாக வேலை செய்யும்  என்று கண்டறியப்பட்டுள்ளது. சில பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பாக உண்டாகும் உடல் பருமனையும் இது குறைக்கிறது.

ஜின்கோ பைலோபா இலைகள் இரத்த லிப்பிட்(கொழுப்பு போன்ற பொருள்) அளவுகளை மேம்படுத்தக்கூடும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. டிஸ்லிபிடெமியா (இரத்தத்தில் உள்ள லிப்பிடுகளின் அசாதாரண அளவினால் உண்டாகும் நோய்) சிகிச்சையில் அவை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஜிங்கோ சாறு உடல் பருமனைக் குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

பயன் 14 : பாலியல் ஆரோக்கியம்

ஜின்கோ பைலோபா சாறு இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது மற்றும் நைட்ரிக் ஆக்சைடு அமைப்புகளை சீராக்குகிறது. இதனால் மென்மையான தசை திசுக்களில் தளர்வை உண்டாக்குகிறது. பெண்களில் ஏற்படும் பாலியல் நிகழ்வுகளுக்கு இந்த செயல்முறைகள் முக்கியம். பெண்களில் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன் இதற்கு உள்ளது.

நைட்ரிக் ஆக்சைடின் இரத்த அளவை மேம்படுத்தும் திறனை ஜின்கோ சாறு கொண்டுள்ளது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இது பெண்களின் பாலியல் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும். இவ்வாறு ஜிங்கோ பெண்களின் பாலியல் நிகழ்வுகளை கட்டுப்படுத்தி அதன் குறைகளை சரி செய்கிறது(8).

பயன் 15: மூலம்

சில ஆய்வுகள் ஜின்கோபைலோபா வலிமிகுந்த மூல நோயை அனுபவிப்பவர்களுக்கு உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆசனவாய் மற்றும் மலக்குடலின் நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதால் வீக்கம், வலி ​​மற்றும் இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன, ஜின்கோ பைலோபா இதனால்  உண்டாகும்  வலியைக் குறைக்கிறது. மேலும்  இது மூல நோயுடன் தொடர்புடைய இரத்தப்போக்கை நிறுத்துகிறது.

பயன் 16: தசைநார் வலி(FIBROMYALGIA)

தசைநார் வலி என்பது சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை பிரச்சினைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு தசை வலி நோயாகும். இது பெண்களுக்கு பெருமளவு ஏற்படுகிறது. இதனால் உடல் வலி மற்றும் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது. ஜிங்க, இந்த தசைநார் வலிக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

பயன் 17: சரும ஆரோக்கியம்

ஜின்கோ பைலோபா வயதாகும் போது ஏற்படும் சரும மாற்றங்களை குறைக்கிறது. ஜின்கோ இலைச் சாற்றில் குர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரோல் (ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படும் இயற்கை தாவர ஃபிளேவனாய்டுகள்) உள்ளன. இவை வயதாகும்போது ஏற்படும் தோல் மாற்றங்களை சரி செய்து இளமையான தோற்றத்தை பெற செய்கிறது(9).

பயன் 18: முடி பராமரிப்பு

முடி உதிர்தலை குறைக்க ஜின்கோ பைலோபா சாத்தியமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இருப்பினும், இந்த ஆய்வுகள் எலிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. எனவே இந்த சாறு உபயோகிக்கும் முன் மருத்துவரை ஆலோசித்து செயல்படுங்கள்(10).

ஜிங்கோவை எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

Benefits of Ginkgo Biloba in Tamil

Shutterstock

இந்த மரத்தின் விதைகள் நட்ஸ்கள் போன்று பயன்படுத்தப்படுகின்றன. இவை மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை. இந்த நட்ஸ்கள் கொரியா, ஜப்பான் மற்றும் சீனாவில் “வெள்ளி பாதாம் நட்ஸ்” என்று விற்கப்படுகிறது. அவை வழக்கமாக சாப்பிடுவதற்கு முன்பு வறுக்கப்பட்டு இனிப்பு,  சூப் மற்றும் இறைச்சியுடன் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை லேசான நச்சுத்தன்மை கொண்டவை. ஒரு நேரத்தில் ஒரு சில விதைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த நட்ஸ்களில் கசப்பான சயனோஜெனிக் கிளைக்கோசைடுகள் உள்ளன. நட்ஸ் சமைக்கும் போது இவை உடைகின்றன, ஆனால் இது 4-மெத்தாக்ஸி பிரிடாக்சின் என்ற வேதிப்பொருளை தக்க வைத்துக் கொள்கிறது. மேலும் இது வைட்டமின் பி6ஐக் குறைக்கிறது குறிப்பாக குழந்தைகளுக்கு நச்சுத்தன்மை உடையது. ஜின்கோ நட்ஸ்களில் கொழுப்பு குறைவாகவும், நியாசின், ஸ்டார்ச் மற்றும் புரதம் அதிகமாகவும் உள்ளன. வெளிப்புற அடுக்கு அகற்றப்பட்டவுடன் (கையுறைகளைப் பயன்படுத்துங்கள்), நட்ஸ் கையாள மிகவும் பாதுகாப்பானது. இருப்பினும் அதிகம் சாப்பிட வேண்டாம்.

எப்பொழுது சாப்பிட வேண்டும்?

