ஒல்லி பெல்லி வேண்டுமா! கருப்பு கவுனி அரிசி இருக்க கவலை எதற்கு ! Benefits of black rice in Tamil

நம்முடைய பாரம்பரிய உணவு தானியம் அரிசி தான். வெள்ளை அரிசி தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது. ஆனால், கருப்பு அரிசி பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா. இது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு அரிசி வகையாகும். ஆனால் அதன் பிறகு சீன மக்களால் புறக்கணிக்கப்பட்டது.
Table Of Contents
கருப்பு அரிசியை தமிழர்கள் எப்படி அழைப்பார்கள்?
கருப்பு அரிசியை பற்றி தெரியுமா என தமிழ் மக்களிடம் கேட்டால், அப்படியா? அப்படி ஒரு அரிசி வகை உண்டா என்றே கேள்வி எழுப்புவார்கள். அதுவே கவுனி அரிசி என்று கூறினால் உங்கள் தாத்தா பாட்டிக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இந்த அரிசியை நாம் பயன்படுத்தாவிட்டாலும், பெயரை கேள்விப்பட்டிருப்போம். சீனா, ஜப்பான், கொரியா, மியான்மர், வட கிழக்கு இந்தியாவில் இதனை நம்மால் காண முடியும்.
கவுனி அரிசியின் நன்மைகள் எவை?
1. இதில் ஆக்சிஜனேற்றிகள் அடங்கி உள்ளதா!
கவுனி அரிசியை போல் அதிக ஆக்சிஜனேற்றிகள் கொண்ட தானியத்தை நம்மால் காண இயலாது. இதில் ஆந்தோசைனின் எனப்படும் அற்புத பொருள் அடங்கியுள்ளது. மற்ற கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, சிவப்பு சீமைத்தினை போன்ற தானியங்களில் கூட இந்த பொருள் மிக குறைவாகவே காணப்படுகிறது (1). இந்த அற்புதமான பொருள் ஆந்தோசைனின்., இதய நோய்களையும் தொற்று நோய்களையும் வயிற்றுப்போக்கு பிரச்சனையையும் சரி செய்ய உதவுகிறது (2).
2. புற்றுநோயுடன் போராடும் கவுனி அரிசி
ஆந்தோசைனின் புற்றுநோய்க்கு ஆக சிறந்த மருந்தாக விளங்குகிறது. புற்றுநோய் கட்டிகள் வளரும் போது இந்த கவுனி அரிசி அதை குறைப்பதாக சீன நாட்டின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மற்ற உடலுறுப்புக்கு புற்றுநோய் பரவாமலும் இந்த ஆந்தோசைனின் எனும் மூலப்பொருள் தடுக்கிறது (3).
3. கவுனி அரிசி அலெர்ஜியை குறைக்கிறது
கவுனி அரிசி, அலெர்ஜியை குறைக்க உதவுவதாக கொரிய ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட கவுனி அரிசி தோல் அலெர்ஜியை குறைக்கிறது. நாள்பட்ட அலெர்ஜி பிரச்சனைக்கும் இந்த கவுனி அரிசி நன்மருந்தாக அமைகிறது (4).
4. கவுனி அரிசி எடை குறைக்க உதவும்
இந்த கவுனி அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட்டும் குறைவான கலோரிகளும் அதிகமான நார்ச்சத்தும் இருப்பதால் எடையை நிர்வகிக்க இது உதவுகிறது. மற்ற வகை அரிசிகளுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வில் கவுனி அரிசி எடை குறைப்பில் சிறந்து விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. எடை பருமனாக இருக்கும் பெண்களுக்கு கவுனி அரிசியும் கைக்குத்தல் அரிசியும் நற்பயனை அளிக்கிறது (5).
5. கவுனி அரிசி இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும்
வெள்ளை அரிசியை விட கருப்பு அரிசி (கவுனி அரிசி) தான் இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும்போது ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய்கள் வருவது மிக சுலபம். ஆனால், இந்த கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோசைனின், இதய நோய்கள் எதுவும் வராமல் பாதுகாக்கிறது (16/a>), (7), (8).
