தேக ஆரோக்கியம் தரும் தேயிலை மர எண்ணெய் – ஒரு பார்வை


by Deepa Lakshmi

சீரகம் எனும் பெயரே  சீர்+அகம் என்கிற பொருளில் தான் வைக்கப்பட்டிருக்கிறது. இது அகத்தில் இருக்கும் அதாவது உடலின் உள்ளிருக்கும் பாகங்களைச் சீர் செய்கிறது. தற்போதைய கொரோனா காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் சீரகம் பயன்படுகிறது (1).

சீரகம் சேர்க்கப்பட்ட உணவுகளைக் கொரோனா வார்டுகளில் வழங்குகிறார்கள். இதனாலும் கொரோனா நோயாளிகள் அதிவிரைவாகக் குணமடைகின்றனர். சீரகம் என்பதை உணவுடன் கலப்பதோடு நிறுத்தாமல் சீரகத்தை தண்ணீராகக் காய்ச்சிக் குடிக்கும்போது அதன் பலன்கள் நேரடியாக உடலில் சேர்க்கிறது.

சீரகத் தண்ணீர் உடலுக்கு நன்மை தருமா ?

சீரகத் தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. எடை குறைக்க சீரகத் தண்ணீர் ஆரோக்கியமான வழியாகும். மேலும் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது, எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தைப் பெற சிறந்த பானமாக இது பயன்படுகிறது (2). அதிகப்படியான உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கும், தட்டையான வயிற்றைப் பெறுவதற்கும், நீங்கள் இந்த அதிசய பானத்தை முயற்சிக்கலாம்.

சீரகத் தண்ணீர் தரும் அற்புத நன்மைகள்

1. ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியம் வலுப்பட சீரகத் தண்ணீர்

சீரகத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான சிக்கல்களை நீக்குகிறது. சீரகம் உங்கள் செரிமானத்திற்கு கணிசமாக உதவும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. சீரக நீரை ஒரு கிளாஸ் தினமும் உட்கொள்வது பல கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு உடைக்கும் நொதிகளின் சுரப்பைத் தூண்டும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமான அமைப்பை சரியான பாதையில் வைத்திருக்கிறது, இதனால் நீங்கள் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாய்வு, காலை நோய், அடோனிக் டிஸ்பெப்சியா, மாலாப்சார்ப்ஷன் சிண்ட்ரோம் போன்ற கோளாறுகளை எதிர்த்துப் போராட முடியும் (3).

2. உயர் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கும் சீரகத்தண்ணீர்

சீரகத்தில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை நீராக மாற்றிக் குடிக்கும்போது உங்கள் உயர் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் வருகிறது. ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாக சீரகத் தண்ணீர் இருக்கிறது (4).

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகத் தண்ணீர்

ஏற்கனவே கூறியிருந்த படி இந்த கொரோனா காலங்களில் சீரகத் தண்ணீரானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன (5). இது உங்கள் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது. எளிதில் எந்த நோயும் உங்களைத் தாக்காது காக்கிறது.

4. உடல் பருமன் குறைய சீரகத் தண்ணீர் உதவுகிறது

உடல் பருமன் என்பது தற்போதைய காலமாற்றத்தால் பலருக்கும் ஏற்படுகிறது. இதனால் வரும் அவஸ்தை என்பது ஒரு எண்ணிக்கையில் நின்று விடுவது இல்லை. பல நோய்களுக்கும் அடித்தளமாக இருப்பது சில சமயங்களில் உடல் பருமன் தான் எனலாம். சீரகத் தண்ணீரானது உங்கள் பிஎம்ஐ கட்டுக்குள் இருக்க உதவி செய்கிறது (6). கலோரிகள் இல்லாததால் சீரகத் தண்ணீரானது மிகவும் பாதுகாப்பானது. காலை உடற்பயிற்சிக்கு முன்னர் ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் குடிப்பது உங்கள் வொர்க் அவுட் நிமிடங்களை பயனுள்ளதாக மாற்றுகிறது.

5. ரத்த சோகையை நீக்கும் சீரகத் தண்ணீர்

சீரகத்தின் இரும்புச் சத்து இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இரும்புச்சத்து உடலின் மிக முக்கியமான கனிமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, ஏனெனில் சீரகத் தண்ணீரானது சிவப்பு இரத்த  அணுக்களை உருவாக்குவதிலும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது (7). எனவே, இரத்த சோகையின் போது ஏற்படும் கடுமையான இரும்புச்சத்து குறைபாட்டிற்கு எதிராக போராட சீரக நீர் பயனுள்ளதாக இருக்கும்.

