பழுப்பு அரிசியின் (கைக்குத்தல் அரிசி) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Written by StyleCraze

சாதம் சாப்பிடாமல் உங்களால் ஒரு நாள் கூட இருக்க முடியாது இல்லையா ! உங்களுக்கு உபயோகமான ஒரு தகவலை பற்றி தான் இந்த பதிப்பில் பார்க்கவிருக்கிறோம். இந்திய மக்கள் தொகையில் பாதிக்கு பாதி மக்கள் அரிசி கொண்டு சமைத்த உணவையே உண்ண அதிகம் விரும்புகின்றனர்; அது இல்லாமல் ஒரு நாள் பொழுதை கழிப்பதே மிகவும் கடினமான காரியமாக திகழ்கிறது. ஆனால், அரிசி கொண்டு சமைக்கப்படும் சோறு அல்லது சாதம் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளை கொண்டது; இதனால் மக்களின் உடலுக்கு பல பிரச்சனைகள் ஏற்படலாம். முக்கியமாக உடலின் எடை அதிகரிக்கலாம்.

இந்த பிரச்சனையை தவிர்க்கலாம் மற்றும் தினமும் அரிசியால் சமைத்த சோற்றையே உண்ணலாம் என்று கூறினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? ஆம் உண்மை தான், இதற்கு ஒரு தீர்வு உள்ளது! அது என்ன என்று யோசிக்கிறீர்களா? பழுப்பு அரிசி அதாவது பிரவுன் அரிசி தான், அந்த தீர்வு ஆகும்.

இக்காலத்தில் பிரவுன் அரிசி என்று அழைக்கப்படும் பழுப்பு அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி கொண்டு சமைக்கும் உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள், கைக்குத்தல் அரிசியின் பயன்கள் மற்றும் இதனால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா போன்ற தகவல்களை பற்றி இந்த பதிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரவுன் ரைஸ் (Brown Rice) அதாவது பிரவுன் அரிசி என்றால் என்ன?

அறிவியல் பெயர் — ஒரைசா சட்டைவா தோற்றம் — கிழக்கு இந்தியா, மியான்மர், வடக்கு வியட்நாம், தாய்லாந்து

பாலீஷ் செய்யப்படாத அதாவது திட்டமிடப்படாத மற்றும் சுத்திகரிக்கப்படாத வெள்ளை அரிசியை தான் நாம் பிரவுன் அரிசி அதாவது பழுப்பு அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி என்று அழைக்கிறோம். இந்த வகை அரிசி உமி நீக்கப்படாமல், உமியுடன் சேர்த்து பயன்படுத்தப்படும்.

பிரவுன் மற்றும் சுத்திகரிக்கப்படாத அரிசி வகை, பிரதான வெள்ளை மற்றும் பல வழிகளில் சுத்திகரிக்கப்பட்ட ஒரு அரிசி வகையை விட உயர்ந்தது. மிக முக்கியமான விஷயம் என்னவெனில், பழுப்பு அரிசியுடன் வரும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம்; வெள்ளை அரிசி சுத்திகரிப்பிற்கு உள்ளாகும் பொழுது அதிலிருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

பிரவுன் அரிசியில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், ஜிங்க், இரும்பு, செலினியம் போன்ற ஏராளமான தாதுச்சத்துக்கள் அடங்கியுள்ளன; மேலும் இதில் அத்தியாவசியமான வைட்டமின்களான தையமின் எனப்படும் வைட்டமின் பி1, ரிபோஃபிளவின் எனும் வைட்டமின் பி2, நியாசின் எனும் வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகியவை அடங்கியுள்ளன. கைக்குத்தல் அரிசி ஒரு சிறந்த புரத ஆதாரம் ஆகும் மற்றும் இதில் நார்ச்சத்தும் அடங்கியுள்ளது. கைக்குத்தல் அரிசியில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் முக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

பழுப்பு அரிசி நன்மைகள் – Brown Rice Benefits in Tamil

உணவு முறையில் பிரவுன் அரிசியை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம், சரும மற்றும் கூந்தல் நன்மைகள் கிடைக்கும்.

