ஆண்மையை அதிகரிக்கும் ஆனியன்.. அற்புதமான பலன்களை அள்ளித் தரும் வெங்காயம் – Benefits of Onion in tamil

by StyleCraze

நம் அன்றாட வாழ்வில் வெங்காயம் இன்றி யாரால் தான் இருக்க முடியும். பொதுவாக வெங்காயத்தின் விலை திடீரென ஏறும், திடீரென இறங்கவும் செய்யும். ஆனால், தங்கத்துடன் ஒப்பிடும் அளவுக்கு வெங்காயம் என்ன அவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளதா என கேட்டால், பதில் ‘ஆம்’ என்று தான் சொல்ல வேண்டும்.

நாம் உண்ணும் உணவிற்கு சுவை சேர்ப்பது இந்த வெங்காயம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிப்பட்ட வெங்காயத்தின் பல பயன்களை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

வெங்காயம் எதெற்கெல்லாம் உதவும்?

1. சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்

வெங்காயத்தில் எண்ணற்ற தாதுக்களும் வைட்டமின்களும் உள்ளது. வெங்காயத்தின் தண்டுகளில் குறைவான இரத்த குளுக்கோஸ் அளவே காணப்படுகிறது. கலோரிகளும் குறைவாகவே உள்ளது. இதனால் சர்க்கரை நோய்க்கு வெங்காயம் மிக நல்லது (1).

2. பருக்களுடன் போராடலாம்

வெங்காயத்தில் நுண்ணுயிர் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிரான பண்புகள் உள்ளது. வெங்காயத்தில் இருக்கும் ஜெல் போன்ற திரவம், பருக்களை மறையவைக்க வல்லது. பருக்களினால் சிவந்து போவதையும் இது சரி செய்யும் (2).

3. புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்

வெங்காயத்தில் கேன்சருக்கு எதிரான பண்புகளை கொண்ட குயர்செடின், ஆந்தோசைனின், ஆர்கனோ சல்பர் உள்ளது. இந்த குயர்செடின் எனும் பொருள், மூளையில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். வெங்காயத்தில் நார்ச்சத்தும் இருப்பதால் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். சிவப்பு வெங்காய சாறு, கேன்சர் செல்களை அழிக்கக்கூடியது (3).

4. அலெர்ஜிக்கு எதிராக போராடலாம்

இந்த குயர்செடின், அலெர்ஜிற்கு எதிராக போராடும் தன்மையை கொண்டது. எலியை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது அலெர்ஜிக்கு எதிராக போராடுவது தெரியவந்தது (14).

அலெர்ஜியினால் ஏற்படும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் வெங்காய சாறு குணப்படுத்துகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோகும் போது ஏற்படும் எலும்பு பலவீனத்தையும் இது சரி செய்கிறது (5).

5. எதிர்ப்புசக்தி அதிகரிக்கலாம்

வெங்காயத்தில் இருக்கக்கூடிய செலினியம், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது (6). செலினியம் குறைவாக இருக்கும்போது அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு.

வெங்காய சாறு, ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக இருக்கக்கூடும். சுவாச பிரச்சனைக்கும் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. வெங்காய ஜூஸ், நுரையீரலை பலப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது (7).

6. பார்வையை மேம்படுத்தலாம்

நுண்ணுயிர் கொல்லியாக விளங்கும் வெங்காயம், விழி வெண்படல அலெர்ஜி மற்றும் கண் இமை அழற்சி போன்ற கண் குறைபாடுகளை குணப்படுத்த வல்லது என தெரிய வருகிறது. முயலை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் நல்ல பலன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது (8).

எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கண்புரைக்கும் சிறந்த நிவாரணியாக வெங்காயம் அமைந்துள்ளது (9).

7. நகத்தில் உண்டாகும் பூஞ்சை தொற்றை குணப்படுத்தலாம்

வெங்காய சாறில் இருக்கும் பூஞ்சைக்கு எதிரான பண்புகள், மனித உடலில் பூஞ்சையினால் ஏற்படும் தொற்றிலிருந்து பாதுகாக்க வல்லது (10).

8. காது தொற்றை சரி செய்யலாம்

காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வெங்காய சாறு, காது தொற்றையும் காது வலியையும் சரி செய்யும் என தெரியவருகிறது (11).

ஆனாலும், உங்களுடைய மருத்துவரை கேட்டு அதன்பிறகு காதுக்கு பயன்படுத்துவது நல்லது.

9. தூக்கத்தையும் நல்ல மனநிலையையும் தரலாம்

இதற்கான ஆய்வு முடிவுகள் மிகக்குறைவு என்றாலும் வெங்காய சாறு நல்ல தூக்கத்தை தருவதாகவும் நல்ல மனநிலையை தருவதாகவும் சொல்லப்படுகிறது (12).

