காலிஃபிளவரின் (பூக்கோசின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Cauliflower Benefits, Uses and Side Effects in Tamil

by StyleCraze

குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறி குடும்பத்தை சேர்ந்தது காலிஃபிளவர் எனும் பூக்கோசு ஆகும்; சமீபத்தில் வெளிவந்த தகவல்களின் படி, 2018 ஆம் ஆண்டில் ட்ரெண்டிங்கில் இருந்த உணவு என்றே காலிஃபிளவரை கூறலாம். மேலும் ஒரு பிரபல மீமில், ஒருவர் 30 வயதை அடைந்து விட்டால், தன்னிச்சையாக அவர் அறிந்தது எல்லாம் காலிஃபிளவர் மட்டுமே & காலிஃபிளவர் மீது காதல் கொள்ள ஆரம்பித்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் படிக்கும் பொழுது மிகவும் வேடிக்கையாக உள்ளது அல்லவா! காலிஃபிளவர், நம் உடலுக்கு தரும் அற்புத நன்மைகளை பற்றி அறிந்தால், நிச்சயம் நீங்கள் இதை வேடிக்கையாக கருத மாட்டீர்கள்.

இது காட்டு முட்டைக்கோஸ் தாவரத்திலிருந்து தோன்றிய ஒரு காய்கறி ஆகும்; உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு விதமான உணவு வகை தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறியாக பூக்கோசு விளங்குகிறது. சைனீஸ், இத்தாலியன், இந்தியன், துருக்கியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஸ்பானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஆகிய அனைத்து நாட்டு உணவு வகை தயாரிப்பிலும் காலிஃபிளவர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது காலிஃபிளவர் தரும் சுவையின் அடிப்படையில் மட்டும் அல்ல; காலிஃபிளவர் தரும் நன்மைக்காகவும் தான். காலிஃபிளவர் வழங்கும் நன்மைகள், பலன்கள், பயன்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து தெளியலாம்.

உங்களது உடலுக்கு காலிஃபிளவர் நல்லது என கருதப்படுவது ஏன்?

காலிஃபிளவரில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சல்ஃபோராபேன் என்பது ஆகும்; இது புற்றுநோயை எதிர்த்து போராட மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. இக்காய்கறியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் அழற்சி அல்லது வீக்கம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதை தடுத்து, உடலில் நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன.

காலிஃபிளவரில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள்/ கனிமச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன; இச்சத்துக்கள் உடலில் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. காலிஃபிளவர் அளிக்கும் பல, முக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.

காலிஃபிளவர் வழங்கும் நன்மைகள்

காலிஃபிளவர் ஒரு வித்தியாசமான சுவையை கொண்ட உணவு; அது போல், சற்று வித்தியாசமாக பலதரப்பட்ட நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு காய்கறி ஆகும். இப்பொழுது காலிஃபிளவர் நல்கும் முக்கிய பயன்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நன்மை 1: இதய ஆரோக்கியம்

Shutterstock

காலிஃபிளவர் அதிக அளவு நார்ச்சத்துக்களை கொண்ட ஒரு காய்கறி ஆகும்; இது இதய நோய்களை தடுத்து, இதய ஆரோக்கியத்தை காப்பாற்ற உதவுவதாக ஆய்வுகள் பல கருத்து தெரிவிக்கின்றன (1). பூக்கோசில் உள்ள சல்ஃபோராபேன் எனும் சத்து உடலின் இரத்த அழுத்த அளவுகளை முக்கியமாக குறிப்பிட்டு கூறும் அளவுக்கு மேம்படுத்த உதவுகிறது; மேலும் இந்த பூக்கோசில் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், அவை உடலில் காணப்படும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, இருதய நோய்களை தடுக்க உதவுகின்றன.

நன்மை 2: புற்றுநோய்

காலிஃபிளவரில் இருக்கும் சல்ஃபோராபேன் செய்யக்கூடிய ஒரு பணியே – புற்றுநோயை தடுப்பது ஆகும்; பூக்கோசில் காணப்படும் இந்த உறுப்பு புற்றுநோய் தண்டு செல்களை அழித்து, புற்றுநோய் கட்டி வளர்வதை தடுத்து, அவற்றின் வளர்ச்சியை மெதுவாக்குகிறது. காலிஃபிளவரில் இருக்கும் சல்ஃபோராபேன், புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது (2). காலிஃபிளவரில் இருக்கும் இண்டோல்கள் மற்றும் ஐசோதியோசையனேட்கள், சிறுநீர்ப்பை, மார்பகம், பெருங்குடல், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் உருவாவதை தடுக்க உதவுகின்றன.

காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள், கரோட்டினாய்டுகள் மற்றும் இதர முக்கியமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே ஆகியவற்றை கொண்டுள்ளது; மேலும் இவை எல்லா விதமான புற்றுநோய்களை எதிர்த்து போராடும் தன்மையை கொண்டுள்ளது (3).

நன்மை 3: எலும்பு ஆரோக்கியம்

வைட்டமின் கே சத்துக்களை குறைவாக உட்கொண்டால், எலும்புகளில் விரிசல்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகிய குறைபாடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனால், காலிஃபிளவரில் அதிக அளவு வைட்டமின் கே சத்துக்கள் நிறைந்து உள்ளன; இவை எலும்பின் மேட்ரிக்ஸ் புரதங்களை மாற்றி அமைத்து, எலும்புகளின் கால்சியம் உறிஞ்சும் திறனை அதிகரிக்க உதவுகிறது. இதனால் எலும்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது (4). சிறுநீர் வழியாக கால்சியம் வெளியாவதை தடுக்க வைட்டமின் கே உதவுகிறது.

நன்மை 4: உடல் எடை குறைத்தல்

Shutterstock

காலிஃபிளவரில் இருக்கும் சல்ஃபோராபேன், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட்/ போலிக் அமில சத்துக்களுடன் சேர்ந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது; உடலியல் செயல்பாடுகள் மூலம் உடல் கொழுப்பை எரிப்பதில் வைட்டமின் சி ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன (5). காலிஃபிளவர் என்பது குறைந்த கார்போஹைட்ரேட்டுகளை கொண்ட மற்றும் உடல் எடை இழப்புக்கு உதவக்கூடிய ஒரு உணவு ஆகும்; இதனை உடல் எடை இழப்பு உணவு திட்டத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம், அற்புதமான பலன்களை பெற முடியும்.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கி, உடல் எடை இழப்பை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் ஒமேகா – 3 சத்துக்கள், லெப்டின் எனும் ஹார்மோனின் உருவாக்கத்தை தூண்டி விட உதவுகின்றன (6). லெப்டின் என்பது உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை சமநிலைப்படுத்த உதவும் ஒரு ஹார்மோன் ஆகும்.

நன்மை 5: அழற்சி

காலிஃபிளவர் வழங்கும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று அழற்சி எதிர்ப்பு ஆகும்; காலிஃபிளவரில் இருக்கும் சில திறன் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகளான, பீட்டா கரோட்டின், கொயர்செட்டின், சின்னமிக் அமிலம் மற்றும் பீட்டா – கிரிப்டோசாந்தின் ஆகியவை உடலில் ஏற்படும் அழற்சி குறைபாட்டை போக்க உதவுகின்றன; மேலும் இவை உடலில் உருவாகும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை போக்க மற்றும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகின்றன (7).

காலிஃபிளவரில் உள்ள ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு பொருள், இண்டோல் – 3 – கார்பினால் ஆகும்; இது மரபு அளவிலான அழற்சியை எதிர்த்து போராட கூடியதாக விளங்குகிறது. இக்காய்கறியில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், உடலில் உண்டாகும் அழற்சி நிலைகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டவையாக விளங்குகின்றன.

கீல்வாதம் ஏற்பட்டுள்ள நபர்களில் ஏற்படும் அழற்சி நோய்க்குறைபாட்டை போக்க, காலிஃபிளவரில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உதவுகின்றன. ஆனால், இதன் மறுபக்கத்தை பார்த்தால், காலிஃபிளவரில் அதிக அளவு பியூரின் சத்துக்கள் உள்ளன; இந்த பியூரின் சத்துக்கள் உடலில் கீல்வாத குறைபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. ஆகையால் காலிஃபிளவரை உட்கொள்ள தொடங்கும் முன், உங்களது மருத்துவரை ஒருமுறை கலந்து ஆலோசித்து கொள்வது நல்லது.

