கசகசா விதைகளின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Written by StyleCraze

கசகசா விதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா! பெரும்பாலும் கசகசா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஓர் பொருள் என்றே பலரும் அறிந்திருப்பர். ஆனால் சமையலை தாண்டி கசகசா எண்ணற்ற நன்மைகளை அளிக்கக்கூடியது.  உங்களது புருவத்தை உயர்த்த செய்யும் அளவு நன்மைகளையும், பயன்களையும் அளிக்கக்கூடியது கசகசா. கசகசா விதைகளினால் ஏற்படக்கூடிய நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் பற்றி இப்பதிப்பில் விரிவாக படித்து அறியலாம். 

கசகசா விதைகளின் நன்மைகள்-  Poppy Seeds Benefits, Uses and Side Effects in Tamil

‘khus khus‘ என இந்தி மொழியிலும், ‘gasagasalu‘ என தெலுங்கு மொழியிலும், ‘kasa kasa‘ என தமிழ் மொழியிலும், ‘kas kas‘ என மலையாள மொழியிலும், ‘gasegase‘ என கன்னட மொழியிலும், ‘posto‘ என வங்காள மொழியிலும், ‘khush khush‘ என இந்தி மொழியிலும், ‘poppy seeds’ என ஆங்கில மொழியிலும் அழைக்கப்படும் இந்த உணவுப்பொருள் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது. இந்த பாப்பி விதைகள், பாப்பி எனும் மலர் தாவரத்திலிருந்து பெறப்படும் எண்ணெய் விதைகள் ஆகும். 

கசகசா விதைகளின் அறிவியல் பெயர் Papaver somniferum – பாப்பாவர் சோம்னிஃபெரம்; இது பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மத்திய ஐரோப்பாவில் இவை வளர்க்கப்பட்டு, விற்கப்படுகின்றன. பல வகை உணவு பொருட்கள் தயாரிக்க முழு மற்றும் நில வடிவில் பாப்பி விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாப்பி விதை எண்ணெய் எடுக்கவும் இந்த கசகசா விதைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

கசகசா விதைகளின் வகைகள்

கசகசா விதைகளில் பல வேறுபட்ட வகைகள் உள்ளன; கசகசா விதைகளில் உள்ள சில பிரபல வகைகள் ஆவன:

நீல பாப்பி விதைகள் – இதனை ஐரோப்பியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; பெரும்பாலும் இது மேற்கத்திய பிரட்கள் மற்றும் மிட்டாய்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

வெள்ளை பாப்பி விதைகள் – இதனை இந்தியன் அல்லது ஆசியன் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; இது எல்லா வித உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஓரியண்டல் பாப்பி விதைகள் – இதனை ஓபியம் கசகசா விதைகள் என்றும் அழைப்பர்; இது அபின் விளைச்சல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகிறது.  

கசகசா விதைகளின் (Khas Khas) நன்மைகள்

பாப்பி விதைகள் நன்மைகள் பலவற்றை தருபவை ஆகும்; கசகசா விதைகளினால் ஏற்படும் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கசகசா விதைகள் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் 

கசகசா விதைகள், தூக்கமின்மையை போக்குதல், வாய் அல்சர், செரிமானமின்மையை சரிப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை அளிக்கின்றது; மேலும் இது பெண்களின் இனப்பெருக்க தன்மையை மேம்படுத்துவதோடு புற்றுநோயையும் தடுக்க உதவுகின்றன.

நன்மை 1: செரிமானம்  

கசகசா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அது செரிமானத்திற்கு உதவும். இந்நார்ச்சத்து மலத்தை ஒன்றாக திரட்டி, மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது (1). ஆனால், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நன்மை 2: வாய் புண்கள்

இது குறித்து ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், வாய் புண்களை குணப்படுத்த கசகசா விதைகள் உதவுவதாக நிகழ்வு சான்றுகள் கருத்து தெரிவிக்கின்றன. கசகசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி அளிக்க உதவி, வாய் புண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன.

சில நசுக்கிய உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், நில கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்; வாய் புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இக்கலவையை ஒரு சிறு சிறு துண்டுகளாக செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்து சாப்பிடவும். 

