மூல நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் – Piles (Hemorrhoids) Causes, Symptoms and Home Remedies in Tamil

Written by StyleCraze

‘பைல்ஸ்’ எனும் வார்த்தை ஏதோ ஒரு மோசமான வியாதியை குறிப்பது போல் இதை மெதுவாக உச்சரித்தல் அல்லது இவ்வார்த்தையை அறவே கூறாமல் தவிர்த்தல் போன்ற மூட பழக்க வழக்கங்களை மக்கள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை பின்பற்றி வருகின்றனர். இந்த மூட பழக்க வழக்கத்தை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது; இன்று இந்த பதிப்பை வாசிக்கும் இந்த நிமிடமே அந்த நல்ல நேரம்..!

பைல்ஸ் எனும் மூல நோயை ஆங்கிலத்தில் hemorrhoids என்று அழைப்பர்; இது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். மரபு வழி மூலம் பரவுவதை தவிர, தீவிர மலச்சிக்கல் பிரச்சனையால் அதிக அசௌகரியமான உடல்நிலை உண்டாகலாம். குத கால்வாய் மற்றும் கீழ் மலக்குடல் பகுதிகளில் காணப்படும் இரத்த நாளங்கள் வீங்கும்; இதனால் கழிவறையில் மலம் கழிப்பது என்பது மிகவும் கடினமான, வலி மிகுந்த விஷயமாக மாறலாம். இவ்வாறு ஏற்படுவது மூல வியாதியை குறிக்கும்.

மூல வியாதியினால் தீவிர உதிரப்போக்கு ஏற்படலாம்; மூல வியாதி என்பது யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள், முதுகெலும்பு பிரச்சனை உள்ளவர்கள் போன்றோருக்கு மூல வியாதி உண்டாகும் வாய்ப்புண்டு. மூல நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதை வீட்டிலிருந்தே குணப்படுத்தி விடலாம். மூல நோய் பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் மூல நோயை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று இந்தப் பதிப்பில் பார்க்கலாம்.

பைல்ஸ் (அ) மூலம் (அ) மூல நோய் என்றால் என்ன? – What are Piles in Tamil

ஆசன வாய் மற்றும் மலக்குடல் ஆகிய பகுதிகளின் தசைச்சுவரில் காணப்படும் இரத்த நாளங்கள் தான் மூலம் ஆகும். பொதுவாக இவை ஒன்றாக சேர்ந்து, கட்டியாகி அல்லது அல்லது குத கால்வாயில் உள்ள திசுக்களின் தொகுப்பாக உருமாறி காணப்படும் (1).

“Piles – பைல்ஸ்” எனும் வார்த்தை வீங்கிய மற்றும் அழற்சி கொண்ட மூல வியாதியை  குறிக்க பயன்படும். இது வலி, எரிச்சல், இரத்தப்போக்கு போன்றவற்றுடன் கூடிய குத கால்வாயில் ஏற்பட்டிருக்கும் கடினமான கட்டியை குறிக்கும் (1). குரோனிக் மலச்சிக்கல், கனமான பொருட்களை தூக்குதல், மலம் கழிக்கும் பொழுது முக்கி அதிகம் கஷ்டப்படுதல் போன்றவை மூல நோயை தீவிரமாக்கி விடலாம்.

மூல நோயின் (Hemorrhoids) வகைகள் – Types of Piles(Hemorrhoids) in Tamil

மூலம் எனும் நோய்க்குறைபாடு முக்கியமாக 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. மூலத்தின் வகைகள் என்னென்ன என்று கீழே பார்க்கலாம்:

உட்புற மூலம்

மலக்குடல் பகுதியில் உட்புற மூலம் உருவாகிறது; இவ்வகை நோய் குத கால்வாய் பகுதியின் ஆழத்தில் ஏற்படுவதால், அதை எப்பொழுதும் காண முடியாது. இந்த வகை மூல வியாதி பொதுவாக தீவிரமானதாக இருக்காது, மேலும் அவை தானாகவே மறைந்துவிடும்.

சில நேரங்களில் உட்புற மூலத்தினால் ஆசன வாயில் வீக்கம் ஏற்பட்டு வெளியே ஒட்டிக்கொள்ளும்; இது நீடித்த மூல நோய் என்றும்  அழைக்கப்படுகிறது. பைல்ஸினால் ஏற்படும் வலியை கண்டறிய மலக்குடல் பகுதியில் எந்த ஒரு நரம்புகளும் இல்லை; எப்பொழுதும் உட்புற மூலம் ஏற்பட்டிருப்பதை பற்றி அறிய முடியாது. இந்த நோய் பெரிதாக வளர்ச்சி அடைந்தால், அதனால் பின்வரும் அறிகுறிகள் உண்டாகலாம்:

 • வலி அல்லது அசெளகரியம்
 • அரிப்பு
 • எரிச்சல்
 • வெளியே தெரியக்கூடிய கட்டிகள் அல்லது மலவாய் அருகே வீக்கம்

மலக்குடல் வழியாக மலம் பயணிக்கும் பொழுது, அது உட்புற மூல வியாதிக்கு எரிச்சல் உண்டாகலாம். இதனால் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்; உட்புற மூல நோயால் வலி அல்லது அசெளகரியம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

நீடித்த மூல நோய்

நீடித்த மூல நோய் என்பது உட்புற மூலத்தால் மலவாய் பகுதியில் வீக்கம் மற்றும் மலவாய் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்; மலவாய் எவ்வளவு காலத்திற்கு ஒட்டிக் கொண்டுள்ளது என்பதை பொறுத்து மருத்துவர் மூல நோயின் தீவிரத்தை குறிப்பிடுவார்.

