நீரிழிவு நோய் (அ) சர்க்கரை நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் – Diabetes Symptoms, Treatments and Home Remedies in Tamil

by StyleCraze

இன்றைய உலகில் பரவலாக ஏற்படும் நோய் எது என்று கவனித்தால், அது சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் தான்; ஒவ்வொரு வருடமும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு நபர் தனது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை நிகழ்த்தி, அவற்றை கண்காணித்து வந்தால் நிச்சயம் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் மட்டும் இன்றி, ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் கூட தங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்; இந்த பதிப்பில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து, ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த உதவும் சில குறிப்புகளை அளித்துள்ளோம். இதை படித்து பயன் அடையுங்கள்; மற்றவர் பயன் பெற பதிப்பை பரப்புங்கள்!

நீரிழிவு நோயின் வகைகள்

நீரிழிவு நோய் கீழ்க்கண்ட முறையில் வகைக்கப்படுத்தப்பட்டு உள்ளது; நீரிழிவு நோயில் உள்ள வகைகள் என்னென்ன என்று தற்பொழுது பார்க்கலாம்:

 • டைப் 1 நீரிழிவு நோய் அல்லது தீவிர தன்னிச்சையான நோயெதிர்ப்பு சர்க்கரை நோய் (SAID): இந்த வகை சர்க்கரை நோய் உடலில் தன்னிச்சையாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்களின் மீது நடைபெறும் தாக்கத்தால் ஏற்படுவது ஆகும்; இது இன்சுலினை சார்ந்த நீரிழிவு நோய், ஆரம்ப கால நீரிழிவு நோய், ஜுவெனில் நீரிழிவு நோய் ஆகிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்நோயை ஒருவரின் குழந்தை பருவத்திலேயே கண்டறிந்து விட முடியும்.
 • டைப் 2 நீரிழிவு நோய் அல்லது தீவிர இன்சுலின் – பற்றாக்குறை சர்க்கரை நோய் (SIDD): உடலின் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறன் குறைவதனால் ஏற்படுவது டைப் 2 நீரிழிவு நோய் அல்லது இன்சுலினை சாராத நீரிழிவு நோய் ஆகும்; இவ்வாறு இன்சுலினுக்கு ஏற்ற வகையில் உடலால் செயல்பட இயலாத நிலை இன்சுலின் எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது.
 • கர்ப்பகால நீரிழிவு நோய் அல்லது தீவிர இன்சுலின் எதிர்ப்பு சர்க்கரை நோய் (SIRD): இந்த வகை நீரிழிவு நோய், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ஏற்படலாம். கர்ப்ப காலத்தின் பொழுது பெண்களின் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, கர்ப்பிணிகளின் உடலால் குளுகோஸ்களை செல்களுக்கு எடுத்து செல்ல தேவையான, போதுமான இன்சுலினை சுரக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
 • இலேசான உடல் பருமன் தொடர்பான நீரிழிவு நோய் (MOD): இவ்வகை சிலரின் உடலில் இலேசான உடல் பருமன் ஏற்படும் சமயத்தில் தோன்றலாம்; ஆனால், இந்த நோயை இன்சுலின் எதிர்ப்பு என்று கூற முடியாது.
 • இலேசான வயது சார்ந்த நீரிழிவு நோய் (MARD): நமக்கு வயதாக, வயதாக – வயது முதிர்ச்சி காரணமாக, உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த இயலாத காரணத்தால் சிலருக்கு சர்க்கரை நோய் ஏற்படலாம்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

ஒருவர் தனக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.

 • அடிக்கடி தாகம் எடுத்தல்
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • அடிக்கடி பசி எடுத்தல்
 • சோர்வு/ களைப்பு
 • மங்கிய பார்வை
 • ஆறாத புண்கள்/ காயங்கள்

டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களில் மேற்கண்ட அறிகுறிகளுடன் எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்களும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களில் இங்கு கூறப்பட்ட அறிகுறிகளுடன் உணர்வின்மை மற்றும் கைகள் & பாதங்களில் கூச்ச உணர்வு போன்ற மாற்றங்களும் ஏற்படலாம்.

