இடைவெளியற்ற இருமலால் அவதியா.. இருக்கிறதே இயற்கை வைத்தியம்! Cough Home Remedies in Tamil

by StyleCraze

இருமல் – எல்லோருக்கும் வருகின்ற சாதாரண நோய் என்றாலும் இருமல் வந்தவர்களுக்குத்தான் அதன் சிரமங்கள் தெரியும். இருமல் பகலில் வந்தாலும் சரி, இரவில் வந்தாலும் சரி உண்மையில் மிகவும் சிரமப்பட்டு போய் விடுகிறோம். நாம் நிம்மதியாக இருக்கும் உறக்க நேரங்களில் இருமல் ஏற்பட்டு தூக்கம் கலைகிறது. அதன்பின் கரகரக்கும் தொண்டையுடன் நாம் மீண்டும் உறங்க நேரம் எடுக்கும்.

உங்களுக்கு இளம் வயதோ அல்லது முதுமையான வயதோ யாராக இருந்தாலும் இருமல் வந்தால் மிகவும் படுத்தி எடுத்து விடும். யாராக இருந்தாலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த இருமல் துன்பத்தை கடக்காமல் இருக்க முடியாது. சரி அதனால் என்ன.. இருமல் ஒன்றும் குணப்படுத்த முடியாத வியாதி அல்லவே. இருமலை எளிமையான வீட்டு வைத்தியங்கள் மூலம் சுலபமாக குணப்படுத்தி விட முடியும்.

இருமலுக்கான காரணங்கள் – Causes of Cough in Tamil

இப்படி நம்மை பாடாய்ப்படுத்தி எடுக்கும் இந்த இருமலுக்கான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம். இருமலுக்கான காரணங்கள் நிறைய இருந்தாலும் இவையே முக்கியமான காரணமாகும்(1).

  • சுவாசக்குழாய் தொற்றுக்கள் என சொல்லப்படும் சளி, நிமோனியா, காய்ச்சல் , சைனஸ் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை இருமலுக்கு காரணமாக அமைகின்றன.
  • ஆஸ்துமா இருந்தால் இருமல் வர வாய்ப்பிருக்கிறது.
  • இரைப்பைஉணவுக்குழாய் நோய் இருப்பவர்களுக்கு இருமல் பாதிப்பு இருக்கும்.
  • டிப்தீரியா , கக்குவான் இருமல் நோய் இருப்பவர்களுக்கு இருமல் கட்டாயம் இருக்கும்
  • காச நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு இருமல் இருக்கும்.
  • உடலுக்கு பொருத்தமற்ற சில நுண்கிருமிகள் உள் நுழைவதால் இருமல் ஏற்படலாம்.
  • உலர்ந்த அல்லது வறண்ட வாய் / உதடு தொந்தரவு கொண்டவர்கள் இருமல் தொந்தரவுக்கு ஆட்படலாம்.
  • உணவு விழுங்குவதில் சிரமம் இருப்பவர்களுக்கு இருமல் ஏற்படும்.
  • நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு இருமல் தாக்க வாய்ப்பு உள்ளது..
  • நுரையீரல் கட்டிகள் / புற்று நோய் உள்ளவர்களுக்கு இருமல் ஏற்படும்.
  • ஒவ்வாமை கொண்டவர்களுக்கு இருமல் இருக்கும்.
  • காற்று மாசு மூலம் வரும்  கிருமி தொற்றுகள் இருமல் ஏற்பட காரணம் ஆகலாம்.

இருமலுக்கான அறிகுறிகள் என்னென்ன – Symptoms of Cough in Tamil

  • சளி
  • அதிகமான காய்ச்சல் (உடல் வெப்பமடைதல்)
  • குளிர்
  • நெஞ்சு வலி
  • தலைவலி
  • மயக்கம் அல்லது சோர்வு
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • மூக்கு அடைதல்
  • தூக்கமின்மை குறைபாடுகள்

இதெல்லாம் இருமல் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக காணப்படுகிறது(1).