 • மூல நோயின் நிலை 1: நீடித்த மூல நோய் இல்லை.
 • மூல நோயின் நிலை 2: நீடித்த மூல நோய், ஆனால் இந்நோய் தானாகவே மறைந்துவிடும். ஆசன வாய் அல்லது மலக்குடல் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதாவது மலக்குடல் இயங்கி அதன் பழைய நிலைக்கு திரும்பும் பொழுது, உண்டான மூல நோய் நீடித்து துன்பப்படுத்த வாய்ப்புண்டு.
 • மூல நோயின் நிலை 3: நீடித்தது மற்றும் மூல நோய் ஏற்பட்ட ஒருவர் கவனமாக இருந்து, பாதிப்பை பொறுத்துக் கொள்ள வேண்டும்; மூல வியாதியினால் வலி மற்றும் தொற்று ஏற்படாமல் இருக்க மூலத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.
 • மூல நோயின் நிலை 4: நீடித்தது மற்றும் மூல நோய் ஏற்பட்ட ஒருவர் நோய்க்குறைபாட்டால் ஏற்படும் அதிகமான வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம்; மூலத்தால் உண்டாகும் வலி, அசெளகரியம் மற்றும் மேற்கொண்டு ஏற்படவிருக்கும் சிக்கல்களை தவிர்க்க, இந்த நிலையை கட்டாயம் குணப்படுத்தியே ஆக வேண்டும்.

நீடித்த மூல நோய் என்பது, வீங்கிய சிவந்த கட்டிகளாக அல்லது ஆசன வாய்க்கு வெளியே புடைத்து பெரிதாக தென்படலாம்; கண்ணாடியில் இந்த பகுதியை பார்த்தாலே, மூல நோய் ஏற்பட்டிருப்பதை கண்டறிய முடியும். நீடித்த மூல நோய்க்கு புடைப்பை தவிர வேறு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம் அல்லது இந்நோயால் வலி, அசெளகரியம், அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகலாம்.

சில நேரங்களில், நீடித்த மூல நோயை குணப்படுத்த அல்லது சரி செய்ய மற்றும் மூலத்தால் வலி அல்லது சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

வெளிப்புற மூலம்

உடலில் இருந்து மலம் வெளியேறும் இடமான மலவாய் பகுதியில் வெளிப்புற மூலம் உண்டாகலாம்; இந்நோய் எப்பொழுதும் வெளியே தெரியாது, ஆனால் சில நேரங்களில் மலவாய் பகுதியில் கட்டிகள் ஏற்படலாம்.

வெளிப்புற மூலம் என்பது ஒரு தீவிர மருத்துவ பிரச்சனை இல்லை; ஆனால், இந்நோயால் வலி அல்லது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் அசெளகரியம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

வெளிப்புற மூல நோயின் அறிகுறிகள், உட்புற மூல நோயின் அறிகுறிகளை ஒத்தது தான்; ஆனால், இந்நோய் மலக்குடல் பகுதிக்கு வெளியே ஏற்படும். இதனால் உட்காரும் பொழுது, உடலியல் செயல்பாடுகள் செய்யும் பொழுது அல்லது மலம் கழிக்கும் பொழுது வலி அல்லது அசெளகரியம் ஏற்படலாம்.

ஆசன வாய் பகுதியில் உள்ள இரத்த நாளங்களின் நிறம் மாறும் பொழுது மற்றும் வீக்கம் ஏற்படுகையில், இந்நோயை தெளிவாக காண முடியும். வெளிப்புற மூலத்தால் வலி அல்லது அசெளகரியம் ஏற்பட்டால், மருத்துவரை சென்று காண வேண்டியது அவசியம்.

த்ரோம்போஸ்ட் மூல நோய்

த்ரோம்போஸ்ட் மூல நோய் என்பது மூலம் ஏற்பட்ட உடல் திசுவில் இரத்தக்கட்டை கொண்டிருக்கும்; மலவாய் பகுதியில் கட்டிகள் அல்லது வீக்கம் காணப்படலாம்.

த்ரோம்போஸ்ட் மூல நோய் இரத்தக்கட்டினை கொண்டிருப்பதால், இதனை மூல நோயின் சிக்கலான நிலை என்றே கூறலாம். இரத்தக்கட்டு என்பது உட்புற மற்றும் வெளிப்புற மூல நோய் ஆகிய இரண்டிலும் கூட தோன்றலாம்; த்ரோம்போஸ்ட் மூல நோயின் அறிகுறிகள் ஆவன:

 • அதீத வலி மற்றும் அரிப்புத்தன்மை
 • வீக்கம் மற்றும் சிவந்து போதல்
 • மூலம் ஏற்பட்ட இடத்தை சுற்றி இரத்தம்கட்டிய நிறம்

த்ரோம்போஸ்ட் மூல நோயால் மலக்குடல் மற்றும் ஆசன வாய் பகுதிகளை சுற்றி அதிகப்படியான வலி, அரிப்பு, அழற்சி போன்றவை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சென்று காண வேண்டும். மலக்குடல் திசு அல்லது ஆசன வாய் பகுதிக்கு போதிய அளவு இரத்தம் கிடைக்காததால் ஏற்படும் சிக்கல்களை விரைந்து தடுக்க த்ரோம்போஸ்ட் மூல நோயை குணப்படுத்த வேண்டியது அவசியம்.

மூல நோயின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் – Causes and Risk Factors of Piles in Tamil

எந்த ஒரு நோயையும் சரி செய்ய அது எதனால் உருவானது என்று ஆராய்ந்து நோயின் வேர்க்காரணியை கண்டறிய வேண்டும். அவ்வகையில் மூல நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், அது எதனால் ஏற்படும்? இந்நோய்க்கான காரணங்கள் மற்றும் மூல வியாதியை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகள் என்னென்ன என்று அறிய வேண்டியது அவசியம். அவை குறித்து இங்கு காணலாம்

 1. எப்பொழுதும் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல்
 2. இஞ்சி, மிளகு, மிளகாய் போன்ற கார வகை உணவுகளை அதிகம் உட்கொள்ளல்
 3. கர்ப்ப காலத்தில் மூல நோய் ஏற்படலாம்
 4. நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருத்தல்
 5. மது, புகை பழக்கம் உள்ளவர்களில் மூல வியாதி ஏற்படலாம்
 6. உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் துரித உணவுகள்
 7. மலச்சிக்கல் குறைபாடு உள்ளவர்களில் மூல நோய் தோன்றலாம்

மூல நோயின் அறிகுறிகள் – Symptoms of Piles in Tamil

எல்லா நோய்க் குறைபாடுகளுக்கும் அவற்றை பற்றி எடுத்துரைக்கும் அறிகுறிகள் நிச்சயம் தோன்றும்; அதுவும் உடலில் நோய் ஏற்படுவதற்கு சில காலம் முன்பு தொடங்கி, நோய் தீவிரமடையும் ஒவ்வொரு நிலைகளையும் எடுத்துக் காட்ட உடலில் சில மாற்றங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றும் மாற்றங்களை தான் நோய் அறிகுறிகள் என்று கூறுவர். அவ்வகையில் உடலில் மூல வியாதி ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் என்னென்ன என்று இப்பொழுது காணலாம்:

