கண்ட டிப்ஸ் எல்லாம் எதற்கு? உடல்எடையை குறைக்க தினமும் பைன் நட்ஸ் வாயில் போடுங்க! Pine Nuts for Weight Loss

Written by StyleCraze

பைன்நட்ஸ்கள், இவை பலராலும் அறியப்படாத ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருளாகும். (what is pine nuts in tamil?) பாதாம், முந்திரி, ஹேசல்நட்ஸ்கள்  போன்று இவைகளும் மதிப்பு மிக்க ஊட்டப்பொருளாக விளங்குகிறது. இந்த நட்ஸ்கள் அதிக புரதச்சத்து கொண்டவை. வேகவைத்த கோழிஇறைச்சியைக் காட்டிலும், இவை இரண்டு மடங்கு புரதம் நிறைந்தவை. இவை பைன் மரத்தின் கொட்டைகளாகும்.  இக்கொட்டைகள் மிருதுவான ஓட்டினால் மூடப்பட்டுள்ளன. தயாரித்தலின்போது பொதுவாக அதன் ஓடுகள் அகற்றப்பட்டு, நட்ஸ்கள் பிரிக்கப்படுகின்றன. இவை நமக்கு புதிதாக இருந்தாலும் உலகின் பல்வேறு பகுதிகளின் உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சைனீஸ், இத்தாலியன், மெக்ஸிகன், ரஷியன்,கொரியன் போன்ற பாரம்பரிய உணவுகளில் இந்த நட்ஸ்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இவைகள் பார்ப்பதற்கு நட்ஸ்கள் போன்று காணப்பட்டாலும் அறிவியல் அடிப்படையில் இவைகள் விதைகள் ஆகும்.

இந்த நட்ஸ்கள் அதிக சிற்றினங்களை கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது, சில்கோசா பைன்(chilgoza)ஆகும். இதன் அறிவியல் பெயர் பைனஸ் ஜெரார்டியானா.இவ்வளவு மதிப்பு மிக்கதாக இவை கருதப்படக் காரணம்என்ன? என்ற கேள்வி இப்பொழுது அனைவரிடத்திலும் எழுந்திருக்கும். இவற்றிலுள்ள புரதங்கள், விட்டமின்கள், தாதுப்பொருட்கள் ,நீர்ச்சத்துகள் மற்றும் இதர சத்துக்களே இதற்கு காரணமாகும். பணம், பொருளை விட ஆரோக்கியமே முக்கியம் என்ற எண்ணம் இப்பொழுது அனைவரிடத்திலும் காட்டுத்தீயைப்போல பரவியுள்ளது. எனவே மக்கள் சிறுதானியங்கள்,  உலர்பழங்கள்,  உலர்நட்ஸ்கள், பாரம்பரிய உணவுகள் பக்கம் திரும்பியுள்ளனர்.

இந்த பைன் நட்ஸ்கள் அதிக அளவு கார்போஹைட்ரேட், கொழுப்புகள் மற்றும் புரதம் கொண்டவை. எனவே இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. இப்பதிவில் பைன் நட்ஸ்க்களை பற்றியும் அதன் பயன்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் காண்போம் .

பைன் நட்ஸ்கள் என்றால்என்ன? (pine nuts in tamil)

பைன் மரத்தின் உட்கொள்ளக்கூடிய விதைகளே பைன் நட்ஸ்களாகும்.  இவை பாகிஸ்தான், கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும்வடமேற்குஇந்தியாவை பூர்விகமாகக் கொண்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இவை வெவ்வேறு விதமாக அழைக்கப்படுகிறது. இவை 20 சிற்றினங்களாய் அமைந்துள்ளது. இருப்பினும் அதிகமாக விளைவிக்கக்கூடிய நட்ஸ்கள் நான்கு வகைகள் தான் அவை மெக்ஸிகன் பைன், கொலராடோ பைன்,சைனீஸ் நட் பைன் மற்றும் இத்தாலியன் ஸ்டோன் பைன் ஆகும்.

பைன் கொட்டைகளின் பயன்கள்: (pine nuts benefits in tamil)

இவை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது.

