வாதுமை கொட்டையின் (வால்நட்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Walnut (Akhrot) Benefits, Uses and Side Effects in Tamil

Written by StyleCraze

ஆங்கிலத்தில் Walnut என்றும், இந்தி மொழியில் அக்ரோட்/ அக்ரூட் என்றும் அழைக்கப்படும் வாதுமை கொட்டை, தினந்தோறும் நாம் உட்கொள்ள வேண்டிய முக்கிய பருப்பு வகை ஆகும். சாக்லேட்கள், கேக்குகள், பிஸ்கெட்கள் மற்றும் பல உணவுகளின் மூலம் நாம் வாதுமை கொட்டைகளை உட்கொள்ளலாம். இப்பருப்புகள் இலேசான கசப்பு சுவையை கொண்டிருந்தாலும், அவற்றை மக்கள் விரும்பி உண்ணுகிறார்கள்;

வாதுமை கொட்டை வகை இரண்டு வகைப்படும்; வாதுமை கொட்டை வகையின் முதல் வகை – கருப்பு வாதுமை கொட்டை, இரண்டாம் வகை சாதாரண பிரௌன் வால்நட் ஆகும். இந்த இரண்டு வாதுமை கொட்டை வகைகளும் உடலுக்கு எக்கச்சக்க நன்மைகளை அளிக்கக்கூடியவை.

வாதுமை கொட்டையின் நன்மைகள் – Benefits of Walnut in Tamil

வாதுமை கொட்டை வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக இங்கு பார்க்கலாம்.

வாதுமை கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள் – Health Benefits of Walnut in Tamil

வாதுமை கொட்டை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காண்போம்.

நன்மை 1: இதய ஆரோக்கியம்

அக்ரூட் பருப்புகளில் காணப்படும் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கார்டியோவாஸ்குலார் அமைப்பிற்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகின்றன. இப்பருப்பினை தினசரி சிறிதளவு உட்கொண்டால் அது உடலின் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன; எனவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாதுமை பருப்புகளை எடுத்துக் கொள்ளலாம். உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பயன்படுகின்றன. வால்நட் பருப்புகள் இதயத்திற்கு நன்மை பயப்பவை ஆகும் (1).

நன்மை 2: மூளை ஆரோக்கியம்

வால்நட் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஆகும்; ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது நரம்பு மண்டலத்தை சீராக இயங்க வைத்து, ஞாபக சக்தியை மேம்படுத்த உதவும் (2).

நன்மை 3: புற்றுநோய்

வால்நட் பருப்புகள் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க உதவும் என்று ஆய்வறிக்கை ஒன்று கருத்து தெரிவிக்கிறது. எனவே புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபட விரும்புபவர்கள், தினமும் 5 வாதுமை கொட்டைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

நன்மை 4: எலும்பு ஆரோக்கியம்

ஆல்பா லினொலெனிக் அமிலம் எனும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் வால்நட் பருப்பில் நிறைந்துள்ளன; இந்த ஆல்பா லினொலெனிக் அமிலங்கள் எலும்புகளை திடமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. வாதுமை பருப்பை உட்கொள்வதன் மூலம் அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை பெறலாம்; இச்சத்துக்கள் அழற்சியை குறைத்து, எலும்புகளை அதிக நேரத்திற்கு திடமாக வைக்க பயன்படுகின்றன (3).

நன்மை 5: உடல் எடை குறைத்தல்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வால்நட் பருப்புகளை நொறுக்குத் தீனிகளாக உட்கொள்ளலாம்; அக்ரூட் பருப்புகளில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்க உதவும்.

நன்மை 6: கர்ப்பம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் தினமும் வாதுமை கொட்டைகளை உண்ணலாம்; வால்நட்களில் ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குழுமத்தை சேர்ந்த ஃபோலேட்கள், ரிபோஃபிளாவின்கள், தையமின் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் கர்ப்பிணி பெண்ணுக்கும், கருவறையில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கும் மிகவும் தேவைப்படுபவை ஆகும்.

நன்மை 7: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வால்நட்ஸ் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அடங்கி இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன மற்றும் நோய் நொடிகள் உடலை பாதிக்காமல் தடுக்கின்றன. உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து – நல்ல உடற்கட்டமைப்புடன் திகழ, தினந்தோறும் வால்நட் பருப்புகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் (4).

