நீண்ட இரவுகளில் உங்கள் அழகைப் பன்மடங்காக்கும் 11 அற்புத க்ரீம் வகைகள்

முன்பொரு காலத்தில் க்ரீம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என இயற்கை அழகில் மூழ்கித் திளைத்தவர்கள் நம் முன்னோர்கள். இப்போது இருப்பதைப் போல அப்போதெல்லாம் காற்று மாசுபாடு, சூரிய புற ஊதாக்கதிர்களின் சரும ஊடுருவல் என எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது என்பது தான் அவர்களுக்கு க்ரீமின் தேவையை இல்லாமல் செய்திருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் அப்போதெல்லாம் ரகசிய அழகுக் குறிப்புகளாக தேங்காய் எண்ணெய்க் குளியல், தேங்காய்ப்பால் குளியல், கழுதை பால் குளியல் என சில உயர் வம்சத்து பெண்கள் இதனைத் தங்களின் அழகு அதிகரிக்கவும் நிலைத்திருக்கவும் பயன்படுத்தி உள்ளனர் என்பதை நாம் படித்திருக்கிறோம்.
இன்றைக்கு உலகம் தன்னை விரிவு படுத்திக் கொள்ள முனைந்ததில் காற்று, தண்ணீர் மற்றும் சூரிய வெப்பம் என எல்லாவற்றிலுமே மாசுக்கள் அதிகரித்துள்ளன. இன்றைய கொரோனா காலங்களில் உலகம் முடங்கி இருக்கும் இந்த நாட்களில் நம்மால் இந்த வித்தியாசத்தை நன்றாகவே உணர முடிகிறது. இந்த மாசுக்களுக்கும் புகைக்கும் சுற்று சூழல் பாதிப்புகளுக்கும் நடுவே நமது சருமத்தைக் காத்துக் கொள்ள நாம் பல சவால்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.
முன்பெல்லாம் ஒரு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் போதுமானதாக இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் காலை நேரம் ஒரு க்ரீம் மற்றும் இரவு நேரத்திற்கு மற்றொரு க்ரீம் என நாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுத்தான் இருக்கிறது. காலை நேரக் க்ரீம்களை விட இரவு நேரக் க்ரீம்கள் அதிக ஆற்றல் புரிபவையாக இருக்கின்றன. அப்படியான இரவு நேர அழகுக் கிரீம்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
சிறந்த இரவு நேரக் க்ரீமைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்
இரவு நேரக் க்ரீம்களைத் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகள் உள்ளன. முதலாவது அதில் இரவு நேரக் க்ரீம் என்கிற குறிப்பு இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சன்ஸ்க்ரீன் தேவை இல்லை. கூடவே இதில் செயல்வினை ஆற்றும் மூலப்பொருள்கள் அதிகமாக இருக்க வேண்டும். உதாரணமாக விட்டமின் ஈ , சென்டிலா , அதிமதுரம், விட்டமின் சி இப்படியான மூலப்பொருள்கள் சேர்க்கை அதிகமாக இருப்பது நல்ல தீர்வைத் தரும்.
மேலும் இரவு நேரக் க்ரீமைத் தேர்ந்தெடுக்கும்போது அது அடர்த்தியான க்ரீம் வகையாக இல்லாமல் லேசானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. அடர்த்தியான க்ரீம்கள் சில சமயம் உங்கள் மேல் தோலுடன் மட்டுமே நின்று விடலாம். லேசான க்ரீம்கள் சருமத்தின் லேயர்களிலும் சென்று வேலை செய்கிறது. அப்படியான க்ரீம்கள் நன்மை தரும்.