நன்மை 6: மூளை இயக்கம்

காலிஃபிளவரில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்து கோலைன் என்பது ஆகும்; கோலைன் என்னும் சத்தினை வைட்டமின் பி என்றும் அழைக்கலாம். இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, மூளை வளர்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் கோலைன் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை மிக அற்புதமாக அதிகரிக்கும் மற்றும் இச்சத்து கருவின் அறிவாற்றல் இயக்க திறனையும் அதிகரிக்க உதவும். கோலைன் சத்து நிறைந்த காய்கறி அல்லது உணவு வயது அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய நினைவாற்றல் குறைபாட்டை தடுக்க உதவுகிறது (8).அல்சைமர் போன்ற நரம்பு சார்ந்த நோய்களை குணப்படுத்தவும் இது உதவுகிறது.

காலிஃபிளவரில் உள்ள பிறிதொரு முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் கே ஆகும்; இது சைக்கோ மோட்டார் நடத்தையை மேம்படுத்திட உதவுகிறது.

நன்மை 7: கொலஸ்ட்ரால்

Shutterstock

காலிஃபிளவரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் காணப்படும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவுகின்றன. 100 கிராம் காலிஃபிளவரில் 0 சதவிகிதம் கொலஸ்ட்ரால் உள்ளது; அதாவது கொழுப்பு சத்துக்களே இல்லை.

பொதுவாகவே குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்; அத்தகைய குறுக்கு வெட்டு தோற்ற குடும்பத்தை சார்ந்த காலிஃபிளவரும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் காலிஃபிளவரில் இருக்கும் ஸ்டெரோல்கள் (பைட்டோ ஸ்டெரோல்கள்) குடல் பகுதிகளில் கொழுப்பு சத்து உறிஞ்சப்படுவதை தடுக்க உதவுகின்றன.

நன்மை 8: செரிமானம் மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகள்

காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை நல்ல முறையில் கவனித்து கொள்ள உதவுகிறது; நார்ச்சத்து அளவு குறைவாக உட்கொள்ளப்பட்டால், அது மலச்சிக்கல், மலக்குடல் அழற்சி நோய்க்குறைபாடுகள், டைவர்ட்டிகுலிட்டிஸ் எனும் குழலுறுப்பு நோய் போன்ற செரிமானம் சார்ந்த நோய்க் குறைபாடுகள் உண்டாகும் அபாயத்தை தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயை தடுக்க உதவும் மற்றும் காலிஃபிளவரில் இருக்கும் சல்ஃபோராபேன் வயிறு பகுதியின் உட்புற உறுப்புகளை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது வயிற்றில் பாக்டீரியா நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

காலிஃபிளவரில் இருக்கும் சல்பர் கொண்ட உறுப்புகள், உணவு பொருட்களில் இருந்து தேவையான ஊட்டச்சத்தினை உறிஞ்சவும், எஞ்சிய கழிவு பொருட்களை நீக்கவும் உதவுகின்றன; இதன் மூலம் இவை செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து நன்மை பயக்கின்றன (9). காலிஃபிளவரில் உள்ள நீர்ச்சத்து, மலச்சிக்கலை தடுத்து, செரிமான இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

நன்மை 9: கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியம்

காலிஃபிளவரில் இருக்கும் பைட்டோ வேதிப்பொருட்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய – விஷத்தன்மை கொண்ட பொருட்களை உடைத்து, சிறுநீரக நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன; இக்காய்கறியில் குறைவான பொட்டாசியமும், வைட்டமின் சி சத்தும் சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகின்றன. மேலும் இவை சிறுநீரக அழுத்தத்தால் அல்லது சிறுநீரக நோய்க்குறைபாட்டால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை தடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகின்றன; இது சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவலாம்.

காலிஃபிளவர் கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது; காலிஃபிளவர், சிறுநீரக கற்கள் அல்லது இதர வகையான சிறுநீரக நோய்களை தடுக்க உதவுகிறது. எனினும் காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளும் முன், உங்களது மருத்துவருடன் ஒருமுறை கலந்து ஆலோசித்து கொள்வது நல்லது.

