உங்கள் நிறத்தை மேம்படுத்த உதவும் 14 சிறந்த ஃபேஸ்வாஷ் வகைகள்

by Deepa Lakshmi
This post contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. Our product selection process.

உங்கள் நிறத்தை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் எந்த தவறுமில்லை. காரணம் நமது விருப்பங்கள் என்பது நமது உரிமை என்பதே உண்மை. நிறமென்பது எந்த உயர்வையும் தீர்மானிப்பதில்லைதான்.அதே சமயம் பெரும்பாலானவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவும் செய்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

ஒப்பீடுகள் மற்றும் பாகுபாடுகள் நிறைந்த இந்த உலகில் நிறத்தின் காரணமாக தோற்றத்தின் காரணமாக ஒதுக்கப்படும் பல நெஞ்சங்களின் வேதனைகளை நான் அறிவேன். நிச்சயம் அதற்கொரு காரணம் உண்டு. நானும் அவ்வாறான ஒதுக்கீடுகளால் பாரபட்சங்களால் உள்ளுக்குள்ளே வெதும்பியவள்தான். பிறக்கும்போது அடர்நிறத்தில் இருந்த நான் என் பதின்ம வயதுகளில் நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களை உபயோகிக்கப் பழகினேன். இப்போது எல்லோரும் நேசிக்கும் ஒரு நிறம் கொண்டவளாக மாறியிருக்கிறேன்.

அதனால் இந்தக் கட்டுரையை எழுத நானே பொருத்தமானவன் என்பதால் துணிந்து எழுதுகிறேன். பிறக்கும்போது ஏழையாக இருப்பது நம் குற்றமல்ல ஆனால் சாகும்போது பணக்காரனாக சாக வேண்டும் என்கிற பழமொழி நினைவிருக்கிறதா.. அதைப்போலவே பல காரணங்களால் மாறிப்போன நமது நிறத்தின் தன்மையை அதிகரிக்க நாம் விரும்புவது தவறே இல்லை. வாருங்கள் அதற்கான சிறந்த ஃபேஸ்வாஷ் வகைகளைப் பார்க்கலாம்.

நிறத்தை மேம்படுத்தும் ஃபேஸ்வாஷ்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி ?

நிறத்தை அதிகரிக்கப் பல்வேறு விதமான தயாரிப்புகள் நாள் தோறும் வெளியாகி வருகின்றன. இவற்றுள் சரியான தயாரிப்பை எப்படித் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட மூலப்பொருள்கள் இருக்கிறதா என்பதைக் கவனித்து வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

ஆர்புட்டின் எனும் மூலப்பொருள்தான் மெலனின் சுரப்பில் சிறப்பாக வேலை செய்கிறது. இது மெலனின் சுரப்பைத் தடுக்கிறது.

கோஜிக் அமிலம் நிறத்தை இயற்கையாக மேம்படுத்துவதில் சிறந்தது. ஜப்பானியர்கள் நிறம் அதிகமாக இருப்பது இதனால்தான். காரணம் இந்த கோஜிக் அமிலம் ஜப்பானிய அரிசி வகைகளில் அதிகம் காணப்படுகிறது. இதனை மூலப்பொருளாகக் கொண்ட சீரம் மற்றும் மற்ற நிறமேம்படுத்தும் பொருள்களை நீங்கள் வாங்கலாம்.

அசிலைக் அமிலம் கோஜிக் அமிலம் போன்றே இயற்கைப் பொருள்களான கோதுமை, பார்லி மற்றும் ரை போன்ற உணவுப்பொருள்களில் இது அதிகமாகக் காணப்படுகிறது. சருமத்தில் மெலனின் அளவைக் கட்டுக்குள் வைக்க இது உதவுகிறது. பருக்கள் கொண்டவர்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

க்ளுடாதியோன் என்பது மற்ற மூலப்பொருட்களைப் போல வெளியில் இருந்து உருவாவதில்லை. இது நமது உடலுக்குள்ளேயே இருக்கிறது. இதனை அதிகரிக்கவும் செறிவூட்டவும் செய்யப்படும் சிகிச்சை மூலம் நமது நிறம் முன்னிலும் ப்ரகாசமானதாக மாறுகிறது. இது ஒரு இயற்கை ஆன்டி ஆக்சிடென்ட்டும் கூட.

