திக்கி திணறும் வாய்ப்பேச்சு சிக்கல்களை நீக்கும் வீட்டு வைத்தியங்கள் – Home remedies for Stammering in tamil

by StyleCraze

தடுமாற்றம் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கும் என்பதை நீங்கள் அறிவீரா? இந்த தடுமாற்றம், ஒருவருடைய வாழ்க்கையை பல மாதிரி புரட்டிபோடவும் கூடும். குழந்தைகள் திக்கி பேச தொடங்குவார்கள். பெற்றோர்களோ, கடுமையான மனசங்கடத்துக்கு ஆளாவார்கள். ஊரார் வாயை அடைப்பது என்ன அவ்வளவு சுலபமா? ஆனால், வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எல்லாமே சாத்தியம் தான். லாங்குவேஜ் தெரபி என்ற ஒன்றை கொண்டு திக்கிப்பேசும் உங்கள் பிள்ளைகளின் பேச்சை தெளிவாக மாற்ற முடியும் (1).

திக்கிப்பேசுதல் என்றால் என்ன?

திக்கிப்பேசுவது பல மாதிரியான வடிவம் கொண்டது. அதேபோல இதன் தீவிரமும் நபருக்கு நபர் மாறுபடுகிறது. இதனை கணிப்பதும் கடினம். ஒரு சில பிள்ளைகள் ஆரம்பத்தில் திக்கிப்பேசினாலும் பிறகு சரளமாக பேச தொடங்குவார்கள் (2).

திக்கிப்பேசுவதற்கான காரணம் என்ன?

 • பிள்ளைகள் திக்கிப்பேசும் பொழுது பெற்றோர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது
 • மரபு ரீதியாக நம் பரம்பரைக்கே இந்த பழக்கம் இருப்பது
 • பிள்ளைகளின் மூளை செயல்பாட்டை கண்டுக்கொள்ளாமல் இருப்பது (2)

திக்கிப்பேசுவதற்கான அறிகுறி என்னென்ன?

 • ‘மம்மி’ என உச்சரிக்க முடியாமல் ‘ம-ம-ம-ம’ என சொன்ன எழுத்தையே திரும்ப சொல்வது.
 • ‘மம்மி’ என்ற வார்த்தையை நீண்டு உச்சரிப்பது.
 • ஒரு சில எழுத்தை சொல்ல சிரமம் கொள்வது (2).

திக்கிப்பேசுவதற்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?

1. பச்சை கொத்தமல்லி (3)

தேவையானவை என்னென்ன?

 • கொத்தமல்லி இலை (ஃபிரெஷ்ஷானது)
 • சரக்கொன்றை பூ
 • தண்ணீர் (தேவையான அளவு)

என்ன செய்வது?

 1. சுத்தமான கொத்தமல்லி இலையையும் சரக்கொன்றை பூவையும் எடுத்துக்கொள்ளவும்.
 2. தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி கொள்ளவும்.
 3. இந்த வடிகட்டிய தண்ணீரை கொண்டு 21 நாளைக்கு வாய் கொப்புளித்து வரவும்.

என்ன செய்யும்?

 • நாக்கு தடிமன் குறையும்
 • சரளமாக பேச உதவும்

2. கரு மிளகு (3)

தேவையானவை என்னென்ன?

 • பாதாம் பருப்பு – 7
 • கரு மிளகு – 7
 • தண்ணீர் (தேவையான அளவு)
 • கல்கண்டு (தேவையான அளவு)

என்ன செய்வது?

 1. பாதாமையும் கருமிளகையும் அடித்து தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.
 2. நன்றாக பேஸ்டு போல அரைத்துக்கொள்ளவும்.
 3. கொஞ்சமாக கல்கண்டு சேர்த்துக்கொள்ளவும்.
 4. 15 நாட்களுக்கு இந்த பேஸ்டை அதிகாலையில் கொஞ்சமாக வாயில் வைத்து வரவும்.

என்ன செய்யும்?

 • திக்கிப்பேசுவது சரியாகும்

3. நெல்லிக்காய் (3)

தேவையானவை என்னென்ன?

 • இந்திய பச்சை நெல்லிக்காய்

என்ன செய்வது?

 1. பிள்ளைகளுக்கு, மெல்வதற்கு இந்த இந்திய நெல்லிக்காயை கொடுத்து வரவும்.
 2. இரண்டு முதல் மூன்று நாட்கள் முயன்றால் போதும்.
 3. பொறுமையான நற்பலனை நிச்சயம் காணலாம்.

என்ன செய்யும்?

 • திக்கிப்பேசுவது சரியாகும்

4. பசுமாட்டு நெய் (4)

தேவையானவை என்னென்ன?

 • பசுமாட்டு நெய்

என்ன செய்வது?

 1. உணவுடன் ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.

என்ன செய்யும்?

 • மூளை செயல்பாட்டுக்கு உதவும்
 • ஞாபக சக்தியை கூட்டும்

4. வல்லாரைக்கீரை (4)

தேவையானவை என்னென்ன?

 • கொத்தமல்லி விதை (கொஞ்சம்)
 • வல்லாரை இலை – 3 முதல் 4
 • பேரீட்சம்பழம் (கொஞ்சம்)

என்ன செய்வது?

 1. கொத்தமல்லி விதை, வல்லாரை இலை, பேரீட்சம் பழம் ஆகியவற்றை மென்று வரவும்.