கைக்குத்தல் அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

அதிக ஊட்டச்சத்து கொண்ட கைக்குத்தல் அரிசியை எல்லா விதமான ஆரோக்கிய உணவு முறை தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். பழுப்பு அரிசி நன்மைகள் பட்டியலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று கீழே பார்க்கலாம்:

நன்மை 1: கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் நிறைந்த துரித உணவுகளை உண்பதால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும்; இதனை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பழுப்பு அரிசியில் உள்ள இயற்கையிலேயே நிகழும் எண்ணெய்கள், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுகளை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவும் (7).
முளைத்த பழுப்பு அரிசியில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள், கல்லீரலில் ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படும் ட்ரைகிளிசரைட்கள் அளவை குறைக்க உதவுகின்றன.

நன்மை 2: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

கைக்குத்தல் அரிசி நீரிழிவு நோய்க்கு எப்படி பயன் தரும் என்ற வியப்பா? இந்த அரிசியில் குறைவான அளவு கிளைசெமிக் இருப்பதால் அது, உடலில் இருந்து குறைந்த அளவு இன்சுலின் வெளியேறுவதால் ஏற்படும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது (12). ஒரு ஆய்வறிக்கை, சர்க்கரை நோயாளிகளின் உடலில் நீரிழிவு நோயின் வளர்ச்சி 60% குறைந்து விடும் என்று கருத்து தெரிவித்துள்ளது

நன்மை 3: உடல் எடையை பராமரித்தல்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உணவுமுறை நிபுணர் வெள்ளை அரிசி சாதத்திற்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்த அறிவுறுத்துவர்; அதிலும் சாப்பாடு உண்டு உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு, கட்டாயம் பிரவுன் அரிசி பரிந்துரைக்கப்படும். தினமும் நன்கு உடற்பயிற்சி செய்து, இந்த பழுப்பு அரிசி உணவை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கைக்குத்தல் அரிசியில் உள்ள மாங்கனீசு சத்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை ஒன்றிணைத்து கரைக்க உதவும் (13). இது குளுடாதியோன் பெரோஸிடேஸ் எனும் ஆன்டி ஆக்சிடென்ட் என்சைமின் இயக்கத்தை பெருக்க உதவுகிறது. இது உடலில் HDL கொழுப்பு அளவுகளை அதிகரித்து, குண்டாதல் பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது.

நன்மை 4: புற்றுநோய்

கைக்குத்தல் அரிசி மார்பக புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், இரத்த புற்றுநோய் போன்ற புற்றுநோய் வகைகளை எதிர்த்து போராட உதவுகிறது (14). பிரவுன் அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் திறனுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராக போராட உதவும் சிறந்த ஆயுதங்கள் ஆகும்; அரிசியில் இருக்கும் நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப் பொருட்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதம் ஆகும்.

கைக்குத்தல் அரிசியில் முக்கியமான பீனால்களான ஃபெருலிக் அமிலம், ட்ரிசின், காபிக் அமிலம் ஆகியவை கட்டுப்படுத்த முடியாத மார்பக மற்றும் மலக்குடல் பிரச்சனையை கட்டுப்படுத்த உதவுகின்றன ; பழுப்பு அரிசியில் புற்றுகட்டிகளுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது.

நன்மை 5: எலும்பு ஆரோக்கியம்

பிரவுன் அரிசியில் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க தேவையான மெக்னீசியம், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன (18). இந்த அரிசி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்க்குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மற்றும் அவை ஏற்படமால் தடுக்க உதவுகின்றன; இது பழுப்பு அரிசி நன்மைகள் பட்டியலில் முக்கியமான ஒன்று.

நன்மை 6: நரம்பு அமைப்பு

நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் இயக்கத்தை சரிப்படுத்த மற்றும் நன்னிலையில் வைக்க கைக்குத்தல் அரிசி உதவுகிறது; மூளையின் வளர்சிதை மாற்றத்தை முடுக்கி விட, பிரவுன் அரிசியில் உள்ள அத்தியாவசிய தாதுக்களான மாங்கனீசு, வைட்டமின் பி போன்றவை அவசியம் (19, 20). தசைகள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றை சரிப்படுத்த கைக்குத்தல் அரிசியில் மெக்னீசியம் பயன்படுகிறது; மேலும் இவ்வரிசி நரம்பு செல்களில் திடீரென கால்சியம் சத்து வெளியிடப்படுவதை கட்டுப்படுத்தி, நரம்புகள் திடீர் இயக்கத்தில் ஈடுபடுவதை தடுக்கிறது. இது தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வாக வைத்து, அதீத சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும்.