மேற்கண்ட மூலப்பொருள்கள் கொண்ட ஃபேஸ்வாஷ் தயாரிப்புகள் வாங்குவது உங்கள் நிறத்தை மேம்படுத்தும் அனுபவத்தை மிகச் சிறப்பானதாக மாற்றும். உங்கள் சரும வகைக்கேற்ற தயாரிப்பைத் தேர்ந்தெடுத்து வாங்குவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

நிறத்தை மேம்படுத்த சிறப்பான ஃபேஸ்வாஷ் தயாரிப்புகள்

1. Pond’s White Beauty Spot Less Fairness Face Wash

Pond's White Beauty Spot Less Fairness Face Wash

க்ளினிகல் முறையில் நிருபிக்கப்பட்ட நிற மேம்படுத்தல் தயாரிப்பு முறையைக் கொண்டுள்ளது இந்த பேஸ்வாஷ். ப்ரோ விட்டமின் பி 3
அடங்கிய இதன் பார்முலா சரும செல்களில் இருந்து தன்னுடைய நிற மேம்படுத்தும் சிகிச்சையை ஆரம்பிக்கிறது. அதனால் நிரந்தரமான மேம்படுத்தப்பட்ட சிவந்த நிறம் உங்கள் வசமாகும்.

நன்மைகள்

 • அனைத்து சருமத்தினருக்கும் பொருத்தமானது
 • தினமும் பயன்படுத்த எளிதானது
 • சென்சிடிவ் சருமத்தில் மென்மையாகச் செயல்படுகிறது
 • சருமத்தை ப்ரகாசமாக்குகிறது
 • பிசுபிசுப்பு இல்லை
 • பேரபின் இல்லை
 • அருமையான் நறுமணம் கொண்டது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

2. Mamaearth Ubtan Natural Face Wash for Dry Skin

Mamaearth Ubtan Natural Face Wash for Dry Skin

ஆறு விதமான அரிய வகை இயற்கை மூலிகைகள் மற்றும் மூலிகை எண்ணெய் அடங்கிய இந்த பேஸ்வாஷ் உங்கள் முகம் கழுவும் அனுபவத்தை சிறப்பானதாக மாற்றுகிறது. வால்நட் துணுக்குகள் உங்கள் இறந்த சருமத்தை மென்மையாக நீக்குகிறது. அதிமதுரம் உங்கள் கரும்புள்ளிகளைக் காணாமல் போகச் செய்கிறது. குங்குமப்பூ மற்றும் கேரட் விதை எண்ணெய் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. மஞ்சள் உங்கள் மெலனின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான இந்த பேஸ்வாஷ் சருமத்தை வெண்மையானதாக மாற்றுவதில் அபாரமாக வேலை செய்கிறது.

நிறைகள்

 • சூரிய ஒளியால் ஏற்படும் கருமையைப் போக்குகிறது
 • சருமத்தின் நிறத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது
 • இறந்த செல்களை நீக்குகிறது
 • முதுமைச் சசுருக்கங்கள் மற்றும் கோடுகளைத் தடை செய்கிறது
 • அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

3. Lotus Herbals Whiteglow 3-In-1 Deep Cleansing Skin Whitening Facial Foam

Lotus Herbals Whiteglow 3-In-1 Deep Cleansing Skin Whitening Facial Foam

உங்கள் சரும சுத்தம் என்பது ஆழமானதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய பேஸ்வாஷ் இதுதான். அதிகப்படியான மெலனின் சுரப்பைக் கட்டுப்படுத்தி உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. சருமம் கருமையாவதில் இருந்து காக்கும் இந்த பேஸ்வாஷ் கூடவே பிரகாசமான முகத்தோற்றத்தையும் வழங்குகிறது.