பெருந்தமனி தடிப்பு என்பதொரு இதயநோய். இந்த நோய் வந்தால் கரோனரி தமனி நோய், வலிப்பு, சிறுநீரக பிரச்சினைகள் போன்றவை வரவும் அதிக வாய்ப்புள்ளது. ஆனால், கவுனி அரிசியை பயன்படுத்துவதால் இது போன்ற எந்த ஒரு இதய நோயும் நமக்கு வராது.
6. கல்லீரலில் ஏற்படும் நச்சுத்தன்மையை சரி செய்யும்
கல்லீரலில் கூடுதல் கொழுப்பு சேரும்போது அதுவே நமக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். ஆனால் கவுனி அரிசியை பற்றிய ஆய்வின் முடிவுகள் மூலம் இது ஒட்டுமொத்த கொழுப்பையும் குறைக்க வல்லது என்பது தெரிகிறது (9).
7. சிறந்த மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது
Shutterstock
கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோசைனின், நம்முடைய மன அழுத்தத்தை குறைத்து சிறந்த மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது. எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் அதன் கற்றல் திறனும் நினைவாற்றல் திறனும் மேம்பட்டுள்ளது தெரிய வருகிறது (10).
16,000 மனிதர்களை (18 வயதுக்கு மேலுள்ளவர்கள்) வைத்து நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு முடிவில் ஆந்தோசைனின் நிறைந்த உணவுகளை நீண்ட காலமாக உட்கொள்வது அறிவாற்றல் வீழ்ச்சியின் வீதத்தை 2.5 ஆண்டுகள் வரை குறைப்பதாக கண்டறிந்துள்ளது (11).
8. கவுனி அரிசி சர்க்கரை நோய்க்கு நல்லது
கவுனி அரிசியில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. இது இன்சுலின் அளவை பாதுகாத்து டைப்-2 நீரிழிவு நோயில் இருந்து காப்பாற்றுகிறது. எலியின் மூலம் மேற்கொண்ட பரிசோதனை முடிவில் இதுவும் நமக்கு தெரிய வருகிறது (12).
9. கவுனி அரிசி செரிமான மண்டலத்தை சரி செய்யும்
கவுனி அரிசியில் இருக்கும் நார்ச்சத்து, குடல் இயக்கங்களை சீராக்கி செரிமான மண்டலத்தை சிறப்பாக இயங்கவும் வைக்கும். மேலும், இரைப்பை உணவுக்குழாய் நோய், குடலில் ஏற்படும் புண், மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும் (13).
10. கவுனி அரிசி பசை போன்று ஒட்டாது
கோதுமை, பார்லி போன்றவற்றில் பசை போன்று ஒட்டும் தன்மை உள்ளது. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, உப்புசம் பிரச்சனை என பல சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் இந்த கவுனி அரிசி, பசையம் தன்மை அற்றது என்பதால் உடலுக்கு எந்த உபாதையும் ஏற்படுத்தாது.
11. உயர் இரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்
இந்த கவுனி அரிசியில் இருக்கும் நார்ச்சத்து உயர் இரத்த அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், லிப்பிட் அளவை குறைக்கவும் உடல் எடையை சரியாக பராமரிக்கவும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் நாள்பட்ட வீக்கத்தை சரிசெய்யவும் உதவுகிறது (14).
12. கவுனி அரிசி ஆஸ்துமாவை குணப்படுத்தும்
இந்த ஆந்தோசைனின் ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது. காற்றுப்பாதையில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்து நன்றாக மூச்சுவிட கவுனி அரிசி நமக்கு பெரிதும் உதவுகிறது (15).
13. கவுனி அரிசி கண்களுக்கு நல்லது
கண் பார்வை குறைபாடுகளுக்கு இதில் இருக்கும் ஆந்தோசைனின் உதவுகிறது. எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் அதன் சேதமடைந்த விழிகள் சரிசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது (16).