நன்மை 3: தூக்கமின்மையை குணப்படுத்தும்

Shutterstock

ஆய்வறிக்கைகளின் கருத்துப்படி, கசகசா விதைகள் கொண்ட பானத்தை பருகுவது உடலில் உள்ள கார்டிசோல்களை குறைக்க உதவுகிறது; இந்த சாந்தப்படுத்தும் விளைவினால், உடலின் அழுத்த அளவுகள் நிச்சயம் குறையும். மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சர்க்காடியன் தாளங்கள் ஒரு நல்ல முன்னேற்றத்தை தருபவையாகும்; இதன் மூலம் தனி நபர்கள் குறைந்த அளவே சோர்வாக உணர்வார்கள்.

பாப்பி விதைகளில், ஓபியம் பாப்பி என்பது தான் தூக்கத்தை தூண்டும் ஒரு பயனுள்ள விளைவை ஏற்படுத்தவல்லது (2). ஆனால், இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்; இதை குழந்தைகளுக்கு அளிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

கசகசா விதைகளை கொண்டு தேநீர் தயாரித்து உறங்க செல்லும் முன் உட்கொள்வது நல்ல உறக்கத்தை பெற உதவும்; கசகசா விதைகளை பேஸ்ட்டாக்கி சூடான பாலில் கலந்து பருக வேண்டும். இதனை தூங்க செல்லும் முன் குடிப்பது நல்லது; ஒரு கப் கசகசா விதை தேநீர், மாயாஜாலம் புரியவல்லது.

நன்மை 4: பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும்

கசகசா விதைகள் பெண்களின் உடலில் உள்ள பெலோப்பியன் குழாய்களில் நல்ல ஓட்டத்தை ஏற்படுத்தி, கருவுறுதலை அதிகரிக்க உதவும் ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன. குழாய்களில்  இருக்கும் கோழை அல்லது சளி போன்றவற்றை கரையச்செய்து, கருவுறுதலை அதிகரிக்க பாப்பி எண்ணெய் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இந்த முறையை hysterosalpingography – ஹிஸ்டிரோசால்பிங்கோகிராபி என்று அழைப்பர்; இந்த பரிசோதனையில் 40 சதவீத பெண்களுக்கு கருத்தரிப்பில் வெற்றி கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் பெலோப்பியன் குழாய்களில் பிரச்சனை உள்ள 29 சதவீதம் பெண்கள், கசகசா விதை நீரை எடுத்துக் கொள்வதன் மூலம், வெற்றிகரமான கருத்தரிப்பை பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது (3).

பாப்பி விதைகள் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது; மேலும் இவ்விதைகளில் உள்ள உறுப்புகள் ஆண்மையை அதிகரிக்க மற்றும் பாலியல் ஆசையை தூண்ட உதவுகின்றன.

நன்மை 5: எலும்பு ஆரோக்கியம்

கசகசா விதைகளில் அதிக அளவு காப்பர் மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளன; இது முதலில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை பலப்படுத்த உதவுகிறது. பாப்பி விதைகளில் உள்ள இன்னொரு தாதுச்சத்தான பாஸ்பரஸ், கால்சியம் சத்துடன் சேர்ந்து எலும்பு திசுவை உருவாக்க உதவுகிறது மற்றும் இவ்விதைகளில் உள்ள மாங்கனீசு கொலஜன் உற்பத்திக்கு உதவி, தீவிர சேதம் எதுவும் ஏற்படாமல் எலும்புகளை பாதுகாக்க உதவுகிறது.

நன்மை 6: மூளை ஆரோக்கியம்

மூளைக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்பு, காப்பர் – போன்ற தாதுச்சத்துக்கள் கசகசா விதைகளில் அதிகளவு அடங்கியுள்ளன. இந்த தாதுச்சத்துக்கள் அனைத்தும் நரம்பு டிரான்ஸ்மிட்டர்களை சரிப்படுத்தி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

கசகசா விதைகள் அறிவாற்றல் குறைபாட்டை தடுக்க உதவுகின்றன; இது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

நன்மை 7: நோய் எதிர்ப்பு சக்தி

பாப்பி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது; உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்க இவ்விதைகள் உதவுகின்றன மற்றும் கசகசாவில் இருக்கும் இரும்புச்சத்தும் இந்த நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டில் உதவுகிறது. 

கசகசாவில் உள்ள ஜிங்க் சத்து சுவாச குறைபாடுகள் ஏற்படுவதை குறைக்க உதவுகின்றன. 

நன்மை 8: இதய ஆரோக்கியம்

கசகசா விதைகள் நார்ச்சத்தினை அதிக அளவு கொண்டுள்ளன; இதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆய்வறிக்கையின் கருத்துப்படி, உணவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை கசகசா விதை எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம் (4). இதனை நடைமுறைப்படுத்த பாப்பி விதை எண்ணெயை உணவு முறையில் சேர்த்துக் கொண்டாலே போதும், இதய ஆரோக்கியத்தை காக்கலாம்.

