உங்களுக்கு முகப்பருக்கள் உள்ளதா.. அப்படியெனில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சோப் இதுதான் !

முகப்பரு என்பது வலி தருவது மட்டும் அல்லாமல் பல சமயங்களில் உங்கள் தன்னம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கலாம். எண்ணெய்ப்பசை சரும வகையினர் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் சோப் அவர்களுடைய சருமத்தை வறண்டு போகச் செய்வதாக நம்புகின்றனர். அப்படி அல்ல. சோப்பின் தன்மை, உங்கள் சருமத்தின் தன்மை, சோப்பில் உள்ள மூலப்பொருள்கள் போன்றவைகளை கவனித்துப் பார்த்து வாங்கினால் சரும வறட்சி என்பது சோப் மூலமாக வருவதில்லை என்பதை நீங்களே உணர்வீர்கள்.
பருக்கள் உள்ளவர்கள் எந்த மாதிரியான சோப் பயன்படுத்த வேண்டும்
பருக்கள் உள்ளவர்கள் வலிமையான மூலப்பொருள்கள் கொண்ட சோப் பயன்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என நினைக்கலாம். ஆனால் ஆயில் பிரீ என எழுதப்பட்டிருக்கும் சோப் மாத்திரமே உங்கள் அனைத்து சரும சிக்கல்களுக்கும் தீர்வாகி விடாது. சில குறிப்பிட்ட மூலப்பொருள்கள் அடங்கிய சோப் அல்லது க்ளென்சர்களை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு நலம் தரும்.
- ஆல்கஹால் இல்லாத க்ளென்சர்கள் பயன்படுத்துவது நல்லது
- அல்கலைன் குறைவாக இருக்கும் க்ளென்சர்களை தேர்ந்தெடுக்கலாம்
- சாலிசிலிக் அமிலம் உள்ள க்ளென்சர்கள் பருக்கள் உள்ள முகத்திற்கு பாதுகாப்பானது
- பென்சாயில் பெராக்ஸைடு உள்ள க்ளென்சர் அல்லது சோப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்
- பெட்ரோலாட்டம் , லைனோலின் , மினரல் ஆயில் செரமைட்ஸ் மற்றும் கிளிசரின் உள்ள சோப்கள் உங்களுக்கு பாதுகாப்பு தரும். பருக்கள் உள்ளே கிருமிகள் தாக்காமல் இருக்க செய்யும்.
Medimix Ayurvedic Classic 18 Herbs Soap
தேசம். மொழி, இனம் என்கிற பாகுபாடு இல்லாமல் பல வருடங்களாக சரும சிகிச்சைக்கு ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இதனையே தன்னுடைய வெற்றிக்கான சூத்திரமாக மாற்றியவர்கள் மெடிமிக்ஸ் நிறுவனத்தார். சாமான்ய மனிதனுக்கும் மூலிகைக் குளியல் போய் சேர உதவியவர்கள். இதில் உள்ள மூலிகைகள் பருக்கள் உள்ள சருமத்திற்கு பாதுகாப்பான பரிசுத்தத்தை தருகிறது.
நன்மைகள்
- இயற்கைப் பொருள்களால் உருவானது
- 18 மூலிகைகள் மூலப்பொருள்களாக இருக்கின்றன
- மூன்று வெவ்வேறு நறுமணங்களில் வெளியாகிறது
- உங்கள் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
Richfeel Calendula Acne Soap
கெலண்டுலா சோப் – பூக்களின் நன்மையைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் இந்த சோப் பருக்கள் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இது மேரி கோல்டு எனப்படும் பூவில் இருந்து கிடைக்கும் மென்மை நிறைந்த சாறு மூலம் தயாரிக்கப்படுகிறது. மேனிக்கு இதமானது.
நன்மைகள்
- மென்மையான முறையில் சருமத்தை சுத்தம் செய்கிறது
- சிந்தெடிக் ட்ரையிங் ஏஜென்ட்கள் இல்லை
- சரிசமமான சரும தோற்றம் கிடைக்கும்
- செல் சிதைவுகளில் இருந்து சருமத்தைக் காக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
Vaadi Herbals Becalming Tea Tree Soap Anti Acne Therapy
டீ ட்ரீ ஆயில் பருக்களுக்கு எதிராக வினை புரிவதில் சிறந்து விளங்குகிறது. அதனையே மூலப்பொருளாகக் கொண்டு இந்த சோப் வெளியாகி இருப்பது பருக்கள் கொண்டவர்களுக்கு மகிழ்வு தரலாம். காரணம் இது பருக்களை நீக்குவதோடு அதனால் ஏற்படும் வடுக்கள் , கரும்புள்ளிகள் போன்றவற்றையும் சேர்த்தே நீக்குகிறது.
