சிறுநீர் பாதை தொற்றுக்கான வீட்டு வைத்தியம் – Home remedies for UTI in tamil

Written by StyleCraze

வரும் முன் காப்பதே சிறந்தது என்பார்கள். அப்படிப்பட்ட ஒன்றுக்கு உதாரணம் தான் இந்த சிறுநீர் பாதை தொற்று. இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பெண்கள் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று என கூட கூறலாம். காரணம், சிறுநீர் பாதை தொற்று உண்டாகும் பெண்களுக்கு அரிப்பு அதிகமாக காணப்படும்.

எதனால் சிறுநீர் பாதை தொற்று உண்டாகிறது?

 • சிறுநீர் கழித்து விட்டு சரியாக சுத்தம் செய்யாமல் விடுவதால்
 • நாப்கின்களை முறையாக மாற்றாமல் போவதால்
 • அரிப்பு ஏற்படும்போது நகங்களால் சொறிவதால்

சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறி தான் என்ன? (1)

 • சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல்
 • அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும் எண்ணம்
 • இரத்த வாடையுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம்
 • அடிவயிற்றில் வலி
 • காய்ச்சல்
 • பலவீனமாக உணர்தல்

சிறுநீர் பாதை தொற்றுக்கு என்ன தான் வீட்டு வைத்தியம்?

1. கிரான்பெர்ரி ஜூஸ்

என்னென்ன தேவை?

கிரான்பெர்ரி ஜூஸ் (இனிப்பு இல்லாதது)

என்ன செய்வது?

 1. தினமும் அரை டம்ளர் இந்த ஜூஸை குடித்து வரலாம்.
 2. ஒருவேளை தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தால், தினமும் 4 டம்ளர் இந்த ஜூஸை குடித்து வரலாம்.
 3. எந்த செயற்கை இனிப்பையும் சேர்க்க வேண்டாம்.

என்ன செய்யும்?

 • கிரான்பெர்ரியில் இருக்கும் ப்ரோ ஆந்தோசைனிடின், பாக்டீரியாவில் இருந்து உங்கள் சிறுநீர்ப்பை சுவற்றை பாதுகாக்கிறது (2)
 • இதில் இருக்கும் ஆன்டிபயாடிக், தொற்றுக்கு எதிராக போராடுகிறது

2. தண்ணீர்

என்னென்ன தேவை?

 • தண்ணீர்

என்ன செய்வது?

 1. தினமும் 6 டம்ளர் குடித்து வரலாம்

என்ன செய்யும்?

 • சிறுநீர் பாதை தொற்றுக்கு  சிறந்த நிவாரணி

3. ஆப்பிள் சிடர் வினிகர்

என்னென்ன தேவை?

 • ஆப்பிள் சிடர் வினிகர் – 2 டேபிள்ஸ்பூன்
 • தேன் – 1 டேபிள்ஸ்பூன்
 • எலுமிச்சை ஜூஸ் – அரை கப்
 • 1 கப் தண்ணீர்

என்ன செய்வது?

 1. ஆப்பிள் சிடர் வினிகருடன் எலுமிச்சை ஜூஸ், தேன், தண்ணீர் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் சாப்பிடவும்.

என்ன செய்யும்?

 • பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் சிறுநீர் நோய் தொற்றுக்கு நல்லது
 • ஆப்பிள் சிடர் வினிகர் கெட்ட பாக்டீரியாக்களை கொன்று, நல்ல பாக்டீரியாக்களை வளர செய்யும் (3)

4.பேக்கிங் சோடா

என்னென்ன தேவை?

 • பேக்கிங் சோடா – 1 டேபிள்ஸ்பூன்
 • தண்ணீர் – 1 டம்ளர்

என்ன செய்வது?

 1. தண்ணீரில் பேக்கிங் சோடா கலந்து குடிக்கவும்.

என்ன செய்யும்?

 • சிறுநீர் தொற்றுக்கு எதிராக போராடும்
 • சிறுநீர் போகும்போது ஏற்படும் வலியை குறைக்கும் (4)

5. தேயிலை மர எண்ணெய்

என்னென்ன தேவை?

