மூங்கில் தண்டுகள் பலன்களும் பக்க விளைவுகளும் – benefits of bamboo shoots in Tamil

by StyleCraze

ஆசிய மருத்துவத்தில் மகத்தானது மூங்கில். குறிப்பாக சீனாவிலும் ஜப்பானிலும் மூங்கில் அதிகம் காணப்படுகிறது. சீன மூங்கிலை வாழ்க்கையுடன் ஒப்பிட முடியும். முதல் 5 மாதத்தில் இந்த மூங்கில் வளரவே வளராது. ஆனால் 6ஆவது மாதத்தில் இதன் உயரம் 90 அடியாக இருக்கும் என்பது உங்களுள் எத்தனை பேருக்கு தெரியும்.

மூங்கில் தண்டுகள் என்றால் என்ன? bamboo shoots in Tamil

மூங்கில் தண்டுகள், மூங்கில் தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இவைகள் மூங்கில் முளை என்றும் அழைக்கப்படுகிறது. மூங்கில் தண்டுகளை ஆசியாவில் சமையல் சுவைக்கு சேர்க்கின்றனர். இதில் அதிகமான கலோரியோ கொழுப்போ இல்லை.

மூங்கிலின் மருத்துவ குணங்கள் எவை?

 • பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்டது
 • வைரஸ் எதிர்ப்பு பண்பு கொண்டது
 • நார்ச்சத்து அதிகம் கொண்டது
 • பைட்டோ கெமிக்கல் எனப்படும் ஒருவித பண்பு கொண்டது
 • பொட்டாசியம் உள்ளதால் இதயத்துக்கு நல்லது

மூங்கிலின் பலன்கள் என்னென்ன? benefits of bamboo shoots in Tamil

1 நுரையீரல் அலெர்ஜி

நுரையீரலில் அடைப்பு இருந்தால் ‘கர்ர்’ என சத்தம் வரும். நுரையீரல் ஆரோக்கியம் நம்முடைய ஆயுளுக்கு மிக முக்கியமானது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு இந்த நுரையீரல் அலெர்ஜி அதிகம் உண்டாகிறது. மூங்கில் தண்டில் இருந்து எடுக்கப்படும் சாறு நுரையீரல் சம்பந்தமான ஆஸ்துமா, இருமல், பித்தப்பை பிரச்சனைக்கு நல்லது (1).

2. காது வலி

காது மிகவும் ஆபத்தான பகுதி. நம்மில் பலர் காதை சுத்தம் செய்ய தேங்காய் எண்ணெய் விடுவோம், பட்ஸ் பயன்படுத்துவோம். ஆனால் இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானது என்பதை நீங்கள் அறிவீரா? (2). மூங்கில் காது வலிக்கு மிகவும் நல்லது.

3. வாய் புண்

மூங்கில் தண்டுகள் வாய்ப்புண்ணுக்கு நல்லது. ஆனால் எவ்வளவு அளவு என்பதை மருத்துவரின் ஆலோசனை கேட்டு முடிவு செய்வது நல்லது.

4. வறட்டு இருமல்

மூங்கில் இலையில் டீ போட்டு குடிப்பது வறட்டு இருமலை சரி செய்யும். (3)

5. வயிற்றுப்போக்கு

மூங்கிலில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றுப்போக்குக்கு நல்லது. மூங்கில் இலைகள் வயிற்று உபாதைகளை சரி செய்ய வல்லது. (4)

6. மூலப்பிரச்சனை

மூலம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை வெளியில் சொல்வதும் அவ்வளவு சுலபம் இல்லை. தங்க மூங்கில் மூலத்துக்கு நல்லது. 2 கிராம் தங்க மூங்கில் பவுடரை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்துக்கொண்டு தினமும் இரண்டு முறை எடுத்துக்கொள்ள வேண்டும். (5)

7. ஷுகர்

மூங்கில் இலை சாறு, சர்க்கரை வியாதிக்கு நல்லது. எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூங்கில் நல்ல பலனை அளித்தது குறிப்பிடத்தக்கது. (6)

8. சிறுநீர்கட்டு

சிறுநீர் பையில் தேவையற்ற அசடுகள் தங்கும்போது இந்த சிறுநீர்கட்டு பிரச்சனை உண்டாகிறது. மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை மாத்திரை, இந்த சிறுநீர்கட்டு பிரச்சனையிலிருந்து சிறந்த தீர்வை அளிக்கிறது. (7)

