முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை விரைவில் நீக்கும் 10 சிறந்த க்ரீம்கள் உங்களுக்காக! Best Pigmentation Removal Creams in Tamil

பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளானது அவர்களின் அழகை கெடுப்பதோடு தன்னம்பிக்கையையும் கேள்விக்குறி ஆக்கி விடுகிறது.
பொதுவாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மெலனின் குறைபாடு அல்லது அதிகமாக சுரத்தல் காரணமாக சருமத்தில் கருந்திட்டுக்கள் , மங்கு போன்றவை ஏற்படுகின்றன. இருப்பினும் மரபணு மற்றும் உடல்வாகு மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாசுக்களாலும் சில நேரங்களில் இளம் வயது பெண்களுக்கும் இந்த கருந்திட்டு பிரச்னை உருவாகிறது. அதைப்போலவே அதிகப்படியான புற ஊதாக்கதிர்கள் தாக்கமும் கரும்புள்ளிகள் ஏற்பட ஒரு காரணமாகிறது.
இதனை போக்க பல்வேறு விதமான க்ரீம்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ஆனால் அதிலும் எதனை வாங்கினால் உங்கள் சருமம் வெகு விரைவாகவும் அதே சமயம் பக்கவிளைவுகள் அற்றும் கரும்புள்ளி மங்குகளை நீக்குகின்றன என்பது மிகப்பெரிய கேள்விதான்.
உங்களுக்கு உதவுவதற்காக சந்தையில் விற்பனையாகும் தரமான சிறந்த 10 பிக்மென்டேஷன் க்ரீம்களை இங்கே தொகுத்திருக்கிறோம். உங்களுக்கு ஏற்றதை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
1. Mamaearth Bye Bye Blemishes Face Cream
க்ரீமின் தன்மைகள்
டெய்சி மலரின் எஸ்ஸென்சும் மல்பெரியின் எஸ்ஸென்சும் கலந்த Mamaearth Bye Bye Blemishes Face Cream உங்கள் முகத்திற்கு இதமான குணமளிக்கும் (healing ) தன்மையை கொண்டிருக்கிறது. இது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், மங்கு, நிறமாற்றம் , வயதாவதால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்குகிறது.
நன்மைகள்
- பிசுபிசுப்பு அற்றது
- சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது
- அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது
- இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது
தீமைகள்
எதுவும் இல்லை
2. Honest choice Anti Blemish face cream for men n women
க்ரீமின் தன்மைகள்
இந்த க்ரீமில் கிருமிநாசினி மற்றும் ஆன்டி இன்ப்ளமேட்டரி மூலப்பொருள்கள் இருப்பதால் அது உங்கள் முகத்தின் அதிகப்படியான எண்ணெய்யை எடுப்பதுடன் சரும துவாரங்களை மூடவும் உதவுகிறது. மேலும் பருக்களால் ஏற்படும் தழும்புகளை நீக்கி மேலும் பருக்கள் வராமல் காக்கிறது. இதனை நீங்கள் இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
நன்மைகள்
- ஆன்டி பிக்மென்டேஷன்
- முகப்பருவால் உண்டாகும் புள்ளிகளை நீக்குகிறது
- பிரகாசமான பொலிவை தருகிறது
- தழும்புகளை நிறம் மங்க செய்கிறது
- புற ஊதாக்கதிர்களால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தை சரி செய்கிறது.
- 6.முக சுருக்கங்களை நீக்குகிறது.
தீமைகள்
எதுவும் இல்லை
3. Lotus Herbals Papayablem
க்ரீமின் தன்மைகள்
இதில் இருக்கும் ஆப்ரிகாட் கெர்னல் எண்ணெயானது சருமத்திற்கு ஈரபதத்தையும் மிருது தன்மையையும் அளிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஈ மற்றும் கிராம்பு எண்ணெய் இருப்பதால் இது ஆன்டிசெப்டிக் மற்றும் பருக்கள் வராமல் காக்கவும் உதவி செய்கிறது
நன்மைகள்
- ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி ஆக்னே பொருள் கொண்டது
- பப்பாளி பழம் இயற்கையாகவே கரும்புள்ளிகளை நீக்கும் தன்மை கொண்டது
- அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
- பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
- முகத்தின் மிருது தன்மையை அதிகரிக்கிறது.