 • தேயிலை மர எண்ணெய் – 10 சொட்டு
 • வெதுவெதுப்பான தண்ணீர் (குளியலுக்கு)

என்ன செய்வது?

 1. வெதுவெதுப்பான தண்ணீரில் தேயிலை மர எண்ணெய்யை கலந்துக்கொள்ளவும்.
 2. சில நிமிடங்களுக்கு அந்த தண்ணீரில் உடலை ஊற வைக்கவும்.

என்ன செய்யும்?

 • சிறுநீர் தொற்றை உண்டாக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் (5).

6. ப்ளூபெர்ரி ஜூஸ்

என்னென்ன தேவை?

 • ப்ளூபெர்ரி பழம் அல்லது ஜூஸ்

என்ன செய்வது?

 1. இந்த பழத்தை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.
 2. செயற்கையாக இனிப்பூட்டாமல் ஜூஸாக குடிக்கலாம்.

என்ன செய்யும்?

 • ப்ரோ ஆந்தோசைனிடின், பாக்டீரியாவுக்கு எதிராக போராடி சிறுநீர் தொற்று வராமல் தடுக்கும் (6)

7. வைட்டமின் – சி

என்னென்ன தேவை?

 • சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, ப்ரோக்கோலி போன்றவை

என்ன செய்வது?

 1. தினமும் வைட்டமின் – சி உணவை உண்ணலாம்.

என்ன செய்யும்?

 • தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொற்று குறையும்
 • சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை போக்கும் (7)

8. அன்னாசிப்பழம்

என்னென்ன தேவை?

 • 1 கப் அன்னாசி அல்லது அன்னாசி ஜூஸ்

என்ன செய்வது?

 1. தினமும் 1 கப் வெட்டிய அன்னாசிப்பழம் சாப்பிடலாம்.
 2. தினமும் அன்னாசிப்பழ ஜூசும் குடித்து வரலாம்.

என்ன செய்யும்?

 • சிறுநீர் தொற்றுக்கு டாக்டரால் பரிந்துரைக்கப்படும் மருந்துடன் அன்னாசியையும் சேர்த்து தொடர்ந்தால் விரைவில் குணமாகும் (8)

9. க்ரீன் டீ

என்னென்ன தேவை?

 • 1 க்ரீன் டீ பேக் (காஃபின் நீக்கிய காபி)
 • சுடுதண்ணீர் – 1 கப்

என்ன செய்வது?

 1. தினமும் காலையும், மாலையும் க்ரீன் டீ குடித்து வரலாம்.

என்ன செய்யும்?

 • பாக்டீரியாவை அழித்து சிறுநீர் தொற்றிலிருந்து காக்கும் (9)

10. லெமன் ஜூஸ்

என்னென்ன தேவை?

 • எலுமிச்சை சாறு – அரை டம்ளர்
 • சூடான தண்ணீர் – 1 கப்

என்ன செய்வது?

 1. தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

என்ன செய்யும்? 

 • உடம்பில் எந்த தொற்று இருந்தாலும் குணப்படுத்தும்
 • உடம்பில் உள்ள நச்சுக்களை நீக்கும் (10)

11. தேங்காய் எண்ணெய்

என்னென்ன தேவை?

 • சுத்தமான தேங்காய் எண்ணெய்

என்ன செய்வது?

 1. இரண்டு முதல் மூன்று டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை தினமும் எடுத்துக்கொண்டு வரவும்.

என்ன செய்யும்? 

 • தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலம் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்ற கிருமிக்கு எதிராக போராடும்
 • தினமும் எடுத்துக்கொண்டு வர, சிறுநீர் பாதை தொற்றை சரி செய்யும் (11)

12. பூண்டு

என்னென்ன தேவை?

 • பூண்டு – 3 பல்
 • தளர்வான துணி (மருத்துவர்கள் பயன்படுத்துவது)

என்ன செய்வது?

