இனி உடல் எடை குறைய ஒரு புடலங்காய் போதும்! – Benefits of Snake gourd in Tamil

Written by StyleCraze

புடலங்காயானது பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நாட்டுக் காய்களில் ஒன்று. உலகம் முழுதும் பயன்படுத்தும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. தென்மேற்கு ஆசிய பகுதிகளில் தான் இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கேரட், பீட்ரூட் போன்ற ஆங்கில காய்கறிகளை விட இந்த நாட்டுக்காய்கள் அதிக ஊட்டச்சத்து கொண்டது.

புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil). இது அனைத்து சந்தைகளிலும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் தாவரப்பெயர் ட்ரைகோ சந்தோஷ் குக்கூ மெரினா. இது சிச்சிண்டா(chichinda ) மற்றும் பட்வல்(padwal ) என்றும் அழைக்கப்படுகிறது. இது நம் நாட்டில் பல்வேறு இடங்களில் பயிரடப்பட்டு நல்ல விளைச்சல் தருகிறது. இதை பொரியல், குழம்பு மற்றும் கூட்டு செய்து சாப்பிடலாம். இது பல வியாதிகளை குணப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

புடலங்காயில் கொத்துப்புடல், நாய்ப்புடலை, பன்றி புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. பன்றி புடலை கொடியாக இருந்தாலும் நீளமாக இல்லாமல் நீளம் குறைவாக இருக்கும். பேய்புடல் மிகவும் கசப்பானது. அதனால் இதை சமையலுக்கு பயன்படுத்த மாட்டார்கள். புடலங்காயை பிஞ்சாக இருக்கும் போது பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். (snake gourd vegetable in tamil).

முதிர்ச்சியடையாத புடலங்காய்க்குள் இருக்கும் விதைகளில் கூட கால்சியம், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கும் பண்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளது(chichinga vegetable in tamil). இருதய நோய், குடல் பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அவை நொறுக்கப்பட்ட பொடிகளாக அல்லது திரவ வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

புடலங்காய் உடலுக்கு நல்லதா?

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போஹைட்ரேட், மினரல்கள்,இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.

எல்லாவற்றையும் விட புடலங்காயில் மிக அதிகமாக நீர் சத்து இருக்கிறது. எனவே இது உடலுக்கு அதிக வலுவை அளிக்கிறது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உடல் எடை குறைப்பு மற்றும் பல நன்மைகளை செய்கிறது(snake gourd tamil).

புடலங்காயின் பயன்கள்( snake gourd benefits in tamil)

பயன் 1: நீரிழிவு நோயைக் குணப்படுத்துகிறது

புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது.  இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. சீன மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு புடலங்காய் மருந்தாக பயன்படுகிறது(1).

பயன் 2: காய்ச்சலைக் குணப்படுத்துகிறது.

ட்ரைக்கோ சாந்தஸ் குகு மெரினா என்றும் அழைக்கப்படும் புடலங்காய் பித்த காய்ச்சலைக் குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.இதனுடன் நீங்கள் கொஞ்சம் தேன் சேர்த்தால், புடலங்காயின் செயல்திறன் அதிகரிக்கும். மேலும் இது பித்த காய்ச்சலுக்கு விரைவாகவும் திறமையாகவும் சிகிச்சை அளிக்கிறது.. கொத்தமல்லி இலைகளுடன் புடலங்காய் பயன்படுத்தினால் பித்த காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. மலேரியா காய்ச்சலுக்கும் சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது(2).

பயன் 3: இதயத்தை பாதுகாக்கிறது.

படபடப்பு போன்ற தமனி கோளாறுகள், இதயத்தில் வலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிற நிலைமைகளுக்கு புடலங்காய் சாறு சிறந்த தீர்வாகும். இந்த சாறு இதயத்தின் ரத்த சுழற்சியை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக நீங்கள் இதய பிரச்சினைகளால் குறைவாக பாதிக்கப்படுவதை உறுதி செய்கிறது. எனவே இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, புடலங்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்(3).

பயன் 4: செரிமானத்தை சீராக்குகிறது.

புடலங்காயில் ஒரு குறிப்பிடத்தக்க நார்ச்சத்து உள்ளது.இது மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற நிகழ்வுகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது, இதனால் குடலில் ஏற்படும் அனைத்து விதமான சிக்கல்களையும் குறைகிறது.

பயன் 5: மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது.

மஞ்சள் காமாலை போன்ற நோய்களை எதிர்ப்பதில் புடலங்காய் இலைகள் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 30-60 கிராம் அளவிலான இலைகளை நீங்கள் உட்கொள்ளலாம்.கொத்தமல்லி விதைகளுடன் நசுக்கி ஒவ்வொரு நாளும் மூன்று முறைசாப்பிட்டு வந்தால்மஞ்சள்காமாலைக்குவிரைவில்தீர்வுகிட்டும். மிக எளிமையாக ஜீரணமாகக் கூடிய உணவை மஞ்சள் காமாலை உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இந்த புடலங்காய் சாறு குடித்து வந்தால், மஞ்சள் காமாலை மிக விரைவாக குணமடைந்து விடும்(4).

