பட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா.. வறண்ட சருமத்திற்கான சிறந்த முகக் க்ரீம் வகைகள்

வறண்ட சருமத்தின் சிரமங்களை சொல்லி தீராது எனலாம். அந்த அளவிற்கு எந்த வானிலையாக இருந்தாலும் நம்மை பல்வேறு துன்பத்திற்கு ஆளாக்கும் சருமம் தான் வறண்ட சருமம். அதன் சிரமங்களை தீர்க்க நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், தகுந்த க்ரீமைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வறண்ட சருமம் மிகவும் கடுமையானதாக இருக்கும், குறிப்பாக குளிர்காலத்தில் சருமத்தில் தென்படும் மிகவும் உலர்ந்த திட்டுகள், உதிரும் செல்கள் மற்றும் உணர்திறன் கொண்ட சருமம் அனைத்தும் நம்மை சிரமப்படுத்தும்.
வறண்ட சருமம் என்றால் சருமத்தில் நீங்கள் பூசும் தயாரிப்புகள் குறித்து மிகவும் கவனமாக இருப்பது முக்கியம், மேலும் தவறான க்ரீம்கள் சரும வறட்சியை அதிகரிக்கும் மற்றும் உங்கள் சருமத்தை மேலும் எரிச்சலடையச் செய்யும் என்பதால் அவற்றில் உள்ள மூலப் பொருட்கள் குறித்து கவனமாக இருங்கள்.
1. NIVEA Soft, Light Moisturising Cream
வறண்ட சருமம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நிவியா க்ரீம் தான். மிருதுவான சருமத்தை வழங்க இந்த க்ரீமில் விட்டமின் ஈ மற்றும் ஜோஜோபா எண்ணெயத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஸ்பெஷல் க்ரீம். சருமத்தால் உடனடியாக உள்ளே உறிஞ்சப்படுகிறது.
நிறைகள்
- விட்டமின் ஈ ஆயில் உள்ளது
- ஜோஜோபா எண்ணெய் உள்ளது
- பிசுபிசுப்பற்றது
- சருமத்தால் உடனடியாக உறிஞ்சப்படுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
2. Pond’s Light Moisturiser
பாண்ட்ஸ் நிறுவனத்தாரின் இந்த மாய்ச்சுரைஸிங் க்ரீமானது எண்ணெயற்ற பார்முலாவால் தயாரிக்கப்பட்டது. இது சருமத்தில் பிசுபிசுப்பு தன்மையை ஏற்படுத்தாது. மற்றும் எல்லாவிதமான பருவ நிலைக்கும் ஏற்றது.
நிறைகள்
- லேசானது
- பிசுபிசுப்பற்றது
- எல்லாப் பருவ நிலைக்கும் ஏற்றது
- முகம் மட்டுமல்லாமல் உடல் முழுதும் பயன்படுத்தலாம்,
- 24 மணிநேரம் ஈரப்பதம் லாக் செய்யப்படுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
3. Biotique Bio Wheat Germ FIRMING FACE and BODY NIGHT CREAM
அங்கூரிட் கெஹுன் (ட்ரிட்டிகம் ஸ்டிவம்), கஜார் (டாக்கஸ் கரோட்டா), பாதம் வால் (ப்ரூனஸ் அமிக்டலஸ்), குலஞ்சன் (அல்பீனியா கலங்கல்), சூரஜ்முகி வால் (ஹெலியான்தஸ் அன்யூஸ்), கிரீம் பேஸ் போன்ற இயற்கை மூலப்பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்டது இந்த க்ரீம். இரவு நேர க்ரீமாக இருப்பது இதன் சிறப்பம்சம்.
