நீங்கள் அதீத மென்மையானவரா.. உங்கள் சென்சிடிவ் சருமத்திற்கான 11 பேஸ்வாஷ் வகைகள்

Written by Deepa Lakshmi
All products recommended on StyleCraze are independently selected by our editorial team. If you make a purchase through any of these links, we may receive a commission. Learn more about our product selection process here.

சென்சிடிவ் வகை சருமம் என்றால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்த விதமான தயாரிப்பை நாம் பயன்படுத்தினாலும் அதற்கு சருமம் ஏதாவது ஒரு எதிர்வினை ஆற்றியபடி இருக்கும். சென்சிடிவ் சருமம் என்பதால் சென்டிமெண்டாக பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் ஏற்றவகையில் சில பேஸ்வாஷ் வகைகளைப் பற்றி இங்கே குறிப்பிடப் போகிறேன்.

இந்த பேஸ்வாஷ் வகைகள் உங்கள் சென்சிடிவ் சருமத்தைக் காயப்படுத்தாமல் எரிச்சல்கள் இல்லாமல் மென்மையான முறையில் உங்கள் முகத்தை சுத்தம் செய்வதோடு அழகான பொலிவான தோற்றத்தையும் கொடுக்கிறது.

சென்சிடிவ் சரும வகையினருக்கான பேஸ்வாஷ் வகைகள்

1. Aveeno Active Naturals Ultra Calming Foaming Cleanser

சந்தையில் சென்சிடிவ் சருமத்தினருக்காக வெளியாகி இருக்கும் தயாரிப்புகளில் இந்த தயாரிப்பு மிகச் சிறந்தது எனக் கூறலாம். காரணம் எப்பொழுதும் எந்தப் பொருள் முகத்தில் பட்டாலும் சருமத்தில் எரிச்சல்கள் ஏற்பட்டு ஒவ்வொரு முறை முகம் கழுவும்போதும் துடித்துப் போகும் சென்சிடிவ் சரும நபர்களுக்கெனவே ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்டது இந்த பேஸ்வாஷ்.

நிறைகள் 

 • சருமத்தை அமைதியாக வைத்திருக்கிறது
 • மென்மையான முறையில் அழுக்குகளை நீக்குகிறது
 • சென்சிடிவ் சருமத்தை ஆற்றுப்படுத்துகிறது
 • செயற்கை மணம் சேர்க்கப்படாதது
 • சோப் இல்லை
 • ஒவ்வாமை ஏற்படாது
 • சரும நிபுணர்கள் அங்கீகரிப்பது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Cetaphil Gentle Skin Cleanser

சரும நிபுணர்களின் நிரந்தரத் தேர்வாக பெரும்பாலும் இருப்பது இந்த செடாஃபில் நிறுவனத்தின் தயாரிப்புகள் என்றால் அது மிகையில்லை. முகம் கழுவ வேண்டும் என்றால் பொதுவாக நீர் தேவைப்படும். ஆனால் இந்த பேஸ்வாஷ் சற்று வித்யாசமானது. இதற்கு நீர் தேவையில்லை. ஒரு  பஞ்சில் இந்த கிளென்சரைத் தொட்டு முகத்தில் அழுந்தத் தடவித் துடைத்து எடுத்தால் போதுமானது.

நிறைகள்

 • மிக மிக மென்மையானது
 • சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
 • நீர் தேவையில்லை
 • பயணத்திற்கு உகந்தது
 • சருமத்துளைகளில் ஈரப்பதம் தங்குவதில்லை
 • ஆண் பெண் இருவருக்கும் ஏற்றது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Neutrogena Fragrance Free Liquid Neutrogena Facial Cleansing Formula

ஒரு ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானது அசுத்தங்களை மென்மையாக நீக்கும் க்ளென்சர் வகைகள்தான். அந்த வகையில் நியுட்ராஜினாவின் இந்த க்ளென்சர் உங்கள் சருமத்தை மிகப் பாதுகாப்பாக சுத்தம் செய்கிறது.