நீரிழிவு நோயின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்

Shutterstock

நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களின் உடலில் நோயின் பாதிப்பை தீவிரப்படுத்தும் சில காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன; அவ்வகையில் நீரிழிவு நோயின் தீவிரத்தை தூண்டும் ஆபத்து காரணிகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.

டைப் 1 நீரிழிவு நோயின் ஆபத்து காரணிகள்:

 • நீரிழிவு நோய் சார்ந்த குடும்ப மரபு/வரலாறு
 • உங்களது வயது – இது அதிகம் குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் ஏற்படுகிறது
 • புவியியல் – பூமத்திய ரேகையில் இருந்து அதிக தொலைவில் வசிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரலாம்
 • ஜீன்கள் – உடலின் ஜீன்களில் மாற்றங்கள் அல்லது ஜீன்கள் மாற்றி அமைக்கப்பட்டால் நீரிழிவு நோயின் தீவிரம் அதிகரிக்கலாம்

டைப் 1 நீரிழிவு நோயின் ஆபத்து காரணிகள்:

 • நீரிழிவுக்கு முந்தைய அல்லது உயர்ந்த இரத்த சர்க்கரை அளவு
 • உடல் பருமன்
 • குடும்ப வரலாறு/ மரபு
 • 45 வயதிற்கு மேற்பட்டவர்கள்
 • உடல் உழைப்பு இல்லாமை
 • கர்ப்ப கால நீரிழிவு நோய்
 • இனம் – ஆப்பிரிக்கர்கள் – அமெரிக்கர்கள், ஹிஸ்பானிக் அல்லது லத்தினோ அமெரிக்கர்கள், அமெரிக்க இந்தியர்கள் அல்லது அலாஸ்கா பகுதியை சேர்ந்தவர்கள்
 • பாலி சிஸ்டிக் ஓவரியன் நோய்க்குறைபாடு
 • தொப்பை/ வயிற்று சதை கொழுப்பு

சர்க்கரை நோய்க்கான மருத்துவ சிகிச்சை முறைகள்

நீரிழிவு நோயை முற்றிலுமாக குணப்படுத்த உதவும் எந்த ஒரு மருத்துவ சிகிச்சை முறையும் இதுவரை பயன்பாட்டில் இல்லை என்றே கூறலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதன் மூலம் மற்றும் மருந்துகள், இன்சுலின் ஊசிகள் ஆகியவற்றின் மூலம் உடலின் சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

டைப் 1 நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முறை

இன்சுலின் மருந்து, உடற்பயிற்சி மற்றும் டைப் 1 நீரிழிவு நோய்க்கான டயட் முறை மூலம் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கலாம்.

டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முறை

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முதலில் எடையை குறைக்க வேண்டும்; பின்னர் உடற்பயிற்சி மற்றும் டைப் 2 நீரழிவு நோய்க்கான டயட் முறை மூலம் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கலாம்.

இதர சர்க்கரை நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை முறைகள் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்நோயை கண்டறியவும், கட்டுப்பாட்டில் வைக்கவும் பல வழிமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நீரிழிவு நோய்க்கான வீட்டு வைத்தியங்கள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பலரும் மாத்திரை, மருந்து, ஊசிகளை நாடி செல்கின்றனர்; ஆனால், அப்படி செல்லும் மக்கள் உணவே மருந்து எனும் பொன்மொழியை மறந்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும். தினந்தோறும் நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாகவும், வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டும் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்பாட்டில் வைக்க முடியும்; சில சமயங்களில் சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்தவும் முடியும்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க அல்லது குணப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள் என்னென்ன என்று கீழே காணலாம்.