நிறைகள்

 • கற்றாழை சருமத்திற்கு குளுமையான இதம் தருகிறது
 • சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது
 • அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
 • தினமும் பயன்படுத்த ஏற்றது
 • சரும வறட்சி ஏற்படாது
 • கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
 • பயணத்திற்கு ஏற்றது
 • அற்புதமான நறுமணம் கொண்டது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

4. Lakmé Absolute Perfect Radiance Skin Lightening Facewash

Lakmé Absolute Perfect Radiance Skin Lightening Facewash

லக்மே நிறுவனம் தரும் இந்த பேஸ்வாஷ் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்கும் விட்டமின்கள் அடங்கியது. இந்த பேஸ்வாஷ் உங்களுக்கு சிறந்த வெண்மை நிறத்தை தருவதோடு சருமம் கறுப்பதற்குக் காரணமாக உள்ள கரும்புள்ளிகள் , பருக்களின் வடுக்கள் போன்றவற்றையும் நீக்கித் தருகிறது என்பது இந்த பேஸ்வாஷின் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.

நிறைகள்

 • அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
 • பேரபின் இல்லை
 • நல்ல நறுமணம் கொண்டது
 • கடினமான மேக்கப்பை மென்மையாக நீக்கும் தன்மை கொண்டது
 • சரும வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது
 • தினமும் பயன்படுத்தலாம்
 • பயணத்திற்கு ஏற்றது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

5. Garnier Skin Naturals Light Complete Facewash

Garnier Skin Naturals Light Complete Facewash

உங்கள் சருமத்தின் இயற்கை நிறத்தை மீட்டெடுத்துக் கொடுப்பதில் கார்னியர் நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் பெரும்பங்கு வகிக்கிறது. இதில் உள்ள தனித்துவமான சீன எலுமிச்சையின் தன்மையானது சருமத்தை மென்மையாக ப்ளீச் செய்து அதன் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் பொலிவிழந்த சருமம் ப்ரகாசமானதாக மாறுகிறது.

நிறைகள்

 • அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
 • தினமும் பயன்படுத்த உகந்தது
 • பயணத்திற்கு ஏற்றது
 • புத்துணர்வு தரும் நறுமணம் கொண்டது

குறைகள்

 • சரும வறட்சி ஏற்படலாம்
 • கரும்புள்ளிகளை நீங்குவதில்லை
 • அதிக ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்பட்டது

Buy Now From Amazon

6. Fair & Lovely Fairness Face Wash instant glow

Fair & Lovely Fairness Face Wash instant glow

உடனடியான பொலிவு வேண்டும் என்று விரும்புவரா நீங்கள்.. அப்படியானால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது பேர் அண்ட் லவ்லி நிறுவனத்தாரின் இந்த இன்ஸ்டன்ட் க்ளோ பேஸ்வாஷைத் தான். உங்கள் சருமத்தை வெப்பம் மற்றும் தீமையான ஒளிக்கதிர்களிடம் இருந்து காப்பாற்றி சருமத்தின் நிறத்தையும் பொலிவையும் அதிகரிக்க இந்த பேஸ்வாஷ் உதவி செய்கிறது. பாரம்பரியமாக நம்பகமான நிறுவனம் பேர் அண்ட் லவ்லி. ஆகவே பயமின்றி பயன்படுத்தலாம்,

நிறைகள்

 • தினமும் பயன்படுத்தலாம்
 • உடனடி பொலிவு கிடைக்கும்
 • தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நிறமேன்மை கிடைக்கும்
 • சரும நிறம் கூடுவதோடு கரும்புள்ளிகளும் மறையும்
 • பேரபின் இல்லை

குறைகள்

 • சரும வறட்சி ஏற்படலாம்
 • பருக்கள் உடையலாம்
 • இயற்கைப் பொருள்கள் இல்லை
 • செயற்கை நறுமணம் சேர்க்கப்பட்டது

Buy Now From Amazon

7. WOW Skin Science Ubtan Face Wash

WOW Skin Science Ubtan Face Wash

WOW நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் பல இயற்கை அழகு சாதன மூலப்பொருளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது . சுண்டல் கடலை மாவு, குங்குமப்பூ, சந்தன எண்ணெய், பாதாம் சாறு என இதில் உள்ள மூலப்பொருள்கள் ஒவ்வொன்றும் உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறைகள்

 • சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கருமையை நீக்குகிறது
 • சருமத்தை புத்துணர்வுள்ளதாக்குகிறது
 • சருமம் தளதளப்பாகக் காட்சியளிக்கிறது
 • முதுமைச் சுருக்கங்களைத் தடுக்கிறது
 • அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

8. Himalaya Fairness Kesar Face Wash

Himalaya Fairness Kesar Face Wash

சந்தையில் விற்பனையாகும் பேஸ்வாஷ் வகைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஹிமாலயாஸ் நிறுவனத்தாரின் மேற்கண்ட பேஸ்வாஷ். இதில் குங்குமப்பூ அடங்கி இருப்பதால் நிறத்தின் தன்மை அடர்நிறத்தில் இருந்து மாறி வெளிர் நிறமாகக் காட்சியளிக்க வைக்கிறது.

நிறைகள்

 • அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
 • ஒவ்வாமை ஏற்படுவதில்லை
 • பேரபின் இல்லை
 • சரும வறட்சி ஏற்படுவதில்லை
 • மிருகங்களின் மீது சோதனை செய்யப்படவில்லை

குறைகள்

 • செயற்கை நறுமணம்
 • பருக்கள் உடையலாம்

Buy Now From Amazon

9. Biotique Bio White Advanced Fairness Face Wash

Biotique Bio White Advanced Fairness Face Wash

ஜெல் பார்முலாவில் உருவாகியிருக்கிறது பையோட்டிக் நிறுவனத்தாரின் இந்த அட்வான்ஸ்ட் பேர்னஸ் பேஸ்வாஷ் . பைனாப்பிள் , தக்காளி, பப்பாளி மற்றும் எலுமிச்சை பழங்களின் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேஸ்வாஷ் உங்கள் சரும செல்களுக்கு புத்துயிர் ஊட்டுகிறது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளமையான முகம் என்றும் உங்கள் வசம்.

நிறைகள்

 • அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
 • இயற்கை பொருள்களால் உருவானது
 • மிருகங்கள் மீது சோதனை செய்யப்படவில்லை
 • சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது

குறைகள்

 • அடர்த்தியான நறுமணம்
 • சரும வறட்சி ஏற்படலாம்
 • பருக்கள் உடையலாம்

Buy Now From Amazon

10 Kaya Youth Oxy-Infusion Face Wash

Kaya Youth Oxy-Infusion Face Wash

சருமத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதன் மூலம் உடனடிப் பொலிவு தருவதாக இந்த பேஸ்வாஷ் நிறுவனம் வாக்களிக்கிறது. நமது சருமத்தை இளமையாக வைத்திருக்க காயாவின் இந்த பேஸ்வாஷ் செய்கிறது.

நிறைகள்

 • ஆக்சிஜன் இன்ஃப்யூஸ் செய்யப்பட்டது
 • கரும்புள்ளிகளை மறையச் செய்கிறது
 • பொலிவிழந்த முகத்தைப் ப்ரகாசமாக மாற்றுகிறது
 • சரும நிறக் குறைகளை சீர் செய்கிறது
 • தொடர்ந்து உபயோகித்தால் சருமத்தின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

11. Olay Face Wash White Radiance Brightening Foaming Cleanser

Olay Face Wash White Radiance Brightening Foaming Cleanser

ஒலெ நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் சருமத்தின் ஆழம் வரை சென்று அழுக்குகளை நீக்குகிறது. அதிகப்படியான எண்ணெயைப் போக்குகிறது. காஸ்மெடிக்ஸ் மூலம் ஏற்படுகின்றன பிசிறுகளை நீக்குகிறது. இதனால் முகம் ஈரப்பதம் குறையாமல் இருக்கிறது. நிறமும் பொலிவும் அதிகரிக்கிறது.

நிறைகள்

 • அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
 • தினமும் பயன்படுத்தலாம்
 • சருமம் வறண்டு போவதில்லை
 • பயணத்திற்கு ஏற்றது
 • கூடுதல் பார்முலாவால் சரும நிறம் மேம்படுகிறது.