தீமைகள்
எதுவும் இல்லை
4. Khadi Natural Herbal Anti Blemish Cream
க்ரீமின் தன்மைகள்
இந்த க்ரீம் உங்கள் பிக்மென்ட்டேஷன் பிரச்னைகளை தீர்க்கிறது. கருவளையங்கள் மற்றும் பருவின் தழும்புகள் இதில் சரியாகின்றன. எல்லாவிதமான இயற்கையான மூலிகைகளின் கலவையான இந்த க்ரீம் உங்கள் முகப்பொலிவிற்கும் மிருதுத்தன்மைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
நன்மைகள்
- இயற்கை மூலிகைகள் அடங்கியது
- கெடுதலான ரசாயனங்கள் இல்லை
- GMP சான்றிதழ் பெற்றது
- ISO மற்றும் WHO சான்றிதழ் பெற்றது
- எல்லா சரும வகையினருக்கும் ஏற்றது
- லேசானது
தீமைகள்
எதுவும் இல்லை
5. Vaadi Herbals Lemongrass Anti-Pigmentation Massage Cream
க்ரீமின் தன்மைகள்
இது ஆஸ்ட்ரின்ஜெண்ட் மற்றும் ஆன்டிபேக்டீரியல் மூலப்பொருள்கள் கொண்ட ஒரு பிக்மென்ட்டேஷன் க்ரீம் ஆகும். இது உங்கள் கரும்புள்ளிகள் மற்றும் மங்கு போன்ற சரும பிரச்னைகளை வேர்வரை சென்று சரி செய்யும். உங்கள் முகத்தை மாசு மருவற்ற தெளிவான முகமாக மாற்றி விடும்.
நன்மைகள்
- இயற்கையானது
- GMP சான்றிதழ் பெற்றது
- மிருகங்களின் மீது பரிசோதிக்கப்படாதது
- 100 சதவிகிதம் ரசாயனம் இல்லாதது
- பேரபின் இல்லாதது
- இயற்கையானது என சான்றிதழ் பெற்றது
தீமைகள்
எதுவும் இல்லை
6. Natio Ageless Daily Moisturiser UV Protection
க்ரீமின் தன்மைகள்
இதன் லேசான தன்மை உங்கள் முகத்தை வெயில் மற்றும் மாசு மருக்களில் இருந்து காக்கிறது. இதன் SPF 30+ சூரிய கதிர்களிடம் இருந்து உங்களை காக்கிறது. உங்கள் முகம் பொலிவாகவும் பேரழகோடும் மின்ன உதவி செய்கிறது.இதில் உள்ள எலுமிச்சை , லாவெண்டர் மற்றும் ரோஸி எண்ணெய் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை காக்கிறது
நன்மைகள்
- உங்கள் முகத்தின் வயோதிக மாற்றங்களை தடுக்கிறது
- நீண்ட காலம் உங்கள் முகத்தின் இளமைத் தன்மையை பாதுகாக்கிறது
- SPF 30+ கொண்டது
- எல்லா சருமத்திற்கும் ஏற்றது.
தீமைகள்
எதுவும் இல்லை
7. Kaya Clinic Pigmentation Reducing Complex கிரீம்
க்ரீமின் தன்மைகள்
இதன் தனித்தன்மையானது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், மங்கு மற்றும் நிறமாற்றங்களை நீக்குகிறது. வெயிலால் கருமையான சருமத்தின் நிறத்தை பழையபடிக்கு மாற்றுகிறது. இதனுடன் இது கண் கருவளையங்களுக்கும் மருந்தாகிறது.
நன்மைகள்
- இதன் சீக்கிரம் உள்வாங்கும் தன்மை
- அஸிலிக் மற்றும் பைலிக் அமிலங்கள் சேர்ந்ததால் விரைவாக தீர்வு தரும்
- கரும்புள்ளிகளை நீக்குவதோடு மேலும் வராமல் தடுக்கிறது
- பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
தீமைகள்
எதுவும் இல்லை
8. Olay Total Effects 7-In-One Anti Aging Day Cream
இந்த க்ரீம் வயோதிகத்தை உருவாக்கும் 7 அறிகுறிகளை தவிர்க்க செய்கிறது. இந்த க்ரீம் உங்கள் முகத்தில் ஆங்காங்கே நிறம் மாறி இருக்கும் இடங்களை சமன் செய்கிறது. இது உங்கள் முகத்தை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனை உங்கள் மேக்கப் சமயங்களிலும் உபயோகிக்கலாம். கரும்புள்ளிகள் மற்றும் மங்குவை மட்டும் அல்லாமல் சரும சுருக்கங்களையும் நீக்குகிறது.