10. கருத்தரித்தலை மேம்படுத்தலாம்

இந்த வெங்காய சாறில் டெட்டோஸ்ட்ரோன் உள்ளது. இது விந்துவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆண் எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் அதன் டெட்டோஸ்ட்ரோன் அளவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது (13).

மேலும், ஆண் எலியை வைத்து நடத்தப்பட்ட இன்னொரு சோதனையில் வெங்காய சாறு, அதன் புணர்ச்சி செயல்பாட்டை தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது (14).

11. சரும சுருக்கத்தை போக்கலாம்

வெங்காய சாறில் இருக்கும் ஃபிளேவனாய்ட் மற்றும் பிற மூலப்பொருட்கள் இளம் வயதில் உண்டாகும் சரும சுருக்கத்தை சரி செய்யக்கூடும்.

12. முடி ஆரோக்கியத்துக்கு உதவலாம்

வெங்காய சாறில் இருக்கும் சல்பர், கொலஜனை உற்பத்தி செய்கிறது. இதனால் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடும்.

ஆய்வின் முடிவுப்படி வெங்காய சாறு முடி வளர்ச்சிக்கு நல்லது என தெரியவருகிறது (15).

மேலும், வெங்காய சாறு முடி பளபளப்புக்கும் உதவும். நுண்ணுயிர் கொல்லி இதில் இருப்பதால், உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும் விளங்குகிறது.

வெங்காய சாறில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன?

நடுத்தர வெங்காயத்தில் இருக்கும் ஊட்டச்சத்து அளவு:

கலோரி – 45

கொழுப்பு – 0%

கார்போஹைட்ரேட் – 11 கிராம்

நார்ச்சத்து – 3 கிராம்

ஷுகர் – 9 கிராம்

கொலஸ்ட்ரால் – 0%

சோடியம் – 5 மைக்ரோ கிராம்

பொட்டாசியம் – 190 மைக்ரோ கிராம்

புரதம் – 1 கிராம்

வைட்டமின் சி – 20%

கால்சியம் – 4%

இரும்புச்சத்து – 4%

வெங்காய சாறை பயன்படுத்துவது எப்படி?

காட்டன் பஞ்சு கொண்டு இந்த சாறை தடவுவது நல்லது. பிறகு 1 மணி நேரம் கழித்து இளம் சூட்டுடன் இருக்கும் நீரில் கழுவி துடைக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதை செய்யலாம்.

வெங்காய சாறு செய்வது எப்படி?

  1. 3 முதல் 4 வெங்காயத்தை உரித்து, துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.
  2. வெட்டிய துண்டுகளை மிக்சியில் போட்டு அடிக்கவும்.
  3. ஒரு ஜக்கில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.
  4. துண்டுகளை பிளெண்டரில் போட்டு பேஸ்ட் ஆகவும் பயன்படுத்தலாம்.

வெங்காய சாறு உண்டாக்கும் பக்கவிளைவுகள் என்னென்ன?

  • கர்ப்பிணிகளுக்கும் தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கும் எதிர்மறையான பக்கவிளைவை இந்த வெங்காய சாறு ஏற்படுத்தலாம். குறைந்த அளவை உட்கொள்ள மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
  • இரத்த சர்க்கரை அளவை அளவுக்கதிகமாக கட்டுப்படுத்தக்கூடும். நீங்கள் ஏற்கனவே ஷுகருக்கு மாத்திரை சாப்பிடும்போது, இந்த வெங்காய சாறு இன்னும் இரத்த சர்க்கரை அளவை குறைத்து பிரச்சனையை தரலாம்.
  • வெங்காய சாறு எடுத்துக்கொள்ளும்போது இரத்த போக்கு கோளாறுகள் ஏற்படலாம். உங்களுக்கு இரத்த போக்கு பிரச்சனை ஏற்கெனவே இருந்தால், வெங்காய சாறை தவிர்ப்பது நல்லது.
  • செரிமான கோளாறு இருந்தாலும் வெங்காய சாறை தவிர்ப்பது நலம்.
  • தோல் அலெர்ஜி பிரச்சனை இருந்தால் வெங்காய சாறை தவிர்த்திடுங்கள்.

ஒட்டுமொத்தத்தில், புற்றுநோய், ஷுகர் போன்ற மிகவும் மோசமான வியாதிகளுக்கு இந்த வெங்காயம் நன்மருந்தாக அமைகிறது. வெங்காயத்தில் எடுக்கப்படும் சாறு, முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. வெங்காயத்தில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பலவித நன்மைகளை கொண்டுள்ளது.

வெங்காய சாறில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், நாம் மருத்துவர் ஆலோசனையை பெற்று பிறகு பயன் பெறுவதே சிறந்தது.

15 Sources

Was this article helpful?
scorecardresearch