அலையலையான அழகான கூந்தல் வேண்டுமா.. நன்மை தரும் சிறந்த 10 ஷாம்பூக்களின் பட்டியல்

ஒருவருக்கு சரியான ஷாம்பூ அமைவது என்பது சில சமயம் வரமாகவும் சில சமயம் சாபமாகவும் மாறி விடுகிறது. அனேகமாக பெரும்பாலான மக்கள் பல வருடங்களாக இந்த ஷாம்பூ மாற்றி இன்னொன்று முயற்சித்து பார்க்கலாம் என்கிற ரீதியில் வருடத்திற்கு 8 ஷாம்பூக்களை மாற்றிப் பார்க்கிறார்கள்.
காரணம் புற்றீசல் போலப் படையெடுத்து வந்து நொடிக்கொரு விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை குழப்பமான மனநிலையில் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான ஷாம்பூ நிறுவனங்கள் தான். இவற்றுள் உங்களுக்கான சிறந்த 10 ஷாம்பூக்களின் பட்டியலை நூற்றுக்கணக்கான ஷாம்பூக்களிடம் இருந்து வடிகட்டி எடுத்துக் கொடுத்திருக்கிறோம். அவசியமான பொருத்தமான ஷாம்பூவை வாங்கி பலன் பெறுங்கள்.
1. Head & Shoulders Anti Hair fall Shampoo
ஹெட் அண்ட் ஷோல்டர்ஸின் இந்த ஷாம்பூ மந்தமான , பளபளப்பற்ற, ஆரோக்கியம் இல்லாத கூந்தலின் சிக்கல்களை நீக்கி கூந்தலைக் காப்பாற்றுகிறது. முடி உதிர்தல் மற்றும் நுனிப்பிளவுகளை சரி செய்து 10 மடங்கு வலிமையானதாக உங்கள் கூந்தல் இழைகளை மாற்றுகிறது.
நன்மைகள்
- அனுதினமும் பயன்படுத்தலாம்
- கலர் செய்யப்பட்ட கூந்தலுக்கும் பாதுகாப்பானது
- பொடுகை நீக்குகிறது
- முடி உதிர்வை தடுக்கிறது
- 10 மடங்கு வலிமையான கூந்தல் பெறலாம்
தீமைகள்
- எதுவும் இல்லை
2. WOW Coconut Milk No Parabens, Sulphate, Silicone, Salt & Color Shampoo
தேங்காய்ப்பாலுடன் புதுவிதமான DNT பிளாக்கர் இணைந்த இந்த ஷாம்பூவானது உங்கள் கூந்தலை மென்மையாகவும் , நெகிழ்வுத்தன்மை குறையாமலும் வலிமையோடும் பளபளப்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது என்று இந்த நிறுவனம் உறுதி அளிக்கிறது
நன்மைகள்
- கூந்தலின் பளபளப்பு கூடும்
- கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைக்கும்
- அழகானது, தூய்மையானது மற்றும் எளிமையானது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- முடி உதிர்வை முற்றிலும் தடுத்து வலிமையான கூந்தல் பெற உதவுகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
3. TRESemme Botanique Nourish and Replenish Shampoo
உங்களுக்கு வறண்டு போன நெளிநெளியான கூந்தல் இருக்கிறதா.. காற்றில் பட்டால் விகாரமான தோற்றத்தைக் கொடுக்கிறதா.. அப்படி என்றால் நீங்கள் வாங்க வேண்டியது இந்த ஷாம்பூ தான்.ஆலிவ் எண்ணெய் மற்றும் கேம்லியா எண்ணெய் இரண்டும் இந்த ஷாம்பூவில் உட்செலுத்தப்பட்டிருப்பதால் உங்கள் கூந்தல் சிக்கல்களுக்கான மொத்த தீர்வாக இந்த ஷாம்பூ இருக்கிறது.