நிறைகள்
- கோதுமைக்கிருமி எண்ணெயின் நன்மைகள் வாய்ந்தது
- சாதாரண சருமத்தில் இருந்து வறண்ட சருமம் வரை பயன்படுத்தலாம்
- இரவு நேர க்ரீம் என்பதால் பலன்கள் இரட்டிப்பாகும்
- ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது
குறைகள்
- எதுவும் இல்லை
4. Lakme Soft Creme
பீச் மற்றும் பாலின் நன்மை உட்செலுத்தப்பட்டுள்ளது. இந்த லேசான மாய்ஸ்சரைசர் ஒரு இனிமையான மணம் கொண்டது. ஒளிரும் சருமத்திற்கான இந்த க்ரீமானது 24 மணி நேரம் ஈரப்பதத்தை லாக் செய்கிறது. இதில் spf சேர்க்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
நிறைகள்
- 24 மணி நேரம் ஈரப்பதத்தை லாக் செய்கிறது
- பீச் பழம் மற்றும் பாலின் நன்மைகள் கொண்டது
- ஊட்டசத்துடன் SPF பாதுகாப்பும் கொண்டுள்ளது
- உடனடி பொலிவு கிடைக்கிறது
குறைகள்
- எதுவும் இல்லை
5. Himalaya Nourishing Skin Cream
இதில் குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க கற்றாழை மற்றும் வின்டர் செரி அடங்கி இருக்கிறது. சருமத்தில் லேசாகவும் ஆழமாகவும் பரவும் இந்த க்ரீம் நாள் முழுதும் உங்கள் சருமத்தை பிசுபிசுப்பின்றி வைத்திருக்கிறது.
நிறைகள்
- கற்றாழையின் நன்மைகள் அடங்கியது
- வின்டர் செரியின் நன்மைகள் அடங்கியது
- லேசானது
- பிசுபிசுப்பற்றது
- இரவு நேரக் க்ரீம் என்பதால் பலன் இரட்டிப்பாகும்
குறைகள்
- எதுவும் இல்லை
6. Lotus Herbals Nutramoist Skin Renewal Daily Moisturising Creme
இந்த க்ரீமில் திராட்சையில் இருந்து வரும் ஆல்பா ஹைட்ராக்ஸி பழ அமிலம் இயற்கை ஆக்ஸிஜனேற்ற, அஸ்ட்ரிஜென்ட் மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற மூலப்பொருள்கள் அடங்கி உள்ளது. இதன் பிசுபிசுப்பற்ற தன்மை நாள் முழுதும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது
நிறைகள்
- பிசுபிசுப்பு இல்லை
- லேசானது
- அனைத்து விதமான சருமவகைக்கும் ஏற்றது
- பெண்களுக்கான கிரீம்
குறைகள்
- எதுவும் இல்லை
7. Cetaphil Moisturising Cream
செட்டாஃபில் ஈரப்பதமூட்டும் கிரீம் ஒரு உயர் ரக மாய்ஸ்சரைசர் ஆகும், இது தீவிரமான ஈரப்பதத்தை அளிக்கிறது மற்றும் உலர்ந்த, உணர்திறன் வாய்ந்த சருமத்தை ஈரப்பதம் கொண்டு நிரப்புகிறது. இந்த கிரீம் ஒரு தனித்துவமான பார்முலாவை கொண்டுள்ளது, இது சருமத்தில் தண்ணீரை இணைக்கிறது, இது உடனடி மற்றும் நீண்டகால நிவாரணத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உலர்ந்த உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர் இதுதான்.
நிறைகள்
- உணர்திறன் வாய்ந்த தோலில் மென்மையானது
- சருமத்தால் விரைவாக உறிஞ்சப்படுகிறது
- செயற்கை மணம் இல்லாதது
- தோல் மருத்துவர்கள் பரிந்துரைப்பது
- ஒவ்வாமை கொண்ட சருமங்களுக்கு ஏற்றது
- பிசுபிசுப்பற்றது
குறைகள்
8. Mamaearth Anti-Pollution Daily Face Cream for Dry & Oily Skin with Turmeric
சருமம் ஈர்ப்பதாகவும் மென்மையாகவும் இருக்க மம்மா எர்த் சிறப்பான எண்ணெயற்ற பார்முலாவுடன் வெளிவருகிறது. ப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக அது செயல்படுகிறது. மஞ்சள் , கேரட் விதை , டெய்சி மலரின் நன்மைகளுடன் பொல்யூ ஸ்டாப் எனப்படும் மூலப்பொருள்கள் கொண்டது.
