கீன்வா – அமெரிக்க பழங்குடியினரின் ஆரோக்கிய ரகசியம் ! – Benefits of Quinoa in Tamil

by StyleCraze

சீமைத்தினை,  இது ஆங்கிலத்தில் கீன்வா அல்லது குயினோவா என்றும் அழைக்கப்படுகிறது(quinoa in tamil). “சூப்பர் ஃபுட்” அல்லது “சூப்பர் கிரேன்” என்றும்  அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகவும் பிரபலமான சுகாதார உணவுகளில் ஒன்றாகும். சீமைத்தினை என்பது அமராந்தஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்செடி.  இது வருடாந்திர தாவரமாகும். இது அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படுகிறது. எனவே, சீமைத்தினையின்  நன்மைகளைப் பற்றி நாம் குறிப்பிடும் போது, அதன் விதைகளின் நன்மைகளை குறிக்கிறது என்று எண்ண வேண்டும்(quinoa seeds in tamil).

சீமைத்தினை ஆனது அரிசி மற்றும் கோதுமை போன்ற ஒரு முழுமையான உணவாகும். இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை நம் உடலுக்கு ஆற்றலை அளித்து பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கின்றன. எனவே தினமும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது வீட்டில் சீமைத்தினை சமைத்து உண்ணுவது நல்லது.

விதைகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை அதிக சத்தானவை. அவற்றில் குர்செடின்(quercetin) மற்றும் கேம்ப்ஃபெரோல்(kaempferol) ஆகிய இரண்டு முக்கியமான தாவர சேர்மங்களும் உள்ளன. இவை நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

சீமைத்தினை குளூட்டன் இல்லாதது, அதாவது சில நபர்களின் உடலுக்கு குளூட்டன் போன்றவை சேருவதில்லை. எனவே அவர்கள் அதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டு கொண்டுள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இதில் இரும்பு மற்றும் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கீன்வா என்றால் என்ன?

கீன்வா (Quinoa), இதன் தவவரப்பெயர் செனோபோடியம் கினோவா(quinoa in tamil). இது அமரந்தேசியே குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். இது அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காகப் பயிரிடப்படும் செடிவகையாகும். இந்த விதைகளில் கூடுதலான புரதமும் நார்ச்சத்துக்களும் உயிர்ச்சத்துக்களும் கனிமச் சத்துகளும் உள்ளன. இது வடமேற்குத் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிசு மலைத் தொடரில் தோன்றியுள்ளது. இது முன்பு கால்நடைத் தீவனமாக தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3-4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மக்களின் உணவாக பொலிவியாவில் உள்ள திதிக்கா ஏரியில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீமைத்தினை எனப்படும் கீன்வா கென்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மேலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 70 நாடுகளில் பயிரிடப்படுகிறது. இது ஆரோக்கியமான உணவு என்பதால் பல நாடுகளில் இதன் நுகர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இதன் விலையும் சாராசரியாக கூடியுள்ளது. இருப்பினும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் செலவு செய்வதில் தவறில்லை.  ஆதலால் முடிந்த வரை இதை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

கீன்வாவின் வகைகள்

சீமைத்தினை அல்லது வெள்ளை சீமைத்தினை: இது கடைகளில் கிடைக்கும் சீமைத்தினையில்  மிகவும் பொதுவான வகை. இது தந்த சீமைத்தினை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவப்பு சீமைத்தினை: இது சமைத்த பிறகும் அதன் அசல் வடிவத்திலேயே இருக்கும். இது வெள்ளை சீமைத்தினை விட சிறந்தது. இந்த வகை தினையானது குளிர் சாலடுகள் போன்ற உணவுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

கருப்பு சீமைத்தினை: இது வெள்ளை சீமைத்தினை விட சற்று இனிப்பானது மற்றும் மணல் போன்று இருக்கும். இந்த வகை தினை சமைக்கும்போது கூட, அதன் கருப்பு நிறத்தை அப்படியே வைத்திருக்கும்.