பயன் 6: உடலைச் சுத்திகரிக்கிறது.

புடலங்காய் சாறு ஒரு இரத்த சுத்திகரிப்பு உணவாகும். இது ரத்தத்தில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. புடலங்காய் இலைகள் குடல்களை சுத்தப்படுத்தி உதவுகின்றன. அதன் நன்மைகளைப் பெற நீங்கள் தினமும் காலையில் 1-2 டீஸ்பூன் புடலங்காய் சாற்றை உட்கொள்ளலாம். மலச்சிக்களுக்கு சிகிச்சையளிக்க புடலங்காய் விதைகள் பயன்படுத்தப்படுகின்றன(5).

பயன் 7: தலை வழுக்கை

மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருப்பதால் புடலங்காய் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். இந்த தாதுக்கள் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன. மேலும் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாவது ஊக்குவிக்கின்றன(6).

பயன் 8: மலச்சிக்கல்

புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.இது மலத்தை மென்மையாக்குவதற்கும் வீக்கம் மற்றும் மலச்சிக்கலின் விளைவுகளை குறைப்பதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது.

உடலில் போதிய நீர் சத்துக்கள் இல்லாமல் போனால் தான் மலச்சிக்கல் உண்டாகும். புடலங்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.அதனால் காலையில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு ஸ்பூன் புடலங்காய் சாறு குடித்து வந்தால் போதும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்(7).

பயன் 9: குறைந்த கலோரி

புடலங்காய் குறைந்த கலோரி கொண்ட உணவு. இது உடலில் எந்த கொழுப்பையும் சேர்க்காமல், தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எனவே இந்த காய்கறியை உண்ணுவதன் மூலம் நீங்கள் கூடுதல் எடையைக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்பலாம்(8).

பயன் 10: அதிக ஊட்டச்சத்து

மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருப்பதால் புடலங்காய் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். இந்த தாதுக்கள் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன. மேலும் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை ஊக்குவிக்கின்றன.

பயன் 11: பொடுகை நீக்குகிறது

புடலங்காயின் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று பொடுகு நோயைக் குணப்படுத்துகிறது.புடலங்காய் இலையின் சாற்றை உங்கள் உச்சந்தலையில் தேய்த்து, அரை மணி நேரத்திற்கு பின் கழுவிவிடுங்கள்.புடலங்காய் சாறு பொதுவாக உடலில் திரவ உற்பத்தி அதிகரிக்க தூண்டுகிறது மற்றும் உச்சந்தலையில் ஈரப்பதத்தை தருகிறது (9).

புடலங்காய் உங்களுடைய அதிகப்படியான பொடுகைப் போக்கும் தன்மை கொண்டது. புடலங்காய் சாறு எடுத்து தலை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இந்த சாறினைத் தேய்த்து அரை மணி நேரம் வரை ஊற விட்டு பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசினால் போதும், பொடுகுப் பிரச்சனைகள் அத்தனையும் சரியாகிவிடும்.

புடலங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை?

ஊட்டச்சத்துக்கள்86.2 கிலோகலோரி
மொத்த கொழுப்பு3.9 கிராம்
நிறைவுற்ற கொழுப்பு0.5 கிராம்
மொத்த கார்போஹைட்ரேட்12.5 கிராம்
உணவு இழை0.6 கிராம்
புரதம்2.0 கிராம்
கொலஸ்ட்ரால்0.0 மி.கி.
சோடியம்33.0 மி.கி.
பொட்டாசியம்359.1 மி.கி.

நுண்ணூட்டச்சத்துக்கள்:

வைட்டமின்கள்:
வைட்டமின் ஏ9.8%
வைட்டமின் பி 611.3%
வைட்டமின் சி30.5%
வைட்டமின் ஈ1.1%

 

தாதுக்கள்:
கால்சியம்5.1%
மெக்னீசியம்6.7%
பாஸ்பரஸ்5.0%
துத்தநாகம்7.2%
இரும்பு5.7%
மாங்கனீசு12.5%

புடலங்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்?

புடலங்காயை பல்வேறு விதங்களில் சமைத்து சாப்பிடலாம். புடலங்காய் கூட்டு, பொரியல், புடலங்காய் சட்னி மற்றும் புடலங்காய் தயிர்பச்சடி என பல வகை உணவுகள் தயாரிக்கலாம். மேலும் இதனை காய வைத்து அரைத்து பொடியாக்கி பயன்படுத்தலாம். புடலங்காய் முடிக்கு மிகவும் நல்லது(snake gourd for hair) என அனைவருக்கும் தெரிந்ததே. எனவே இதிலிருந்து முடிக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.புடலங்காய் ஹேர் ஜெல், ஹேர் மாஸ்க் மற்றும் பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும் சாதாரணமாக உணவில் சேர்த்துக் கொண்டாலே அதன் முழுப் பலனும் கிடைக்கும்.