தீர்வு 1: பாகற்காய் அல்லது கரேலா

Shutterstock

தேவையானவை:

 • 1 பாகற்காய்
 • ஒரு சிட்டிகை உப்பு
 • ஒரு சிட்டிகை மிளகு தூள்
 • 1-2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • பாகற்காயை நன்கு கழுவி, அதை அரைத்து பாகற்காய் சாறை எடுத்துக் கொள்ளவும்
 • தயாரித்த பாகற்காயை வடிகட்ட வேண்டாம்; இல்லையேல் பாகற்காயின் நார்ச்சத்து வீணாகிவிட வாய்ப்பு உண்டு
 • இப்பாகற்காய் சாறு தயாரிக்கும் முன், பாகற்காயுடன் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு & ஒரு சிட்டிகை மிளகு தூளை சேர்த்து பாகற்காயை அரைக்கவும்
 • இவ்வாறு தயாரித்த சாறை பருகவும்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இச்சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.

இது வேலை செய்யும் விதம்:

பாகற்காயில் உள்ள நார்ச்சத்து, இரத்த – குளுக்கோஸ் பண்புகளை குறைக்க உதவும் நீரிழிவு நோய்க்கு எதிரான பொருள் மற்றும் சாரண்டின் ஆகியவை அதிகம் நிறைந்து உள்ளன (1).

தீர்வு 2: பட்டை

தேவையானவை:

 • 1 தம்ளர் சுடுநீர்
 • ½ தேக்கரண்டி பட்டை தூள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • அரை தேக்கரண்டி பட்டை பொடியை, ஒரு தம்ளர் வெந்நீரில் சேர்த்து கொள்ளவும்
 • இரண்டையும் நன்கு கலந்து பருகவும்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இந்த பானத்தை தினமும் காலையில் பருகலாம்.

இது வேலை செய்யும் விதம்:

பட்டை ஒரு நறுமண மசாலா பொருள் ஆகும்; இது பெரும்பாலும் எல்லா வகை சமையல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமான ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன (2), (3).

தீர்வு 3: வெந்தயம்

தேவையானவை:

 • 1 தம்ளர் நீர்
 • 10 கிராம்கள் வெந்தயம்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலை அதை பருகலாம்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இதை தினமும் காலையில் பருகலாம்.

இது வேலை செய்யும் விதம்:

வெந்தயம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டிய முக்கிய பொருளாகும்; இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற வேதிப்பொருட்கள் உடலின் செரிமானத்தை மெதுவாக்கி, உடல் உறிஞ்சும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் உடல் உறிஞ்சிய சர்க்கரையை சரியாக பயன்படுத்துவதை உறுதி செய்யவும் வெந்தயம் உதவுகிறது.

தீர்வு 4: கற்றாழை

Shutterstock

தேவையானவை:

 • 1 கப் சர்க்கரை சேர்க்கப்படாத கற்றாழை சாறு

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • இந்த சர்க்கரை சேர்க்கப்படாத கற்றாழை சாறை பருக வேண்டும்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இச்சாறை தினமும் 1 முதல் 2 முறை பருக வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

கற்றாழை சாறை தொடர்ந்து பருகி வருவது உடலின் இரத்தத்தில் காணப்படும் குளுக்கோஸ் அளவை சரிப்படுத்த உதவும் (4).

தீர்வு 5: நெல்லி

தேவையானவை:

 • தேவையான அளவு நெல்லிக்காய்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • நெல்லிக்காயை குறிப்பாக பெரிய நெல்லியை உண்ணலாம் அல்லது நெல்லிக்காய் சாறு தயாரித்து பருகலாம்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

நெல்லிக்காய் சாறை தினமும் கூட பருகலாம்.

இது வேலை செய்யும் விதம்:

பழங்காலத்தில் இருந்தே நெல்லிக்காய் சர்க்கரை நோய் மற்றும் சரும & தலைமுடி பிரச்சனைகளை போக்கும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது; இது உணவு உண்ட பின் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.

