புதினா எண்ணெய் தரும் பற்பல ஆரோக்கிய நன்மைகள் – Benefits of Peppermint Oil in Tamil

Written by StyleCraze

புதினா வெறும் சமையலுக்கு மட்டும் தான் பயன்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனைத் தாண்டி பல அற்புத பலன்களை கொடுக்க கூடியது. அதனை எண்ணெய் வடிவில் மாற்றும் போது, இன்னும் மதிப்பு மிக்கதாக மாறுகிறது. மிளகுக்கீரை எண்ணெய் அல்லது புதினா எண்ணெய் (peppermint oil in Tamil ) என்பது ஸ்பியர்மிண்ட் மற்றும் வாட்டர்மிண்டின் நறுமண கலப்பினமாகும். இது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட புதினா இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பண்டைய மற்றும் நவீன மருத்துவ முறைகள், சமையல் கலை மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டது. பண்டைய எகிப்து மருத்துவ முறைகளில், புதினா எண்ணெய் முக்கிய பங்காற்றியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகையில் உதவுகிறது? சரும அழகை மேபடுத்த எவ்வாறு துணைபுரிகிறது? என்பது மாதிரியான பல தகவல்களை இனி தொடர்ச்சியாக பார்க்கலாம்.

புதினா எண்ணெய் என்றால் என்ன?

மிளகுக்கீரை எனப்படும் புதினா தாவரத்தின் தண்டு, இலைகள் மற்றும் பூக்களிலிருந்து புதினா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது பழமையான மருத்துவ சிகிச்சை முறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உண்ணக்கூடிய தரத்தில் உள்ள புதினா எண்ணெய் நுகர்வுக்கு ஏற்றதாகும்.

புதினா எண்ணெய் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் தாமிரம் ஆகியவை நிறைந்துள்ளது. அதில் மிக முக்கியமாக மெந்தோல் மற்றும் மென்டோன் காணப்படுகிறது. (1)

புதினா எண்ணெயில் ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேட்டிவ் பண்புகள் உள்ளன. எனவே,  இது பல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

புதினா எண்ணெயின் பயன்கள்

புதினா எண்ணெய் புண், தலைவலி, வெயில், அரிப்பு மற்றும் பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. வீட்டில் பூச்சிகள் மற்றும் எலி தொல்லையில் இருந்து விடுபட வீட்டைச் சுற்றி இதைப் பயன்படுத்தலாம். இரைப்பை குடல் கோளாறுகளான குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வாய்வு மற்றும் ஐ.பி.எஸ் போன்ற உடல் ஆரோக்கிய சிக்கல்களுக்கு தீர்வளிக்கிறது. புதினாவின் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும். புதினா எண்ணெயின் பயன்பாடுகள், சுகாதார நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அடுத்து பார்க்கலாம்.

புதினா எண்ணெயின் ஆரோக்கிய பயன்கள் (Health Benefits of Peppermint Oil in Tamil)

புதினா சுவை உடலுக்கு ஊக்கமளிக்கிறது. இது ஈறுகள், பூச்சி விரட்டிகள் மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் போன்ற பல தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. புதினா எண்ணெயின் முக்கிய பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

புதினா எண்ணெய் வாயு, நெஞ்செரிச்சல்,  வயிறு வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. புதினா எண்ணெய் ஒரு இயற்கையான கார்மினேட்டிவ் ஆகும். எனவே இது வயிற்று தசைகளை தளர்த்தி, வாய்வு தொல்லையை  நீக்குகிறது. மனித பெருங்குடலின் மென்மையான தசைகள் மீது, இந்த எண்ணெயில் உள்ள மெந்தாலின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கால்சியம் படிவதை தடுப்பதன் மூலம் பெருங்குடல் தசையை பாதுகாப்பதாக கண்டறியப்பட்டது. இது இரைப்பை குடல் தசையில் ஸ்பாஸ்மோலிடிக் விளைவைத் தூண்டுகிறது. இந்த விளைவு செரிமானத்திற்கும், வயிற்று காலியாவதற்கும் உதவும்.

இரைப்பை குடல் எண்டோஸ்கோபியின் போது, ​​வயிறு வலிக்கத் தொடங்குகிறது. இதனால்தான் நோயாளிக்கு ஆண்டிஸ்பாஸ்மோடிக் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். இது பொதுவாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். புதினா எண்ணெய் கொலோனோஸ்கோபி நடைமுறைகளை எளிதாக்க பயன்படுத்தப்படுகிறது. எண்டோஸ்கோபிக் ரெட்ரோகிரேட் சோலாங்கியோபன்கிரேட்டோகிராபி (ஈ.ஆர்.சி.பி) எனப்படும் மருத்துவ நடைமுறை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் புதினா எண்ணெய் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத ஒரு சிறந்த ஆண்டிஸ்பாஸ்மோடிக் என்று முடிவு செய்யப்பட்டது.