இருமல் அதிகமாக நீடிக்காத வகையில் அதைப்பற்றி அதிகமாக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நீடித்த இருமல் அல்லது தொடர்ச்சியான இருமல் ஏற்பட்டால் அதை சற்று கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆகவே உங்களுக்கு ஏற்பட்டுள்ள இருமல் என்ன வகை என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதன் வகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இருமலின் வகைகள் – Types of Cough in Tamil

  • கடுமையான இருமல் – 3 வாரங்களுக்கு மேலாக இருமல் இருக்குமேயானால் அது கடுமையான இருமல் வகை எனப்படும்
  • நாள்பட்ட இருமல் – இருமல் 3 வாரங்களை கடந்து 8 வாரங்கள் வரை தொடர்ந்து இருக்குமானால் அது நாள்பட்ட இருமல் வகை.( அப்படி இருப்பின் இந்த கட்டுரையை படிப்பதை நிறுத்தி விட்டு மருத்துவரை உடனடியாக சந்திக்கவும்!)
  • தீவிர இருமல் – மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை இருமல் இருந்தால் அது தாழ் தீவிர இருமல் எனப்படுகிறது,
  • சளி இருமல் – நீங்கள் இருமும்போது சளியுடன் இருமினால் அது சளி இருமல்
  • வறண்ட இருமல் – சளி இல்லாமல் வறட்சியான இருமல் இருந்தால் அதுவும் கவலைக்குரியதே.
  • இரவு நேர இருமல் – இரவு நேரங்களில் மட்டுமே இருமல் இருப்பின் அது இரவு நேர இருமல் எனப்படுகிறது

ஏற்கனவே கூறியபடி இருமல்கள் பல வகையில் இருந்தாலும் அதில் சிலவகைகள் எளிய முறையில் குணப்படுத்தி விடும்படியான இருமல் வகைகள் . வெறும் ஆன்டிபயாடிக் மற்றும் TLC சிகிச்சை மூலம் உங்களுக்கு விரைவில் குணமாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில வகையோ தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இருமல் வகையாகும் (2).

சுவாசக்குழாய் தொற்று காரணமாக சாதரணமாக ஏற்படும் இருமல் வகைகளுக்கு வீட்டில் இருந்தே இயற்கையான முறையில் தீர்வு காண முடியும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

வீட்டு வைத்திய முறையில் இருமலை சரி செய்வது எப்படி- Home Remedies for Cough in Tamil

பக்கவிளைவுகள் அற்ற இயற்கை வீட்டு வைத்திய முறை நமது முன்னோர்கள் நமக்காக கொடுத்து சென்ற விலைமதிப்பற்ற சொத்து எனலாம்.இருமலை மிக எளிதாக இயற்கை வைத்திய முறையில் குணப்படுத்த முடியும். அதற்கான 15 வீட்டு வைத்திய முறைகளை இங்கே பார்க்கலாம்.

வெந்நீர் உப்பு வைத்தியம்

உங்களுக்குத் தேவையானவை

1 ஸ்பூன் உப்பு

1 டம்ளர் வெந்நீர்

என்ன செய்ய வேண்டும்

உப்பை வெந்நீருடன் கலக்கி நன்றாக தொண்டையில் படுமாறு அண்ணாந்து பார்த்து கொப்பளித்து பின்னர் நீரை வெளியேற்றி விடவும்.

எவ்வளவு முறை செய்யலாம்

ஒரு நாளில் மூன்று முறை இவ்வாறு செய்யலாம்.

இது எப்படி வேலை செய்கிறது

உப்பில் இருக்கும் சோடியம் க்ளோரைட் இருமல் மற்றும் தொண்டைவலியை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது. இதனால் தொண்டை ஈரப்பதம் கொண்டு இருமலில் இருந்து விடுபடுகிறது. இந்த எளிய வைத்திய முறையை நீங்கள் சில காலம் தொடர்ந்து செய்து வந்தால் சுவாசக் குழாய் தொற்றுகள், கிருமிகள் இடம் இருந்து உங்களை நிரந்தரமாக காத்து கொள்ள முடியும்(3).

ஆவி பிடித்தல்

உங்களுக்கு தேவையானவை

நன்றாக ஆவி பறக்க கொதிக்க வைத்த வெந்நீர்

ஒரு பெரிய துண்டு

என்ன செய்ய வேண்டும்

நன்றாக கொதிக்க வைத்த நீரின் ஆவி உங்கள் முகத்தில் படுமாறு துண்டைக் கொண்டு உங்களை மூடிக் கொள்ள வேண்டும். இதனால் ஆவி வெளியேறாமல் உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். தேவைப்பட்டால் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது விக்ஸ் போன்றவற்றை சேர்த்திக் கொள்ளலாம்.