தீர்வு 6: நாவற்பழம்/ நாவல் பழம்

தேவையானவை:

 • நாவற்பழங்கள்
 • நாவற்பழ பொடி

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • நாவற்பழங்களை நன்கு கழுவிய பின்னர் அப்படியே உட்கொள்ளலாம்
 • நாவற்பழ விதைகளை பொடியாக்கி, அவற்றை நீர், பால் போன்றவற்றில் சேர்த்து பருகலாம்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இப்பழத்தை அல்லது இச்சாறை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

இது வேலை செய்யும் விதம்:

நாவற்பழத்தில் 82% நீர்ச்சத்தும், 14.5% கார்போஹைட்ரேட் சத்தும் நிறைந்து உள்ளன; இதில் சுக்ரோஸ் சத்து சுத்தமாக இல்லை. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் அற்புத பழம் என்று அழைக்கப்படுகிறது. உடலின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டு செயல்பாட்டினை மேம்படுத்த நாவல் பழம் அதிகம் உதவுகின்றது.

தீர்வு 7: பூண்டு

Shutterstock

தேவையானவை:

 • துண்டு துண்டாக வெட்டப்பட்ட பூண்டு

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • புதிதாக வாங்கி, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பூண்டுக்களை உங்களுக்கு பிடித்த உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
 • தினந்தோறும் காலையில் ஒரு சில பூண்டுப்பற்களை எடுத்து, தோலை உரித்து அப்படியே மென்று சாப்பிடலாம்.

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இந்த முறையை தினமும் பின்பற்ற வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

பூண்டினை நசுக்கும் பொழுது, அது அல்லிசின் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்சைமை வெளியிடுகிறது; பூண்டிலிருந்து எடுக்கப்படும் பிற பொருட்கள் மற்றும் அல்லிசின், உடலில் ஏற்பட்டுள்ள சர்க்கரை நோயை நன்கு மேலாண்மை செய்ய உதவுகிறது (5).

தீர்வு 8: வேப்பிலைகள்

தேவையானவை:

 • 20 வேப்பிலைகள்
 • அரை லிட்டர் நீர்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • 20 வேப்பிலைகளை அரை லிட்டர் நீரில் சேர்த்து, 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்
 • நீரில் சேர்க்கப்பட்ட வேப்பிலைகள் மிகவும் மிருதுவாக மாறி, நீர் பச்சை நிறத்திற்கு மாறும் வரை அதை அப்படியே வைத்திருக்கவும்
 • பின் வேப்பிலைகளை வடிகட்டி இந்நீரை சேகரித்து வைத்து கொண்டு, தேவையான நேரங்களில் பருகலாம்.

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இவ்வேப்பிலை நீரை தினமும் 1 அல்லது 2 முறை குடிக்க வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

வேப்பிலை அல்லது வேப்பிலை சாறு, வேப்பிலை நீரால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் என்பதற்கு போதிய ஆதாரம் கிடைக்கவில்லை; ஆனால், எவ்வாறு வெந்தயம் உடலின் இரத்த சர்க்கரை அளவை மட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறதோ, அதே போல் வேப்பிலையும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

தீர்வு 9: கொய்யா

Shutterstock

தேவையானவை:

 • கொய்யா பழங்கள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • கொய்யா பழங்களை புதிதாக வாங்கி, நன்கு கழுவி தோலை சீவி உட்கொள்ளுங்கள்
 • தினந்தோறும் ஒரு கொய்யா பழத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இந்த முறையை தினமும் பின்பற்ற வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

கொய்யா பழம் உடலின் சர்க்கரை சத்தை உறிஞ்சும் திறனை குறைத்து, கட்டுப்பாட்டில் வைக்கும்; இப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து உடலின் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவை குறைப்பதோடு, மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது. கொய்யாப்பழம் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

தீர்வு 10: ஓட்ஸ் உணவு

தேவையானவை:

 • 1 பௌல் சமைக்கப்பட்ட ஓட்ஸ் உணவு

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • இந்த சமைக்கப்பட்ட ஓட்ஸ் உணவினை உட்கொள்ள வேண்டும்.