9. மாதவிடாய் பிரச்சனை

ஒழுங்கற்ற மாதவிடாயை மூங்கில் இலை சாறு சரி செய்கிறது. வயிற்றுப்பிடிப்பு மற்றும் இரத்தப்போக்குக்கு கூட மூங்கில் இலை சாறு மிக நல்லது. (8)

10. தோல் நோய்

மூங்கிலில் நுண்ணுயிர் கொல்லி, அலெர்ஜி எதிர்ப்பு பண்பு, ஆன்டிபயாடிக் ஆகியவை உள்ளது. இது செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. முகத்தில் சிவந்து போதல் போன்றவைக்கு மூங்கில் மிகவும் நல்லது. (9)

11. குடற்புண்

குடலில் இருக்கும் புழுக்கள் மற்றும் வலிக்கு மூங்கில் தண்டுகள் நல்லது. மூங்கில் தண்டை சாறாக பிழிந்து குடிக்க வேண்டும். இதனால் குடலில் இருக்கும் காயங்கள் ஆற, குடலையும் சுத்தப்படுத்தும்.

12. அலெர்ஜி

மூங்கிலில் அலெர்ஜி எதிர்ப்பு பண்பும் ஆக்சிஜனேற்ற பண்பும் உள்ளதால் அலெர்ஜி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

13. காய்ச்சல்

மூங்கிலில் நுண்ணுயிர் கொல்லி, அலெர்ஜி எதிர்ப்பு பண்பு, ஆன்டிபயாடிக் இருப்பதால் காய்ச்சலை குணப்படுத்துகிறது. (9)

14. குளிரும் தன்மை

மூங்கில், உடம்பில் இருக்கும் கூடுதலான நீரை உறிஞ்ச உதவுகிறது. இதனால் குளிரும் தன்மை உடலில் கட்டுப்படுத்தப்படுகிறது. (9)

15. அக்கி எனும் தோல் நோய்

அக்கி என்பது தோல் அடுக்கில் உண்டாகும் ஒரு நோய் தொற்று (10). மூங்கிலில் இருக்கும் அலெர்ஜி எதிர்ப்பு பண்பு இதனை குணப்படுத்துகிறது.

16. பாம்பு கடி

பாம்பு கடியை அவ்வளவு அலட்சியமாக விட்டுவிட முடியாது (11). மலை வாழ் மக்கள் பாம்பு கடிக்கு மருத்துவ இலைகளையே இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றுள் ஒன்று மூங்கில்.

மூங்கில் தண்டுகளில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது? (12)

ஊட்டச்சத்துஎவ்வளவு
கார்போஹைட்ரேட்5.2 கிராம்
புரதச்சத்து2.60 கிராம்
மொத்த கொழுப்பு0.3 கிராம்
கொலஸ்ட்ரால்0 மைக்ரோ கிராம்
நார்ச்சத்து2.2 கிராம்
சர்க்கரை1.84 கிராம்
கால்சியம்8 மி.கி.
இரும்பு0.31 மி.கி.
மெக்னீசியம்4 மி.கி.
பாஸ்பரஸ்25 மி.கி.
பொட்டாசியம்78 மி.கி.
சோடியம்16 மி.கி.
துத்தநாகம்0.63 மி.கி.
தாமிரம்0.111 மி.கி.
செலினியம்0.5µg
வைட்டமின் சி1 மி.கி.
வைட்டமின் A12µg
வைட்டமின் ஈ0.91 மி.கி.
வைட்டமின் கே2.40µ கிராம்
கொழுப்பு அமிலங்கள்0.812 கிராம்
கொழுப்பு2 மி.கி.

மூங்கில் தண்டை பயன்படுத்துவது எப்படி? (13)

 • சமைத்த பிறகு மூங்கில் தண்டை பரிமாறலாம்
 • மூங்கில் தண்டை சிறுசிறு குச்சிகளாகவும், துண்டுகளாகவும் வெட்டி கொள்ளலாம்
 • கொஞ்சமாக உப்பு சேர்த்த தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு சமைக்கலாம்
 • சிக்கன் சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்
 • ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றுடன் கூட மிக்ஸ் செய்து சாப்பிடலாம்
 • காய்கறிகள் மற்றும் சிக்கனுடன் சேர்த்தும் சாப்பிடலாம்
 • அளவாக எடுத்துக்கொள்வது நல்லது

மூங்கிலை எப்படி சேமிப்பது? (13)

 • உரிக்காத மூங்கில் தண்டை பேப்பர் டவலால் சுற்றி, 2 வாரம் வரைக்கும் ஃபிரிட்ஜில் வைக்கலாம்
 • உரித்த மூங்கில் தண்டை 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே ஃபிரிட்ஜில் வைக்க முடியும்
 • சூரிய ஒளியில் பட்ட தண்டுகள், கசப்பு சுவையுடன் காணப்படும்

மூங்கில் தண்டுகளை எங்கே வாங்கலாம்?