6. சீரகத் தண்ணீர் நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது

நீங்கள் தூக்கமின்மையால் (தூக்கக் கோளாறு) பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், ஜீரா நீர் உங்களுக்கு உதவும். இந்த சீரகத் தண்ணீரை தவறாமல் உட்கொள்வது ஆழமான தூக்கத்தை ஊக்குவிக்கும் (8). இதனால் தூக்கமின்மை தொடர்பான பல்வேறு நோய்களில் இருந்து நீங்கள் காக்கப்படுகிறீர்கள்.

7. மலச்சிக்கலை நீக்கும் சீரகத் தண்ணீர்

சீரகம் வயிற்றில் வாயுக்கள் உருவாவதைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது. இதனால் எரிச்சலூட்டும் குடல் தொந்தரவுகள் சரியாகின்றன. அஜீரண ஏப்பம் , வாயுத் தொந்தரவு போன்றவை நீங்குகின்றன. குடல் பாதையை சீரகத் தண்ணீர் சுத்திகரிப்பு செய்வதால் குடலில் கழிவுகள் தங்காமல் மலசிக்கல் ஏற்படாமல் நேரத்திற்கு மலம் கழிக்க உதவுகிறது. மேலும் சீரக விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றி பல்வேறு உள் உறுப்புகளின் வழக்கமான செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது (9).

8. கர்ப்பிணிகளுக்கு உதவும் சீரகத் தண்ணீர்

சீரக நீரில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஜீரா நீர் பல அற்புத நன்மைகளைச் செய்கிறது. தாய்க்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் தேவையான இரும்பு சத்தினை சீரகத் தண்ணீர் பூர்த்தி செய்ய உதவுகிறது (10). இதன் விளைவாக, இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

9. கேரளப் பெண்களின் அழகு ரகசியம் – சீரக தண்ணீர்

கேரளப் பெண்களின் மினுமினுக்கும் தேகத்திற்கு அவர்கள் பயன்படுத்தும் இயற்கை பொருள்கள்தான் காரணம். அவர்கள் பயன்படுத்தும் பொருள்களை வெளிப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதால் மட்டுமே அவர்களின் இயற்கை அழகு நமக்கு கிடைத்து விடாது. அவர்கள் அன்றாடம் குடிக்கும் சீரகத் தண்ணீரானது விட்டமின் ஈ சத்து நிறைந்தது.பெரும்பாலான ஆயுர்வேத மருத்துவர்களும் குடும்பத்துடன் இப்படியான சீரகத் தண்ணீரையே தினமும் பருகுகின்றனர் (11). இதனை நாமும் பருகுவதால் கேரளப் பெண்களின் மினுமினுப்பான தேகம் நமக்கும் கிடைக்கும்.

10. கூந்தலுக்கு நன்மை தரும் சீரகத் தண்ணீர்

மீண்டும் நாம் கேரளப் பெண்களையே எடுத்துக் கொள்ளலாம். அவர்களின் அழகிற்கு அடுத்த காரணமாக இருப்பது அவர்களின் கூந்தல்தான். அடர்த்தியான கூந்தல் அவர்களுக்கு வசப்பட அவர்கள் பருகும் சீரகத் தண்ணீரும் ஒரு காரணம். உங்கள் ஒவ்வொரு தலைமுடிக்கும் ஊட்டச்சத்து வழங்க ஜீரா நீர் நிறைய உதவுகிறது. இதில் உள்ள முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் தலைமுடியை வேர்களில் இருந்து வளர்க்கின்றன (11). இதன் விளைவாக, நீங்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் இழைகளைப்  பெறுவீர்கள். சீரகத் தண்ணீர் உங்கள் தலைமுடிக்கு கூடுதல் பிரகாசத்தை சேர்க்கிறது. அதனால் நீங்கள் மென்மையான மற்றும் கவர்ந்திழுக்கும் கூந்தலுக்குச் சொந்தக்காரர் ஆவீர்கள்.

சீரகத் தண்ணீரை எப்படிப் பயன்படுத்துவது ?

பெரும்பான்மையான மருத்துவர்கள் பரிந்துரைப்பது நீருக்கு பதிலாக சீரகத்தண்ணீரை அருந்தலாம் என்பதுதான். அல்லது இரவு ஒரு கைப்பிடி சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அதனை அருந்தி வரலாம். இது நாள் முழுக்க அருந்துவதைக் காட்டிலும் சிறந்த பலனைக் கொடுக்கிறது. ஒரு லிட்டர் குடிக்க சிரமமாக இருக்கும் என்றால் அந்த நீரை அந்த நாளின் இருத்தின் வரை வைத்திருந்து அவ்வப்போது குடித்து வரலாம்.

சீரகத் தண்ணீரை எப்படித் தயாரிப்பது ?

