கருகரு கூந்தல் மீது காதலா.. இந்த ஷாம்பூக்களைப் பயன்படுத்துங்கள் !

கூந்தல் மீதான காதல் என்பது ஆணுக்கும் உண்டு பெண்ணிற்கும் உண்டு. அடர்த்தியான கருகரு கூந்தல் வேண்டும் என அதற்கான தைலங்கள், எண்ணெய் வகைகள் என எல்லாவற்றையும் பயன்படுத்தினாலும் பெரும்பாலும் நாம் தவறு செய்யும் ஒரு இடம் ஷாம்பூ.
நம் கூந்தல் வகைக்கேற்ற சரியான ஷாம்பூவைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதாலேயே கூந்தல் வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்தும் எண்ணெய் போன்ற பல முயற்சிகளில் தோல்வியடைகிறோம். உங்கள் கூந்தல் வகைக்கேற்ற சிறந்த ஷாம்பூ வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன். பயன்படுத்தி பேரழகுக் கூந்தலை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.
Table Of Contents
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த ஷாம்பூ வகைகள்
1. WOW Apple Cider Vinegar No Parabens & Sulphate Shampoo
பழங்கால ரகசிய முறைப்படித் தயாரிக்கப்பட்ட இந்த ஷாம்பூ கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இதில் சிறப்பு மூலப்பொருளாக ஆப்பிள் சைடர் வினிகர் சேர்க்கப்பட்டுள்ளது. இது தலையின் பொடுகு தொல்லையை அழகாகப் போக்குகிறது. கூந்தல் வேரில் ரத்த ஓட்டம் மேம்பட இந்த ஷாம்பூ உதவுகிறது.
நிறைகள்
- ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் கொண்டுள்ளது
- பளபளப்பை அதிகரிக்கிறது
- நுனிப்பிளவுகளை சரி செய்கிறது
- பொடுகை நீக்குகிறது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- PH அளவு பாதிக்காமல் காக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
2. Indulekha Bringha Anti Hair Fall Shampoo
கூந்தல் வளர்ச்சிக்கு பிரிங்கராஜ் மூலிகை மிகவும் உதவி செய்கிறது. இது தவிர நெல்லி , துளசி போன்ற மேலும் சில முக்கியமான மூலிகைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கூந்தல் முடி உதிர்வைத் தடுத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க இந்த இந்துலேகா ஷாம்பூ உதவுகிறது.
நிறைகள்
- ஆயுர்வேத மூலிகைகள் அடங்கியது
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
- 9 விதமான பிரிங்கா மூலிகைகள் அடங்கியது
- செயற்கை வாசனை சேர்க்கப்படவில்லை
- செயற்கை நிறம் சேர்க்கப்படவில்லை
- கூந்தலின் இயற்கைத் தன்மையை மீட்டெடுக்கிறது
- கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
3. Mamaearth Onion Hair Fall Shampoo for Hair Growth & Hair Fall Control
கூந்தல் வளச்சிக்கு மம்மா எர்த் சிறப்பாக உதவி செய்கிறது. இதில் வெங்காயத்தின் நன்மைகள் சேர்ந்திருக்கின்றன. இது கூந்தல் உதிர்வைக் குறைத்து கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. இது தவிர கெரட்டின் தாவரத்தின் நன்மைகள் இதில் இருக்கின்றன.
நிறைகள்
- வெங்காய விதை எண்ணெய் இதில் இருக்கிறது
- வைட்டமின் பி 5 (D – PANTHENOL )நன்மைகள் உள்ளன
- கெரட்டின் நன்மைகள் இருக்கின்றன
- விட்டமின் ஈ நன்மைகள் உள்ளன
- கூந்தல் முடி உதிர்வைத் தடுக்கிறது
- கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
- கூந்தலை மென்மையாக்கி பளபளப்புடன் வைக்கிறது.
குறைகள்
- எதுவும் இல்லை
4. Biotique Bio Kelp Protein Shampoo for Falling Hair Intensive Hair Regrowth Treatment
கடல் பாசியின் நன்மைகள் கொண்டுள்ள இந்த ஷாம்பூ கூந்தல் வளர்ச்சியில் சிறப்பான நன்மைகள் தருகிறது. இது தவிர இயற்கையான புரதம் , வேம்பு , பிரிங்கராஜ் மூலிகையின் நன்மைகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இவை பல அற்புதங்களை செய்கின்றன.