நன்மைகள்
- கருந்திட்டுகள் மறைகின்றன
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
- பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறைகிறது
- சருமத்தின் ஆழம் வரை சென்று சுத்தம் செய்கிறது
- 100 சதவிகிதம் இயற்கையானது
- ISO தர சான்றிதழ் பெற்றது
- பேரபின் போன்ற ரசாயனங்கள் இல்லை
- மிருகங்களில் பரிசோதனை செய்யப்படவில்லை
குறைகள்
- எதுவும் இல்லை
SebaMed Clear Face Cleansing Bar
பருக்கள் உள்ள சருமம் கொண்டவர்களுக்காகவே மருத்துவ ரீதியாக தயாரிக்கப்பட்ட சோப் இதுதான். பருக்களை நீக்குவது மட்டும் அல்லாமல் கரும்புள்ளிகளை மறையச் செய்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் சருமத்திற்கு எரிச்சல் ஊட்டாமல் இதமான முறையில் பருக்களை குணமடையச் செய்கிறது
நன்மைகள்
- அதிகப்படியான சீபம் சுரப்பினைக் கட்டுப்படுத்துகிறது
- சருமத் துளைகளை சரி செய்கிறது
- PH 5.5 பருக்களை உருவாக்கும் பேக்டீரியாக்களைக் கொல்கிறது
- லெசித்தின், விட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஈரப்பதம் தருகின்றன
- விட்டமின் ஈ அடங்கியது
- ப்ரிசர்வேட்டிவ்கள் எதுவும் இல்லை
குறைகள்
- எதுவும் இல்லை
Neko Daily Hygiene Soap
மேற்கண்ட சோப்பானது பருக்களை உருவாக்கும் கிருமிகளைக் கொல்வதால் பருப்பிரச்னைகள் எல்லாம் விரைவாகவே மாயமாகின்றன. கூடவே வியர்வையால் ஏற்படும் உடல் நாற்றங்களையும் இந்த சோப் சரி செய்கிறது. சருமத் தொற்றுக்களைக் கூட குணமாக்குகிறது.
நன்மைகள்
- த்ரிகுளோரோகார்பனாலிட்டி அடங்கியது (tcc)
- பருக்களை உண்டாக்கும் பேக்டீரியாக்களை அழிக்கிறது
- சருமத்துவாரங்களை சரி செய்கிறது
- பேக்டீரியா மூலம் ஏற்படும் வியர்வை நாற்றத்தை நீக்குகிறது
- ரேஷஸ், கொப்புளங்கள் போன்ற சருமக் காயங்களையும் ஆற்றுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
Mankind Acne Star Soap Pack
முதலில் குறிப்பிட்டபடி பென்சாயில் பெராக்ஸைடு அடங்கிய சோப் என்றால் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். பருக்கள் உள்ள சருமத்திற்கு அவ்வளவு பாதுகாப்பு தருகிறது இந்த சோப். உங்கள் சரும நிறத்தையும் பொலிவையும் அதிகரிக்கிறது.
நன்மைகள்
- பென்சாயில் பெராக்ஸைடு அடங்கியது
- சருமத்திற்கு மென்மையானது
- கிருமிகளைக் கொல்கிறது
- சரும எரிச்சலை குணமாக்குகிறது
- காயங்களுக்கு இதமானது
குறைகள்
- எதுவும் இல்லை
TNW – The Natural Wash Handmade Charcoal Soap
சார்கோல் உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்த்தன்மையை நீக்கி சருமத்திற்கு புத்துயிர் கொடுக்க வல்லது. இது கைகளால் செய்யப்பட்ட சோப் என்பதால் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எதுவும் இதில் இல்லை. சிவந்த தோல் , தடிப்புகள் போன்றவற்றையும் இது சரி செய்கிறது
நன்மைகள்
- 100 சதவிகிதம் இயற்கையான முறையில் தயாரானது
- இயற்கையான பொருள்கள் கொண்டது
- சருமத்தில் தேங்கி உள்ள நச்சுக்களை நீக்குகிறது
- பருக்களைக் குறைக்கிறது
- பளபளப்பான முகத் தோற்றம் உறுதியாகிறது
- பக்கவிளைவுகள் இல்லாத அழகான தோற்றம் கிடைக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
Alanna Handmade Activated Charcoal and Green Tea Soap
100 சதவிகிதம் சைவ முறையில் தயாரிக்கப்பட்ட இந்த சோப் கைகளால் உருவானதால் ரசாயன பாதிப்புகள் எதுவும் இதில் இல்லை என்பது இதன் சிறப்பம்சம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கோகோ பட்டர் போன்ற பொருள்கள் இதில் அடங்கி இருக்கின்றன. சார்கோலும் க்ரீன் டீயும் பருக்களைத் தடுக்கின்றன.
