வயிறு உப்புச பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம் – Home remedies for bloating in tamil

by StyleCraze

வயிறு உப்புசம் என்றால் என்ன?

ஒரு சிலருக்கு வயிறு உப்பியது போல இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? நம் வயிற்றில் இருக்கும் திசுக்கள் வீங்கி உப்பி காணப்படும். ஒரு பலூனை வயிற்றில் கட்டி வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் உப்பி இருக்கும். உப்புசத்தின் தீவிரத்தை பொறுத்தே இப்பிரச்சனை இருக்கக்கூடிய நாட்களும் அமையும்.

இவ்வாறு வயிறு உப்ப என்ன தான் காரணம்?

 • பீன்ஸ், காளிஃபிளவர், பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட குளிர்பானத்தை குடிக்கும்போது வயிறு உப்ப வாய்ப்புண்டு
 • செரிமான கோளாறு
 • சாப்பிடாமலே இருத்தல் அல்லது உணவுமுறையில் மாற்றம் செய்தல்
 • மலச்சிக்கல் பிரச்சனை இருத்தல்
 • ஆண்டாசிட், ஆஸ்பிரின், வலி நிவாரணி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்
 • வைட்டமின்கள், இரும்புச்சத்தை கூடுதலாக எடுத்துக்கொள்ளுதல்

வயிறு உப்புசத்தின் அறிகுறி என்னென்ன?

 • வாய்வு பிரச்சனை
 • வயிறு அடைத்து இருப்பதுபோல் உணர்தல்
 • வயிற்றுவலி
 • தொடர்ந்து ஏப்பம் விடுதல்
 • அடிவயிற்றில் சத்தம் வருதல்
 • காய்ச்சல்
 • குமட்டல் அல்லது வாந்தி எடுத்தல்
 • சோர்வடைதல்

என்னென்ன வீட்டு வைத்தியங்கள்?

1. டீ

a. பெப்பர்மிண்ட் டீ

தேவையானவை என்னென்ன?

 • 1 டீஸ்பூன் காய்ந்த மிளகுக்கீரை இலை
 • 1 கப் தண்ணீர்
 • தேன் (தேவைப்பட்டால்)

என்ன செய்வது?

 1. ஒரு கடாயில் வெந்நீர் சேர்த்து மிளகுக்கீரை இலையை கொதிக்கவிட வேண்டும்.
 2. 5 நிமிடம் இளம்கொதிநிலையில் வைத்து வடிகட்ட வேண்டும்.
 3. சுவைக்கு தேன் சேர்த்து சூடாக இருக்கும்போதே பருகுங்கள்.

எத்தனை முறை?

தினமும் மூன்று வேளை போட்டு குடிக்கலாம்.

என்ன செய்யும்?

 • செரிமான பிரச்சனையை சரி செய்யும்
 • வயிறு உப்பி இருப்பதையும் குறைக்கும்
 • வாயு பிரச்சனைக்கு நிவாரணம் தரும் (1)

b. சீமை சாமந்தி டீ

தேவையானவை என்னென்ன?

 • 1 முதல் 2 டீஸ்பூன் சீமை சாமந்தி
 • 1 கப் தண்ணீர்
 • தேன் (தேவைப்பட்டால்)

என்ன செய்வது?

 1. ஒரு கடாயில் வெந்நீர் சேர்த்து சீமை சாமந்தியை கொதிக்கவிட வேண்டும்.
 2. 5 முதல் 10 நிமிடங்கள் பொறுத்திருங்கள்.
 3. சுவைக்கு தேன் சேர்த்து வடிகட்டலாம்.
 4. ஆறவிடாமல் சூடாக இருக்கும்போதே பருகுங்கள்.

எத்தனை முறை?

தினமும் 2 அல்லது 3 வேளை போட்டு குடிக்கலாம்.

என்ன செய்யும்?

 • வயிற்றுப்புண்ணை சரி செய்யும்
 • அசதியை தரும்
 • வயிறு வீக்கத்தையும் குணப்படுத்தும் (2)

2. பெருஞ்சீரகம்

தேவையானவை என்னென்ன?

 • ½ முதல் 1 டீஸ்பூன் நசுக்கிய பெருஞ்சீரகம்
 • 1 கப் தண்ணீர்
 • தேன் (தேவைப்பட்டால்)

என்ன செய்வது?

 1. வெந்நீர் சேர்த்து பெருஞ்சீரகத்தை கொதிக்கவிட வேண்டும்.
 2. 5 முதல் 10 நிமிடங்கள் பொறுத்திருங்கள்.
 3. சுவைக்கு தேன் சேர்த்து வடிகட்டலாம்.
 4. இல்லாவிட்டால், ½ டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை தினமும் மெல்லலாம்.