நிறைகள் 

 • செயற்கை மணம் சேர்க்கப்படவில்லை
 • கிளிசரின் பார்முலா கொண்டது
 • ஒவ்வாமைகள் ஏற்படாது
 • சருமத்துளைகளில் எண்ணெய்ப்பசை சேர விடுவதில்லை

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. RE’ EQUIL Oil Control Anti Acne Face Wash for Oily, Sensitive and Acne Prone Skin

இதன் பெயரே இந்த பேஸ்வாஷின் தன்மையை உங்களுக்கு எடுத்துரைக்கிறது. வறண்ட சருமத்தைத் தவிர அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. குறிப்பாக பருக்கள் கொண்ட சென்சிடிவ் சரும வகையினருக்காகவே தயாரிக்கப்பட்டது. சீபம் சுரப்பைக் குறைக்கவும் இந்த பேஸ்வாஷ் உதவி செய்கிறது.

நிறைகள்

 • சருமத்துளை அழுக்குகளை நீக்குகிறது
 • மீண்டும் துளைகளைப் பாதுகாப்பாக மூடுகிறது
 • சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது
 • ஜின்க் மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்ந்துள்ளது
 • பருக்கள் உலர்வதால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கிறது
 • கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. NIVEA Face Wash, Milk Delights Caring Rosewater, Sensitive Skin

ரோஸ்வாட்டர் எனப்படும் பன்னீர் ரோஜாவின் நற்குணங்கள் நிவியாவின் இந்த பேஸ்வாஷில் இருக்கிறது. இது சென்சிடிவ் சருமத்தை மிக மென்மையாகப் பாதுகாப்பாக சுத்தம் செய்கிறது. இதனால் தளதளப்பான புத்துணர்வான முகத்தோற்றம் உங்களுக்கு கிடைக்கிறது.

நிறைகள் 

 • ரோஸ்வாட்டர் சேர்ந்துள்ளதால் புத்துணர்வு கிடைக்கிறது.
 • பால் இயற்கையான முறையில் சருமத்தை க்ளென்ஸ் செய்கிறது
 • சருமத்திற்கு இதம் தருகிறது
 • பயணத்திற்கு ஏற்றது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

6. Blue Nectar Ayurvedic Honey and Aloevera Face Wash for Women and Men

8 விதமான ஆயுர்வேத மூலிகைகள் மூலம் தயார் செய்யப்பட்ட இந்த ப்ளூ நெக்டர் பேஸ்வாஷ் உங்கள் மென்மையான சென்சிடிவ் சருமத்தை பாதுகாக்கிறது. இதனுடன் தேனும் கற்றாழையும் இணைந்திருப்பதால் சருமத்திற்கு தேவையான இதமும் இளமையும் கிடைக்கிறது.

நிறைகள்

 • 8 விதமான இயற்கை மூலிகைகள் இணைந்தது
 • அதனுடன் கற்றாழை மற்றும் தேன் சேர்ந்தது
 • அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
 • பருக்கள் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த பேஸ்வாஷ்
 • ஆண் பெண் இருவரும் உபயோகிக்கலாம்

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

7. Biotique Advanced Ayurveda Bio Neem Purifying Face Wash for All Skin Types

வேம்பின் நற்குணங்கள் அடங்கிய பயோடிக் நிறுவனத்தின் இந்த பேஸ்வாஷ் சென்சிடிவ் சருமத்தினருக்கும் ஏற்றது எனலாம். அனைத்து சரும வகையினரும் இதனைப் பயன்படுத்த முடியும். இதன் ஜெல் தன்மையே இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.

நிறைகள்

 • வேம்பின் நற்குணங்கள் கொண்டது
 • அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
 • ஆல்கஹால் இல்லை
 • மிருகங்களிடம் சோதனை செய்யப்படவில்லை
 • பேரபின் இல்லை
 • இயற்கை மூலப்பொருள்களால் உருவானது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Pears Pure & Gentle Face Wash

மென்மையான சருமம் கொண்டவர்களுக்காகவே உருவானது தான் பியர்ஸ் சோப். அந்த நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான இந்த பியர்ஸ் பேஸ்வாஷ் உங்கள் சருமத்தை தனது கிளிசரின் மூலம் மென்மையாக சுத்தம் செய்கிறது.

