மாலை நிலவின் மரகத மஞ்சள்.. அழகை அதிகரிக்க மஞ்சள் தரும் நன்மைகள்

by StyleCraze

முகத்திற்கு மஞ்சள் பூசிக்கொள்ளும் பழக்கம் ஒரு காலத்தில் தமிழக பெண்களிடம் இன்றியமையாத செயலாக இருந்தது. இன்றைக்கு அது வெவ்வேறு வடிவங்களில் உரு மாற்றம் அடைந்துள்ளது. மஞ்சள் என்பது குர்குமா லாங்கா தாவரத்தின் வேர்களிலிருந்து பெறப்படுகிறது. இது இந்திய கலாச்சாரத்தில் அழகு மற்றும் சுகாதார பயன்களுக்காக பெயர் பெற்றது. நிறைய இந்திய உணவுகளில் மஞ்சள் ஏன் இருக்கிறது என்று எப்போதாவது யோசித்தீர்களா? இது அதன் கிருமி நாசினி பண்பு  காரணமாக அழகு மற்றும் சமையல் என இரண்டிலுமே பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் உங்கள் உடலை உள்ளிருந்து பாதுகாப்பதோடு, அனைத்து உறுப்புகளையும் செயல்திறன் மாறாது பாதுகாக்கிறது. பண்டைய காலங்களில் ஒரே அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தப்பட்டது மஞ்சள் மட்டுமே. அதனால்தான் இந்தியாவில் மணப்பெண்கள் திருமணங்களுக்கு முன்பு மஞ்சள் கொண்டு நீராட்டப்படுகின்றனர். மஞ்சளை முகம் மற்றும் உடலில் பயன்படுத்தும்போது, ​​சருமத்தை பிரகாசமாகவும், தெளிவாகவும், குறைபாடற்றதாகவும் மாற்றும். மஞ்சள் கொண்டு முகத்தை அழகாக்கும் குறிப்புகளை இனி தொடர்ச்சியாக காணலாம்.

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்  நன்மைகள் (how to apply turmeric on face in tamil)

வறண்ட சருமத்திற்கு எந்த காலநிலையாக கூடுதல் ஈரப்பதம் மற்றும் நீர் சத்து தேவைப்படுகிறது. குளிர்காலம் மற்றும் கோடைகாலங்களில் வறண்ட சருமத்தின் நிலைமை மோசமாகிறது. மஞ்சள் கொண்டு போடப்படும் ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை வழங்குவதோடு, உங்கள் முகத்தில் பிரகாசத்தை சேர்க்கும்.

மஞ்சள் இயற்கை கிருமி நாசினியாக செயல்படுவதால், சருமத்தின் மீதுள்ள எல்லா வகையான நுண்ணுயிர்களையும் நீக்கி தொற்று ஏற்படுவதை தடுக்கிறது. உடலுக்கு வெளியே மஞ்சள் பயன்படுத்துவதை போல, மஞ்சள் உட்கொண்டாலும் அது உடலுக்கு நல்லது என்பதால், எல்லா வகையிலும் நன்மை தரக்கூடியதாக விளங்குகிறது.

கண்ட கண்ட கிரீம்களை தடவி சருமத்தை வறண்டு போகச்செய்வதை காட்டிலும், மஞ்சள் கொண்டு பேஸ் மாஸ்க் (turmeric face pack in Tamil) போடும் போது, எந்த விதமான பக்க விளைவுகளும் வருவதில்லை. மாறாக இயற்கையான முறையில் சருமம் பொலிவாக்கப்படுகிறது.

வீட்டிலேயே முயற்சிக்கக் கூடிய 10 அற்புதமான மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் வகைகள்  (Turmeric face pack at home in Tamil)

பேஸ்மாஸ்க் என்ற உடனே கடை கடையாய் ஏறிஇறங்கி கிரீம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டு சமையல் அறையில் உள்ள ஒரு சில பொருட்களுடன், மஞ்சளை கலந்து எளிதாக ஃபேஸ் மாஸ்க் போட முடியும். அது குறித்து அடுத்து விரிவாக பார்க்கலாம்.

1. கிரீம், கடலை மாவு கொண்டு மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு உதவும் (1).

தேவையான பொருட்கள்

 • 1 டீ கிரீம்
 • 2 டீஸ்பூன் கடலை மாவு
 • ஒரு சிட்டிகை மஞ்சள்
 • 1 டீஸ்பூன் சந்தனம்
 • பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்? 

