கீரை உருண்டை .. ஒரு நொறுக்குத் தீனி நமக்கு இத்தனை வலிமை கொடுக்க முடியுமா! – Rajgira or amaranth benefits in Tamil

ராஜ்கிரா (rajgira in Tamil ) அல்லது அமராந்த் (amaranth in Tamil) என்று அழைக்கப்படும் கீரை உருண்டைகள் நோன்பின் போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில காலமாக அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பார்க்கும்போது, அதனை தினசரி உணவில் சேர்த்திக்கொண்டால் நல்லது எனத்தோன்றுகிறது.
அமராந்த் கொண்டு சர்க்கரை பாகுடன் செய்யப்பட்ட லட்டு அதிகம் சாப்பிடப்படுகிறது. இந்த கட்டுரையின் மூலம் ராஜ்கிராவின் பல்வேறு நன்மைகள் குறித்து பார்க்கலாம். ராஜ்கிராவின் நன்மைகள் மற்றும் ராஜ்கிராவின் தீமைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
Table Of Contents
ராஜ்கிரா ( அமராந்த் ) என்றால் என்ன?
ராஜ்கிரா அல்லது ராம்தானா என்றும் அழைக்கப்படும் பொருள் ஒரு சிறிய விதையாகும். அவை தாவர அமரந்தில் செழித்து வளரும். இந்த விதைகள் பழுத்தவுடன் , தாவரங்கள் வெட்டி வெளியே எடுக்கப்படுகின்றன. பொதுவாக ராஜ்கிரா மளிகை கடை அல்லது பல்பொருள் அங்காடியில் எளிதாகக் கிடைக்கும். அதன் அறிவியல் பெயர் Amaranthus என்பதாகும். ஆங்கிலத்தில் அமர்நாத் என அறியப்படுகிறது. ராஜ்கிரா நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காணப்படுகிறது. இடத்திற்கு தகுந்தது போல அதன் விலைகள் மாறுபடலாம். இனிப்பு, புட்டு முதலியன பல வடிவங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ராஜ்கிராவை உண்ணும் போது பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. (1)
ராஜ்கிராவின் ஆரோக்கிய நன்மைகள் – Health benefits of Rajgira in Tamil
ராஜ்கிராவின் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக இங்கு விரிவாக பார்க்கலாம். (amaranth health benefits in Tamil)
1. பசையம் இல்லாதது
ராஜ்கிராவை பசையம் இல்லாத (Glutenfree) உணவாக பயன்படுத்தலாம். பசையம் இயற்கையாகவே கோதுமை, கம்பு மற்றும் பார்லி ஆகியவற்றில் காணப்படுகிறது. அதன் நுகர்வு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். விஞ்ஞான அறிக்கைகளின்படி , பசையம் உட்கொள்வது செலியாக் நோய் அபாயத்தை அதிகரிக்கும். இது சிறுகுடல் நோயாகும். அதே நேரத்தில், ராஜ்கிரா பசையம் இல்லாதது. இது அந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் (2).
2. புரதம் நிறைந்து காணப்படுகிறது
ராஜ்கிரா புரதத்தின் நல்ல ஆதாரமாகும். உண்மையில் , உடல் செல்களை சரிசெய்யவும், புதிய செல்களை உருவாக்கவும் புரதங்கள் தேவைப்படுகின்றன. நிபுணர்கள் நடத்திய ஆய்வின்படி, ராஜ்கிராவை புரதத்திற்காக ஒரு சிறந்த மாற்றாக சேர்க்க முடியும் (3, 4) .
3. வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது
உடலில் ஏற்படும் அழற்சி பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதிலும் ராஜ்கிரா முக்கிய பங்காற்றுகிறது. ஒரு விஞ்ஞான ஆய்வு அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் காட்டியுள்ளது. இது அழற்சி சிக்கலை தடுக்க உதவும் (5).
4. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
எலும்புகளை வலுப்படுத்த நீங்கள் ராஜ்கிராவைப் பயன்படுத்தலாம். உண்மையில் , ராஜ்கிராவில் கால்சியம் நிறைய உள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் (6).
5. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ராஜ்கிரா இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உண்மையில் , மாரடைப்புக்கு காரணம் இரத்த கொழுப்பு. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு உள்ளிட்ட பல இதய நோய்களை ஏற்படுத்தும். ராஜ்கிரா இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும் (7).
6. நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்கிறது
நீரிழிவு நோயைத் தடுக்க ராஜ்கிராவையும் பயன்படுத்தலாம். ஒரு அறிவியல் ஆய்வு ராஜ்கிரா எண்ணெய் ஹைப்பர்கிளைசீமியாவை (உயர் இரத்த சர்க்கரை) குணப்படுத்தும் மற்றும் நீரிழிவு ஆபத்து தடுக்கும் நன்மை கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவியல் ஆய்வு, போதிய இன்சுலின் அளவு இல்லாமல் இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ் இருப்பதால் வகை 2 நீரிழிவு நோயை (8) ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டது . அதே நேரத்தில் , ராஜ்கிரா மற்றும் ராஜ்கிரா எண்ணெய் கலவையானது சீரம் இன்சுலின் அளவை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறுகிறது.
7. புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது
ராஜ்கிராவின் பயன்பாடு புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க நன்மை பயக்கும். ராஜ்கிராவில் ஆக்ஸிஜனேற்ற தன்மை உள்ளது. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
கூடுதலாக , வைட்டமின்-இ ராஜ்கிராவில் காணப்படுகிறது . வைட்டமின்-இ ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது ஃப்ரீ-ரேடிக்கல்களிடமிருந்து செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது (9) .
8. அமினோ அமிலம் நிறைந்து காணப்படுகிறது
லைசின் என்பது ஒரு வகை அமினோ அமிலமாகும். உடலில் உள்ள புரதங்களை நிரப்புவதற்கு அமினோ அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராஜ்கிராவில் ஏராளமான லைசின் (10)காணப்படுகிறது .
9. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
ராஜ்கிராவில் துத்தநாகம் காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் (11). கூடுதலாக , வைட்டமின்-ஏ ராஜ்கிராவில் காணப்படுகிறது. வைட்டமின்-ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
10. செரிமான சக்தியை அதிகரிக்கும்
ஆரோக்கியமான உடலுக்கு செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ராஜ்கிராவில் நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. நார்ச்சத்து உடலுக்கு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும் , இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கல் பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது.
11. உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது
அமராந்தில் இருக்கும் ஃபைபர் உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நார்ச்சத்து செரிமானத்தை வலுப்படுத்துவதோடு எடையையும் கட்டுப்படுத்துகிறது. உண்மையில் , நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது நீண்ட நேரம் பசி உணர்வு வராமல் வைத்திருக்கிறது , இதனால் அதிகப்படியான உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. (12)
12. பார்வை திறனை மேம்படுத்தும்
அமராந்தின் நுகர்வு கண்பார்வை சரியாக வைத்திருக்க நன்மை பயக்கும். வைட்டமின்-ஏ ராஜ்கிராவில் காணப்படுகிறது . வைட்டமின்-ஏ கண் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம், வயது அதிகரிப்பதால் ஏற்படும் பார்வை தொடர்பான சிக்கல்களையும் குறைக்க முடியும். (13)
13. கர்ப்பத்திற்கு நன்மை பயக்கும்
கர்ப்ப காலத்தில் தாய்க்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இதன் நார்ச்சத்து துணை புரியும். மேலும் இரத்த சோகை மற்றும் எலும்பு குறைபாடு வராமல் தடுக்கிறது.
இந்த நேரத்தில் வைட்டமின் சி கணிசமான அளவு தேவைப்படுகிறது. ராஜ்கிராவில் அது நிறைந்து காணப்படுகிறது. இருப்பினும் , பெரிய அளவில் உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகவும். (14)
14. முடி மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும்
முடி மற்றும் சருமத்தின் நல்ல ஆரோக்கியத்திற்கு ராஜ்கிராவை உட்கொள்ளலாம். முடி ஆரோக்கியமாக இருக்க நாம் ராஜ்கிராவை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அதில் உள்ள துத்தநாகம் கூந்தலுக்கு நன்மை பயக்கும். உண்மையில் , துத்தநாகம் உட்கொள்வது தலையில் அரிப்பைக் குறைத்து முடி உதிர்தலை நிறுத்தலாம்.