கசகசா விதைகளில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன மற்றும் இந்த கொழுப்பு அமில சத்துக்கள் இதயத்திற்கு பெரும் நன்மை புரிபவை ஆகும். டஃப்ட்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின் படி, இவ்விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன – இந்த சத்துக்கள் இதயத்திற்கு நன்மை அளிக்கும் என்ற கருத்து உலகம் முழுதும் பிரசித்தி பெற்ற ஒன்றே ஆகும்; மேலும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க இந்த சத்து உதவுகிறது.  ஒமேகா-3 சத்துக்கள் உடலில் உற்பத்தி செய்யப்பட மாட்டாது; ஆகவே இவற்றை பிற உணவுகள் வாயிலாக எடுத்துக் கொள்ள வேண்டும்; இந்த ஒமேகா சத்துக்கள் கசகசா விதைகளில் நிறைந்து உள்ளன. இவ்விதைகளை உட்கொள்வதன் மூலம் ஒமேகா சத்துக்களை பெறலாம்.

நன்மை 9: ஆற்றலை அதிகரிக்கும்

உடலுக்கு ஆற்றல் அளிக்கும் மேக்ரோ ஊட்டச்சத்துக்களான சிக்கலான கார்போஹைட்ரேட்கள் உடலில் அதிக அளவில் இருக்குமாறு வழிவகை செய்யும் பண்பு கசகசா விதைகளில் அடங்கியுள்ளது; இந்த விதைகள் கால்சியம் சத்தை உறிஞ்சி உடலில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள உதவுகின்றன.

நன்மை 10: கண் பார்வை ஆரோக்கியம்

கசகசா விதைகளில் அதிக அளவு ஜிங்க் கனிமச்சத்து உள்ளதால், அது தீவிர கண் நோய்களான மஸ்குலார் குறைபாடு போன்றவற்றை தடுத்து கண்ணின் ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது (5). பாப்பி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் கண்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. பாப்பி விதைகள் நன்மைகள் பட்டியலில் இது மிகவும் முக்கியமானது ஆகும்.

நன்மை 11: சிறுநீரக கற்கள்

கசகசா விதைகளில் இருக்கும் பொட்டாசியம் எனும் கனிமச்சத்து சிறுநீரக கற்களுக்கு எதிராக போராடி சிறுநீரக கற்களை குணப்படுத்தக்கூடியது; மேரிலாந்து மருத்துவ மைய பல்கலைக்கழகத்தின் கருத்துப்படி, ஹைபரோக்ஸால்யூரியா – hyperoxaluria (அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றம் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்) எனும் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவு முறையில் கசகசாவை குறைவான அளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்; ஏனெனில் இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளது (6).

நன்மை 12: மலச்சிக்கல்

பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம்; அவற்றுள் மிக முக்கியமானது அஜீரணம் ஆகும். இந்த செரிமான பிரச்சனையை சரி செய்து தீர்வு வழங்க, பாப்பி விதைகளில் உள்ள நார்ச்சத்து உதவும். ஆகவே மலச்சிக்கல் உள்ள நபர்கள் பாலில் அரை தேக்கரண்டி கசகசாவை கலந்து குடித்தால், நல்ல பலன்களை பெற முடியும்.

நன்மை 13: வலி நிவாரணி

பாப்பி விதை வாஷ் என்பது ஒரு மருத்துவ தேநீர்; இது கசகசா விதைகள் மற்றும் நீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் ஒரு அருமையான மருந்து. வலியில் இருந்து விடுதலை அளித்து, கவலையை போக்கி நல்ல உறக்கத்தை வழங்க உதவுகிறது; இது ஓப்பியாயிடு போன்ற வலி நிவாரணி மருந்துகளுக்கு ஒரு நல்ல மாற்றாகும்.

நன்மை 14: சுவாச ஆரோக்கியம்

சுவாசம் சார்ந்த பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படாமல் தடுத்து, சுவாச ஆரோக்கியத்தை பாதுகாக்க கசகசா விதைகள் பெரிதும் உதவுகின்றன.

நன்மை 15: புற்றுநோய்

TIME இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி, ஓபியம் கசகசா விதைகளில் உள்ள ஜீன்கள் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்க உதவும் என்ற தகவலை உறுதி செய்துள்ளது (7). இந்த நோஸ்காபின் மருந்து (ஓபியம் பாப்பி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்) புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக போராடி, மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. இது புற்றுநோய் செல்கள் பெருக்கம் அடைவதை நிறுத்த உதவுகிறது.

