சீரகத்தின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

Written by StyleCraze

சீரகம்

நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மூலப்பொருட்களுள் சீரகமும் ஒன்று. இந்த சீரகம்,  நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது. இந்த சீரகத்தின் பயனை இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவருமே நன்கு அறிவர். சீரகம் பார்ப்பதற்கு ஓமம் போன்று இருந்தாலும், இதன் வாசனை & சுவை வேறுபட்டு காணப்படும். இவ்வளவு தான் இந்த சீரகம் நமக்கு உதவுகிறதா என நினைத்து விடாதீர்கள். இதன் பயன்கள் (1) (2)எண்ணற்றவை. வாருங்கள் அதனை நாம் விரிவாக பார்க்கலாம்.

சீரகத்தின் பயன்கள்

ஆரோக்கிய பயன்கள்

நம் உடல் ஆரோக்கியத்திற்கு சீரகம் தரக்கூடிய எண்ணற்ற பலன்களை இங்கே கொடுத்திருக்கிறோம்

1. செரிக்க தேவை சீரகம்

சீரகம் இரைப்பை குடல் வலியை நீக்க உதவுகிறது. சீரகத்தோடு இஞ்சி, பெருஞ்சீரகம் போன்றவை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் வயிறு உபாதைகள் (3) நீங்குகிறது. ஒரு ஆய்வின் படி நமக்கு தெரிய வருவது என்னவென்றால், சீரகத்தை கர்ப்பிணி பெண்கள், அவர்களுடைய சிசேரியனுக்கு பிறகு சேர்த்துக்கொள்வதன் மூலம் வாயுத்தொல்லைகள் நீங்குகிறதாம் (4) (5) . அதோடு இந்த சீரகம் நெஞ்செரிச்சலையும் சரி செய்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

அ . வறுத்த சீரக பொடி 1 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.

ஆ. கால் டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து கால் டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து குடிக்கவும்.

எத்தனை முறைதினமும் 1 முதல் 2 முறை

2. சளி மற்றும் காய்ச்சலை போக்கும் சீரகம்

சீரகத்தில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்பு & பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நமக்கு ஏற்படக்கூடிய சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகிறது.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்துடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் நறுக்கிய இஞ்சியும் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு, அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள்.

எத்தனை முறை – ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை

3. இரும்புச்சத்தை கொண்ட சீரகம்

சீரகத்தில் தேவையான அளவு இரும்புச்சத்து இருப்பதால், இரத்த அணுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய தினசரி உணவில் சீரகத்தை சேர்த்தாலே போதுமானது

4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம்

சீரக விதையிலுள்ள ஒரு வித எண்ணெய், அலெர்ஜி எதிர்ப்பு பண்பாகவும், ஆக்சிஜனேற்ற பண்பாகவும் செயல்படுகிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

தினமும் உங்கள் உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. எடையை குறைக்கும் சீரகம்

cumin (2)

Shutterstock

உடல் பருமன் பிரச்சனை பல வித உபாதைகளை உண்டாக்கக்கூடியது. அவற்றுள் இதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் கீல்வாதம் ஆகியவையும் அடங்கும். ஒரு சிலர் தன்னுடைய உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வர். ஒரு சிலரோ உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பர்.

ஒருவேளை உங்களுக்கு உடற்பயிற்சி செய்யவோ, உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கவோ பிடிக்காது என்றால், கவலை வேண்டாம். கையில் எடுங்கள் இந்த சீரகத்தை. ஆம், சீரகம் உங்களுடைய உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது (6). சீரகத்தோடு, சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து எடுத்துக்கொள்ள பசியின்மை நீங்கும்.

பருமனான பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

தயிருடன் சீரகம் சேர்த்து சாப்பிடலாம்

எவ்வளவு கிராம் – நாள் ஒன்றுக்கு 3 கிராம்

எவ்வளவு நாளைக்கு சாப்பிட வேண்டும் – 3 மாதங்களுக்கு

என்ன பலன் கிடைக்கும் – உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு குறையும் (7)