பிரவுன் அரிசியில் உள்ள வைட்டமின் ஈ சத்து, மூளை தொடர்பான பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.

நன்மை 7: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறீர்களா? வானிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட உங்களது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறதா? ஆம் எனில், நீங்கள் சாதாரண அரிசி சோறை விடுத்து, கைக்குத்தல் அரிசியை சாப்பிட தொடங்க வேண்டும்.

பிரவுன் அரிசியில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன; இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து, நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது (21).

நன்மை 8: இதய நோய்கள்

இதய ஆரோக்கியத்திற்கு கைக்குத்தல் அரிசி மிகவும் சிறந்தது ஆகும்; உலகளவில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய முதன்மை காரணமாக திகழ்வது கார்டியோ வாஸ்குலார் நோய் ஆகும். WHO வெளியிட்ட அறிக்கையின் படி, 2012 ஆம் ஆண்டு 17.5 மில்லியன் மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகடு கட்டமைத்தலினால் ஏற்படும் தமனி அடைப்பு பிரச்சனை, தொடர்ந்து கைக்குத்தல் அரிசியை உட்கொள்வதனால் குறைக்கப்படும் (10). இந்த அரிசியில் அதிக அளவு செலினியம் சத்து உள்ளதால், அது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் (11).

நன்மை 9: ஆஸ்துமா

குழந்தைப்பருவத்தில் இருந்து ஆஸ்துமா குறைபாடு உள்ள நபர்கள் கைக்குத்தல் அரிசியை உட்கொள்வதனால், இந்த நோய்க்குறைபாடு நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

மீன் உணவுடன் பிரவுன் அரிசி போன்ற முழுதானியங்களை உட்கொள்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனையை குறைக்கலாம் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறிகளை 50% வரை குறைக்கலாம்.

நன்மை 10: சரியான குடல் இயக்கம்

பழுப்பு அரிசியில் இருக்கும் கரையாத நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி, முறையாக மலம் வெளியேற உதவுகிறது; இந்த நார்ச்சத்தின் மூலம் உடலில் நீர்ச்சத்து கவரப்பட்டு, உடலில் அதிக நீர்ச்சத்தை சேர்ப்பதன் மூலம் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கப்படும் (23, 24).

நன்மை 11: தூக்கமின்மை

உங்களால் எட்டு மணிநேரம் உறங்க முடிகிறதா அல்லது உறக்கம் கொள்வதில் ஏதேனும் பிரச்சனையா?
இவற்றில் எந்த ஒரு பிரச்சனையை நீங்கள் சந்தித்தாலும், அதற்கு ஒரே தீர்வு பிரவுன் அரிசி மட்டுமே! இந்த அரிசியில் உள்ள ஓய்வளிக்கும் பண்புகள், ஒரு குழந்தை போல உறங்க – உடல் ஓய்வு கொள்ள உதவும். மேலும் கைக்குத்தல் அரிசியில் இருக்கும் ஹார்மோன் நல்ல தரமான உறக்கம் ஏற்பட உதவும் (16). இது நரம்புகளுக்கு ஓய்வளித்து, உறக்க சுழற்சி முறையை மேம்படுத்தும்.

நன்மை 12: பித்தப்பைகளைத் தடுக்கும்

அதிகப்படியான பித்த அமிலங்கள் சுரப்பதனால் பித்தநீர்க்கட்டிகள் உருவாகின்றன; கைக்குத்தல் அரிசியில் உள்ள கரையாத நார்ச்சத்து குடல் பகுதியில் இருந்து பித்த அமிலங்கள் சுரப்பு அளவுகளை குறைத்து, உணவு இயக்கத்தை மேம்படுத்தி, பித்த நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்க உதவும் (17).

நன்மை 13: தாய்ப்பால் அளிக்கும் மகளிருக்கு நன்மை அளிக்கும்

முளைத்த பழுப்பு அரிசி அல்லது முளைகட்டிய கைக்குத்தல் அரிசி, தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு மிகவும் பயன் தருவதாகும். தொடர்ந்து பிரவுன் அரிசியை உட்கொள்ளும் தாய்ப்பால் அளிக்கும் பெண்களில் ஏற்படும் சோர்வு, மனஅழுத்தம், மனநிலை தொந்தரவுகள் போன்றவை குறைந்து, நல்ல பலன்கள் கிடைப்பதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதனால், முறையான மருத்துவ ஆலோசனை பெற்ற பின், கைக்குத்தல் அரிசியை எடுத்துக்கொண்டு பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுதலை பெறுங்கள்!