 1. உணவு செரிமானமின்மை
 2. புளித்த ஏப்பம்
 3. மலம் இறுகி வெளியேறாமை
 4. மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வெளியேறல்
 5. மூல சதை வெளியே தள்ளி காணப்படல்

மூல நோய்க்கான  வீட்டு வைத்தியங்கள் – Home Remedies for Piles (Bawaseer) in Tamil

Shutterstock

பல மக்கள் பைல்ஸ் நோய் பற்றி மருத்துவரிடம் கூறுவதையே கேவலமான செயலாக எண்ணி, வெட்கபட்டுக் கொண்டு மருத்துவரிடம் செல்லாமல் இருந்து விடுவர்; அப்படியே மருத்துவரை காண சென்றாலும் அங்கு மேற்கொள்ளப்படும் சங்கோஜத்தை ஏற்படுத்தும் பரிசோதனைகளால் பல மக்கள் மூல நோய்க்கு  சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனையை நாடி செல்வதில்லை. மூல வியாதியை குணப்படுத்த விரும்பும் ஒருவர், கீழ்க்கண்ட மூல நோய் வீட்டு வைத்தியங்களை மேற்கொண்டாலே போதும் மூலநோயிலிருந்து எளிதில் நிவாரணம் பெற முடியும். மூல நோய்க்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி விரிவாக காணலாம்:

வைத்தியம் 1: பின்புட்ட பகுதி & ஆசன வாய் / இருக்கை குளியல் (Sitz Bath)

பைல்ஸ் நோயை தடுக்க பல்வேறு வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன; அவற்றில் மிக எளிய முறையான பின்புட்ட பகுதி & ஆசன வாய்/ இருக்கை குளியல் (Sitz Bath) வைத்திய முறை பற்றி இப்பொழுது காணலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • ஒரு குளியல் தொட்டி
 • மிதமான சூடு கொண்ட நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. ஒரு குளியல் தொட்டியில் மூன்று முதல் நான்கு அங்குல உயரத்திற்கு மிதமான சூடு கொண்ட நீரை சேர்த்து பிறப்புறுப்புகளை அதில் நனைய வைத்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு குளிக்க வேண்டும்.
 2. குளிக்கும் பொழுது குளியல் சோப், நுரை சோப் அல்லது எந்த ஒரு பொருளையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
 3. குளிப்பாட்டிய பிறப்புறுப்பு பகுதிகளை மெதுவாக துடைத்து விடவும்.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு மூன்று முறை மேற்கூறிய முறையில் குளிக்க வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து குளித்து வந்தால் விரைவான பலன்களை பெற முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

பிறப்புறுப்பு, பின்புட்ட பகுதி, ஆசன வாய் ஆகிய பகுதிகளை கழுவும் முறைக்கு sitz bath அல்லது இருக்கை குளியல் என்று பெயர். குத தசைகளுக்கு ஓய்வான உணர்வு அளித்து, இதமளிக்க நீரின் சூடு உதவுகிறது; மேலும் இக்குளியல் அரிப்புத் தன்மையில் இருந்து விடுதலை அளிக்க உதவுகிறது (2).

வைத்தியம் 2: சூனிய வகை காட்டு செடி (Witch Hazel)

பைல்ஸ் நோயை தடுக்க பல வகையான வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; அவற்றில் ஒரு வித்தியாசமான முறையான சூனிய வகை காட்டு செடி (Witch Hazel) வைத்திய முறை பற்றி இப்பொழுது காணலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • சூனிய வகை காட்டு செடியின் சாறு (Hamamelis virginiana)
 • பருத்தி பந்து
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

பருத்தி பந்தினை சூனிய வகை காட்டு செடியின் சாறில் நனைத்து, குத பகுதியில் சில நிமிடங்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை இந்த முறையை மேற்கொள்ள வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் சிறப்பான பலன்களை பெற முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

Witch hazel அதாவது சூனிய வகை காட்டு செடி (Hamamelis virginiana) என்பது சருமத்தில் எரிச்சல் மற்றும் அழற்சியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்; மூலத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இதனை தடவும் பொழுது, இது குளிர்ச்சியான உணர்வை கொடுக்கும். இச்செடி நோய்த்தொற்றுகளின் வளர்ச்சியை தடுக்கும் மற்றும் இது ஒரு நல்ல ஆஸ்டிரின்ஜெண்ட் (astringent) அதாவது கட்டுப்படுத்தும் ஆகும் (3). இந்த வைத்திய முறை வெளிப்புற மூல வியாதியை சரி செய்ய பயன்படுகிறது.

வைத்தியம் 3: தேயிலை எண்ணெய்

பைல்ஸ் நோயை சரி செய்ய பல்வேறு வகையான வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; அவற்றில் ஒரு எளிமையான வைத்திய முறை பற்றி இப்பொழுது காணலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • 2-3 துளிகள் தேயிலை எண்ணெய்
 • பருத்தி பஞ்சு
 • 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. தேயிலை எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
 2. பருத்தி பந்தை இக்கலவையில் நனைத்து, மூல வியாதியால்   பாதிக்கப்பட்ட இடத்தில் எண்ணெயில் நனைத்த பஞ்சு கொண்டு துடைக்க வேண்டும்.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

இந்த செய்முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்ய வேண்டும்; இவ்வாறு தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

தேயிலை எண்ணெய் என்பது மேலேலுக்கா எண்ணெய் (melaleuca oil) என்றும் அழைக்கப்படுகிறது; இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சியை போக்க உதவும் அற்புதமான மருந்து ஆகும். இதில் உள்ள ஆன்டி மைக்ரோபையல் பண்புகள், மூலத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாகவும், கிருமிகள் அற்றதாகவும் வைத்திருக்க உதவுகின்றன (4).

எச்சரிக்கை

தேயிலை எண்ணெய் என்பது ஒரு பலம் வாய்ந்த அத்தியாவசிய எண்ணெய் ஆகும்; இது நீர்க்கப்பட்ட பிறகு சற்று கொட்டும்.

