உங்கள் உதடுகளை அழகாக்கும் சிறந்த லிப்ஸ்டிக் வகைகள்

பிரிக்க முடியாதது எது என்று இன்று ஈசனிடம் தருமி கேட்டிருந்தால் ஒருவேளை பெண்களும் லிப்ஸ்டிக்கும் என்று அவரிடம் இருந்து பதில் வந்திருக்கலாம். அந்த அளவிற்கு லிப்ஸ்டிக் என்பது இன்றைய யுகத்து பெண்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு அழகு பொருளாக இருக்கிறது.
லிப்ஸ்டிக் வாங்க நீங்கள் மூன்று முக்கிய விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும். அதன் பினிஷ் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். மேட் பினிஷா க்ரீமி லுக் வேண்டுமா அல்லது க்ளாசியாக இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இரண்டாவது நிறம். உங்கள் சரும நிறத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றாவது ப்ராண்ட். நீங்கள் வாங்கும் லிப்ஸ்டிக்கின் ப்ராண்ட் மிக முக்கியமானது. அதில் இந்தியப் பெண்களுக்கு ஏற்ற சிறந்த சில பிராண்ட்களை வகைப்படுத்தி இருக்கிறேன்.
1. Maybelline New York Color Sensational Creamy Matte Lipstick
இதன் தன்மை க்ரீமியாக இருப்பதால் உதடுகள் வறண்டு விடாமல் உங்கள் கவர்ச்சிகர தோற்றத்தைத் தக்க வைக்கிறது. ஹனி நெக்டர் இன்ஃபியூஸ் செய்யப்பட்ட லிப்ஸ்டிக் என்பதால் நாள் முழுதும் உதடுகளின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இதில் தேர்ந்தெடுக்க 35 நிறங்கள் உள்ளன. மிருதுவானது , வசதியானது மற்றும் பிக்மென்டன்ட் செய்யப்பட்டது.
2. Lakme 9 To 5 Matte Lip Color
லக்மே நிறுவனத்தின் இந்த லிப்ஸ்டிக் அலுவலகம் செல்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட தன்மைகளை உள்ளடக்கியது. இதன் மென்மையான மிருதுவான டெக்ச்சர் உங்கள் உதடுகளை மேலும் அழகானதாக ஆக்கும். இதில் வைட்டமின் ஈ அடங்கியிருப்பதால் உதடுகளின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. உயர்தர நிறக்கோர்வைகள் கொண்டுள்ளது. அல்ட்ரா மேட் பினிஷ் கொண்டது . மேலும் நாள் முழுதும் நிலைத்திருக்கும். லக்மேயின் இந்த லிப்ஸ்டிக்கானது பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.
3. Colorbar Velvet Matte Lipstick, Peach
கலர்பாரின் இந்த லிப்ஸ்டிக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவான வெல்வெட் மேட் பினிஷ் கொண்டது. இதன் பீச் க்ரஷ் நிறம் உங்கள் உதடுகளுக்கு அழகு சேர்க்கும். க்ரேயான் டெக்ச்சர் கொண்ட இதன் தன்மை உங்கள் உதடுகளுக்கு தனித்தன்மையான தோற்றத்தை கொடுக்கிறது. இதனுடன் விருப்பப்பட்டால் லிப் க்ளாஸ் அல்லது லிப் லைனர் சேர்த்துக் கொள்ளலாம். ஐந்து மணி நேரம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது.
4. Lakme Enrich Matte Lipstick
லிப்ஸ்டிக்குகளில் முதல் முதலில் மேட் தன்மையைக் கொண்டுவந்த நிறுவனம் லக்மே. இந்த லிப்ஸ்டிக் க்ரீமி மற்றும் மேட் இரண்டின் கலவையாக இருக்கிறது. இதில் பல்வேறு வண்ணங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதனால் உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்ந்தெடுக்க முடியும். உதடுகளில் இருந்து வழிவது போன்ற அசௌகரியங்கள் இல்லை.