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இவ்வுணவை நீங்கள் தினமும் இரு முறை உண்ண வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து உள்ளது; இவ்வுணவு உடலின் கொழுப்புச் சத்தை குறைத்து, இரத்தத்தில் காணப்படும் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்த ஓட்ஸ் உணவு உதவுகிறது (6).

தீர்வு 11: கிரீன் டீ/ பசுமை தேநீர்

தேவையானவை:

 • கிரீன் டீ/ பசுமை தேநீர் தூள்
 • 1 கப் தண்ணீர்
 • சிறிதளவு இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு (தேவையெனில்)

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • தண்ணீருடன் கிரீன் டீ தூளை சேர்த்து, கொதிக்க வைக்கவும்
 • தேநீர் நன்கு கொதித்த பின் கிரீன் டீயை பருகலாம்
 • இந்த தேநீரில், தேவையெனில் சிறிதளவு இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இத்தேநீரை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.

இது வேலை செய்யும் விதம்:

கிரீன் டீ என்றாலே உடல் எடையை குறைக்க மட்டுமே உதவும் என்று பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் கிரீன் டீ உடல் எடை குறைப்பு மட்டும் இல்லாமல், நீரிழிவு நோய், சரும கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவும். பசுமை தேநீரில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலின் சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.

தீர்வு 12: ஷிலாஜித் – சிலா சத்து பஸ்பம்

தேவையானவை:

 • ஷிலாஜித் என்று அழைக்கப்படும் சிலா சத்து பஸ்பம்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • ஆயுர்வேத கடைகளில், சித்த மருத்துவமனைகளில் கிடைக்கும் இந்த ஷிலாஜித் என்று அழைக்கப்படும் சிலா சத்து பஸ்பத்தை வாங்கிக் கொள்ளவும்.
 • ஷிலாஜித் எனும் சிலா சத்து பஸ்பத்தை தினமும் பருகும் காபி, பால், தேநீர் போன்ற பானங்களுடன் சேர்த்து பருகலாம்.

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இப்பஸ்பம் கலந்த பானத்தை தினமும் குடிக்கலாம்.

இது வேலை செய்யும் விதம்:

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த வலி மிகுந்த வழிகளை பயன்படுத்துவதை காட்டிலும், வலி ஏற்படுத்தாத ஆயுர்வேத முறைகளை பின்பற்றலாம்; இது நல்ல பலன் தரும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க முதலில் உணவு முறையை ஆயுர்வேத முறைப்படி மாற்றி அமைத்து, அதனுடன் ஷிலாஜித் எனும் ஆயுர்வேத மூலிகைகளால் உருவாக்கப்பட்ட பஸ்பத்தை உட்கொண்டு வந்தால் இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

தீர்வு 13: இஞ்சி

Shutterstock

தேவையானவை:

 • ஒரு அங்குல நீளமுள்ள இஞ்சியை துருவி வைத்து கொள்ளவும்
 • 1 கப் நீர்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • ஒரு அங்குல நீளமுள்ள, துருவிய இஞ்சியை ஒரு கப் நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்
 • கலவையை 5 நிமிடங்கள் அப்படியே வைத்து, மீண்டும் கிளறி விடவும்
 • பின் கலவையை ஆற வைத்து, கலவை ஆறியவுடன் உடனே பருகி விடவும்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இவ்வாறு தயாரிக்கும் இஞ்சி சாறை, ஒரு நாளைக்கு மூன்று முறை பருகுவது நல்ல பலன்களை அளிக்க உதவும்.

இது வேலை செய்யும் விதம்:

இஞ்சியை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், அது உடலின் இரத்த சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் அளவை சமநிலைப்படுத்த உதவும்; இஞ்சியில் இயற்கையாகவே அமைந்து இருக்கும் நீரிழிவு நோய்க்கு எதிரான எதிர்ப்பு பண்பு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி குணப்படுத்த உதவும் (7).