எவ்வளவு முறை செய்யலாம்

நாளொன்றுக்கு ஒருமுறை அல்லது இருமுறை சரியாகும் வரை செய்து வரலாம்.

இது எப்படி வேலை செய்கிறது

ஆவி பிடித்தல் என்பது சிறு குழந்தைகள் முதல் அனைவருக்கும் ஏற்ற ஒரு எளிமையான வீட்டு வைத்தியம். சூடான ஆவி உங்கள் சுவாசம் வழியே சுவாசக்குழாயில் பயணிக்கும்போது கட்டியாகி உறைந்துள்ள சளி கரைகிறது. கரைகின்ற சளி நீராக மாறி மூக்கு மற்றும் தொண்டை வழியே தன்னை வெளியேற்றி கொள்கிறது(4). சளி வெளியேறியபின் இருமலுக்கு அங்கே இடமேது !

 Cough Home Remedies

Shutterstock

இருமலுக்கு அருமருந்தான தேன்

உங்களுக்கு தேவையானவை

தேன்  – தேவையான அளவு

சில மூலிகைகள் (மிளகு, அதிமதுரம், எலுமிச்சை போன்றவற்றில் ஏதோ ஒன்று )

என்ன செய்ய வேண்டும்

கால் ஸ்பூன் தேனுடன் கால் ஸ்பூன் அதிமதுரப்பொடி மற்றும் கால் ஸ்பூன் பட்டைப்பொடி கலந்து கொள்ளுங்கள். இதனை அளவான சூடுள்ள நீரில் கலந்து குடிக்கவும்.

எவ்வளவு முறை செய்யலாம்

காலை மற்றும் மாலை இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி வேலை செய்கிறது

தேனில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. அழற்சியை சரி செய்யும் மாயம் தேனிடம் அதிகம் இருக்கிறது. பென் நாட்டு மருத்துவக் கல்லூரியில் 2007ம் ஆண்டு நடந்த ஆய்வில் இருமலைக் குறைப்பதற்கான டெக்ஸ்ட்ரோமெத்தார்பான் எனும் மூலப்பொருள் தேனில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தேன் சிறந்த இருமல் நிவாரணி(5).

இருமலைக் குணமாக்கும் இஞ்சி

உங்களுக்குத் தேவையானவை

இஞ்சி – சிறிதளவு

நீர்  – சிறிதளவு

என்ன செய்ய வேண்டும்

சிறிதளவு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி நன்றாக தட்டி வைத்துக் கொள்ளவும்

நீரைக் கொதிக்க வைத்து அதில் தட்டி வைத்த இஞ்சியை சேர்க்கவும். கொதிக்க விடவும்.குடிக்கும் சூட்டில் சிறிதளவு தேன் சேர்த்து உண்ணலாம்.

கொஞ்சம் இஞ்சி ஒரு ஸ்பூன் அரிசிமாவு ,தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும். இதனை அரைத்த இஞ்சியுடன் கலந்து ஒரு பேஸ்ட் போல மாற்றி மார்பில் தடவி அப்படியே விடவும். காலையில் கழுவிக்கொள்ளலாம். குழந்தைகள் எனில் 2 மணி நேரத்தில் எடுத்து விடலாம். இதனால் மார்பில் ஏற்பட்டுள்ள சளி கரைந்து விடும்.

எப்படி வேலை செய்கிறது

பேக்டீரியா வைரஸ் தொற்றுக்களை நீக்கும் வல்லமை இஞ்சிக்கு இருக்கிறது. இஞ்சியை எடுத்துக் கொள்வதால் சளியை அடியோடு அகற்றிவிடும் வல்லமை மிக்க மருந்தாக இஞ்சி பயன்படுகிறது(6).

இருமலை சரி செய்யும் கிராம்பு

உங்களுக்கு தேவையான பொருள்

கிராம்பு பொடி   – சிறிதளவு

பனங்கற்கண்டு – சிறிதளவு

பால்                       – 1 கப்

என்ன செய்ய வேண்டும்

கிராம்பு பொடி மற்றும் பனங்கற்கண்டு இரண்டையும் சேர்த்து பாலில் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைத்து இந்தக் கலவையை அருந்தி வரவும்.