நன்மைகள்
- வறண்ட சேதமடைந்த கூந்தலும் சிறப்பான தோற்றம் பெறும்
- பலன் 24 மணிநேரம் நீடித்திருக்கும்
- ஆலிவ் எண்ணெய் மற்றும் கேம்லியா எண்ணெய் உடசெலுத்தப்பட்டுள்ளது
- கூந்தலை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது
- பேரபின் இல்லை
- டை சேர்க்கப்படவில்லை
- இந்தியக் கூந்தல்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
- கலர் செய்த கூந்தலுக்கும் பாதுகாப்பானது
தீமைகள்
- எதுவும் இல்லை
4. Dove Oxygen Moisture Shampoo
கூந்தலுக்குப் பாதுகாப்பான ஷாம்பூக்களைத் தயாரிப்பதில் எப்போதுமே டவ் நிறுவனம் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது. அடர்த்தி இல்லாத சன்னமான கூந்தல் கொண்டவர்கள் இந்த ஷாம்பூவை முயற்சித்துப் பார்க்கலாம். உடனடியாக கூந்தலின் அடர்த்தி அதிகமாகிறது.
நன்மைகள்
- இதில் உள்ள ஆக்சிஜென் கூந்தலின் சுவாசத்தை நேர்த்தியாக்குகிறது
- சன்னமான கூந்தலை 95 சதவிகித அடர்த்தியுடன் மாற்றிக் காட்டுகிறது
- கூந்தல் மிருதுவாகவும் பந்து போல குதித்தோடும்
- தினமும் பயன்படுத்தலாம்
தீமைகள்
- எதுவும் இல்லை
5. Herbal Essences Argan Oil of Morocco SHAMPOO
இதன் பெயரே இந்த ஷாம்பூவின் தனிச்சிறப்பை எடுத்து சொல்கிறது. சிதிலமடைந்த மோசமான கூந்தல் இழைகளை சரி செய்கிறது. இதில் உள்ள மொராக்கான் எண்ணெய் அப்படியான மாயத்தை செய்கிறது. 90 சதவிகிதம் இயற்கைப் பொருள்களால் உருவானது என்கிறது இந்த நிறுவனம் .
நன்மைகள்
- 90 சதவிகிதம் இயற்கைப் பொருள்களால் உருவானது
- ஆன்டி ஆக்சிடென்ட்கள் அடங்கியது
- கற்றாழை மற்றும் கடல்பாசி அடங்கியது
- PETA நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
6. Dove Intense Repair Shampoo
டவ் நிறுவனத்தாரின் இன்னொரு தயாரிப்பான இந்த ஷாம்பூ பெயருகேற்றபடி கூந்தலின் வேர்வரை சென்று சரி செய்து பாதுகாப்பளிக்கிறது.ஒவ்வொரு முறை ஷாம்பூ பயன்படுத்தும் போதும் கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை தந்து வளர்ச்சி தருகிறது.
நன்மைகள்
- ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்
- சிதைந்த மோசமான கூந்தலையும் சரி செய்கிறது
- முடி உடைவதில் இருந்து பாதுகாப்பு
- பளபளப்பான ஆரோக்கியமான கூந்தல் தோற்றம்
- ஒவ்வொரு ஷாம்பூ நேரமும் கூந்தல் ஊட்டச்சத்து பெறுகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
7. Head & Shoulders Cool Menthol Anti Dandruff Shampoo
ஹெட் அண்ட் ஷோல்டர் நிறுவனத்தாரின் இந்த கூல் மென்தால் ஷாம்பூ உங்கள் பொடுகு பிரச்னைகளை முழுவதுமாக சரி செய்து தருவதாக வாக்களிக்கிறது. குறிப்பிட்ட நாட்கள் பயன்பாட்டுக்குப் பிறகு உங்கள் பொடுகுத் தொல்லை 100 சதவிகிதம் சரியாகி இருக்கும் என்கிறது இந்த நிறுவனம்.
நன்மைகள்
- 100 சதவிகிதம் பொடுகு நீக்கம் செய்கிறது
- தினமும் பயன்படுத்தலாம்
- மென்தால் உங்களுக்கு நாள் முழுதும் புத்துணர்ச்சி தருகிறது
- ஆண் , பெண் என இருவரும் பயன்படுத்தலாம்.
தீமைகள்
- மென்தால் வாசனை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்
8. L’Oreal Paris Total Repair 5 Shampoo
லோரியல் பாரிஸ் நிறுவனத்தாரின் இந்த ஷாம்பூ உங்கள் தலைமுடியில் ஏற்படும் ஐந்து சிக்கல்களை சரி செய்வதாக வாக்களிக்கிறது. ஹேர் ட்ரையரால் உங்கள் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்புகள், காற்று மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தலையை அழுத்தமாக சீவுவதால் ஏற்படும் பாதிப்புகள் என அனைத்து பாதிப்புகளையும் இது சரி செய்கிறது.