இன்னொரு இந்திய ஆய்வின் படி, கசகசா விதைகள் GST எனப்படும் குளுடாதியோன்-S-டிரான்ஸ்பெரஸ் (glutathione-S-transferase) என்று அழைக்கப்படும் கார்சினோஜென் சுத்தப்படுத்தல் என்சைம் அளவை 78% என்ற அளவிற்கு அதிகரிக்க உதவுகிறது; கசகசா விதைகளின் இந்த செயல்பாட்டினால் புற்றுநோயை குணப்படுத்த, பாப்பி விதைகள் சேர்த்த உணவுகளை உட்கொள்வது உதவலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது (8). பாப்பி செடியின் கஷாயம், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அல்சரை குணப்படுத்த உதவுகிறது (9).

நன்மை 16: தைராய்டு

தைராய்டு சுரப்பிகள் சரிவர செயல்பட ஜிங்க் எனும் தாதுச்சத்து மிகவும் அவசியம். பாப்பி விதைகளில் அதிக அளவு ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. மேலும் அயோடின் சேர்க்கப்பட்ட கசகசா விதை எண்ணெய் உலகம் எங்கிலும் அயோடின் குறைபாட்டை போக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த அயோடின் குறைபாடு தான் தைராய்டு செயலிழப்புக்கு முக்கிய காரணம்; இதை சரி செய்து விட்டால் தைராய்டு பிரச்சனையும் சரியாகி விடும் (10).

நன்மை 17: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

கசகசா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களை தரும். மேலும் இவ்விதைகளில் இருக்கும் மாங்கனீசு சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. 

ஆனால், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, இவ்விதைகளை எடுத்துக் கொள்ள தொடங்கும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.

நன்மை 18: வலி நிவாரணி விளைவு

பழங்காலத்தில் இருந்தே, இந்த பாப்பி விதைகள் வலி நிவாரணி விளைவாக அல்லது வலியிலிருந்து விடுதலை தர உதவி வருகின்றன. ஒரு ஆய்வறிக்கையின் படி, கசகசா விதைகளை வெந்நீரில் கலந்து வலி நிவாரணி விளைவுக்கு பயன்படுத்தலாம் (11).

பர்டியூ பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, ஓபியம் வகை கசகசா விதைகள் வலி நிவாரணி விளைவில் அதிக பயனை தருகின்றன (14).

கசகசா விதைகள் வழங்கும் சரும நன்மைகள் 

Shutterstock

பாப்பி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகளை வழங்கக்கூடியது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டி, தோலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்த உதவுகிறது; இவ்விதைகள் சருமத்தை சுத்தப்படுத்தி, தோலிற்கு பொலிவை வழங்க உதவுகின்றன.

நன்மை 1: சிரங்கு மற்றும் அழற்சி

கசகசா விதைகள் சிரங்கு நோய்க்குறைபாட்டை சரி செய்ய உதவும் லினோலெனிக் அமிலத்தை அதிகம் கொண்டுள்ளன; பாப்பி விதைகளை நீர் அல்லது பால் என ஏதேனும் ஒன்றில் ஊற வைத்து, பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து மிருதுவான பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். தோல் எரிச்சல் மற்றும் சரும அரிப்புத்தன்மையை குணப்படுத்த இந்த பேஸ்ட் உதவுகிறது; இது ஒரு பயனுள்ள வலி நிவாரணியாக செயல்பட்டு, சரும அழற்சி பிரச்சனைகளால் ஏற்படும் வலியை போக்க உதவுகிறது.

நன்மை 2: தூய சருமம்

கசகசா விதை ஸ்கிரப் என்பது சருமத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் கறைகளற்ற சருமத்தை பெறலாம். 2 தேக்கரண்டி பாப்பி விதைகளை தயிருடன் கலந்து, அக்கலவையை முகத்திற்கு தடவலாம். முகத்திற்கு தடவும் போது, வட்ட வடிவ இயக்கத்தில் 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்; ஒரு காட்டன் பஞ்சு கொண்டு முகத்தை துடைத்து விட வேண்டும். இதன் மூலம் சுத்தமான சருமம் மற்றும் பொலிவான தோலை பெறலாம்.

