சிறுநீரக பீன்ஸின் (ராஜ்மாவின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Kidney Beans (Rajma) Benefits, Uses and Side Effects in Tamil

Written by StyleCraze

வட இந்திய மாநிலங்களில் மற்றும் சில தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமாக இருப்பது சிறுநீரக பீன்ஸ் எனும் ராஜ்மா பருப்பு தான்; தமிழகத்தின் நகர்ப்புறங்களில் மட்டுமே ராஜ்மா ஓரளவுக்கு பிரபலம் அடைந்து உள்ளது. இந்த பருப்பை சிவப்பு காராமணி என்றும் வழங்குவர்; இப்பருப்பு ஏகப்பட்ட நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிப்பை படிக்கும் வாசகர்கள், ராஜ்மா வழங்கும் நன்மைகள் தமிழக கிராமங்களை சென்றடையும் வண்ணம் பதிப்பை பரப்ப வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து இப்பதிப்பை தங்களுக்கு பரிசளிக்கிறோம். 

ராஜ்மா எனும் சிவப்பு காராமணி பருப்பு சிறுநீரக வடிவத்தில் இருப்பதால், இதனை சிறுநீரக பீன்ஸ் என்று பொதுவாக வழங்குவர்; சிறுநீரக பீன்ஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. அப்படி ராஜ்மா வழங்கும் நன்மைகள், பயன்கள் மற்றும் பலன்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் இப்பொழுது படித்து அறியலாம்.

உங்களது உடலுக்கு ராஜ்மா நல்லது என கருதப்படுவது ஏன்?

சிறுநீரக பீன்ஸில் அதிக புரத சத்து நிரம்பியுள்ளது; மனித உடலில் தசைகளை கட்டமைக்க உதவும் சில புரத வகைகள் தாவரங்களில் இருந்து தான் கிடைக்கின்றன. ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன.

சிறுநீரக பீன்ஸின் வகைகள்

ராஜ்மா என்று அழைக்கப்படும் சிறுநீரக பீன்ஸ் வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; சிறுநீரக பீன்ஸின் வகைகள் ஆவன:

 • சிவப்பு சிறுநீரக பீன்ஸ் (இது சாதாரண சிறுநீரக பீன்ஸ், இந்தியாவில் ராஜ்மா என்றும், பாகிஸ்தானில் சுர்க் லோபியா என்றும் அழைக்கப்படுகிறது)
 • இலேசான புள்ளிகள் கொண்ட சிறுநீரக பீன்ஸ் 
 • சிவப்பு நிறத்தில் இலேசான புள்ளிகளை கொண்ட சிறுநீரக பீன்ஸ்
 • வெள்ளை சிறுநீரக பீன்ஸ் (இத்தாலியில் இதனை கேன்னெல்லினி என்றும், இந்தியாவில் லோபியா என்றும், பாகிஸ்தானில் சஃபைட் லோபியா என்றும் அழைப்பர்).

ராஜ்மா வழங்கும் நன்மைகள்

சிவப்பு காராமணி என்று அழைக்கப்படும் ராஜ்மா பீன்ஸ், நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்குகிறது; ராஜ்மா உடலின் உள்ளுறுப்புகளுக்கு ஆரோக்கியத்தையும், சருமம் மற்றும் தலைமுடிக்கு அழகையும் வழங்கக்கூடியதாக இருக்கிறது. இப்பொழுது சிறுநீரக பீன்ஸ் வழங்கும் நன்மைகள் ஒவ்வொன்றையும் விரிவாக பார்க்கலாம்.

 நன்மை 1: உடல் எடை குறைத்தல்

Shutterstock

சிறுநீரக பீன்ஸில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது; பல ஆய்வறிக்கைகள் உடல் எடை குறைவதற்கு நார்ச்சத்து என்பது எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்த்தி உள்ளன. நார்ச்சத்து பசி உணர்வு ஏற்படாமல் இருக்க உதவி, உணவின் மீதான தெர்மிக் விளைவு அதாவது உணவை உடைப்பதற்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. சிறுநீரக பீன்ஸில் அதிக அளவு புரத சத்தும் நிறைந்து இருப்பதால், அது உடலில் கார்போஹைட்ரேட் அதிகம் சேர்வதை தடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. சிறுநீரக பீன்ஸில் இருந்து எடுக்கப்படும் பொருட்களில் இருந்து, ஆல்பா – அமைலேஸ் மட்டுப்படுத்திகள் என்பவற்றை தனிமைப்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மட்டுப்படுத்திகள் உடலில் ஸ்டார்ச் சத்து உறிஞ்சப்படுவதை மற்றும் உடைபடுவதை தடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது (1).