நன்மை 10: கண் பார்வை ஆரோக்கியம்

Shutterstock

காலிஃபிளவரில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின் சி உட்பட, வயது அதிகரிப்பதால் ஏற்படும் மாகுலர் சீர்கேட்டை தடுக்க உதவுகின்றன; காலிஃபிளவரில் இருக்கும் சல்ஃபோராபேன், கண்களின் ரெட்டினாவில் ஏற்படும் சேதம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை தடுத்து கண் பார்வை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன (10). இது கேடராக்ட் எனும் கண்புரை போன்ற கண் குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.

நன்மை 11: இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

காலிஃபிளவரில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது; நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பயன்படுகிறது. நார்ச்சத்து குடலில் நல்ல நுண்ணுயிர்களின் உருவாக்கத்தை அதிகரித்து, ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது; மேலும் காலிஃபிளவர் மற்றும் அதில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியத்தை அதிகரிக்க பயன்படுகின்றன.

நன்மை 12: ஹார்மோன் சமநிலை

ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்த காலிஃபிளவரை உட்கொள்வது, ஆரோக்கியமற்ற ஈஸ்ட்ரோஜன் அளவுகளை குறைத்து, ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது (11).

நன்மை 13: டீ-டாக்ஸ் (நச்சு நீக்கம்)

ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்த காலிஃபிளவர் முதல் நிலை டீடாக்சிஃபிகேஷன் எனும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் நிகழ்வை நிகழ்த்த பயன்படுகிறது மற்றும் சல்பர் கொண்ட உறுப்புகள் இரண்டாம் நிலை டீடாக்சிஃபிகேஷன் எனும் நச்சு நீக்க நிகழ்வுகளை நிகழ்த்த உதவுகின்றன (12).  காலிஃபிளவரில் உள்ள குளுகோசினோலெட்கள், நச்சு நீக்க செயல்பாட்டில் ஈடுபடும் இதர என்சைம்களின் செயல்பாட்டை தூண்டி விட உதவுகின்றன.

நன்மை 14: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

Shutterstock

காலிஃபிளவரில் இருக்கும் குறைந்த கார்போஹைட்ரேட் சத்துக்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன; இதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு, அந்நோயை போக்க உதவும் வரம் போன்றது – காலிஃபிளவர்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கை நிறைய சமைக்கப்படாத, நன்கு வெந்நீரில் கழுவப்பட்ட, பச்சையான காலிஃபிளவர் பூக்களை உண்டால், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று கூறப்படுகிறது; ஆனால், இதை உறுதி செய்யும் போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட்/ போலிக் அமில மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, பிற நோய்க்குறைபாடுகள் உடலை அண்டாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.

நன்மை 15: தோல் மற்றும் முடி ஆரோக்கியம்

காலிஃபிளவரில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலில் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி, உடலை வயதானது போல் தோன்ற செய்யும் சுருக்கங்கள், சருமத்தில் உருவாகும் கோடுகள், தழும்புகள் போன்றவற்றை போக்கி – வயது முதிர்ச்சியை தடுத்து, இளமையான தோற்றத்தை கொண்டிருக்க செய்ய உதவுகிறது; இக்காய்கறியில் உள்ள இதர ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் கரும்புள்ளிகளை நீக்கி, அற்புதமான சரும தன்மை கிடைக்குமாறு செய்ய பயன்படுகின்றன.

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் சி உதவுகிறது மற்றும் கூந்தலை பலப்படுத்தி, முடியின் வேர்கால்களுக்கு உறுதியை தந்து, ஆரோக்கியமான தலைமுடியை பெற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உதவுகின்றன. மொத்தத்தில் காலிஃபிளவர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, தோல் மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அற்புதமான நன்மைகளை அள்ளி தருகின்றது.

இதுவரை காலிஃபிளவர் தரும் நன்மைகள், பயன்கள் என்னென்ன என்பது பற்றி படித்து அறிந்தோம்; இனி காலிஃபிளவரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை என்பது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

காலிஃபிளவரின் ஊட்டச்சத்து மதிப்பு

காலிஃபிளவரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சக்தி கூடாரம் என்றே குறிப்பிடலாம்; இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை பெற விரும்பும் நபர்கள் கட்டாயமாக, காலிஃபிளவரை தங்களது டயட் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். காலிஃபிளவர் சற்று வித்தியாசமான அமைப்பு கொண்ட காய்கறி; அத்தகைய வித்தியாசமான காய்கறியில் இருந்து கிடைக்கும் பலன்களும் ஊட்டச்சத்துக்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்குகின்றன.