நன்மை 3: சருமத்தை ஈரப்பதம் ஆக்கும்

கசகசா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் ஒரு நல்ல ஈரப்பதமாக்கியாக செயல்பட்டு, மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தை பெற உதவுகிறது; மிருதுவான சருமம் பெற, பாப்பி விதைகளை ஒரு அரைப்பானில் இட்டு, அதில் சிறிதளவு பால் ஊற்றி பேஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள், இக்கலவையை சிறிது தேன் கலந்து உபயோகிக்கலாம். இவ்வாறு தயாரித்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்; பின்னர் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து, கழுவி விட வேண்டும். வாரம் ஒரு முறை இதை செய்தால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

கசகசா விதைகள் வழங்கும் கூந்தல் நன்மைகள்

பாப்பி விதைகளில் நல்ல அளவு அன்சாச்சுரேட்டட் அமிலங்கள் மற்றும் தாதுக்களான கால்சியம், ஜிங்க், மெக்னீசியம் போன்றவை உள்ளதால், இவை ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவுகின்றன. கசகசா விதைகள் வழங்கும் கூந்தல் நன்மைகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

நன்மை 1: தலைமுடி வளர்ச்சி

இது குறித்து போதிய தகவல் இல்லை, இருப்பினும் பாப்பி விதைகள் சில சமயங்களில் முடி வளர்ச்சிக்கும் உதவியுள்ளன. ஊற வைத்த கசகசா விதைகளை புதிதாக எடுக்கப்பட்ட தேங்காய் பால், சாறுள்ள வெங்காயம் ஆகியவற்றுடன் கலந்து அரைத்து, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின்னர் ஒரு இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடவும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மேலும் இந்த பேக் முடி பிளவு முனைகளை சரி செய்ய உதவலாம். 

நன்மை 2: பொடுகு

பொடுகு என்பது பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு சாதாரண பிரச்சனை தான்; இதனை குணப்படுத்தவில்லை எனில், இதனால் முடி உதிர்வு ஏற்படலாம். பொடுகை குணப்படுத்த, ஊற வைத்த கசகசா விதைகள், தயிர், ஒரு தேக்கரண்டி வெள்ளை மிளகு  ஆகியவற்றை கலந்து உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இதை அரை மணி நேரத்திற்கு அப்படியே ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும். தொடர்ந்து இந்த கலவையை முடிக்கு பயன்படுத்தி வந்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கசகசா விதைகளின் (Khas Khas) ஊட்டச்சத்து மதிப்பு

கசகசா விதைகளில் பல்வேறு வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் – கனிமச்சத்துக்கள் அடங்கி உள்ளன; அவை என்னென்ன என்று கீழ்க்கண்ட அட்டவணையில் பார்த்து அறியலாம்:

நியமம்ஊட்டச்சத்து  மதிப்புRDA -இன் சதவீதம்
ஆற்றல்525 Kcal26%
கார்போஹைட்ரேட்28.13 g22%
புரதம்17.99 g32%
மொத்த கொழுப்பு41.56 g139%
கொலஸ்ட்ரால்0 mg0%
உணவு முறை நார்ச்சத்து19.5 g51%
வைட்டமின்கள் 
ஃபோலேட்கள்82 µg20%
நியாசின்0.896 mg5.5%
பேன்டோதெனிக் அமிலம்0.324 mg65%
பைரிடாக்சின்0.247 mg19%
ரிபோஃபிளவின்0.100 mg8%
தையமின்0.854 mg71%
வைட்டமின் ஏ0 IU0%
வைட்டமின் சி1 mg2%
வைட்டமின் ஈ1.77 mg12%
வைட்டமின் கே0 mg0%
எலக்ட்ரோலைட்கள்
சோடியம்26 mg2%
பொட்டாசியம்719 mg15%
தாதுச்சத்துக்கள்/ கனிமச்சத்துக்கள்  
கால்சியம்1438 mg144%
காப்பர்/ தாமிரம்01.627 mg181%
இரும்பு9.76 mg122%
மெக்னீசியம்347 mg87%
மாங்கனீசு6.707 mg292%
பாஸ்பரஸ்870 mg124%
செலினியம்13.5 µg24%
ஜிங்க்/ துத்தநாகம்7.9 mg72%

கசகசா விதைகளை பயன்படுத்துவது எப்படி?

கசகசா விதைகளை உணவுப்பொருட்களை சமைக்க பயன்படுத்துவர் என்று மட்டுமே பலர் எண்ணிக் கொண்டிருக்கலாம்; ஆனால், இவ்விதைகளை எப்படி, என்னென்ன வழிகளில் பயன்படுத்தலாம் என்று கீழே கொடுக்கப்பட்டு உள்ள குறிப்புகள் வாயிலாக படித்து அறியலாம்.  

