சாதாரண வேப்பிலை நம் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உதவிகள் செய்கிறது தெரியுமா ! Benefits of Neem in tamil

by StyleCraze

நம் முன்னோர்கள் காலத்தில் ஏதாவது விஷ பூச்சி கடித்தால் உடனடியாக வேப்பிலையை மென்று பார்க்க சொல்வார்களாம். காரணம், கசப்பு தெரிந்தால் விஷம் ஏறவில்லை என அர்த்தமாம். அதேபோல உடல் எதிர்ப்புசக்தி குறைபாட்டுக்கு வேப்பிலை கசாயம் குடிக்க சொல்வார்கள் (Neem in Tamil). நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம் ஏது பேஸ்ட், பிரஷ்., எல்லாமே வேப்பங்குச்சி தான். அம்மை போட்டவர்களை வேப்பிலையில் படுக்க வைப்பதை பார்த்திருப்போம். இதற்கு காரணம், வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்பதாலே தான் .

வேப்பிலை எதற்கெல்லாம் உதவுகிறது – Neem Benefits in Tamil

1. பாக்டீரியாவை எதிர்க்கும்

 • வேப்பிலையில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
 • வேப்பிலை, உரத்தில் உள்ள நோய் கிருமிகளை கட்டுப்படுத்துகிறது (1)
 • வேப்பங்குச்சியில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதில் நுண்ணுயிரிகளை கொல்லும் பண்புள்ளது (2)
 • நம்முடைய பற்களுக்கு உறுதியை தந்து பாக்டீரியாவை கொல்கிறது (3)

2. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

 • வேம்பில் உள்ள குணங்கள் இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தும் (4)
 • இதில் உள்ள சாறு, இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்கிறது (5)

3. ஆஸ்துமாவை சரிசெய்யும்

 • வேம்பு எண்ணெய் ஆஸ்துமாவை சரிசெய்யும் குணம் கொண்டது
 • இது காய்ச்சல், கபம், இருமலையும் கட்டுப்படுத்தும்
 • தினமும் சில சொட்டு வேம்பு எண்ணெய்யை எடுத்துக்கொண்டு வாருங்கள். ஆஸ்துமாவிலிருந்து நிச்சயம் நிவாரணம் கிடைக்கும் (6).

4. அல்சருக்கு நல்ல மருந்து

 • வயிற்றுப்புண் மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வேப்பிலை நல்லது (7)
 • எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் இரைப்பை புண்களை குணப்படுத்தியதும் தெரிய வருகிறது
 • வேப்பிலையில் இருக்கும் நிம்பிடின் எனும் மூலப்பொருளில் அல்சருக்கு எதிரான பண்புள்ளது

5. ஷுகரை கட்டுப்படுத்தும்

 • வேப்பிலையில் உள்ள ஹைபோகிளைசெமிக், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
 • ஷுகரால் உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் வேம்பு தடுக்கலாம் (8)

6. வாய் பராமரிப்புக்கு உதவும்

 • ஈறுகளில் உண்டாகும் பிரச்சனைக்கு வேம்பு நல்லது
 • வாயில் தங்கும் பாக்டீரியாக்களை கொன்று பாதுகாக்கிறது
 • டூத் பேஸ்டுடன் வேம்பு எண்ணெய் சேர்த்து பயன்படுத்தும் போது வாய் துர்நாற்றம் நீங்கும்
 • ஈறில் உண்டாகும் அலெர்ஜி, சொத்தைப்பல், பற்குழி பிரச்சனைகளையும் வேம்பு தடுக்கும்
 • வேம்பில் ஆக்சிஜனேற்ற பண்பு இருப்பதால் பல் ஈறு மற்றும் தசைகளுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது

7. தொழுநோயை குணப்படுத்தும்

Shutterstock

 • எகிப்திய ஆய்வுப்படி, வேப்ப விதை தொழுநோயை குணப்படுத்தும் என தெரிய வருகிறது
 • வேம்பு விதையை மருத்துவரின் ஆலோசனை இன்றி நாமாக எடுத்துக்கொள்ள கூடாது, இதில் லேசான நச்சுத்தன்மை இருப்பது குறிப்பிடத்தக்கது

8. மலேரியாவை குணப்படுத்தும்

 • நைஜீரிய ஆய்வுப்படி, வேப்ப இலையை பிரித்தெடுக்கும்போது அதில் மலேரியாவை எதிர்க்கும் பண்பு இருப்பது தெரியவந்தது
 • இந்த சாறு, மலேரியாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் நோயை தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்