இது தவிர உங்கள் சரும வகைக்கு ஏற்ற க்ரீமை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாகவே எந்த அழகுப் பொருள்கள் எடுத்தாலும் இந்த விஷயத்தை நீங்கள் செய்தாக வேண்டும். இரவு நேரம் நீங்கள் முகத்தை எந்த தூசுக்களிலும் மாசுக்களிலும் போட்டு புரட்டி எடுக்கப் போவதில்லை என்பதால் ஆல்ஹகால் இல்லாத க்ரீம் வகைகளாகத் தேர்ந்தெடுப்பது நன்மை தரும். அதிக வாசனை உள்ள க்ரீம்கள் தேவை இல்லை. சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இயற்கையான நிறம் வாசனை கொண்ட க்ரீம்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இதுவரை நாம் எப்படிப்பட்ட இரவு நேரக் க்ரீம் வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பார்த்தோம். இனி கீழ்க்கண்ட இரவு நேரக் க்ரீம் வகைகளில் உங்களுக்கு ஏற்ற கிரீமினை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
1. Himalaya Herbals Revitalizing Night Cream
ஹிமாலயாவின் இந்த இரவு நேரக் க்ரீமானது வெள்ளை லில்லிப் பூக்கள் மற்றும் தக்காளியின் நற்குணங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. தக்காளி நம் நிறத்தை அதிகரிக்க உதவும் என்பது கூடுதல் சிறப்பு. உங்கள் சரும ஈரப்பதத்தை வறண்டு விடாமல் காக்கிறது இந்த க்ரீம் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
நிறைகள்
- லில்லி மற்றும் தக்காளி அடங்கியது
- சரும செல்களுக்கு புத்துயிர் ஊட்டுகிறது
- ஈரப்பதத்தை தக்க வைக்கிறது
- சருமம் ஓய்வில் இருக்கும்போது ஊட்டம் அளிக்கிறது
குறைகள்
எதுவும் இல்லை
2. Olay Night Cream Total Effects 7 in 1
ஒலே நிறுவனம் தங்களது சரும பாதுகாப்பு தயாரிப்பில் வெற்றி பதித்த நிறுவனம் என்பதால் இதன் நம்பகத்தன்மை அதிகம். இந்த இரவு நேரக் க்ரீமானது 7 விதங்களில் உங்கள் சருமத்திற்கு நன்மைகள் அளிக்கிறது. அனைத்து சரும வகையினருக்கும் இந்த க்ரீம் ஏற்றது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.
நிறைகள்
- சருமத்தின் முதுமைத் தன்மையைத் தடுக்கிறது
- முதுமைச் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்குகிறது
- முகத்தின் பொலிவு மேம்படுகிறது
- சரியான ஈரப்பதத்தை வழங்குகிறது
- சீரான நிறத்தை சருமத்திற்கு வழங்குகிறது
குறைகள்
எதுவும் இல்லை
3. Biotique Bio Wheat Germ FIRMING FACE and BODY NIGHT CREAM
என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய பொதுவான விருப்பமாக இருக்கிறது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பயோடிக்கின் இந்தக் க்ரீம் வெளியாகி விற்பனையில் சிறந்து விளங்குகிறது. சாதாரண சருமம் முதல் வறண்ட சருமம் வரை உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.
நிறைகள்
- வீட் ஜெர்ம் எண்ணெயின் நன்மைகள் கொண்டது
- ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்
- சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கொடுக்கிறது
- சருமத்தின் இளமைத் தோற்றத்திற்கு உறுதியளிக்கிறது
குறைகள்
எதுவும் இல்லை
4. Garnier Skin Naturals Light Complete Night Cream
அழகு சாதனப் பொருள்களில் புரட்சியைக் கொண்டு வந்த நிறுவனம் கார்னியர். இதில் இரவு நேரக் க்ரீம் வருவது மேலும் சிறப்பான செய்திதான் இல்லையா. தயிர், விட்டமின் சி, எலுமிச்சை மற்றும் கோதுமையின் நற்குணங்கள் அடங்கி இருப்பதால் இது இரண்டு மடங்கு பலனைத் தரக் கூடிய ஒரு க்ரீம் எனலாம்.
நிறைகள்
- விட்டமின் சி அடங்கியது
- தயிர் முகத்தின் கறைகளை நீக்க உதவுகிறது
- எலுமிச்சை முகம் பிரகாசமாக உதவுகிறது
- கோதுமை சீரம் நிறம் அதிகரிக்க உதவுகிறது
குறைகள்
எதுவும் இல்லை
5. Lotus Herbals Youth Rx Anti-aging Skin Care Range
லோட்டஸ் நிறுவனத்தாரின் இந்த இரவு நேரக் க்ரீம் கவர்ச்சிகரமான வண்ணத்தில் வெளியாகிறது. இதில் முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஏஜிங் மூலப்பொருள்கள் இருப்பதால் மிகச் சரியான இரவு நேரக் க்ரீமாக இது விளங்குகிறது. இந்தக் க்ரீமை இரவில் தடவுவதால் அனுதினமும் இளமை முகம் உங்களுக்கு உத்திரவாதமாகக் கிடைக்கும் என்கிறார்கள் இந்த நிறுவனத்தார்.