சீமைத்தினை பிளேக்ஸ்: இவை முழு தானியத்தையும் நீராவியுடன் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இவை ஒரு சிறந்த விரைவான காலை உணவாக உள்ளது.

சீமைத்தினை மாவு: இது சீமைத்தினை விதைகளால் செய்யப்பட்ட மாவு. இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்குமாம்.

கீன்வாவின் பயன்கள் (Benefits of Quinoa in Tamil)

பயன் 1: உடல் எடைக்குறைப்பு

உடல் எடையைக் குறைப்பதற்கு கடுமையான உடல் பயிற்சிகளுடன் சத்தான உணவுகளும் தேவை. அதில் சீமைத்தினையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சீமைத்தினையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்தானது மற்ற பெரும்பாலான தானியங்கள் மற்றும் விதைகளை இதில் அதிகம் உள்ளது . ஒரு கப் விதைகளில் 2.5 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது ஆதலால் இது எடைக்கு குறைப்புக்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சீமைத்தினையில் உடல் எடையைக் குறைக்கும் வேறு ஒன்று உள்ளது. என்னவென்றால், 20-ஹைட்ராக்ஸிக்டிசோன் ஆகும்.  இது எடை கட்டுப்பாட்டுக்கு உதவும் ஒன்று. இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது என்றும் அதனால் எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு உண்ணக்கூடிய உணவில் இருந்து குறைந்த கலோரிகளை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு செய்கிறது(1).

பயன் 2: இதய ஆரோக்கியம்

சீமைத்தினையை சாப்பிடும்போது கல்லீரலானது இரத்தத்திலிருந்து அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றுகிறது. இந்த செயலுக்கு சீமைத்தினை முக்கிய காரணியாக உள்ளது. சீமைத்தினை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைகிறது. மேலும் இது பெருந்தமனி தடிப்பு மற்றும் கரோனரி இதய நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது. எனவே இதயம் ஆரோக்கியத்துடன் இருந்தால் நாமும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடம் வாழ முடியும்.

சீமைத்தினையில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.  அவை ஒலியிக் அமிலம்(oleic acid) மற்றும் ஆல்பா லினோலெனிக்(alpha linolenic acid) அமிலம் ஆகும். இவை இரண்டும் இதயத்தின் செயல்பாடுகளை சீராக்கி இதய நோய்களில் இருந்து காத்து நம்மை ஆரோக்கியத்துடன் வாழச் செய்கிறது(2).

பயன் 3: சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம்

சீமைத்தினை ஒரு முழு தானியமாகும்(quinoa in tamil). மேலும் இது நீரிழிவு நோய்க்கு சிறந்தவை. சீமைத்தினையில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதில்லை. எனவே இது நீரிழிவு தொடர்பான எடை அதிகரிப்பு மற்றும் பிற பிரச்சனைகளையும் தடுக்கிறது. மேலும் இது குறைந்த கிளைசீமிக் அளவைக் கொண்டிருப்பதால் நீரிழிவு நோய்க்கு இது சிறந்ததாக உள்ளது.(quinoa seeds in tamil).

சீமைத்தினையில் புரதத்தை உருவாக்குவதற்கான அனைத்து அமினோ அமிலங்ளும் உள்ளன எனவே இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் குறைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது கூடுதலாக   இந்த மாதிரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களையும் எடுத்துக் கொள்ளலாம்(3).

பயன் 4: கீன்வா வீக்கங்களைக் குறைக்கிறது

சீமைத்தினையில் உள்ள ஃபைபர்(fibre ) வீக்கத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. எனவே உடலில் காயங்கள் ஏற்படும்போது உண்டாகும் வீக்கத்தை இவை பெருமளவு குறைக்கின்றன. மேலும் சீமைத்தினையில் உள்ள வைட்டமின் பி உடலில் ஹோமோசைஸ்டீன் அளவை (ஒரு அழற்சி ஹார்மோன்) குறைக்கின்றன. அதாவது இது அழற்சி ஏற்படுத்தும் ஹார்மோனாகும். சிலருக்கு மாமிசம் அல்லது சில வேண்டாத உணவுகளை உண்டால் ஏற்படும் அழற்சியை, இந்த  சீமைத்தினை கட்டுப்படுத்துகிறது.