வயதானவர்களுக்கு உணவுக்குழாய் அழற்சி ஏற்படும் போது புதினா எண்ணெய் சிறந்த ஆண்டி பாஸ்மோடிக் மருந்தாக இருக்கும் என்று மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. (2)

2. சுவாச அமைப்பை சீராக்க உதவுகிறது

புதினா எண்ணெய் குளிர் அல்லது காய்ச்சலால் பாதிக்கப்படும் போது, சுவாசிக்கையில் காற்றை உள்ளிழுக்கும் போது வீக்கமடைந்த நாசிப் பாதைகளுக்கு இதமளிக்கிறது. மெந்தாலின் பண்பு வலி நிவாரணியாக செயல்படுகிறது. சுவாசப் பாதையில் சளி மற்றும் இருமலின் போது கடினமான உணர்வு ஏற்படுகிறது. புதினா எண்ணெய் சளியை மெல்லியதாக மாற்றி,  சளியை உடலில் இருந்து வெளியேற்றி நிவாரணம் அளிக்கிறது. (3)

3. தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை குறைக்கிறது

புதினா எண்ணெய் தலைவலிக்கு இயற்கையான தீர்வாகும். புதினா எண்ணெயில் உள்ள மெந்தால் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இது துடிக்கும் தசைகளை தளர்த்தவும், தலைவலியை எளிதாக்கவும் உதவும். (4)

4. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது

புதினா எண்ணெய் பல நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. இது உடலில் இரத்த ஓட்ட சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. புதினா எண்ணெய் சிறந்த வாசோடைலேட்டர் என்பதால், இரத்த நாளங்களை விரிவாக்கவும், திறக்கவும் உதவுகிறது.  மோசமான இரத்த ஓட்டத்திற்கு ஒரு காரணம், சுருக்கப்பட்ட இரத்த நாளம் ஆகும். மிகவும் குறுகலான இரத்த நாளத்தில் உடலுக்கு போதுமான இரத்தத்தை நகர்த்த முடியாது. புதினா எண்ணெய் இரத்த நாளங்களை விரிவாக்குவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

5. வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பல தயாரிப்புகளில் புதினா எண்ணெய் அல்லது புதினா சாறு புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வாயில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் புதினா எண்ணெய் சக்தி வாய்ந்தது என்று அறிவியல் ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. புதினா எண்ணெயின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் வாயில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பிற மைக்ரோஃப்ளோராவை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இந்த எண்ணெயில் உள்ள மெந்தால் வலி நிவாரணி பண்பை கொண்டுள்ளது. இதனால், பல்வலியைக் குறைக்கவும், ஈறு நோய், வாய்வழி துவாரங்கள் மற்றும் பிற வாய்வழி சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லவும் இது உதவக்கூடும். (4)

6. மன அழுத்தத்திற்கு நிவாரணம் அளிக்கிறது

புதினா எண்ணெய் தசைகள் வலி மற்றும் கடினமான மூட்டு வலிகளுக்கு தீர்வளிக்கிறது. வலி நிவாரணி பண்புகள் வலியைக் குறைக்கவும் நிவாரணம் வழங்கவும் உதவுகின்றன. புதினா எண்ணெயின் இனிமையான நறுமணம் உடலையும் மனதையும் தளர்த்த உதவும். இது அத்தியாவசிய எண்ணெய்கள் போல மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. புதினா எண்ணெய் வலி நிவாரணி மருந்துகளுக்கு மாற்றாக பாதுகாப்பான, நச்சுத்தன்மையற்ற மற்றும் மலிவான மருந்தாகும். (5)

7. சைனஸ் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது

புதினா எண்ணெயின் செயல்பாட்டால் மூக்கின் உள்ளே உள்ள சைனஸ் குழிகள் திறக்கப்படுகின்றன. எனவே சுவாசிப்பது எளிதாகிறது. சளி, இருமல், தொண்டை புண், சைனஸ் அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பெரும்பாலான சுவாசக்குழாய் தொடர்பான பிரச்சினைகளை புதினா எண்ணெய்  மூலம் சிகிச்சை அளிக்கலாம். எனவே, இது மெடிக்கலில் கிடைக்கும் மருந்துகளுக்களை காட்டிலும், பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் நச்சுத்தன்மையற்ற மாற்றாகும். (6)