நன்மைகள்
- கரும்புள்ளிகளை விரைவாக நீக்குகிறது
- இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது
- SPF 15 கொண்டுள்ளது
- ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கிறது
தீமைகள்
- பாரபின்கள் இருக்கின்றன
- செயற்கை வாசனை சேர்க்கப்பட்டுள்ளது
9. VLCC Ayurveda Potless Clear Active D Pigmentation Cream
க்ரீமின் தன்மைகள்
இந்த டி பிக்மென்டேஷன் க்ரீம் உங்களது சருமத்தை புற ஊதா கதிர்களிடம் இருந்தும் சுற்று சூழல் மாசுக்களிடம் இருந்தும் காப்பாற்றுகிறது. இதில் கேரடனாய்ட் , அதிமதுர எசென்ஸ் , கெமோமில் எண்ணெய் இருப்பதால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் மங்குவை நீக்கி உங்களுக்கு பிரகாசமான முகத்தை வழங்குகிறது.
நன்மைகள்
- இயற்கை மூல பொருள்கள்
- கெடுதல் ரசாயனம் பேரபின் இல்லை
- கெடுதல் தரும் ரசாயனங்கள் எதுவும் இதில் இல்லை
- எல்லா சரும வகைக்கும் பொருத்தமானது
தீமைகள்
- வலிமையான வாசனை
- இயற்கை பொருள்கள் என்பதால் தீர்வு கிடைக்க தாமதம் ஆகிறது
10. Jovees Anti Blemish Pigmentation Cream
க்ரீமின் தன்மை
பல மூலிகைகளின் கலவையான இந்த க்ரீம் உங்கள் முகப்பொலிவை மேலும் அதிகரிக்க செய்கிறது. உங்கள் முகத்தின் நிறமாற்றங்களை சரி செய்கிறது. கரும்புள்ளிகளை தேய செய்கிறது. இதன் க்ரீம் மற்றும் வெல்வெட் போன்ற தன்மை உங்கள் சருமத்தில் உடனடியாக ஊடுருவி பொலிவினை மேம்படுத்துகிறது.
நன்மைகள்
- எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது
- லேசான கனமுள்ளது
- வாங்கும் விலையில் சரியானது
- பேரபின் ரசாயனம் இதில் இல்லை
தீமைகள்
தீர்வு கிடைக்க தாமதம் ஆகும்
பிக்மென்ட்டேஷன் க்ரீமில் இருக்க வேண்டிய மூலப்பொருள்கள்
ஹைட்ரொகுயினோன்
ஆர்புட்டின்
வைட்டமின் சி
ஐ அஸ்கார்பிக் அமிலம்
டெக்ஸ்ட்ராஹெக்சிடெஸில்
அதிமதுர ரசம்
கோஜிக் அமிலம்
அசிலாக் அமிலம்
பிக்மென்டேஷன் க்ரீம் உபயோகிக்கும் குறிப்புகள்
ஸ்கின் பிரைட்டனிங் சீரம் பயன்படுத்தவும்
ஒரு நல்ல ஸ்கின் பிரைட்டனிங் க்ரீம் பயன்படுத்தும்போது உங்கள் முகம் டல்லான தோற்றத்தில் இருந்து மாறி பிரெஷான தோற்றத்தை கொடுக்கும்
மாய்ச்சுரைசர் வாங்கும்போது கவனமாக இருங்கள்
முகத்தின் நிறமாற்றத்திற்கு அதிகமான காரணம் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புதான்.SPF 30 இருக்கும்படியான க்ரீம்களை வாங்கவும்
இறந்த செல்களை நீக்கும்படியான க்ளென்சர் பயன்படுத்தவும்
உங்கள் முகத்தின் கரும்புள்ளிகள் மறைய நீங்கள் இறந்த செல்களை நீக்கும் க்ளென்சர்களை பயன்படுத்துவது கரும்புள்ளிகளை லேசாக்கி மறைய செய்து விடும்.
உங்கள் சரும வகைக்கு ஏற்ற க்ரீமை தேர்ந்தெடுக்கவும்
நிச்சயமாக இப்படி செய்யாமல் போனால் பல சிக்கல்களுக்கு ஆளாக நேரலாம். உங்களது சரும வகைக்கு ஏற்ப பிக்மென்டேஷன் க்ரீம்களை தேர்ந்தெடுங்கள்
தேவையான மூலப்பொருள்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்
நீங்கள் பல மூலப்பொருள்களை கலவையாக கொண்டிருந்த க்ரீம்களை உபயோகித்தால் சில மூல பொருள்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆகவே குறைவான மூலப்பொருள்கள் இருப்பதே நல்லது.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