மற்றும் ஒரு ஆய்வு அறிக்கையில், ராஜ்மா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை கொண்டுள்ள மாத்திரைகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன மற்றும் உடல் எடை, உடல் நிறை மற்றும் அடிபோஸ் திசுக்களின் அளவை வெறும் 30 நாட்களுக்குள் குறைக்க உதவுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது (2).

நன்மை 2: இதய ஆரோக்கியம்

சிறுநீரக பீன்ஸ் உட்பட இதர பீன்ஸ் வகை உணவுகளை உட்கொள்வது, இதய நோய் ஏற்படும் பாதிப்பை தடுக்க உதவும் என்று கூறப்படுகிறது (3). இன்னொரு ஆய்வறிக்கையில், சிறுநீரக பீன்ஸ்களை உட்கொள்வது LDL எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, HDL எனும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்தின் பெருங்குடல் நொதித்தல், உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது மற்றும் பீன்ஸில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இச்செயல்பாட்டிற்கு பீன்ஸ் வகை உணவுகள் பெரிதும் உதவும்.

சிறுநீரக பீன்ஸில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது; இது உடலின் இரத்த அழுத்த அளவுகளை கட்டுப்படுத்த உதவும் மற்றொரு முக்கியமான சத்து ஆகும். நாம் உண்ணும் உணவுகளில் குறைவான அளவு பொட்டாசியம் சத்து இருப்பதால், பொட்டாசியம் சத்து நிறைந்த சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொண்டால், உடலுக்கு தேவையான அளவு தாது சத்துக்கள் கிடைக்கும். 

நன்மை 3: எலும்பு ஆரோக்கியம்

Shutterstock

சிறுநீரக பீன்ஸில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உடலின் எலும்புகளை பலப்படுத்த உதவி, ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குறைபாடு  ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன மற்றும் ராஜ்மாவில் காணப்படும் ஃபோலேட் உடல் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி, ஆஸ்டியோமலசியா (எலும்புகள் மென்மையாதல்), ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

சில ஆய்வுகளில் ராஜ்மா பீன்ஸ், கீல்வாதம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கிறது; இந்நன்மை நிகழ மிக முக்கிய காரணமாக திகழ்வது ராஜ்மாவில் உள்ள புரத சத்து (இவை ஓரளவு பியூரின் அளவுகளை கொண்டிருந்தாலும்) தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது (4).

நன்மை 4: புற்றுநோய்

ராஜ்மா பீன்ஸில், புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய அற்புதமான ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன மற்றும் இவற்றில் உள்ள நார்ச்சத்து, பல விதமான செரிமானம் தொடர்பான புற்றுநோய்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஃபிளாவனாய்டுகளை உட்கொள்வதும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது மற்றும் பீன்ஸில் அதிக அளவு ஃபிளாவனாய்டு சத்துக்கள் நிறைந்து இருப்பதால், அது புற்றுநோய் நோயாளிகளுக்கு அதிக நன்மை பயக்கக்கூடியது ஆகும் (5). அமெரிக்க  புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்துப்படி, சிறுநீரக பீன்ஸில் உள்ள லிக்னன்கள் மற்றும் சபோனின்கள், புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளை அதிகம் கொண்டுள்ளன (6).

நன்மை 5: மலச்சிக்கல்

சிவப்பு காராமணி எனும் ராஜ்மா, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களின் கலவையை கொண்டுள்ளது; ஆகவே இந்த சத்து உடலின் மலக்குடல்களின் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக பீன்ஸில் உள்ள நார்ச்சத்து குடல் பகுதிகளின் செயல்பாட்டை சீர்படுத்தி, உடலின் செரிமான இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