நிறைகள்
- பிரிங்கராஜ் மூலிகையின் நன்மைகள் உள்ளன
- கடல் பாசியின் அற்புத நன்மைகள் கொண்டது
- வேம்பு மற்றும் நெல்லியின் நன்மைகள் கொண்டது
- ஆன்டிபேக்டீரியல் தன்மைகள் உள்ளது
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
5. Dabur Vatika Health Shampoo – Power of 7 Natural Ingredients
7 விதமான இயற்கை மூலிகைகள் கொண்ட இந்த ஷாம்பூ உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு இவை அற்புதமாகத் துணை நிற்கின்றன. மருதாணி, நெல்லிக்காய் , சிகைக்காய், செம்பருத்தி , பாதம் போன்ற இயற்கை பொருள்களால் செய்யப்பட்டது இந்த ஷாம்பூ.
நிறைகள்
- மென்மையான கூந்தலுக்கு உத்திரவாதம் அளிக்கிறது
- ஆண்கள் பெண்கள் என இருவரும் பயன்படுத்தலாம்.
- மருதாணி தலையின் மேல்புறத்தைப் பாதுகாக்கிறது
- நெல்லிக்காய் கூந்தல் கருமையாகவும் திடமாகவும் வளர உதவி செய்கிறது
- பாதாம் மற்றும் செம்பருத்தி முடியை மென்மையாக்குகிறது
- கூந்தல் கண்டிஷனர் போடாமல் பளபளப்பு கூடுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
6. Himalaya Anti Hair Fall Shampoo
உங்கள் கூந்தல் வறட்சியாக இருந்தால் இந்த ஷாம்பூவை முயற்சியுங்கள். கூந்தல் உதிர்வைக் குறைப்பதோடு ஆரோக்கியமான கூந்தல் இழைகளை உருவாக்குகிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு புட்டியா ஃப்ரொண்டோசா மற்றும் பிரிங்ராஜ் போன்ற மூலிகைகள் நிரம்பியுள்ளது. இது அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலை நீங்கள் பெற உதவி செய்கிறது.
நிறைகள்
- பிரிங்கராஜா அடங்கியது
- புட்டியா ஃப்ரொண்டோசா அடங்கியது
- சிறந்த வாசனை கொண்டது
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. Biotique Bio Kelp Fresh Growth Protein Shampoo
இந்த கடல்பாசி கொண்ட ஷாம்பூ உங்கள் உச்சந்தலை ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. பொடுகினை நீக்கி கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வலுவான ஆரோக்கியமான கூந்தல் உங்கள் வசமாகிறது. வேம்பு (மெலியா அசாதிர்தா இண்டிகா), டெசு (புட்டியா ஃப்ரொண்டோசா), தாருஹால்டி (பெர்பெரிஸ் அரிஸ்டாட்டா), பிரிங்ராஜ் (எக்லிப்டா ஆல்பா), ரிதா (சபிண்டஸ் முக்கோரோசி), சஜ்ஜிக்ஷர் (கெல்ப் அல்லது கடல் உப்பு), இமயமலை நீர் Q.S போன்ற மூலிகைகள் அடங்கியது.
நிறைகள்
- 100 சதவிகிதம் இயற்கைப் பொருள்களால் உருவானது
- கூந்தலுக்குத் தேவையான புரதத்தை அளிக்கிறது
- அனைத்து வகை கூந்தலுக்கும் ஏற்றது
- ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
குறைகள்
- எதுவும் இல்லை
8. Oriental Botanics Red Onion Hair Shampoo
வெந்தயம் முதல் கஃபைன் வரை 27 விதமான வித்யாசமான மூலப்பொருள்கள் கொண்டது இந்த ஷாம்பூ. இவை உங்கள் கூந்தல் இழந்த புரதச் சத்துக்களை மீட்டெடுக்கிறது. இதன் மூலம் பிரபலங்களைப் போன்ற சில்க்கியான கூந்தல் உங்களுக்கு வசமாகிறது.