நன்மை 14: மனஅழுத்தத்தை தடுக்கும்

முளைகட்டிய கைக்குத்தல் அரிசியில் உள்ள மனஅழுத்த எதிர்ப்பு பண்புகள் உளவியல் நோய்க்குறைபாடுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.

இது குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், கைக்குத்தல் அரிசியில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்களான கிளிசரின், GABA, குளுடாமைன் போன்றவை மனஅழுத்தம், கவலை, அழுத்தம் ஆகிய பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றன (22).

நன்மை 15: உடல்செல்களின் தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கும்

பிரவுன் அரிசியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், உடலில் உள்ள தேவையற்ற தீவிர சேதத்தை ஏற்படுத்தும் செல்களை நீக்க உதவுகின்றன (8).

இந்த அரிசியில் உள்ள சூப்பராக்ஸைட் டிஸ்முடேஸ் எனும் அத்தியாவசிய என்சைம், உடலில் உள்ள செல்கள் ஆற்றல் உற்பத்தியின் பொழுது ஏற்படும் ஆக்சிடேஷன் சேதத்தால் பாதிக்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள உதவுகின்றன (9).

நன்மை 16: நரம்பு-சீரழிவு சிக்கல்களை தடுக்கும்

முளைவிட்ட கைக்குத்தல் அரிசி என்பது அதிகமான காமா-அமினோபியூட்ரிக் அமிலத்தை கொண்டுள்ளதால், இது அல்சைமர் போன்ற நரம்பு சீர்கேடு நோய்க்குறைபாடுகளை தடுக்கஉதவுகிறது (15). முளைகட்டிய பழுப்பு அரிசி, ஒரு தீங்கு விளைவிக்கக்கூடிய ப்ரோட்டிலெண்டொபெட்டிடேஸ் எனும் என்சைமை தடை செய்ய உதவுகிறது.

நன்மை 17: கேண்டிடா ஈஸ்ட் நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்தும்

பழுப்பு அரிசியில் உள்ள குறைந்த கிளைகெமிக் மதிப்பு கேண்டிடா எனும் ஈஸ்ட் நோய்த்தொற்று பிரச்சனையை போக்க உதவுகிறது. ஈஸ்ட் தொற்று கொண்டவர்கள், சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்; பிரவுன் அரிசியில் உள்ள நார்ச்சத்து உடலின் செரிமான இயக்கத்தை மேம்படுத்தி, கேண்டிடா நோய்த்தொற்று வளர்ச்சியடைவது தடுக்க உதவுகிறது.

நன்மை 18: குழந்தைக்கு அளிக்க தகுந்த உணவு

பிரவுன் அரிசியில் உள்ள நார்ச்சத்து எளிதில் செரிமானம் அடையக்கூடியதாக இருப்பதால், இது குழந்தைகளுக்கு அளிக்க தகுந்த சிறந்த உணவாக உள்ளது. மேலும் இதில் உள்ள கால்சியம், மாங்கனீசு, செலினியம் போன்ற இதர ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. சிறு குழந்தைகளுக்கு வெள்ளை அரிசியை அளிப்பதை விட இந்த பழுப்பு அரிசியை அளிப்பது நல்லது. குழந்தைகள் ஆறு மாத வயதை கடந்த பின்னர் பிரவுன் அரிசி புட்டிங்கை அளிக்கலாம்; குழந்தைகளுக்கு பிரவுன் அரிசியை அளிக்கும் முன் முறையான மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது நல்லது.

பழுப்பு அரிசியின் சரும நன்மைகள்

Shutterstock

பழுப்பு அரிசி என்பது ஒரு உணவாக பயன்படுத்தப்படுவதை கடந்து, ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதை தாண்டி, அழகான சருமத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியில் கைக்குத்தல் அரிசி தரும் சரும நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்:

நன்மை 1: மாசு மருவற்ற சருமம்

மாசு மருவற்ற சருமத்தை பெற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவதுண்டு; அதை பெற ஒரு எளிய வீட்டு வைத்தியம் உதவும்.