தற்பொழுது காலிஃபிளவரில் எத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன என்பதை கீழ்க்கண்ட அட்டவணையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

நியமம் அல்லது கொள்கைஊட்டச்சத்து மதிப்புRDA -இன் சதவிகிதம்
சக்தி25 Kcal1%
கார்போஹைட்ரேட்4.97 g4%
புரதம்1.92 g4%
மொத்த கொழுப்பு0.28 g1%
கொழுப்பு0 mg0%
நார்ச்சத்து உணவு2.0 g5%
வைட்டமின்கள்
ஃபோலேட்கள் அல்லது போலிக் அமிலம்57 µg14%
நியாசின்0.507 mg3%
பேண்டோதெனிக் அமிலம்0.667 mg13%
பைரிடாக்சின்0.184 mg14%
ரிபோஃப்ளாவின்0.060 mg4.50%
தையமின்0.050 mg4%
வைட்டமின் ஏ0 IU0%
வைட்டமின் சி48.2 mg80%
வைட்டமின் ஈ0.08 mg0.50%
வைட்டமின் கே15.5 µg13%
எலக்ட்ரோலைட்டுகள் அல்லது மின்பகுபொருள்கள்
சோடியம்30 mg2%
பொட்டாசியம்299 mg6%
கனிமங்கள் அல்லது  தாதுக்கள்
கால்சியம்22 mg2%
காப்பர்/ தாமிரம்0.039 mg4.50%
இரும்பு0.42 mg5%
மெக்னீசியம்15 mg3.50%
மாங்கனீசு0.155 mg7%
துத்தநாகம்/ ஜிங்க்0.27 mg2.50%
தாவர ஊட்டச்சத்துக்கள்
கேரட்டின்- B0 µg
லூடெய்ன் – ஜியாசாந்தின்1 µg

காலிஃபிளவரை எப்படி பயன்படுத்த வேண்டும்?

Shutterstock

பொதுவாக காலிஃபிளவரை கூட்டு அல்லது குழம்பு செய்ய பயன்படுத்துவர்; இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உட்கொள்ளலாம். காலிஃபிளவர் வழங்கும் எல்லா வித நன்மைகளையும் பெற, காலிஃபிளவரை வேக வைத்து உட்கொள்வதே சிறந்தது; எந்த ஒரு காய்கறியையும் அதிகம் சமைக்காமல் உட்கொண்டால், அதில் இருக்கும் எல்லா ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெற முடியும்.

மூட்டு வலி, வீக்கம், வாத காய்ச்சல் போன்றவற்றை சரி செய்ய ஒரு தேக்கரண்டி காலிஃபிளவர் பசையுடன், சிறிதளவு பூண்டு, ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். உடலில் மூட்டு வலி உள்ள இடத்தில் அல்லது அடிபட்ட இடத்தில் காலிஃபிளவரின் இலைகளை வைத்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

காலிஃபிளவர் இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து, உடலில் வீக்கம் அல்லது வலி உள்ள இடத்தில் பத்து போட்டால், வீக்கம் எளிதில் சரியாகும். உடல் பலம் பெற ஒரு தேக்கரண்டி காலிஃபிளவர் பசையுடன், சிறிதளவு மிளகுப்பொடி, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

காலிஃபிளவரை கொண்டு சாலட், சூப், ஸ்டியூ போன்ற உணவு வகைகளை தயாரித்து உட்கொள்ளலாம். காலிஃபிளவரை கொண்டு கோபி மஞ்சூரியன் போன்ற வறுவல் வகை சைட் டிஸ்களை தயாரிக்கலாம்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக கோபி மஞ்சூரியன் திகழ்கிறது.

காலிஃபிளவரின் பக்க விளைவுகள்

காலிஃபிளவர் என்பது பல நன்மைகளை வழங்கும் காய்கறியாக திகழ்ந்தாலும், அதுவும் கூட சில நேரங்களில், சில நபர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்; ஏனெனில் எந்த ஒரு உணவுக்கும், பொருளுக்கும் நன்மை மற்றும் தீமை என்ற இரண்டு பக்கங்கள் உண்டு.

காலிஃபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி முந்தைய பத்திகளில் தெளிவாக படித்து அறிந்தோம்; இப்பொழுது காலிஃபிளவரை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய  பக்க விளைவுகள் என்னென்ன என்பது பற்றி இந்த பத்தியில் பார்க்கலாம்.

  • அயோடின் சத்துக்களை உறிஞ்சுவதில் ஏற்படும் பிரச்சனைகள்

காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளில், சையனோஜெனிக் குளுகோசைட்கள் இருக்கின்றன. இவை சர்க்கரை போன்ற மூலக்கூறுகள்; இவை உடலில் அயோடின் சத்து உறிஞ்சப்படுதலை தடுக்கின்றன. காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளை அதிக அளவு உட்கொண்டால், அது ஹைப்போ தைராய்டிசத்தை ஏற்படுத்தலாம்; அதாவது உடலுக்கு போதிய தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படாமல், உடலின் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

  • இரைப்பை குடல் பிரச்சனைகள்

காலிஃபிளவர் காய்கறியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது வாயு தொல்லையை ஏற்படுத்தி விடலாம்; ஏனெனில் காலிஃபிளவரில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் எளிதில் உடைந்து விடாது. இதனால் வாயு தொந்தரவு ஏற்படலாம்; குடல் பகுதியில் காணப்படும் பாக்டீரியாக்களால், இந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் குடல் பகுதியில் செரிமானம் செய்யப்படுகின்றன மற்றும் கார்பனை வெளிவிடுகின்றன. மேலும் ஹைட்ரோ கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன.

  • இரத்த உறைவுகள்

காலிஃ பிளவரில் இருக்கும் வைட்டமின் கே சத்து, இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது; இரத்தத்தை மெலிதாக்க உதவும் மருந்தான கௌமாதின் போன்ற மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் காலிஃபிளவரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.

  • கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் சமயத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் காலத்தில் காலிஃபிளவர் உட்கொள்வது குறித்த போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை; கர்ப்ப காலத்தில், காலிஃபிளவரை உட்கொள்ள எண்ணும் கர்ப்பிணி பெண்கள், தங்களது மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்ற பின் எடுத்துக் கொள்வது நல்லது. தாய்ப்பால் அளிக்கும் பருவத்தில் இருக்கும் பெண்கள், காலிஃபிளவரை உட்கொண்டால், அது குழந்தையின் உடலில் வாயு கோளாறை ஏற்படுத்தலாம்.

குறிப்பு: காலிஃபிளவரை உணவு சமைக்க பயன்படுத்தும் முன்னர், வெந்நீர் கொண்டு நன்கு கழுவி விட வேண்டும்; இல்லையேல் இக்காய்கறியில் புழுக்கள் ஏதேனும் இருந்தால், அவை உடலில் நோய்க்குறைபாடுகளை ஏற்படுத்தி, மூளையை பாதித்து இறப்பை கூட ஏற்படுத்தி விடலாம்.

காலிஃபிளவர் என்பது எளிதில் கடைகளில் கிடைக்கூடிய ஒரு அற்புதமான காய்கறி ஆகும். இதனை சரியான முறையில் கழுவி பயன்படுத்தினால் மட்டுமே சரியான பலன்களை பெற முடியும். மேலும் காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள் குறித்த ஒவ்வாமை உள்ள நபர்கள், முறையான மருத்துவ ஆலோசனையை மேற்கொண்ட பின் இதை உட்கொள்வது நல்லது.

காலிஃபிளவர் தரும் அற்புதமான ஊட்டச்சத்துக்களை பெற, அதனை சுகாதாரமான முறையில் சமைத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்; அப்படி செய்தால், ஆரோக்கியமான பலன்களை பெற முடியும். காலிஃபிளவர் காய்கறியை உங்களுக்கு பிடிக்குமா? அதனால் நீங்கள் பெற்ற பலன்கள் யாவை? காலிஃபிளவரை நீங்கள் எப்படி சமைத்து உட்கொள்வீர்கள்? உங்களுக்கு பிடித்த காலிஃபிளவர் ரெசிபி எது போன்ற தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வழியாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Was this article helpful?
scorecardresearch