சீமைத்தினையில் சபோனின்கள் எனப்படும் சேர்மங்களும் உள்ளன. இவை ஒவ்வாமை உண்டாவதிலிருந்து உடலை பாதுகாக்கிறது(4).

பயன் 5: செரிமானம்

சீமைத்தினையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே இது உங்கள் செரிமானத்தை சீராக்குவதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் செரிமான கோளாறினால் அவதிப்படுகின்றனர். எனவே சீமைத்தினை உண்ணும்போது இது உங்கள் செரிமானத்தை சீராக்கி சுலபமாக மலம் வெளியேற வழி செய்கிறது.

சீமைத்தினையில் உள்ள பி வைட்டமின்கள் செரிமானத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஒன்று தியாமின் ஆகும். இது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் உற்பத்திக்கு உதவுகிறது. செரிமான மண்டலத்தின் சுவர்களில் வரிசையாக இருக்கும் உயிரணுக்களின் வளர்ச்சியில் ரிபோஃப்ளேவின் உதவுகிறது. சீமைத்தினையில் உள்ள மற்றொரு அமினோ அமிலம் குளுட்டாமிக் அமிலம் ஆகும். இவ்வாறாக செரிமான மண்டலத்தை சீராக்குவதில் சீமைத்தினையையில் உள்ள பல்வேறு அமிலங்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன(5).

பயன் 6: கீன்வா வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

சீமைத்தினையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சீர்படுத்தி அவை நல்ல முறையில் செயல்பட உதவுகின்றன. மேலும் இவை நமக்கு ஆற்றலையும் வலுவையும் அளித்து உடலின் வளர்சிதை மாற்றங்களை ஊக்குவிக்கிறது(quinoa seed benefits in tamil). அதில் புரதம் முக்கியமான ஒன்று. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, பசியைக் கணிசமாகக் குறைக்கிறது. எனவே உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்(6).

பயன் 7: கீன்வா இரத்தசோகையை சரி செய்கிறது

சீமைத்தினை இரும்புச் சத்து நிறைந்தது. ஒரு கப் சமைத்த சீமைத்தினையில் (185 கிராம்) சுமார் 3 மி.கி இரும்புச்சத்து உள்ளது. அதாவது நாம் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய இரும்பு சத்தில் 15% சீமைதினையிலே உள்ளது. இரும்புச்சத்தானது  இரத்த சோகையை தடுக்க உதவும்.

இதில் பார்க்க வேண்டிய மற்றொரு ஊட்டச்சத்து ரைபோஃப்ளேவின் ஆகும். இது சீமைத்தினையில் நிறைந்துள்ளது. ஒருவரின் உணவில் குறைவான ரிபோஃப்ளேவின் காரணமாக இரத்த சோகை ஏற்படலாம். மேலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவுகிறது(7).

பயன் 8: புற்றுநோய் பாதுகாப்பு

புற்று நோயை குணப்படுத்துவதில் சீமைத்தினை இன்றியமையாத ஒன்று. பல அறிஞர்கள் நடத்திய ஆய்வில் சீமைத்தினை புற்றுநோயை சரி செய்யும் திறன் கொண்டது என்று கண்டறியப்பட்டது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை தடுத்து உடலை புற்றுநோய் ஆபத்திலிருந்து காக்கும். புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவரும் சீமைத்தினை உண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்(8).

பயன் 9: சரும பாதுகாப்பு

சீமைத்தினையில் உள்ள வைட்டமின் பி சருமத்தைப் பாதுகாக்கிறது. இவை அதிகப்படியான மெலானின் உருவாவதைத் தடுத்து சருமத்தை இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

சீமைத்தினையில் உள்ள வைட்டமின் பி3, நியாசினமைடு என்றும் அழைக்கப்படுகிறது, இது முகப்பருவுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் இது முகப்பருக்கள் உடைவதையும் சிவப்பு நிறமாக மாறுவதையும் தடுக்கிறது. இது எப்போதும் இளமையான முக தோற்றத்துடன் இருக்கவும் உதவுகிறது(9).