குறைகள்

 • விலை அதிகம்
 • ரசாயனங்கள் அதிகமாக உள்ளன
 • செயற்கை நறுமணம் கொண்டது

Buy Now From Amazon

12. Revlon Touch and Glow Advanced Fairness Face Wash

Revlon Touch and Glow Advanced Fairness Face Wash

ரெவ்லான் நிறுவனத்தாரின் இந்த பேஸ்வாஷ் மற்றவைகளை விடத் தனித்துவமானது. தாவரங்களின் சேர்க்கையிவ் உருவானது. ஸோப்வார்ட் மற்றும் பியர்பேரி தாவரங்களின் மூலத்தில் இருந்து இது தயாராகிறது. மென்மையான முறையில் அழுக்குகளை நீக்கி பிரகாசமான முகத்தையும் சிவந்த நிறத்தையும் இது அளிக்கிறது

நிறைகள்

 • விட்டமின் ஈ ,சி, பி 5 அடங்கியது
 • ஸோப்வார்ட் மற்றும் பியர்பேரி அடங்கியது
 • சருமத்தின் இளமை தக்கவைக்கப்படுகிறது
 • சரும நிறம் மேம்படுகிறது
 • சருமத்துளைகளின் அளவு குறைகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

13. Jovees Clarifying Fairness Facewash with Grape

Jovees Clarifying Fairness Facewash with Grape

பச்சை திராட்சையின் நன்மைகள் கொண்டுள்ளது ஜோவீஸ் நிறுவனத்தின் இந்த பேஸ்வாஷ். இது சருமத்தின் நிறத்தை மேலும் சிவந்ததாக ஆக்குகிறது. மென்மையான முறையில் அழுக்குகளை நீக்குகிறது. சருமத்தின் ஒவ்வொரு செல்லும் புத்துயிர் பெறுகிறது.

நிறைகள்

 • விட்டமின் ஈ அடங்கியது
 • இயற்கை பொருள்களால் தயார் ஆனது
 • சரும சுருக்கங்களை நீக்குகிறது
 • ஆன்டி ஆக்சிடண்ட்கள் அடங்கியது
 • சருமம் முன்பை விட இளமையடைகிறது
 • சிவந்த அழகும் பொலிவும் மேம்படுகிறது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

14. Ayush Natural Fairness Saffron Face Wash

Ayush Natural Fairness Saffron Face Wash

இதன் பெயர் போதும், இதன் குணங்களைச் சொல்லி விடும். குங்குமப்பூ அடங்கிய இந்த பேஸ்வாஷ் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.குங்குமப்பூ மட்டும் இல்லாமல் குங்குமாதி தைலம் இதில் சேர்ந்துள்ளதால் நிறம் விரைவில் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான முறையில் உங்கள் சருமம் சிவக்க உதவுகிறது.

நிறைகள்

 • குங்குமப்பூ மற்றும் குங்குமாதி தைலம் அடங்கியது
 • 16 வகை மூலிகைகள் கொண்டுள்ளது
 • அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
 • தினமும் பயன்படுத்தலாம்
 • பயணத்திற்கு ஏற்றது
 • இயற்கையானது

குறைகள்

 • எதுவும் இல்லை

Buy Now From Amazon

பேஸ்வாஷ் எப்படிப் பயன்படுத்தினால் நல்லது

 • உங்கள் முகத்தில் நீர் படுமாறு கழுவவும்
 • சிறிதளவு பேஸ்வாஷ் எடுத்து உள்ளங்கைகளில் தடவவும்
 • பின்னர் முகத்தில் தடவி வட்டவடிமாக மசாஜ் செய்யவும்
 • 20 நொடிகளுக்கு பின்னர் முகம் கழுவவும்
 • சிறப்பான பொலிவான தோற்றம் கிடைக்க டவலால் ஈரத்தை ஒற்றி எடுக்கவும்

முடிவாக..

சரும நிறம் என்பது மரபணு காரணமாக ஏற்படலாம் அல்லது புறக்காரணங்களான தூசு, சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்று போன்ற பல காரணங்களாலும் சரும நிறம் மாறுபடலாம். உங்கள் சரும வகையை முதலில் சரிபார்த்து அதன் பின்னர் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

Was this article helpful?
scorecardresearch