உங்கள் முகத்திற்கு ஏற்ற சிறந்த சன்ஸ்க்ரீன் க்ரீம்கள் – Best Sunscreen Lotions in Tamil

சன்ஸ்க்ரீன் என்பது 2010ம் ஆண்டிற்கு பின்னர் அனைத்து மனிதர்களும் அடிக்கடி கேட்கக்கூடிய ஒரு வார்த்தையாக இருக்கிறது. காரணம் புற ஊதாக்கதிர்கள் தாக்கத்தின் காரணமாக சருமம் பாதிக்கப்படுகிறது என்பதை சமுதாயம் அதிகமாக உணர்ந்ததும் அதற்கான விழிப்புணர்வு ஏற்பட்டதும் இந்த காலத்தில் தான்.
இப்போது வரை தினமும் பல் துலக்குதல், குளித்தல் எப்படி நம் அன்றாடக் கடமைகளில் ஒன்றோ அதைப் போலவே தினமும் சன்ஸ்க்ரீன் போடுவதும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சன்ஸ்க்ரீன் க்ரீம்களில் பலவகைகள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் சருமத்திற்கு ஏற்றவைகளை தேர்ந்தெடுப்பது நன்மையானது.
Table Of Contents
உங்கள் சரும வகைக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை எப்படி தேர்ந்தெடுப்பது
சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் டைட்டானியம் டை ஆக்சைட் அல்லது ஜின்க் டை ஆக்சைட் இல்லாத அல்லது குறைவான சன்ஸ்க்ரீன் கிரீமினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பேரபின் மற்றும் ஆக்சிபென்சோன் இல்லாத க்ரீம்கள் தேர்ந்தெடுப்பது நல்லது . இவை ரேஷஸ் அல்லது எரிச்சலை உண்டாக்கலாம்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் மாய்ச்சரைஸைர் உடனான சன்ஸ்க்ரீன் க்ரீம்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக அளவு SPF கொண்ட சன்ஸ்க்ரீன்கள் இந்த வகை சருமத்தினருக்கு நன்மை தரும். உங்கள் சருமம் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து மட்டும் பாதுகாக்கப்படாமல் அதன் மென்மைத் தன்மை மற்றும் மிருதுத்தன்மையை இழக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான சன்ஸ்க்ரீன் அதிக ஈர்ப்பதத்தோடும் லேசான பதத்தோடும் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். பிசுபிசுப்பற்ற க்ரீமானது உங்கள் எண்ணெய் பசை சருமத்திற்கு பொருத்தமானது. அதிக அளவு எண்ணெய் பசை சருமம் என்றால் நீங்கள் மேட் பினிஷ் கொண்ட சன்ஸ்க்ரீன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
சிவந்த நிறமுடையவர்கள் SPF 30 அல்லது அதற்குமேல் உள்ள சன்ஸ்க்ரீன் வகைகளை பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் காக்கப்படும். SPF 50++ இன்னும் சிறப்பானது. உங்கள் சருமத்தின் PH சமநிலையை பராமரிக்க இந்த சன்ஸ்க்ரீன் வகைகள் உதவுகின்றன.
அடர் நிறமுடையவர்கள் அல்லது ப்ரவுன் நிறம் கொண்டவர்கள் அனுதினமும் சன்ஸ்க்ரீன் உபயோகித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை நீங்கள் காப்பாற்றியாக வேண்டி இருக்கிறது. சன்ஸ்க்ரீன் அணிவதால் ஏற்படும் வெண் படலம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பல நிறமுள்ள அல்லது வேறு நிறமுள்ள சன்ஸ்க்ரீன் க்ரீம்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
1. Lakmé Sun Expert SPF 24 PA ++ UV Lotion
லக்மே நிறுவனம் சரும சிக்கல்களை சரி செய்ய ஏற்ற நிறுவனமாக தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறது. இந்த க்ரீமின் ஸ்பெஷல் இதன் லேசான மற்றும் பிசுபிசுப்பற்ற தன்மை. இது சருமத்தை ஈரப்பதமுடையதாக ஆக்கி மின்னும் முகத்தை உங்களுக்கு அளிக்கிறது.