 • கடலை மாவு , சந்தனப் பொடி, கிரீம் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் சேர்க்கலாம்.
 • அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து மென்மையான பேஸ்ட் போல உருவாக்குங்கள். பேஸ்ட் செய்யும் போது எந்த கட்டிகளும் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • இந்த பேக்கை உங்கள் கழுத்து உட்பட உங்கள் முகமெங்கும் தடவி 15 நிமிடங்கள் வைத்திருங்கள்.
 • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

கிரீம்: சருமத்தில் ஈரப்பதத்தை உருவாக்க இந்த மூலப்பொருள் காரணமாகும். தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தோலில் சேர்த்து சருமத்தை மென்மையாக்கும்.

கடலை மாவு: இது உலர்ந்த மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. புதிய தோல் செல்கள் வளர வழி வகுக்கிறது.

சந்தன தூள்: சந்தனம் பல தாதுக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. இது ஒரு எக்ஸ்போலியேட்டராகவும் செயல்படுகிறது.

பாதாம் எண்ணெய்: அசுத்தங்கள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்றுவதில் இது நன்மை பயக்கும்.

2. கற்றாழை மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்மாஸ்க்

முகப்பருவை குறைக்க இது பயன்படுகிறது (2).

தேவையான பொருட்கள்

 • 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி
 • 1 டீஸ்பூன் தயிர்
 • 1/2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்
 • மஞ்சள் தூள்

என்ன செய்ய வேண்டும்? 

 • முல்தானி மிட்டி, தயிர், புதிய கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
 • அவற்றை நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் போல  உருவாக்குங்கள்.
 • அதனை முழுவதும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
 • வீட்டில் கற்றாழை இல்லையென்றால், சந்தையில் கிடைக்கும் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். இருப்பினும், வணிக ரீதியாக விற்பனையாகும் தயாரிப்புகளை விட, இயற்கையான ஜெல் சிறந்தது.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

கற்றாழை: சருமத்தை மென்மையாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் உள்ளன. தடிப்புகள், தீக்காயங்கள் மற்றும் எரிச்சலூட்டும் சருமத்திற்கு இது உதவியாக இருக்கும்.

தயிர்: தயிரில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதனை முகத்தில் தடவும்போது, ​​முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொன்று போரிடுகின்றன.

முல்தானி மிட்டி: இது உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களைச் செய்கிறது. குவார்ட்ஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, சிலிக்கா, டோலமைட் மற்றும் கால்சைட் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. அவை உங்கள் சருமத்தின் நிலையை மேம்படுத்தும்.

3. சந்தனம் மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்மாஸ்க் (for sensitive skin)

உணர்திறன் அதிகம் கொண்ட சருமத்திற்கு பயன்படுகிறது (3,4).

தேவையான பொருட்கள்

 • சந்தன தூள்
 • மஞ்சள் தூள்
 • பன்னீர்

என்ன செய்ய வேண்டும்? 

 • ஒரு பாத்திரத்தில் சந்தனப் பொடி மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 • இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ரோஸ் வாட்டரைச் சேர்த்து பேஸ்ட் செய்யுங்கள்.
 • இதனை முகத்தில் தடவி, குளிர்ந்த நீரில் முகம் கழுவும் முன் 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

சந்தன தூள்: சந்தனம் பல தாதுக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. இது ஒரு எக்ஸ்போலியேட்டராகவும் செயல்படுகிறது.

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரில் எரிச்சலூட்டும் மற்றும் வறண்ட சருமத்தை ஆற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

4. முட்டை வெள்ளைக்கரு கலந்த மஞ்சள் பேஸ்மாஸ்க்

வறண்ட சருமத்திற்கு உதவுகிறது (5).

தேவையான பொருட்கள்

 • 1 முட்டை
 • ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்
 • 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
 • 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
 • மஞ்சள்

என்ன செய்ய வேண்டும்? 

 • முட்டையின் வெள்ளை கருவை சில துளிகள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் கலக்கவும்.
 • இதில் ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும்.
 • உங்கள் உடலின் வறண்ட பகுதிகளுக்கு,  குறிப்பாக முகம், முழங்கைகள் மற்றும் முழங்கால்களுக்கு இதைப் பயன்படுத்துங்கள்.
 • பேக் முழுவதுமாக காய்ந்து போகும் வரை அதை வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்தில் மூன்று நான்கு முறை பயன்படுத்தவும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

முட்டை: முட்டை தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலூட்டும் உணர்வை போக்க உதவுகிறது.