பயன் 10: எலும்பு பாதுகாப்பு

சீமைத்தினையில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்றாக வேலை செய்கிறது. எலும்பு உருவாவதில் தாதுக்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சீமைத்தினையில் புரதம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை கட்டமைப்பதில் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாகும். நம் உடலில் அனைத்து அமினோ அமிலங்களும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அவற்றை நாம் உணவின் வழியாக தான் எடுத்துக் கொள்ள முடியும். சீமைத்தினையில் அத்தகைய அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சீமைத்தினையில் உள்ள மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. (quinoa benefits in tamil)(10).

பயன் 11: கீன்வா திசுக்களை பராமரிக்கிறது

சீமைத்தினையில் லைசின் நிறைந்துள்ளது, இது திசுக்களை சரிசெய்தல் மற்றும் அவற்றின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் இந்த லைசின் சீமைத்தினையில் மட்டுமே காணப்படுகிறது(11).

பயன் 12: கீன்வா முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது

சீமைத்தினையில் இருக்கும் ஹைட்ரோலேஸ் முடி வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய பொருளாகும். இது முடியின் வேர்களை உள்ளே இருந்து பாதுகாத்து வளர்க்கும். இந்த தானியத்தில் இருந்து எடுக்கப்படும் புரதம், உயர்தர முடி தயாரிப்புகளை தயாரிக்கவும் பயன்படுகிறது.

ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் சீமைத்தினையில் உள்ளது . இவை சேதமடைந்த முடியை சரி செய்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் இ, முடியில் சிக்கல் ஏற்படும் போது முடி உடைவதை தடுக்கிறது

பயன் 13: பொடுகுத்தொல்லை

சீமைத்தினையில் கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன, அவை தலைமுடியில் ஈரப்பதத்தை தக்க வைக்கின்றன. நீங்கள் சீமைத்தினை பிசைந்து, உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் பேஸ்ட் போல் பயன்படுத்த வேண்டும்(quinoa seed benefits in tamil). இதை 15 நிமிடங்கள் விட்டுவிட்டு வழக்கம் போல் குளிக்க வேண்டும். சீமைத்தினையில் உள்ள புரதம் வெட்டுப்பட்ட முடிக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சீமைத்தினையில் உள்ள டைரோசின் உங்கள் தலைமுடியின் அசல் நிறத்தை பராமரிக்க உதவுகிறது.

சீமைத்தினையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்
அளவு
கலோரி 626கொழுப்பிலிருந்து கலோரிகள் 93
தினசரி எடுத்து கொள்ள வேண்டிய அளவு
மொத்த கொழுப்பு 10g16%
நிறைவுற்ற கொழுப்பு 1g6%
டிரான்ஸ் கொழுப்பு
கொழுப்பு 0mg0%
சோடியம் 9mg0%
மொத்த கார்போஹைட்ரேட் 109g36%
நார்ச்சத்து உணவு 12g48%
சர்க்கரைகள்
புரதம் 24g
வைட்டமின் ஏ0%
வைட்டமின் சி0%
கால்சியம்8%
இரும்பு43%
வைட்டமின்
அளவுதினசரி எடுத்து கொள்ள வேண்டிய அளவு
வைட்டமின் ஏ23.8IU0%
வைட்டமின் சி
வைட்டமின் டி
வைட்டமின் ஈ (ஆல்பா டோகோபெரோல்)4.1mg21%
வைட்டமின் கே0.0mcg0%
தியாமின்0.6mg41%
ரிபோஃப்ளேவின்0.5mg32%
நியாசின்2.6mg13%
வைட்டமின் பி 60.8mg41%
ஃபோலேட்313mcg78%
                      விட்டமின் பி120.0mcg0%
பேண்டோதெனிக் அமிலம்1.3mg13%
கோலின்119mg
பீட்டேன்1072mg
தாதுக்கள்
அளவுதினசரி அளவு
கால்சியம்79.9mg8%
இரும்பு7.8mg43%
மெக்னீசியம்335mg84%
பாஸ்பரஸ்777mg78%
பொட்டாசியம்957mg27%
சோடியம்8.5mg0%
துத்தநாகம்5.3mg35%
தாமிரம்1.0mg50%
மாங்கனீசு3.5mg173%
செலினியம்14.4mcg21%
ஃவுளூரைடு

