கற்றாழை ஜெல்களில் சிறந்த ஜெல்கள் பற்றி ஒரு பார்வை

கற்றாழை – இதன் பெருமையை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை என்பதுதான் உண்மை. நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் இதமும் அளிக்கும் கற்றாழை அழகு சாதன பொருள்களிலும் முதலிடம் வகிக்கிறது. இது உடலுக்கு இதமளிக்கும் பல மூலப்பொருள்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு மருத்துவ தாவரம்.
இதனை நாம் வீட்டிலேயே வளர்க்க முடியும். இதன் ஒவ்வொரு கிளையிலும் ஆச்சரியப்படத்தக்க பல்வேறு விதமான மினரல்கள், விட்டமின்கள், இரும்பு சத்து , அமினோ அமிலங்கள் என உடலுக்கு நன்மை தரும் அவ்வளவும் இதில் நிரம்பி இருக்கின்றன. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஈரப்பதத்தையும் குளுமையையும் இந்த தாவரம் கொடுக்க வல்லது. அதனாலேயே முகக் க்ரீம் முதல் ஷாம்பூ, சோப்பு, கண்டிஷனர் என எல்லா அழகுப் பொருள்களிலும் கற்றாழையின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கற்றாழையை நாம் நேரடியாக வளர்த்து அடிக்கடி அறுவடை செய்து அதனை கவனமாக நறுக்கி எடுத்து கற்றாழை ஜெல்லைத் தனியே பிரித்து எடுத்து பயன்படுத்துவது என்பது சில சமயங்களில் ஆயாசமாக இருக்கும். அதற்காகவே சில நிறுவனங்கள் கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக விற்பனை செய்கிறது. அதனைப் பட்டியலிட்டுள்ளேன். இதில் உங்களுக்குப் பிடித்தமான கற்றாழையை நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
1. Kapiva Pure Aloe Vera Skin Gel
இருப்பதிலேயே சிறந்த இயற்கை மணம் மாறா கற்றாழை ஜெல் என்றால் அது இதுதான். கற்றாழை தோட்டங்களில் இருந்து பறித்து அதனை நான்கு மணி நேரத்திற்குள் பேக் செய்கிறது. ஏனெனில் நேரம் செல்ல செல்ல கற்றாழையின் ஊட்டச்சத்துக்கள் குறைய ஆரம்பிக்கும் என்பதை இந்த நிறுவனம் அறிந்திருக்கிறது. மற்ற நிறுவனங்கள் கற்றாழை சதையை ஃபிரீஸரில் வைத்து பின்னர் ஜெல் தயாரிக்கிறது. ஆனால் நாங்கள் நான்கு மணி நேரத்திற்குள் இதனை ஃபிரீஸரில் வைக்காமல் தயாரிக்கிறோம் என்கிறது இந்த நிறுவனம்.
நன்மைகள்
- கற்றாழையின் முழு நன்மைகள் இதில் பெறலாம்
- முதுமை சுருக்கங்களில் இருந்து காக்கிறது
- சருமத்தை அற்புதமாக இதமாக்குகிறது
- மேக்கப் அடித்தளமாக இதனை பயன்படுத்தலாம்
- தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியது
- ஆயுர்வேதம் அடங்கியது
தீமைகள்
- எதுவும் இல்லை
2. WOW Aloe Vera Multipurpose Beauty Gel
இந்த ஆலோ வீரா ஜெல் உங்கள் சருமத்திற்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் பொருந்தும் தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின் ஏ , சி, ஈ , பி12 , போலிக் அமிலம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. கற்றாழையின் இயற்கையான தன்மையை பாதுகாப்பதற்காக கைகள் படாமல் ஆலோ வீரா ஜெல்லை கற்றாழையில் இருந்து உறிஞ்சி எடுத்து அதனை பாட்டிலில் பாதுகாக்கும் தயாரிப்பு முறையை மேற்கொள்கிறது
நன்மைகள்
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
- லேசானது
- உடனடியாக உடலால் உறிஞ்சிக்கொள்ளப் படுவது
- செயற்கை வாசனைகள் இல்லை
- செயற்கை நிறம் சேர்க்கப்படவில்லை
- மினரல் ஆயில் இல்லை
- பேரபின் , சிலிகான் மற்றும் சல்பேட் இல்லை
- பயணத்திற்கு ஏற்ற பேக்கேஜிங் உடன் வெளிவருகிறது.