நன்மைகள்
- SPF 24+++ அடங்கியது
- லேசானது என்பதால் சருமம் உடனே உறிஞ்சிக்கொள்ளும்
- UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து காக்கிறது.
- சன் பர்ன், கரும்புள்ளிகள் மற்றும் வயது முதிரும் அடையாளங்களை நீக்குகிறது.
தீமைகள்
- எதுவும் இல்லை
2. WOW Anti Pollution SPF40 Water Resistant No Parabens & Mineral Oil Sunscreen Lotion
காற்று மாசுபாடுகளால் உங்கள் சருமம் பல நச்சுப்புகைகளை உள்ளே இழுக்கிறது. அதனால் வறண்ட, எரிச்சலுடைய சருமம் அல்லது வாடிய முகம் போன்ற தோற்றம் உங்களுக்கு கிடைக்கிறது. WOW இந்த சிக்கல்களில் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது. புத்துயிர் தருகிறது.
நன்மைகள்
- pm 2.5 மாசுபடுத்திகளிடம் இருந்து உங்களைக் காக்கிறது
- சரும எரிச்சலை சரி செய்கிறது
- புகை மற்றும் காற்றின் நச்சுத்தன்மையிடம் இருந்து காக்கிறது
- SPF 40 கொண்டது
- அதிமதுரம் வைட்டமின் பி 3 கொண்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
3. L’Oreal Paris UV Perfect Even Complexion
இதன் ஸ்பெஷல் பார்முலா மேக்ஸோரில் SX மற்றும் XL அடங்கியது. மேலும் SPF 50 and PA+++ உங்கள் சருமத்தை UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து காக்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பி இருப்பதால் சருமம் முதிர்வடையாமல் காக்கிறது.
நன்மைகள்
- SPF 50 மற்றும் PA+++ அடங்கியது
- ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியது
- UVA மற்றும் UVB கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது
- 12 மணி நேரம் நீடித்து நிலைக்க கூடியது
தீமைகள்
- எதுவும் இல்லை
4. Mamaearth’s Ultra Light Natural Sunscreen Lotion SPF 50 PA+++
இதில் SPF 50 PA +++ அடங்கியுள்ளது என்பதே இதன் தனித்தன்மை. இந்திய சருமங்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது இதன் அடுத்த சிறப்பு. UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது. நச்சுத்தன்மை அற்றது. தோல் நோய் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதனை உங்கள் மேக்கப் சமயங்களில் கூட பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- பிசுபிசுப்பற்றது
- SPF 50 PA +++ கொண்டது
- நச்சுத்தன்மை அற்றது
- இயற்கையானது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் எதுவும் இல்லை
தீமைகள்
- எதுவும் இல்லை
5. Ustraa Sunscreen SPF 50+
இதில் SPF 50+ இருப்பது UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்தில் வெண்மை நிற படலத்தை இந்த க்ரீம் ஏற்படுத்துவது இல்லை என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.நீண்ட நேரத்திற்கு நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது
நன்மைகள்
- மற்ற சன்ஸ்க்ரீன்களை போல மருந்து வாசனை இருக்காது
- பேரபின் மற்றும் சல்பேட் இல்லாதது
- நீண்ட நேரம் நீடித்திருக்கும்
- UVA மற்றும் UVB பாதுகாப்பு நிறைந்தது
தீமைகள்
- எதுவும் இல்லை
6. POND’S SPF 50 Sun Protect Non-Oily Sunscreen
தோல் நோய் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த க்ரீமானது எண்ணெய் அற்ற பார்முலாவைக் கொண்டுள்ளது. சூரிய கதிர்களால் ஏற்படும் ஐந்து சரும சிக்கல்களை சரி செய்கிறது. சீரற்ற நிறம், கருந்திட்டுக்கள், கருவளையங்கள், சுருக்கத்தால் ஏற்படும் கோடுகள் , கரும்புள்ளிகள் மற்றும் சிவந்து போதல் போன்ற சிக்கல்களை நீக்குகிறது.