என்ன செய்யும்?

 • திக்கிப்பேசுவது சரியாகும்

5. காய வைத்த வல்லாரை இலைகள் (4)

தேவையானவை என்னென்ன?

 • வல்லாரை இலைகள் (கொஞ்சமாக இருட்டில் காய வைத்தது)

என்ன செய்வது?

 1. காயவைத்த வல்லாரை இலைகளை எடுத்துக்கொள்ளவும்.
 2. அதனை நன்றாக பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
 3. இந்த பவுடரை தினமும் எடுத்துக்கொண்டு வரவும்.

என்ன செய்யும்?

 • திக்கிப்பேசுவது சரியாகும்

6. வல்லாரை எண்ணெய் (4)

தேவையானவை என்னென்ன?

 • வல்லாரை எண்ணெய் – 10 மில்லி
 • வெதுவெதுப்பான தண்ணீர் – தேவையான அளவு

என்ன செய்வது?

 1. வல்லாரை எண்ணெய்யை சூடுபடுத்தி கொள்ளவும்.
 2. லேசான சூட்டுடன் தலையில் ஒத்தடம் கொடுக்கவும்.
 3. 30-45 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
 4. வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை கழுவவும்.

என்ன செய்யும்?

 • மூளை செயல்பாட்டை துரிதப்படுத்தும்

எப்போது டாக்டர் அவசியம்?

முதலில் உங்களுடைய குடும்ப மருத்துவரிடமோ குழந்தைகள் நல மருத்துவரிடமோ ஆலோசனை பெற வேண்டும். அதற்கு பிறகே வீட்டு வைத்தியத்தையும் பேச்சு மொழி நோயியல் நிபுணரையும் முயல வேண்டும்.

குழந்தைகளுக்கு தனி மாதிரியான சிகிச்சையும் பெரியவர்களுக்கு தனிமாதிரியான சிகிச்சையும் இருப்பது குறிப்பிடத்தக்கது (5).

திக்குப்பேச்சுக்கான சிகிச்சைகள் என்னென்ன?

 • தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்
 • பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் சிகிச்சைகள் மாறும்
 • இன்னொருவரிடம் சகஜமாக பேசும் திறனுக்கான பயிற்சி வழங்கப்படும்
 • பள்ளி, பணி, சமூக செயல்பாடுகளில் ஈடுபடுத்தக்கூடும் (6)

திக்குப்பேச்சுக்கு யோகா இருக்கிறதா? என்னென்ன? (7)

 • தியானம்
 • ஓய்வு
 • சர்வங்காசனம்
 • சீத்தாலி
 • சீத்காரி
 • நாடிசோதன பிராணயாமம்

திக்குவாய்க்கு எது நல்லது?

 • நெல்லிக்காய்
 • பாதாம் பருப்பு
 • உலர்ந்த திராட்சை

திக்குவாய் வராமல் தடுப்பது எப்படி? (8),(9)

 • மெல்ல பேச முயலுதல்
 • கடினமான சொல் உச்சரிப்பை தவிர்த்தல்
 • மன அழுத்தமின்றி இருத்தல்
 • ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல்

ஒட்டுமொத்தத்தில்,

திக்குவாய் என்பது அவ்வளவு பெரிய வியாதி ஒன்றும் அல்ல. ஆரம்ப நிலையிலேயே உங்களுடைய உறவினர்கள் யாராவது இதைக்குறித்து பிழை கண்டுபிடித்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இழிவுப்படுத்துவோரை ஒதுக்கி விடுங்கள். உங்களுக்கு நம்பகமான நல்ல நண்பர்களுடன் பேசி, வார்த்தை உச்சரிப்பை பழகுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

ஸ்டமர் & ஸ்டட்டர் என்ன வித்தியாசம்?

ஒரே நிலையை குறிக்கும் வார்த்தை தான் இரண்டுமே. நாடுகளை பொறுத்து அதற்கு ஏற்றார் போல் வார்த்தை உச்சரிக்கப்படுகிறது.

ஸ்டமரிங் குணப்படுத்தக்கூடியதா?

குணப்படுத்தக்கூடியது தான். முறையான சிகிச்சையும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் ஒரு நாள் நற்பலன் கிடைக்கும்.

ஸ்டமரிங் என்பது ஒரு உடல் குறைபாடா?

உடல் குறைபாடு என்றே சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனாலும், உடல் குறைபாடுகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் ஒன்றும் கொடுக்கப்படுவதில்லை. அதனால் இப்பிரச்சனை இருப்பவர்களை இழிவாக பேசி காயப்படுத்த வேண்டாம்.

ஸ்டமரிங் என்பதை நிரந்தரமாக குணப்படுத்துவது எப்படி?

மெல்ல பேசி பயிற்சி எடுப்பதே இதனை நிரந்தரமாக சரி செய்ய ஒரே வழி.

என் பிள்ளையின் திக்குவாயை எப்படி சரிசெய்வது?

 • நல்ல சூழலை அமைத்து தாருங்கள்
 • பிள்ளைகளிடம் பொறுமையாக பேசுங்கள்
 • நெகட்டிவாக எதையும் பிள்ளைகளிடம் பேசாதீர்கள்
 • அவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள்

9 Sources

Was this article helpful?

LATEST ARTICLES

scorecardresearch