கைக்குத்தல் அரிசியில் உள்ள அத்தியாவசிய தாதுக்கள் சருமத்தில் கறைகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். இந்த அரிசியில் உள்ள புரதங்கள் சக்திவாய்ந்த சுத்தப்படுத்தும் காரணியாக செயல்படுகின்றன; இந்த புரதங்கள் சருமத்தின் செல் வளர்ச்சி மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தோலை பொலிவாக்க உதவுகின்றன. மாசு மருவற்ற சருமம் பெற, கீழேயுள்ள இந்த செய்முறையை மேற்கொள்ளலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்

 • 1/2 கப் பிரவுன் அரிசி
 • 1 கப் நீர்
 • 1 பௌல்
 • சுத்தமான காட்டன் பஞ்சுகள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 1. அரிசியை நன்கு கழுவி தூசி, மாசுகளை அகற்றி விடவும்.
 2. ஒரு சுத்தமான பௌலில் அரிசியை வைத்து, பின் அதை நீர் கொண்டு நிரப்பவும்.
 3. இதை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்; அரிசியின் ஊட்டச்சத்துக்கள் நீரில் கலக்கும் வரை ஊற விடவும்.
 4. பின்பு இந்த கலவையை வடிகட்டி அரிசியை சமைக்கவும், அரிசி ஊறிய நீரை அழகு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம்.
 5. ஒரு சுத்தமான காட்டன் பஞ்சை எடுத்து இந்த அரிசி நீரில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவும்; சில நிமிடங்களுக்கு மாசாஜ் செய்யவும்.
 6. இதை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து, காய விடவும்.
 7. பின்பு இதை சாதாரணமான நீர் கொண்டு கழுவி, மெதுவாக துடைத்து விடவும்.
 8. தினமும் இந்த செய்முறையை செய்து, பிரகாசிக்கும் பொலிவை பெறலாம்.

இந்த முறையை நல்ல டோனராக பயன்படுத்தி, வெளிப்படையாக தெரியக்கூடிய தழும்புகள், துளைகளை குறைக்க உதவுகிறது.

நன்மை 2: சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கும்

பழுப்பு அரிசியில் உள்ள செலினியம் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க மற்றும் சரும அழற்சியை குறைக்க உதவுகிறது (3). கீழ்க்கண்ட இந்த பேக்கை பயன்படுத்தினால், நல்ல சருமத்தை பெறலாம்:

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்

 • 2 மேஜைக்கரண்டி பழுப்பு அரிசி
 • 1 மேஜைக்கரண்டி பிளெய்ன் யோகர்ட்நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. இந்த ஃபேஸ் மாஸ்க் செய்ய, பழுப்பு அரிசியை நன்கு மைய அரைத்து கொள்ளுங்கள்.
 2. இதில் அதாவது அரைக்கரண்டி கைக்குத்தல் அரிசி மாவில், ஒரு மேஜைக்கரண்டி யோகார்ட்டை கலந்து கொள்ளவும்.
 3. நன்கு கழுவிய முகத்தில் இந்த கலவையை தடவவும்.
 4. 10 நிமிடங்கள் வரை ஊற வைத்த பின், முகத்தை சூடான நீர் கொண்டு கழுவி விடவும்.
 5. நல்ல பலன்களை பெற, வாரத்திற்கு இருமுறை இச்செய்முறையை செய்யவும்.

நன்மை 3: முகப்பரு

பழுப்பு அரிசியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் சருமத்தை கறைகள் மற்றும் முகப்பருக்கள் இன்றி வைத்திருக்க உதவும். வெள்ளை அரிசியால் உடலில் உண்டாகும் இன்சுலின் உற்பத்தியால் சருமத்தில் சீபம் ஏற்படும்; தோலில் ஏற்படும் இந்த சீபத்தினால் பருக்கள் ஏற்படலாம். பழுப்பு அரிசி இந்த பிரச்சனையை தடுக்க உதவும்.