மேலும் ராஜ்கிரா சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் , ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. வைட்டமின்-சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும் , இது புற ஊதா கதிர்வீச்சு சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கூடுதலாக, வைட்டமின் சி முகப்பருவை அகற்றவும், சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்கவும் உதவும். (15)
15. இரத்த சோகையை எதிர்த்து போராடுகிறது
ராஜ்கிராவின் நன்மைகள் இரத்த சோகை வராமல் தடுக்கும். இரத்த சோகை என்பது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் இல்லாததால் ஏற்படுகிறது. அது இரும்பு சத்து தொடர்புடையதாக உள்ளது. இரும்பு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
ராஜ்கிராவின் ஊட்டச்சத்து அளவுகள்
ராஜ்கிராவின் நன்மைகளை அறிந்தோம். அடுத்து ராஜ்கிராவில் என்ன சத்தான கூறுகள் உள்ளன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்துக்கள் | 100 கிராமுக்கு அளவு |
தண்ணீர் | 11.29 கிராம் |
ஆற்றல் | 371 கிலோகலோரி |
புரதம் | 13.56 கிராம் |
மொத்த லிப்பிட் (கொழுப்பு) | 7.02 கிராம் |
கார்போஹைட்ரேட் | 65.25 கிராம் |
நார்ச்சத்து , மொத்த உணவு | 6.7 கிராம் |
சர்க்கரை , மொத்தம் | 1.69 கிராம் |
கனிம | |
கால்சியம் | 159 மி.கி. |
இரும்பு | 7.61 மி.கி. |
வெளிமம் | 248 மி.கி. |
பாஸ்பரஸ் | 557 மி.கி. |
பொட்டாசியம் | 508 மி.கி. |
சோடியம் | 4 மி.கி. |
துத்தநாகம் | 2.87 மி.கி. |
வைட்டமின் | |
வைட்டமின் சி , மொத்த அஸ்கார்பிக் அமிலம் | 4.2 மி.கி. |
தியாமின் | 0.116 மி.கி. |
ரிபோஃப்ளேவின் | 0.200 மி.கி. |
நியாசின் | 0.923 மி.கி. |
வைட்டமின் பி- 6 | 0.591 மி.கி. |
ஃபோலெட் , டி.எஃப்.இ. | 82μg |
வைட்டமின் பி- 12 | 0.00μg |
வைட்டமின் ஏ , ஆர்.ஏ. | 0μg |
வைட்டமின் ஏ , ஐ.யூ. | 2IU |
வைட்டமின் ஈ (ஆல்பா-டோகோபெரோல்) | 1.19 மி.கி. |
வைட்டமின் டி (டி 2+ டி 3 ) | 0.0μg |
வைட்டமின் டி | 0IU |
வைட்டமின் கே | 0.0μg |
கொழுப்பு | |
கொழுப்பு அமிலம் , மொத்த நிறைவுற்றது | 1.459 கிராம் |
கொழுப்பு அமிலம் , மொத்த மோனோசாச்சுரேட்டட் | 1.685 கிராம் |
கொழுப்பு அமிலம் , மொத்த பாலிஅன்சாச்சுரேட்டட் | 2.778 கிராம் |
கொழுப்பு | 0 மி.கி. |
ராஜ்கிராவை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ராஜ்கிராவின் ஊட்டச்சத்து மதிப்புகளை அறிந்து கொண்டோம். அடுத்து ராஜ்கிராவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிவது அவசியம். ராஜ்கிராவை பின்வருமாறு பயன்படுத்தலாம்-
- புட்டு தயாரிப்பதன் மூலம் ராஜ்கிராவை சாப்பிடலாம்.
- நெய்யில் வறுத்த பிறகு, அதை வேகவைத்து பாலுடன் குடிக்கலாம்.
- வறுத்த ராஜ்கிராவை சர்க்கரை பாகுடன் சேர்த்து பர்பி செய்து சாப்பிடலாம்.
