வறண்டு போன தேகத்தை மினுமினுப்பாக்கும் 10 சோப் வகைகள்

வறண்ட சருமத்தைப் பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியம்தான். குளிர்காலங்களை விட்டு விடுங்கள். அந்த நேரங்களில் பெரும்பாலானவர்களின் சருமம் வறண்டு விடுவது சகஜம்தான். ஆனால் வெயில் காலங்களில் கூட சருமம் வறண்டு தோல் தடிமனாக மாறி ஆங்காங்கே திட்டுத் திட்டாக கரிசல் காட்டு நிலம் போல உங்கள் சருமமும் விரிசல் விடுகிறதா? அப்படியெனில் நீங்கள் இந்தக் கட்டுரையை முழுமையாகப் பார்க்கவும்.
பொதுவாக சருமம் வறண்டு போவதற்கு நாம் போடும் சோப் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வெந்நீரும் சோப்பும் சருமத்தில் சேரும்போது சில ரசாயன மாற்றங்களால் உடலின் ஈரப்பதத்தை அவை உறிஞ்சிக் கொள்கின்றன. அதற்காக சோப் என்றாலே சருமம் வறண்டு விடும் என்று பயப்பட வேண்டாம்.
உங்கள் சரும வகைக்குப் பொருத்தமான சோப் வகைகளை இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்துங்கள். சருமம் மாய்ச்சுரைஸைர் தேவையின்றி ஈரப்பதமுடன் இருப்பதை அனுபவியுங்கள்.
1. Medimix Ayurvedic Classic 18 Herbs Soap
அதிமதுரம், காட்டுத் தேன், கசகசா போன்ற 18 இயற்கையான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப் மெடிமிக்ஸ். இதனால் வறண்ட சருமத்தினருக்கு அவசியமான ஈரப்பதம் கிடைக்கிறது.
நிறைகள்
- 18 மூலிகைகள் நிறைந்தது
- சருமத்தின் மிருதுத்தன்மையை அதிகரிக்கிறது
- வியர்க்குருவை விரட்டுகிறது
- உடல் நாற்றத்தை நீக்குகிறது
- ஆயுர்வேதக் குளியலுக்கு நிகரானது
குறைகள்
- எதுவும் இல்லை
2. Dove Cream Beauty Bathing Bar
வறண்ட சருமத்தினருக்கான வரப்பிரசாதமாக விற்பனைக்கு வந்ததுதான் டவ் நிறுவனத்தாரின் சோப் வகைகள். இந்த நிறுவனத்தாரின் எந்த சோப் வகையை வேண்டுமானாலும் வறண்ட சருமத்தினர் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு அதிகமான மிருதுத் தன்மை மற்றும் ஈரப்பதத்தை தன்னுள்ளே கொண்டது டவ்.
நிறைகள்
- மாய்ச்சுரைசர் சேர்க்கப்பட்ட சோப்
- 1/4 பாகம் க்ரீம் மற்றும் க்ளென்சர்கள் இணைந்தது
- இதனால் சருமம் சுத்தமாகவும் மிருதுவாகவும் மாறுகிறது
- சருமப் பளபளப்பு கூடுகிறது
- அனுதினமும் பயன்படுத்தலாம்
குறைகள்
- எதுவும் இல்லை
3. NIVEA Soap, Crème Care, For Hands and Body
நிவியா நிறுவனத்தினர் சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும் வகையிலும் வறண்ட சருமத்தை அதிக மாய்ச்சுரைசிங் செய்யும்படியான ஒரு சோப் அறிமுகப்படுத்தி உள்ளனர். சருமத்தின் வறட்சியை நீக்கும் இந்த சோப் வறண்ட சருமத்தினருக்கு ஆகச் சிறந்த பரிசு எனலாம்.
நிறைகள்
- Ph சமநிலை கொண்டது
- அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- 75% TFM கொண்டுள்ளது
குறைகள்
- எதுவும் இல்லை
4. Medimix Ayurvedic Natural Glycerine Bathing Bar
மெடிமிக்ஸ் நிறுவனம் க்ளிசரினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப் தான் மேற்கண்ட சோப். இது முந்தைய சோப் போலவே ஆயுர்வேத மூலிகைகளை கொண்டிருந்தாலும் அதனை விட வேகமான முறையில் தீர்வளிப்பதாக மெடிமிக்ஸ் நிறுவனம் வாக்களிக்கிறது.
நிறைகள்
- சைவ முறையில் தயாரிக்கப்பட்டது
- மிருக வதை செய்யப்படவில்லை
- ஆயுர்வேதம் அடங்கியது
- கிளிசரினை அடிப்படையாக கொண்டது
- மென்மையான வாசனை கொண்டது
குறைகள்
- எதுவும் இல்லை
5. Dettol Skincare Soap
டெட்டால் பொதுவாக கிருமிகளைத் தானே அழிக்கும் வறண்ட சருமத்தை எப்படிக் காப்பாற்றும் என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா.. எனக்கும் இருந்தது. ஆனால் மாய்ஸ்சுரைஸர் சேர்க்கப்பட்ட டெட்டால் சோப் எனத் தெரிந்ததும் சந்தோஷமானது.