நன்மை 6: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

Shutterstock

அமெரிக்க நீரிழிவு நோய் சங்கத்தின் கருத்துப்படி, பொதுவாகவே பீன்ஸ் வகை உணவுகள் இரத்த சர்க்கரை அளவுகளை சமநிலைப்படுத்த உதவுகின்றன; குறிப்பாக இதர ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை காட்டிலும், இரத்த சர்க்கரை அளவுகளை குறைப்பதில் ராஜ்மா பீன்ஸ்கள் அதிக பங்காற்றுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது (7). இவ்வாறு சர்க்கரை அளவுகளை குறைப்பதற்கு பீன்ஸில் உள்ள சர்க்கரை சத்தும் உதவுகிறது; சிறுநீரக பீன்ஸை சாதத்துடன் சேர்த்து உட்கொள்வது, உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதை தடுக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இவ்வகை பீன்ஸில் மெதுவான கார்போஹைட்ரேட்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்; அதாவது பீன்ஸில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து, குடல் பகுதிகள் அக்கார்போஹைட்ரேட் சத்தை மெதுவாகவே உறிஞ்சும் என்று கூறுகின்றனர். இதன் மூலம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும். ராஜ்மாவில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், உடலில் சர்க்கரை அளவு உச்சத்தை அடைவதை தடுக்க உதவுகின்றன; உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால், அது சர்க்கரை நோயை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகவே, சிறுநீரக பீன்ஸை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலில் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவுகளை குறைத்து, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

நன்மை 7: கொலஸ்ட்ரால்

சிறுநீரக பீன்ஸில் ஃபைபர்ன்யா எனும் சத்து இருக்கிறது; இச்சத்துக்கள் உற்பத்தி செய்யும் அமிலத்தின் மூலம் கல்லீரலில் கொலஸ்ட்ரால் படிவது தடுத்து நிறுத்தப்படுகிறது; உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின்அளவை குறைக்க ராஜ்மா உதவுகிறது. 

ராஜ்மா பீன்ஸில் உள்ள நார்ச்சத்தும், புரதச்சத்தும் உடலின் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டில் வைத்து, உடலின் DNA மற்றும் RNA செயல்பாடுகளை விரைவுபடுத்த உதவுகின்றன.

நன்மை 8: மூளை ஆரோக்கியம்

Shutterstock

மனித மூளையின் செயல்பாடுகள் சரிவர நடைபெற வைட்டமின் கே சத்து உடலுக்கு மிகவும் அவசியம்; ஸ்ஃபிங்கோ லிப்ட்ஸ் எனும் வேதிப்பொருளும் மூளையின் செயல்பாடு மற்றும் நரம்புகளின் செயல்பாடு ஆகியவற்றிற்கு மிகவும் அவசியம் ஆகும். இந்த வேதிப்பொருளை உருவாக்க தேவையான வைட்டமின் கே சத்து ராஜ்மாவில் நிறைந்து உள்ளது மற்றும் இது தவிர மூளை செல்களின் செயற்பாட்டிற்கு அத்தியாவசியமான தேவையாக இருக்கும் தையமின் என்ற சத்தும் ராஜ்மா பீன்ஸில் அதிகம் காணப்படுகிறது.

ராஜ்மா பீன்ஸ் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுவதோடு, நினைவாற்றல் திறனையும் அதிகரிக்க உதவுகிறது.

நன்மை 9: நோய் எதிர்ப்பு சக்தி

பொதுவாகவே, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின் சி போன்ற முக்கிய சத்துக்கள் அவசியம்; உடலின்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அத்தியாவசிய சத்துக்களான ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின் சி ஆகியவை ராஜ்மாவில் நிறைந்து காணப்படுகின்றன.

ராஜ்மாவில் உள்ள இந்த சத்துக்கள் உடலில் காணப்படும் தேவையற்ற செல்கள், நோயை ஏற்படுத்தும் செல்கள் போன்றவற்றை போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. 

 நன்மை 10: இரத்த அழுத்தம்

Shutterstock

சிவப்பு காராமணி என்று அழைக்கப்படும் சிறுநீரக பீன்ஸில் பொட்டாசியம், மக்னீசியம், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன; இச்சத்துக்கள் உடலில் ஏற்படும் ஹைப்பர்டென்க்ஷனை குறைக்க உதவுகின்றன. ராஜ்மாவில் உள்ள இந்த மொத்த ஊட்டச்சத்துக்களும் உடலின் இரத்த அழுத்த அளவை முறையாக பராமரிக்க உதவுகின்றன.

ராஜ்மாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள், தமனிகள் மற்றும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்து, உடலின் இரத்த ஓட்டம் மிருதுவான மற்றும் சரியான முறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள உதவுகின்றன. 

நன்மை 11: ஆற்றலை அதிகரிக்கும்

ராஜ்மா எனப்படும் சிறுநீரக பீன்ஸில் அதிக அளவு இரும்புச்சத்து காணப்படுகிறது; இது உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரக பீன்ஸில் காணப்படும் மக்னீசியம் உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வானஉணர்வை போக்கி, சக்தியை அளிக்க உதவுகிறது.

