பார்ப்பவரைக் கவர்ந்திழுக்கும் கருகரு கூந்தல் வேண்டுமா ! விளக்கெண்ணெய் தருமே விரைவான பலன்கள் ! Benefits of Castor oil

Written by StyleCraze

விளக்கெண்ணை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை முறையில் அங்கமான ஒன்று. இந்த விளக்கெண்ணெயானது “ஆமணக்கு” என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. ஆமணக்கு இந்தியாவில் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் எண்ணெய்க்காகப் பயிரிடப்படுகிறது. வறட்சியை தாங்கி வளரும் தாவரம் என்பதால், எக்காலத்திலும் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய தாவரம். உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய விளக்கெண்ணையானது ஆமணக்கு தாவரத்தின் விதைகளிலிருந்து பிழிந்து வடித்தெடுக்கப்படுகிறது. இது மூன்று வகையாக கிடைக்கிறது.

மூன்று வகையான ஆமணக்கு எண்ணெய்கள்

 1. ஆர்கானிக் ஆமணக்கு எண்ணெய்: ஆர்கானிக் அல்லது குளிர்ச்சியான முறையில் அழுத்தப்பட்டு எடுக்கப்பட்ட ஆமணக்கு எண்ணெய், விதைகளிலிருந்து நேரடியாக வெப்பமின்றி எடுக்கப்படுகிறது.
 2. கருப்பு ஆமணக்கு எண்ணெய்: ஆமணக்கு விதைகளை வறுத்து, நசுக்கி கருப்பு ஆமணக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. மேலும் முழு கலவையும் நெருப்பின் மீது மெதுவாக வேகவைக்கப்படுகிறது.
 3. ஹைட்ரஜனேற்றப்பட்ட ஆமணக்கு எண்ணெய்: இது தூய ஆமணக்கு எண்ணெயை ஹைட்ரஜனேற்றம் செய்து தயாரிக்கப்படுகிறது.

முடியின் வளர்ச்சிக்கு எந்த ஆமணக்கு எண்ணெய் சிறந்தது (castor oil for hair in Tamil)?

ஆர்கானிக் ஆமணக்கு எண்ணெய் மற்றும் கருப்பு ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றின் ஆரோக்கிய நன்மைகள் ஒரே மாதிரி இருக்கும்.கருப்பு ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று குறிப்பு ஆராய்ச்சி கூறுகிறது.

ஆர்கானிக் ஆமணக்கு எண்ணெய் ஒளிரும், பளபளப்பான முடியை தருகிறது. அடர்த்தியான அல்லது கரடுமுரடான கூந்தலுக்கும் கூட பொருந்துகிறது. (castor oil benefits for hair in Tamil)

முடியின் ஆரோக்கியத்திற்கு விளக்கெண்ணையின் நன்மைகள் (benefits of castor oil for hair in Tamil)

முடி வளர்ச்சி: ஆமணக்கு எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. (1)

முடி உதிர்தல்: இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது மற்றும் முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது. (2)

பொடுகு தொல்லை: ஆமணக்கு எண்ணெயின் முக்கிய அங்கங்களில் ஒன்றான ரிக்கினோலிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் வீக்கத்தைக் குறைக்க உதவும். (3)
வறண்ட பிளவுகள்: ஆமணக்கு எண்ணெயின் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முடியின் வேர்ககால்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். உச்சந்தலையில் தொற்றுகளைத் தடுக்கலாம். (4)

முடி அடர்த்தி: ஆமணக்கு எண்ணெயில் அதிக சதவீதம் கார்போனிக் அமிலங்கள் (99%), ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளதால் அவை முடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்கின்றன.

இயற்கையான ஹேர்கண்டீசனர்: சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து முடியைப் பாதுகாக்கும் மற்றும் முடி வேர்களை வலுப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆமணக்கு எண்ணெயில் உள்ளன. (5)

கருமையான கூந்தல்: ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. ஆமணக்கு எண்ணெய் முடியின் தோற்றத்தை மேம்படுத்தி அதன் கருமை நிறத்தை அதிகரிக்கக்கூடும்.

முடியை பிரகாசிக்க செய்கிறது: ஆமணக்கு எண்ணெய் தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை செயல்படுத்துகின்ற ஆக்டிவ் லிப்பிட் கலவையை தூண்டுகிறது. இது முடியின் வேர்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளித்து பிரகாசிக்க செய்கிறது.