- ராஜ்கிரா ரவை உப்புமா தயாரித்து சாப்பிடலாம்.
- குஜியாவை உருவாக்க ராஜ்கிரா ரவை பயன்படுத்தலாம்.
- கீர் தயாரிக்கவும் ராஜ்கிரா பயன்படுத்தலாம்.
எப்போது பயன்படுத்த வேண்டும்?
பகலில் அல்லது இரவில எந்த நேரம் வேண்டுமானாலும் இதனை உண்ணலாம். அதிக ஊட்டச்சத்து தேவைப்படும் நேரங்களில் எடுத்துக்கொள்ளலாம்.
எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?
50 கிராம் ராஜ்கிராவை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஆயினும்கூட, தயவுசெய்து ஒரு டயட்டீஷியனை தொடர்பு கொண்டு, அவரிடம் ஆலோசனை கேட்டு சரியான அளவு உட்கொள்ளுங்கள்.
ராஜ்கிராவின் பக்கவிளைவுகள் என்னென்ன? – Side Effects of Amaranth In Tamil
ராஜ்கிராவை குறைந்த அளவுகளில் எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையெனில் அது உங்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். அதனை அடுத்து பார்க்கலாம்.
- சில சந்தர்ப்பங்களில், ராஜ்கிராவை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
- ராஜ்கிராவில் போதுமான அளவு பாஸ்பரஸ் காணப்படுகிறது. அதிக அளவு பாஸ்பரஸ் எலும்பு பலவீனமடையும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். ராஜ்கிராவில் அதிக அளவு கால்சியம் காணப்படுகிறது மற்றும் அதிக அளவு கால்சியம் உட்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
- அமராந்தில் பொட்டாசியமும் உள்ளது. இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம், சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கும்.
- அதிக நார்ச்சத்து சாப்பிடுவதால் வாய்வு மற்றும் வயிற்றுப் பிடிப்பு ஏற்படலாம் , ஏனெனில் ராஜ்கிராவிலும் நார்ச்சத்து உள்ளது.
முடிவாக ராஜ்கிராவில் அடங்கியுள்ள சத்துக்களை அறிந்த பிறகு, உணவு பண்டங்களில் பயன்படுத்தப்படுப்பட்ட ராஜ்கிராவை, இனி நமது அன்றாட உணவிலும் சேர்க்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அமராந்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தும் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , அதன் உட்கொள்ளலின் போது நீங்கள் மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ராஜ்கிராவின் உட்கொள்ளல் தொடர்பான வேறு சந்தேகங்கள் உங்களிடம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் பெட்டி மூலம் எங்களை அணுகலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குயினோவாவிலிருந்து ராஜ்கிரா எவ்வளவு வித்தியாசமானது ?
குயினோவா மற்றும் ராஜ்கிராவின் ஆரோக்கிய நன்மைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ராஜ்கிரா போன்ற சபோனின்களும் குயினோவாவில் காணப்படுகின்றன. கூடுதலாக , இது புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயையும் குணப்படுத்த பயன்படுகிறது.
ராஜ்கிரா எவ்வாறு உருவாகிறது ?
இது விதைகள் மூலம் வளரும் தாவரமாகும். தாவரங்கள் பழுக்கும் போது தானியங்கள் வரும் தொடங்கும். அவை மறுபயன்பாட்டுக்கு உகந்தவை.
ராஜ்கிரா சுவை எப்படி இருக்கும்?
ராஜ்கிரா சுவையற்றது என்றாலும் , அதை மென்று சாப்பிடுவது உங்களுக்கு லேசான இனிப்பு சுவையை கொடுக்கும்.
ராஜ்கிராவுக்கு பதிலாக ஒரு சிறந்த வழி இருக்கிறதா ?
ஆமாம். ராஜ்கிராவுக்கு பதிலாக ஒருவர் குயினோவாவை உட்கொள்ளலாம். ஏனென்றால் குயினோவாவும் ராஜ்கிரா போன்ற அதே பண்புகளைக் கொண்டுள்ளது .
ராஜ்கிராவை எவ்வாறு முளைக்க வைப்பது?