நன்மைகள்
- செரமைட் உட்செலுத்தப்பட்டுள்ளது
- சிதைந்த கேசம் கூட சீராகும்
- ஐந்து சிக்கல்களை சரி செய்கிறது
- தினமும் உபயோகிக்கலாம்
தீமைகள்
- நிறமாற்றம் செய்தவர்கள் இதனைப் பயன்படுத்த வேண்டாம்
9. Head & Shoulders Silky Black Anti Dandruff Shampoo
வறண்ட ட்ரிஸ்ஸியான கூந்தலுக்கு ஏற்ற மற்றொரு பாதுகாப்பான ஷாம்பூ இந்த ஷாம்பூ. கூடவே உங்கள் தலையில் உள்ள பொடுகினை 100 சதவிகிதம் நீக்குவதாகவும் வாக்கு தருகிறது இந்த நிறுவனம். முயற்சித்து பார்க்கலாமே.
நன்மைகள்
- அனுதினமும் பயன்படுத்தலாம்
- நிறமாற்றம் செய்த கூந்தலுக்கும் ஏற்றது
- கண்கூடான மாற்றம் தெரியும்
- பொடுகினை முழுமையாகப் போக்குகிறது
தீமைகள்
- வறண்ட கூந்தல் வகையினருக்கானது
10. Clinic Plus Strong and Long Health Shampoo
கிளினிக் ப்ளஸ் நிறுவனம் மூன்று தசாப்தங்களாக தங்களது ஷாம்பூ விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. பால் புரதம் அடங்கிய ஷாம்பூவை முதல் முதலில் அறிமுகப்படுத்திய க்ளினிக் ப்ளஸ் இன்று வரை அதன் அடிப்படை பார்முலாவில் இருந்து மாறியதே இல்லை. இதுவே அதன் தனித்தன்மை.
நன்மைகள்
- பால் புரதங்களுடன் விட்டமின்கள் சேர்ந்தது
- கூந்தலை வலிமையாகவும் பளபளப்போடும் வைக்கிறது
- குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம்
- ஒவ்வொரு கூந்தல் இழைகளும் வலிமை அடைகிறது
தீமைகள்
- செயற்கை வாசனை, ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது
ஷாம்பூ வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
வெறும் ஷாம்பூ தானே என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது. நமது தலைதான் அனைத்திற்கும் பிரதானமானது. அங்கே ஏதேனும் தவறு நடந்தால் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் கேள்விக்குறியாக மாறிவிடும். ஆகவே அதற்கான பாதுகாப்புகளை உறுதி செய்யும் ஷாம்பூக்களையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- உங்கள் கூந்தலுக்கான கவனிப்புகளை விடவும் உச்சந்தலை பற்றிய கவனமும் தேவை
- ஸ்கால்ப் முழுமைக்கும் பாதுகாப்பு தரும் ஷாம்பூவே சிறந்தது
- காரணம் கூந்தலுக்குத் தேவைப்படும் நீர்ச்சத்தை விட 5 மடங்கு அதிகமாக உச்சந்தலைக்கு தேவைப்படுகிறது
- ஷாம்பூவில் Ph லெவலின் அளவை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம்
- மூலப்பொருள்களை கவனமாக பார்த்து வாங்கவும்
- கற்றாழை, ஜோஜோபா எண்ணெய் போன்ற இயற்கை பொருள்கள் இருந்தால் நன்மை தரும்
- உங்கள் கூந்தலுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்ந்தெடுங்கள்
முடிவுரை
சிறந்த ஷாம்பூக்களை பட்டியலிட்டு கொடுத்திருந்தாலும் உங்கள் தனிப்பட்ட ஆய்வுகளை பரிசீலித்து பின்னரே ஷாம்பூக்களை தேர்ந்தெடுக்கவும். அழகு நிலையங்களில் தரப்படும் ஆலோசனையை விடவும் சிறந்த சரும மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை கேட்டு உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்துவது சிறப்பான பலனைத் தரும்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
