வெயில் காலத்திற்கேற்ற 12 பாடி லோஷன் வகைகள்

வெயில் காலங்களில் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சூரிய வெப்பம் , புற ஊதாக்கதிர்களின் தாக்கம், அனல்காற்று, வியர்வை போன்ற பல சருமச் சிக்கல்கள் வெயில் காலங்களில்தான் தோன்றுகின்றன. பெரும்பாலானவர்களுக்கு வெயில்காலங்களில் வியர்க்குரு ஏற்படுவதால் மிகவும் சிரமப்படுவார்கள்.
அதனாலேயே வெயில்காலங்களில் சருமத்திற்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கோடை வெயிலில் உங்கள் சருமத்தைக் குளுகுளுப்பாகவும் அதே சமயம் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்கும் சில பாடி லோஷன் வகைகளை இங்கே பட்டியலிட்டு இருக்கிறேன். உங்கள் சரும வகைக்கேற்ற பாடி லோஷனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். வெயில் நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் வசிக்கும் நகரவாசிகள் அனுதினமும் இந்த லோஷன்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
வெயில் காலங்களில் பயன்படுத்த வேண்டிய பாடி லோஷன் வகைகள்
1. Vaseline Intensive Care Aloe Fresh Body Lotion
வெயில் காலத்தில் பயன்படுத்த ஏற்ற பாடி லோஷன்களில் சிறந்தது வேஸலைன் நிறுவனத்தாரின் இந்த பாடி லோஷன்தான். காரணம் இதில் சருமத்தை குளுமையூட்டி வெப்பத்திலிருந்து இதமளிக்கும் கற்றாழையின் நன்மைகள் அடங்கி இருக்கின்றன.
நிறைகள்
- கற்றாழை அடங்கியது
- 5 லேயர்வரை சருமத்துள் சென்று பாதுகாப்பு அளிக்கிறது
- வேஸலைன் ஜெல்லி அடங்கியுள்ளது
- வறண்ட சருமத்தினருக்கு அவசியமான பாதுகாப்பு அளிக்கிறது
- வாங்கும் திறனுக்கேற்ற விலை
குறைகள்
- எதுவும் இல்லை
2. NIVEA Body Lotion, Aloe Hydration
நிவியாவின் இந்த பாடி லோஷன் வெயில் காலங்களில் சருமம் அதன் ஈரப்பதத்தை இழந்து தவிக்காமல் பாதுகாக்கிறது. இதில் அடங்கி உள்ள கற்றாழை சருமத்திற்கு அவசியமான இதம் அளிக்கிறது. இதில் சரும ஈரப்பதத்தைத் தக்க வைக்க மாய்ச்சுரைசிங் சீரம் அடங்கி இருக்கிறது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம் எனலாம்.
நிறைகள்
- கற்றாழையின் புத்துணர்வு அடங்கியது
- மாய்ச்சுரைசிங் சீரம் கொண்டது
- 48 மணி நேரப் பாதுகாப்பு அளிக்கிறது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
குறைகள்
- எதுவும் இல்லை
3. Cetaphil Daily Advance Ultra Hydrating Lotion
சென்சிடிவ் மற்றும் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான தனித்துவமான லோஷன் செடாபில் நிறுவனத்தாரின் மேற்கண்ட லோஷன். வெயில் காலங்களில் ஏற்படும் சரும வறட்சியை போக்கி மென்மையும் இதமும் ஈரப்பதமும் கொண்ட சருமமாக மாற்றுகிறது.