எத்தனை முறை?

தினமும் 2 முதல் 3 முறை செய்யலாம்.

என்ன செய்யும்?

 • செரிமான கோளாறை சரி செய்யும்
 • வாயு பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும்
 • வயிறு உப்புசத்தையும் சரி செய்யும் (3)

3. பேக்கிங் சோடா

தேவையானவை என்னென்ன?

 • 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா
 • 1 டம்ளர் சுடு தண்ணீர்

என்ன செய்வது?

 1. 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சுடு தண்ணீரில் கலந்துக்கொள்ளவும்.
 2. இதனை பருகவும்.

எத்தனை முறை?

குறைந்தது தினமும் ஒருமுறை செய்யலாம்.

என்ன செய்யும்?

 • இதில் இருக்கும் ஆண்டாசிட், செரிமான கோளாறை சரி செய்யும்
 • வாயு பிரச்சனை நீங்கும், வயிறு உப்புசமும் சரியாகும் (4)

4. இஞ்சி

தேவையானவை என்னென்ன?

 • 1 இன்ச் இஞ்சி
 • 1 கப் தண்ணீர்
 • தேன் (தேவைப்பட்டால்)

என்ன செய்வது?

 1. கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி இஞ்சை சேர்த்துக்கொள்ளுங்கள்.
 2. அடுப்பில் 3 முதல் 5 நிமிடம் வைத்து கொதிக்கவிடுங்கள்.
 3. வடிகட்டி தினமும் பருகுங்கள்.
 4. சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை?

தினமும் 3 முறை செய்யலாம்.

என்ன செய்யும்?

 • தசைப்பிடிப்பை சரி செய்யும்
 • செரிமான கோளாறை சரி செய்யும்
 • வயிறு உப்புசத்தையும் சரி செய்யும் (5) (6)

5. பூசணிக்காய்

தேவையானவை என்னென்ன?

 • 1 கப் பூசணிக்காய் (நறுக்கியது)
 • 2 கப் தண்ணீர்

என்ன செய்வது?

 1. தண்ணீரில் பூசணிக்காயை வேகவிட வேண்டும்.
 2. இதை தினமும் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம்.
 3. இல்லையெனில், உங்கள் உணவோடு பூசணிக்காயையும் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை?

வயிறு வீக்கம் ஆறும் வரை

என்ன செய்யும்?

 • பூசணிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் வயிற்று வீக்கத்தை குறைக்க உதவும் (7)
 • நம் உடலில் இருக்கும் கூடுதல் சோடியத்தை வெளியேற்ற பொட்டாசியம் உதவும்

6. சூடான எலுமிச்சை தண்ணீர்

தேவையானவை என்னென்ன?

 • 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ்
 • 1 டம்ளர் சுடு தண்ணீர்

என்ன செய்வது?

 1. 1 டம்ளர் சுடு தண்ணீருடன் 1 டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்க்க வேண்டும்.
 2. வயிறு வீக்கம் குறையும் வரை தினமும் குடித்து வாருங்கள்.
 3. சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை?

தினமும் காலையில் 1 முறை

என்ன செய்யும்?

 • எலுமிச்சையில் மலத்தை இலகுவாக்கும் பண்புள்ளது. அதனால், வயிறு வீக்கத்தை குறைக்க உதவும் (8).

7. சீமைச்சோம்பு

தேவையானவை என்னென்ன?

 • 1 டீஸ்பூன் சீமைச்சோம்பு
 • 1 கப் சுடு தண்ணீர்
 • தேன் (தேவைப்பட்டால்)

என்ன செய்வது?

 1. சீமைச்சோம்புடன் ஒரு கப் சுடு தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.
 2. வடிகட்டி இந்த தண்ணீரை தினமும் குடியுங்கள்.
 3. சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை?

தினமும் 3 முறை

என்ன செய்யும்?

 • வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்ற உதவும் (9)
 • வயிறு வீங்கி இருப்பதை சரி செய்யும்

8. சோம்பு

தேவையானவை என்னென்ன?

 • 1 டீஸ்பூன் சோம்பு
 • 1 கப் சுடு தண்ணீர்
 • தேன் (தேவைப்பட்டால்)

என்ன செய்வது?

 1. சுடு தண்ணீரில் சோம்பை 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
 2. வடிகட்டி சூடாக பருகவும்.
 3. சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை?