நன்மைகள்
- GMP சான்றிதழ் பெற்றது
- கைகளால் தயாரானது
- இயற்கை பொருள்களால் உருவாக்கப்பட்டது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- பேரபின் இல்லை
- சல்பேட் இல்லை
- பாரம்பரியமும் நவீனமும் இணைந்த கலவை
குறைகள்
- எதுவும் இல்லை
Acnelak Pimple Care Soap
பருக்களுக்கு எதிரான பாதுகாப்பை உங்கள் சருமத்திற்கு தர வல்லது இந்த சோப். இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் தன்மை இதனை உறுதி செய்கிறது. இதில் உள்ள கற்றாழை உங்கள் சருமத்திற்கு இதமான குளுமை உணர்வைத் தருகிறது.
நன்மைகள்
- பருக்களை நீக்குகிறது
- மீண்டும் வராமல் காக்கிறது
- கற்றாழை இதம் தருகிறது
- சருமத்தில் மென்மையான உணர்வு தருகிறது
- தினமும் பயன்படுத்த ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
TNW – The Natural Wash Handmade Purifying Neem Soap For Acne
இதே நிறுவனம் மூலம் சார்கோல் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப் போலவே வேப்பிலையின் நற்குணங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சோப் இது. பருக்கள் மற்றும் ரேஷஸ் உள்ள சருமத்திற்கு இதமளிக்கும் வகையிலும் சரும சிக்கல்களை குணமாக்கும் வகையிலும் இந்த சோப் உருவாக்கப்பட்டுள்ளது.
நன்மைகள்
- பருக்களை நீக்குகிறது
- சருமத்தை மென்மையாக சுத்தம் செய்கிறது
- சருமத்தின் ஈர்ப்பதத்தைத் தக்க வைக்கிறது
- அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
- எரிச்சல்களை சிவந்து போதலையும் சரி செய்கிறது
- பேக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
Cetaphil Deep Cleansing Facial Bar for Acne-Prone Skin
பருக்கள் இல்லாத சருமமாக மாற உங்களுக்கு இந்த க்ளென்சர் சோப் பயன்படுகிறது. சரும நிபுணர்களின் பரிந்துரை இதனை உறுதி செய்கிறது. சருமத்துவார அடைப்புகளால் ஏற்படும் தடுப்புகளை நீக்குகிறது. அதிகப்படியான வியர்வை மற்றும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு இரண்டையும் கட்டுப்படுத்துவதால் இது பருக்கள் கொண்டவர்களுக்கு சிறந்த சோப் எனலாம்.
நன்மைகள்
- சரும நிபுணர்கள் பரிந்துரை செய்வது
- மென்மையாக சருமத்தை க்ளென்ஸ் செய்கிறது
- சென்சிடிவ் சரும வகையினருக்கு ஏற்றது
- வியர்வை மற்றும் பருக்கள் உருவாகும் கிருமிகளை அழிக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
Ipsa Labs Eraser Anti-Acne and Pimple Soap
உங்கள் முகத்தில் உள்ள பருக்களையும் அதன் தடயங்களையும் யாரேனும் ரப்பர் கொண்டு அழித்து விட்டால் உங்களுக்கு மகிழ்வாக இருக்கும் இல்லையா! அதைத்தான் இந்த சோப்பும் செய்வதாக வாக்களிக்கிறது. அதனாலேயே எரேசர் எனத் தன்னுடைய பெயரிலும் அதன் தன்மையைக் கொண்டிருக்கிறது.
நன்மைகள்
- பலவிதமான நன்மைகள் தருகிறது
- அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுகிறது
- பருக்களை நீக்குகிறது
- சீபம் உற்பத்தியைக் குறைக்கிறது
- பருக்களின் தடயங்களையும் நீக்குகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
முகப்பரு உள்ளவர்கள் சோப் பயன்படுத்தும் முறை
- உங்கள் முகத்தையும் கைகளையும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்
- அதன் பின் சோப்பை உங்கள் கைகளில் தேய்க்கவும்
- உங்கள் முகத்தில் மென்மையாக வட்ட வடிவமாக சோப் தேய்த்த கைகள் மூலம் மசாஜ் செய்யவும்
- மீண்டும் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும்
- உலர்ந்த பருத்தி துண்டு கொண்டு முகத்தின் ஈரத்தை மென்மையாக துடைத்து எடுக்கவும்
முடிவுரை
மேற்கண்ட சோப் வகைகளில் உங்களுக்குப் பொருத்தமான சோப் வகையினை வாங்கி பயன்படுத்துங்கள். களங்கமற்ற நிலவு போல பருக்களற்ற முகத் தோற்றம் பெற்று உங்கள் அழகைத் தன்னம்பிக்கை குறையாமல் வெளிப்படுத்துங்கள்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