நிறைகள்
- மென்மையான ஈரப்பதம் தருகிறது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- ஆண் பெண் இரு பாலாரும் பயன்படுத்தலாம்
- வறண்ட மற்றும் சென்சிடிவ் வகை சருமத்தினருக்கானது
- 24 மணிநேர ஈரப்பத பாதுகாப்பை உறுதி செய்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
4. Lotus Herbals White Glow Skin Whitening and Brightening SPF-25 Hand and Body Lotion
வெயிலால் ஏற்படும் சருமக்கருமையை நீக்குகிறது லோட்டஸ் ஹெர்பல்ஸ் நிறுவனத்தாரின் மேற்கண்ட தயாரிப்பு. வறட்சியான இடங்கள் மற்றும் கருமையான முழங்கை , முழங்கால் போன்ற இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும். கருமை மறையும்.
நிறைகள்
- SPF 25 மற்றும் PA +++ அடங்கியது
- சருமத்தின் நிறம் மேம்படுகிறது
- மென்மையானது
- இயற்கையானது
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
5. Himalaya Nourishing Body Lotion
இப்போதெல்லாம் கற்றாழை இல்லாத க்ரீம்களையோ லோஷன் வகைகளையோ நாம் பார்க்க முடியாது. அந்த வகையில் கற்றாழை மற்றும் வின்டர் செர்ரியின் நன்மைகள் கொண்டது இந்த பாடி லோஷன். இவை இரண்டும் வெயில் காலங்களில் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளித்து மென்மையையும் ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது
நிறைகள்
- கற்றாழை அடங்கியது
- வின்டர் செர்ரியின் நன்மைகள் கொண்டது
- வறண்ட சருமத்தினருக்கானது
- சருமத்தின் ஆழம் வரை சென்று பயனளிக்கக் கூடியது
குறைகள்
- எதுவும் இல்லை
6. Vaseline Sun + Pollution Protection SPF 30 Body Lotion
இதன் பெயரிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும் வெயில் காலத்தில் அவசியமான லோஷன் வகைகளில் இதுவும் ஒன்று என. காற்று மாசுக்களால் உங்கள் சருமம் பொலிவிழக்கிறது. வேஸலைன் தரும் இந்த பாடி லோஷன் உங்களை அத்தகைய மாசுக்களிடம் இருந்து காப்பதாக வாக்குறுதி அளிக்கிறது
நிறைகள்
- SPF 30 உள்ளது
- PA +++ அடங்கியது
- ஜெல்லி தன்மை கொண்டது
- 30 மடங்கு பாதுகாப்பு தருகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. Parachute Advansed Body Lotion, Cocolipid and Water Lily
வெயில் படும் இடமெல்லாம் கறுத்து போய் இருக்கிறதா அப்படியெனில் நீங்கள் தடவ வேண்டியது இந்த பாராசூட் பாடி லோஷனை மட்டுமே. வெயில் பட்டு பட்டு கறுத்துப் போன முதுகுப் பகுதி, இடை மற்றும் கைகள் போன்ற இடங்களில் இதனைத் தடவினால் சருமம் பழைய நிலைமைக்குத் திரும்பும்.
நிறைகள்
- 100 சதவிகிதம் இயற்கையானது
- பிசுபிசுப்பற்றது
- வாட்டர் லில்லி மற்றும் கோகோலிபிட் தன்மை கொண்டது
- 10 மடங்கு சருமத்தின் ஆழம் வரை சென்று வேலை புரிகிறது
- தினமும் பயன்படுத்த ஏற்றது
- அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
8. Santoor Perfumed Body Lotion
நீண்ட காலமாக குளியல் தயாரிப்புகளில் காலூன்றிய நிறுவனமான சந்தூர் தற்போது லோஷன்களை வெளியிடத் தொடங்கி இருக்கிறார்கள். கற்றாழை நற்பண்புகள் கொண்ட பாடி லோஷனாக இதுவும் இருக்கிறது. அதனுடன் சந்தனமும் இணைந்திருப்பதால் இது மற்ற பாடி லோஷன்களை விடவும் தனித்தன்மை வாய்ந்தது
நிறைகள்
- கற்றாழை இதம் தருகிறது
- சந்தனம் நிறம் தருகிறது
- சாதாரண சருமத்தினருக்கு ஏற்றது
- ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்
குறைகள்
- எதுவும் இல்லை
9. WOW Skin Science Aloe Vera Body Lotion
வெயிலில் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு சருமத்தின் நிறத்தை மேலும் மேம்படுத்துகிறது . WOW நிறுவனத்தாரின் இந்த பாடி லோஷன். கற்றாழை மற்றும் ஷியா வெண்ணெயின் நற்குணங்கள் அடங்கிய இந்த பாடி லோஷன் உங்கள் சருமத்தின் எரிச்சல்களை குணப்படுத்தி அற்புதமான பொலிவான மேனியைத் தருகிறது.