வைத்தியம் 4: கற்றாழை

பைல்ஸ் நோயை தடுக்க பற்பல வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன; அவற்றில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வைத்திய முறை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • கற்றாழை இலை
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. கற்றாழை இலையின் உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து, வெளிப்புற மூல நோய்க்கு  சிகிச்சை அளிக்க பைல்ஸ் ஏற்பட்ட இடத்தில் தடவலாம். இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.
 2. உட்புற மூல வியாதிக்கு, கற்றாழை இலையின் மேல் இருக்கும் முட்களை நீக்கி கற்றாழை இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்; இவ்வாறு வெட்டிய துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். பின்பு இந்த குளிர்ந்த கற்றாழை துண்டுகளை ஒரு சில நிமிடங்களுக்கு மலவாயில் நுழைத்து எடுக்க வேண்டும்.
 3. காலை வேளையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறை பருகலாம்; இது செரிமானத்தை மேம்படுத்த மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

ஒவ்வொரு நாளும் இந்த செய்முறையை இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஏன் இது வேலை செய்யும்?

இத்தாவரம், இதில் நிறைந்து இருக்கும் மருத்துவ பண்புகளுக்கு பெயர் போனது; இதன் சிகிச்சை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூல நோயில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன (5). மூல நோயின் வீக்கத்தால் ஏற்படும் வலியை குறைக்க கற்றாழை சாறை பருகலாம்.

வைத்தியம் 5: விர்ஜின் தேங்காய் எண்ணெய்

பைல்ஸ் நோயை குணப்படுத்த பல்வேறு வகையான வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; அவற்றில் அதிக காசு செலவழிக்க தேவையில்லாத ஒரு வைத்திய முறை பற்றி இப்பொழுது காணலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • விர்ஜின் தேங்காய் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

விரல்களை சுத்தப்படுத்தி, மூல நோயால் பாதிப்பு உண்டான இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும்.

எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

வலி அல்லது கட்டிகள் போகும் வரை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மூலம் ஏற்பட்ட இடத்தில் விர்ஜின் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சிறப்பான பலன்களை காண முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

மூல நோயால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற விர்ஜின் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது உதவும் (6). இதில் அதிக அளவு ஆன்டி மைக்ரோபையல் பண்புகள் அடங்கி உள்ளன (7).

வைத்தியம் 6: பூண்டு

பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க பல வகையான வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; அவற்றில் ஒரு பிரபலமான வீட்டு வைத்திய முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • பூண்டு பற்கள்
 • ஒரு மென்மையான துணி (Gauze)
 • மிதமான சூடு கொண்ட நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. வெளிப்புற மூல நோய்க்கு சிகிச்சை அளிக்க, பூண்டு பற்களின் தோலை உரித்து அவற்றை நீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்; பின்னர் கொதிக்க வைத்த நீரை வடிகட்டி, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு மென்மையான காட்டன் துணியை இந்நீரில் நனைத்து, அதை ஆசன வாய் பகுதியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும்.
 2. உட்புற மூல நோய்க்கு சிகிச்சை அளிக்க, பூண்டு பற்களின் தோலை உரித்து அவற்றை சாறு சொட்டும் வண்ணம் நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்; பின்னர் இந்த நசுக்கிய பூண்டு இலேசாக வெளியே தெரியும் வண்ணம், மலக்குடலுக்குள் செலுத்தி  இரவு முழுவதும் இதை அப்படியே விட்டு விடவும்.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

இந்த பூண்டு செய்முறையை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம்; இவ்வாறு தொடர்ந்து முயற்சித்து வந்தால் நல்ல பலன்களை பெற முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி பையாட்டிக் பண்புகள் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து, நொடிப்பொழுதில் நிவாரணம் அளிக்க உதவுகின்றன .

வைத்தியம் 7: ஜத்யாதி எண்ணெய்

பைல்ஸ் நோயை தடுக்க பல வீட்டு வைத்திய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன; அவற்றில் ஒரு விசித்திர முறையான ஜத்யாதி எண்ணெய் வைத்திய முறை பற்றி இப்பொழுது காணலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • 5-6 துளிகள் ஜத்யாதி எண்ணெய்
 • ஒரு குளியல் தொட்டி
 • மிதமான சூடு கொண்ட நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. குளியல் தொட்டியின் நான்கில் ஒரு பங்கு அளவு மிதமான சூடு கொண்ட நீரை நிரப்பி, அதில் ஜத்யாதி எண்ணெயை சேர்க்க வேண்டும்.
 2. மூல நோயால் பாதிப்பு ஏற்பட்ட இடத்தை ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு இருமுறை அல்லது மூன்று முறை இந்த முறையை பின்பற்ற வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து பின்பற்றி வந்தால் நல்ல பலன்களை காண முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

பைல்ஸ் மற்றும் பிளவுகள் (fissures) போன்ற நோய்களை குணப்படுத்த நேச்சுரோபதி மருத்துவர்கள் இந்த ஆயுர்வேத வைத்திய முறையை தான் பரிந்துரைக்கின்றனர். இந்த மூலிகை எண்ணெயில் நிறைந்துள்ள காயத்தை குணமாக்கும் பண்புகள் மூல வியாதிக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன (9).

வைத்தியம் 8: நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

பைல்ஸ் நோயை தடுக்க பல வகையான வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; ‘உணவே மருந்து’ என்ற கூற்றுக்கிணங்க, அவற்றில் உணவு மூலமாக பைல்ஸை குணப்படுத்த உதவும் ஒரு வைத்திய முறை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • நார்ச்சத்து அடங்கிய உணவு பொருட்கள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

பைல்ஸ் நோயை குணப்படுத்த நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை தினந்தோறும் உட்கொள்ள வேண்டும்.

எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

தினந்தோறும் இந்த முறையை பின்பற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஏன் இது வேலை செய்யும்?

