இந்துப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள் – Benefits of rocksalt in tamil


by StyleCraze

பல் வலி தாங்கல பாட்டி என்போம், உடனே உப்பு தண்ணியில வாய் கொப்புளிச்சு பாரு என்பார் நம்முடைய பாட்டி. நாமும் அதை முயல, எரிச்சல் குறைந்து சவுகரியமாய் உணர்வோம். சும்மாவா சொல்லிவிட்டு போனார்கள் நம் முன்னோர்கள், ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று. அதோடு உப்பை இலவசமாக கொடுத்தால் உறவு முறிந்துவிடும் என்றும் கிராமத்தில் கூறுவார்கள். இன்றைய நாளில் எவ்வளவோ மளிகை சாமான்களின் விலை ஏறினாலும், ஏறாத ஒரே பொருளின் விலை உப்பு மட்டுமே. இப்படிப்பட்ட உப்பை நாம் உணவில் மட்டும் தான் பயன்படுத்துகிறோமா? இல்லை, நிச்சயமாக இல்லை. வாருங்கள் ராக் சால்ட்டை பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான தகவலை நாம் தெரிந்துக்கொள்வோம்.

பாறைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு உப்பு என்பதால் இதனை ராக் சால்ட் என்று அழைக்கின்றனர். பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளிலும் இமய மலையிலும் இது வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்த உப்பை தமிழர்கள் எப்படி அழைப்பார்கள்?

இதனை இந்துப்பு என்றும் அழைப்பார்கள்.

இந்துப்பு, நம் உடலில் செய்யும் மாயாஜாலம் தான் என்ன?

இந்துப்பில் நம் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற பலவித சத்துக்கள் உள்ளதை நீங்கள் அறிவீரா? ஆம், இந்துப்பு நம்முடைய உடலுக்கு அவ்வளவு நல்லது. இதனால் குணமடையக்கூடிய நோய்களும் எண்ணற்றவை என்பதை இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்துப்பு தரும் ஆரோக்கிய நன்மைகள் – Benefits of rocksalt in tamil

1. தசைப்பிடிப்பை சரிசெய்யும்

ஒரு ஸ்பூன் இந்துப்பை தண்ணீரில் கலந்து குடித்தால் சில நிமிடங்களில் தசைப்பிடிப்பில் இருந்து நிவாரணம் தரும். தசைப்பிடிப்பை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். இல்லையேல் வலி அதிகமாக இருக்க தொடங்கும் (1)(1).

2. செரிமான கோளாறுகளை சரி செய்யும்

இந்துப்பை பயன்படுத்துவதால் பசி எடுக்க தொடங்கும். வாயு பிரச்சனை நீங்கும். நெஞ்செரிச்சல் இருந்தாலும் இந்துப்பு நன்மருந்தாக பயன்படும். ஆனாலும் அளவுக்கு அதிகமாக சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது (2)

3. வறண்ட தொண்டைக்கு நிவாரணம் தரும்

இந்துப்பு போட்டு வாய் கொப்பளித்து வர வறண்ட தொண்டை சரியாகும். இஞ்சித்துண்டை இந்துப்பில் தொட்டு பயன்படுத்தினாலும் வறண்ட தொண்டை சரியாகும் (3).

4. ஈறுகளில் இரத்தக்கசிவா?

பல் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்போது இரத்தக்கசிவும் உண்டாகும். சில சமயங்களில் ஈறுகளில் பிரஷ் பயன்படுத்தும்போது இரத்தக்கசிவு ஏற்படும் (4). கிருமிநாசினியாக பயன்படும் உப்பு, பல் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தையும் இரத்தக்கசிவையும் சரிசெய்ய உதவுகிறது.

5. வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்

இந்துப்பு வளர்சிதை மாற்றத்துக்கு உதவி நம்முடைய உடல் செயல்பாட்டிற்கு பெரிதும் துணை புரிகிறது. இந்துப்பு கனிமம் மற்றும் தண்ணீரை உறிஞ்ச செய்கிறது. அதோடு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

6. எடை குறைப்புக்கு உதவும்

இந்துப்பு சேர்த்துக்கொள்ளும்போது உடலில் இருக்கும் இறந்த கொழுப்பு செல்கள் வெளியேறும். இதனால் நம்முடைய உடல் எடை குறையும் (5) உடல் எடை குறைப்புக்கு அற்புதமான மருந்து இந்த இந்துப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

7. இதயத்துக்கு நல்லது

இந்துப்பு சேர்த்துக்கொள்வது இதயத்துக்கு நல்லது. ஆனாலும் அளவுக்கதிகமாக சேர்த்துக்கொண்டால் அதனால் இரத்த அழுத்தம் மிகுதியாகவும் தேவையில்லாத இதய நோய்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள் (6).

8. தலைவலி/ஒற்றை தலைவலியை சரி செய்யும்

ஹிமாலய மலையில் இருந்து எடுக்கப்படும் இந்த பாறை உப்பு (இளஞ்சிவப்பு நிறம்), ஒற்றை தலைவலிக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது (7).