 1. பூண்டை உரித்து, மருத்துவர்கள் பயன்படுத்தும் துணிக்கொண்டு இறுக்கமாக கட்ட வேண்டும்.
 2. அதனை பிறப்புறுப்பில் ஒருமுனையை விட்டுக்கொள்ள வேண்டும்.
 3. இவ்வாறு 2 முதல் 3 மணி நேரம் வைத்திருக்கவும்.
 4. பிறகு நீக்கிவிட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பிறகு நன்றாக துடைக்கவும்.

என்ன செய்யும்?

 • இவ்வாறு செய்யும்போது பாக்டீரியாக்களை கொல்கிறது  (12)

13. தயிர்

என்னென்ன தேவை?

 • சுத்தமான தயிர் (சுவைக்கு மற்றும் இனிப்புக்கு எதுவும் சேர்க்கப்படாதது)

என்ன செய்வது?

 1. சாப்பாட்டிற்கு பிறகு ஒரு கப் தயிர் சாப்பிட்டு வரலாம்.

என்ன செய்யும்? 

 • உங்கள் குடல் மற்றும் சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
 • கெட்ட பாக்டீரியாவை கொன்று, நல்ல பாக்டீரியா வளர உதவும் (13)

14. பார்ஸ்லி டீ

என்னென்ன தேவை?

 • பார்ஸ்லி இலை – 2 கொத்து (கொத்தமல்லி போன்று இருக்கும்)
 • தண்ணீர் – 4 கப்

என்ன செய்வது?

 1. இந்த இலைகளை நன்றாக அரிந்து தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
 2. பதினைந்து நிமிடங்கள் கழித்து, வடிக்கட்டி குடிக்கவும்.

என்ன செய்யும்?

 • அலெர்ஜிக்கு நல்லது
 • பாக்டீரியாவை கொல்ல உதவும் (14)

15. கோல்டன்சீல்

என்னென்ன தேவை?

 • கோல்டன் கேப்சூல் மாத்திரை

என்ன செய்வது?

 1. இந்த மாத்திரை மருந்து கடைகளில் கிடைக்கும்.
 2. மருத்துவரிடம் பரிந்துரை பெற்று எடுத்துக்கொள்ளலாம்.
 3. தினமும் ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

என்ன செய்யும்? 

 • பெர்பெரின் எனப்படும் மூலப்பொருள் இதில் இருப்பதால் சிறுநீர் நோய் தொற்றுக்கு எதிராக போராடுகிறது (15)

16. பியர்பெர்ரி (உவா ஊர்சி)

என்னென்ன தேவை?

 • பியர்பெர்ரி இலைகள் (காய்ந்தது)
 • டீ

என்ன செய்வது?

 1. இரவு முழுவதும் இந்த காய்ந்த இலையை ஊறவைத்து கொள்ளவும்.
 2. டீ தூளுடன் இதையும் சேர்த்து கலந்து தினமும் பருகி வரலாம்.

என்ன செய்யும்? 

 • சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தும்
 • கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் (16)

17. டி’ மனோஸ்

 • கிரான்பெர்ரி ஜூஸில் இருக்கும் ஒரு வித மூலப்பொருள் இது
 • இதற்கு சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தும் பண்புண்டு
 • இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை
 • பாக்டீரியாவை அழிக்கும் பண்பும் இதற்கு உண்டு

18. பிக்கோ – சில்வர் கரைசல்

 • சில்வர், தொற்றை போக்க உதவுகிறது
 • இது சிறுநீர் பாதையில் இருக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது
 • தொற்று போகும் வரை தினமும் 2-4 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்

19. நெல்லிக்காய்

 • நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது
 • இது சிறுநீர்ப்பை சம்பந்தமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது (17)

20. கிராம்பு எண்ணெய்

என்னென்ன தேவை?

 • கிராம்பு எண்ணெய்

என்ன செய்வது?

 1. தினமும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வரலாம்.

என்ன செய்யும்?

 • கிராம்பு எண்ணெய், சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தும் (18)

சிறுநீர் பாதை தொற்றை கண்டுக்கொள்ளாமல் விட்டால் என்ன ஆகும்?