தீர்வு 14: கருஞ்சீரக எண்ணெய்/ கலோஞ்சி எண்ணெய்

தேவையானவை:

 • 5 மில்லி லிட்டர் கருஞ்சீரக எண்ணெய்/ கலோஞ்சி எண்ணெய்
 • 1 கப் பிளாக் டீ/கடும் தேநீர்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • 2.5 மில்லி லிட்டர் கருஞ்சீரக எண்ணெய்/ கலோஞ்சி எண்ணெயை, ஒரு கப் பிளாக் டீயுடன் சேர்க்கவும்
 • இந்த கலவையை தினமும் பருகவும்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இப்பானத்தை தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளைகளிலும் பருகி வர வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

கருஞ்சீரக விதைகள் அல்லது கலோஞ்சி (நிகெல்லா சட்டிவா) எண்ணெய் என்பது குளுக்கோஸ் கட்டுப்பாட்டிற்கு உதவும் மிகச்சிறந்த எண்ணெய் ஆகும் (8). இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்து, சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும் மருந்துகளில், இது மிகச்சிறந்த ஒன்று ஆகும்.

தீர்வு 15: கறிவேப்பிலை

தேவையானவை:

 • 8-10 கறிவேப்பிலைகள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • புதிய, ஃப்ரெஷ்ஷான கறிவேப்பிலைகளை நன்கு கழுவி வாயில் போட்டு மென்று விழுங்கவும்
 • இக்கறிவேப்பிலைகளை உங்களுக்கு விருப்பமான உணவுகளில், சாலட்களில் சேர்த்தும் உட்கொள்ளலாம்.

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

இந்த முறையை நீங்கள் தினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

கறிவேப்பிலைகள் உடலின் இன்சுலின் செயல்பாட்டை சமநிலைப்படுத்தி, இரத்த குளுக்கோஸ் அளவுகளை குறைக்க உதவுகிறது (9). மேலும் இவை உடலின் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவுவதால், உடல் எடையை குறைக்கவும், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

தீர்வு 16: வைட்டமின்கள்

Shutterstock

தேவையானவை:

 • வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே நிறைந்த உணவுகள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே நிறைந்த உணவுகளான மீன், கோழி, இறைச்சி, முட்டை, கேரட், ஆப்ரிகாட், பாகற்காய், கீரை, பாலாடைக்கட்டி, பாதாம் போன்றவற்றை உட்கொள்ளலாம்
 • வைட்டமின்கள் நிறைந்த சப்ளிமெண்ட்டுகளையும் உட்கொள்ளலாம்; ஆனால், இவற்றை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்

இதை நீங்கள் எவ்வளவு அடிக்கடி செய்ய வேண்டும்?

வைட்டமின் நிறைந்த உணவுகளை அல்லது வைட்டமின் சப்ளிமெண்ட்டுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

இது வேலை செய்யும் விதம்:

சர்க்கரை நோய் உள்ளவர்களின் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, இரத்த சர்க்கரை அளவை குறைக்க சில குறிப்பிட்ட வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவை அதிகம் உதவும் (10), (11).

சர்க்கரை நோயை கண்டறியும் முறை

ஃபாஸ்டிங் பிளாஸ்மா குளுக்கோஸ் பரிசோதனை, ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் பரிசோதனை, ரேண்டம் பிளாஸ்மா குளுக்கோஸ் பரிசோதனை ஆகிய முறைகள் மூலம் ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனை முறைகளில் முதல் இரண்டு பரிசோதனை முறைகளை 8 மணி நேர காலத்திற்கு உணவு உண்ணாமல் இருந்து மேற்கொள்ள வேண்டும்; அதாவது தூங்கி காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இப்பரிசோதனை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயின் அட்டவணை

சாதாரணமாக மனிதர்களின் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு, விரதம் இருக்கும் அல்லது உணவு உண்ணாத சமயத்தில் 72 – 99 mg/dL என்ற அளவிலும், உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் இரத்த சர்க்கரையின் அளவு 140 mg/dL என்ற அளவிலும் காணப்படும்.