சமைக்கப்பட்ட 1 கப் கவுனி அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
ஊட்டச்சத்து | அலகு | எவ்வளவு |
கலோரிகள் | கிராம் | 160 |
மொத்த கொழுப்பு | கிராம் | 2 |
கொலஸ்ட்ரால் | மைக்ரோ கிராம் | 0 |
சோடியம் | மைக்ரோ கிராம் | 4 |
பொட்டாசியம் | கிராம் | 268 |
கார்போஹைட்ரேட் | கிராம் | 34 |
நார்ச்சத்து | கிராம் | 3 |
ஷுகர் | கிராம் | 0 |
புரதம் | கிராம் | 5 |
இரும்புச்சத்து | சதவிகிதம் | 6 (கிடைக்கும் தினசரி அளவு) |
எப்படி சாப்பிடலாம்?
களி போல் செய்து சாப்பிடலாம். 1 கப் கவுனி அரிசி, 3 கப் தண்ணீர், ½ கப் சர்க்கரை, கொஞ்சம் இனிப்பு அற்ற தேங்காய் பால், உப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.
- கவுனி அரிசியையும் தண்ணீரையும் ¼ டீஸ்பூன் உப்பையும் சேர்த்து கொதிக்கவைத்து கொள்ளுங்கள்.
- அடுப்பை குறைத்து வைத்து மூடி, 45 நிமிடம் வேகவிடுங்கள்.
- மீண்டும் அடுப்பு சூட்டை அதிகப்படுத்தி, சர்க்கரை, ¼ டீஸ்பூன் உப்பு, ¾ அளவு தேங்காய்ப்பால் சேர்த்து அதோடு கிளறி மீண்டும் கொதிக்க வையுங்கள்.
- இன்னொரு 30 நிமிடங்களுக்கு மூடி போட்டு மூடாமல் அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடுங்கள்.
- இப்போது களி கெட்டியாகவும் அரிசி பதமாகவும் இருக்கும். ஆனாலும் நன்றாக மென்று சாப்பிடுவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்கவிட வேண்டியது அவசியம்.
- பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கிளற வேண்டும். அப்போது தான் ஆறும்.
- பரிமாறுவதற்கு முன்பு, மீதமிருக்கும் தேங்காய் பாலையும் ஊற்றிவிட வேண்டும். அவ்வளவு தான் சுவையான கவுனி அரிசி களி ரெடி!
எப்போது சமைத்து சாப்பிடலாம்?
காலை நேரங்களில் சாப்பிடலாம். இது உங்களுடைய நாளை மிகவும் புத்துணர்வுடன் தொடங்க உதவும்.
எவ்வளவு சாப்பிடலாம்?
குறைந்த அளவு உட்கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
கவுனி அரிசியை சமைப்பது எப்படி?
- ஓர் இரவு முழுவதும் கவுனி அரிசியை ஊறவைக்க வேண்டும். இதனால் சீக்கிரம் வெந்துவிடும். ஒருவேளை ஊற வைக்க நேரம் இல்லையெனில் குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைத்து, பிறகு சமைக்க வேண்டும்.
- ஊறவைத்த தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு பிறகு அரிசியை சுத்தமாக கழுவ வேண்டும்.
- ஒவ்வொரு கப் அரிசிக்கும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதன்பிறகு மூடி போட்டு மூடிவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
- ஒருவேளை முன்பே ஊறவைத்திருந்தால் அரை மணி நேரம் வேகவைப்பது போதும், இல்லையேல் ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும்.
- அரிசி பதத்தை கைவைத்து உறுதிப்படுத்தி கொள்ளலாம். நன்றாக வெந்துவிட்டதா என்பதை அறிய வாயில் போட்டு மென்றும் பார்க்கலாம்.
கவுனி அரிசியை வாங்கி, கெட்டு போகாமல் வைத்துக்கொள்வது எப்படி?
தேர்ந்தெடுக்கும் முறை
உங்களுக்கு தனித்தனி அரிசியாக தேவைப்பட்டால் நீண்ட அரிசியை தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை மென்று தின்பது போன்ற அரிசி உங்களுக்கு தேவைப்பட்டால் சிறிதாக இருப்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் 100% சுத்தமான கவுனி அரிசி தானா என்பதை உறுதிப்படுத்தி வாங்க வேண்டும்.
