முதுமையை போக்கி இளமையை தக்க வைக்க நெல்லிக்காய் எண்ணெய் தரும் அற்புத நன்மைகள் – Benefits of Amla oil in Tamil

by StyleCraze

நெல்லிக்காயில் நாட்டு நெல்லிக்காய் (Amla oil in Tamil), மலை நெல்லிக்காய் என இரண்டு வகைகள் உண்டு. இதில் மலை நெல்லிக்காய் எனப்படும் பெரியதாக இருக்கும் நெல்லிக்காயில் தான் சத்துகள் அதிகம் உள்ளது. இந்தியாவில் நெல்லிக்காய் சமையலுக்கு பயன்படுத்தப்படுவதோடு மட்டுமன்றி, சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆம்லா அல்லது இந்திய நெல்லிக்காய் என பரவலாக அறியப்படும் இது, மைரோபாலன் மரத்தில் இருந்து பெறப்படுகிறது. உண்ணக்கூடிய பழமான நெல்லிக்காய்  முக்கியமாக இந்தியாவிலும், பர்மாவிலும் அதிகம் காணப்படுகிறது. இதில் ஏராளமான டானின்கள் மற்றும் வைட்டமின் சி இருப்பதாக அறியப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கெம்ப்ஃபெரோல், ஃபிளாவனாய்டுகள் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இத்தனை ஆற்றல் மிக்க நெல்லிக்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கும், சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் எப்படி உதவுகிறது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெயின் பயன்கள் (benefits of amla oil in Tamil)

கூந்தல் தைலம் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவ்வளவு இருந்தும் கூட கூந்தல் ஆரோக்கியம் மேம்படாமல் இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். அது எவ்வாறு என்பதை அடுத்து காண்போம்.

1. பொடுகு தொல்லையை போக்குகிறது

நெல்லிக்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்க்கும் போது, அது உச்சந்தலையில் சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. பொடுகு தொல்லையை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் இது பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலையில் பருவை குறைக்க உதவும். (1)

2. ஆக்சிஜனேற்றிகளை கொண்டுள்ளது

உங்கள் தலைமுடியின் சுத்தத்தை மேம்படுத்த நெல்லிக்காய் எண்ணெய் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களைக் காட்டிலும் அதிகமாக போராடுகின்றன. இது உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருக்கவும், அழுக்கு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுத்தல்களிலிருந்து பாதுகாக்கவும் உதவும். (2)

3. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

அம்லாவில் உள்ள வைட்டமின் சி உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது உங்கள் இதயத்தில் தமனிகளை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாது தமனி சுவர்களை அடர்த்தியாக்குகிறது. மோசமான கொழுப்பு உடலில் அதிக அளவில் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது. (3)

4. முடி உதிர்வை குறைக்கிறது

நெல்லிக்காய் எண்ணெய் முடி உதிர்தலைக் குறைக்க உதவுவதோடு, அதன் வளர்ச்சி மற்றும் முடியின் வலிமையை மேம்படுத்த உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நெல்லிக்காய் எண்ணெயில் உள்ள சரியான ஊட்டச்சத்து மூலம், நீங்கள் விரும்பும் அளவுக்கு உங்கள் தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் பராமரிக்க முடியும். நெல்லிக்காய் எண்ணெயின் பயன்பாடு இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சமமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரு பாலினங்களுக்கும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆண்களில் கூட முடி வளர்ச்சிக்கு உதவக்கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. (4)

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நெல்லிக்காய் எண்ணெயின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உடல்நலப் பிரச்சினைகள் ஆக்ஸிஜனேற்ற சேதத்தால் ஏற்படுகின்றன. உடல் செல்கள் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும்போது, ​​அவை ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் தீங்கு விளைவிக்கும் தயாரிப்புகளை விட்டுச் செல்கின்றன. நெல்லிக்காய் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால், அந்த சேதத்தைத் தடுக்கவும் சரிசெய்யவும் உதவுகிறது. (5)

6. வயதான தோற்றம் உண்டாவதை தடுக்கிறது

Prevents the appearance of aging

Shutterstock

நெல்லிக்காய் எண்ணெயை தினமும் காலையில் தேனுடன் கலந்து குடிப்பதால் ஆரோக்கியமான, ஒளிரும் சருமம் கிடைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. (6)

7. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய் எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நல்லது. அதன் உயர் ஆக்ஸிஜனேற்ற பண்பு இதற்கு காரணமாகும். சருமத்திற்கு அம்லா எண்ணெயைப் பயன்படுத்துவது வயதான தோற்றம் உண்டாவதை குறைக்க உதவும். மேலும் தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். (7)

8. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது

நெல்லிக்காய் எண்ணெயின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளதாக ஆராய்ச்சி சான்றுகள் உள்ளன. இந்த எண்ணெய் பல நச்சுத்தன்மை வாய்ந்த தொற்றுகளுக்கு எதிராக செயல்படுவதாகஆய்வுகள் கண்டறிந்துள்ளன. நெல்லிக்காய் எண்ணெயை தினமும் பயன்படுத்துவது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதன் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டின் காரணமாக இந்த நன்மை கிடைக்கிறது.(8)

9. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காயில் உள்ள கரோட்டின் பார்வையை மேம்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தினசரி நுகர்வு ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண்புரை பிரச்சினை, உள்விழி அழற்சி ஆகியவற்றைக் குறைப்பதோடு கண்களை சிவத்தல், அரிப்பு மற்றும் தொடர் கண்ணீர் சுரப்பை தடுக்கிறது. (9)

நெல்லிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

நெல்லிக்காய் எண்ணெய் ஏராளமான டானின்கள் மற்றும் வைட்டமின் சி இருப்பதாக அறியப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கெம்ப்ஃபெரோல், ஃபிளாவனாய்டுகள் மற்றும் கேலிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Alma Nutrition Value per 100 grams
ஆற்றல்44 Kcal
கார்போஹைட்ரேட்10.18 g
புரோட்டீன்0.88 g
கொழுப்பு0.58 g
பைபர்4.3 g
வைட்டமின்கள்
Folates6 mcg
Niacin0.300 mg
Pantothenic acid0.286 mg
Pyridoxine0.080 mg
Riboflavin0.030 mg
Thiamin0.040 mg
Thiamin0.040 mg
Vitamin A290 IU
Vitamin C27.7 mg
தாதுக்கள்
பொட்டாசியம்198 mg
கால்சியம்25 mg
காப்பர்0.070 mg
அயர்ன்0.31 mg
மெக்னீசியம்10 mg
மாங்கனஸ்0.144 mg
பாஸ்பரஸ்27 mg
ஜிங்க்0.12 mg

நெல்லிக்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?

நெல்லிக்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது எளிது. இதனை உங்கள் சாதாரண கண்டிஷனருடன் வாரத்திற்கு இரண்டு முறை கலந்து பயன்படுத்தலாம்.

 • முதலில் உங்கள் உள்ளங்கையில் சிறிது அம்லா எண்ணெயை ஊற்றவும்.
 • உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்வது போல தேய்க்க வேண்டும்.
 • 15 நிமிடங்கள் வரை அப்படியே விட வேண்டும்.
 • பிறகு சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆயுர்வேத மருந்துகளில் நெல்லிக்காய்

ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றிய பண்டைய நூல்களும் நெல்லிக்காயை தெய்வீக மருந்தாகக் கருதுகின்றன. இது ரசாயனம் என்றும் அழைக்கப்படுகிறது. ரஸ்யானா என்பது மனம் மற்றும் உடல் சமநிலையை உறுதிப்படுத்தும். புத்துணர்ச்சி,  நீண்ட ஆயுள் மற்றும் முழுமையான பண்புகளைக் கொண்ட ஒரு சிறந்த மூலிகை தயாரிப்பு ஆகும். இது உடலின் மூன்று தோஷங்களான வாதம், கபாம் மற்றும் பித்தத்தை குணப்படுத்துகிறது. அனைத்து பிரபலமான ஆயுர்வேத சூத்திரங்களிலும் அம்லா ஒரு மிகச்சிறந்த மூலப்பொருள் ஆகும். இந்த சப்ளிமெண்ட்ஸ் உடனடியாக கிடைப்பது மட்டுமல்லாமல் மிகவும் மலிவு விலையிலும் கிடைக்கின்றன.

தினமும் எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்?

வழக்கமாக ஒரு நாளைக்கு 1-2 நெல்லிக்காய் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அளவுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதை பச்சையாகவோ அல்லது சாறு வடிவிலோ சாப்பிடலாம்.

நெல்லிக்காய் எண்ணெயை எப்படி உருவாக்கலாம்?

How to make gooseberry oil

Shutterstock

நெல்லிக்காய் எண்ணெய் கடையில் தான் வாங்க வேண்டும் என்றில்லை. நாமே வீட்டில் உருவாக்கிக்கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்

 • 10 நெல்லிக்காய்
 • 250 மில்லி தூய தேங்காய் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்? 

 • நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
 • ஒரு அகன்ற பாத்திரத்தில், தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
 • அதில் நெல்லி துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் இளங்கொதிவாக்கவும்.
 • எண்ணெய் இருண்ட நிறமாக மாறியதும் அடுப்பை அணைக்கவும். அதை குளிர்விக்கவும்.
 • இதனை ஒரு கண்ணாடி பாட்டில் அதை வடிகட்டி தினமும் பயன்படுத்தவும்.

நெல்லிக்காய் எண்ணெயின் நன்மைகள்

 • இந்த எண்ணெய்கள் வேர்களை எளிதில் ஊடுருவி, சிறந்த முடி வளர்ச்சியை தூண்டும். தினமும் எண்ணெயைப் பயன்படுத்துவதால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெயை எப்படி சேமிக்கலாம்?

நெல்லிக்காய் எண்ணெய் பொதுவாக நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் நுட்பத்தைப் பொறுத்து மூன்று ஆண்டுகள் வரையில் அறை வெப்பநிலையில் சேமிக்கப்படலாம். திடீரென்று துர்நாற்றம் வீசினாலோ, நிறம் அல்லது நிலைத்தன்மை மாறினால் தவிர்த்துவிட வேண்டும். அதன் காலாவதி தேதியை கடந்த ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

சில சந்தர்ப்பங்களில், இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு அசுத்தமாக இருக்கலாம் அல்லது லேபிளில் பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளைத் தவிர வேறு மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

நெல்லிக்காய் எண்ணெயை எங்கே வாங்கலாம்?