இதனை நீங்கள் உங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இரவு நேரங்களில் சாப்பிடும்போது உங்கள் களைப்பைக் குறைத்து நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளிற்கு 120mg நட்ஸ்கள் சாப்பிடலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஜின்கோ பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது இருப்பினும் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் தோல் வெடிப்பு போன்ற சில லேசான பக்க விளைவுகளை கொண்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜிங்கோ பைலோபாவை எந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

  • ஜின்கோ பைலோபா திரவ சாறுகள், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள் மற்றும் உலர்ந்த இலைகள் / தேநீர் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. நாள் முழுவதும் பல அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் (மொத்த தினசரி அளவு 120–240 மி.கி). ஜின்கோவை நேரடியாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் அது விஷத்தன்மை கொண்டிருக்கும்.
  • தன்னுடைய  எந்த முடிவுகளையும் காட்ட ஜின்கோவிற்கு 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம். டிமென்ஷியா உள்ளவர்களுக்கு தினமும் மூன்று முறை 40 மில்லிகிராம் சாறு ஒரு பொதுவான அளவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆரோக்கியமான மக்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு, 120 மில்லிகிராம் முதல் 600 மில்லிகிராம் சாறு பயன்படுத்தப்படலாம்.
  • எனவே ஜிங்கோ பல பக்க விளைவுகளைக் கொண்டிருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையின் கீழ் பயன்படுத்தும்போது இது பாதுகாப்பானதாக இருக்கும்

ஜிங்கோ பைலோபாவின் பக்க விளைவுகள் யாவை? (Side effects of Ginkgo Biloba)

  • ஜின்கோ பைலோபாவை அதிகமாக உட்கொள்வது பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவற்றில் ஒவ்வாமை, தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படலாம்.
  • சில சந்தர்ப்பங்களில், மூலிகையை நேரடியாக உட்கொள்வது கடுமையான தீங்கு விளைவிக்கும்.
  • கர்ப்பிணி, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கை கால்வலிப்பு உள்ளவர்கள் இதனை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மற்ற மருந்து உண்பவர்கள் ஜின்கோ எடுத்துக்கொள்வதற்கு முன்பு தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
  • இது சில நபர்களுக்கு மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
  • ஜின்கோ பைலோபா இவை மட்டுமல்லாமல் மேலும் சில பக்க விளைவுகளையும் கொண்டிருக்கலாம்.

இறுதியாகஜின்கோ பைலோபா உலகின் மிகப் பழமையான தாவர இனங்களில் ஒன்றாகும். இது அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த மூலிகை மனநல பாதிப்புகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது. இருப்பினும், ஜின்கோ சாற்றை அதிகமாக உட்கொள்வது பல பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். அமிர்தமே ஆனாலும் அளவோடுதான் சாப்பிட வேண்டும் என நம் முன்னோர்கள் கூறுவது நினைவிற்கு வருகிறது. இந்த மரத்தின் இலைகள் பல நற்பண்புகளைக் கொண்டுள்ளது ஆனாலும் இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். இந்த மூலிகை சாறு தொடர்பாக பெரும்பாலான ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மூலிகையை உங்கள் வழக்கத்தில் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

தொடர்பான கேள்விகள்

இரவு நேரத்தில் ஜிங்கோ சாப்பிடலாமா?

ஜின்கோ உங்கள் மூளையைத் தூண்டும் திறன் கொண்டது மற்றும் இரவு முழுவதும் உங்களை விழித்திருக்க வைக்கும். எனவே தூங்குவதற்கு முன் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஜிங்கோவை தினமும் சாப்பிடலாமா?

இது நினைவாற்றலை அதிகரிக்க பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதற்கான ஆராய்ச்சிகள் முழுமையாக இல்லை. இதனை அதிகமாக உட்கொள்ளுவது பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜின்கோ கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துமா?

ஜிங்கோ கல்லீரலை பாதிப்பதாக கண்டறியப்படவில்லை. உண்மையில், இது சில நேரங்களில் சில கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

ஜிங்கோ பாலியல் பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்குமா?

இது பாலியல் செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கிறது. சில ஆதாரங்கள் விறைப்புத்தன்மை அல்லது குறைந்த லிபிடோ போன்ற பாலியல் செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கக்கூடும் என்று குறிப்பிடுகின்றன. நைட்ரிக் ஆக்சைட்டின் இரத்த அளவை மேம்படுத்தும் திறனை ஜின்கோ கொண்டுள்ளது, இது இரத்த நாளங்களின் விரிவாக்கத்தின் மூலம் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது.

ஜிங்கோ நினைவாற்றலை அதிகரிக்குமா?

ஜின்கோ மரத்தின் இலைகளிலிருந்து பெறப்பட்ட ஜின்கோபைலோபா சாறு பெரும்பாலும் நினைவாற்றலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. வயதாகும்போது உண்டாகும் மறதி மற்றும் அல்சீமர் நோயால் ஏற்படும் மறதி போன்றவற்றை இது தடுக்கிறது.

ஜின்கோபைலோபா இரத்த அழுத்தத்தை உயர்த்துமா?

ஜின்கோ இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும் என்று எந்த ஆராய்ச்சியும் இல்லை. ஜின்கோவில் வாசோடைலேட்டரி பண்புகள் இருந்தாலும், அது இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஜிங்கோவின் தன்மை என்ன?

இது பொதுவாக குளிரான பகுதிகளில் தான் வளர்கிறது.

கர்ப்பிணிப்பெண்கள் ஜிங்கோ டீயை குடிக்கலாமா?

இந்த காலத்தில் அவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் தெரியும்வரை இதனை நீங்கள் உபயோகிக்க வேண்டாம்.

ஜிங்கோவை எங்கு வாங்கலாம்?

இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பல மூலிகை கடைகள் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. மேலும் இது இணையவழி வர்த்தகத்திலும் கிடைக்கிறது.

ஜிங்கோ எடுத்துக்கொள்வதால் வலிப்பு ஏற்படுமா?

இதன் இலைகள் ஞாபக சக்தியை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இதை பயன்படுத்தும்போது வலிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

10 sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.
scorecardresearch