இந்த வகை அரிசியில் உள்ள ஆஸ்டிஜெண்ட் மற்றும் குளிர்ச்சி பண்புகள், முகப்பருக்களை குணப்படுத்த உதவுகின்றன. இது முகப்பருவால் ஏற்படும் சிவந்து போதலை குறைக்க உதவுகிறது.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்

 • 2 மேஜைக்கரண்டி கைக்குத்தல் அரிசி நீர்
 • காட்டன் பஞ்சுகள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 • முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.
 • பிரவுன் அரிசி நீரில் காட்டன் பஞ்சை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.
 • பின் அதை காய வைக்கவும்; 10 முதல் 15 நிமிடங்களுக்கு காய வைக்கவும்.
 • பின்னர் இதை மிதமான சூடு கொண்ட நீரால் கழுவவும்.
 • இந்த செய்முறையை மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்து சருமத்தில் இருந்து முகப்பருவை போக்கலாம்.

நன்மை 4: சிரங்கு

கைக்குத்தல் அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் சத்து, தோலில் ஏற்படும் சிரங்கை குணப்படுத்த உதவும். பிரவுன் அரிசி நீரில் சுத்தமான துணியை நனைத்து, தோலில் பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாக தடவவும். இந்த செய்முறையை 5 முறை செய்து பின் காய விடவும். இந்த செய்முறையை ஒரு நாளைக்கு இருமுறை என 10 நாட்களுக்கு தொடர்ந்து செய்தால், சரும குறைபாடுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

நன்மை 5: இள வயதில் முதுமை ஏற்படுவதை தடுக்கும்

கைக்குத்தல் அரிசியில் உள்ள புரதங்கள் சரும சேதத்தை சரி செய்து, தோலில் சுருக்கங்கள், தொங்கும் தோல், ஃபைன் லைன்கள் என எல்லா சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றன.

உடலில் மாறி மாறி ஏற்படும் இரத்த சர்க்கரை அளவுகள், அழுத்தத்தை ஏற்படுத்தி வயது முதிர்ச்சியை உண்டாக்கலாம்; கைக்குத்தல் அரிசியில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்கள் இரத்த சர்க்கரை அளவுகளை சரிப்படுத்தி, வயது முதிர்ச்சியை தடுக்க உதவுகின்றன. தோலில் ஏற்படும் சுருக்கங்களை போக்க, பழுப்பு அரிசியின் மீதுள்ள உமியும் கூட மிகவும் பயனுள்ள வகையில் உதவும் (2).

நன்மை 6: தடிப்புகள் மற்றும் வெப்ப எரிச்சல்களை குணப்படுத்தும்

சூரிய வெப்பத்தால் ஏற்படும் எரிச்சல் மற்றும் தடுப்புகளை குணப்படுத்த ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம் உண்டு; கைக்குத்தல் அரிசியில் உள்ள அதிகளவு அழற்சி எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சி பண்புகள், வெப்பத்தால் ஏற்படும் தடிப்புகள் – எரிச்சல்களை சரிசெய்ய உதவும் (4). இது சருமத்தை விரைவாக குணப்படுத்தி, தடிப்புகள் மாதிரியான தோல் பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. தோலில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பழுப்பு அரிசி நீரை, ஒரு நாளைக்கு ஒருமுறை தடவி வந்தால், நல்ல உடனடி பலன்கள் கிடைக்கும்.

பிரவுன் அரிசி வழங்கும் கூந்தல் நன்மைகள்

பழுப்பு அரிசியை கூந்தலை ஆரோக்கியமான நிலையில் வைத்து, பராமரிக்க உதவுகிறது; இதில் வைட்டமின் பி1, பி3, பி6, வைட்டமின் ஈ, ஃபோலசின், பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஆரோக்கியமான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். பிரவுன் அரிசி வழங்கும் கூந்தல் நன்மைகள் பற்றி கீழே பார்க்கலாம்:

நன்மை 1: சேதமடைந்த முடியை குணப்படுத்தும்

தலைமுடியின் சரியான, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன; கூந்தலின் இந்த தேவைக்கு பிரவுன் அரிசி ஒரு பொருத்தமான விஷயம் ஆகும்.

இது உச்சந்தலை மற்றும் கூந்தலின் வேர்ப்பகுதியை உடைதல் பிரச்சனையில் இருந்து பாதுகாத்து, முடி உதிர்வை போக்க உதவுகிறது (5). கைக்குத்தல் அரிசியில் உள்ள புரதங்கள் உச்சந்தலையில் செல் வளர்ச்சி மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சேதமடைந்த முடியை குணப்படுத்த உதவுகிறது.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்

 • 3-4 தேக்கரண்டி பிரவுன் அரிசி
 • 1 முட்டை
 • 1 கப் தண்ணீர்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 1. கைக்குத்தல் அரிசியை முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து கொள்ளவும் மற்றும் ஒரு கப் தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
 2. இந்த கலவையை முடியில் சேதமுள்ள இடங்களில் தடவவும்.
 3. 10 நிமிடங்களுக்கு இந்த கலவையை ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும்; இதன் மூலம் கூந்தலில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடலாம்.
 4. இந்த செய்முறையை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சேதமடைந்த முடியை சரிப்படுத்த பயன்படுத்தலாம்.