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளுள் மிக முக்கியமானது மலம் கழிப்பதில் ஏற்படும் சிரமம் ஆகும்; மலம் கழிப்பதில் ஏற்படும் சிரமத்தால் இரத்தக்கசிவு கூட உண்டாகலாம். உணவு முறையில் போதிய அளவு நார்ச்சத்து இருந்தால், மலம் கழிக்கும் முறை இலகுவாகலாம். மலச்சிக்கல் பிரச்சனையால் மலம் கழிப்பதில் சிக்கல் உண்டானால், அது பைல்ஸ் நோயை ஏற்படுத்த காரணம் ஆகலாம். எனவே, நாள் ஒன்றுக்கு 30 முதல் 35 கிராம் நார்ச்சத்தினை எடுத்துக் கொண்டால் மூல நோயை குணப்படுத்தலாம்; ஆகையால், அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் மற்றும் பல உணவுகளை உட்கொண்டால் பைல்ஸ் நோய்க்கு எளிதில் தீர்வு காண முடியும் (10).

வைத்தியம் 9: டீ/ தேநீர் பைகள்

பைல்ஸ் நோயை குணப்படுத்த பற்பல வகையான வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; தேநீர் பைகளை பயன்படுத்தி பைல்ஸிற்கு வைத்தியம் செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • பிளாக் டீ/ தேநீர் பைகள்
 • சுடுநீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. தேநீர் பைகளை வெந்நீரில் ஒரு சில நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்; டீ பையை நீக்கி, வெந்நீரை ஆற விடவும்.
 2. இந்த மிதமான சூடு கொண்ட நீரை, ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
 3. தேநீர்/ டீ பையை இரண்டு நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து, மலவாய் பகுதியில் இக்குளிர்ந்த டீ பையை வைத்து எடுக்க வேண்டும்.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

மூலம் நோயில் இருந்து விடுதலை பெற இந்த செய்முறையை தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் வாயிலாக நல்ல பலன்களை பெற முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

பிளாக் டீ/ தேநீர் என்பது ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் காரணி அதாவது ஆஸ்ட்ரிஜெண்ட் மற்றும் இதில் ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள் நிறைந்து உள்ளன; தேநீர் பைகளை மூல நோய் உண்டான இடத்தில் வைப்பதன் மூலம், நோயின் அறிகுறிகளை குறைக்க முடியும் (10). தேநீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூல வியாதி ஏற்பட்ட தசைகளில் உண்டான வீக்கத்தை குறைக்க பயன்படுகின்றன (11).

வைத்தியம் 10: கருப்பு விதை எண்ணெய்/ கலோஞ்சி எண்ணெய்

மூல நோயை தடுக்க பல வகையான வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; பைல்ஸை சரி செய்ய உதவும் கருப்பு விதை எண்ணெய் எனும் ஒரு வேறுபட்ட வைத்திய முறை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • ஒரு தேக்கரண்டி கருப்பு விதை எண்ணெய்
 • 1 தேக்கரண்டி வினிகர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. கருப்பு விதை எண்ணெயை வினிகரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
 2. பைல்ஸ் நோயை ஏற்படுத்தும் மலச்சிக்கலை குணப்படுத்த ½ தேக்கரண்டி கருப்பு விதை எண்ணெயை, ஒரு கப் பிளாக் டீயுடன் கலந்து குடிக்கலாம்.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

எண்ணெய் மற்றும் வினிகர் கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறையும், டீ மற்றும் எண்ணெய் பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவையும் பயன்படுத்த வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிறப்பான பலன்களை பெற முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

கருப்பு விதை எண்ணெய் என்பது கலோஞ்சி எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது; இது கருப்பு மிளகு விதைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் எண்ணற்ற உட்புற மற்றும் வெளிப்புற ஆரோக்கிய சீர்கேடுகளை சரிசெய்ய பயன்படுகிறது. இதன் மருத்துவ பண்புகளுக்கு முக்கிய காரணமாக திகழ்வது, இதில் அடங்கியிருக்கும் தைமோகுவினைன் தான்; அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்சிடென்ட், அனால்ஜெசிக், நோய் எதிர்ப்பு ஆதரவு போன்ற முக்கிய குணநலன்கள் கருப்பு விதை எண்ணெயில் அடங்கியுள்ளன; இது செரிமான இயக்கத்தை நிலைப்படுத்த உதவுகிறது (12).

வைத்தியம் 11: கிரீன் டீ/ பசுமை தேநீர்

மூல வியாதியை தடுக்க பல்வேறு வகையான, எளிய வீட்டு வைத்திய முறைகள் பயன்படுகின்றன; பைல்ஸை குணப்படுத்த உதவும் ஒரு எளிமையான வைத்திய முறை குறித்து இங்கு பார்க்கலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்
 • கிரீன் டீ/ பசுமை தேநீர் பை அல்லது இலைகள்
 • ½ தேக்கரண்டி தேன்
 • ½ தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • ஒரு கப் வெந்நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. வெந்நீரில் கிரீன் டீ பையை இரண்டு நிமிடங்கள் வரை முக்கி வைக்க வேண்டும்.
 2. நீரை வடிகட்டி, அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்; சூடாக இருக்கும் போதே குடித்து விடவும்.
 3. கிரீன் டீயின்/ பசுமை தேநீரின் பொடியை, மூல நோயால்  பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தலம்; இதனை ஒரு நாளில் பலமுறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 4. மேலும் கிரீன் டீ/ பசுமை தேநீர் பையை மூலம் ஏற்பட்ட இடத்தில் சில நிமிடங்களுக்கு வைத்து எடுக்கலாம்.
எவ்வளவு அடிக்கடி இந்த செய்முறையை செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு இரண்டு கப் கிரீன் டீயை குடிக்க வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்களை காண முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

கிரீன் டீயில்/ பசுமை தேநீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள், விரைந்து மூல வியாதியை குணப்படுத்த உதவும்; இதை எடுத்துக் கொள்வதன் மூலம் வீக்கத்தை குறைக்க முடியும். மேலும் கிரீன் டீ/ பசுமை தேநீர் செரிமான இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க் உதவும் (13, 14).

பைல்ஸ் நோய்க்கான சிகிச்சை – Treatment of Piles (Hemorrhoids) in Tamil

Shutterstock

பெரும்பாலுமான நேரங்களில், பைல்ஸ் நோய் என்பது எந்த வித சிகிச்சை முறையையும் மேற்கொள்ளாமல் தானாகவே சரியாகி விடும். ஆனால், சில சமயங்களில் சில வகை பைல்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை முறைகள் தேவைப்படலாம். மூல வியாதி கொண்ட மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளான எரிச்சல், அரிப்பு, அசௌகரியம், வலி போன்றவற்றை குணப்படுத்த பைல்ஸ் நோய்க்கான சிகிச்சை உதவும்.