பயன் 1: நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

ஆராய்ச்சிகளின்படி, தினமும் பைன் நட்ஸ்க்களை உட்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.மேலும் நீரிழிவு நோய் தொடர்பான பார்வை குறைபாடு மற்றும் பக்கவாதம் போன்ற பக்க விளைவுகளை குறைக்கிறது. தினமும் பைன் நட்ஸ்க்களை எடுத்துக்கொள்ளும்போது, இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளிடம் கெட்டகொழுப்புகளின் அளவு குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன(1).

பயன் 2: இதயத்தின் ஆரோக்கியதை மேம்படுத்துகிறது

அடிக்கடி நட்ஸ்க்களை உட்கொள்வது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் இ, கே,மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்றவை இதய நோய்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பைன் நட்ஸ்க்களில் இருக்கும் பினோலேனிக் ஆசிட் எனும் அமிலம் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கிறது. வைட்டமின் இ, ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது. மேலும் வைட்டமின் கே உடலின் அடிபட்ட இடத்தில் இரத்தம் உறைதலை தூண்டுகிறது.(2)

பயன் 3: கொழுப்பு கட்டுப்பாடு

தினமும் பைன் நட்ஸ்க்களை சாப்பிடும் போது நீரிழிவு நோயாளிகளிடம் கெட்ட கொழுப்புகளின் அளவு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் இருக்கும் பினோலேனிக் ஆசிட் எனும் அமிலம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்காமல் கொழுப்பின் அளவை குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன(3).

பயன்4 : உடல் எடை கட்டுப்பாடு

பைன் நட்ஸ்கள் கொழுப்பு அமிலங்களை கொண்டது. இவை பசியைகட்டுப்படுத்துகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் சோலேசிஸ்டோகிநின் எனும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் பசியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இதில் உள்ள மேலும் சில கொழுப்பு அமிலங்கள் உடல் கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இந்த காலகட்டத்தில் உடல் பருமனாவதால் அனைவரும் பாதிக்கின்றனர். இந்த நட்ஸ்க்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் கொழுப்பை குறைத்து அழகிய தோற்றத்தை பெற இயலும்.(4)

பயன் 5 : புற்றுநோய் கட்டுப்பாடு

பைன் நட்ஸ்க்களில் உள்ள மெக்னீசியம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கியமானதாக உள்ளது. மெக்னீசியம் உட்கொள்வது புற்றுநோயின் பாதிப்பை குறைக்கும். ஆராய்ச்சிகளின்படி, ஒரு நாளில் 100மில்லிகிராம் மெக்னீசியம் அளவு குறையுமானால், புற்றுநோய் பாதிப்பு 24 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இரத்தத்தில் உள்ள மெக்னீசியத்தின் அளவை அதிகரிப்பதன்  மூலம் புற்றுநோய் உண்டாவதை தவிர்க்க முடியும்(5).

பயன் 6: மூளை ஆரோக்கியம்

பைன் நட்ஸ்க்களில் இரும்புச்சத்து அதிகம் இருப்பது நமக்கு தெரிந்ததே. இரும்பு எனும் தாதுப்பொருள் இரத்தத்தை கடத்துவதிலும் சேமித்து வைப்பதிலும் இன்றியமையாதது. மேலும் இது மூளை ஆரோக்கியதிற்கு அவசியம். அதுமட்டுமல்லாமல் பைன் நட்ஸ்க்களில் இருக்கும் மெக்னீசியம் கோபம், மனஉளைச்சல் மற்றும் படபடப்பு போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.வளர்ந்து வரும் பொருளாதார வாழ்க்கையில் மனஉளைச்சல் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் பாதிக்கும் ஒன்று. இதனை சரி செய்ய மாற்று வழி தேவைப்படுகிறது. எனவே தினமும் ஒரு பைன் நட்ஸை சாப்பிடுவதன் மூலம் மனஉளைச்சலைக் குறைத்து அமைதியை பெறலாம்.(6)

பயன் 7 : எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு உகந்தது என அனைவர்க்கும் தெரிந்ததே. ஆனால் வைட்டமின் கே இதில் சிறந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வைட்டமின் கே ஆஸ்டியோபொரோஸிஸ் நோயைகுணப்படுத்த உதவுகிறது. இது எலும்பின் தாதுப்பொருள் அளவை அதிகரிப்பதோடு எலும்பின் வலுவை அதிகரித்து எலும்பு முறிவின் வாய்ப்புகளை குறைக்கிறது. பைன் நட்ஸ்க்களில் வைட்டமின் கே அதிகம் உள்ளதால் எலும்பின் ஆரோக்கியம் மேம்படுகிறது. வயதாகும்போது ஏற்படும் மூட்டுவலி மிகவும் கொடுமையானது. இதனை தவிர்க்க இப்போதிருந்தே பைன் நட்ஸ்க்களை சாப்பிட்டு எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவேண்டும்(7).