தீமைகள்
- எதுவும் இல்லை
3. Amara Organics Cold Pressed Aloe Vera Gel
இந்த கற்றாழை ஜெல் பேக்கில் 99.75 சதவிகிதம் கற்றாழை ஜெல் மட்டுமே கோல்ட் பிரஸ் செய்யப்பட்டுள்ளது. மீதி 0.25 சதவிகிதம் இயற்கையான பிரிசெர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் முழுமையான கற்றாழையின் இயற்கை தன்மையை மாற்றாமல் உங்கள் கைகளில் இது கிடைக்க இந்த நிறுவனம் முயற்சித்துள்ளது.
நன்மைகள்
- 99.75 சதவிகிதம் கற்றாழை ஜெல் அடங்கியது
- இயற்கையான ப்ரிசர்வேட்டிவ் கொண்டது
- இதில் செயற்கை நிறம் சேர்க்கப்படவில்லை
- இதில் செயற்கை நறுமணம் சேர்க்கப்படவில்லை
- இதில் ஆல்ஹகால் இல்லை
- இதனை பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.
- தலைக்கும் பயன்படுத்த முடியும்
தீமைகள்
- எதுவும் இல்லை
4. Nature Republic Aloe Vera Gel
இந்த கற்றாழை ஜெல் ஒரு தென் கொரிய தயாரிப்பு என்பதே இதன் தனிச்சிறப்பு. உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் ஒரே ஜெல் இந்த கற்றாழை ஜெல். 1.50 மில்லியன் மக்களால் விரும்பி வாங்கப்படுவது எனும் செய்தி இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
நன்மைகள்
- இதில் ஆலோ வீரா 92 சதவிகிதம் இருக்கிறது
- சூரிய வெப்பத்திற்கு எதிராக குளுமை அளிக்கிறது
- அதிகளவு விட்டமின்கள் உள்ளது
- கலிபோர்னிய விவசாய சங்கம் மூலம் அங்கீகரிக்கப்பட்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
5. Khadi Natural Ayurvedic Aloevera Gel
இந்த கற்றாழை ஜெல்லானது உங்கள் முகத்தை நீண்ட நேரத்திற்கு ஈரப்பதமுடன் வைக்கிறது. முகம் மட்டும் அல்லாமல் சருமம் முழுமைக்கும் இந்த ஜெல் இதமளிக்கிறது. இது வறண்ட சருமத்தினருக்கான ஸ்பெஷல் ஜெல். மேலும் இது சருமத்தின் இறந்த செல்களை நீக்கி சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குகிறது.
நன்மைகள்
- அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
- லேசானது
- தோல்நோய் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- பயணத்திற்கு ஏற்றது
- பேரபின் இல்லை
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- ஆன்டி பேக்டீரியல் , ஆன்டி இன்பிளமெட்டரி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் கொண்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
6. Cenizas 99% Pure Paraben Free Aloe Vera Gel
இதனை நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் கெமிக்கல்கள் இல்லாமல் வெளிவருகிறது. இதனை ஆண்கள் ஆஃப்டர் ஷேவ் லோஷனாகவும் பயன்படுத்தலாம். அதனைப் போலவே சருமம் மற்றும் கூந்தல் என இரண்டு பகுதிகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாம். இது பொடுகு தொல்லை நீக்கவும் பயன்படுகிறது. முடி உதிர்வினை தடுக்கிறது. மேலும் பல நன்மைகள் உள்ளன.