நிறைகள்
- மாய்ச்சுரைஸர் நிறைந்தது
- கிருமிகளைக் கொள்கிறது
- பாலும் ரோஜாப்பூவும் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது
- சரும நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
குறைகள்
- எதுவும் இல்லை
6. Lever Ayush Purifying Turmeric Soap
பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்கள் மஞ்சள் பூசுவது என்பது சிரமமான காரியம். காரணம் சருமத்தின் வெடிப்புகளில் மஞ்சள் பட்டால் சருமம் எரிச்சல் அடையும். ஆனால் லீவர் ஆயுஷ் நிறுவனத்தாரின் இந்த சோப் மஞ்சள் மற்றும் நல்பமராதி தைலத்தின் நன்மைகளுடன் வெளிவருகிறது என்பதால் சருமம் ஈரப்பதமுடன் பளபளப்பாகவும் மாறுகிறது.
நிறைகள்
- மஞ்சளின் நற்குணங்கள் கொண்டது
- நல்பமராதி தைலத்தை மூலப்பொருளாகக் கொண்டது
- நல்பமராதி தைலம் எண்ணெய் வகையைச் சார்ந்தது
- நல்பமராதி தைலம் உடலின் காயங்களையும் ஆற்றுப்படுத்துகிறது
- நல்பமராதி உடலுக்குப் பளபளப்பைத் தருகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. The Body Shop Shea Soap
நீண்ட காலமாக வறண்ட சருமம் கொண்டவர்கள் கூட இந்த ஷியா பட்டர் சோப் பயன்படுத்துவதன் மூல உடனடி ஈரப்பதம் மற்றும் மிருதுவான சருமம் பெறுகிறார்கள். வறண்ட சருமத்தினருக்கான சிறந்த தீர்வு என்றால் அது இந்த சோப் தான்.
நிறைகள்
- ஷியா வெண்ணெயின் நற்குணங்கள் நிறைந்தது
- முதல் பயன்பாட்டிலேயே சரும வறட்சி நீங்குகிறது
- மிருகங்களின் கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை
- SLS இல்லை
- மென்மையான நறுமணம் கொண்டது
குறைகள்
- எதுவும் இல்லை
8. Cetaphil Cleansing And Moisturising Syndet Bar
சரும நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படும் இந்த சோப் வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் பயன்படுத்த ஏற்றது. இந்த சோப் உங்கள் சருமத்தை ஈரப்பதமுடன் வைக்கிறது. சருமத்திற்கு வறட்சி அல்லது எரிச்சலை இது ஏற்படுத்துவதில்லை.
நிறைகள்
- சோப் இல்லை
- டிடர்ஜென்ட் இல்லை
- குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்
- அந்த அளவு மென்மையானது
- Ph சமநிலை கொண்டது
- சரும நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவது
குறைகள்
- எதுவும் இல்லை
9. Pears Naturalé Pomegranate Brightening Bathing Soap Bar
மாதுளம்பழத்தின் நற்குணங்கள் அடங்கிய இந்த பியர்ஸ் சோப் வறண்ட சருமத்தினருக்கு பயனுள்ள வகையில் உருவாகி இருக்கிறது. மாதுளம்பழம் முகத்தின் அழகு மற்றும் பளபளப்பிற்கு பயன்படுவது என்பதால் இதன் அடிப்படையில் உருவாகி உள்ள இந்த சோப் உங்க குளியல் அனுபவத்தை அற்புதமானதாக மாற்றுகிறது.
நிறைகள்
- 100 சதவிகிதம் இயற்கைப் பொருள்களால் உருவானது
- 100 சதவிகிதம் மாதுளம்பழத்தின் நன்மைகள் நிறைந்தது
- சருமத்திற்கு இதமானது மற்றும் மிக மென்மையானது
- பேரபின் இல்லை
- கிளிசரின் அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
10. Pears Soft and Fresh Bathing Bar
கிளிசரின் என்பது உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் ஒரு மூலப்பொருள். இதனை பல சோப்களில் பார்த்திருந்தாலும் பியர்ஸ் சோப்பில் கிளிசரின் தான் மூலப்பொருளே என்பதாலேயே வறண்ட சருமத்தினருக்கு இந்த சோப் பயனுள்ளதாக இருக்கிறது.
நிறைகள்
- கிளிசரின் உள்ளது
- புதினா சாறு புத்துணர்ச்சி தருகிறது
- இயற்கை எண்ணெய்கள் இதில் உள்ளன
- மேலும் சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிற ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
குறைகள்
- வறண்ட சென்சிடிவ் சருமத்தினருக்கு பாதுகாப்பானது அல்ல

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