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் சீரகத் தண்ணீரை வெகு சுலபமாகத் தயாரிக்க முடியும். ஒரு கையளவு சீரகத்தை ஒரு லிட்டர்  தண்ணீரில் ஊறவைத்து கொதிக்க விடுங்கள். பின்னர் அந்த நீரை வடிகட்டினால் அதுவே சீரகத் தண்ணீர். உங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான அளவு இந்த நீரை இப்படி கொதிக்க வைத்து வடிகட்டிப் பயன்படுத்தலாம்.

சீரகத் தண்ணீரின் பக்க விளைவுகள்

அமிர்தமாகவே இருந்தாலும் அதிலும் பக்க விளைவுகள் ஏற்படும். காரணம் தேவையான அளவுக்கு மீறி நாம் இதனை எடுத்துக் கொண்டாலும் சில பக்க விளைவுகளை நாம் சந்திக்க நேரிடலாம். மிதமான தன்மை இங்கே முக்கியமானது. சீரகத் தண்ணீரை அதிக அளவு உட்கொள்வதால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் என்னவென்றால் (12)

உடலில் ரத்த சர்க்கரை அளவானது குறைந்து விடலாம்

சீரகத்திற்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் ஆற்றல்  உள்ளது, ஏனெனில் அதில் அதிகளவு  ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதனைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஒருபோதும் ஒரே நேரத்தில் அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

சீரகம் தாய்ப்பால் உற்பத்தியைத் தடுக்கக்கூடும்

தாய்ப்பால் கொடுக்கும் நேரங்களில் சீரகத்தண்ணீரில் இருந்து விலகி இருக்க உங்கள் மருத்துவ வழங்குநர் பரிந்துரைக்கலாம். அதிகப்படியான சீரகத் தண்ணீரின் அளவு தாய்ப்பாலின் உற்பத்தியைக் குறைக்கும் ஒரு அரிதான ஆனால் சாத்தியமான நிலை ஏற்படலாம். அப்படியான சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக சீரகத் தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விட்டு மருத்துவரை சந்திக்கவும்.

இறுதியாக

சீரக நீர் ஒரு எளிய, பாதுகாப்பான,  இயற்கை மற்றும் ஆரோக்கியமான பானமாகும். இது பெரும்பாலான மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியது, கிட்டத்தட்ட பெரும்பாலான நபர்கள் அதன் பக்க விளைவுகளை அனுபவிப்பதில்லை. சீராக நீரின் அருமையான நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கின்றன, இது மிதமான மற்றும் நிலைத்தன்மையுடன் நுகரப்படும் வரை, நீண்ட காலத்திற்கு, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பாதுகாப்பான, நம்பகமான, நிலையான முடிவுகளை உங்களுக்கு வழங்கும்.

அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா ?

சீரகத் தண்ணீரை  நாளின் எந்த நேரத்திலும் உட்கொள்வது எடையைக் குறைக்க உதவும், சிறந்த முடிவுகளுக்கு ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை முதலில் குடிக்க வேண்டும். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது, குடல் பாதையை சுத்தம் செய்கிறது , எடை குறைக்க உதவுகிறது.

தினமும் சீரகத் தண்ணீரைக் குடிக்கலாமா ?

சீரக நீர் எடை குறைக்க ஒரு ஆரோக்கியமான வழியாகும். இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது, எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தைப் பெற சிறந்த வழியாகும். உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கும், தட்டையான வயிற்றைப் பெறுவதற்கும், நீங்கள் இந்த அதிசய பானத்தை முயற்சிக்க வேண்டும். தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமே.

இரவு வேளைகளில் சீரகத் தண்ணீர் குடிக்கலாமா ?

நல்ல ஆழமான அமைதியான உறக்கத்திற்கு சீரகத் தண்ணீர் உதவி செய்கிறது. ஆகவே இரவு வேளைகளில் உறங்கும் முன்பு ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் குடிப்பதால் சிறந்த தூக்கம் கிடைக்கிறது.

சீரகத் தண்ணீர் தொப்பையைக் குறைக்குமா ?

சீரகத் தண்ணீரானது மோசமான செரிமானம், மலச்சிக்கல், இன்சுலின் எதிர்ப்பு, வளர்சிதை மாற்றம் மற்றும் பலர் போன்ற பல சுகாதார பிரச்சினைகளை தீர்க்க ஒரு சிறந்த மூலப்பொருள் என்று நம்பப்படுகிறது. மேலும், இது தொப்பை கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். சீரக விதைகளை சில மணி நேரம் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் கிடைக்கும் தீர்வு சீரக நீர். இதனைத் தொடர்ச்சியாக அருந்தி வந்தால் பல நற்பயன்களைப்  பெறலாம்.

12 sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.
Was this article helpful?
scorecardresearch