பீச் பழங்கள் அல்லது ஆடு பழங்கள் நம் உடலுக்குத் தரும் ஆரோக்கிய நலன்கள் – Benefits of Peach fruit in tamil

Written by StyleCraze

பீச்சஸ் பழங்கள் (peach in Tamil) பொதுவாக கோடைகாலத்தில் விரும்பி உண்ணப்படும் சுவையான பழங்களுள் ஒன்றாகும். இது தெற்கு ஆசியா மற்றும் சீனாவில் பரவலாக பயிரிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக வடமேற்கு சீனா இதன்  பூர்வீகமாக அறியப்படுகிறது. பீச்சஸ் பழங்கள் அறிவியல் பூர்வமாக ப்ரூனஸ் பெர்சிகா என அழைக்கப்படுகிறது. பீச் மனிதர்களுக்கு வேறு பல வழிகளில் பயனளிக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பீச்சஸ் பழங்கள் மரங்களில் காய்த்து குலுங்கும். பிளம்ஸ் பழங்கள் வரிசையில் வரும் இந்த சுவைமிக்க பீச்சஸ் பழங்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். கொடைக்கானலில் பீச்சஸ் பழங்கள் சுற்றுலா பயணிகளிடம் பிரபலமானது. இது எவ்வாறு மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

பீச்சஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது?

வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்த பீச்சஸ் பழங்கள் (peach fruit in Tamil) நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பார்வை திறனையும்  மேம்படுத்துகிறது. பார்க்க அழகாகவும், மணம் மற்றும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பயோஃப்ளவனாய்டுகள் உள்ளிட்ட உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

பீச்சஸ் பழத்தின் நன்மைகள்

பீச்சஸ் (aadu fruit in Tamil) பழங்களின் புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் நறுமணத்தைத் தவிர,  அதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றன. பீச் பழத்தின் சில பயன்பாடுகள் குறித்து அடுத்து தொடர்ச்சியாக பார்க்கலாம்.

1. உடை எடையை குறைக்க உதவுகிறது

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  உடல் எடையை குறைக்க உதவுவதில் பீச்சஸ் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதை குறைத்து பீச்சஸ் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இது வயிறு நிறைந்தது போன்ற உணர்வை கொடுக்கும். அதன் மூலம் குறைந்த கலோரிகளை உட்கொள்ளவும் உதவுகிறது. (1)

பீச்சஸ் பழத்தில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளது. நார்ச்சத்து அதிக பசி எடுக்கும் உணர்வை குறைக்கிறது. இது உடல் எடை குறைப்புக்கு பங்களிக்கிறது. ஒரு நாளைக்கு 30 கிராம் நார்ச்சத்து உட்கொள்வது, உடல் எடை இழப்புக்கு பெரிய அளவில் பங்களிக்கும். அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை போன்ற பிற விரும்பத்தகாதவற்றைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. ஃபைபர் உட்கொள்ளல் நன்மைகளையும் கொண்டுள்ளது.

உடலுக்கு ஃபைபர் எடுத்துக்கொள்ளப்படுவது, சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. மாசசூசெட்ஸ் மருத்துவப் பள்ளி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது, மற்ற கலோரி மிகுந்த உணவுகளுக்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது

மருத்துவ தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும், புற்றுநோயை வரும் முன்னரே தடுப்பது முக்கியம். அவ்வாறு செய்வதற்கான வழிகளில் ஒன்று பீச்சஸ் பழங்களை உட்கொள்வது.

பீச்சஸ் பழங்களில் உள்ள பாலிபினால்கள் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் பெருக்கத்தைத் தடுக்கும் என்று ஒரு அமெரிக்க ஆய்வு கூறுகிறது. மனித பெருங்குடல் புற்றுநோய் செல்களை தடுப்பதிலும் உதவுகிறது.