5. Maybelline New York Lip Gradation Lipstick
கவர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களுக்கான பிராண்டாக இந்த லிப்ஸ்டிக் வகைகள் பார்க்கப்படுகிறது. தன்னை புதிது புதிதாக பரிசோதித்துக்கொள்ளத் தயங்காத பெண்களுக்கானது. இதன் கோரல் நிறம் இதனை நிரூபிக்கறது. இது வெண்ணெய் தன்மை கொண்ட மென்மையான பவுடர் ஸ்டிக் வகையை சேர்ந்தது. பல நிறங்களில் வெளிவருகிறது. உங்களுக்குப் பிடித்தமானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் இதன் தனித்தன்மைக்காக இதனை வாங்குபவர்கள் ஏராளம்.
6. L’Oreal Paris Color Riche Moist Matte Lipstick
இது அதிக அளவு பிக்மென்ட் செய்யப்பட்ட உயர்தரமான மேட் பினிஷ் கொண்ட லிப்ஸ்டிக் வகையாகும். ஒருமுறை தடவினால் அடர் நிறமளிக்கும் உத்திரவாதம் தருகிறது. உதடுகளை வறண்டு போக செய்யாமல் உதடுகளுடன் பொருந்திப் போவது இதன் சிறப்பம்சம். அதிகமான ஈரப்பதம் கொண்டது. நாள் முழுதும் நிலையாக இருக்கும். 45 நிறக் கோர்வைகளில் விற்பனையாகிறது.
7. Maybelline New York Color Sensational Loaded Bold Lipstick
க்ரீமி மற்றும் க்ளே தன்மை கலந்த வித்யாசமான டெக்ச்சர் கொண்ட லிப்ஸ்டிக் இதுவாகும். இதில் இருக்கும் ஹனி நெக்டர் உதடுகளில் க்ரீம் தன்மையைப் படர விடுகிறது. பல வித்யாசமான நிறங்களை இது அறிமுகப்படுத்துகிறது. எலெக்ட்ரிக் ப்ளூ , டீப் ப்ளம்ஸ், வைப்ரன்ட் ரெட் மற்றும் நேச்சுரல் நியூட் நிறங்களில் இது வெளிவருகிறது.
8. Avon True Color Perfectly Matte Lipstick
இது அடர்வண்ண லிப்ஸ்டிக்குகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வகையாகும். மிகவும் ஆழமான மற்றும் அழுத்தமான நிறங்களைக் கொண்டுள்ளது. ட்ரூ கலர் டெக்னாலஜி உடன் விற்பனையாகிறது. உங்கள் சரும நிறத்திற்கேற்ப நீங்கள் இதன் மூன்று நிறங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
9. SUGAR Cosmetics Nothing Else Matter Longwear Lipstick
பர்கண்டி நிறம் கொண்டுள்ள இதன் மேட் பினிஷ் இதனை உபயோகப்படுத்தும் உதடுகளை கவர்ச்சிகரமான தோற்றத்துக்கு உள்ளாக்குகிறது. ஒளிபுகா இதன் அடர் நிறம் மற்றும் மேட் பினிஷ் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்கள் உதடுகளில் பொருந்துகிறது. இது தண்ணீர் பட்டாலும் அழியாதது என்பது மற்றொரு சிறப்பம்சம். பேரபின் இல்லாமல் இருப்பதால் உதடுகளின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
10. Faces Canada Weightless Crème Lipstick
ஒவ்வொரு ஸ்கின் டோனுக்கும் பொருந்திப் போகக்கூடிய வகையில் இதன் தனித்தன்மை வாய்ந்த ப்ளம் ஷேடானது உதவி செய்கிறது. ஒரே ஸ்ட்ரோக்கில் உதடுகளில் பொருந்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ உதடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. க்ரீமி மற்றும் க்ளாஸி தோற்றங்கள் உறுதியாக கிடைக்கின்றன. ஷீ பட்டர் , ஜோஜோபா எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் அடங்கி இருப்பதால் உதடுகளின் ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
11. Elle 18 Color Pops Silk Lipstick
எல்லியின் இந்த லிப்ஸ்டிக் உதடுகளுக்கு தேவையான கவர்ச்சியை வழங்குகிறது. பாப் சில்கி தோற்றத்திற்கு உங்களைத் தயார் படுத்துகிறது. இதில் ஒரே நிறம் மட்டுமே வருகிறது. ஆனாலும் பெரும்பாலான ஸ்கின் டோன்களுக்குப் பொருந்திப் போகிறது. ட்ரெண்டியானது.
உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ப லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்க சில குறிப்புகள்
- பொதுவாக ஐந்து வித ஸ்கின் டோன்கள் இருக்கின்றன. சிவந்த நிறம், வெளிர் நிறம், நடுத்தர நிறம் , டேன் நிறம் அல்லது ப்ரவுன் நிறம், அடர் நிறம் ஆகியவைதான் இது.
- ஸ்கின் டோன்களில் பெரும்பாலான இந்தியப்பெண்கள் கோதுமை நிறம் மற்றும் அடர் வண்ணங்கள் போன்றவைகளில் பொருந்துவார்கள். சிவந்த நிறம் கொண்டவர்கள் மென்மையான மோச்சா அல்லது நியூட் நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். நடுத்தர ஸ்கின் டோன் கொண்டவர்கள் பிங்க் அல்லது கிரேன்பெரி நிறம் தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறம் கொண்டவர்கள் ரூபி அல்லது ஒயின் நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
- உங்கள் உதடுகளின் அடர்த்திற்கேற்ப நிறங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டி வரலாம். அதிக கனமான உதடுகள் கொண்டவர்கள் லேசான லிப்ஸ்டிக் வகைகளை அல்லது அடர்நிற லிப்ஸ்டிக் வகைகளை தேர்ந்தெடுத்து அணியலாம். மென்மையான சிறிய உதடுகள் கொண்டவர்கள் லிப் பென்சில் பயன்படுத்திய பின்னரே லிப்ஸ்டிக் அணிய வேண்டும்.
- உங்கள் ஆடைகளின் நிறத்திற்கு பொருத்தமான லிப்ஸ்டிக் அணிவதும் உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். ஆடைகளின் நிறத்திற்கு பொருத்தமானதாகவோ கான்டராஸ்டாகவோ லிப்ஸ்டிக் பயன்படுத்துவது உங்களை மேலும் கவர்ச்சிகரமானவராக மாற்றும்.
லிப்ஸ்டிக்கை எப்படி உதடுகளில் அப்ளை செய்வது
கனமான உதடுகள் கொண்டவர்கள் முதலில் லிப்ஸ்டிக்கை தங்களது மேல் உதட்டின் நடுப்பகுதியில் இருந்து தடவ வேண்டும். அங்கிருந்து அதன் முடிவிற்கும் அதன்பின் இன்னொரு பக்கத்திற்கும் தடவ வேண்டும். அதன்பின்னர் கீழ் உதடுகளுக்கு வரலாம்.
லேசான அல்லது சிறிய உதடுகள் கொண்ட பெண்கள் முதலில் லிப் லைனர் பயன்படுத்தி விட்டு அதன் பின்னர் மேற் சொன்னபடி லிப்ஸ்டிக் தடவவும்.
லிப்ஸ்டிக் தடவி முடிந்த உடன் உதடுகளை மடித்து மீண்டும் சரி செய்ய வேண்டும். அதிகப்படியாக படர்ந்திருக்கும் லிப்ஸ்டிக்கை டிஸ்யூ மூலம் துடைத்து எடுக்கலாம். உதடுகள் தாண்டி பரவி இருக்கும் லிப்ஸ்டிக்கையும் இவ்விதமே சரி செய்யலாம்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