நன்மை 2: இயற்கையான கூந்தல் கண்டிஷனர்

கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஸ்டார்ச் போன்றவை தலைமுடிக்கு பொலிவை வழங்க உதவுகின்றன; இந்த பிரவுன் அரிசியை தலைமுடிக்கான இயற்கையான கண்டிஷனராக பயன்படுத்தலாம்.

உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்

 • 1 கப் கைக்குத்தல் அரிசி நீர்
 • 3-4 துளிகள் ரோஸ்மேரி/ ஜெரானியம்/ லாவெண்டர் அல்லது ஏதேனும் ஒரு அத்தியாவசிய எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 1. அத்தியாவசிய எண்ணெயை ஒரு சில துளிகள் எடுத்து, ஒரு கப் பிரவுன் அரிசி தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 2. ஷாம்பு கொண்டு முடியை அலசிய பின், இந்த கலவையை முடியில் தடவி கொள்ளவும்.
 3. இவ்வாறு தடவிய கலவையை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விடவும்.
 4. எப்பொழுதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ, அந்த நேரங்களில் இந்த செய்முறையை பின்பற்றவும்.

நன்மை 3: பொடுகு

தலையில் இருந்து தூசி போன்று பொடுகு தோள்பட்டையில் கொட்டுவது குறித்து கவலையா? இவ்வாறு கவலையில் வாடும், பொடுகு பிரச்சனையால் அவதிப்படும் மக்களுக்கு ஒரு எளிய தீர்வு உண்டு. கைக்குத்தல் அரிசியில் உள்ள அதிகப்படியான செலினியம் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகை குறைக்க உதவுகிறது; இது ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியையும் தூண்டிவிடும் (6).

புதிதாக தயாரித்த அரிசி தண்ணீர் கொண்டு உச்சந்தலையில், வாரம் இருமுறை மசாஜ் செய்யவும்; இந்த செய்முறை சரியான இரத்த ஓட்டத்தை அளித்து, முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்க உதவும்.

கைக்குத்தல் அரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு

கைக்குத்தல் அரிசியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்று முந்தைய பத்திகளில் படித்தறிந்தோம்; பழுப்பு அரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன என்று கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

 

ஊட்டச்சத்து மதிப்பு கைக்குத்தல் அரிசி வெள்ளை அரிசி 
ஆற்றல்82 கலோரிகள்68 கலோரிகள்
புரதம்1.83 g1.42 g
மொத்த கொழுப்பு0.65 g0.55 g
கார்போஹைட்ரேட்கள்17.05 g14.84 g
மொத்த உணவுமுறை நார்ச்சத்து1.1 g0.2 g
மொத்த சர்க்கரை0.16 g0.03 g
கால்சியம்2 mg5 mg
இரும்பு0.37 mg0.63 mg
சோடியம்3 mg1 mg
மொத்த நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள்0.17 g0.04 g
மொத்த டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள்0 g0 g
கொலஸ்ட்ரால்0 mg0 mg

பழுப்பு அரிசியை பயன்படுத்துவது எப்படி?

Shutterstock

கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தி பல விதமான உணவுகளை தயாரித்து உண்ணலாம்; பிரவுன் அரிசி கொண்டு சாப்பாடு, பிரைட் ரைஸ், கீர் எனும் பாயசம், புட்டு, கொழுக்கட்டை என பல்வேறு வகை உணவுகளை செய்யலாம். பழுப்பு அரிசியை கொண்டு சைவ மற்றும் அசைவ வகை பிரியாணிகளை தயாரித்தால் சுவை அற்புதமாக இருக்கும்.