நிறைகள்
- கற்றாழை மற்றும் ஷியா வெண்ணெய் அடங்கியது
- பொலிவை அதிகரிக்கிறது
- நிறத்தை மேம்படுத்துகிறது
- சருமத்தை மென்மையாக்குகிறது
- பிசுபிசுப்பற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
10. Parachute Advansed Body Lotion Refresh
வெயிலில் உங்கள் சருமத்தை புத்துணர்வோடு வைத்திருக்க பாராசூட்டின் இந்த பாடி லோஷன் பயன்படுகிறது. முதுகு மற்றும் முழங்கால் முழங்கைகளில் உள்ள கருமையை காலப்போக்கில் நீக்கும் சக்தி பெற்றது
நிறைகள்
- கோகோலிபிட் அடங்கிய பார்முலா
- சருமத்திற்கு மென்மையானது
- 10 மடங்கு அதிக ஆழமாக சருமத்திற்கும் வேலை செய்கிறது
- புதினாவின் புத்துணர்வு அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
11. Mamaearth Hydrating Natural Body Lotion
வெயில் காலத்தை சமாளிக்கக் கூடிய இயற்கை பொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்த பாடி லோஷன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் சிறப்பம்சம். சாதாரண சருமம் கொண்ட ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் பொருந்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
நிறைகள்
- வெள்ளரி மற்றும் கற்றாழையின் நற்பண்புகள் அடங்கியது
- ஷியா வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயின் குணங்கள் கொண்டது
- பால் மற்றும் பிடேயின் நற்பண்புகள் அடங்கியது
- 24 மணி நேரம் ஈரப்பதம் லாக் செய்யப்படுகிறது
- பிசுபிசுப்பற்றது
- ஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
12. Himalaya Aloe and Cucumber Refreshing Body Lotion
வெயிலில் உடலைக் குளிர்விக்க வெள்ளரி மற்றும் கற்றாழையின் நற்பண்புகள் அடங்கியது ஹிமாலயா நிறுவனத்தாரின் மேற்கண்ட பாடி லோஷன். அற்புதமான மணம் கொண்ட இந்த பாடி லோஷன் வாங்கும் திறனுக்கேற்ற விலையில் இருக்கிறது.
நிறைகள்
- பிசுபிசுப்பற்றது
- சருமத்தால் உடனடியாக உறிஞ்சப்படுகிறது
- வெள்ளரி மற்றும் கற்றாழை சருமத்தை வெயிலில் குளுமையாக வைத்திருக்கிறது
- மிருகங்களின் மீது சோதனை செய்யப்படவில்லை
குறைகள்
- எதுவும் இல்லை
இறுதியாக
வெயிலுக்கு ஏற்ற மேற்கண்ட பாடி லோஷன் வகைகளில் உங்கள் சரும வகைக்குப் பொருத்தமான பாடி லோஷனை வாங்கிப் பயன்படுத்துங்கள். வெயிலோடு விளையாடி மகிழுங்கள். காலையில் வெளியே செல்லும்போது பாடி லோஷன் தடவ வேண்டும். அப்போதுதான் மேற்குறிப்பிட்ட வேலைகளை பாடி லோஷன் செய்யும் என்பது கூடுதல் தகவல்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