நிறைகள்
- லேசான தன்மை கொண்டது
- முதுமைச் சுருக்கம் மற்றும் கோடுகளை நீக்குகிறது
- கரும்புள்ளிகள் மற்றும் பருக்களின் வடுக்களை நீக்குகிறது
- வறண்ட திட்டுக்களை சரி செய்கிறது
- தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது
- தினமும் காலையில் இளமையான சருமத்தை நீங்கள் பெற முடியும்.
குறைகள்
எதுவும் இல்லை
6. Pond’s Age Miracle Wrinkle Corrector Night Cream
பாண்ட்ஸ் நிறுவனத்தாரின் இந்த இரவு நேரக் க்ரீமானது முதுமையால் ஏற்படும் சரும சிக்கல்களை சரி செய்கிறது. இதில் உள்ள ரெட்டினால் எனப்படும் சிறப்பு மூலப்பொருள் சருமத்தின் அடி ஆழம் வரை சென்று சருமத்திற்கு புத்துயிர் தருகிறது. இரவு இந்தக் க்ரீமைப் பயன்படுத்துவதால் பகல் முழுதும் சிறப்பான தோற்றம் கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
நிறைகள்
- ரெட்டினால் சருமத்தை ஊடுருவி செல்களுக்கு புத்துயிர் தருகிறது
- சருமச் சுருக்கங்களை சரி செய்கிறது
- விட்டமின் பி 3 அடங்கியது
- விட்டமின் ஈ அடங்கியது
- ஆன்டி ஏஜிங் மூலப்பொருள்கள் சருமத்தின் இளமையைத் தக்க வைக்கிறது
குறைகள்
எதுவும் இல்லை
7. Lakmé 9 to 5 Naturale Night Creme
லக்மே நிறுவனத்தார் இந்த 9 டு 5 பெயரைச் சாமர்த்தியமாகத் தங்கள் இரவு நேரக் கிரீமிற்கும் பயன்படுத்தி இருக்கின்றனர். காலை 9 முதல் மாலை 5 மணி வரை உள்ள க்ரீமின் செயல்பாடு திறன் வேறு அதே நேரம் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான செயல்பாடு திறன் வேறு என்பதைத் தவிர இந்தக் க்ரீமில் வேறு வித்யாசங்கள் எதுவும் இல்லை.
நிறைகள்
- கற்றாழையின் நற்குணங்கள் அடங்கியது
- சருமத்தில் சுலபமாக பரவும் தன்மை கொண்டது
- சுற்றுசூழல் மாசுக்களால் ஏற்படும் சரும சிக்கல்களை சரி செய்கிறது
- அன்றாடம் காலையில் அழகான முகத்துடன் எழுந்திருக்கலாம்
குறைகள்
எதுவும் இல்லை
8. IZZORI Pure Anti Aging Day and Night Cream
உயர்தரமான மூலப்பொருள்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது இந்த இரவு நேரக் க்ரீம். இதனால் இளமையான தோற்றம் உங்களுக்கு உத்திரவாதமாகக் கிடைக்கிறது. ரெட்டினால் மற்றும் ஹயலூரோனிக் அமிலம் சருமத்தின் முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது. மேலும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.
நிறைகள்
- விட்டமின் சி பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கிறது
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
- சமச்சீரான நிறம் கிடைக்கிறது
- சருமத்திற்கு புத்துயிரும் பொலிவும் கிடைக்கிறது
- தளர்வான சருமத்தை சரி செய்து இளமையைத் தக்க வைக்கிறது
- இயற்கையான மூலப் பொருள்கள் அடங்கியது
குறைகள்
எதுவும் இல்லை
9. ALPHA CHOICE Night Cream for women and men, Anti aging face Cream
பலவித காரணங்களால் வலிமை இழந்து, பொலிவிழந்து இருக்கும் சருமத்தின் சிக்கல்கள் அனைத்தையும் இந்த ஒரு இரவு நேரக் க்ரீம் சரி செய்கிறது. சருமத்தின் முதிர்வினைப் பல விதமான மூலப்பொருள்கள் மூலம் தடுத்து உங்கள் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.
