சாதாரண பீர்க்கங்காய்.. இதில் இத்தனை நன்மை இருக்கா? – Benefits of Ridge gourd in Tamil

Written by StyleCraze

ஆரோக்கியமாக இருக்க, எப்போதும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. இந்த பச்சை காய்கறிகள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்கிறது. அத்தகைய ஒரு பச்சை காய்கறிகளை அலட்சியப்படுத்தி, பலரும் அதனை சாப்பிட விரும்புவதில்லை. அந்த வகையில் பலர் அலட்சியப்படுத்தும் அதே சமயம் உடலுக்கு நன்மை பயக்கும் பீர்க்கங்காய் அல்லது துரய் பற்றி விரிவாக காண்போம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உடலுக்கு பல வழிகளில் பயனளிக்கிறது. இது ஒரு கொடியாகும், அதன் பழங்கள், இலைகள், வேர்கள் மற்றும் விதைகள் அனைத்தும் நன்மை பயக்கும் தன்மை கொண்டவை. பீர்க்கங்காயின் விதைகள் பேதியை தடுக்கும் என்பதால் பேதிமருந்து போல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றிலிருந்து பெறப்படும் எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் இலைகள் பொடிக்கப்பட்டு இரத்தக் கட்டிகளின் மீது தடவப்படும். மேலும் கண் தொடர்பான வலிக்கு பீர்க்கங்காயின் சாறு பயன்படும். பீர்க்கங்காயின் வேரானது நீர்க் கோர்வைக்கு உகந்ததாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டுரையில் பீர்க்கங்காயின் நன்மைகளுடன் மற்ற முக்கியமான தகவல்களையும் காண்போம். (Ridge Gourd in Tamil)

பீர்க்கங்காயின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Ridge Gourd in Tamil)

1. அழற்சி எதிர்ப்பு

பீர்க்கங்காயின் உலர்ந்த இலைகளில் உள்ள எத்தனால் சாறு , அழற்சி எதிர்ப்பு விளைவு க்கு பயன்படுத்தப்படுகிறது. இவை எடிமா (உடல் திசுக்களில் திரவ உறைபனி காரணமாக வீக்கம்) மற்றும் கிரானுலோமா (வீக்கம்) ஆகியவற்றில் இந்த சாறு நன்மை பயக்குகிறது. எத்தனால் சாறுகள் எடிமாவை அதாவது வீக்கத்தை 67.6% மற்றும் 72.5% குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த அடிப்படையில், பீர்க்கங்காய் அல்லது துரய் ஒரு அழற்சி எதிர்ப்பு ஆகவும் செயல்பட முடியும் என்று கூறலாம். (1)

2. தலைவலிக்கு பீர்க்கங்காயின் நன்மைகள்

பீர்க்கங்காய் அல்லது துரய் தலைவலியைக் குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. என்சிபிஐ இணையதளத்தில் ஒரு ஆய்வின்படி, பீர்க்கங்காய் அல்லது துரய் இலைகளின் எத்தனால் சாறுகள் மற்றும் அதன் விதைகள் வலியைக் குறைக்க உதவும். ஆராய்ச்சியின் படி, இது வலி நிவாரணி மற்றும் எதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு பண்புகளும் வலியைக் குறைப்பதற்கும் நிவாரணம் அளிப்பதற்கும் முக்கிமானவை. வலியைக் குறைக்க பீர்க்கங்காய் அல்லது துரய் இலைசாறு பயன்படுத்துவது சரியானது என ஆராய்ச்சி கூறியுள்ளது. (2)

3. புண் எதிர்ப்பு

பீர்க்கங்காய் அல்லது துரய் வயிற்றுப் புண்களைக்குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது இரைப்பை புண்கள். இதில் உள்ள காஸ்ட்ரோபிராக்டெக்டிவ் விளைவு புண்களின் விளைவை ஓரளவிற்கு குறைக்க உதவும். உலர்ந்த பீர்க்கங்காய் அல்லது துரய் சாற்றில் உள்ள மெத்தோனோலிக் இதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விளைவு இரைப்பை சளி (வயிற்றின் சவ்வு) கிளைகோபுரோட்டீன் அளவை சரிசெய்ய உதவுவதன் மூலம் புண்களை ஓரளவிற்கு குறைக்கலாம். பீர்க்கங்காயின் மெத்தனாலிக் சாறு இரைப்பைப் புண்ணுக்கான நிவாரணி என்று ஆராய்ச்சி காட்டுகிறது (3)

4. நீரிழிவு நோய்க்கான பீர்க்கங்காயின் நன்மைகள்

பீர்க்கங்காய் அல்லது துரய் பண்டைய காலத்திலிருந்தே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்று அறியப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே நடந்து வரும் இந்த நம்பிக்கையின் மீதும் எலிகள் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்சிபிஐ இணையதளத்திலும் ஒரு ஆய்வு , பீர்க்கங்காயின் எத்தனால் சாறுகள் குளுக்கோஸ் அளவைக் குறைத்து இரத்தச் சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதாக கூறுகிறது.இந்த விளைவின் காரணமாக, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பீர்க்கங்காய் அல்லது துரய் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. (1)