பைல்ஸ் நோய் என்பது தானாகவே தோன்றி தானாகவே மறையும் என்று பலரும் கூறுவார்கள்; ஆனால், சில சமயங்களில் ஏதோ ஒரு காரணத்தால் உண்டான மூல நோய் தானாக குணமாகாமல், உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அந்நிலையில் பைல்ஸ் நோயை சரி செய்ய நிச்சயம் மருத்துவ சிகிச்சை முறைகளை பின்பற்றியே ஆக வேண்டும். அப்படி பைல்ஸை குணப்படுத்த என்னென்ன மருத்துவ மற்றும் வாழ்வியல் சிகிச்சை முறைகள் உள்ளன மற்றும் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பது போன்ற விவரங்களை இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

மூல நோய் தோன்ற காரணமாக இருந்த ஆணிவேரை கண்டறிந்தால், நோயை எளிதில் களைந்து விடலாம். மூல நோய் உருவாக  முக்கிய காரணமாக இருப்பது வாழ்க்கை முறை மாற்றங்கள் தான்; வாழ்க்கை முறையை சீரமைத்தால் எல்லாம் சரியாகி விட்டும்.

பைல்ஸ் நோயை சரி செய்ய முதல் கட்டமாக மருத்துவர் வாழ்க்கை முறை மாற்றங்களை தான் பரிந்துரைப்பார்; அவற்றில் சில முக்கிய மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டயட் உணவு முறை: பைல்ஸ் நோய் என்பது குடல் அசைவுகளை சிரமப்படுத்துவதால் உண்டாகிறது; அதிகப்படியாக சிரமம் அளித்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். உணவு முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மலத்தை இளக்கி, எளிதில் வெளியேற்ற உதவும். அதிக அளவு நார்ச்சத்து அடங்கிய பழங்கள், காய்கறிகள் அல்லது முதன்மையாக தவிடு சார்ந்த காலை உணவு தானியங்களை சாப்பிடுவது போன்றவை பைல்ஸை தடுத்து, குணப்படுத்த உதவும்.

மூல வியாதி உள்ளவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் காஃபின் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடல் எடை: உடல் எடையை குறைப்பது பைல்ஸ் நோயின் தீவிரத்தை குறைக்க பயன்படும்.

பைல்ஸ் நோயை தடுக்க உடற்பயிற்சி செய்தல், மலம் கழிக்க அதிக சிரமப்படுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்; பைல்ஸை குணப்படுத்தும் முக்கிய சிகிச்சை முறைகளில் முதன்மையானது உடற்பயிற்சி தான்.

மாத்திரை, மருந்துகள்

பைல்ஸ் நோய் உள்ளவர்கள் சந்திக்கும் அறிகுறிகள் மற்றும் பிரச்சனையை போக்கி உதவிட பல்வேறு மருந்து, மாத்திரைகள் உள்ளன. பைல்ஸ் நோய் தானாகவே சரியாகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை முறைகளை பற்றி எண்ணும் முன்னர், மாத்திரை மருந்துகளை ஒரு முறை முயற்சித்து பார்க்கலாம். மாத்திரை மருந்துகளால் நோய் குணமாகவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். பைல்ஸ் நோயை குணப்படுத்த பயன்படும் மருந்து மாத்திரைகள் என்னென்ன என்று இப்பொழுது காணலாம்.

ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருந்துகள்: இம்மருந்துகள் கடைகளில் அல்லது ஆன்லைன் அங்காடிகளில் கிடைக்கின்றன. வலி நிவாரணி மருந்துகள், களிம்புகள், கிரீம்கள் மற்றும் பட்டைகள் போன்ற மருந்து – மாத்திரைகள் சிவந்து மற்றும் வீங்கிய மலவாயை குணப்படுத்த உதவுகின்றன.

OTC மருந்துகள் பைல்ஸை குணப்படுத்த உதவாது; ஆனால், பைல்ஸ் நோயின் அறிகுறிகளை சரி செய்ய உதவும். இந்த மருந்துகளை 7 நாட்களுக்கு மேல் உபயோகிக்க கூடாது; மீறி பயன்படுத்தினால், நோய் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் எரிச்சல் மற்றும் சருமம் மெல்லிதாகுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை ஒன்று சேர்த்து ஒரே நேரத்தில் உபயோகிப்பது நல்லது அல்ல.

கார்டிகோஸ்டெராய்டுகள்: இவை வலி மற்றும் அழற்சியை குறைக்க உதவுகின்றன.

மலமிளக்கிகள்: பைல்ஸ் நோய் கொண்ட ஒருவர் மலச்சிக்கல் பிரச்சனையால் சிரமப்பட்டால் அவருக்கு மருத்துவர்கள் மலமிளக்கிகளை பரிந்துரைப்பார்கள். இம்மருந்துகள் மலம் கழிப்பதில் காணப்படும் சிரமத்தை போக்கி, கீழ் மலக்குடலில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.

அறுவை சிகிச்சை முறைகள்

பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 10 -இல் 1 நபருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மூல நோய் என்பதே மிகவும் வலி மிகுந்த, அதிக சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோய்க்குறைபாடு ஆகும். இந்நிலையில் அத்தகைய நோயை குணப்படுத்த மேலும் வலி தரும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் கடினமான காரியம் தான்; ஆனால், இக்கடினமான செயலை மேற்கொண்டால் மட்டுமே உயிரை கொல்லும் மூல நோய் தரும் வலி மற்றும் மூல நோயில் இருந்து முழுமையாக விடுதலை அடைய முடியும்.