ராஜ்கிராவை முளைக்க, முதலில் அதை இரவில் ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். அதன் பிறகு, ராஜ்கிராவை காலையில் தண்ணீரிலிருந்து பிரித்து ஒரு துணியில் போர்த்தி விடுங்கள். இப்போது இந்த துணியில் ஒரு நாளில் குறைந்தது 4-5 தடவைகள் தண்ணீர் தெளிக்கவும் , இதனால் ஈரப்பதம் இருக்கும். மறுநாள் காலையில் அது முளைத்ததை நீங்கள் காணலாம்.
ராஜ்கிரா மாவின் நன்மைகள் என்ன ?
ராஜ்கிரா மாவில் கால்சியம் , இரும்பு , வைட்டமின் சி மற்றும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
15 sources
- State of knowledge on amaranth grain: a comprehensive review
https://pubmed.ncbi.nlm.nih.gov/22515252/ - Learn about gluten-free diets
https://medlineplus.gov/ency/patientinstructions/000813.htm - Physicochemical, pasting, and functional properties of amaranth seed flours: effects of lipids removal
https://pubmed.ncbi.nlm.nih.gov/24893988/ - Healthy grocery shopping
https://medlineplus.gov/ency/patientinstructions/000336.htm - Extrusion improved the anti-inflammatory effect of amaranth (Amaranthus hypochondriacus) hydrolysates in LPS-induced human THP-1 macrophage-like and mouse RAW 264.7 macrophages by preventing activation of NF-κB signaling
https://pubmed.ncbi.nlm.nih.gov/24431078/ - Grain Amaranth Is Associated with Improved Hepatic and Renal Calcium Metabolism in Type 2 Diabetes Mellitus of Male Wistar Rats
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6211157/ - Amaranth oil application for coronary heart disease and hypertension
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1779269/ - Antioxidative and anti-diabetic effects of amaranth (Amaranthus esculantus) in streptozotocin-induced diabetic rats
https://pubmed.ncbi.nlm.nih.gov/16634092/ - Evaluation of radioprotective effects of Rajgira (Amaranthus paniculatus) extract in Swiss albino mice
https://pubmed.ncbi.nlm.nih.gov/15988142/ - Amaranth—Sustainable crop for the 21st century: food properties, and nutraceuticals for improving human health.
https://www.researchgate.net/publication/306432698_Amaranth-Sustainable_crop_for_the_21st_century_food_properties_and_nutraceuticals_for_improving_human_health - Antioxidant Phytochemicals for the Prevention and Treatment of Chronic Diseases
https://www.mdpi.com/1420-3049/20/12/19753/pdf - Effectual comparison of quinoa and amaranth supplemented diets in controlling appetite; a biochemical study in rats
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4573157/ - Gluten-Free Alternative Grains: Nutritional Evaluation and Bioactive Compounds
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6617389/ - Current Concepts of Maternal Nutrition
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4949006/ - Effect of popping and fermentation on proximate composition, minerals and absorption inhibitors, and mineral bioavailability of Amaranthus caudatus grain cultivated in Ethiopia
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5052166/

Latest posts by StyleCraze (see all)
- ஸே யெஸ் டு சீஸ் ! நாவின் சுவை அரும்புகள் மீண்டும் மீண்டும் தேடும் சீஸின் ஆரோக்கிய நன்மைகள் – Benefits of cheese in Tamil - January 12, 2021
- டிஃப்தீரியா என்றால் என்ன? டிப்தீரியாவுக்கான வீட்டு வைத்தியம் – Home Remedies for Diphtheria in Tamil - January 11, 2021
- மூச்சுத்திணறல் அல்லது சுவாசக் கோளாறு – ஆரம்பத்திலேயே குணப்படுத்த கைவைத்தியங்கள் – Home remedies for wheezing in tamil - January 11, 2021
- கிராம்பு எண்ணெயின் நன்மைகள் – benefits of clove oil in Tamil - January 11, 2021
- விளிம்பிப்பழம் அல்லது தம்பரத்தம்.. இந்தக் கொரோனா காலத்தில் உண்ண வேண்டிய பழங்களில் ஒன்று I Benefits of star fruit in tamil - January 5, 2021