பயன் 8: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பைன் நட்ஸ்க்களில் உள்ள ஜிங்க் மற்றும் மாங்கனீசு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மாங்கனீசு உடலின் ஹார்மோனின் சமநிலையை காக்கிறது மற்றும் ஜிங்க் காயங்களை குணப்படுத்தும். மேலும் ஜிங்க் ‘டி செல்களின்’ எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. டி செல்கள் என்பவை நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் செல்களாகும்.(8)

பயன் 9: பார்வைத்திறனைசீராக்குகிறது

பைன் நட்ஸ்க்களில் உள்ள லியூட்டின் எனும் ஆக்சிஜனேற்ற தடுப்பான்கண்ணுக்கு உகந்த வைட்டமின் ஆகும். நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் 20 கரோட்டீனாய்டு மட்டுமே கண்ணிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றிலும் 2 மட்டுமே அதிக அளவு கண்ணில் உட்கொள்ளப்படுகிறது. அவை லியூட்டின் மற்றும் ஸிக்ஸாந்தின் ஆகும். எனவே பைன் நட்ஸ்க்களை சாப்பிடுவதால் கண் நோய்களை தவிர்க்க முடியும்.அத்தகைய லியூட்டின் பைன் நட்ஸுகளில் அதிகம் இருப்பதால் அதனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் குறைபாடுகளை சரி செய்து கண் பார்வையை சீராக்கலாம்.

பயன் 10 :ஆன்டிஆக்ஸிடன்ட்

பைன் நட்டுகளில்அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்உள்ளன. அவைநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு எலும்பு, தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்புச்சக்தி குறைவே பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. பைன் நட்ஸ்க்களை சாப்பிட்டு உடலின் நோயேதிர்ப்பு அதிகரிப்பதன் மூலம் நமது தோல், முடி மற்றும் நகம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

பயன் 11 : பசியை கட்டுப்படுத்தல்

பைன் நட்டுகளில்உள்ள கொழுப்பு அமிலங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது அவை சோலேசிஸ்டோகிநின் எனும் ஹோர்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் பசியின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனுக்கு முக்கிய காரணம் அதிக பசியே. பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் பருமனைக் குறைத்து சரியான உடல் தோற்றத்தைப் பெற இயலும்(9).

பயன் 12 : தோல் ஆரோக்கியம்

பைன் நட்ஸ்க்களில் உள்ள வைட்டமின் இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நம் தோலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. இது நம் தோலை புத்துணர்வாக வைத்திருக்க உதவுவதோடு மிகவும் மென்மையாக வைக்கவும்  சிறந்தது.பெண்கள் எப்பொழுதுமே தங்கள் தோலின் மீது அதிக கவனம் செலுத்துவர்.எனவே வயதாகும்போது ஏற்படும் தோல் சுருக்கங்கள் அவர்களை கவலை அடையச்செய்கிறது. இந்த நட்ஸ்க்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலம் வயதாவதை தாமதப்படுத்தி இளமையுடன் இருக்கலாம்(10).

பயன் 13 : முடியின் ஆரோக்கியத்திற்கு உகந்தது

வைட்டமின் இ முடி வளர்ச்சிக்கு சிறந்ததாகும். பைன் நட்டுகளில்அதிக அளவுவைட்டமின் இ இருப்பதால் இது கூந்தலின் வளர்ச்சிக்கு ஏற்றதாகும் இது முடியின் வேரை நல்ல முறையில் பாதுகாக்கிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்த பைன் நட்ஸ் எண்ணெய்யை உபயோகிக்கலாம். இந்த எண்ணெயில் உள்ள புரதம் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடியை வளர செய்கிறது.(10)

பைன் நட்ஸ்க்களில் உள்ள ஊட்டச்சத்துகள்(what is the nutritional value of pine nuts?)