எப்படி வேலை செய்கிறது

அளவில் சிறிதான கிராம்பு அதன் வீரியத்தில் சிறப்பானதாக இருக்கிறது(7). மண்ணீரல், வயிறு , சிறுநீரகம் போன்ற மருத்துவ சிக்கல்களுக்கு கிராம்பை பயன்படுத்தி வருவது வழக்கம்.நமது தமிழ்நாட்டு சமையலில் முக்கியமாக கிராம்பு பயன்படுகிறது. சீன மருத்துவத்திலும் கிராம்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருமலை விரட்டும் கருமிளகு

உங்களுக்கு தேவையானவை

கருமிளகு – ஒரு ஸ்பூன்

நெய்         – 2 ஸ்பூன்

என்ன செய்ய வேண்டும்

கருமிளகை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். உணவு உண்ட பின்னர் உருக்கிய நெய்யை மிளகுத்தூளுடன் கலந்து ஸ்பூனில் அருந்தவும்.

எப்படி வேலை செய்கிறது

கரு மிளகு இயர்கையாகவே கிருமிநாசினி மற்றும் ஆன்டிபயாடிக் தன்மையை கொண்டது(8). சூடான நெய்யில் மிளகு சேர்க்கும்போது உங்கள் சளியை அது இளக்கி வெளியேற்றி விடும்.ஒருநாளைக்கு 3 முறை இப்படி செய்து வரலாம்.

இருமல் குணமாக உதவும் பூண்டு

உங்களுக்கு தேவையானது

பூண்டு – 2 அல்லது 3 பல்

பால்    –  1 டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

பாலில் பூண்டு வேகும் வரை கொதிக்க விடவும்.

எவ்வளவு முறை செய்ய வேண்டும்

வாரத்தில் 2 முதல் மூன்று முறை இப்படி பாலைத் தயாரித்து இரவு உறங்கப்போகும் முன் அருந்தி வந்தால் சில நாட்களில் ஆச்சர்யப்படும்படியான மாற்றங்கள் ஏற்படும். இருமல் குணமாகும். மீண்டும் வராது.

எப்படி வேலை செய்கிறது

பூண்டில் ஆன்டிபேக்டீரியல் தன்மைகள் அதிகம் உள்ளது. எவ்வளவு கடுமையான இருமலாக இருந்தாலும் இந்த முறையை பின்பற்றி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இருமல் மூலம் ஏற்படும் கடும் உடல்வலியையும் அது நீக்குகிறது (9).

இருமலுக்கு ஏற்ற மருந்து துளசி

உங்களுக்கு தேவை

துளசி இலைகள் – 1 கைப்பிடி

என்ன செய்ய வேண்டும்

நன்கு கழுவிய துளசி இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

எவ்வளவு முறை செய்ய வேண்டும்

நாளொன்றுக்கு இரண்டு முறை செய்யலாம்.

எப்படி வேலை செய்கிறது

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி இலைகள் நிறைந்த மருத்துவ குணங்கள் கொண்டவை. துளசி இலை மன அழுத்தம், ஞாபக சக்தி கோளாறுகள், ஆஸ்துமா , இருமல் போன்ற பல நோய்களை நீக்கும் ஆன்டிபயாடிக் மற்றும் கிருமிநாசினி தன்மை அதிகம் இருக்கிறது(10).

இருமலை நீக்கும் மஞ்சள்
என்ன தேவை

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

பால்               – 1 டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

நல்ல சூடான பாலில் மஞ்சள் தூளை கலந்து பருக வேண்டும்.

எவ்வளவு முறை செய்யலாம்

நாளொன்றுக்கு இரண்டு முறை செய்து வரலாம்

எப்படி வேலை செய்கிறது

மஞ்சள் நம் முன்னோர்களின் அருமருந்து பொக்கிஷம். சமையல் முதல் உடல் சுத்தம் வரை மஞ்சளை அவர்கள் பல விதமாக பயன்படுத்தினர். காரணம் மஞ்சளில் குர்குமின் , ஆன்டிபயாடிக் , ஆன்டி பேக்டீரியல் எனப் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.அழற்சி எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிகமாக இருப்பதாலேயே அது மருத்துவ உலகில் அமிர்தமாக இருக்கிறது.சூடான பாலுடன் மஞ்சள் தூள் சேர்த்து அருந்தும் போது நுரையீரலில் தேங்கியுள்ள சளி ஜீரணமண்டலம் வழியாக வெளியேறுகிறது. உடனடியாக இருமல் நிற்கிறது (11).