சேமிக்கும் முறை
காற்றுப்புகாத டப்பாவில் கவுனி அரிசியை அடைத்து வைத்தால் 3 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். சமைத்த சாதத்தை பதப்படுத்த நினைத்தால் பாக்டீரியாக்கள் உருவாகும். அதனால் அடுத்த நாள் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைப்பதன் மூலம் 2 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கவுனி அரிசி ஏற்படுத்தும் பக்கவிளைவு என்ன?
- நீங்கள் கவலைப்படும் அளவிற்கு எந்த பக்கவிளைவையும் இந்த கவுனி அரிசி ஏற்படுத்துவதில்லை.
- இது போன்ற ஒரு அற்புதமான உணவை உங்கள் வாழ்வில் பார்க்கவும் முடியாது.
ஒட்டுமொத்தத்தில்…
மற்ற எல்லா அரிசியை விட மிகவும் ஆரோக்கியமானது இந்த கவுனி அரிசி என்பதற்கு பல்வேறு ஆய்வு முடிவுகள் உதாரணமாய் உள்ளன. இப்போது கலப்பட பொருட்களே நம்முடைய கைக்கு வந்து சேர்கிறது. நாம் அன்றாட உண்ணும் அரிசியில் கூட கலப்படம் தான் இன்று அதிகம் காணப்படுகிறது. ஆரோக்கியமான உணவிலும் கலப்படம் அதிகரித்ததால் புதுப்புது நோய்கள் நமக்கு வந்த வண்ணம் உள்ளது. எதிர்ப்பு சக்தியை தரும் உணவு இது என நம்பி எதையுமே நம்மால் சாப்பிட முடியவில்லை.
ஒருவேளை இந்த கவுனி அரிசி நமக்கு கிடைக்குமென்றால் நோய் விட்டு போக, நம் வாழ்வும் வளமுடனும் நலமுடனும் நிச்சயம் செழிக்கும். இந்த கவுனி அரிசி, நம்முடைய வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்
- கவுனி அரிசியும் காட்டு அரிசியும் ஒன்றா?
- கவுனி அரிசியின் கிளைசெமிக் குறியீட்டு எண் என்ன?
- கவுனி அரிசியை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?
- பேலியோ டயட் முறையில் கவுனி அரிசியை உண்ணலாமா?
- கவுனி அரிசியில் சமைத்த உணவை ஏன் சூப்பர் ஃபுட் என்று அழைக்கிறோம்?
- கவுனி அரிசியின் சுவை எப்படி இருக்கும்?
- கவுனி அரிசிக்கும் கைக்குத்தல் அரிசிக்கும் என்ன வித்தியாசம்?
- கவுனி அரிசியில் ஆர்சனிக் எனும் அமில மூலகம் உள்ளதா?
- கவுனி அரிசியை சுத்தப்படுத்த வேண்டுமா?
- காட்டு அரிசிக்கு பதிலாய் கவுனி அரிசியை நான் பயன்படுத்தலாமா?
16 Sources

Latest posts by StyleCraze (see all)
- உச்சி முதல் பாதம் வரை அத்தனை நன்மை கொண்ட ஆலிவ் – Benefits of Olive in Tamil - February 23, 2021
- கொழுப்பு கல்லீரலை குணப்படுத்த வீட்டு வைத்தியம் – home remedies for fatty liver in Tamil - February 23, 2021
- மூங்கில் தண்டுகள் பலன்களும் பக்க விளைவுகளும் – benefits of bamboo shoots in Tamil - February 19, 2021
- வைட்டமின் டி 3 இன் நன்மைகள் – Benefits of vitamin d3 in Tamil - February 18, 2021
- எதற்கெடுத்தாலும் பொசுக் பொசுக் எனக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதா ! ஈஸியா ரிலாக்ஸ் ஆக சில ரகசிய வழிமுறைகள் ! - February 15, 2021