மூல வியாதியை சரி செய்ய உதவும் எளிய மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை முறைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்:

பட்டையமைப்பு (Banding): ஒரு நெளிவுத்தன்மை கொண்ட பட்டையை அதாவது ஒரு எலாஸ்டிக் பேண்ட்டை பைல்ஸ் ஏற்பட்ட இடத்தை சுற்றி, அப்பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுக்கும் வகையில் மருத்துவர் பொருத்துவார்; பின்னர் சில நாட்கள் கழித்து, மூல நோய் ஏற்பட்ட பகுதி விழுந்து விடும். நிலை நான்கிற்கு குறைவான மூல நோய் வகைகளை குணப்படுத்த இந்த சிகிச்சை முறை பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்கிளீரோதெரபி (Sclerotherapy): மூல வியாதி ஏற்பட்ட இடத்தில் இந்த மருந்து உட்செலுத்தப்படும்; இது மூல நோயை முற்றிலுமாக போக்கிவிடும். இதனை பட்டையமைப்பு சிகிச்சை முறைக்கு மாற்றாக பயன்படுத்தலாம் மற்றும் இது நிலை 2 மற்றும் 3 பைல்ஸ் நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அகச்சிவப்பு உறைதல் (Infrared coagulation): இதனை அகச்சிவப்பு விளக்கு உறைதல் என்றும் அழைப்பர்; இம்மருத்துவ சிகிச்சையில் மூல நோய் ஏற்பட்ட திசுவை எரிக்க ஒரு கருவி பயன்படுத்தப்படும். இந்த முறை நிலை 1 மற்றும் 2 பைல்ஸ் நோயை சரி செய்ய உதவுகிறது.

மூல நோய் நீக்கம் (Hemorrhoidectomy): இரத்தக்கசிவை ஏற்படுத்தும் அதிகப்படியான சதையை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி விடலாம்; இதனை பல்வேறு வழிகளில் செய்யலாம். இம்மருத்துவ சிகிச்சை முறையில் உள்ளக மயக்க மருந்து, தணிப்பு மயக்க மருந்து, ஒரு முதுகெலும்பு மயக்க மருந்து அல்லது ஒரு பொது மயக்க மருந்து போன்றவை பயன்படுத்தப்படலாம்.

மயக்க மருந்து (anesthetic): இந்த அறுவை சிகிச்சை முறை பைல்ஸை குணப்படுத்தி போக்க மிகவும் பயனுள்ள முறை ஆகும்; ஆனால், இதில் சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மலம் கழிப்பதில் பிரச்சனை போன்ற அதிக ஆபத்துகள், சிக்கல்கள் அடங்கியுள்ளன.

ஹெமோர்ஹாய்ட் ஸ்டேப்ளிங் (Hemorrhoid stapling): மூல வியாதி உண்டான திசு இரத்த ஓட்டத்தை தடுக்கும். இந்த சிகிச்சை முறை hemorrhoidectomy எனும் மூல நோய் நீக்க சிகிச்சை முறையை காட்டிலும் அதிக வலி மிகுந்ததாக இருக்கும். இந்த மருத்துவ சிகிச்சையால் மூல நோய் மீண்டும் வருதல் மற்றும் மலக்குடல் வீழ்ச்சி அதாவது ஆசன வாய் வழியாக மலக்குடல் வெளியே வருதல் போன்ற அபாயங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பைல்ஸ் நோய்க்கான முன்னெச்சரிக்கை குறிப்புகள் – Prevention Tips for Piles in Tamil

பைல்ஸ் நோய் என்பது சரி செய்யக்கூடிய/ சரியாகக்கூடிய ஒரு நோய்க்குறைபாடு தான்; மூல நோயை ஏற்பட்ட பின்னர் குணப்படுத்த உதவும் சிகிச்சை முறைகள் குறித்து மேற்கண்ட பத்தியில் படித்து அறிந்தோம்.

எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் முறைகள் இருப்பது போல், அந்நோய் ஏற்படும் முன் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை வழிகளும் நிச்சயம் இருக்கும். முன்னெச்சரிக்கை வழிகள் அல்லது முன்னெச்சரிக்கை குறிப்புகள் என்பவை வாழ்வியலுக்கு தேவையான விஷயங்களாக இருக்கின்றன; அவற்றை ஆரோக்கியத்திற்கு தேவையான விஷயங்களாகவும் பார்க்க தொடங்க வேண்டும். ஏனெனில் ஒரு நல்ல, நோய் நொடிகள் அற்ற ஆரோக்கியத்தை கட்டமைக்க நிச்சயம் முன்னெச்சரிக்கை முறைகள் தேவை. அவ்வகையில், ‘வருமுன் காப்பாதே  சிறந்தது’ – எனும் மொழிக்கிணங்க மூல வியாதி ஏற்படும் முன்னரே அதை தடுக்க உதவும் முன்னெச்சரிக்கை குறிப்புகள் என்னென்ன என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்:

 • உடலில் திரவ அளவு குறைவது தான் மிக முக்கிய பிரச்சனை ஆகும்; உடலுக்கு தேவையான அளவு நீர் பருகினால், அது உடலின் செரிமான ஆரோக்கியத்தை சீராக வைத்து, உடல் நலத்திற்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள உதவும். மேலும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது, எந்தச் சிக்கலும் இன்றி மலம் கழிக்க உதவும்.
 • ஆசன வாய் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் இரத்த நாளங்கள் வீங்கி இருந்தால், அது இயற்கையான நிலையை மீறிய அசாதரண நிலை ஆகும். ஆகவே இவ்வுடல் பகுதிகளை அதிகம் சிரமப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; ஆகையால் உடலின் கீழ் பகுதியை அதிக சிரமத்திற்கு உள்ளாக்கும் எந்த ஒரு உடற்பயிற்சியையும் செய்யாமல் இருப்பது நல்லது.
 • உடல் நலம் பெற உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.
 • அதிகளவு நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான டயட் உணவு முறையை மேற்கொள்ள வேண்டும்; அது செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும்.
 • தினமும் எளிய யோகா ஆசனங்களை பயிற்சி செய்வது, உடலின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி நிலைப்படுத்த உதவும்.

மூல நோய்க்கான தீர்வுகள் பற்றி அறிந்ததோடு, அந்நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் முன்னெச்சரிக்கை குறிப்புகள் பற்றியும் படித்து அறிந்தாயிற்று! இனி என்ன, இவ்வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி மூல நோய்க்கு  எளிதில் தீர்வு காணலாம்; இந்த மூல நோய் மருந்துகள் தரும் பலன்கள் நிச்சயம் உங்களையே ஆச்சரியப்படுத்தும்.!