8. தசைகளுக்கு நிவாரணம் தருகிறது

புதினா எண்ணெய் தசைகளில் உள்ள புண்ணை குணப்படுத்தும் என்று சான்றுகள் கூறுகின்றன. இதை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வது இதய நோயாளிகளில் டிஸ்பேஜியா மற்றும் மார்பு வலியைப் போக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

புதினா எண்ணெயில் மெந்தால் மற்றும் லிமோனின் உள்ளன. மெந்தால் மற்றும் லிமோனின் இரண்டும் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை தசைகளை தளர்த்த உதவுகின்றன . இதனால், புதினா எண்ணெய் முதுகு, முழங்கால், கழுத்து மற்றும் வலிக்கு பயன்படுத்த பாதுகாப்பானது. (7)

9. அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் குமட்டலைக் குறைக்க உதவுகிறது

புதினா எண்ணெயை உள்ளெடுப்பதன் மூலம் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்கலாம். இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் டிஸ்ரித்மியா அல்லது மயக்கம் போன்றவற்றிற்கு வழக்கமான பக்க விளைவுகள் கொண்ட மருந்துகளை விட, புதினா எண்ணெய் சிறந்த முடிவுகளை தந்தது. குமட்டல் என்பது கீமோதெரபியின் பொதுவான பக்க விளைவாகும். கீமோதெரபிக்கு உட்பட்ட புற்றுநோயாளிகளுக்கு குமட்டலை ஸ்பியர்மின்ட் மற்றும் புதினா எண்ணெய்கள் கணிசமாகக் குறைத்தன. (8)

10. ஒவ்வாமைகளுக்கு தீர்வளிக்க பயன்படுகிறது

புதினா எண்ணெய் மூக்கு நாசியில் உள்ள காற்றுப்பாதைகளை சீராக்கி தசைகளை தளர்த்துவதால் பருவகால மாற்றத்தால் ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. இதனை பிற அத்தியாவசிய எண்ணெய்களுடன் (யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவை) இணைத்து பயன்படுத்தும் போது, ஒவ்வாமையிலிருந்து நிவாரணம் வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும். மிளகுக்கீரை எண்ணெயில் இருக்கும் மெந்தாலின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக இந்த பலன் கிடைக்கிறது. (9)

தோல் ஆரோக்கியத்திற்கு புதினா எண்ணெய் (Peppermint oil for skin)

புதினா எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதை போலவே, தோலுக்கும் புத்துணர்வான உணர்வை கொடுத்து ஆரோக்கியமாக்க செய்கிறது. அதன் பலன்களை எவ்வாறு அனுபவிக்கலாம் என அடுத்து பார்க்கலாம்.

1. சருமத்தை பிரகாசிக்க செய்ய உதவுகிறது

தேவையானவை 

 • 4 சொட்டு புதினா எண்ணெய்
 • 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்? 

 • ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதில் புதினா எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
 • இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு துடைத்துவிட்டு, முகம் கழுவலாம்.
 • ஆரோக்கியமான சருமத்தைப் பெற ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த செயல்முறையை மீண்டும் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

புதினா எண்ணெயில் உள்ள மெந்தால் தெளிவான, பிரகாசமான சருமத்தை ஊக்குவிக்கிறது. இது சூரிய கதிர் வீச்சால் உண்டாகும் தோல் சேதத்தை தடுக்கிறது.

2. முகப்பருக்களை குறைக்க உதவுகிறது

தேவையானவை 

 • 4 சொட்டு புதினா எண்ணெய்
 • 2 சொட்டு எலுமிச்சை சாறு

என்ன செய்ய வேண்டும்? 

 • ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் புதினா எண்ணெய் எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
 • இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு துடைத்துவிட்டு, முகம் கழுவலாம்.
 • ஆரோக்கியமான சருமத்தைப் பெற ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த செயல்முறையை மீண்டும் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

புதினா எண்ணெயின் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களை எதிர்த்து போராடுகின்றன. எலுமிச்சை நோய் கிருமிகளை அழிக்கிறது.

3. முகத்தின் மாசுக்களை நீக்க பயன்படுகிறது

தேவையானவை 

 • 4 சொட்டு புதினா எண்ணெய்
 • 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
 • 3 டீஸ்பூன் டேபிள் உப்பு

என்ன செய்ய வேண்டும்? 

 • ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில்,  உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும்.
 • அந்த கலவையில் புதினா எண்ணெயைச் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
 • இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு துடைத்துவிட்டு, முகம் கழுவலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

ஆலிவ் எண்ணெய் எண்ணெய் சரும துளைகளின் மீது செயல்படுகிறது. உப்பு சரும துளைகளில் உள்ள மாசுக்களை வெளியேற்றி சருமத்தை மாசு இல்லாததாக மாற்றுகிறது.

4. இயற்கையான டோனராக செயல்படுகிறது

தேவையானவை 

 • 115 மில்லி நீர்
 • 40 மில்லி ஆப்பிள் சைடர் வினிகர்
 • 30 சொட்டு புதினா எண்ணெய்
 • ஸ்ப்ரே பாட்டில்

என்ன செய்ய வேண்டும்? 

 • வடிகட்டிய நீர் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரைக் கலந்து, அதனுடன் புதினா எண்ணெய் சேர்த்து டோனர் தயார் செய்யவும்.
 • அதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.
 • முகத்திற்கு டோனர் தேவைப்படும் போது, இதனை ஸ்பிரே செய்யலாம்.

எவ்வாறு வேலை செய்கிறது?

புதினா எண்ணெயின் குளிரூட்டும் விளைவு உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

5. தெளிவான சருமத்திற்கு முக மாஸ்க்

தேவையானவை

 • 2 தேக்கரண்டி அரைத்த வெள்ளரி
 • 2 தேக்கரண்டி பச்சை களிமண்
 • 5 மில்லி நீர்த்த புதினா எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்? 

 • அரைத்த வெள்ளரிக்காய் மற்றும் புதினா எண்ணெயை ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி ஒன்றாக கலக்க வேண்டும்.
 • அந்த கலவையில் பச்சை களிமண் சேர்க்கவும்.
 • உங்கள் முகமெங்கும் அந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.
 • அது காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

எவ்வாறு வேலை செய்கிறது? 

களிமண், வெள்ளரி, புதினா ஆகிய மூன்றும் சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது. இறந்த செல்கள் நீக்கப்பட்டு, சருமத்தின் மேல் பகுதி பொலிவு பெறுகிறது.

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (Peppermint oil for hair)

உடலுக்கும், சருமத்திற்கும் அபரிவிதமான பயனளிப்பது போல, ஆரோக்கியமான கூந்தலை பெறவும் புதினா எண்ணெயை பயன்படுத்தலாம்.

1 முடியின் வளர்ச்சிக்கு புதினா எண்ணெய்

தேவையானவை 

 • ஷாம்பு (16 அவுன்ஸ்)
 • 1 டீஸ்பூன் மிளகுக்கீரை எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்?

 • புதினா எண்ணெயை ஷாம்பூவில் கலக்க வேண்டும்.
 • எண்ணெய் நன்கு கலந்து உள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன்பு நன்றாக குலுக்கி பார்க்க வேண்டும். இதனை வழக்கம் போல் தலைமுடிக்கு தேய்த்து குளிக்கலாம்.

எவ்வாறு வேலை செய்கிறது? 

புதினா எண்ணெய் நச்சுத்தன்மையற்ற மூலப்பொருள் ஆகும்.  இது முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இரத்த சுழற்சியை மேம்படுத்தி மயிர்க்கால்களை தூண்டுகிறது. எனவே அதிக ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன. இதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கப்படுகிறது.

2. உச்சாந்தலைமுடிக்கு ஊக்கமளிக்கும்

தேவையானவை 

 • 5-10 சொட்டு புதினா எண்ணெய்
 • 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்? 

 • புதினா எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக கலக்கவும்
 • அதனைக் கொண்டு உங்கள் தலைமுடியை மசாஜ் செய்ய வேண்டும். 2 மணி நேரம் அப்படியே விட்டு, பிறகு அதை கழுவ வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை சரி செய்வதற்கு புதினா எண்ணெய் கலந்த இந்த கலவை பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பிற சத்துக்கள் எண்ணெய்களின் ஊடுருவலை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

3. உச்சந்தலை ஆரோக்கியம் மற்றும் பொடுகுக்கு தீர்வளிக்கிறது

தேவையானவை 

 • 20 சொட்டு புதினா எண்ணெய்
 • 2 அவுன்ஸ் தேங்காய் எண்ணெய்
 • 1 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய்
 • 2 டீஸ்பூன் மோரிங்கா எண்ணெய்
 • 10 சொட்டு தேயிலை மர எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்? 

தேங்காய் எண்ணெயை சூடாக்கி, மேற்கண்ட மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கலவையை தயார் செய்ய வேண்டும். அதனை சிறிது நேரம் குளிர்விக்க விடவும்.