பீச்சஸ் பழத்தில் காஃபிக் அமிலம் எனப்படும் மற்றொரு கலவை உள்ளது. இது புற்றுநோய் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் நுரையீரல் புற்றுநோயின் இரண்டாம் நிலை வளர்ச்சியையும் தடுக்கின்றது. பீச்சஸ் பழத்தின் இந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புக்கு காரணமான இரண்டு முக்கிய கூறுகள் குளோரோஜெனிக் மற்றும் நியோக்ளோரோஜெனிக் அமிலங்களாகும். இவை புற்றுநோய் செல்களைக் கொல்ல உதவுகின்றன. (2)

3. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆக்ஸிஜனேற்ற பைட்டோநியூட்ரியண்டுகள் இருப்பதால் இந்த பழம் கண் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இதில் உள்ள இரண்டு பைட்டோநியூட்ரியன்கள் விழித்திரையை தாக்கும் ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து கண்ணைப் பாதுகாக்கின்றன. பொதுவான வயது தொடர்பான கண் நோய்கள் உருவாகும் அபாயத்தை லுடீன் குறைப்பதாக  கண்டறியப்பட்டுள்ளது.

லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை கண்ணின் மாகுலா பகுதியை  பாதுகாக்கிறது. வயது தொடர்பான மாகுலர் சிதைவு ஏற்படுவதைத் தடுக்கின்றன. (3)

4. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பீச்சஸ் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது. இது செரிமானத்திற்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், டையூரிடிக் மருந்தாகவும் செயல்படுகிறது. இது உங்கள் சிறுநீரகங்களையும் சிறுநீர்ப்பையையும் சுத்தப்படுத்த உதவுகிறது. (4)

5. உடலில் கொழுப்பின் அளவை குறைக்கிறது

நமது உடலில் நிறைந்திருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் பல்வேறு விதமான நோய்களுக்கு காரணமாகின்றன. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு உடலில் தங்கியுள்ள கொழுப்புகள் காரணமாக அமைகின்றன. அதற்கு பீச்சஸ் போன்ற நார்சத்து மிக்க, கொழுப்புகள் இல்லாத உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். மேலும், பீச்சஸ் பழங்கள் உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கையாள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (5)

6. மூளையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது

பீச்சஸ் பழங்களில் மூளையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது. பீச்சஸ் பழமானது மூளை செயல்பாட்டை வியக்கத்தக்க வகையில் மேம்படுத்த உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. (6)

7. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பீச்சஸ் பழங்கள் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் பயோஆக்டிவ் சேர்மங்களின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது. ஒரு ஆய்வின்படி,  பாலிபினால்கள் நிறைந்த பீச்சஸ் பழச்சாறு இருதய ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.

பீச்சில் உள்ள ஃபைபர், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. இதில் உள்ள DASH  உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. (7)

8. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

பிரபல பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பீச்சஸ் பழங்கள் நல்ல மன அழுத்த நிவாரணியாக செயல்படுகிறது. பதற்றத்தைக் குறைக்க அவை உதவுகின்றன. உண்மையில், பீச் ஹங்கேரிநாட்டில்  ‘அமைதியின் பழம்’ என்று அழைக்கப்படுகிறது. (8)

9. வயதான தோற்றத்தை எதிர்த்து போராடும்

பீச்சஸ் பழங்கள் சரும அழகை மேம்படுத்தக்கூடியவை. தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஃபிளாவனாய்டுகளைக் கொண்டுள்ளது. இது வயதானதை தோற்றம் உண்டாவதை குறைக்க உதவுகிறது. ஒரு தென்கொரிய ஆய்வில், வைட்டமின் சி அதிகம் எடுத்துக்கொள்ளும் போது, வயதான தோற்றம் உண்டாவது தடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (9)

10. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது

பிரேசிலிய ஆய்வின்படி, பீச்சஸ் பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரங்களாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றொரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

பீச்சஸ் பழத்தில் பினோலிக் சேர்மங்களும் உள்ளன. அவை வைட்டமின் சி அல்லது கரோட்டினாய்டுகளை விட மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டிற்கு பங்களிக்கின்றன.

லுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் பீட்டா-கிரிப்டோக்சாண்டின் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்களிலும் பீச்சஸ் பழத்தில் நிறைந்திருக்கிறது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. (10)

11. நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது

உடல் நச்சுத்தன்மை என்பது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இதனை கவனிக்க வேண்டியது முக்கியம். மினசோட்டா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  பீச்சில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ மற்றும் செலினியம் உள்ளன. இவை அனைத்தும் ஆக்ஸிஜனேற்றிகளாகவும் நச்சுத்தன்மை நீக்கியாகவும் செயல்படுகின்றன.

12. கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்

பீச்சஸ் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், கருவில் உள்ள உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும். கர்ப்ப காலத்தில்,  ஹார்மோன்கள் உங்கள் குடலின் இயக்கத்தை மெதுவாக்கும். இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். பீச், ஃபைபர் நிறைந்திருப்பதால், இந்த சிக்கலை தீர்க்க உதவும்.

பீச்சஸ் பழத்தில் ஃபோலிக் அமிலமும் நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இது கடுமையான பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

13. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது

பீச்சஸ் பழத்தில் காணப்படும் வைட்டமின் C சத்தானது தோலில் உள்ள செல்களில் ஏற்படும் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும் தோலில் ஏற்படும் அதிகப்படியான கொலாஜன் இழப்பை தடுத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தோல் சார்ந்த அலற்சிகளை குறைக்கும். இதனுடைய ஆக்சிஜனேற்ற பண்புகள், உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகின்றன.

14. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியானது ஆரோக்கியமான உடல் வளர் சிதை மாற்றத்திற்கும், வலிமையான தசை செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது. பீச்சஸ் பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உடலில் வலுவான மற்றும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக காரணமாக அமைகிறது. இது தொற்று நோய் கிருமிகளுக்கு எதிராக போராட உதவுகிறது.

15. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பீச்சஸ் பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.  இது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது தோல் சுருக்கங்களைக் குறைக்கவும், தோல் அமைப்பை மேம்படுத்தவும்,  சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

ஒரு பிரெஞ்சு ஆய்வின்படி, வைட்டமின் சி சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும், சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பீச்சஸ் பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்

பீச்சஸ் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எந்த விகிதத்தில் கலந்துள்ளது என்பது குறித்து பின்வரும் அட்டவணையில் காணலாம்.

ஊட்டச் சத்துக்கள்

Serving Size 175g

Amounts per serving

கலோரி  68

கலோரி from Fat 4

  

 %Daily Value**

மொத்த கொழுப்பு 

0g

1%

Saturated Fat

0g

0%

Trans Fat

 – –

கொலஸ்ட்ரால் 

0mg

0%

சோடியம் 

0mg

0%

மொத்த கார்போஹைட்ரேட்

17g

6%

பைபர் 

3g

10%

சர்க்கரை 

15g

 

புரோட்டீன் 

2g

 –

விட்டமின்  A

 –

11%

விட்டமின்  C

 –

19%

கால்சியம் 

 –

1%

இரும்பு 

 –

2%

Your daily values may be higher or lower depending on your calorie needs

பீச்சஸ் பழங்களை எப்படி பயன்படுத்தலாம்?

பீச்சஸ் பழ துண்டுகளை சூடான அல்லது குளிர்ந்த தானியங்கள் அல்லது தயிரில் சேர்த்து சாப்பிடலாம். இதனை காலை உணவாக எடுத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும்.

பீச்சஸ் பழத்துண்டுகளை சிறிது பாலுடன் சேர்த்து ஜூஸ் போல செய்து சாப்பிடலாம். இன்னும் சுவை கூடுதலாக பெற வாழைப்பழங்கள் மற்றும் பனிக்கட்டி சேர்க்கலாம்.

இதுதவிர, சால்ட், ஸ்மூத்தி, பீச்சஸ் ஐஸ்கிரீம் செய்தும் சாப்பிடலாம்.

எப்போது சாப்பிடலாம்?

பீச்சஸ் பழங்கள் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் எளிதில் செரிமானமாகக்கூடியவை. மற்ற கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைப்போல செரிமானமாக அதிக நேரம் பிடிக்காது என்பதால், காலை, மதியம், இரவு என எந்த நேரமாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம்.