5. வயிற்றுப்போக்கில் பீர்க்கங்காயின் நன்மைகள்

வயிற்றுப்போக்கைத் தடுப்பதிலும் பீர்க்கங்காய் அல்லது துரய் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக, பீர்க்கங்காயின் விதைகளில் இருக்கும் மென்மையான பகுதி வயிற்றுப்போக்கு அகற்றுவதற்கான ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதன் இலைகள் வயிற்றுப்போக்குக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உண்மையில், ஒட்டுண்ணி மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாக கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதே நேரத்தில்,பீர்க்கங்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பொருள் வயிற்றுப்போக்கை உண்டு செய்யும் காரணிகளை எதிர்த்து போராடுகிறது. (4)

6. மஞ்சள் காமாலையில் பீர்க்கங்காயின் நன்மைகள்

மஞ்சள் காமாலை தடுக்க பீர்க்கங்காய் அல்லது துரய் பயன்படுத்தப்படுகிறது. சிரம் பிலிரூபின் எனப்படும் உடலில் ஒரு சேர்மத்தின் வளர்ச்சியால் இந்த உடல்நலப் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும், மஞ்சள் காமாலை நோயாளிகள் அதன் சிகிச்சைக்காக உலகம் முழுவதும் பீர்க்கங்காயின் இலைகள், தண்டு மற்றும் விதைகளை பயன்படுத்தி நிவாரணம் அடைகிறார்கள். இதனுடன், பீர்க்கங்காயின் தூள் மற்றும் அதன் இலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில் பீர்க்கங்காயில் ஹெபடோபிரோடெக்டிவ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது, இது மஞ்சள் காமாலையின் விளைவாக கல்லீரல் சேதமடைவதை தடுக்கிறது.(5)

7. புற்றுநோய் எதிர்ப்பு

புற்றுநோய்க்கான சிகிச்சையை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும் என்றாலும், சில தடுப்பு முறைகளை பின்பற்றலாம். பீர்க்கங்காய் அல்லது துரய் புற்றுநோயைத் தடுக்க உதவும் தடுப்பு முறைகளில் ஒன்றாகும். என்.சி.பி.ஐ.யில் தற்போது எலிகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பீர்க்கங்காயின் மெத்தனாலிக் மற்றும் நீர் சாறுகளுடன் புற்றுகட்டி உருவாகும் விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம், மனிதர்களைப் பற்றிய ஆராய்ச்சியின் படி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆராய்ச்சி செய்த பிறகும் பீர்க்கங்காயிற்கு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.(1)

8. தொழுநோய்

தொழுநோய்க்கு சிகிச்சையளிக்க பழைய காலங்களில் பீர்க்கங்காய் அல்லது துரய் பயன்படுத்தப்பட்டுள்ளது. உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் அதன் இலைகளை ஒட்டுவது தொழுநோயைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இது மைக்கோபாக்டீரியம் தொழுநோய் என்ற பாக்டீரியத்தால் ஏற்படும் ஒரு வகை தொற்று நோயாகும். இதிலிந்து விடுபட பீர்க்கங்காய் அல்லது துரய் பெரிதளவு உதவும் என நம்பப்படுகிறது. (6)

9. ரிங்வோர்ம் அல்லது படர்தாமரைக்கு பீர்க்கங்காயின் நன்மைகள்

ரிங்வோர்ம் அல்லது படர்தாமரைக்கு, பீர்க்கங்காய் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதன் இலைகளை அரைத்து ரிங்வோர்ம் பாதித்த பகுதியில் தடவினால் நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. உண்மையில், ரிங்வோர்ம் பூஞ்சையால் ஏற்படுகிறது.ரிங்வோர்ம் அல்லது படர்தாமரைலிருந்து நிவாரணம் பெற பீர்க்கங்காய் அல்லது துரய் உதவக்கூடும் என்று கூறலாம். இருப்பினும், இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.(7)

பீர்க்கங்காய் அல்லது துரய் நன்மைகளுக்குப் பிறகு, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றிய தகவல்கள்பின்வருமாறு, Turai in Tamil

பீர்க்கங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பீர்க்கங்காய் அல்லது துரய் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. பீர்க்கங்காய் பற்றிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இப்போது நாம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி காண்போம்.(8)