புடலங்காய் கூட்டு ஒரு சுவையான உணவு வகையாகும் . இது எப்படி செய்வது என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

 • நடுத்தர அளவிலான புடலங்காய் – 2
 • பாசிப்பருப்பு – 1 கப்
 • கடுகு – தேவையான அளவு
 • சீரகம் – ½ தேக்கரண்டி
 • உலர்ந்த சிவப்பு மிளகாய் – 2
 • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
 • பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
 • சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
 • உப்பு-  தேவைக்கேற்ப
 • எள் எண்ணெய் – 1 டீஸ்பூன்
 • கொத்தமல்லி இலைகள் – அழகுபடுத்துவதற்காக
 • அரைத்த தேங்காய் – ¼ கப்

செய்முறை:

 1. புடலங்காயை கழுவவும், விதைகளை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
 2. பாசிப்பருப்புக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து, வெட்டப்பட்ட புடலங்காயுடன் குக்கரில் இரண்டு விசில்களுக்கு மிதமான சூட்டில் வைக்கவும்.
 3. அரைத்த தேங்காயை சீரகத்துடன் கலக்கவும், சிறிது தண்ணீரை மிக்ஸியில் சேர்த்து ஒதுக்கி வைக்கவும்.
 4. ஒரு ஆழமான வாணலியில், சிறிது எள் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து, அத்துடன் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
 5. வாணலியில் இந்த வதக்கிய கலவையை சமைத்த பருப்பு மற்றும் புடலங்காயின் சிறிது தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
 6. இப்போது சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சமைக்கவும்.
 7. கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
 8. இந்த புடலங்காய் கூட்டு மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சூடான அரிசியுடன் சாப்பிடலாம்.

புடலங்காய் சாப்பிடும் முன்பு நினைவில் கொள்ள வேண்டியவை:

புடலங்காயை உட்கொள்ளும் போது எடுக்க வேண்டிய ஒரே முன்னெச்சரிக்கை, அதன் விதைகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பதுதான். விதைகளை அதிகமாக உட்கொண்டால் குமட்டல், அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை அசௌகரியம் ஏற்படலாம்.

புடலங்காய் உண்பதால் உண்டாகும் பக்க விளைவுகள் யாவை?

 1. உங்கள் உள்ளூர் சந்தை அல்லது கடையிலிருந்து எப்போதும் புதிய தயாரிப்புகளை மட்டுமே வாங்கவும். புடலங்காய் பல முக்கிய தாதுக்களைக் கொண்டுள்ளது.
 2. எனவே, அதிகப்படியாக எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும். விளைச்சலின் போது அதிக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதால் நல்ல முறையில் சுத்தம் செய்து சரியான அளவில் உபயோகிக்க வேண்டும்.
 3. இல்லையெனில் உங்கள் வீட்டு மாடியில் கூரை போட்டு நீங்களே சுகாதாரமாக வளர்க்கலாம்.

இறுதியாக…

பொதுவாக, புடலங்காய் உடல் ஆரோக்கியம் தோல் மற்றும் முடியின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான நபர்களில் உடற்பயிற்சி பண்புகளை மேம்படுத்துவதோடு, ஆயுர்வேதத்திலும் புடலங்காய் வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது, இது பல்வேறு நோய்களுக்கான சிறந்த வீட்டு மருந்தாகும்.

புடலங்காய், இலை மற்றும் சாறுகள் எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது, ஆனால் புதிய காய்கறிகள் மட்டுமே வாங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..ஒட்டுமொத்த நல்வாழ்வை திறம்பட வளர்ப்பதற்காக புடலங்காயை மிதமாக தவறாமல் உட்கொள்ளலாம்.

தொடர்பான கேள்விகள்

புடலங்காயின் இயற்கைத் தன்மை என்ன?

புடலங்காய் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு காய்கறியாகும். வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக குளிர்பானங்களை எடுத்துக் கொள்வதை விட புடலங்காய் உண்ணுவது நல்லது.

புடலங்காய் ஒரு பழமா?

ஆம், புடலங்காய் ஒரு பழமாகும்.இது காய்கறியாகவும் காய்ந்த பிறகு சோப்பாகவும் பயன்படுகிறது.

ஏன் புடலங்காய் கசப்பாக உள்ளது?

புடலங்காயில் அதிகளவில் குயினின்(quinine) இருப்பதாலே இது கசப்பாக உள்ளது.

புடலங்காயில் உள்ள வைட்டமின்கள் யாவை?

வைட்டமின் ஏ, பி, மற்றும் சி உள்ளது.

புடலங்காயை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?

புடலங்காய்கள் உறுதியான, மென்மையான மற்றும் வெளிர் பச்சை முதல் அடர் பச்சை வரை இருக்க வேண்டும். புடலங்காயின் மேல் காயங்கள் அல்லது மென்மையான புள்ளிகள் இருப்பது இது மோசமானது என்பதற்கான அறிகுறிகள் எனலாம். கடினமான மற்றும் மிருதுவாக இல்லாமல் புடலங்காய் முதிர்ச்சியடைந்த தாகவும், இறுக்கமாகவும் இருக்கும்.

9 sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.
scorecardresearch