 • கண்டுகொள்ளாமல் விட்டால் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது
 • சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும்
 • குறைப்பிரசவத்துக்கு வாய்ப்புள்ளது
 • மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்

சிறுநீர் பாதை தொற்றை தடுப்பது எப்படி?

 • தண்ணீர், நீர் ஆகாரம் அதிகம் குடிக்க வேண்டும்
 • சிறுநீர் கழித்துவிட்டு முன்புறம் முதல் பின்புறம் வரை  நன்றாக துடைக்க வேண்டும்
 • பாதிப்பு அல்லது எரிச்சலை ஏற்படுத்தும் அந்தரங்க பொருட்களை தவிர்க்க வேண்டும் (ஸ்ப்ரே, பவுடர் போன்றவை)

ஒட்டுமொத்தத்தில்,

சிறுநீர் பாதை தொற்று வராமல் எவ்வளவு சுத்தமும், சுகாதாரமுமாக பெண்களால் இருக்க முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பல வீட்டு வைத்தியங்களில் ஏதாவது ஒன்றை முயன்று சிறுநீர் பாதை தொற்றுக்கு குட்பை சொல்லுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

சிறுநீர் பாதை தொற்று எப்படிப்பட்டது?

சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீரில் பாக்டீரியாக்கள் சேர்ந்து தொற்றை ஏற்படுத்துவதாகும். இந்த பாக்டீரியாக்கள் சிறுநீர் பையில் தங்கி தாக்கத்தை உண்டாக்குகிறது.

சிறுநீர் பாதை தொற்றுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் எது?

 • காரமான உணவுகள்
 • அசிடிக் அமிலம் அடங்கிய பழங்கள்
 • செயற்கையான இனிப்புகள்

சிறுநீர் பாதை தொற்று எப்போது சிறுநீரகத்தை பாதிக்கும்?

ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம், இல்லையேல் சிறுநீரகத்தை பாதிக்கும்.

சிறுநீர் பாதை தொற்று சரியாக எவ்வளவு நாட்கள் ஆகலாம்?

பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்று குணப்படுத்தக்கூடியதே. சிறுநீர்பையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு பிறகு 24 முதல் 48 மணி நேரத்தில் சரியாக வாய்ப்புள்ளது. சிறுநீரகத்தை தாக்கும்போது 1 வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம்.

இறுக்கமான பேன்ட் அணிவதால் சிறுநீர் பாதை தொற்று உண்டாகுமா?

இறுக்கமான பேன்ட் அணியும்போது அந்த இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் ஈரம் ஆகும். அப்போது  சிறுநீர் பாதை தொற்று மீண்டும் மீண்டும் வர வாய்ப்புள்ளது.

சோடா குடிப்பதால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுமா?

சிட்ரஸ் சுவைக்கொண்ட சோடா & காப்பி தேயிலை நச்சுக்கொண்ட சோடா பருகும்போது சிறுநீர் பாதை தொற்றை மோசமாக்கும்.

சிறுநீர் பாதைத்தொற்று தானாக சரியாக வாய்ப்புண்டா?

சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிரமாக மாறும்.

யு.டி.ஐ எவ்வளவு காலம் நீடிக்கும்?

பெரும்பாலான சிறுநீர் பாதை தொற்று குணப்படுத்தக்கூடியதே. சிறுநீர்பையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு பிறகு 24 முதல் 48 மணி நேரத்தில் சரியாக வாய்ப்புள்ளது. சிறுநீரகத்தை தாக்கும்போது 1 வாரம் அல்லது அதற்கு மேல் கூட ஆகலாம்.

தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் பாதை தொற்று சரியாகுமா?

அதிகம் தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் மூலமாக கிருமி வெளியேறக்கூடும்.

சிறுநீர் பாதை தொற்றுக்கு எப்போது மருத்துவர் அவசியம்?

அறிகுறியை கண்டதுமே மருத்துவரின் ஆலோசனையை பெற்று விட முயல்வது நல்லது.

Sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
The following two tabs change content below.