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ள மனிதர்களின் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு, விரதம் இருக்கும் அல்லது உணவு உண்ணாத சமயத்தில் 126 mg/dL என்ற அளவிலும், உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் இரத்த சர்க்கரையின் அளவு 200 mg/dL என்ற அளவிலும் இருக்கும்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உடலின் இரத்த சர்க்கரை அளவுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உடலின் இரத்த சர்க்கரை அளவினை பரிசோதனை செய்யும் முறைகளின் படி, நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை குறிக்கும் சர்க்கரை அளவுகள் குறித்து அளிக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவு நோய்களை கண்டறிய உதவும் பரிசோதனை முறைகளின் பொழுது காணப்படும் இரத்த சர்க்கரை அளவு
ஃபாஸ்டிங் பிளாஸ்மா குளுக்கோஸ் பரிசோதனை

(mg/dL)

ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் பரிசோதனை

(mg/dL)

A1C

(mg/dL)

நீரிழிவு நோய்126 அல்லது அதற்கும் மேல்200 அல்லது அதற்கும் மேல்6.5 அல்லது அதற்கும் மேல்
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை100 – 125140 – 1995.7 – 6.4
சாதாரண நிலை99 அல்லது அதற்கும் கீழ்139 அல்லது அதற்கும் கீழ்சுமார் 5

சர்க்கரை நோய்க்கான உணவு முறை

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் உணவு பொருட்கள், வீட்டு வைத்தியங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து இதுவரை பார்த்து, படித்தறிந்தோம். சர்க்கரை நோயாளிகள் உண்ண வேண்டிய உணவு முறைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிப்பின் லிங்க்கை கிளிக் செய்து படித்து அறியுங்கள்.

நீரிழிவு நோய்க்கான முன்னெச்சரிக்கை/ பாதுகாப்பு குறிப்புகள்

Shutterstock

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்று இங்கு காண்போம்.

 • உங்களது உடல் எடையை அடிக்கடி கண்காணித்து கொள்ளவும்; உடல் எடை அதிகம் இருந்தால், எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்
 • உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற உடலியல் செயல்பாடுகளை அதிகரித்து கொள்ளுங்கள்
 • ஆரோக்கியமான, சமநிலையான உணவு முறையை மேற்கொள்ளவும்
 • நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளவும்

சர்க்கரை நோய்க்கான இதர குறிப்புகள்

சர்க்கரை நோயை தடுக்க உதவும் இதர குறிப்புகள் குறித்து பார்க்கலாம்:

 • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த அல்லது தடுக்க, உணவு, மருந்து முறைகள் மட்டும் இல்லாமல், வாழ்க்கை முறையையும் அதற்கேற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்.
 • உடல் எடை அதிகரித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
 • முடிந்த அளவுக்கு சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல், உணவு முறைகளில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது
 • மனஅழுத்தம் கொள்ளாமல், கவலைப்படாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயலுங்கள்
 • டயட் உணவு முறையை மேற்கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் தராமல், ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்ள முயல வேண்டும்
 • உடலின் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது, எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை அடிக்கடி பரிசோதித்து கொள்வது நல்லது.

இப்பதிப்பில் சர்க்கரை நோயை பராமரித்து, கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவு, வீட்டு வைத்திய முறைகள், சர்க்கரை நோயை கண்டறிய உதவும் பரிசோதனை முறைகள் மற்றும் பல தகவல்களை குறித்து படித்து அறிந்தோம். எந்த ஒரு உணவு அல்லது வீட்டு வைத்திய முறைகளை மேற்கொள்ளும் முன், முறையான மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நீரிழிவு நோய் குறித்தோ அல்லது நீரிழிவு நோய் மருந்துகள், நீரிழிவு நோய் பரிசோதனை முறைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால், அவற்றை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுக்கு தெரிவியுங்கள்.

Was this article helpful?
scorecardresearch