பாப்பி விதைகள் பயன்படுத்துவதற்கான குறிப்புகள் 

 • கசகசா விதைகள், அவற்றின் பருப்பு சுவை காரணமாக பல்வேறுபட்ட கலாச்சாரங்களில், பல விதமான உணவு ரெசிபிகளில் பயன்படுத்தப்படுகிறது.
 • கசகசா விதைகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் முன், கற்கள் எல்லாவற்றையும் நீக்கி சுத்தமாக கழுவ வேண்டும்.
 • இவற்றை சூடான நீர் அல்லது பாலில் 2 மணி நேரங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
 • பின் அவற்றை வடிகட்டி, உலர வைக்கவும்.
 • இந்த ஊற வைக்கப்பட்ட விதைகளை தனியாக அல்லது இதர மசாலா பொருட்களுடன் அரைத்து குழம்பு அல்லது  கிரேவி தயாரிக்க பயன்படுத்தலாம்.

பாப்பி விதைகள் சுவை அற்றவை; ஆனால், இவ்விதைகளை சூடுபடுத்தினால், பருப்பு, கார – இனிப்பு சுவையை இவ்விதைகள் கொண்டிருக்கும். வறுத்தால் அல்லது பேக் செய்தால் இலேசான வாசம் மற்றும் இனிப்பு சுவை கிடைக்கும்; ஆழ்ந்து வறுக்கும் பொழுது சிறந்த நறுமண எண்ணெய்கள் வெளிப்பட்டு, அவற்றை அதிகம் மொறுமொறுப்பாக்க உதவும்.