மூலம் அல்லது பைல்ஸ் எனும் நோய்க்குறைபாடு, நிச்சயம் பெருந்தொல்லையாகவும், அதீத அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்; மூலத்தால் உதிரப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். இந்தப் பதிப்பில் கூறப்பட்டுள்ள மூல நோய் வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி பைல்ஸ் நோய்க்கு தீர்வு கண்டால், ஜீரோ முதல் மிகக்குறைந்தபட்ச பக்க விளைவுகள் தான் ஏற்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், எந்தவொரு மூல நோய் வீட்டு வைத்தியங்களையும் மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தப் பதிப்பில் கூறப்பட்ட மூல வியாதி வீட்டு வைத்தியங்கள் மற்றும் பைல்ஸ் நோய்க்கான தீர்வுகள் மூல நோயின் அறிகுறிகளை மற்றும் மூல நோயை குணப்படுத்த பயன்படுகின்றன. இது தவிர அல்லது நாங்கள் தவறவிட்ட, பைல்ஸை குணப்படுத்த உதவும் வேறு ஏதேனும் பைல்ஸ் நோய் வீட்டு வைத்தியங்கள், மூல நோய்க்கான தீர்வுகள் அல்லது மூல வியாதி சிகிச்சை முறைகள் பற்றி நீங்கள் அறிவீர்களா? அப்படி அறிந்தால் அது குறித்து கீழேவுள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிருங்கள்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பைல்ஸ் நோய் உள்ளவர்கள் உண்ண வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

பைல்ஸ் நோயை குணப்படுத்த மேலே கூறப்பட்ட வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பதோடு, அன்றாட வாழ்க்கையில் சில முக்கிய உணவு முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியம்; இவ்வாறு செய்வதன் மூலம் மிகுந்த வலியை ஏற்படுத்தும் பைல்ஸ் நோயில் இருந்து நிவாரணம் பெற முடியும். மூல நோயால்  பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர், அவ்வியாதியை குணப்படுத்த கீழ்க்கண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம்.

 1. மூல நோய் கொண்டவர்கள் காரமான உணவுகள் மற்றும் மிளகாய்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்; ஏனெனில் இவை மூல நோயின் அறிகுறிகளை அதிகரித்து விடலாம்.
 2. செயற்கை முறையில் சுவையூட்டப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
 3. மூலம் உள்ளவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 4. வாழைப்பழம், பிளாக் பெர்ரிகள், திராட்சை போன்ற பெர்ரி வகை பழங்கள் பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும். பெர்ரி வகை பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மலம் எளிதாக வெளியேற உதவும்; மேலும் அவை வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்த பயன்படும்.
 5. பப்பாளி, முட்டைக்கோஸ், கொலோகாசியா ஆகிய காய்கறிகள் பைல்ஸிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
 6. பையோ ஃபிளாவோனோய்டுகள் என்பவை தாவர உறுப்புகளின் வகையாகும்; இவை அழற்சியை குறைத்து இரத்த நாளங்களை நிலைப்படுத்தி, பலப்படுத்த உதவுகின்றன. இச்சத்துக்கள் சிட்ரஸ் பழங்களில் காணப்படுகின்றன மற்றும் கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் மூல வியாதிக்கு  தீர்வாக உபயோகிக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சிட்ரஸ் பழங்களை அதிகம் உண்பது மூலத்தால் ஏற்படும் வலி, எரிச்சல், இரத்தப்போக்கு ஆகியவற்றை குறைக்க பயன்படுகிறது.
 7. பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினந்தோறும் 3 லிட்டருக்கும் அதிகமான நீரை அருந்த வேண்டும். மோர், இனிப்பில்லாத பழங்கள் அல்லது காய்கறி ஸ்மூத்திகள், தேங்காய் தண்ணீர் போன்றவற்றை பருகலாம்.

மூல நோயின் அறிகுறிகள் என்னென்ன?

எல்லா நோய்களுக்கும் அவற்றை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் நிச்சயமாக இருக்கும்; அவ்வகையில் ஒருவருக்கு மூல வியாதி ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டவும் அறிகுறிகள் தோன்றும். அப்படி தோன்றும் மூல நோயின் அறிகுறிகள் ஆவன:

 1. குடல் இயக்கத்திற்கு பிறகு இரத்தம் அல்லது சளி வெளியேறுதல்
 2. மலம் கழிக்கும் போது வலி
 3. சிவந்த மற்றும் வீங்கிய ஆசன வாய்
 4. த்ரோம்போஸ்ட் வெளிப்புற மூல நோய் என்பது இரத்தம் உறைந்து கட்டியாக உருவாவதால் உண்டாகிறது

பைல்ஸ் நோயிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும் சிறந்த யோகாசனங்கள் யாவை?

மூல நோயால் உண்டாகும் அறிகுறிகளை குறைக்க தினந்தோறும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்; யோகா பயிற்சிகள் உடலின் இயக்கத்தை நிலைப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை சமநிலையில் வைக்க உதவும். மூலநோயில் இருந்து நிவாரணம் பெற, தினமும் யோகா ஆசனங்களை பயிற்சி செய்வது பெரிதும் பயன்படும்:

 1. சர்வாங்காசனம் – இதை மெழுகுவர்த்தி நிலை என்றும் அழைப்பர்; இந்த ஆசனம் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆசனவாயில் கட்டிகள் ஏற்படுவதை குறைக்க உதவும்.
 2. மாட்சி ஆசனம் –  இந்த ஆசனம் மூல நோயால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்க உதவும்; இதை மீன் நிலை என்று அழைப்பர்.
 3. பாலாசனம் – இது குழந்தை நிலை என்று அழைக்கப்படுகிறது; இது ஆசனவாயின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மற்றும் மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது.

மூல வியாதியால் வலி ஏற்படுமா?

ஆம், வலி ஏற்படும்! மலம் கழிக்க முயற்சிக்கும் பொழுது மூல வியாதி வலியை ஏற்படுத்தும். ஆனால், மலம் கழிக்க முயற்சிக்கும் பொழுது கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் நாள் முழுவதும் இலேசான வலி இருந்து கொண்டே இருக்கும்.

பைல்ஸ் நோய் வயிற்றில் தசைப்பிடிப்புகளை ஏற்படுத்துமா?

அடிவயிற்று வலி அல்லது தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் மூல நோய் கொண்டவர்களில் ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல் கொண்ட வயிறு ஆகும்.

Was this article helpful?
The following two tabs change content below.