நிறைகள்
- சரும செல்களின் சேதத்தை தவிர்க்கிறது
- சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது
- ஆன்டிஆக்சிடென்ட்கள் அடங்கியது
- ப்ரீ ரேடிகள் சேதத்தை குறைக்கிறது
- சருமத்திசுக்களை மென்மையாக்குகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
9. Biotique Bio Quince Seed Nourishing Face Massage Cream For Normal To Dry Skin
சருமத்தை மென்மையாக்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் கொண்ட குவின்ஸ் விதைகள் அடங்கியது. இது சருமத்தை புத்தம் புதிய குழந்தை சருமம் போல மென்மையாக மாற்றுகிறது. மேலும் விட்டமின் ஈ எண்ணெயின் நன்மைகள் கொண்டது.
நிறைகள்
- பாரம்பர்யம் மற்றும் நவீனம் இரண்டும் சேர்ந்த கலவை
- சாதாரண சருமம் மற்றும் வறண்ட சருமத்தினருக்கானது
- குவின்ஸ் விதை நன்மைகள் கொண்டது
- விட்டமின் ஈ எண்ணெய் கொண்டது
- ஆண் பெண் இருவருக்குமானது
குறைகள்
- எதுவும் இல்லை
10. Olay Night Cream Regenerist Deep Hydration Light Cream
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் தோற்றத்தை மேம்படுத்தவும் இந்த க்ரீம் உதவுகிறது. மேலும் சருமத்தின் வயதாகும் தன்மையில் இருந்து காப்பாற்றுகிறது. முதுமை சுருக்கங்களை நீக்குகிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது.
நிறைகள்
- அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
- பெண்களுக்கு மட்டுமானது
- சருமத்திற்கு புத்துயிர் தருகிறது
- இரவு நேர க்ரீம் என்பதால் பலன் இரட்டிப்பாகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
11. Venusia Max Intensive Moisturizing Cream For Dry Skin To Very Dry Skin
பொதுவாக வறண்ட சருமம் மட்டுமல்லாது மிக வறண்ட சருமமும் இருக்கிறது. அதற்கு கூடுதல் பாதுகாப்பு தேவை. அதனை வழங்கும் க்ரீமாக இந்த க்ரீம் பார்க்கப்படுகிறது. இது சருமத்திற்கு உடனடி ஈரப்பதத்தை கொடுக்கிறது. ஈரப்பதம் இழந்து விடாமல் பாதுகாக்கிறது.
நிறைகள்
- கிளிசரின் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதம் கொடுக்கிறது
- டைமெத்திக்கோன் ஈரப்பதத்தை லாக் செய்கிறது
- 3 விதமாக வேலை செய்கிறது
- சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
வறண்ட சருமத்திற்கு எப்படி க்ரீம் தடவுவது
- முதலில் முகத்தை மென்மையான நிறமற்ற க்ளென்சர் கொண்டு சுத்தம் செய்யவும்.
- அழுக்கு மற்றும் எண்ணெயை அகற்ற போதுமான க்ளென்சரைப் பயன்படுத்துங்கள்,
- முகத்தை ஒரு துணியால் துடைத்து ஈரத்தை எடுக்கவும்
- வறண்ட சருமம் கொண்டவர்கள் எப்போதும் குளித்த உடன் க்ரீம் தடவவும்
- இரவு உறங்கப் போகும் முன்னரும் க்ரீம் தடவவும்
- அதிகமான வாசனை கொண்ட லோஷன்களைத் தவிர்க்கவும்
- சரும வகைக்குத் தகுந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தவும்
இறுதியாக
மேலே சொன்ன குறிப்புகளை கொண்டு உங்கள் சருமத்தின் தேவையை உணர்ந்து அதற்கேற்ற ஒரு முகக் கிரீமினை தேர்ந்தெடுக்கவும். பின் பயன்படுத்தும் குறிப்புகளை பின்பற்றி உங்கள் முகத்தை பராமரிக்கவும். அழகான பட்டுப் போன்ற மென்மையான முகம் உங்கள் வசமாக என் வாழ்த்துக்கள்.

Latest posts by Deepa Lakshmi (see all)
- கருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020
- பொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக ! - October 6, 2020
- மணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020
- உங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா ! மேலும் படியுங்கள் - October 1, 2020
- இறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் ! - September 30, 2020