 • ஆன்லைனில் கிடைக்கும்
 • நாட்டு மருந்து கடைகளில் கேட்டு பார்க்கலாம்

மூங்கில் தண்டுகளால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன? side effects of bamboo shoots in Tamil

 • தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்
 • தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு நல்லதல்ல
 • கர்ப்பிணி பெண்களும் மூங்கில் தண்டுகளை தவிர்க்கவும் (14)

ஒட்டுமொத்தத்தில்… மூங்கில் தண்டுகளில் இருந்து எடுக்கப்படும் சாறுகளும், மூங்கில் இலையிலிருந்து எடுக்கப்படும் சாறுகளும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனினும், உங்களுடைய மருத்துவரை ஆலோசனை செய்து அதன்பிறகு இதனை எடுத்துக்கொள்வது தேவையற்ற பக்கவிளைவுகளை தவிர்க்கும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

அடைத்து வைக்கப்பட்ட மூங்கில் தண்டுகள் ஆரோக்கியமானதா?

இதில் நார்ச்சத்து மற்றும் கலோரிகள் இருப்பதால் உணவுடன் எடுத்துக்கொள்ளலாம். மூங்கில் தண்டுகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. ஆனாலும் அளவுக்கதிகம் எடுத்துக்கொள்ள கூடாது.

மூங்கில் தண்டுகளை எவ்வளவு நேரம் வேக வைக்கலாம்?

மூடாமல் மூங்கில் தண்டுகளை வேக வைக்கலாம். 20 நிமிடங்களுக்கு உப்பு சேர்த்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதனை துண்டு துண்டாக நறுக்கி உணவுடன் சேர்க்கலாம். அடைத்து வைக்கப்பட்டு விற்கப்படும் மூங்கில் தண்டுகளை வேகவிட வேண்டிய அவசியமில்லை.

பச்சை மூங்கில் தண்டுகளை எப்படி சமைப்பது?

 • மூங்கில் மேலுள்ள அடர் நிற உறையை நீக்க வேண்டும்
 • மூங்கில் தண்டுகளை பானையில் வைக்க வேண்டும்
 • தேவையான அளவு நீர் சேர்த்து லேசாக மூட வேண்டும்
 • 2 மணி நேரம் தொடர்ந்து கொதிக்கவிட்டு, கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரும் அவ்வப்போது சேர்க்கலாம்

கருப்பு மூங்கில் சமையலுக்கானதா?

இளம் மூங்கிலை சமைக்கலாம். சுவை மற்றும் நறுமணம்  மாறாமல் இருக்க, அவ்வப்போது தண்ணீரை மாற்ற வேண்டியது அவசியம்.

அடைத்து வைக்கப்பட்ட மூங்கில் தண்டுகளின் சுவை எப்படி இருக்கும்?

மொறுமொறுவென இருக்கும்.

மூங்கில் தண்டுகள் செரிமானம் ஆக கடினமா?

முறையாக வேக வைக்கப்படாமல் சாப்பிட்டால் செரிமானம் ஆவது கடினம்.

மூங்கில் தண்டின் வாசனை வித்தியாசமாக இருக்குமா?

அழுகிய போன மூங்கில் தண்டின் வாசனை மோசமாக இருக்கும்.

மூங்கில் தண்டின் கெட்ட வாடையை போக்குவது எப்படி?

மூங்கில் தண்டில் கெட்ட வாடை வந்தால் அவரைக்காய் சேர்த்து வேக வைக்கலாம்.

மூங்கில் தண்டில் சயனைடு உள்ளதா?

பச்சை மூங்கிலில் ஒருவிதமான சயனைடு இருப்பதால் அதனை நன்றாக வேக வைக்காமல் உண்ணக்கூடாது.

மூங்கில் தண்டுகள் இரைப்பைக்கு நல்லதா?

மூங்கில் தண்டுகளில் இருக்கும் நார்ச்சத்து, செரிமான கோளாறுகளை சரி செய்யும்.

மூங்கில் தண்டுகளில் யூரிக் அமிலம் உள்ளதா?

பச்சை மூங்கிலில் யூரிக் அமிலம் உள்ளது. அதனால் சரியான வெப்பநிலையில் கொதிக்க வைக்க வேண்டியது அவசியம்.

14 Reference

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
scorecardresearch