6. இரத்த சோகைக்கு குட்பை சொல்லும் சீரகம்

ஒரு சிலருக்கு ஹீமோகுளோபின் பற்றாக்குறை காரணமாக இரத்தசோகை வருகிறது. இதற்கு பீட்ரூட் நல்லது என்றாலும், ஒரு சிலருக்கு பீட்ரூட் சாப்பிடுவது பிடிக்காது. அதிலும் நம்முடைய பிள்ளைகள் காய்கறி என்றாலே ஒதுக்கி விட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பர். அவர்களுக்கு நாம் சீரகம் தரலாம். ஆம், இரத்தசோகை உடையவர்களுக்கு ஒரு உன்னதமான மருந்தாக இந்த சீரகம் பயன்படுகிறது.(8)

என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய தினசரி உணவில் சீரகத்தை சேர்த்தாலே போதுமானது

1 டேபிள்ஸ்பூன் சீரகத்தில் உள்ள இரும்புச்சத்து – 4 மில்லிகிராம்

7. மூட்டுவலியை சரிசெய்யும் சீரகம்

சீரகத்தில் இருக்கும் அலெர்ஜி எதிர்ப்பு பண்பு உங்களுடைய மூட்டு வலியை குணப்படுத்தும்.(9)

என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய அன்றாட உணவில் சீரகம் சேர்த்து வருவது நல்லது. அல்லது சீரக எண்ணெய்யை வலி உள்ள இடங்களில் தேய்த்து வரலாம். இதனால் மூட்டு வலி சிக்கல்கள் குறையும்.

8. வயிற்றுவலியை விரட்டும் சீரகம்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் வயிற்று வலியும் ஒன்று. இந்த வயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்க சீரகம் உதவுகிறது.(10)

என்ன செய்ய வேண்டும்?

ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு அதனை வடிக்கட்டி கொள்ளவும்.

எவ்வளவு தரலாம் – 1 முதல் 2 டீஸ்பூன்

எத்தனை முறை – தினமும் ஒரு முறை

9. சர்க்கரை நோயை சரி செய்யும் சீரகம்

இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் இல்லாத ஆட்களை நாம் பார்ப்பது மிகவும் அரிது. கர்ப்பகாலத்தில் கூட பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது ஒரு பொதுவான பிரச்சனையாகவே இருக்கிறது. எவ்வளவு தான் நாம் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், இந்த சர்க்கரை நோய் நமக்கு வந்துவிடுகிறது. கவலை வேண்டாம், சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.(11)(12)

என்ன செய்ய வேண்டும்?

8 டீஸ்பூன் சீரகத்தை வறுத்து  பொடி செய்துக்கொள்ள வேண்டும். பிறகு குடிக்கும் நீரில் இந்த பொடியை அரை டீஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும்.

எத்தனை முறை – தினமும் 2 முறை

எவ்வளவு நாளைக்கு – சில மாதங்கள்

10. மாதவிடாயை சீராக்கும் சீரகம்

முதல் நாள் இரவு ஊற வைத்த சீரகத்தை (2 ஸ்பூன் ) மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். அல்லது அந்த சீரக நீரைக் குடிக்கலாம். தொடர்ந்து செய்து வந்தால்  சீரற்ற மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.

என்ன செய்ய வேண்டும்?

2 ஸ்பூன் சீரகத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் காலை குடித்து வர வேண்டும்.

எத்தனை முறை – மாதவிடாய் சீராகும் வரை குடித்து வரலாம்

சருமத்துக்கான பயன்கள்

skin care

Shutterstock

சீரகம் நமது உடல் ஆரோக்கியத்துக்கு உதவுவதோடு அழகையும் சேர்த்து தருகிறது. மேலும் நமது அழகைப்பராமரிக்க   சீரகம் எப்படி எல்லாம் நமக்கு உதவுகிறது என்பதை இப்போது பார்ப்போம் வாருங்கள்.(13)

1. சருமத்தை பளபளக்க செய்யும் சீரகம்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்ள சீரகம் உதவுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

8 அவுன்ஸ் நசுக்கிய சீரகத்துடன் ½ கப் உலர்ந்த திராட்சை சேர்த்து ஒரு பாட்டிலில் மூடி வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்டு வாருங்கள்.

எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் – தினமும் 1 டேபிள்ஸ்பூன்

2. சரும நோய்களை சரி செய்யும் சீரகம்

சருமத்தில் வரும் நோய்களை குணப்படுத்த சீரகம் உதவுகிறது.(14)

சருமத்தில் தடிப்பா?