நன்மைகள்
- SPF 50 பார்முலா கொண்டுள்ளது
- அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
- எண்ணெய் இல்லாத பார்முலா கொண்டது
- ஆண்களும் பயன்படுத்தக் கூடியது
- சரும துளைகளை அடைப்பதில்லை
தீமைகள்
- எதுவும் இல்லை
7. VLCC De Tan Sunscreen Gel Creme, SPF 50
VLCC தயாரிப்புகள் என்றாலே தரமானவை என்கிற பெயர் பெற்றவை. UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை இந்த சன்ஸ்க்ரீன் காப்பாற்றுகிறது. அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்தலாம். இதில் SPF 50 இருக்கிறது என்பதால் மிகவும் பாதுகாப்பானது.
நன்மைகள்
- இதில் பேரபின் இல்லை.
- SPF 50 அடங்கியது
- UVA+UVB கதிர்களிடம் இருந்து சருமத்தை காக்கிறது
- அனைத்து சருமத்தினருக்கு ஏற்றது
தீமைகள்
- எதுவும் இல்லை
8. Plum Green Tea Day-Light Sunscreen Spf 35 Pa+++
இதன் அல்ட்ரா கிரீஸ் டெக்சர் உங்கள் சருமத்தில் பிசுபிசுப்பை ஏற்படுத்துவதில்லை. சன்ஸ்க்ரீன்களில் இருக்கும் வெண்மையான படலம் முகத்தில் பரவும் . ஆனால் இதில் வெண்மை படலம் இல்லை. ஈரப்பதத்தை சமனாக்கும் மூலப்பொருள்கள் கொண்டது. தாவரங்களின் மூலப்பொருள்களைக் கொண்டது.
நன்மைகள்
- அதிமதுரம் கோஜி பெரி போன்ற மூலப்பொருள்கள் கொண்டது
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
- தாவர மூலப்பொருள்கள் கொண்டது
- SPF 35 PA +++ அடங்கியது
- க்ரீன் டீ அடங்கியது
தீமைகள்
- எதுவும் இல்லை
9. Biotique Bio Carrot Face & Body Sun Lotion Spf 40
ஊட்டச்சத்துக்கள் கொண்ட இந்த க்ரீம் UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது. இதில் அடங்கியுள்ள கேரட் சாறு, கோதுமை சாறு , மற்றும் மூலிகைகள் உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது. தவிர சருமத்திற்கு நிறத்தை வழங்குகிறது. சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
நன்மைகள்
- இயற்கையான பொருள்களால் உருவானது
- சருமத்திற்கு ஊட்டமளித்து பாதுகாக்கிறது
- கேரட் விதை எண்ணெய் அதிகமாக இருக்கிறது
- விலை மலிவானது
தீமைகள்
- இதன் பேக்கேஜ் தரம்
10. Aroma Magic Aloe Vera Sun Screen Gel
ஜெல் பின்னணி கொண்ட இந்த சன்ஸ்க்ரீன் மிகவும் லேசானது. முகத்தில் இருப்பதே தெரியாத அளவிற்கு முகம் உறிஞ்சிக் கொள்ள செய்கிறது.ஊட்டச்சத்து கொண்ட க்ரீம் என்பதால் UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இது மாய்சரைசிங் தன்மையும் கொண்டுள்ளதால் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வெயில் காலங்களில் உங்கள் சருமத்தை குளுமையாக்கி இதமாக்கும் தன்மை இதில் இருக்கிறது.
நன்மைகள்
- லேசானது மற்றும் ஊட்டச்சத்து கொண்டது.
- UVA மற்றும் UVB கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
- பேரபின் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இதில் இல்லை
- நேனோ ஜின்க் ஆக்சைட் இதில் இல்லை
தீமைகள்
- SPF 20 மட்டுமே இருக்கிறது
11. Neutrogena Ultra Sheer Dry Touch Sunblock, SPF 50+
நியுட்ராஜினாவின் இந்த தயாரிப்பு பரந்த நிறமாலை பாதுகாப்பு அளிக்கிறது. UVA மற்றும் UVB கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்குகிறது. மேலும் சருமம் வயதான தோற்றத்தை அடையாமல் காக்கிறது. இதன் லேசான புத்துணர்ச்சி நறுமணம் நாள் முழுதும் உங்களை ஆற்றலோடு வைத்திருக்கிறது. சென்சிடிவ் சருமத்தினருக்கும் ஏற்றது.