9. செரிமான சிக்கலை சரிசெய்யும்

 • வேம்பில் இருக்கும் பண்புகள், நம்முடைய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது
 • இதனை நாம் பவுடராகவோ நீர் ஆகாரமாகவோ எடுத்துக்கொள்ளலாம்
 • இதனால் செரிமான கோளாறுகள் சரியாகும்

10. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

 • வேப்பம்பூவை நம் உணவுடன் சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு நல்லது (9)
 • கிராமங்களில் வேப்பம் பூவை துவையலாக அரைத்து சாப்பிடுவர்

11. புற்று நோய்க்கு எதிராக போராடும்

 • வேப்ப இலை சாறில் கேன்சர் செல்களை அழிக்கும் பண்புள்ளது
 • இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
 • வேப்ப இலைகளில் கிளைக்கோ புரோட்டின் எனப்படும் மூலப்பொருள் இருப்பதால் நோய் எதிர்ப்பை வழங்குகிறது
 • வேம்பு, மார்பக புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கிறது

12. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும்

 • வேப்ப இலை சாறில் இரத்த கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பண்புள்ளது

13. சருமத்துக்கு நல்லது

 • பாக்டீரியாவால் உண்டாகும் பருக்களை போக்க வேம்பு நல்லது
 • இதில் இருக்கும் வைட்டமின் ஈ, சருமம் காய்ந்து போகாமல் பாதுகாக்கும்
 • கொதிக்க வைத்த வேப்ப இலை சரும நிறத்தை பாதுகாக்க உதவுகிறது
 • சருமத்தில் வரும் கருப்பு புள்ளிகளை போக்க வேம்பு உதவுகிறது

a. பருவால் வரும் தழும்பை சரி செய்யும் & நிறத்தை பாதுகாக்கும்

 • 20 வேப்ப இலைகளை எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்
 • இலை மென்மையாகும் (தண்ணீர் பச்சையாக மாறும் வரை) வரை கொதிக்க விடவும்
 • அதனை வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைக்கவும்
 • காட்டன் பஞ்சை கொண்டு தினமும் இரவில் முகத்தில் தடவி வரவும், சரும நிறத்தை இது பாதுகாக்கும்

b. காயத்துக்கும் சொறி பிரச்சனைக்கும் நல்லது

 • ஆறாத காயத்தில் வேம்பு எண்ணெய்யை தடவி வர ஆறும்
 • வேம்பையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து தடவி வர சொறி பிரச்சனையும் நாள்பட்ட அல்சரும் சரியாகும்
 • குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது

c. கரும்புள்ளிகளை சரிசெய்யும்

 • வேப்ப எண்ணெய்யை தண்ணீருடன் கலந்து கரும்புள்ளிகளில் தடவவும்
 • ஆனாலும் 2 முதல் 3 சொட்டுக்கு மேல் வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தக்கூடாது

d. தோல் தொற்றை குணமாக்கும்

 • வேம்பில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புள்ளது
 • வேப்ப எண்ணெய்யை தண்ணீருடன் கலந்துக்கொள்ளவும்
 • 100 மில்லி அளவுக்கு குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்து வரவும்
 • இது ஸ்கின் அலெர்ஜிக்கு மிகவும் பயனுள்ள வைத்தியமாகும்

e. சருமத்தை பளபளக்க செய்யும்

 • வேப்ப இலை & மஞ்சளை சேர்த்து அரைத்து தடவிவர இழந்த பொலிவை மீண்டும் பெறலாம்
 • நறுக்கிய வெள்ளரிக்காயையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்
 • இதனால் முகம் வெள்ளையாகவும் மாற வாய்ப்புள்ளது
 • தூங்கும்போது நீம் மாஸ்க் போட்டுக்கொண்டு தூங்கலாம்

14. கூந்தலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும்

 • வேம்பை முடியில் பயன்படுத்துவது எண்ணற்ற பயன்களை தருகிறது
 • வேப்பிலை பவுடர் நம்முடைய முடிக்கு மிகவும் நல்லது
 • இதில் இருக்கும் எதிர்ப்புசக்தி பண்பு, முடியின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

a. முடியின் வளர்ச்சிக்கு நல்லது

 • வேப்ப எண்ணெய் முடி உதிர்வை தடுக்கிறது
 • நம்முடைய உச்சந்தலையை வேப்ப எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்
 • இது உச்சந்தலையின் இரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது
 • இதனால் முடியும் வளர்கிறது

b. உச்சந்தலையின் ஆரோக்கியத்துக்கு நல்லது

 • வேப்பம் பொடியுடன் நெல்லிக்காய் பொடி, சீகைக்காய் பொடி, தண்ணீர் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்துக்கொள்ளவும்
 • இதனை முடியில் தேய்த்து அரை மணி நேரம் வைத்திருக்கவும்
 • அதற்கு பிறகு எப்போதும் போட்டு குளிக்கும் ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும்

c. வழுக்கை விழாமல் பார்த்துக்கொள்ளும்

 • முடி கொட்டி வழுக்கை விழாமல் இருக்க வேம்பு நல்லது
 • முடியை வலிமையாக வைத்திருக்கவும் இழந்த முடியை திரும்ப பெறவும் வேம்பு உதவும்
 • ஆனாலும் மருத்துவரின் ஆலோசனை முதலில் அவசியம்