நிறைகள்
- சருமம் மறு ஊட்டம் பெறுகிறது
- சருமச் சுருக்கங்களை நீக்கி கரும்புள்ளிகளை மறைய செய்கிறது
- கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது
- சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது
- உங்கள் சருமம் மீண்டும் பின்னோக்கி செல்லும் வயதை அடைகிறது
- ஆரஞ்சு தோல் மற்றும் அதிமதுரம் அடங்கியது
- ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது
குறைகள்
எதுவும் இல்லை
10. EARTH THERAPY Whitening & Brightening Papaya Night Cream
பக்க விளைவுகள் அற்ற ஒரு பேரழகுத் தோற்றத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள். அதற்கான உத்திரவாதத்தை இந்த இரவு நேரக் க்ரீம் தருகிறது. பப்பாளியின் நற்குணங்கள் நிறைந்த இந்த இரவு நேரக் கிரீம் பேரபின் போன்ற ரசாயனக் கெடுதல்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிறைகள்
- ஆரோக்கியமான பொலிவான முகத் தோற்றம்
- பக்க விளைவுகள் இல்லாதது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- பப்பாளியின் நன்மைகள் அடங்கியது
- சைவ மூலப்பொருள்கள் கொண்டவை
- கரும்புள்ளிகள் நீங்கி பிரகாசமான முகம் கிடைக்கிறது
- முதுமைச் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் மறைகின்றன
குறைகள்
எதுவும் இல்லை
11. BAREAIR Night Cream with Protein & Vitamins
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துயிர் பெற்ற சருமம் பெற வேண்டும் என்றால் இரவுகளில் மேற்கண்ட கிரீமினை உபயோகியுங்கள். விட்டமின் ஈ , ஆலிவ் எண்ணெய் மற்றும் ஷீ பட்டர் போன்ற செயல்திறன் மிக்க மூலப்பொருள்கள் உங்கள் சருமத்தை தங்கம் போல மின்ன வைக்கிறது.
நிறைகள்
- விட்டமின் ஈ அடங்கியது
- ஆலிவ் எண்ணெய் மற்றும் ஷீ பட்டரின் நன்மைகள் நிரம்பியது
- சருமப் புரதங்களின் தேவையைத் தீர்க்கிறது
- கற்றாழை இதமளிக்கிறது
- இயற்கையான மூலப்பொருள்கள் கொண்டது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
குறைகள்
எதுவும் இல்லை
இரவு நேரக் கிரீமினை எப்படிப் பயன்படுத்துவது
இரவு நேரத்தில் உறங்கப்போவதற்கு முன்னர் இந்தக் கிரீமினை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்தக் கிரீமினை பயன்படுத்திய பிறகு நேரடியாக உறங்க செல்வது க்ரீம் முகத்தசைகளுக்குள் இறங்கி வேலை செய்ய உதவுகிறது.
- முதலில் முகத்தை கழுவிக் கொள்ளவும்
- பின்னர் டோனர் இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம்
- சிறிதளவு க்ரீமை உள்ளங்கைகளில் எடுக்கவும்
- சிறு சிறு பொட்டுக்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும்
- விரல்நுனிகளால் மென்மையாக மசாஜ் செய்யவும்
- பின்னர் உறங்க செல்லுங்கள்
இறுதியாக
உங்கள் அழகைப் பாதுகாக்கவும் இளமையைத் தக்க வைக்கவும் சில மெனக்கெடல்களைச் செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது. உங்கள் சரும வகைக்கேற்ற தேவையான இரவு நேரக் கிரீமினை நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். உங்கள் தோற்றம் என்றும் இளமையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இறைவன் அளித்த இந்த அழகெனும் ஆசிர்வாதத்தை பத்திரமாகப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அன்றாடக் கடமைகளில் ஒன்றாக இருக்கட்டும்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