சிவப்பு காராமணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன; மேலும் இவ்வகை பீன்ஸில் காணப்படும் ஃபோலேட் சத்து உடலில் ஒத்த கட்டிகள் உருவாவதை தடுத்து, பக்கவாத பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

நன்மை 12: உடலை கட்டமைக்க உதவும்

சிறுநீரக பீன்ஸில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சத்துக்கள் இருப்பதால், அவை உடலுக்கு ஆற்றலை அளிக்க உதவுகின்றன. ஆகவே ராஜ்மா பீன்ஸ் சேர்த்த  உணவுகளை உட்கொள்ளுங்கள்; ஆனால், உடற்பயிற்சி செய்த பின், உடனடியாக உணவு உட்கொள்வதை தவிருங்கள். உடற்பயிற்சி செய்த பின் எளிய கார்போஹைட்ரேட்டுகளை பெற பீன்ஸ் வகை உணவு ஒரு நல்ல தேர்வு ஆகும்; பீன்ஸில் உள்ள புரத சத்து, உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை அளிக்க பயன்படுகிறது. BCAAs (branched chain amino acids) எனும் கிளைகள் கொண்ட சங்கிலி அமினோ அமிலங்களை அளிக்கும் அதிக புரத சத்து கொண்ட உணவுகள் மற்றும் 2.5 கிராம்கள் லெஸ்சின் ஆகியவற்றை உடற்பயிற்சி செய்த 30 நிமிடங்களுக்கு பின் எடுத்துக் கொள்வது உடலின் தசைகளை கட்டமைக்க உதவி, சிறந்த உடற்கட்டு கொண்ட உடலை பெற உதவுகிறது; இந்த ஒரு குறிப்பிட்ட பண்பு சிறுநீரக பீன்ஸில் இல்லாமலும் கூட இருக்கலாம்.

ராஜ்மா பீன்ஸ்கள், அதிக கலோரி சத்தை கொண்டவை; இவை உடலை கட்டமைக்க விரும்பும் நபர்களுக்கு ஏற்ற ஒரு உணவு ஆகும். சிவப்பு காராமணி பீன்ஸில் உள்ள மக்னீசியம், புரத தொகுப்பில் முக்கிய பங்கு வகித்து, உடலின் தசைகள் சுருங்கவும், ஓய்வு பெறவும் உதவுகிறது.

நன்மை 13: கர்ப்ப காலத்திற்கு நல்லது

Shutterstock

சிறுநீரக பீன்ஸில் உள்ள புரதம், இரும்பு, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும் (8). கர்ப்ப காலத்தில் உங்களது இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்; ஆகவே, கர்ப்பிணி பெண்கள் அதிக ஹீமோகுளோபினை பெற நிறைய இரும்புச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் கருவில் வளரும் குழந்தையின் அறிவாற்றல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு இரும்பு, ஃபோலேட் அதாவது போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன.

நன்மை 14: குழந்தைகளுக்கு நல்லது

சிறுநீரக பீன்ஸில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன; ராஜ்மாவில் கால்சியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அதிக அளவு இருப்பதால், அவை குழந்தைகளின் உடலில் எலும்பை பலப்படுத்த உதவுகின்றன. 

ராஜ்மா எனும் சிறுநீரக பீன்ஸில் காணப்படும் புரத சத்து, குழந்தைகளின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்; ராஜ்மாவில் உள்ள ஃபோலேட் எனும் போலிக் அமில சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

நன்மை 15: தோல் மற்றும் முடி ஆரோக்கியம்

Shutterstock

சிறுநீரக பீன்ஸில் நிறைந்துள்ள ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து, உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது; இந்த துத்தநாக சத்தினை வைட்டமின் பி6 என்றும் வழங்குவர். ஜிங்க் சத்து நிறைந்த ராஜ்மாவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது, உடலின் தோல் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவும்; சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரக பீன்ஸில் உள்ள துத்தநாக சத்து பயன்படுகிறது. 

மேலும் வயது முதிர்ச்சியால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளை தடுத்து, தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க சிறுநீரக  பீன்ஸ் உதவுகிறது.

ராஜ்மாவின் (சிவப்பு காராமணியின்) ஊட்டச்சத்து மதிப்பு

சிறுநீரக பீன்ஸ் என்று அழைக்கப்படும் ராஜ்மா வழங்கும் நன்மைகளை பற்றி இதுவரை படித்தறிந்தோம்; ராஜ்மாவில் எக்கச்சக்க நன்மைகளை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதாக நாம் படித்தோம்.