சமையலில் அல்லது ரெசிபிகளில் கசகசா விதைகளை பயன்படுத்துவதற்கான குறிப்புகள்

Shutterstock

 1. கார்னிஷ் பிரட்கள், ரோல்கள், சாஸ்கள் மற்றும் பேஸ்ட்ரி ஃபில்லிங்களில் அல்லது காய்கறிகள் மற்றும் சாலட் ட்ரெஸ்ஸிங்களில் வறுத்த கசகசா விதைகள் சேர்க்கப்படுகின்றன. துருக்கிய உணவு வகைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 2. கசகசா விதைகளை வறுக்க, ஒரு சிறிய வறண்ட பாத்திரத்தை அடுப்பில் – மிதமான நெருப்பில் வைத்து கசகசா விதைகளை இட்டு, 2 முதல் 3 நிமிடங்களுக்கு மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
 3. பாப்பி விதைகள், வெண்ணெய் சேர்த்த முட்டை நூடுல்ஸ், பழ சாலட் ட்ரெஸ்ஸிங்கள், ஈஸ்ட் பிரட்கள் ஆகிய உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் பருப்பு சுவை மற்றும் தன்மை காரணமாக இவை, பிரட்கள், கேக்குகள், பேஸ்ட்ரிகள், குழம்பு வகைகள், மிட்டாய், பான்கேக்குகள் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.
 4. இந்த கசகசா விதைகள் போஸ்டோ என்று மேற்கு வங்காளம் மற்றும் பங்களா தேஷ் ஆகிய இடங்களில் அழைக்கப்படுகின்றன; பிரபல வங்காள உணவுகளான உருளைக்கிழங்கு போஸ்டோ – Aloo Posto, சாசுரி- Chachuri, போஸ்டோர் போரா – Postor Bora போன்றவற்றில் இவ்விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. உருளைக்கிழங்கு போஸ்டோ – Aloo Posto என்பது அதிக அளவு பாப்பி விதைகள் சேர்க்கப்பட்டு, கிரீமி தன்மை அளிக்க உதவுகிறது. உருளைக் கிழங்குகளுக்கு பதிலாக வெங்காயம், பீர்க்கங்காய், சிக்கன் அல்லது இறால்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
 5. கசகசா பாயசம் என்பது கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவு ஆகும்; இது ஒரு திரவ இனிப்பு உணவு ஆகும். வெள்ளை கசகசா விதைகள், வெல்லம், தேங்காய், பால் போன்றவற்றை கொண்டு இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது.
 6. மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகையின் பொழுது அனார்சா எனும் இனிப்பு உணவை தயாரிக்க கசகசா விதைகள் உதவுகின்றன.
 7. பொடி ஆக்கப்பட்ட பாப்பி விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட பஜ்ஜிகள் கிரில் அல்லது வறுக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. நில கசகசா விதைகள், கடுகு எண்ணெய், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் மற்றும் அரிசி கொண்டு ஒரு அரிசி உணவை தயாரிக்கலாம். 
 8. வெல்லம் மற்றும் தேங்காய் போன்றவற்றை கசகசா விதைகளுடன் சேர்த்து ஒரு ஃபிளாக்கி பேஸ்ட்ரி தயாரிக்கலாம் அல்லது ஆழ்ந்து வறுக்கப்பட்ட கராஞ்சி எனும் சுவையான இனிப்பு உணவை தயாரிக்கலாம்.
 9. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், கசகசா விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் மசாலா, சிக்கன், இறைச்சி, காய்கறிகள் போன்றவற்றை கொண்டு வித்தியாசமான, சுவையான உணவுகளை தயாரிக்கலாம்.
 10. ஆஸ்திரேலியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் பிரபல இனிப்பு பேஸ்ட்ரிகளான ஸ்ட்ருடெல் – Strudel மற்றும் Germknödel – ஜெர்ம்க்நோடெல் ஆகியவற்றை தயாரிக்க பாப்பி விதைகள் உதவுகின்றன.
 11.  பாப்பி விதைகளை அரைப்பது மிகவும் கடினமான செயல் ஆகும்; ஒரு பிரத்யேக அரைப்பான் கொண்டு கசகசா விதைகளை அரைக்கலாம். ஆனால், இந்த பிரத்யேக அரைப்பான் இல்லை எனில் முதலில் பாப்பி விதைகளை வறுத்து – பின் அரைத்து கொள்ள வேண்டும். இந்த விதைகளை முழு வடிவம் அல்லது நசுக்கி பயன்படுத்தலாம்; இவற்றை சமைக்கப்படாத உணவுகளான சாலட் போன்ற உணவுகளில் பயன்படுத்தும் போது, சாலட் உணவில் சேர்க்கும் முன் கசகசா விதைகளை வறுக்க வேண்டும்; மேலும் இலேசான  சுவை மற்றும் மணம் வந்தவுடன் பாப்பி விதைகளை சாலட்டில் சேர்த்தால் நன்கு சுவையாக இருக்கும்.
 12.  நில பாப்பி விதைகளை பேஸ்ட்ரிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவ்விதைகளை பேஸ்ட்ரிகளில் பயன்படுத்தும் முன், இவற்றை ஊற வைத்து, 1 முதல் 3 மணி நேரங்களுக்கு கொதிக்க வைத்து – அரைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.
 13.  இந்த விதைகளை நாண் பிரட்களின் மீது தூவி விடலாம் மற்றும் இதை ஓவனில் சமைத்தால் அது தந்தூர் என்று அழைக்கப்படும்.

கசகசா விதைகளை (Khas Khas) தேர்ந்தெடுத்தல் மற்றும் சேகரித்தல்

தேர்ந்தெடுத்தல்

எந்த ஒரு உணவுப்பொருளாக இருந்தாலும் தேர்ந்தெடுத்தல் என்பது மிகவும் அத்தியாவசியமானது. உணவு வகைகளை சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்; கலப்படம் இல்லாத உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது ஆகும். பாப்பி விதைகளை பொறுத்தவரை பல விதமான வகைகள் உள்ளன; இவை தந்தம் பழுப்பு, இலேசான கிரே முதல் அடர்ந்த கிரே, கருப்பு அல்லது நீலம் என பல  நிறங்களில் வேறுபடும். ஐரோப்பியன் பாப்பி வகை உணவான மாவ் – Maw, அடர்ந்த கிரே நிறத்திலும், இந்திய கசகசா வகை தந்தம் பழுப்பு நிறத்திலும், துருக்கி பாப்பி வகை புகையிலை பிரௌன் நிறத்திலும் இருக்கும்.

கசகசா விதைகள் புதிய மற்றும் நில படிவ வடிவங்களில் கிடைக்கின்றன; இவற்றில் அதிக அளவு பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன மற்றும் இவை ஆக்சிஜனேற்றத்தால் பாதிக்கப்படக்கூடியவையாக விளங்குகின்றன. இவை எளிதில் ஊசிப்போய் அதாவது கெட்டுப்போய் விடலாம். நல்ல தரம் கொண்ட கசகசா விதைகளை நல்ல கடையில் இருந்து, புதிய நிலையில் இருக்கும் பொழுது வாங்கி பயன்படுத்தலாம்; இந்த பாப்பி விதைகள் சிறிதாக மற்றும் இலேசாக இருக்க வேண்டியது அவசியம்.