எவ்வளவு சாப்பிடலாம்?

ஒரு நபர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று பீச் வரை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில், ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 பீச் உட்கொண்ட மாதவிடாய் நின்ற பெண்களுக்கு  மார்பக புற்றுநோயின் தாக்கம் 41% குறைவாக இருந்தது.

பீச்சஸ் பழங்களை எப்படி தேர்ந்தெடுப்பது மற்றும் பாதுகாப்பது?

தேர்வு செய்வது எப்படி?

 • பழத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அதன் வாசனையை உறுதி செய்ய வேண்டும். பீச்சஸ் ரோஜா குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் இனிமையான மணம் இருக்க வேண்டும்.
 • தங்கம் அல்லது மஞ்சள் நிறமான பழங்களை தேடுங்கள். சிவப்பு நிற பீச் பழுத்ததாக அர்த்தமல்ல. இது மற்றொரு வகையைச் சேர்ந்தது என்று அர்த்தம்.
 • பழம் தொடுவதற்கு மென்மையாக இருக்க வேண்டும். பீச்சஸ் பழங்கள் எளிதில் காயப்படும் என்பதால் அவற்றை கசக்க வேண்டாம்.

சேமிப்பது எப்படி?

 • சில நாட்களுக்கு அறை வெப்பநிலையில் வைத்தால் பழுத்து விடும்.
 • நெடு நாட்கள் பாதுகாக்க வேண்டும் என்றால், பழுத்த பீச்ஸை உடனடியாக குளிரூட்டவும்,  வாங்கிய ஒரு வாரத்திற்குள் அவற்றை உட்கொள்ள வேண்டும்.
 • துண்டுகளாக்கப்பட்ட பீச்சில் எலுமிச்சை சாறு சேர்த்து நிறம் மாறாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.

பீச்சஸ் பழங்களின் பக்க விளைவுகள் (Side Effects of Peach in Tamil)

 • பீச்சஸ் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்தாலும், அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஒரு சில பக்க விளைவுகளை உண்டாக்கும். அது என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
 • அதிப்படியான பொட்டாசியம் எடுத்துக்கொள்வது ஹைபர்கேமியாவை ஏற்படுத்தக்கூடும்.
 • ஒவ்வாமை இருந்தால் பீச் ஜூஸ் குடிக்க வேண்டாம். வாய், நாக்கு அல்லது உதடுகளின் சிவத்தல் அல்லது வீக்கம் ஆகியவை இதில் அடங்கும்.
 • அதிகப்படியான பீச்சஸ் பழங்கள் எடுத்துக்கொள்வது வாந்தி, வயிற்று வலி, மயக்கம் மற்றும் சோம்பல் ஆகியவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
 • அதிகப்படியான வைட்டமின்கள் அல்லது பிற ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதும் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
 • அதிகமான பீச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மோசமானது. நம் உடலில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, தோல் வெடிப்பு, குமட்டல், வயிற்று வலி, வலிப்புத்தாக்கங்கள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
 • இரத்த சோகை அபாயத்தைக் குறைப்பதற்கு பீச் சிறந்தது. ஆனால் அதிகப்படியான இரும்புச்சத்து ஆரோக்கியத்திற்கு மோசமானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது நாள்பட்ட சோர்வு, மூட்டு வலி, வயிற்று வலி, கல்லீரல் நோய், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

முடிவாக பீச்சஸ் பழங்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. சீசன் காலங்களில் கிலோ ஐம்பது ரூபாய்க்கு கீழ் கூட கிடைக்கும். விலையும் மலிவானது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழத்தை கிடைக்கும் காலங்களில் அவ்வப்போது உண்டு வந்தால், உடலில் வியக்கதகு மாற்றத்தை காணலாம். இதனை சாப்பிட்டு பார்த்த பிறகு பலன் எப்படி இருந்தது? இதனை சுவைத்த அனுபவம் எப்படி இருந்தது? என்பது குறித்து எங்களிடம் பகிரலாம்.

Sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
The following two tabs change content below.