வேப்பிலையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எவை? Neem Nutritional Value in Tamil

ஊட்டச்சத்துஅளவு 
கார்போஹைட்ரேட்8.01 கிராம்
புரதச்சத்து2.48 கிராம்
கால்சியம்178.5 மில்லிகிராம்
இரும்புச்சத்து5.98 மில்லிகிராம்
நார்ச்சத்து6.77 கிராம்
மெக்னீசியம்44.45 மில்லிகிராம்
பாஸ்பரஸ்28 மில்லிகிராம்
பொட்டாசியம்88.9 மில்லிகிராம்
சோடியம்25.27 மில்லிகிராம்
கொழுப்பு0.03 கிராம்
கலோரி45

வேம்பை பயன்படுத்துவது எப்படி? How to Use Neem in Tamil

 • வேப்ப எண்ணெய்யை பயன்படுத்த காட்டன் பஞ்சு அவசியம்
 • அதேபோல வெதுவெதுப்பான நீரைக்கொண்டு கழுவுவது நல்லது
 • வேப்ப இலைகளை கொதிக்க வைத்து பயன்படுத்துவது பலனை தரும்

வேம்பை எப்போது பயன்படுத்துவது?

 • காய்கறி தாவரங்கள் மீது வேம்பு எண்ணெய்யை காலையும், மாலையும் ஸ்ப்ரே செய்யலாம்
 • வேம்பு மாஸ்க்கை இரவில் தூங்கும்போது பயன்படுத்தலாம்
 • வேம்பை தினமும் நீங்கள் உபயோகிக்க விரும்பினால் மருத்துவரின் ஆலோசனை அவசியம்

வேம்பை எவ்வளவு பயன்படுத்துவது?

 • வேம்பை தினமும் அளவுக்கதிகமாக பயன்படுத்துவது தவறு
 • மருத்துவரின் ஆலோசனையுடன் கொஞ்சமாக எடுத்துக்கொள்வது நல்லது

வேம்பை உணவில் எப்படி சேர்ப்பது?

 • கொஞ்சமாக தினமும் வேப்பிலை சாறு குடிக்கலாம்
 • எப்போதாவது உங்கள் உணவுடன் வேப்பம்பூ துவையல் செய்து சாப்பிடலாம்

வேப்பிலையால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன? Neem side effects in Tamil

 • பிள்ளைகளுக்கு பாதுகாப்பானது அல்ல. வாந்தி, மயக்கம், மூளை பாதிப்பு போன்ற மிகப்பெரிய ஆபத்துக்கள் ஏற்படக்கூடும்
 • கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்தத்தில் உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் வேம்பை சேர்த்துக்கொள்வதனால் உண்டாகும் நன்மையை பிறகு நிச்சயம் உணர்வீர்கள். ஆனாலும் அளவுக்கதிகமாக வேம்பை தினமும் எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

வேம்பு, யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

 • பிள்ளைகள்
 • கர்ப்பிணிகள்
 • தாய்ப்பால் தரும் அம்மாக்கள்

தினமும் வேம்பு எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?

10 வாரங்களுக்கு 60 மைக்ரோகிராம் அளவுக்கு வேம்பு எடுத்துக்கொள்ளலாம். இது பாதுகாப்பான அளவு தான். வாய் வழியாக அளவுக்கதிகம் வேம்பை எடுத்துக்கொள்ள கூடாது. இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்கும்.

சிறுநீரகத்தை வேம்பு பாதிக்குமா?

வாய் வழியாக அளவுக்கதிகம் வேம்பை எடுத்துக்கொள்ள கூடாது. இது சிறுநீரகத்தை பாதிக்கும்.

வேம்பினால் பரு வருமா?

வராது, வேம்பில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு இருப்பதால் இது எந்தவொரு பருவையும் கரும்புள்ளியையும் சரி செய்யும்.

9 Sources

Was this article helpful?

LATEST ARTICLES

scorecardresearch