நன்மைகள்
- சிறந்த மாய்ச்சுரைசர் ஆகப் பயன்படுகிறது
- ஆஃப்டர் ஷேவ் லோஷனாகவும் பயன்படுத்தலாம்
- 99 சதவிகிதம் கற்றாழை ஜெல் நிரம்பியது
- எரிச்சல்பட்ட சருமத்திற்கு இதம் தருகிறது
- பொடுகு மற்றும் மற்ற கூந்தல் பிரச்னைகளுக்கு தீர்வாகிறது
- முடி வளர உதவி செய்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
7. Greenberry Organics 99% Pure Aloe Vera Gel
இதன் மென்மையான ஜென்டில் பார்முலா உங்கள் சருமத்தை இதப்படுத்தி குணமளிக்கிறது ஈரப்பதமூட்டுகிறது. உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். விட்டமின் ஈ நிறைந்தது. தாடிக்கும் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- எண்ணெய் இல்லாத ஈரப்பதம் தருகிறது
- லேசானது
- பிசுபிசுப்பற்றது
- கிரேன்பெரியின் நன்மைகள் அடங்கியது
- அதிமதுரம் சருமத்தை பிரகாசிக்க செய்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
8. Divine India Aloe Vera Gel
இதனையொரு ஹேர் ஜெல்லாகவோ க்ளென்சிங் கண்டிஷனராகவோ பயன்படுத்தலாம். ஆண்களும் பயன்படுத்தலாம் ஷேவிங்கிற்கு பின்பான எரிச்சலுக்கு இது இதமளிக்கிறது. அனுதினமும் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
நன்மைகள்
- 100 சதவிகிதம் அசல் பொருளால் உருவாக்கப்பட்டது
- ECOCERT மூலம் சான்றிதழ் பெற்றது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- பேரபின் , சல்பேட் , மினெரல் ஆயில் இல்லை
- மிருகக் கொழுப்புகள் சேர்க்கப்படவில்லை
தீமைகள்
- எதுவும் இல்லை
9. Mamaearth Aloe Vera Gel
இந்த கற்றாழை ஜெல் சருமம் மற்றும் கூந்தலுக்கு பாதுகாப்பு தருகிறது. சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இதன் ஈரப்பதம் காலை முதல் இரவு வரை நிலைக்கிறது இதன் சிறப்பம்சம். சருமத்தை எரிச்சல், அரிப்பு, சூரிய வெப்பம் போன்ற எல்லாவற்றில் இருந்தும் காக்கிறது.
நன்மைகள்
- உங்கள் உச்சந்தலை ஆரோக்கியம் காக்கப்படுகிறது
- இயற்கை பொருள்களால் உருவானது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- ஈரப்பதம் தந்து இதம் அளிக்கிறது
- எரிச்சல் போன்ற சரும வலிகளில் இருந்து காக்கிறது
- தோல்நோய் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
தீமைகள்
- எதுவும் இல்லை
10. UrbanBotanics 99% Pure Aloe Vera Skin/Hair Gel
இது இயற்கை முறையில் உருவான ஜெல் என்பது இதன் தனிச்சிறப்பு. காயங்கள், பூச்சிக்கடிகள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு இந்த ஜெல்லை மருந்தாக தடவ முடியும். முகத்தில் வெயிலால் ஏற்படும் சிவப்பு நிறம் மற்றும் எரிச்சலை உடனடியாக போக்கி இதம் தருகிறது
நன்மைகள்
- உடலால் சீக்கிரம் உறிஞ்சப்படுகிறது
- பிசுபிசுப்பு தன்மை இல்லாதது
- பேரபின் இல்லை
- சிந்தெடிக் வாசனை அற்றது
- ஆல்கஹால் இல்லை
- 100 சதவிகிதம் சைவ முறையில் உருவானது
தீமைகள்
- சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது அல்ல
11. Indus Valley Bio Organic Non-Toxic Aloe Vera Gel
இந்த ஆலோ வீரா ஜெல் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சருமத்தின் அடியாழம் வரை ஊடுருவி சென்று உங்கள் அழகை மேம்படுத்துகிறது. இதனால் சருமம் உடனடி பொலிவு பெறுகிறது. இது மிகவும் பரிசுத்தமானது. நச்சுத்தன்மை இல்லாதது என்பது இதன் இன்னொரு தனிச்சிறப்பு.