நன்மை 8: நல்ல உறக்கம் மற்றும் அழுத்தமின்மை

வாதுமை கொட்டைகளில் உள்ள மெலாடோனின், நல்ல உறக்க முறைகளை வழங்குகிறது (5). மேலும் வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து, அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன.

நன்மை 9: சர்க்கரை நோய்/ நீரிழிவு நோய்

சர்க்கரை நோய் கொண்டவர்கள் தினமும் வால்நட்ஸை உண்டு வந்தால், அதில் காணப்படும் பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க பயன்படுகின்றன.

நன்மை 10: மலச்சிக்கல் மற்றும் செரிமானம்

வாதுமை கொட்டைகளில் உள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான அமைப்பை சரியாக இயங்க வைக்க பெரிதும் பயன்படுகிறது; குடல் அமைப்புகள் சரிவர செயல்பட எல்லா மனிதர்களுக்கும் நார்ச்சத்து அவசியம் தேவை. பொதுவாக இறைச்சி, நார்ச்சத்து, பால் பொருட்கள் போன்றவை புரத சத்தின் ஆதரங்களாக விளங்குகின்றன; தினந்தோறும் வாதுமை கொட்டைகளை உட்கொள்வது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து, உடலின் குடல் அமைப்பு சரியாக இயங்க உதவும் (6).

நன்மை 11: அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்

அழற்சியை ஏற்படுத்தும் நோய்களான ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ், சிரங்கு ஆகியவற்றை சரி செய்ய உதவும் கொழுப்பு அமிலங்கள் வால்நட்ஸில் நிறைந்துள்ளன (7).

நன்மை 12: உட்புற சுத்தப்படுத்தல்

வால்நட்ஸ் பருப்புகள் உடலின் உட்புறத்தை சுத்தப்படுத்தும் உட்புற வாக்கும் சுத்தப்படுத்திகளாக செயல்பட்டு, செரிமான அமைப்பை சுத்தப்படுத்த உதவுகின்றன; இது ஒரு சூப்பரான உணவாக திகழ்ந்து இதயத்திற்கு நன்மை அளித்து, உடல் எடையையும் குறைக்க பயன்படுகின்றன.

நொறுக்குத் தீனிகளை போல், தினந்தோறும் குறைந்த அளவிலான வாதுமை கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒவ்வாமை அல்லது எதிர்பாராத ஆரோக்கிய நிலைகளை தவிர்க்க வாதுமை பருப்புகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்மை 13: பூஞ்சை தொற்றை குணப்படுத்துதல்

கருப்பு வாதுமை கொட்டைகளை உட்கொள்வதன் மூலம் உடலின் உட்புறத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றை சுத்தப்படுத்தி விடலம்; செரிமான அமைப்பில் உண்டாகும் கேண்டிடா பூஞ்சையின் வளர்ச்சி மற்றும் சருமத்தில் உண்டாகும் பூஞ்சை தொற்று ஆகியவை உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

இந்த நோய்த்தொற்றுகள் அரிப்பு மற்றும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுதல் போன்ற அசௌகரியமான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியவை; இதர மருத்துவ சிகிச்சை முறைகளுடன் கருப்பு வால்நட்களையும் எடுத்துக் கொள்வது பூஞ்சை வளர்ச்சியை தடுத்து, அவற்றை குணப்படுத்த பயனுள்ள வகையில் உதவும் (8).

வாதுமை கொட்டையின் சரும நன்மைகள் – Skin Benefits of Walnut in Tamil

வால்நட் பருப்பு அளிக்கும் சரும நன்மைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

Shutterstock

நன்மை 1: மிளிரும் சருமம்

ஒரு எளிய ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே தயாரித்து, வாதுமை கொட்டை நன்மைகளை பெறலாம்.

பயன்படுத்துவது எப்படி?
 • 4 வாதுமை கொட்டைகள், 2 தேக்கரண்டி ஓட்ஸ், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி கிரீம் மற்றும் 4 துளிகள் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்று சேர்த்துக் கொள்ளவும்.
 • இந்த எல்லா பொருட்களையும் அரைத்து, ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ளவும்.
 • இப்பேஸ்ட்டை முகத்தில் தடவி, முழுமையாக ஆற விடவும்.
 • வெந்நீர் கொண்டு முகத்தை கழுவி, முகத்தில் வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.

இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி, சுருக்கங்களை போக்கி – சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கலாம்.