இருமலை போக்கி இதமாக்கும் க்ரீன் டீ

உங்களுக்கு தேவையானது

க்ரீன் டீ பேக் அல்லது டீத்தூள் – 1 ஸ்பூன் அளவு

கொதிக்க வைத்த நீர்                 – 1 கப்

என்ன செய்ய வேண்டும்

நீரைக் கொதிக்க வைத்து அதில் சிறிதளவு க்ரீன் தேயிலைத் தூளை சேர்க்கவும். நன்றாக கொதிக்க விட்ட பிறகு குடிக்கும் சூட்டில் பருக வேண்டும். தேவையெனில் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.

எவ்வளவு முறை

நாளொன்றுக்கு 3 முதல் 4 முறை இருமல் போகும் வரை பருகலாம்.

எப்படி வேலை செய்கிறது

க்ரீன் டீ எடைக்குறைப்பு செய்வதற்கு மட்டும் அல்ல . சளி மற்றும் இருமலுக்கும் மருந்தாக விளங்குகிறது(12). க்ரீன் டீயில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தொண்டையில் உள்ள புண்களை ஆற்றுவதில் உதவுகிறது. கேம்லியா சினென்சிஸ் தாவரத்தில் இருந்து க்ரீன் டீ தயார் ஆகிறது. க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் , பாலிபினால்கள் போன்றவை உங்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவி செய்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பானது தொண்டையில் உள்ள புண்களை ஆற்றி இருமலை அறவே ஒழித்து விடுகிறது

Cough Home Remedies

Shutterstock

பலமான இருமலையும் பறந்து போக செய்யும்  பட்டை

உங்களுக்கு தேவையானது

பட்டை – சிறிய அளவு

நீர்         – 1 கப்

என்ன செய்ய வேண்டும்

நீரில் சிறிதளவு பட்டையை சேர்த்து கொதிக்க விடவும். அல்லது லவங்க பட்டையை பொடி செய்து கொதிக்கும் நீரில் சேர்க்கலாம்.பின் குடிக்கும் சூட்டில் பருகவும்.

எவ்வளவு முறை செய்யலாம்.

நாளொன்றுக்கு இரண்டு முறை செய்யலாம்.

எப்படி வேலை செய்கிறது

நல்ல மணம் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் பட்டையில் இருக்கிறது. லவங்கப்பட்டை எனப்படும் பட்டையில் பாலிபினால்கள் அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் ப்ரோஅந்தோசையனிடின் இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது(13). பட்டையில் உள்ள ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மைகள் (14) மூச்சு குழாய் பிரச்னைகள் , மூச்சு திணறல், இதயநோய் மற்றும் இருமலை நீக்குகிறது.

எத்தகைய இருமலையும் சரியாக்கும் எலுமிச்சை

உங்களுக்கு தேவையானது

எலுமிச்சை ரசம் – இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள்

தேன்                      – 1 ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன்

பட்டை தூள்         – சிறிதளவு

என்ன செய்ய வேண்டும்

தேனை லேசாக சூடாக்கி அதனுடன் எலுமிச்சை மற்றும் பட்டை கலக்க வேண்டும்.உடன் சிறிது வெந்நீர் சேர்த்து பருகி வர சளி மற்றும் இருமல் சரியாகி விடும்.

எப்படி வேலை செய்கிறது

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதனால் சளி மற்றும் இருமலை உண்டாக்கும் கிருமிகளை நீக்குகிறது. ஆகவே சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது

இருமலைக் குறைக்கும் வெல்லம்

உங்களுக்கு தேவையானது

வெல்லம்  – ஒரு சிறிய துண்டு

என்ன செய்ய வேண்டும்

அந்த சிறிய துண்டு வெல்லத்தை வாயில் போட்டு மிட்டாய் போல உண்ணவும்.

எவ்வளவு முறை நீங்கள் இதை செய்யலாம்

எப்போதெல்லாம் இருமல் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படி இது வேலை செய்கிறது

இருமும்போது ஏற்படுகின்ற தொண்டை அழற்சி மற்றும் புண்களை குணப்படுத்தி இதமாக்கும் ஆற்றல் வெல்லத்திற்கு இருக்கிறது.

இருமலை அடக்கும் நெல்லிக்காய்

உங்களுக்கு தேவையானவை

நெல்லிகாய் சாறு – 1 கப்

மிளகு தூள்             – சிறிதளவு

தேன்                        –  ஒரு ஸ்பூன்

என்ன செய்ய வேண்டும்

நெல்லிக்காய் சாறில் மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

எவ்வளவு முறை

ஒரு நாளைக்கு 1-2 முறை குடிக்கலாம்.