தினமும் 2 முதல் 3 முறை

என்ன செய்யும்?

 • இதில் இருக்கும் ஆன்டிபாஸ்மோடிக் பண்புகள், செரிமானக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும்
 • வயிற்று வீக்கத்தையும் குணமாக்கும் (10)

9. வாழைப்பழம்

தேவையானவை என்னென்ன?

 • 1-2 வாழைப்பழம்

என்ன செய்வது?

 1. தினமும் உங்களுடைய உணவில் 1 அல்லது 2 வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.

எத்தனை முறை?

வயிறு வீக்கம் சரியாகும் வரை, தினமும்

என்ன செய்யும்?

 • வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு வீக்கத்தை சரிசெய்ய உதவும்
 • உடலில் இருக்கும் சோடியம் அளவை கட்டுப்படுத்தும் (11)

10. ஆப்பிள் சிடர் வினிகர்

தேவையானவை என்னென்ன?

 • 1 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்
 • 1 கப் சுடுதண்ணீர்
 • தேன் (தேவைப்பட்டால்)

என்ன செய்வது?

 1. ஆப்பிள் சிடர் வினிகரை சுடுதண்ணீரில் கலக்கவும்.
 2. தினமும் இதனை குடிக்கவும்.
 3. சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை?

தினமும் 1 முறை

என்ன செய்யும்?

 • இதில் இருக்கும் செரிமான பண்பு வயிறு உப்புசம் அடைவதை தவிர்க்க உதவும் (12)

11. விளக்கெண்ணெய்

தேவையானவை என்னென்ன?

 • 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய்
 • ஏதாவது ஒரு பழச்சாறு (1 கப்)

என்ன செய்வது?

 1. ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை 1 கப் பழச்சாறுடன் சேர்த்துக்கொள்ளவும்.
 2. ஆயில் நன்றாக சேர்ந்த பிறகு தினமும் எடுத்துக்கொள்ளவும்.
 3. இல்லை எனில், ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை தினமும் விழுங்கி வரலாம்.

எத்தனை முறை?

வயிறு வீங்கி இருப்பதாக நீங்கள் நினைக்கும்போதெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்.

என்ன செய்யும்?

 • மலச்சிக்கலை குணமாக்கும்
 • வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும் (13)

12. டட்டாக்ஸ் டிரிங்

தேவையானவை என்னென்ன?

 • 1 வெள்ளரிக்காய்
 • 1 எலுமிச்சை
 • 2 ஆப்பிள்

என்ன செய்வது?

 1. வெள்ளரிக்காய், எலுமிச்சை, ஆப்பிளை நன்றாக பிழிந்துக்கொள்ளவும்.
 2. உடனடியாக பருகவும்.

எத்தனை முறை?

வயிறு வீக்கம் குறையும் வரை தினமும் ஒரு முறை

என்ன செய்யும்?

 • வெள்ளரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்தும் டையூரிடிக் பண்புகளை கொண்ட எலுமிச்சையும் நார்ச்சத்தை கொண்ட ஆப்பிளும் மலச்சிக்கலை குணப்படுத்தும்
 • வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும் (14),(15),(16)

13. பெப்பர்மிண்ட் ஆயில்

தேவையானவை என்னென்ன?

 • 3 முதல் 4 சொட்டு பெப்பர்மிண்ட் ஆயில்
 • 2 டீஸ்பூன் கேரியர் ஆயில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

என்ன செய்வது?

 1. பெப்பர்மிண்ட் ஆயிலுடன் கேரியர் ஆயிலை மிக்ஸ் செய்யவும்.
 2. இதை வயிற்றில் தடவவும்.

எத்தனை முறை?

தினமும் ஒரு முறை

என்ன செய்யும்?

 • வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும்

14. க்ரீன்டீ

தேவையானவை என்னென்ன?

 • 1 டீஸ்பூன் க்ரீன்டீ இலை
 • 1 கப் சுடுதண்ணீர்
 • தேன்

என்ன செய்வது?

 1. க்ரீன்டீ இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
 2. அடுப்பில் 5 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
 3. வடிகட்டி தினமும் குடிக்கவும்.
 4. சுவைக்கு தேனும் சேர்த்துக்கொள்ளலாம்.

எத்தனை முறை?

தினமும் குறைந்தது 3 முறை

என்ன செய்யும்?

 • வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும்
 • சிறுநீர் பிரச்சனையை சரிசெய்யும்
 • வாயுத்தொல்லையை குறைக்கும் (17)

15. கற்றாழை ஜூஸ்

தேவையானவை என்னென்ன?