நன்மைகள்
- அற்புதமான க்ரீம் தன்மை கொண்டது
- லேசானது அதனால் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படுகிறது
- பிசுபிசுப்பு இல்லாதது
- SPF 50 PA +++ அடங்கியது
தீமைகள்
- மேட் பினிஷ் தன்மை முழுமையாக இதில் கிடைக்காது
12. Lotus Herbals Safe Sun 3-In-1 Matte Look Daily Sunblock SPF-40
இதில் உள்ள UVA மற்றும் UVB பார்முலா சூரியனின் புற ஊதாக்கதிர்கள் இடம் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது. உங்கள் சரும நிறத்தை அதிகரிக்கவும் செய்கிறது. உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கிறது.எண்ணெய்த்தன்மையை குறைத்து சருமத்துளைகளை சமன் செய்கிறது.
நன்மைகள்
- லேசானது மற்றும் பிசுபிசுப்பு இல்லாதது
- UVA மற்றும் UVB பாதுகாப்பு கொண்டது
- எண்ணெய்பசையை குறைக்கிறது
- சரும செல்களுக்கு புத்துயிர் தருகிறது
தீமைகள்
- இதன் ட்யூப் வடிவம் சிலருக்கு பிடிப்பதில்லை
13. Biotique Bio Sandalwood Face & Body Sun Lotion Spf 50
இயற்கையான பொருள்களை மூலமாக கொண்டிருக்கும் தயாரிப்புகளை விரும்பி வாங்குபவர்களுக்கு இந்த சன்ஸ்க்ரீன் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.சந்தனம், குங்குமப்பூ, தேன், கோதுமை கிருமி மற்றும் அர்ஜுன மரத்தின் பட்டைகள் இதில் மூலப்பொருள்களாக இருக்கின்றன. இவை உங்கள் சருமத்தை மென்மையாகவும் ஈர்ப்பதத்தோடும் இருக்க வைக்கிறது.
நன்மைகள்
- 100 சதவிகிதம் ஆயுர்வேத மூலிகைகளால் உருவானது
- பேரபின் மற்றும் ரசாயனங்கள் இல்லாதது
- தண்ணீரிலும் தாக்குப்பிடிக்க கூடியது (80 நிமிடங்கள் தண்ணீருக்குள் இருந்தாலும் கரையாது)
- பரந்த நிறமாலை பாதுகாப்பு கிடைக்கிறது
- SPF 50 அடங்கியது
தீமைகள்
- இதன் அடர்த்தியான வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
14. Garnier Skin Naturals Sun Control SPF 15 Daily Moisturiser
இதில் இருக்கும் மெட்றாக்சில் உங்கள் சருமத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது. வைட்டமின் ஈ ப்ரீ ரேடிக்கல்ஸ்ற்கு எதிராக வேலை செய்கிறது. சருமம் முதிர்வடைவதை தடுக்கிறது.கொத்தமல்லி சாறு மற்றும் கிளிசரால் உங்கள் சருமம் மென்மையாகவும் ஈர்ப்பதத்தோடும் இருப்பதை தக்க வைக்கிறது.
நன்மைகள்
- மெட்றாக்சில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தருகிறது
- வைட்டமின் ஈ அடங்கியது
- மென்மை மற்றும் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது
- சருமம் முதர்வடைவது தடுக்கப்படுகிறது
தீமைகள்
- SPF 15 மட்டுமே இருக்கிறது.
15. Avene Very High Protection SPF 50 + Cream
இந்த சன்ஸ்க்ரீன் அறிவார்த்தமாக வேலை செய்கிறது. சென்சிடிவ் மற்றும் பருக்கள் அடங்கிய சருமத்திற்கு பொருத்தமானது . இது ட்யூப் மற்றும் பம்பிங் தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. அதனால் வீணாவதில்லை. இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் பிரீ ரேடிகள் பாதுகாப்பு கிடைக்கிறது. கூடவே தெர்மல் ஸ்ப்ரிங் வாட்டர் உங்கள் சருமத்தை இதமாக்கி ஊட்டச்சத்து அளிக்கிறது.