9. மனஅழுத்தத்தை குறைக்கும்

உப்பு போட்டு குளிப்பது உடலில் உள்ள சோர்வை நீக்கி மனஅழுத்தையும் குறைக்க உதவுகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் இந்துப்பை குளிக்கும் நீரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் தசைகள் தளர்வடைய நன்றாக தூக்கமும் வரும். மனஅழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். இந்துப்பு குளியல் இரும்புச்சத்தையும் நமக்கு தருகிறது (8).

10. சருமத்துக்கு நல்லது

நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள், முதுமையான தோற்றத்தை தருகிறது. இந்துப்பு பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். இதனால் இளமை திரும்ப கிடைக்கும்.

உப்பைக்கொண்டு உங்கள் உடலை மசாஜ் செய்வதன் மூலம் இறந்த செல்களை உடம்பிலிருந்து நீக்க முடியும். மற்ற சோப்களை விட இந்துப்பு, சருமத்தில் இருக்கும் துளைகளில் படியும் அழுக்கை நீக்கி சருமத்தின் சுவாசத்துக்கும் உதவும்.

உங்கள் நகத்தில் படியும் மஞ்சள் கறையை அகற்றவும் நகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும் இந்துப்பு உதவும் (9).

11. கூந்தலை பாதுகாக்க உதவும்

இந்துப்பு, முடியில் இருக்கும் இறந்த செல்களையும் நீக்கும். தலையில் அழுக்கு சேரும்போது சீவினாலே முடிக்கொட்டும். இந்த பிரச்சனையை இந்துப்பு சரிசெய்ய உதவும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்கள் ஷாம்புவில் உப்பை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு முடியை கைகளால் சுத்தம் செய்யுங்கள். பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள்.

முடி அடர்த்தி ஆக, உங்கள் கண்டிஷனரோடு இந்துப்பை சரிசமமாக சேர்த்துக்கொள்ளுங்கள். அதனை உங்கள் முடியில் தேய்த்துக்கொள்ளுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இது உங்கள் முடிக்கு கூடுதல் அடர்த்தியை சேர்க்கும்.

இந்துப்பை பயன்படுத்துவது எப்படி?

இந்துப்பை தினமும் பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனென்றால், இந்துப்பு தூய்மையற்று இருக்கும். நாம் அன்றாட பயன்படுத்தும் உப்பில் பாதுகாப்பு நலன் கருதி ஒரு சில கனிமங்கள் நீக்கப்பட்டிருக்கும்.

இந்துப்பை நேரடியாக உணவில் கொட்டுவதை தவிர்த்து முன்பே தண்ணீர் சேர்த்து கொட்டிவிடுவது நல்லது.

இந்துப்பு, எங்கே வாங்கலாம்?

நாட்டு மருந்து கடைகளில் கேட்டு பார்க்கலாம். அதோடு நாம் வாங்கும் உப்பு, சமையலுக்கு ஏற்றது தானா என்பதை பார்த்து வாங்க வேண்டியது அவசியம். விற்பனைக்கு வரும் இந்துப்பு, பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீரிலும் இளநீரிலும் ஊற வைத்த பின்னரே இயற்கையாக விற்பனைக்கு வருகிறது.

இந்துப்பினால் ஏற்படும் பக்கவிளைவுகள் எவை?

அதிகம் எடுத்துக்கொண்டால்:

  • இரத்த அழுத்தம் உயரும்
  • நீர் போக்கு உண்டாகும்
  • மூளைக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும்
  • சிறுநீர் அதிகம் வெளியாக வாய்ப்புண்டு

ஒட்டுமொத்தத்தில் இந்துப்பு  நல்லதே என்கிறது சித்த மருத்துவம். கடல் உப்பை பயன்படுத்தும் போது தைராய்டு நோய் வருவதை வெளிநாட்டில் கண்டுபிடித்தனர். அதனால் அயோடின் சேர்க்க வேண்டும் என்பதை கட்டாய விதி ஆக்கினர். சில முறை உப்பு தயாரிக்கும் இடங்களுக்கு சென்று சேர்க்கப்படும் அயோடின் அளவை சோதனையும் செய்தார்கள். கலப்பட உலகில் எது தான் நம்மால் தூய்மையாக வாங்க முடியும். ஆனால், நம்முடைய முன்னோர்கள், இந்துப்பை பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

  • கடல் உப்புக்கும் இந்துப்புக்கும் என்ன வித்தியாசம்?
  • இந்துப்பு, இரத்த அழுத்தத்துக்கு நல்லதா?
  • இந்துப்பு பாதுகாப்பானதா?
  • சிறுநீரக நோயாளிகள் இந்துப்பு சாப்பிடலாமா?
  • இந்துப்பில் பொட்டாசியம் உள்ளதா?

9 Sources

Was this article helpful?
scorecardresearch