நெல்லிக்காய் எண்ணெயை ஆன்லைனில் எளிதில் பெறலாம். இது தவிர ஆயுர்வேத தயாரிப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த பல இயற்கை உணவுக் கடைகளிலும் கடைகளிலும் விற்கப்படும். சில கடைகளில் உலர்ந்த அல்லது தூளான இந்திய நெல்லிக்காயும் கிடைக்கிறது. நெல்லிக்காய் எண்ணெய் சில ஷாம்புகள் மற்றும் சூடான எண்ணெய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. நெல்லி சாறு பலவிதமான ஹேர் பவுடர்களிலும் காணப்படுகிறது. நெல்லிக்காய் எண்ணெயை வாங்கும் போது, ​​அளவை விட தரத்தைத் வைத்து தேர்வுசெய்ய வேண்டும். சிறந்த தயாரிப்புகளில் தயாரிப்பு லேபிளிலில் எல்லா தகவலும் அச்சிடப்பட்டிருக்கும்.

நெல்லிக்காய் எண்ணெயின் பக்கவிளைவுகள் (Side effects of amla oil in tamil)

 • பாதுகாப்பானது என்று கருதப்பட்டாலும்,  நெல்லிக்காய் எண்ணெயின் பின்விளைவுகள் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்படவில்லை. சிலருக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.
 • நெல்லிக்காய்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் சருமத்தில் அம்லா எண்ணெய் பயன்படுத்தினால் தோல் அழற்சியை சந்திக்க நேரிடும்.
 • நெல்லி சாற்றை விட எண்ணெயினால் தோல் மீது எதிர்வினைகள் ஏற்படலாம். உதாரணமாக, மினரல் ஆயில் தோல் எரிச்சலை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.
 • அம்லா எண்ணெய் பயன்பாடு லிச்சென் பிளானஸ் பிக்மென்டோசஸ் எனப்படும் அசாதாரண தோல் பாதிப்புடன் தொடர்புடையது.
 • லிச்சென் பிளானஸ் பிக்மென்டோசஸ் என்பது நோய் எதிர்ப்பு சக்தி, இது தோல், முடி மற்றும் நகங்களின் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
 • நெல்லிக்காய் எண்ணெயை வாய்வழியாக எடுத்துக் கொண்டால் இரத்தத்தை மெலிக்கும் மற்றும் நீரிழிவு மருந்துகளுடன் வினைபுரிவதாக அறியப்படுகிறது.

முடிவாக முடி வளர்ச்சி அடைய நிச்சயமாக நேரம் எடுக்கும். ஆனால் இந்திய நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறையை சிறிது வேகப்படுத்தலாம். முடி வளர்ச்சியை அதிகரிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் இது பாதுகாப்பனது. பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சருமம்,முடி மற்றும் உடல் நலம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இதனை நீங்களும் பயன்படுத்தி சிறந்த முடிவுகளை பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முடி வளர நெல்லிக்காய் எண்ணெய் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்?

முடி வளர்ச்சி நிச்சயமாக நேரம் எடுக்கும். ஆனால் இந்திய நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறையை சிறிது வேகப்படுத்தலாம்.

நெல்லிக்காய் எண்ணெய் நரை முடியை கருப்பாக மாற்றுமா?

நெல்லிக்காய் முடி நரைப்பதைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் முடியின் இயற்கையான கருப்பு நிறத்தை பாதுகாக்க உதவுகிறது. ஆனால் , செயற்கை முடி சாயம் போல இது நரை முடியை கருப்பு நிறமாக மாற்றாது.

நெல்லிக்காய் எண்ணெய் கூந்தலில் ஊடுருவுமா?

வேதியியல் கட்டமைப்பின் காரணமாக முடியின் உள் பகுதி வரை ஊடுருவி அதன் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவும்

நெல்லிக்காய் எண்ணெய் முடியை நேராக்க உதவுமா?

நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு வைக்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு உங்கள் தலைமுடி முற்றிலும் நேராக இருக்கும். அம்லாவும் ஷிகாகாயும் எப்போதும் கூந்தலுக்கு நல்லது.

நெல்லிக்காய் எண்ணெய் மெலனினை அதிகரிக்க செய்யுமா?

இது வைட்டமின் சி நிறைந்திருக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது உள் மற்றும் வெளிப்புறமாகப் பயன்படுத்தும்போது மெலனின் அளவை அதிகரிக்கும்.

எந்த நெல்லிக்காய் எண்ணெய் சிறந்தது?

ஆர்கானிக், குளிர் அழுத்தப்பட்ட பிராண்டுகளைத் தேர்வுசெய்ய வேண்டும். “100% தூய்மையானது” என்று குறிக்கப்பட்டு கூடுதல் சாயங்கள், வாசனை திரவியங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

9 sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.
Was this article helpful?
scorecardresearch