நன்மைகள்
- இதில் எண்ணெய், ஆல்கஹால், பேரபின் மற்றும் சிலிகான் இல்லை
- தண்ணீர் படுவதால் அழிவதில்லை
- ஹைப்பர் சென்சிடிவ் சருமத்தினருக்கானது
- லேசான தன்மை உடையது
தீமைகள்
- விலை கொஞ்சம் அதிகம்
16. Kaya Clinic Daily Use Sunscreen SPF 30
உங்கள் சருமத்திற்கு உயர்தரமான சன்ஸ்க்ரீன் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு காயா தான் சிறந்த தேர்வு. காரணம் வாங்க கூடிய விலையில் இது கிடைக்கிறது. உங்களால் சருமத்திற்கு மிருதுவானது. இது வறண்ட சருமத்தினருக்கான சன்ஸ்க்ரீன். தேவையான ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தினையும் இந்த சன்ஸ்க்ரீன் வழங்குகிறது.
நன்மைகள்
- மாய்ச்சரைஸர் தந்து சருமத்தை காக்கிறது
- க்ரீம் தன்மை மற்றும் லேசான கனமுடையது
- சருமத்தை பிரகாசிக்க வைக்கிறது
- சுலபமாக பரவுகிறது
தீமைகள்
- அடர்த்தியான வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
17. Jovees Argan Sun Guard Lotion SPF 60 PA+++
இது தண்ணீர் பட்டாலும் கரையாத விதமாக வடிவமைக்கபட்டிருக்கிறது. ஆர்கன் எண்ணெய், கெலண்டுலா, கெமோமில், மற்றும் க்ரீன் டீ அடங்கியது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்டி இன்ப்ளமேட்டரி கூறுகள் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து மட்டும் பாதுகாக்காமல் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
நன்மைகள்
- SPF 60 PA ++++ அடங்கியது.
- அனைத்து சன்ஸ்க்ரீன்களிலும் சிறந்தது
- லேசானது
- பயணத்திற்கு எளிதானது
தீமைகள்
- அடர்த்தியான வாசனை ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
18. Lotus Herbals Safe Sun UV Screen Matte Gel
உங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் விலை அதே சமயம் நல்ல தரமான சன்ஸ்க்ரீன் தேவை எனில் நீங்கள் இந்த லோட்டஸ் சன்ஸ்க்ரீனை வாங்கலாம். இதன் ஜெல் பார்முலா சருமத்தில் ஏற்படும் வெண்படலங்களை தவிர்க்கிறது. சிறப்பான UVA மற்றும் UVB பார்முலா கொண்டதால் சூரியக்கதிர்களிடம் இருந்து தகுந்த பாதுகாப்பை அளிக்கிறது.
நன்மைகள்
- ஜெல் பார்முலா என்பதால் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கு ஏற்றது.
- SPF 50 அடங்கியது
- UVA மற்றும் UVB கதிர்களை சருமத்தின் மீது பரவாமல் காக்கிறது
- லேசானது மற்றும் பிசுபிசுப்பற்றது
- சருமத்தை எரிச்சல் படுத்துவதில்லை.
- பிரகாசமான மேட் பினிஷ் தோற்றம் தர வல்லது.
தீமைகள்
- ட்யூப் வடிவம் சிலருக்கு பிடிப்பதில்லை.
சன்ஸ்க்ரீனை எப்படி தடவுவது
பொதுவாக பெரும்பாலோனோர் முகத்திற்கு க்ரீம் தடவுவது போல சன்ஸ்க்ரீனையும் பாவிக்கின்றனர் . ஆனால் உண்மையில் சன்ஸ்க்ரீனை தடவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
- வெயிலில் கிளம்புவதற்கு 15 நிமிடம் முன்னரே இதனை தடவ வேண்டும்
- வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தாலும்கூட சன்ஸ்க்ரீன் தடவ வேண்டும்
- முகம் மற்றும் வெயில் படும் சரும பாகங்களில் இதனை தடவ வேண்டும்
- க்ரீமை எடுத்து சில புள்ளிகள் சருமத்தில் வைத்து அதனை முழுவதுமாக படரும்படி செய்ய வேண்டும்
- முகம் மற்றும் கழுத்துப் பகுதி முக்கியமானது.
- சில க்ரீம்கள் நீண்ட நேரம் நீடித்திருக்காது.அப்போது 5 மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவி சன்ஸ்க்ரீன் தடவுவது அவசியம்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