முடி சேதமடைவதை தடுக்கிறது: ஆமணக்கு எண்ணெய் ​​பிளவு முனைகள், முடி உதிர்தல் மற்றும் முடி சேதம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

தொற்றுகளை நீக்குகிறது: ஆமணக்கு எண்ணெயின் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உச்சந்தலையில் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெயை முடியின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம்? (how to use castor oil for hair growth in Tamil)

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க ஆமணக்கு எண்ணெயை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். உங்களுக்கு வசதியான முறையை நீங்களே தேர்வு செய்யலாம். முடி உதிர்தலைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு பின்வரும் குறிப்புகளை முயற்சித்து பார்க்கலாம்.

1. முடி உதிர்தலுக்கு ஆமணக்கு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது? (use of castor oil for hair growth in Tamil)

தேவையானவை

 • 1/2 கப் ஆமணக்கு எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்?

 • உங்கள் உள்ளங்கையில் சிறிது ஆமணக்கு எண்ணெயை எடுத்து, உங்கள் தலைமுடியின் வேர் முதல் நுனி வரை வேலை தேய்க்க வேண்டும். நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
 • ஆமணக்கு எண்ணெய் அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. மேலும் கழுவப்படுவது கடினம். எனவே, நீங்கள் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • குறைந்தபட்சம் 15-20 நிமிடங்கள் எண்ணெயை தலையில் அப்படியே விட்டு விடுங்கள்.
 • பிறகு அதனை நீக்க பல முறை ஷாம்பு பயன்படுத்த வேண்டும். உங்கள் தலைமுடியைக் கழுவியதும், மெதுவாக துண்டு அதை உலர வைக்கவும்.
 • எந்த வெப்ப ஸ்டைலிங் கருவிகளையும் உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

எவ்வாறு வேலை செய்கிறது?

ஆமணக்கு எண்ணெய் தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது மற்றும் முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது.

2. முடியின் வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்தலாம்?

முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், முடி வளரத் தூண்டுவதற்கும் ஆமணக்கு உதவும் என சான்றுகள் தெரிவிக்கின்றன. இது தடிமனாகவும் கனமாகவும் இருப்பதால், அதை நீர்த்துப்போகச் செய்ய மற்றொரு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

தேவையானவை

 • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
 • 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்
 • 2 தேக்கரண்டி எள் எண்ணெய்
 • 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்?

 • நான்கு எண்ணெய்களையும் கலந்து, கலவையை வேர் முதல் நுனி வரை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். விரைவாக முடியில் ஊடுருவ எண்ணெய் கலவையை சிறிது சூடேற்றலாம்.
 • கலவையை சுமார் 60 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு கழுவவும்.

எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த எண்ணெய் கலவை முடி வளர்ச்சியைத் தூண்ட உதவும். இந்த கலவையில் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்ப்பது இன்னும் கூடுதல் பலன் அளிக்கும்.

தலைமுடியிலிருந்து ஆமணக்கு எண்ணெயை அகற்றுவது எப்படி?

வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்துங்கள்: உங்கள் உச்சந்தலையையும் முடியையும் நனைக்க தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இந்த செயல்முறை உங்கள் உச்சந்தலையில் துளைகளை விரிவடைய செய்து கடுமையான அழுக்கை வெளியேற்றும்.

ஷாம்பு நுரை: உங்கள் உள்ளங்கையில் சிறிது ஷாம்பு எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். நுரை உருவாக்க உங்கள் உள்ளங்கைகளைத் தேய்த்து அதனை கொண்டு முடியை கழுவ வேண்டும்.

ஷாம்பு மசாஜ்: உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

முடி வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெயுடன் கூடிய மாஸ்குகள் (how to apply castor oil on hair in Tamil)

உங்கள் முடிகளை ஈரப்பதமாக்குவதற்கும், முடி வளர்ச்சிக்கும், வேர்கால்கள் புத்துயிர் பெறுவதற்கும் ஆமணக்கு எண்ணெயுடன் கூடிய சில மாஸ்குகளை பயன்படுத்தலாம். அவை குறித்து அடுத்து பார்ப்போம்.

1. கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி
 • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்?

 • ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் கலந்து உலர்ந்த கூந்தலுக்கு மெதுவாக தடவவும்.
 • குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு உங்கள் உச்சந்தலையை மசாஜ் செய்யுங்கள்.
 • ஹேர் மாஸ்க் கழுவும் முன் குறைந்தது இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருங்கள்.
 • இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

தேங்காய் எண்ணெயில் நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை முடியை வலுப்படுத்துகின்றன மற்றும் முடி சேதத்தைத் தடுக்க உதவுகின்றன. முடி இழைகளுக்க ஊட்டச்சத்தை அளிக்கிறது. தேங்காய் எண்ணெய் கூந்தலிலிருந்து புரத இழப்பைக் குறைக்கிறது. (6)

2. முடி வளர்ச்சிக்கு கற்றாழை மற்றும் ஆமணக்கு எண்ணெய்

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 2 டீஸ்பூன்
 • 1/2 கப் கற்றாழை ஜெல்
 • 1 டீஸ்பூன் துளசி தூள்
 • 2 டீஸ்பூன் வெந்தயம் தூள்

என்ன செய்ய வேண்டும்?