ஊட்டச்சத்துக்கள்
அளவு
கலோரி 191கொழுப்பிலிருந்து கலோரிகள் 174.4
தினசரி அளவு
மொத்த கொழுப்பு 19g –30%
நிறைவுற்ற கொழுப்பு 1g –7%
டிரான்ஸ் கொழுப்பு – –
கொழுப்பு 0mg –0%
சோடியம் 1mg –0%
மொத்த கார்போஹைட்ரேட் 3.7g –1%
நார்ச்சத்து உணவு 1g –4%
சர்க்கரை 1g – –
புரதம் 4g – –
வைட்டமின் A –0%
வைட்டமின் C –0%
கால்சியம் –0%
இரும்பு –9%
வைட்டமின்கள்
உணவில் இருக்கும் அளவுதினசரி அளவு
வைட்டமின் A39.1IU1%
வைட்டமின் C1.1mg2%
வைட்டமின் D
வைட்டமின் E( ஆல்பா டோகோபெரோல்)12.6mg63%
வைட்டமின் K72.8mcg91%
தியாமின்0.5mg33%
ரிபோஃப்ளேவின்0.3mg18%
நியாசின்5.9mg30%
வைட்டமின் B60.1mg6%
போலேட்45.9mcg11%
வைட்டமின் B120.0mcg0%
பேண்டோதெனிக் அமிலம்0.4mg4%
கோலின்75.3mg –
Betaine0.5mg –
தாதுக்கள்
உணவில் இருக்கும் அளவு%DV
கால்சியம்21.6mg2%
இரும்பு7.5mg41%
 மெக்னீசியம்339mg85%
பாஸ்பரஸ்776mg78%
பொட்டாசியம்806mg23%
சோடியம்2.7mg0%
ஜிங்க்8.7mg58%
காப்பர்1.8mg89%
 

மாங்கனீசு

11.9mg594%
செலினியம்0.9mcg1%
பிளூரைடு –

பைன் நட்ஸ்க்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?

பைன் நட்ஸ்க்களை பல்வேறு விதங்களில் சாப்பிட பயன்படுத்தலாம். இவற்றை சாக்லேட், குக்கீஸ்மற்றும் கேக்குகளின் மீது தூவலாம். மேலும் மேற்கத்திய உணவுகளான பிசா மற்றும் ஐஸ்கிரீம் மீதும் தூவலாம். இல்லையெனில் ஸ்மூத்தி(milkshake) மற்றும் ஜூஸ் மீதும் பயன்படுத்தலாம். இது மேலும் அவற்றிற்கு சுவை ஊட்டுகிறது. இதனைக் கொண்டு மிக மிக சுவையான உணவுகளை தயாரிக்க முடியும். மேற்கத்திய உணவுகளான சாலட் போன்றவை மிக சுவையாகவும் குழந்தைகளுக்கு பிடித் தமானதாகவும் இருக்கும்.

பைன் நட்ஸ்க்களை எப்பொழுது சாப்பிட வேண்டும்?

முடிந்த வரையில் நட்ஸ்க்களை வெயில் காலத்தில் தவிர்த்து குளிர் காலத்தில் எடுத்து கொள்வது நல்லது. மேலும் இதனை காலை மற்றும் மாலை நேரங்களில் சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஒரு நாளிற்கு எவ்வளவு பைன் நட்ஸ்களை சாப்பிடலாம்?

பைன் நட்ஸ்க்களில் அதிக அளவில் கலோரி இருப்பதால் இதனை குறைவாக சாப்பிடுவது நல்லது. மேலும் இதில் உடலுக்கு நன்மை பயக்கும் விட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன. எனவே ஒரு நாளிற்கு 2 ஸ்பூன் பைன் நட்ஸ்கள் சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றன.

பைன் நட் சாலட் எவ்வாறு செய்வது என்பதைக் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. ஸ்பினாச்
  2. வெட்டிவைத்த அவகேடோ
  3. பைன் நட்ஸ்கள்
  4. ஆலிவ்எண்ணெய்
  5. லெமன் ஜூஸ்
  6. உப்பு மற்றும் மிளகு

செய்முறை:

ஆலிவ் எண்ணெய் ,உப்பு ,மிளகு மற்றும் லெமன் ஜூஸை நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு ஸ்பினாச்,அவகேடோமற்றும் பைன் நட்ஸ்கள் சேர்த்து பரிமாறலாம். இது மிக சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

பைன் நட்ஸ்க்களை எவ்வாறு வாங்குவது?