நிறைகள்
- 27 வித மூலப்பொருள்கள் கொண்டது
- சில்க் ப்ரோட்டீன் மற்றும் விட்டமின் பி 5 , விட்டமின் ஈ நற்பலன்கள் அடங்கியது
- பயோட்டின் மற்றும் கொலாஜன் நன்மைகள் அடங்கியது
- மிருகங்கள் மீது சோதிக்கப்படவில்லை
- வறண்ட சிக்கலான கூந்தலை நேராக்குகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
9. Khadi Global Anti Hair Loss and Hair Growth Stimulating Shampoo
காதி எப்போதும் இயற்கையான மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான தயாரிப்புகளையே விற்பனை செய்கிறது. அந்த வகையில் இந்த ஷாம்பூ கூந்தல் வளர்ச்சிக்கு சிறப்பான நன்மைகளைத் தருகிறது
நிறைகள்
- உச்சந்தலை நமைச்சலை நீக்குகிறது
- கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது
- செயற்கை வாசனை , செயற்கை நிறம் சேர்க்கப்படவில்லை
- மினரல் ஆயில், பெட்ரோகெமிக்கல் போன்றவை இல்லை
- கெடுதல் தரும் ரசாயனங்கள் இல்லை
- 25 விதமான அரிய மூலிகைகள் அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
10. The Yogi Red Onion Shampoo for Hair Growth; Hair fall Control & Dandruff Control with Conditioner
கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிவப்பு வெங்காயத்தின் நன்மைகள் அடங்கியது இந்த ஷாம்பூ. இதில் கண்டிஷனர் சேர்ந்துள்ளது என்பது இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது. சேதமடைந்த கூந்தல் இழைகளை சரி செய்து ஆரோக்கியமான நீண்ட கூந்தலின் நன்மைகளைத் தருகிறது.
நிறைகள்
- கூந்தல் வளர்ச்சி தூண்டப்படுகிறது
- இளநரையைத் தடுக்கிறது
- உச்சந்தலை நமைச்சலை நீக்குகிறது
- சேதமடைந்த கூந்தல் இழைகளை சரி செய்கிறது
- பொடுகினைப் போக்குகிறது
- நுனிப் பிளவுகளை சரி செய்கிறது
- கூந்தல் இயற்கையான முறையில் கண்டிஷன் செய்யப்படுகிறது.
குறைகள்
- எதுவும் இல்லை
11. StBotanica Coconut Oil & Bamboo Hair Strengthening Shampoo
கூந்தலை சேதங்களில் இருந்து காப்பதில் சிறந்த ஷாம்பூ இந்த ஷாம்பூ தான். தேங்காய் எண்ணெய் மற்றும் மூங்கில் எண்ணெய்யின் நன்மைகள் கொண்டதால் கூந்தல் வளரத் தேவையான உதவிகள் இதன் மூலம் கிடைக்கின்றன. இது உங்கள் தலைமுடியை மென்மையான துள்ளல் மற்றும் பிரகாசத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. மூங்கில் சாறு கூந்தலுக்கான தீவிர நீரேற்றத்தை வழங்குகிறது. மேலும் உங்கள் உச்சந்தலையில் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
நிறைகள்
- கூந்தலுக்கு ஈரப்பதம் தருகிறது
- சேதங்களில் இருந்து கூந்தல் இழைகளை பாதுகாக்கிறது.
- கூந்தல் உடைவதைத் தவிர்க்கிறது.
- சல்பேட் இல்லை
- பேரபின் இல்லை
- முடியின் எலாஸ்டிக் தன்மையை பாதுகாக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
12. Trycone Onion Shampoo for Hair Growth with Vitamin E, Natural Extracts & Herbs
இதில் உள்ள சிவப்பு வெங்காயத்தின் நற்பலன்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கின்றன. இது தவிர நெல்லிக்காய் , செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலையின் நன்மைகள் கொண்டுள்ளது இந்த ஷாம்பூ. மேற்கண்ட மூலப்பொருள்கள் முடி வளர்ச்சிக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
நிறைகள்
- கூந்தல் உதிர்வைக் குறைக்கிறது
- கூந்தல் வளர்ச்சியை கருவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் அதிகரிக்கிறது.
- பொடுகினை நீக்குகிறது
- ஆன்டி ஆக்சிடன்ட் கொண்டது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- ஆர்கன் எண்ணெயின் நன்மைகள் அடங்கியது
- ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்
குறைகள்
- எதுவும் இல்லை
13. Himalayan Organics Bhringraj Shampoo for Hair Growth
கூந்தல் வளர்ச்சிக்கு பிரிங்கராஜ் எனப்படும் மூலிகை மிகவும் உதவுகிறது. அதனால்தான் சிறந்த தலைமுடி வளர்ச்சிக்கான ஷாம்பூக்கள் மற்றும் எண்ணெய்களில் இந்த மூலிகையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மேற்கண்ட ஷாம்பூவிலும் பிரிங்கராஜின் நன்மைகள் உள்ளன.