கலவையை உச்சந்தலையில் தடவி, கழுவுவதற்கு முன் இரண்டு மணி நேரம் அதை அப்படியே விட்டு விட வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது? 

புதினா எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்கவும், பொடுகு மற்றும் பேன்களிலிருந்து விடுபடவும் உதவும் என்று சான்றுகள் கூறுகின்றன. இதில் உள்ள மெந்தாலின் பண்புகள் இதற்கு காரணமாக அமைகின்றன.

புதினா எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?

இதனை உட்கொள்ளவும் செய்யலாம், தோலின் மீது மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம். ஆனால் புதினா எண்ணெய் பயன்படுத்தும் போது எப்போதும் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பிற எண்ணெயுடன் இணைந்து பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான அத்தியாவசிய எண்ணெய்கள் செறிவூட்டப்பட்ட வடிவத்தில் இருப்பதால் அவை மிகவும் சக்தி வாய்ந்தது. அதனை கொதிக்கும் நீரில் கலந்து, ஒரு பாத்திரத்தில் நீர்த்துப்போகச் செய்த பின் பயன்படுத்த வேண்டும் என்று ஹோலிஸ்டிக் அரோமாதெரபி சங்கம் (NAHA) தெரிவித்துள்ளது. சுய பயன்பாட்டிற்கு தவிர, புதினா எண்ணெய் பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம்.

எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம்?

ஹோலிஸ்டிக் அரோமாதெரபி சங்கம் (NAHA) பெரியவர்களுக்கு ஒவ்வொரு அவுன்ஸ் கேரியர் எண்ணெய்க்கும் 30 சொட்டு புதினா எண்ணெயைப் கலந்து பயன்படுத்த பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு கேரியர் எண்ணெய்க்கும் குழந்தைகளுக்கு 3 சொட்டுக்கு மேல் புதினா எண்ணெய் கலக்கக்கூடாது.

ஜோஜோபா, ஆலிவ், தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் எப்போதும் புதினா எண்ணெயைப் பயன்படுத்துங்கள். புதினா எண்ணெய் மிகவும் செறிவூட்டப்பட்டிருப்பதால், அவை சருமத்தில் காயங்கள் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.

புதினா எண்ணெய் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். உங்கள் உடலில் வேறு எங்கும் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

புதினா எண்ணெயின் பக்கவிளைவுகள் (Side effects of peppermint oil in Tamil)

புதினா எண்ணெய் ஜி6பிடி குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதகமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

CYP3A4 என்பது உங்கள் உடலில் உள்ள ஒரு நொதியாகும். இது பல மருந்துகளின் செயல்பாட்டை ஒருங்கிணைக்க உதவுகிறது. புதினா எண்ணெய் இந்த நொதியுடன் எதிர்மறையாக தொடர்புகொண்டு பாதிப்பை ஏற்படுத்தும்.

பல எண்ணெய்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல. மருத்துவரை அணுகிய பின்னரே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதினா எண்ணெயைப் பயன்படுத்த முடிவு செய்ய வேண்டும்.

புதினா எண்ணெய் வாசம் நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கும் நச்சுத்தன்மை அளிக்கும்.

இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக கோளாறுகள் மற்றும் கல்லீரல் நோய் போன்ற சில நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும்.

சில நேரங்களில் இதனை உட்கொள்வது நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும்

புதினா எண்ணெயில் உள்ள மெந்தால் சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, நீங்கள் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

புதினா எண்ணெயை சிறிய அளவில் உட்கொள்ளலாம். இதில் புலேகோன் எனப்படும் ஒரு பொருள் இருப்பதால் பெரிய அளவு நச்சுத்தன்மை உடையது.

முடிவாக

புதினா எண்ணெய் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோலிடிக் பண்புகள் உள்ளன. காயம் குணப்படுத்துவதை துரிதப்படுத்துகின்றன, மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகின்றன.

பொதுவாக புதினா எண்ணெயை மிதமாக உட்கொள்ளும் போது பாதுகாப்பாக கருதப்படுகிறது.  தற்போது, ​​புதினா எண்ணெய் மற்றும் அது அளிக்கும் சுகாதார நன்மைகள் குறித்து சில ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த ஆய்வுகளின் முடிவிலும் இதன் பல நன்மைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. உங்கள் தேவையை பொருத்து பயன்படுத்துவதற்கு முன்னர் ஒருமுறை மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறந்தது. பயன்படுத்தி பயனை அனுபவித்து பாருங்கள்.

Sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.