சீமைத்தினையை எவ்வாறு உபயோகிக்கவேண்டும்?

சீமைத்தினையை உபயோகிப்பது மிகவும் எளிது. மேலும் இது ருசியான ஒன்றாகும். சீமைத்தினையை சமைக்கும் முன்பு 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு நன்றாக கழுவி வடி கட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் போது அதன் மேற்பரப்பில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளும் கசப்புத்தன்மையும் மறைந்து விடும்.

இதனைக்கொண்டு சூப், கஞ்சி மற்றும் பல உணவுகள் செய்ய முடியும். இது அரிசி, கோதுமை, ரவை போன்றே எளிதாக சமைக்கக் கூடியது. மேலும் இதிலிருந்து தயாரிக்கப்படும் மாவானது பிரட், நூடுல்ஸ், கேக், குக்கீஸ் மற்றும் இதர சுவையான பொருட்களை தயாரிக்க உதவுகிறது. இரவு நேரங்களில் அதை நீருடன் சேர்த்து வேக வைத்து கஞ்சி போன்று சாப்பிடும்போது உடலில் செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும் சமைக்கும் முன்பு இதை வாணலியில் சிறிது வறுத்து எடுக்கும் போது இன்னும் சுவையுள்ளதாக இருக்கும்.

சீமைத்தினையை சேமித்து வைக்கும் முறையும் தேர்வு செய்யும் முறையும்!

சீமைத்தினை விதைகள் பொதுவாக காற்று புகாத பாக்கெட்டுகள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் விற்கப்படுகின்றன. வெள்ளை சீமைத்தினை பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. மற்ற விதைகள் சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

எவ்வாறு தேர்வு செய்வது?

சீமைத்தினை வாங்கும் போது, நன்றாக மற்றும் உலர்ந்த தானியங்கள் மட்டுமே வாங்க வேண்டும். அவைகள் புதியதாக இருக்க வேண்டும்.

ஓட்டைகள் மற்றும் கீறல்கள் இல்லாத சீமைத்தினை வாங்கவும்.

நீங்கள் சீமைத்தினை மொத்தமாக வாங்கினாலும் பிளாஸ்டிக் பைகளில் வாங்கினாலும் அவை ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து இருக்க வேண்டும்.

எவ்வாறு சேமித்து வைப்பது?

இறுக்கமாக பொருத்தப்பட்ட மூடியுடன் காற்றோட்டமில்லாத கொள்கலனில் தானியங்களை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கவும். ஒழுங்காக சீல் வைக்கப்பட்ட கொள்கலன் புத்துணர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் தொற்றுநோயைக் குறைப்பதற்கும் மிகவும் முக்கியமானது. சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து மறைத்து வைத்தால் அவை இன்னும் பல காலங்கள் புத்துணர்வுடன் இருக்கும்(quinoa seeds in Tamil).

சீமைத்தினை விதைகள் வாங்கும் போது, சீமைத்தினை அதன் அசல் அளவை விட பல மடங்கு விரிவடைகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, சிறிய அளவில் அல்லது தேவைக்கேற்ப வாங்கவும். அதை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.

சீமைத்தினையை எங்கெல்லாம் வாங்கலாம்?

ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி மக்கள் பலரும் தெரிந்து கொண்டதால், அதனை விற்பனை செய்வதில் பல தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. நீங்கள் இதனை மொத்த வியாபார கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் நல்ல விலையில் வாங்கலாம். இல்லையெனில் ஆயுர்வேத கடைகளிலும் மூலிகை கடைகளிலும் வாங்கலாம். மிக சுலபமான வழி  என்னவென்றால் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாகவும் வீட்டிற்க்கே வரவழைத்து வாங்க முடியும். எப்படி வாங்கினாலும் தரமான ஒன்றை மட்டுமே வாங்குங்கள்.

சீமைத்தினை விதைகள் அழுகி விட்டதா? என்று சொல்வது உண்மையில் கடினம். சீமைத்தினை நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால், அது கெட்டுப் போவதால் உண்டாகும் வாடை வெளிவருவதில்லை. மாறாக சமைக்கும் போது அவை ஒழுங்கற்ற அமைப்பை பெறுகின்றன. சமைத்த சீமைத்தினை உணவை 2 மணி நேரத்திற்கும் மேலாக அறை வெப்பநிலையில் வைக்க அனுமதிக்காதீர்கள்.

சீமைத்தினை உண்பதால் உண்டாகும் பக்க விளைவுகள் யாவை(side effects of quinoa in tamil)?

a)செரிமான சிக்கல்கள்

சீமைத்தினையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அதை அதிகமாக சாப்பிடும் போது வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். மேலும் இதில் சபோனின் உள்ளதால் அது குடல் வீக்கத்தை உண்டாக்குகிறது.

b)சிறுநீரக கற்கள்

இதில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் ஆனது சிறுநீரக கற்கள் உண்டாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சீமைத்தினையை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போது இவை சீறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகிறது.

இறுதியாக…

இப்பொழுது சீமைத்தினையின் நன்மைகளை (benefits of quinoa in tamil) பற்றி நாம் கட்டாயம் அறிந்திருப்போம். முடியை வளரச் செய்வது முதல் நீரிழிவு நோய் வரை இது அனைத்திலும் தனது பங்கை ஆற்றுகிறது. சத்தான உணவு எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ளுவதே புத்திசாலித்தனம் (quinoa in Tamil).

இத்தனை சிறப்புகள் கொண்டது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிக்கு எவ்வளவு மாவு சத்து தேவை என ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறாரோ அந்த அளவுக்குத்தான் கீன்வா (சீமைத்தினை) சாப்பிடலாம். எந்த தானியத்தை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், அது சரிவிகித உணவில் ஒரு பங்காக மட்டுமே இருக்க வேண்டும்.

தொடர்பான கேள்விகள்

1. கீன்வா அரிசியை விட மேலானதா?

சீமைத்தினையில் அதிக அளவில் புரதங்கள் உள்ளன. மேலும் இது குளூட்டன் இல்லாதது. எனவே இது அரிசியை விடவும் ஊட்டச்சத்து உள்ளதாக கருதப்படுகிறது.

சீமைத்தினையை தினசரி சாப்பிடலாமா?

சீமைத்தினை போன்ற சத்தான உணவுகளை தினசரி சாப்பிடும் போது அது நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

கீன்வா சாப்பிட்டால் தொப்பை போடுமா?

இல்லை. கீன்வா சாப்பிட்டால் கண்டிப்பாக தொப்பை வராது. மாறாக இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவும்.

கீன்வா எடைக்குறைப்புக்கு நல்லதா?

ஆம். உடல் எடையைக் குறைப்பதற்கு இது நல்ல ஒரு உணவாகும்.

கீன்வா சாப்பிடும் போது ஏன் வயிறு வலிக்கிறது?

சீமைத்தினையையில் சோடியம் குறைவாகவும் கால்சியம், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. இது சிலருக்கு வயிற்று வலியையும் ஒவ்வாமையும் உண்டாக்குகிறது.

கீன்வா சாப்பிட்டால் வாயு வெளியேறுமா?

இதில் சபோனின் என்ற சேர்மம் உள்ளது. எனவே இதை சாப்பிடும் போது வயிற்றில் அமிலம் ஏற்பட்டு வாயு வெளியேறுகிறது.

11 sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
The following two tabs change content below.
scorecardresearch