நிறைகள்
- 9 விதமான பிரிங்கராஜ் மூலிகைகள் அடங்கியது
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
- கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- செயற்கையான நிறம் இல்லை
- செயற்கையான மணம் இல்லை
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை
குறைகள்
- எதுவும் இல்லை
14. Bella Vita Organic Shampoo with Growth Protein for Hair Volume, Fall, Dandruff, Frizz Control
கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்கள் அனைத்தும் தன்னுள்ளே வைத்திருக்கிற ஷாம்பூ இது. எல்லாவகையான கூந்தலுக்கும் இந்த ஷாம்பூ பொருந்திப் போகிறது. நான்கே வாரத்தில் கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதாக உறுதியளிக்கிறது.
நிறைகள்
- காஃபி கொட்டை நன்மைகள் கொண்டது
- பிரிங்கராஜ் நன்மைகள் சேர்ந்தது
- ப்ராம்மி , வேம்பு, பாதாம் எண்ணெய், வெங்காய விதை எண்ணெய் நன்மைகள் கொண்டது
- கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது
- கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கிறது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
குறைகள்
- எதுவும் இல்லை
15. Dove Healthy Ritual for Growing Hair Shampoo
நிறைகள்
- சேதத்தை சரிசெய்து முடி உதிர்தல், முடி உதிர்வதைத் தடுக்கிறது
- மாசுக்களுக்கு எதிராக முடியைப் பாதுகாக்க உதவுகிறது
- முடி ஆரோக்கியமாகவும் நீளமாகவும் இருக்கிறது
- தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது
- கோன்ஃப்ளவர், எண்ணெய் மற்றும் வெள்ளை தேயிலை நன்மைகள் கொண்டது
குறைகள்
- எதுவும் இல்லை
16. Indus Valley Bio Organic Natural Growout Shampoo for Hair Growth Toxic Chemical-free
சேதமடைந்த கூந்தல் இழைகளை பலப்படுத்தும் ஷாம்பூ. இது கூந்தலை வேரில் இருந்து பலப்படுத்துவதில் சிறப்பாக வேலை செய்கிறது. கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. கூந்தலை அடர்த்தியாக காட்டுகிறது. இப்படியான பல நன்மைகள் அடங்கியது இந்த ஷாம்பூ.
நிறைகள்
- கூந்தல் உதிர்வுகள் சரியாகின்றன
- மூலிகைகள் மூலப்பொருள்கள் என்பது சிறப்பம்சம்
- பேரபின் இல்லை
- சல்பேட் இல்லை
- உச்சந்தலை ஆரோக்கியம் மேம்படுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
17. Urban Essence Onion Shampoo For Healthy Hair Growth & Hair Fall Control With Aloevera
வெங்காயத்தின் நன்மைகள் இந்த ஷாம்பூவில் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் கூந்தல் வளர்ச்சி மேம்படுகிறது. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதங்களைத் தன்னுள் கொண்டது இந்த ஷாம்பூ. கூந்தலை மென்மையாக்குவதுடன் வலிமையாக்குகிறது.
நிறைகள்
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
- உச்சந்தலை இழந்த ஊட்டசத்துக்களை கொடுக்கிறது
- கலர் செய்யப்பட்ட கூந்தலுக்கு பாதுகாக்கப்படுகிறது
- கூந்தலுக்கு ஈரப்பதம் தக்கவைக்கப்படுகிறது
- கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
ஷாம்பூவில் கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்யும் மூலப் பொருள்கள் இவைதான்
முடி வளர்ச்சிக்கும் அடர்த்திக்கும் சிறந்த ஷாம்பு கீழ்க்கண்ட மூலப்பொருள்களைக் கொண்டிருக்கிறது.முடி வளர்ச்சியை ஊக்குவிக்க ஷிகாகாய், ரீதா, நெல்லிக்காய், வேம்பு மற்றும் பல அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இது தவிர துத்தநாகம், பயோட்டின், நியாசின் அல்லது காஃபின் போன்ற பொருட்கள் முடி வளர உதவுகிறது. கூந்தல் வளர்ச்சியில் மூலிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கறிவேப்பிலை , வெந்தயம் , செம்பருத்தி போன்ற சாதாரண வீட்டு சமையல் பொருட்களை மூலப்பொருள்களாகக் கொண்ட ஷாம்பூக்களும் பயன்பாட்டிற்குரியவைதான்.
இறுதியாக
உங்கள் கூந்தலின் வளர்ச்சி நிச்சயம் அவசியமான ஒன்றுதான். பலவீனமான கூந்தலில் இருந்து விடுபட மேற்கண்ட ஷாம்பூக்களில் உங்கள் கூந்தல் வகைக்கேற்ற ஷாம்புவைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். பிரபலங்களைப் போல அழகான அலையலையான கூந்தலைப் பெறுங்கள்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