இப்பொழுது ராஜ்மாவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, இச்சத்துக்கள் எந்த அளவில் காணப்படுகின்றன என்பது போன்ற தகவல்களை இங்கு காணலாம். 

ஊட்டச்சத்துக்கள்RDA -இன் சதவீதம்
கலோரிகள் 127
மொத்த கொழுப்பு (0.5 கிராம்)0%
நிறைவுற்ற கொழுப்பு (0.1 கிராம்)0%
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு (0.3 கிராம்)
மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு (0 கிராம்)
கொலஸ்ட்ரால் (0 மில்லி கிராம்)0%
சோடியம் (1 மில்லி கிராம்)0%
பொட்டாசியம் (405 மில்லி கிராம்)11%
மொத்த கார்போஹைட்ரேட் (23 கிராம்)7%
உணவு நார் (6 கிராம்)24%
சர்க்கரை (0.3 கிராம்)
புரதம் (9 கிராம்)18%
வைட்டமின் ஏ0%
வைட்டமின் சி2%
கால்சியம்3%
இரும்பு12%
வைட்டமின் டி0%
வைட்டமின் பி -65%
வைட்டமின் பி -120%
மெக்னீசியம்10%
ஒவ்வொரு 100 கிராமிற்கான அளவு

ன அளவு

சிறுநீரக பீன்ஸை எப்படி பயன்படுத்த வேண்டும்?

சிறுநீரக பீன்ஸினால் ஏற்படும் நன்மைகள், பயன்கள், அதில் உள்ள ஊட்டச்சத்து  விவரங்கள் குறித்து படித்து அறிந்தோம். இப்பொழுது ராஜ்மாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எப்படி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

 • சாலட்கள்  

சிறுநீரக பீன்ஸ்களை துருக்கி மிளகாய், தக்காளி, லேட்டஸ், சோளம், சால்சா, அவகேடோ ஆகியவற்றுடன் சேர்த்து, ஒரு ஆரோக்கியமான சாலட் தயாரித்து உட்கொள்ளலாம்; மேலும் ராஜ்மா, பாஸ்தா, பச்சை வெங்காயம், நறுக்கிய புரோக்கோலி, நறுக்கிய தக்காளி, கொழுப்பு இல்லாத இத்தாலியன் ட்ரெஸ்ஸிங் சாஸ் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து ஓர் ஆரோக்கியமான பாஸ்தா சாலட் செய்து சாப்பிடலாம்.

 • சூப்கள் 

ஆரோக்கியமான சூப் மற்றும் ஸ்டியூ வகைகளை தயாரிக்க ராஜ்மா எனும் சிறுநீரக பீன்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். ராஜ்மாவை, காரமான மிளகாய், தக்காளி, சோளம், பிளாக் பீன்ஸ்,, கொத்தமல்லி, அவகேடோ, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பெர்ரி வகைகள் அல்லது இறைச்சி வகையறாக்களுடன் சேர்த்து ஒரு அருமையான சூப் தயாரித்து பருகலாம்.

 • முக்கிய உணவுகள் 

சிறுநீரக பீன்ஸ்களை கொண்டு சாசேஜ், குழம்பு, கூட்டு மற்றும் பிற வித்தியாசமான உணவு வகைகளை தயாரித்து உண்ணலாம்; ராஜ்மா கொண்டு தயாரிக்கப்படும் குழம்புடன் சாதம் அல்லது சப்பாத்தி சேர்த்து உண்டால், அதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

 • சாஸ் அல்லது டிப்கள் 

ராஜ்மாவை, சால்சா, இலேசான புளிப்பு கிரீம், பச்சை வெங்காயம், கொழுப்பு குறைந்த பாலாடைக்கட்டி, நறுக்கிய தக்காளி ஆகியவை சேர்த்து ஒரு சுவையான சாஸ் அல்லது டிப் வகை உணவு தயாரித்து சாப்பிடலாம். இவ்வாறு தயாரித்த டிப்பில் கொத்தமல்லி, எலுமிச்சை ஆகியவற்றை சேர்த்து, நாச்சோஸ், சிப்ஸ் போன்ற உணவுகளை டிப்பில் தொட்டு சாப்பிடலாம். சிறுநீரக பீன்ஸை வேக வைத்து, அரைத்து கூழாக்கி, அதனுடன் இலேசான கிரீம் பாலாடைக்கட்டி மற்றும் சால்சா சேர்த்தும் டிப் தயாரிக்கலாம்.