ஊட்டச்சத்துக்கள்100 கிராமுக்கு அளவு
தண்ணீர்93.85 கிராம்
ஆற்றல்20 கிலோகலோரி
புரதம்1.2 கிராம்
மொத்த கொழுப்பு0.2 கிராம்
கார்போஹைட்ரேட்4.35 கிராம்
ஃபைபர்1.1 கிராம்
சர்க்கரை2.02 கிராம்
கனிம
கால்சியம்20 மி.கி.
இரும்பு0.36 மி.கி.
வெளிமம்14 மி.கி.
பாஸ்பரஸ்32 மி.கி.
பொட்டாசியம்139 மி.கி.
சோடியம்3 மி.கி.
துத்தநாகம்0.07 மி.கி.
தாமிரம்0.035 மி.கி.
மாங்கனீசு0.092 மி.கி.
செலினியம்0.2 .g
வைட்டமின்
வைட்டமின் சி12 மி.கி.
தியாமின்0.05 மி.கி.
ரிபோஃப்ளேவின்0.06 மி.கி.
நியாசின்0.4 மி.கி.
பேண்டோதெனிக் அமிலம்0.218 மி.கி.
வைட்டமின் பி – 60.043 மி.கி.
ஃபோலெட் , மொத்தம்7 µg
வைட்டமின் ஏ , ஐ.யூ.410 IU
வைட்டமின் ஈ (ஆல்பா-டோகோபெரோல்)  0.1 மி.கி.
வைட்டமின் கே (பைலோகுவினோன்)0.7 கிராம்

பீர்க்கங்காயை பயன்படுத்துவது எப்படி?

பீர்க்கங்காயின் நன்மைகளை அறிந்து, அதன் பயன்பாட்டின் முறைகளையும் அறிந்து கொள்வது அவசியம். பீர்க்கங்காயின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, பீர்க்கங்காயை பின்வருமாறு பயன்படுத்தப்படலாம்(9)

  • நீங்கள் பீர்க்கங்காயை, காய்கறி செய்து இரவு அல்லது பிற்பகலில் சாப்பிடலாம்.
  • மாலையில் பீர்க்கங்காய்பஜ்ஜி செய்து உண்ணலாம்.
  • உலர்ந்த பீர்க்கங்காய் இலைகளின் தூளை உட்கொள்ளலாம்.
  • பீர்க்கங்காய் விதைகளில் இருக்கும் மென்மையான கூழ் கூட உண்ணப்படுகிறது.

பீர்க்கங்காய் பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் எலிகள் மீது செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அதன் உட்கொள்ளலின் சரியான அளவு தெளிவாக இல்லை. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாறு போல உட்கொள்ளலாம்.

பீர்க்கங்காயின் பயன்பாட்டை அறிந்து கொள்வது போல் அதன் தீமைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். பீர்க்கங்காய் அதிகமாக உட்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இப்போது பார்ப்போம்.

பீர்க்கங்காயின் பக்க விளைவுகள் Side Effects of Ridge Gourd in Tamil

பீர்க்கங்காயின் பக்க விளைவுகளை காட்டிலும் நன்மைகளே அதிகமாக உள்ளன.. பீர்க்கங்காயின் சில பக்க விளைவுகள் பின்வருமாறு,

  • இது கர்ப்பத்தில் பாதுகாப்பாக கருதப்படவில்லை. பீர்க்கங்காயில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஒரு மோசமான விளைவைக் கொண்டுள்ளது.
  • இதனை கர்ப்ப காலத்தில் எடுத்துகொள்ள எண்ணினால் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்ளவும்.
  • அதிகமாக உட்கொண்டால் சிலருக்கு ஒவ்வாமையை இது ஏற்படுத்தும்..(1)

இறுதியாக.. பீர்க்கங்காய் அல்லது துரய் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்து கொண்டீர்கள். அதன் பக்கவிளைவுகள் மிகக் குறைவு. நீங்கள் பீர்க்கங்காயை சமைத்து சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அதன் சாற்றை உட்கொள்ளலாம். அதே நேரத்தில், பீர்க்கங்காயால் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், அதை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுரையை நீங்கள் விரும்பினால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

தொடர்பான கேள்விகள்

பீர்க்கங்காயை பச்சையாக சாப்பிட முடியுமா?

ஆம் சாப்பிடலாம். சாலட் போல செய்து உண்ணலாம்.

பீர்க்கங்காய் அல்லது துரய் கூந்தலுக்கு நல்லதா?

இவை நரை முடிகளை மாற்றியமைக்கும் மயிர்க்கால்களில் நிறமி செல்களை மாற்றும் திறன் கொண்டவையாகும்.

பீர்க்கங்காய் அல்லது துரய் வாயுவை ஏற்படுத்துமா?

இவை கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் கொண்ட காய்கறிகள் என்பதால் குறைந்த வாயுவை ஏற்படுத்துகின்றன.

கர்ப்ப காலத்தில் பீர்க்கங்காய் சாப்பிடலாமா?

இதனை கர்ப்ப காலத்தில் எடுத்துகொள்ள எண்ணினால் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்ளவும்.

பீர்க்கங்காய் அல்லது துரய் ஏன் கசப்பானது?

இவற்றில் குக்குர்பிடாசின் என்ற கலவை இருப்பதால் தான் லேசாக கசக்க செய்கிறது.

9 sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.
scorecardresearch