எப்படி வேலை செய்கிறது

நெல்லிக்காய் இந்தியாவின் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட காய்களில் ஒன்று. புளிப்பு இனிப்பு துவர்ப்பு என பல சுவைகள் இதில் உள்ளது. காய்ச்சலடக்கும் தன்மை கொண்டது நெல்லிக்காய். கூடவே சளி மற்றும் இருமலை அடக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீக்கும் ஓமம்

உங்களுக்கு தேவையானது

ஓமம் பொடி        -1 ஸ்பூன்

மஞ்சள்தூள்         -1/4 ஸ்பூன்

பனங்கற்கண்டு – 1/2 ஸ்பூன்

மிளகு பொடி      – 1/4 ஸ்பூன்

பால்                      – 1 டம்ளர்

என்ன செய்ய வேண்டும்

சூடான பாலில் மேற்கண்ட பொடிகளை கலந்து குடிக்கவும்.

எவ்வளவு முறை செய்யலாம்

தினமும் இரண்டு முறை பருகலாம்

எப்படி வேலை செய்கிறது

ஓமத்தில் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்க்கும் பண்பு அதிகமாக இருக்கிறது. அழற்சி எதிர்ப்பாகவும் ஓமம் செயல்படுகிறது(16). ஆகவே இருமல் நேரங்களில் தொண்டையில் ஏற்படும் அழற்சிக்கு இதமளித்து இருமலை உண்டாக்கும் கிருமிகளை வேரோடு அழிக்கிறது ஓமம்.

இருமல் வராமல் காக்க சில முக்கியமான குறிப்புகள் –  Prevention Tips For Cough in Tamil

Prevention Tips For Cough

Shutterstock

  • இருமல் ஏற்படாமல் இருக்க நீங்கள் முக்கியமாக மிக குளிர்ந்த நிலையில் உள்ள பானங்களை பருகக்கூடாது .
  • அடிக்கடி நீர் குடித்துக் கொண்டே இருப்பது உங்களை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கும்
  • பால் மற்றும் பால் சம்பந்தமான பொருள்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. அல்லது குறைத்து கொள்ளலாம்.
  • ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகளான ஈஸ்ட், நட்ஸ், சில மீன் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்
  • வெண்மை நிற பிரட் மற்றும் வெண்மை நிற பாஸ்தா வகையை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் நன்றாக ஓய்வெடுப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உறங்கும்போது உடல் சைடோகைன்களை வெளிப்படுத்தும். அது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.
  • வைட்டமின் D குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு திறன் குறையாமல் பார்த்துக் கொள்ளும். சூரிய வெளிச்சம் காலை 6 முதல் 7 வரை உங்கள் மீது படும்படி இருந்தால் போதுமானது.
  • மழை நேரங்களில் சளி பிடித்தால் உடனடியாக அதற்கான தீர்வுகளை தேடுங்கள். சளி அதிகரிக்கும்போது இருமல் சேர்ந்து கொள்ளும் அபாயம் உண்டு.
  • மழைக்காலங்களில் அடிக்கடி பால் கலக்காத லெமன் டீ ப்ளாக் டீ போன்றவற்றை பருகுவது உங்கள் தொண்டைக்கு இதமளித்து அங்குள்ள சளியைக் கரைத்து விடும்.
  • சுத்தமான ஆடை, உடல் குளியல் என உங்களை பரிசுத்தமாக்கியபடி இருப்பது நோய்க்கிருமிகளை உங்களை அண்டவிடாமல் தடுக்கும் வழியாகும்.

இறுதியாக

இருமல் நேரங்களில் முடிந்தவரை மற்றவரின் அருகாமையில் இருந்து விலகி இருங்கள். இருமல் வந்தால் முடிந்தவரை கைகளால் வாயை மூடியபடி இருமலாம். வெறும் இருமல் தானே என்று கவனமின்றி அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒரு வாரத்துக்கு பின்பான இருமல் என்றால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம். மேலே கொடுக்கப்பட்ட இயற்கை வீட்டு வைத்திய முறையை பின்பற்றி இருமல் நேரங்களை இதமாக்கி கொள்ளுங்கள். இருமல் பற்றிய தீர்வுகள் ஏதேனும் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Was this article helpful?
scorecardresearch