 • அனைத்து பொருட்களையும் கலந்து ஒரு அடர்த்தியான பேஸ்ட்டை உருவாக்குங்கள்.
 • இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மெதுவாக தடவவும். இரண்டு மூன்று மணி
 • நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பிறகு லேசான ஷாம்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

கற்றாழை உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவவை நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ புது செல் உருவாக காரணமாகிறது. மேலும் உச்சந்தலையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. வெந்தயம் பயன்பாடு முடி வளர்ச்சியை மேம்படுத்தக்கூடும். (7)

3. கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலவை

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 1-2 தேக்கரண்டி
 • 1-2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்?

 • ஒரு சிறிய கோப்பையில் இரண்டு எண்ணெய்களை சம விகிதத்தில் கலக்கவும்.
 • இந்த எண்ணெய் கலவையை தீயில் 10 விநாடிகள் சூடாக்கி, உங்கள் தலைமுடிக்கு தடவவும். பிறகு உங்கள் உச்சந்தலையை 10-15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
 • பிறகு ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு ஷாம்பு கொண்டு கழுவிவிட வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

ஆலிவ் எண்ணெயில் மோனோ மற்றும் பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. அவை முடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கும். இது முடி உதிர்தலைக் குறைக்க உதவுகிறது. (8)

4. முடி வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கலவை

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி
 • 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்?

 • ஒரு பாத்திரத்தில் இரண்டு எண்ணெய்களை கலந்து, சில நொடிகளுக்கு தீயில் கலவையை சூடாக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலைமுடிக்கு தடவவும்.
 • உங்கள் விரல்களைப் பயன்படுத்தி 5-10 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்யவும். பிறகு லேசான ஷாம்பூவுடன் கழுவ வேண்டும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

பாதாம் எண்ணெயில் 68% ஒலிக் அமிலமும் 25% லினோலிக் அமிலமும் உள்ளன. இவை கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாம் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். (9)

5. முடி வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் கலந்த கலவை

தேவையானவை

 • இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
 • இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய்

என்ன செய்ய வேண்டும்?

 • ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவவும்.
 • முப்பது நிமிடங்களுக்கு உங்கள் தலைமுடியை அப்படியே விட வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த கலவை உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமான டானிக்காக உதவுகிறது. இது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையின் நிலையை மேம்படுத்தும். (10)

6. முடி வளர்ச்சிக்கு ஆமணக்கு எண்ணெய் மற்றும் மிளகுக்கீரை எண்ணெய்

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 100 மில்லி
 • புதினா எண்ணெய் 2-3 சொட்டுகள்

என்ன செய்ய வேண்டும்?

 • ஆமணக்கு எண்ணெயில் இரண்டு முதல் மூன்று சொட்டு மிளகுக்கீரை சேர்த்து நன்கு குலுக்கவும்.
 • உங்கள் தலைமுடியை நடுவில் பிரித்து, கலவையை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
 • உங்கள் முழு தலையும் மூடப்படும் வரை இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.
 • குறைந்தது இரண்டு மணி நேரம் அப்படியே இருக்கட்டும். பிறகு சுத்தம் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

புதினா எண்ணெய் நான்கு வாரங்களில் முடி வளர்ச்சியைத் தூண்டும் என்று கண்டறியப்பட்டது. இது முடி வளர்ச்சியின் அனஜென் கட்டத்தை தூண்டக்கூடும். இது முடியின் தடிமன், மற்றும் நுண்ணறை ஆழத்தை அதிகரிக்க மேலும் உதவும். மிளகுக்கீரை எண்ணெயில் உள்ள மெத்தனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

7. முடி வளர்ச்சிக்கு வெங்காய சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலவை

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி
 • 2 தேக்கரண்டி வெங்காய சாறு

என்ன செய்ய வேண்டும்?

 • ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய், இரண்டு தேக்கரண்டி வெங்காய சாறு சேர்க்கவும்.
 • இந்த கலவையுடன் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியை மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் இரண்டு மணி நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை சுத்தம் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

ஒரு மருத்துவ பரிசோதனையில் வெங்காய சாறு கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் சுமார் 87% பேர் நல்ல முடி வளர்ச்சியை பெற்றனர். மேலும், வெங்காய சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் பிரகாசத்தையும், வலிமையையும் மேம்படுத்தக்கூடும்.