 • ¼ முதல் ½ கப் வரை கற்றாழை ஜூஸ்

என்ன செய்வது?

 1. தினமும் 1 முதல் 2 முறை ½ கப் குடித்து வரவும்.

என்ன செய்யும்?

 • அலெர்ஜி எதிர்ப்பு பண்பு இருப்பதால் வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும்
 • மலச்சிக்கலுக்கும் நல்லது (18)

16. தேங்காய் எண்ணெய்

தேவையானவை என்னென்ன?

 • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

என்ன செய்வது?

 1. தினமும் 1 முறை, நீங்கள் உண்ணும் உணவில் அல்லது ஜூஸில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

என்ன செய்யும்?

 • அலெர்ஜி எதிர்ப்பு பண்பு இருப்பதால் வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும்

17. தயிர்

தேவையானவை என்னென்ன?

 • 1 கப் சுத்தமான தயிர்

என்ன செய்வது?

 1. தினமும் ஒரு முறை, 1 கப் தயிர் சாப்பிடுங்கள்

என்ன செய்யும்?

 • ஆரோக்கியமான பாக்டீரியா வளர உதவும்
 • செரிமானத்தை மேம்படுத்தும்
 • வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும்

18அன்னாசி ஜூஸ்

தேவையானவை என்னென்ன?

 • 1 கப் அறுத்த அன்னாசி
 • 1 கப் தண்ணீர்

என்ன செய்வது?

 1. அறுத்த அன்னாசியை தண்ணீருடன் சேர்க்கவும்.
 2. தினமும் இந்த ஜூஸை குடிக்கவும்.

என்ன செய்யும்?

 • அலெர்ஜி எதிர்ப்பு பண்பு இருப்பதால் வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும்

19. ஆரஞ்சு ஜூஸ்

தேவையானவை என்னென்ன?

 • 1 – 2 ஆரஞ்சு
 • 1 கப் தண்ணீர்

என்ன செய்வது?

 1. உரித்த ஆரஞ்சு பழத்துடன் தண்ணீர் சேர்க்கவும்.
 2. தினமும் ஒரு முறை சாப்பிடுவதற்கு முன்பு, குடித்து வரவும்.

என்ன செய்யும்?

 • வயிறு உப்புசம் அடைவதை குறைக்கும்

வயிறு உப்புசம் அடையாமல் இருக்க என்ன சிகிச்சை?

 • ஹீட் பேடு பயன்படுத்தலாம்
 • லாக்செட்டிவ் எனப்படும் மலமிளக்கியை எடுத்துக்கொள்ளலாம்
 • கார்பனேற்றம் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே குடிக்கலாம்
 • வயிற்றை மசாஜ் செய்வது நல்லது

வயிறு வீங்கி இருக்கும்போது என்ன சாப்பிட வேண்டும்?

 • ஆரஞ்சு ஜூஸ்
 • அன்னாசி ஜூஸ்
 • தயிர்
 • கத்தாழை ஜூஸ்
 • க்ரீன் டீ
 • வாழைப்பழம்
 • சூடான லெமன் வாட்டர்

வயிறு வீங்கி இருக்கும்போது என்ன தவிர்க்க வேண்டும்?

 • முட்டைக்கோஸ்
 • பீன்ஸ்
 • குளிர்பானங்கள்
 • கோதுமை
 • பார்லி

மற்ற டிப்ஸ்

 • சாப்பிடும்போதும் நீர் ஆகாரம் பருகும்போதும் விழுங்காதீர்கள்
 •  வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்
 • தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
 • யோகாசனங்கள் செய்யலாம்
 • சோடியம் அதிகம் உள்ளதை குறைத்துக்கொள்வது நல்லது
 • பெப்பர்மிண்ட் சாப்பிடுங்கள்
 • தேவையற்ற மாத்திரைகளை தவிருங்கள்
 • புகைப்பிடித்தலை தவிருங்கள்
 • மது அருந்துதலை தவிருங்கள்

என்ன நண்பர்களே! இனிமேல் வயிறு உப்பிவிட்டது என கவலைப்பட மாட்டீர்கள் தானே. இவ்வளவு வீட்டு வைத்தியங்கள் உங்களுக்காக இருக்கும்போது எதற்காக வீண் கவலை! வயிற்று உப்புச பிரச்சனையை விரட்டுங்கள்! நிம்மதியான வாழ்க்கையை  வாழுங்கள்!

18 Sources

Was this article helpful?
scorecardresearch