சீரகத்தை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு அந்த தண்ணீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து உபயோகப்படுத்துங்கள்.(13)

3. இளமையை தரும் சீரகம்

நம்முடைய அன்றாட உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதன் மூலம் இறந்த செல்களை சருமத்திலிருந்து நீக்கி இளமையுடன் இருந்திடலாம். பெரும்பான்மையான கேரளப்பெண்கள் தங்கள் அன்றாட வழக்கமாக சீரக நீரை பயன்படுத்தி வருகின்றனர். நாம் சாதாரண தண்ணீர் அருந்துவதற்கு மாற்றாக அவர்கள் சீரக நீரை அருந்தி வருகின்றனர். அதனால்தானோ என்னவோ கேரளப்பெண்களின் அழகும் இளமையும் எப்போதும் போற்றுதலுக்கு உரியதாகவே இருக்கிறது.

4. கொப்புளத்தை போக்கும் சீரகம்

கொப்புளம் உடலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், பொதுவாக இது முகத்திலும், கண்களிலும், கழுத்தின் பின் பகுதியிலும், பிட்டத்திலும் வருவது இயல்பு. இதனை விரட்டியடிக்க சீரகம் நமக்கு உதவுகிறது.(14)

5. அரிப்பை போக்கும் சீரகம்

உங்களுக்கு உடம்பில் அரிப்பு ஏற்படுகிறதா. அதற்கான அருமருந்தாக உங்கள் அஞ்சறை பெட்டியில் உள்ள  சீரகம் இருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வையுங்கள். அந்த தண்ணீரை குளிக்கும் தண்ணீரோடு கலந்து உபயோகப்படுத்துங்கள்.

6. எரிச்சலை சரிசெய்யும் சீரகம்

சீரகத்தில் இருக்கும் அலெர்ஜி எதிர்ப்பு பண்பு எரிச்சல் உணர்வை போக்க வல்லது.வயிற்றில் உள்ள எரிச்சல் மற்றும் வெளிப்புண்களால் ஏற்படும் எரிச்சல்களை தணிக்க கூடியது சீரகம்.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்ள தொடங்குங்கள். சீரகத்தில் உள்ள அலெர்ஜி எதிர்ப்பு பண்பு, எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்தும்.

கூந்தலுக்கான பயன்கள்

கூந்தல் குறித்த கவலைகள் பெரும்பான்மையான மனிதர்களுக்கு இருக்கிறது. ஒரே ஒரு பொருளைக் கொண்டு உங்கள் ஒட்டுமொத்த கூந்தல் பிரச்னைகளையும் தீர்க்கலாம் என்றால் அதற்கு சீரகம் பெரிய அளவில் உதவி செய்கிறது.

1. முடி உதிர்வை தடுக்கும் சீரகம்

உங்களுக்கு முடி உதிர்வு காணப்பட்டால், சீரகம் அதற்கு ஒரு சிறந்த நிவாரணியாக அமைகிறது.

என்ன செய்ய வேண்டும்?
  • ஒரு கையளவு கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு விழுது போல் அரைத்து, பின்னர் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சேர்க்கவும். பிறகு, உச்சந்தலையில் சேர்த்து காயவிட்டு கழுவவும்.
  • கருஞ்சீரகத்தை வெங்காய விதை எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலுடன் கலந்து சூடுப்படுத்தவும். பிறகு அதனை உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

2. பொடுகு தொல்லையை போக்கும் கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தில் ஒமேகா – 9 கொழுப்பு அமிலம் உள்ளது. இது தீராத பொடுகு தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணத்தை தருகிறது.

என்ன செய்ய வேண்டும்?

பொடுகு தொல்லை குறையும் வரை மேற்கண்ட  ஆயிலை பயன்படுத்தி வாருங்கள்.

3. பளபளக்கும் கூந்தல் அழகைப் பெற சீரகம்

சீரகத்தில் இருக்கும் எண்ணெய் உங்களுடைய முடியை பளபளக்க செய்ய பயன்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

மேற்கண்ட  ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கூந்தல் பளபளப்பு அதிகரிக்கும்.