நன்மைகள்
- அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
- அனுதினமும் பயன்படுத்தலாம்
- லேசானது
- பிசுபிசுப்பு இல்லாதது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- விலை வாங்கும் திறனுக்கேற்ப இருக்கிறது
- நச்சு இல்லை
தீமைகள்
- சென்சிடிவ் சரும வகையினருக்கு பொருந்தாதது
12. Lakmé 9 to 5 Naturale Aloe Aquagel
இது மிகவும் இறுக்கமான சருமத்தை தளர்வாக வைத்து நல்ல ஓய்வினை முகத்திற்கு அளிக்கிறது. நகரத்தின் அசுத்தமான தூசுகள் மற்றும் காற்று மாசுக்களிடம் இருந்து உங்கள் சருமத்தைக் காக்கிறது. மேலும் மேக்கப்பிற்கு முன்பான ப்ரைமரின் வேலையை சருமத்தின் ஆரோக்கியம் கெடாமல் இந்த லக்மே கற்றாழை ஜெல் செய்கிறது.
நன்மைகள்
- தினமும் பயன்படுத்தலாம்
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
- சென்சிடிவ் சருமத்தில் மென்மையாக படருகிறது
- மேக்கப்பின் பேஸ் (Base) பொருளாக பயன்படுத்தலாம்
- லேசானது
- பிசுபிசுப்பு அற்றது
- பயணத்திற்கு ஏற்றது
தீமைகள்
- பேக்கேஜ் சிறப்பான தரத்தில் இல்லை
- செயற்கை வாசனை கொண்டுள்ளது
13. Aroma Treasures Aloe Vera Gel
இது ஆன்டி பேக்டீரியல், ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரல் தன்மைகள் கொண்டுள்ள அற்புத ஆலோ வீரா ஜெல் ஆகும். இதன் மற்றுமொரு தனித்தன்மை இதனை உடலின் அனைத்து பாகங்களிலும் பயன்படுத்தலாம். தலைமுடி மற்றும் தாடிக்கும் பயன்படுத்தலாம். உங்கள் சருமத்தை மென்மையாக்கி உங்களை இளமையாக்கும் ஜெல் இது தான்.
நன்மைகள்
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
- கெடுதல் தரும் ரசாயனங்கள் இல்லை
- பேரபின் இல்லை
- பிசுபிசுப்பற்றது
- வாங்கும் திறனுக்கு ஏற்ற விலையில் கிடைக்கிறது
தீமைகள்
- பேக்கேஜிங் தரமானது அல்ல
- செயற்கை நிறம் கொண்டது
- செயற்கை வாசனை கொண்டது
14. Green Leaf Pure Aloe Vera Skin Gel
இதில் உள்ள கற்றாழை ஜெல்லின் இயற்கை தன்மையானது உங்கள் சருமத்திற்கு பளபளப்பையும் அழகையும் அதிகரிக்கிறது. மென்மையான மிருதுவான சருமம் உங்களுடையதாகிறது.சருமத்தின் டெக்ச்சர் மேம்படுகிறது. பருக்கள், ரேஷஸ் , வெட்டுக்காயங்கள் மற்றும் தீக்காயங்கள் , மேலும் அலர்ஜி பிரச்னைகளில் இருந்து உங்கள் சருமத்தைக் காக்கிறது.
நன்மைகள்
- அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
- லேசானது
- சருமத்தால் உடனடியாக உறிஞ்சப்படுகிறது
- மேக்கப்பின் அடித்தளமாக இதனைப் பயன்படுத்த முடியும்
- பயணத்திற்கு ஏற்றது
தீமைகள்
- வறண்ட சருமத்தினருக்கு அவ்வளவாக ஈரப்பதம் கிடைப்பதில்லை
- செயற்கை நிறம் சேர்க்கப்பட்டுள்ளது
- செயற்கை வாசனை கொண்டது
15. The Face Shop Non-Sticky Transparent 3 in 1 Aloe Fresh Soothing gel
இது jeju தீவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சதவிகித பார்பேடென்சிஸ் இலைகளின் சாறு சேர்க்கப்பட்ட கற்றாழை ஜெல் ஆகும். இது உங்கள் சருமத்திற்கு இதம் அளிக்கிறது. ஈரப்பதம் தருகிறது. இந்த ஜெல் பல்வேறுவிதமான பயன்பாடுகளுக்கும் ஏற்றது.