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரில் எரிச்சலூட்டும் மற்றும் வறண்ட சருமத்தை ஆற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

ஆலிவ் ஆயில்: ஆலிவ் எண்ணெயில் ஹைட்ரேட்டிங் ஸ்குவாலீன் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை சருமத்திற்கு சிறந்தவை.

5. தயிர், தக்காளி சாறு மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்மாஸ்க்

சருமத்தை மிருதுவாக்க பயன்படுகிறது

தேவையான பொருட்கள்

 • தயிர் 2 டீஸ்பூன்
 • 1 டீஸ்பூன் முல்தானி மிட்டி
 • பன்னீர்
 • மஞ்சள்
 • சந்தன தூள்
 • தக்காளி சாறு

என்ன செய்ய வேண்டும்? 

 • இந்த பேக் தயாரிக்க, தயிர்,  முல்தானி மிட்டி, ரோஸ் வாட்டர் தக்காளி சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகிவற்றை ஒன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் சந்தனப் பொடியையும் சேர்க்கலாம்.
 • அனைத்தையும் நன்கு கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் போல மாற்ற வேண்டும்.
 • அதனை முகம் முழுவதும் தடவவும். பிறகு 15 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

தயிர்: தயிரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதனை முகத்தில் தடவும்போது, ​​ முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லும்.

முல்தானி மிட்டி: இது உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களைச் செய்கிறது. இதில் குவார்ட்ஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, சிலிக்கா, டோலமைட் மற்றும் கால்சைட் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. அவை உங்கள் சருமத்தின் நிலையை மேம்படுத்துகின்றன.

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை எரிச்சலூட்டும் மற்றும் வறண்ட சருமத்தை ஆற்றும்.

சந்தன தூள்: சந்தனம் தாதுக்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. இது ஒரு எக்ஸ்போலியேட்டராகவும் செயல்படுகிறது.

தக்காளி சாறு: தக்காளி சாறில் நிறைந்துள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் சருமத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றன.

6. கடலை மாவு,  மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கலந்த பேக்மாஸ்க்

சருமம் பிரகாசிக்க உதவுகிறது

தேவையான பொருட்கள்

 • 2 டீஸ்பூன் கடலை மாவு
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள்
 • 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

என்ன செய்ய வேண்டும்? 

 • கடலை மாவு,  மஞ்சள்,  எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலக்கவும். பேஸ்ட் தயாரிக்க சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
 • இதனை முகம் முழுவதும் தடவி, சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
 • உங்களுடைய தோல் வெளிர் தோலாக இருந்தால், அது தோலினை மஞ்சள் நிறமாக தோன்றும். அதற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

எலுமிச்சை சாறு: எலுமிச்சை இயற்கையில் அமில தன்மை கொண்டது. இது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது.

கடலை மாவு: கடலை மாவானது உலர்ந்த மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இது புதிய தோல் செல்கள் வளர வழி வகுக்கிறது.

7. தேன், ரோஸ்வாட்டர் மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்மாஸ்க்

இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

தேவையான பொருட்கள்

 • தேன்
 • மஞ்சள் தூள்
 • பன்னீர்

என்ன செய்ய வேண்டும்? 

 • ஒரு பாத்திரத்தில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 • இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ரோஸ் வாட்டரைச் சேர்த்து பேஸ்ட் செய்யுங்கள்.
 • இதனை முகத்தில் தடவி, குளிர்ந்த நீரில் முகம் கழுவும் முன் 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரில் எரிச்சலூட்டும் மற்றும் வறண்ட சருமத்தை ஆற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

தேன்: தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், அது உங்கள் சருமத்தை பளபளக்கச்செய்யும்.

8. தயிர், பாதம் எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்மாஸ்க்

சருமத்தை பொலிவுறச் செய்கிறது.

தேவையான பொருட்கள்

 • தயிர் 2 டீஸ்பூன்
 • மஞ்சள்
 • பாதம் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்? 

 • இந்த பேக் தயாரிக்க தயிர், பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகிவற்றை ஒன்றாக கலக்கவும்.
 • அனைத்தையும் நன்கு கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் போல மாற்ற வேண்டும்.
 • அதனை முகம் முழுவதும் தடவவும். பிறகு 15 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

தயிர்: தயிரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதனை முகத்தில் தடவும்போது, ​​ முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லும்.

பாதாம் எண்ணெய்: சரும அசுத்தங்கள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்றுவதில் இது நன்மை பயக்கும்.