சீரகத்தில் காணப்படும் ஊட்டச்சத்து மதிப்பு

ஊட்டச்சத்துஅலகுஎவ்வளவு
தண்ணீர்கிராம்0.17
எனெர்ஜிகிலோகலோரி8
புரதம்கிராம்0.47
கார்போஹைட்ரேட்கிராம்0.93
நார்ச்சத்துகிராம்0.2
கால்சியம்மில்லிகிராம்20
இரும்புச்சத்துமில்லிகிராம்1.39
மெக்னீசியம்மில்லிகிராம்8
பாஸ்பரஸ்மில்லிகிராம்10
பொட்டாசியம்மில்லிகிராம்38
சோடியம்மில்லிகிராம்4
துத்தநாகம்மில்லிகிராம்0.1
வைட்டமின் பி-6மில்லிகிராம்0.009
வைட்டமின் – ஈமில்லிகிராம்0.07

கொழுப்பு அமிலங்கள்

நிறைவுற்ற கொழுப்பு அமிலம்கிராம்0.032
நிரம்பாத கொழுப்பு அமிலம்கிராம்0.295
நிறைவுறா கொழுப்பு அமிலம்கிராம்0.069

சீரகத்தை எப்படி பயன்படுத்துவது?

சீரகத்தை பல மாதிரியாக நாம் பயன்படுத்தலாம். ஆம், எண்ணெய்யாகவோ, விதையாகவோ அல்லது மாத்திரை போன்றோ பயன்படுத்தலாம். அதிலும் கருஞ்சீரகம் மகத்தான மருத்துவ குணம் கொண்டது என்பது யாராலும் மறுக்க முடியாது. இந்த கருஞ்சீரகத்தை, “ஆசிர்வதிக்கப்பட்ட விதை” என்றும் அழைப்பர். இந்த மூலிகை சுவாச பிரச்சனைக்கு தீர்வு, வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு, உடல் வலு குறைவு பிரச்சனைக்கு தீர்வு என பல பயன்களை கொண்டுள்ளது. சீரகத்தை நம்முடைய வாழ்வில் பலவாறு பயன்படுத்தலாம். மரணத்தை தவிர அனைத்து விதமான சிக்கல்களுக்கும் தீர்வாக சீரகம் அமைகிறது என்றால் அது மிகையில்லை.

சீரகத்தை எப்படி சேமிப்பது?

சீரகத்தையோ அல்லது சீரக தூளையோ நீங்கள் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து சேமிக்கலாம். நாம் முறையாக காற்றுப்புகாமல் சீரகத்தை காய்ந்த விதைகளாகவோ அல்லது தூளாகவோ சேமிக்கும்போது அது ரொம்ப நாட்களுக்கு கெட்டு போகாமல் அப்படியே இருக்கும். சொல்லப்போனால், வருடம் கடந்து கூட கெட்டு போகாமல் இருக்கும். இது போன்ற நறுமண விதைகள் கெட்டு போவதில்லை. நாள் ஆக ஆக இதன் வீரியம் வேண்டுமானால் குறையலாம்.

சீரகத்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள்

  • அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான். அப்படி இருக்கும்போது, அதில் சீரகம் மட்டும் விதிவிலக்கா என்ன. இல்லை, நிச்சயம் இல்லை. சீரகத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது அது மிகப்பெரிய ஆபத்து என கூறப்படுகிறது. (1)
  • சீரகத்தை அதிகம் சேர்க்கும்போது இரத்த சர்க்கரை அளவு எதிர்பாராத விதத்தில் குறைந்து நீண்ட இரத்த கசிவுக்கு வழிவகுக்கும். (15).
  • கருஞ்சீரகம் குறித்து தெரிந்துக்கொள்ளும்போது குழப்பம் அடைய வேண்டாம். சீரகத்தின் வகைகள் எல்லாவுமே வெவ்வேறு விதத்தில் செயல்படுகிறது. அதனால் மிகவும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

முடிவுரை

சீரகம் ஒரு நறுமண பொருளாகும். இது இந்தியா போன்ற பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான நறுமண பொருளாகும். இதன் மணம், உணவுக்கு மேலும் சுவையை சேர்த்து உண்ணும் உணவு செரிக்கவும் உதவுகிறது.

இந்த சீரகத்தை நாம் தூளாக பயன்படுத்தி எதிர்ப்பு சக்தியை பெறலாம். சீரகத்தண்ணீர் தினமும் குடிப்பது மிகவும் நல்லது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்

இதுவரை நாம் சீரகம் குறித்த பல தகவல்களை தெரிந்துக்கொண்டோம்.

தெரிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் சீரகத்தை அளவோடு பயன்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம் .

Was this article helpful?
The following two tabs change content below.