நன்மைகள்
- பிசுபிசுப்பு அற்றது
- பேரபின் இல்லை
- செயற்கை நிறம் இல்லை
- மினரல் ஆயில் இல்லை
- மிருகங்களின் கொழுப்பு சேர்க்கப்படவில்லை
தீமைகள்
- பேக்கேஜ் தரமில்லை
- நான் ஆர்கானிக்
- செயற்கை வாசனை உடையது
16. D’VENCE Aloe Vera Gel
மற்ற கற்றாழை ஜெல்களை போலவே இதனை நாம் பலவிதமான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் விட்டமின் ஈ எண்ணெய் இருப்பது இதன் தனி சிறப்பு. இது சருமத்தின் வறண்ட தன்மையில் இருந்து மற்ற ஜெல்களை விட கூடுதல் பாதுகாப்பளிக்கிறது.
நன்மைகள்
- ஒவ்வாமையில் இருந்து காக்கிறது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- சைவ முறையில் தயாரானது
- பேரபின் , சல்பேட் , மினரல் எண்ணெய், தாலேட் இல்லை
தீமைகள்
- அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்த முடியாது
- செயற்கை நிறம் பொருந்தியது
- செயற்கை நறுமணம் கொண்டது
17. Aloe Veda Aloe Vera Multipurpose Beauty Gel
இந்த கற்றாழை ஜெல் மற்ற அனைத்து பயன்களுக்கும் ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமான கூந்தலுக்கு இந்த கற்றாழை ஜெல் உதவி செய்கிறது. பொடுகற்ற பளபளப்பான கூந்தலைப் பெற நீங்கள் இதனைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
நன்மைகள்
- விட்டமின்கள் A ,C , E ,B12 மற்றும் போலிக் அமிலங்கள் உள்ளடக்கியது.
- ஆஃப்டர் ஷேவ் லோஷனாக இதனைப் பயன்படுத்தலாம்
- ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்
தீமைகள்
- செயற்கை நிறம் கொண்டது
- செயற்கை வாசனை கொண்டது
சிறந்த கற்றாழை ஜெல்லை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
சிறந்த கற்றாழை ஜெல் வேண்டும் என்றால் அது விளையக் கூடிய இடம் முதல் ஆரம்பிக்க வேண்டும். ஆப்பிரிக்காவில் இருந்து அறிமுகமான கற்றாழை ஜெல் 500 வகைகளைக் கொண்டுள்ளது. எங்கு விளைவித்தாலும் விளைய கூடிய தன்மை கொண்டது. அதனால் இதில் அதிக போலிகள் நடமாடலாம்.
- நச்சுத்தன்மை கொண்ட ப்ரீசர்வேட்டிவ் இல்லாமல் இருக்க வேண்டும்
- பொட்டாசியம் சார்பேட் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்
- ஸாண்ட்தம் கம் இந்த ஜெல்லின் அடர்த்தியை நிலைநிறுத்தப்படுகிறது
- விட்டமின் சி நிலைத்தன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது
இப்படியான ரசாயனங்கள் கொண்டுள்ள கற்றாழை ஜெல்லை நாம் பயன்படுத்தினால் தவறில்லை. அதைப்போலவே கற்றாழையின் சதவிகிதம் அதிக அளவு இருக்குமாறு பார்த்து வாங்கலாம். மேலும் நச்சுத்தன்மை அற்ற மூலப்பொருள்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும் வாங்கலாம். இயற்கை முறையில் உருவான ஜெல் பாதுகாப்பானது.
Table Of Contents
எப்படி பயன்படுத்துவது
கற்றாழை ஜெல்லை உங்கள் கட்டை விரலால் எடுத்து உள்ளங்கைகளில் வைத்து லேசாக தேய்த்து பின்னர் முகம் மற்றும் தேவைப்படும் சருமப்பகுதிகளில் தேய்க்கலாம். இதே முறையை கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். உச்சந்தலையில் படுமாறு தடவ வேண்டியது அவசியம். மேலும் கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தின் மீது அல்லது சருமத்தின் மீது லேயர் போலத் தடவி உலர்ந்த பின்னர் கழுவிக் கொள்ளலாம். இது இன்னமும் அதிகமான பயன் தரும்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