பிரவுன் அரிசியின் பக்க விளைவுகள்

கைக்குத்தல் அரிசியால் ஏற்படும் நன்மைகள் பற்றி இதுவரை படித்தறிந்தோம்; இப்பொழுது பிரவுன் அரிசியால் ஏற்படும் சில தீவிர பக்க விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்:

 • சோயா, பருப்புகள், குளுடன் போன்றவை குறித்த அலர்ஜி உள்ள சில மக்களுக்கு பிரவுன் அரிசியால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம்.
 • ஆறு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைத்த கைக்குத்தல் அரிசியை பயன்படுத்த வேண்டாம்; நேரத்தை பொறுத்து, ஊட்டச்சத்துள்ள சூழலை பொறுத்து சில மைக்ரோ ஆர்கனிசம்கள் வளரலாம்.
 • பழுப்பு அரிசியை அதிகமாகவோ அல்லது பெரிய அளவுகளிலோ எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்; இல்லையேல் இதிலுள்ள அதிகப்படியான அர்செனிக் உறுப்பால், உடலுறுப்பு செயலிழப்பு, திசு சேதம், சில நேரங்களில் மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

கைக்குத்தல் அரிசியை சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கும் முன்னர், மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது; மேலும் சிறிய அளவுகளில் எடுத்துக் கொள்ள தொடங்குங்கள்!

இப்பதிப்பில் கைக்குத்தல் அரிசி பற்றிய பல தகவல்களை, பழுப்பு அரிசி நன்மைகள் பற்றி படித்து அறிந்திருப்பீர்கள்; பதிப்பு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறோம்! இப்பதிப்பு மற்றவருக்கும் பயன்பட, பதிப்பினை பகிர்ந்து உதவுங்கள்..! கைக்குத்தல் அரிசியை நீங்கள் சாப்பிட்டதுண்டா? உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? கைக்குத்தல் அரிசி பற்றி நாங்கள் அறியாத – நீங்கள் அறிந்த தகவல்களை எங்களுடன் பகிருங்கள்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 • தினமும் கைக்குத்தல் அரிசியை உட்கொள்வது சரியான நடைமுறையா?

பழுப்பு அரிசி உணவு முறையில் சேர்த்துக் கொள்ள தகுந்த ஒரு சூப்பர் உணவு ஆகும். இதனை உட்கொண்டு பழக்கமாக சில காலம் ஆகலாம்; ஆனால், ஒரு முறை பழகிவிட்டால் இதன் சுவையும், இதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய சத்துக்களும் இந்த அரிசிக்கு நம்மை அடிமையாக்கிவிடும். இதனை உட்கொள்வது ஆரோக்கியம் குறித்த மிக புத்திசாலித்தனமான நடவடிக்கை ஆகும்.

 • உடல் எடையை குறைக்க, பிரவுன் அரிசியை எடுத்துக் கொள்வது நல்லது தானா?

பழுப்பு அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உணவு உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது; மேலும் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வை அளிக்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது; பொதுவாக இந்த அரிசியை உட்கொள்ளும் நபர்களின் உடல் எடை குறைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • பழுப்பு அரிசி மிகவும் விலை உயர்ந்து காணப்படுவதேன்?

வெள்ளை அரிசிக்கு அதிக தேவை இருப்பதால், இது கைக்குத்தல் அரிசியை காட்டிலும் அதிகமாக விளைவிக்கப்படுகிறது; இதனால் பழுப்பு அரிசி மிகக்குறைவாகவே பயிரிடப்படுகிறது. விளைச்சல் குறைவாக இருப்பதால், அதன் விலை அதிகமாக உள்ளது. மேலும் பிரவுன் அரிசியின் மீது உள்ள உமி குறைந்த வாழ்நாள் கொண்டது; இதனால் வெள்ளை அரிசிகளை காட்டிலும் பிரவுன் அரிசிகள் கொஞ்ச காலம் மட்டுமே நல்ல நிலையில் இருக்கும். இதுவும் பழுப்பு அரிசி விலை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

 • கைக்குத்தல் அரிசியை விட பாசுமதி அரிசி சிறந்ததா?

அரிசி வகையை வைத்து பார்த்தால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும்; ஏனெனில் பாசுமதி அரிசி இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் இமயமலை அடிவாரங்களில் வளர்க்கப்படுகிறது. கைக்குத்தல் அரிசி அளவில் சிறியது தான்; ஆனால், இந்த அரிசி எல்லா வெள்ளை அரிசிகளை காட்டிலும் அதிக சத்து மிக்கது.

Was this article helpful?
The following two tabs change content below.