8. முடி வளர்ச்சிக்கு பூண்டு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலவை

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி
 • உரித்த பூண்டு சில பற்கள்

என்ன செய்ய வேண்டும்?

 • ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் எடுத்து அதனை மிதமாக சூடுபடுத்த வேண்டும்.
 • அதனுடன் பூண்டு சேர்த்து சிறிது நேரம் மீண்டும் சூடுபடுத்த வேண்டும்.
 • வெப்பம் தணிந்த பிறகு இந்த கலவை கொண்டு, உங்கள் உச்சந்தலை மற்றும் முடியை மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் இரண்டு மணி நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை சுத்தம் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

பூண்டு எண்ணெயில் சல்பர் நிறைந்துள்ளது. இது முடி பராமரிப்புக்கு அவசியமாகும். ஏனெனில் இதுவே முடி வளர்ச்சிக்கு உதவும் கெராட்டினின் அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.

9. முடி வளர்ச்சிக்கு கிளசரின் மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலவை

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி
 • கிளிசரின் சில சொட்டுகள்

என்ன செய்ய வேண்டும்?

 • ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய், மற்றும் கிளசரின் கலவையை சேர்க்கவும்.
 • இந்த கலவையை கொண்டு உங்கள் உச்சந்தலை மற்றும் முடியை மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் இரண்டு மணி நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை சுத்தம் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

கிளிசரின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது தலை நமைச்சல் மற்றும் உச்சந்தலை வறட்சி தொடர்பான பிரச்சினைகளிலிருந்து உங்கள் முடியை பாதுகாக்க உதவுகிறது.

10. முடி வளர்ச்சிக்கு இஞ்சி சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலவை

தேவையானவை

 • ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி
 • 2 தேக்கரண்டி இஞ்சி சாறு

என்ன செய்ய வேண்டும்?

 • ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய், இரண்டு தேக்கரண்டி இஞ்சி சாறு சேர்க்கவும்.
 • இந்த கலவையுடன் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியை மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் இரண்டு மணி நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை சுத்தம் செய்யலாம்.

இது எவ்வாறு வேலை செய்கிறது?

இஞ்சியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. இது தலை முடியின் செல்களில் தீவிர சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனை ஆமணக்கு எண்ணெயுடன் சேர்ந்து பயன்படுத்துவது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெயின் பக்க விளைவுகள் (castor oil for hair side effects in Tamil)

எல்லாமே ஒரு அளவோடு பயன்படுத்தினால் தான் நல்லது. ஆமணக்கு எண்ணெயின் பயன்பாடும் அப்படித்தான்.

 • ஆமணக்கு எண்ணெயை மற்ற எண்ணெய்களுடன் கலக்காவிட்டால், அது கடுமையான முடி உதிர்தலை ஏற்படுத்தக்கூடும்.
 • ஆமணக்கு எண்ணெயின் பிசுபிசுப்பு நிலைத்தன்மை உச்சந்தலையில் உள்ள துளைகளைத் தடுத்து முடியை எண்ணெய் பசை மிக்கதாக மாற்றும்.
 • ஹைட்ரஜனேற்றப்பட்ட ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் அல்லது தோலுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.

குறிப்பு: உங்கள் உச்சந்தலையில் அல்லது தோலில் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் உங்கள் முழங்கையில் அல்லது காதுகளின் பின்புறத்தில் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

முடிவாக

ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, முடி மற்றும் உச்சந்தலையில் பிற பிரச்சினைகளையும் குறைக்க உதவும் என சான்றுகள் தெரிவிக்கின்றன. எனவே, இதை மற்ற எண்ணெய்களுடன் சேர்த்து மிதமாகப் பயன்படுத்துவது பல நன்மைகளைத் தரும். ஆமணக்கு எண்ணெய் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு அதன் நன்மைகள் பற்றி உங்களுக்கு தேவையான தகவல்களை இந்த கட்டுரை உங்களுக்கு வழங்கியுள்ளது என்று நம்புகிறோம். உங்களுக்கு பலன் கொடுத்த முறைகள் பற்றி எங்களுக்கு கருத்து தெரிவிக்கலாம்.

Sources

Articles on StyleCraze are backed by verified information from peer-reviewed and academic research papers, reputed organizations, research institutions, and medical associations to ensure accuracy and relevance. Check out our editorial policy for further details.
Was this article helpful?
The following two tabs change content below.