சிறுநீரக பீன்ஸின் பக்க விளைவுகள்

Shutterstock

உலகில் படைக்கப்பட்ட பொருட்கள் அத்தனைக்கும் இரு பண்பு, இரு முகம் இருக்கும்; ஒரு பொருளின் இரு பக்கம், இரு விதமான பண்புகளையும் அறிந்த பின்னரே அதை பயன்படுத்த தொடங்க வேண்டும். அவ்வகையில் சிறுநீரக பீன்ஸ் வழங்கும் பல நன்மைகளை பற்றி இதுவரை பார்த்து, படித்து அறிந்தோம். இனி ராஜ்மாவால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளை பற்றி பார்ப்போம்:

 • ஹேமக்குளூட்டினின் விஷம்

சிறுநீரக பீன்ஸில் உள்ள ஹேமக்குளூட்டினின் என்பது ஒரு ஆன்டிபாடி ஆகும்; இது இரத்த சிவப்பு செல்களை கட்டியாக மாறுவதற்கு காரணம் ஆகலாம். இந்த ஹேமக்குளூட்டினின் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்பட்டால், அதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், அடிவயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற நோய்க்குறைபாடுகள் ஏற்படலாம். மேலும் இந்த விஷத்தன்மை ஏற்படுத்தும் ஹேமக்குளூட்டினின் எனும் பொருள் சமைக்கப்படாத, பச்சையான ராஜ்மாவில் தான் உள்ளது; சமைத்த உணவில் இவ்விஷத்தன்மை நீங்கிவிடும்.

 • செரிமான கோளாறுகள்

ராஜ்மா பீன்ஸில் உள்ள நார்ச்சத்து இரண்டு வழிகளில் வேலை செய்யலாம். ஒன்று உடலுக்கு நன்மை தரும்; இன்னொரு விதமான செயல்பாடு என்னெவெனில், அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உட்கொள்ளப்பட்டால், உடலின் குடல் பகுதிகளில் அடைப்பு, வாயு பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.

 • புற்றுநோய் ஆபத்து

அளவுக்கு அதிகமாக ஃபோலேட் சத்தை உட்கொண்டால், அது புற்றுநோயை ஏற்படுத்தலாம்; தனி நபர்கள் ஒரு நாளைக்கு 800 mcg அளவு ஃபோலேட்டை (RDA மதிப்பு 400 mcg) உட்கொண்டால், அவர்களில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன.

 • உடலுறுப்பு சேதம்

சிவப்பு காராமணியில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு நன்மையை அளித்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அதனால் இதயம் மற்றும் மூளை போன்ற உடலுறுப்புகளில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட உணவுகளை பிடிக்கும்; சிலவற்றை பிடிக்காது. ஆனால், அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு தங்களது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகள் எதுவாக இருந்தாலும், விருப்பு வெறுப்புகளை விலக்கி – ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது உடலுக்கு நன்மை தரும். அவ்வகையில் ராஜ்மா போன்ற பீன்ஸ் வகைகள் அளிக்கும் அற்புத நன்மைகளை பெற அவற்றை அடிக்கடி உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

எந்த ஒரு உணவையும் புதிதாக உட்கொள்ள தொடங்கும் முன், அந்த ஒரு குறிப்பிட்ட உணவால் உடலில் ஒவ்வாமை ஏற்படுமா என்பதை ஆராய்ந்து, மருத்துவரிடம் ஒருமுறை கலந்தாலோசித்த பின், அவ்வுணவை உட்கொள்வது சாலச்சிறந்தது. ராஜ்மா எனும் சிறுநீரக பீன்ஸ் அல்லது சிவப்பு காராமணியால் ஏற்படும் நன்மைகள், உடலுக்கு அது அளிக்கும் பயன்கள் மற்றும் பீன்ஸால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றியும் படித்து அறிந்தோம். பதிப்பு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறோம்; இப்பயனுள்ள பதிப்பு பலரையும் சென்றடைய பதிப்பை பரப்புவீராக! 

ராஜ்மாவை நீங்கள் சுவைத்ததுண்டா? அதன் சுவை உங்களுக்கு பிடிக்குமா? சிறுநீரக பீன்ஸால் நீங்கள் பெற்ற நன்மைகள் என்னென்ன என்பது போன்ற உங்களது அனுபவங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வழியாக எங்களுடன் பகிருங்கள்.

Was this article helpful?
The following two tabs change content below.