9. பால் மற்றும் மஞ்சள் கலந்த பேஸ்மாஸ்க்

வயதான தோற்றத்தை தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

 • 1 டீஸ்பூன் பால்
 • 1 டீஸ்பூன் பாதாம் தூள்
 • மஞ்சள் தூள்

என்ன செய்ய வேண்டும்? 

 • பேஸ்ட் பதம் கிடைக்கும் வரை பால், பாதாம் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை கலக்க வேண்டும்.
 • அதனை முகத்தில் சமமாக தடவி 15-20 நிமிடங்கள் விடவும்.
 • பிறகு சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

பால்: இது வறண்ட சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் திசு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வயதான தோற்றத்தை குறைக்கிறது.

பாதாம் தூள்: இது சருமத்திற்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது. சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்கிறது.

10. அல்டிமேட் மஞ்சள் ஃபேஸ்பேக்

கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது (6).

தேவையான பொருட்கள்

 • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்
 • 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
 • கேரட் சாறு 2 தேக்கரண்டி
 • 1 தேக்கரண்டி முள்ளங்கி சாறு
 • 2 டீஸ்பூன் தேன்
 • கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன்
 • 1 டீஸ்பூன் தயிர்
 • நல்ல தரமான குங்குமப்பூவின் 2 இழைகள்
 • 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
 • கிளிசரின் 1 டீஸ்பூன்
 • தூள் ஓட்ஸ் அல்லது கடலை மாவு

என்ன செய்ய வேண்டும்? 

 • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்மாஸ்க் கலவையானது கெட்டியாக இல்லை என நீங்கள் உணர்ந்தால், ஓட்ஸ் தூள் அல்லது கடலை மாவு சேர்க்கவும்.
 • முகம் மற்றும் கழுத்து முழுவதும் இதனை தடவவும். அப்படியே 20 நிமிடங்கள் விட வேண்டும்.
 • பிறகு சுத்தமான துணியால் அதை அகற்றி,  உங்கள் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

கேரட் ஜூஸ்: இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான தோல் செல்களை மீட்டெடுக்கின்றன.

தேன்: தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் உங்கள் சருமத்தை பளபளக்க செய்யும்.

கற்றாழை: சருமத்தை மென்மையாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் உள்ளன. தடிப்புகள், தீக்காயங்கள் மற்றும் எரிச்சலூட்டும் சருமத்திற்கு இது உதவியாக இருக்கும்.

தயிர்: தயிரில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதனை  முகத்தில் தடவும்போது, ​​ முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லும்.

கடலை மாவு:  இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. புதிய தோல் செல்கள் வளர வழி வகுக்கிறது.

பாதாம் எண்ணெய்: சரும அசுத்தங்கள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்றுவதில் இது நன்மை பயக்கும்.

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை எரிச்சலூட்டும் மற்றும் வறண்ட சருமத்தை ஆற்றும்.

கிளிசரின்: இது இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. தோலில் உள்ள அசுத்தங்கள் மற்றும் வடுக்களை அகற்ற உதவும்.

குங்குமப்பூ: குங்குமப்பூ இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. உங்கள் சருமத்திற்கு ஒரு பிரகாசத்தை சேர்க்கிறது.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை இயற்கையில் அமிலமானது, அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது.

முள்ளங்கி சாறு: இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.

மஞ்சள்பேஸ் பயன்படுத்துவது பற்றிய குறிப்புகள்

மஞ்சளை சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

வாரத்திற்கு பல முறை பயன்படுத்தினால், உங்கள் சருமத்தை கறைபடுத்தி மஞ்சள் நிறமாக மாற்றக்கூடும்.

சரியான பலன்கள் கிடைக்கும் வரையில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்தலாம்

மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் உலர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடிகளின் மீது தொடர்ந்து படும்படி மஞ்சள் பயன்படுத்தினால், அவை உதிர்ந்து விடும் (7).

முடிவாக

மஞ்சள் பழங்காலத்திலிருந்தே இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தப்பட்டாலும், கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டாலும்,  எண்ணற்ற நன்மைகளை நமக்கு வழங்குகிறது. மேலே குறிப்பிடப்பட்ட பேஸ்மாஸ்குகளை முயற்சித்துப் பாருங்கள். அவற்றை எளிதில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே தயாரித்து விடாலாம். இதில் எந்த முறை உங்களுக்கு பலன் கொடுத்தது என்பது குறித்த கருத்துகளை எங்களிடம் தெரிவிக்கலாம்.

7 Reference

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
scorecardresearch