சேகரித்தல்

பாப்பி விதைகளை குளிர்ந்த, வறண்ட, இருண்ட இடத்தில் காற்றுப் புக முடியாத புட்டியில் போட்டு வைக்கலாம். இவ்வாறு சேகரித்தால், கசகசா விதைகள் 6 மாதங்கள் வரை புதிதாகவே இருக்கும். இதனை ஈரப்பதம் உள்ள இடங்களில் இருந்து தள்ளி வைக்க வேண்டும்.

கசகசா விதைகளின் மருத்துவ பயன்கள் 

கசகசா விதைகள் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் ஆகியவற்றை அளிப்பதோடு மட்டும் இல்லாமல், சில மருத்துவ பயன்களையும் அளிக்கக்கூடியவை. கசகசா விதைகளின் மருத்துவ பயன்கள் ஆவன:

 • கோடெய்ன் மற்றும் மார்ஃபின் போன்றவை கசகசா விதைகளில் இருந்து எடுக்கப்பட்டு, அவற்றை இருமலுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் மற்றும் இவற்றை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.
 • ஆயுர்வேத மருத்துவத்தில் கசகசா விதைகள் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

கசகசா விதைகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்

கசகசா விதைகளினால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்யும். பாப்பி விதைகளினால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி கீழே பார்க்கலாம்:

 • ஒவ்வாமை 

சில மக்களில், கசகசா விதைகளால் ஒவ்வாமை ஏற்படலாம்; சில சமயங்களில் ஒவ்வாமையுடன் சேர்ந்து வாந்தி, படை நோய், கண் வீங்குதல், சருமம் சிவந்து போதல், மூச்சுவிடுவதில் கடினம் ஏற்படல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

 • கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் அளிப்பதில் உள்ள பிரச்சனைகள் 

சாதாரண அளவுகளை எடுத்துக் கொண்டால் பிரச்சனை எதுவும் ஏற்படாது; கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள், அதிகப்படியான அளவு கசகசா விதைகளை உட்கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே இவற்றை தவிர்ப்பது அல்லது அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

கசகசா விதைகளை பற்றிய பல விரிவான, தெளிவான விஷயங்கள், பாப்பி விதைகள் நன்மைகள், பயன்கள் போன்றவற்றை படித்து அறிந்திருப்பீர்கள்; கசகசா விதைகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. கசகசா விதைகளை பற்றி நீங்கள் அறிந்த விஷயங்கள் மற்றும் இந்த பதிப்பு தங்களுக்கு எப்படி உதவியது என்று கீழ் இருக்கும் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிருங்கள்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • பாப்பி விதைகள் எவ்வளவு காலத்திற்கு நல்லது?

குளிர்சாதன பெட்டியில் ஒரு காற்றுப்புகாத புட்டியில் வைத்தால், 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். பாப்பி விதைகளை வெளியே வைத்தால், இவை கொஞ்ச காலத்திற்கு நன்றாக இருக்கும்.

 • குழந்தைகள் கசகசா விதைகளை உட்கொள்ளலாமா?

இல்லை. கசகசா விதைகளில் உள்ள ஓபியட் அளவுகள் சிக்கல்களை ஏற்படுத்தலாம்; எனவே மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் பாப்பி விதைகளை குழந்தைக்கு அளிக்கலாம்.

 • பாப்பி விதைகளால் போதை ஏற்படுமா?

ஆம், ஓபியம் பாப்பி விதைகளால் ஏற்படும்.

 • கசகசா விதைகளுக்கு பதிலாக எதை பயன்படுத்தலாம்?

சியா விதைகள் அல்லது சப்ஜா விதைகளை, கசகசா விதைகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

 • பாப்பி விதைகளால் போதை மருந்து சோதனையில் தோல்வி ஏற்படுமா?

வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஹெராயின் மற்றும் கசகசா விதைகள் குறிப்பாக ஓபியம் பாப்பி விதைகள் ஆகிய இரண்டும் ஒரே ஆதாரத்தில் இருந்து கிடைக்கின்றன

 • எடுத்துக்கொள்ள வேண்டிய பாப்பி விதைகளின் சரியான அளவு என்ன?

7 பவுண்ட் உடல் எடைக்கு ஒரு தேக்கரண்டி கசகசா விதைகள் போதுமானது.

Was this article helpful?
The following two tabs change content below.