நிறைகள் 

 • கிளிசரின் அடங்கியது
 • மென்மையாக சுத்தம் செய்கிறது
 • சோப் இல்லை
 • தேர்ந்தெடுக்க மூன்று வகைகள் உள்ளன

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

9. Kaya Clinic Face Cleanser for Sensitive Skin

காயா நிறுவனத்தார் சென்சிடிவ் சரும வகையினருக்காக சிரத்தையுடன் தயாரித்த பேஸ்வாஷ் தான் மேற்கண்ட பேஸ்வாஷ். இது மிக மென்மையான முறையில் அழுக்குகளை நீக்கி இறந்த செல்களை அகற்றுகிறது.

நிறைகள் 

 • சரும நிபுணர்கள் ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது
 • சென்சிடிவ் சருமத்தினருக்காகவே தனித்துவமாகத் தயாரிக்கப்பட்டது
 • பயன்படுத்தும்போது எரிச்சல் ஏற்படுவது இல்லை
 • வாசனை அற்றது
 • ஒவ்வாமை ஏற்படுத்தாது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

10. Plum Hello Aloe Skin Loving Face Wash

இந்த பேஸ்வாஷ் உங்கள் சருமத்திற்கு தேவையான அதீத பாதுகாப்பை கற்றாழையின் நற்குணங்களோடு பூர்த்தி செய்கிறது. மென்மையான சருமத்தை அதிக அக்கறையோடு பராமரிக்க வல்லது இந்த பேஸ்வாஷ். இந்த நிறுவனம் தனது வருமானத்தில் 1 சதவிகிதத்தை சுற்றுசூழல் நன்மைக்காக வழங்குகிறது என்பது கூடுதல் தகவல்.

நிறைகள் 

 • கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
 • சோப் இல்லை
 • 100 சதவிகிதம் சைவமுறையில் தயாரிக்கப்பட்டது
 • அற்புதமான நறுமணம் கொண்டது
 • கற்றாழை நற்குணங்கள் அடங்கியது

குறைகள் 

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

11. Dermafique Perfect Ph Facial Cleanser

சருமத்தின் ph சமநிலையை பாதிக்காமல் அழுக்குகளை மென்மையாக சுத்தம் செய்கிறது மேற்கண்ட பேஸ்வாஷ். இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கெமோமில் மற்றும் விட்டமின் ஈ நற்குணங்களை இது தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதுதான்.

நிறைகள்

 • கெமோமில் மற்றும் விட்டமின் ஈ அடங்கியது
 • சருமத்தின் Ph சமநிலையை பாதிப்பதில்லை
 • மென்மையாக சுத்தம் செய்கிறது
 • கூடவே சருமத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது
 • அதனால் பொலிவான தோற்றம் பெறுவீர்கள்
 • முகத்தில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனித்தனியாகப் பயனடைகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

சென்சிடிவ் சருமத்தினருக்கான பேஸ்வாஷை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்

 • மிக மென்மையான க்ளென்சராக அது இருக்க வேண்டும்
 • நறுமணம் இல்லாமல் இருந்தால் நல்லது
 • பேரபின் இல்லாததாக இருக்க வேண்டும்
 • சோப் இல்லாததாக இருந்தால் நல்லது
 • ரசாயனங்கள் சேர்க்கை குறைவாக இருக்க வேண்டும்
 • இயற்கை பொருள்கள் அதிகமாக இருக்க வேண்டும்
 • கிளிசரின் அடங்கிய பேஸ்வாஷ் மிக நன்மையானது

முடிவாக..

சென்சிடிவ் சருமத்தினால் மிக சென்சிடிவ் ஆனவர்களில் நானும் ஒருவள். அதனாலேயே அதன் வேதனைகளை நன்குணர்ந்தவள் . என்னைப்போலவே மற்ற சென்சிடிவ் சருமத்தினர் இனியும் வழக்கமான சோப்களில் சிக்காமல் மேற்கண்ட க்ளென்சர் அல்லது பேஸ்வாஷ் வகையினைப் பயன்படுத்தி பயனடையுங்கள்.

The following two tabs change content below.
scorecardresearch