நன்றாக காப்பி நிறத்தில் இருக்கும் கொட்டைகளையே எப்போதும் வாங்க வேண்டும். மேலும் அவை தடிமனாகவும் கீறல்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். அழுகிய வாடை வரும் நட்ஸ்க்களை வாங்ககூடாது. மேலும் சந்தேகம் இருந்தால் இதனை சிறிது உயரத்தில் இருந்து கீழே போடவும். அதிகமான சத்தம் எழுப்புபவை தரமானதாகும். இது ஒரு எளிதான சோதிக்கும் முறைதான்.

பைன்நட்ஸ்க்களை எவ்வாறு சேமித்து வைக்கலாம் என்பது அனைவரிடத்திலும் வெகுநாட்களாக உள்ள சந்தேகம். அதனைப்பற்றி இங்கு காண்போம்.

பைன் நட்ஸ்கள் மார்க்கெட்டுகளில் ஓடு இல்லாமலும் மற்றும் ஓடு உடையதாகவும் கிடைக்கிறது. ஓடு இல்லாதவை அதிக நாட்கள் சேமித்து வைக்கக்கூடியவை. இவைகள் 3 மதல் 4 மாதங்கள் சேமித்து வைக்கலாம்.

ஆனால் ஓடு உள்ளவற்றை அதிக நாட்கள் சேமித்து வைக்க முடியாது. எனவே அவற்றை மிதமான இடத்தில் சேமித்து வைக்கலாம்.

பைன் கொட்டைகளின் பக்க விளைவுகள்(side effects of pine nuts):

சிலருக்கு பைன் நட்டுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.கர்ப்ப காலங்களில் பைன் நட்ஸ்கள் எடுத்துக்கொள்வது நல்லதே ஆனால் சரியான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப அமுதமே ஆனாலும் அதை அளவோடு தான் உட்கொள்ள வேண்டும். எனவே மருத்துவரின் ஆலோசனையின்படிபரிந்துரைக்கப்பட்ட அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இறுதியாக…

பைன் நட்ஸ்க்களில் உடலை ஆரோக்கியமாக வைக்கத்தேவையான அனைத்து விதமான சத்துக்களும் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின்படி பயன்படுத்துவது ஏற்றது. உலர் பழங்களை போன்று உலர் கொட்டைகளும் அதிக ஊட்டச்சத்து உடையவை. கண்ணில் கண்ட உணவுகளை எல்லாம் உண்ணாமல் உடலுக்கு அத்தியாவசிய உணவுகளை தேடி உண்ணுதல்வேண்டும். ஏனெனில் உடலுக்கும் மனதுக்கும் நிறைய தொடர்பு உண்டு. உடல் நன்றாக இருந்தால் தான் மனதையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளமுடியும். ஆதலால் உடலை பேணிகாத்து, மருத்துவமனைக்கு செல்வதை குறைக்கும் முயற்சியில் இறங்குவோம்!

தொடர்பான கேள்விகள்

1.கர்ப்ப காலத்தில் பைன் நட்ஸ்க்களை சாப்பிடலாமா?

மிகவும் நல்லது. ஏனென்றால் அவை அதிக சத்தானவை, இது கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய பொருள் ஆகும். பைன் கொட்டைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, மேலும் இது மலச்சிக்கலை எளிதாக்க உதவும். இதிலுள்ள இரும்பு மற்றும் புரதங்கள் நன்மை பயக்கும். குறிப்பாக தாய் சைவ உணவு உண்பவர் என்றால், இரும்பு மற்றும் புரதங்கள் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒரு நாளிற்கு எத்தனை பைன் நட்ஸ்க்களை உண்ணலாம்?

15 முதல் 20 நட்ஸ்க்களை தாராளமாக ஒரு நாளிற்கு சாப்பிடலாம்.

ஏதேனும் பைன் நட்ஸ்க்கள் விஷமானதா?

பைன் நட்ஸ்கள் சிறிது கவனத்துடன் உண்ண வேண்டிய ஒன்று. இருப்பினும் இவை சிறிய மற்றும் குறுகிய கால பாதிப்பையே உண்டாக்கும்.

Sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
The following two tabs change content below.