நன்மை 2: வயது முதிர்ச்சிக்கு எதிரானது

வால்நட்ஸ் என்பவை தோலிற்கு நன்மை பயக்கும் பி வைட்டமின்களை கொண்டவை; வைட்டமின் பி என்பது ஒரு சிறந்த மனஅழுத்தம் மற்றும் மனநிலை மேலாண்மை சத்து ஆகும். குறைவான மனஅழுத்தம் அருமையான சருமத்தை அளிக்கும்; அதிகப்படியான மனஅழுத்தம், இளமையிலேயே சுருக்கத்தை ஏற்படுத்தலாம். வைட்டமின் பி சத்தினை வைட்டமின் ஈ எனும் இயற்கையான ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்த சத்துடன் சேர்த்து பயன்படுத்தினால், இக்கலவை மனஅழுத்தத்தால் ஏற்படும் தேவையற்ற இறந்த செல்களை எதிர்த்து போராட உதவுகிறது; மேலும் இது வயது முதிர்ச்சியை தடுக்க உதவுகிறது (9).

நன்மை 3: ஈரப்பதமூட்டி

வறண்ட சருமம் கொண்டவர்கள் தொடர்ந்து சூடான வால்நட் எண்ணெயை தோலில் தடவி, சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கலாம்; வாதுமை கொட்டை எண்ணெய் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இது சருமத்தின் உள்ளிருந்து ஊட்டச்சத்து அளித்து, ஆரோக்கியமான மற்றும் மிளிரும் செல்கள் உருவாக உதவுகிறது.

நன்மை 4: கருவளையங்கள்

சூடான வாதுமை கொட்டை எண்ணெயை கருவளையங்கள் உள்ள பகுதியில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்; இது ஒரு அருமையான குணப்படுத்தும் காரணி (10). வால்நட்டில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் கண்களை சுற்றி ஏற்படும் வீக்கத்தை குறைத்து, கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவுகிறது மற்றும் இது கண்களை பொலிவுடன், நல்ல நிறத்துடன் வைத்திருக்க பயன்படுகிறது.

வாதுமை கொட்டையின் தலைமுடி நன்மைகள் – Hair Benefits of Walnut in Tamil

இந்நாட்களில், மாசுபாடு, அவசரமான வாழ்க்கை முறைகள், மோசமான உணவு பழக்கங்கள் போன்றவற்றால், தலைமுடி மிகவும் சோர்வாக பொலிவிழந்து, முன்பை காட்டிலும் அதிக சேதத்துடன் காணப்படுகிறது. தினசரி கூந்தல் பராமரிப்பு முறைகளுடன் வாதுமை கொட்டைகளை சேர்த்துக் கொள்வது பொலிவான தலைமுடியை பெற உதவும்; வாதுமை பருப்புகளை உட்கொண்டு அல்லது தலைமுடிக்கு வால்நட் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான, மிளிரும் கூந்தலை பெறலாம்.

நன்மை 1: நீளமான மற்றும் பலமான கூந்தல்

வால்நட்ஸ் என்பவை அதிகமான பொட்டாசியம், ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கியவை; இந்த எல்லா சத்துக்களும் தலைமுடியின் வேர்க்கால்களை பலப்படுத்த உதவுகின்றன. ஆகையால், வால்நட் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது தலைமுடியை நீளமாக, திடமாக, ஆரோக்கியமாக மற்றும் பொலிவாக வளர உதவும் (11).

நன்மை 2: ஆரோக்கியமான உச்சந்தலை

வால்நட் எண்ணெயை தொடர்ந்து உச்சந்தலையில் தடவினால், உச்சந்தலை ஈரப்பதத்துடனும், நீர்ச்சத்துடனும் இருக்கும்; இதன் மூலம் டெர்மாடிடிஸ் போன்ற தோல் வியாதி மருத்துவ நிலைகளை தவிர்க்கலாம். வாதுமை கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் வால்நட் எண்ணெய் கொண்டிருக்கும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், படர்தாமரையால் உண்டாகும் நோய்த்தொற்றுகளை தடுக்க உதவுகின்றன. மேலும் இது உச்சந்தலை ஆரோக்கியமாக மற்றும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய உதவுகிறது; ஆரோக்கியமான உச்சந்தலை, ஆரோக்கியமான தலைமுடி வளர காரணமாக இருக்கிறது.

நன்மை 3: பொடுகு

வாதுமை பருப்பு எண்ணெய் என்பது பரவலாக தயாரிக்கப்படும் தலைமுடிக்கான எண்ணெய்களில் காணப்படுகிறது; இது அதிகமான ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் இது பொடுகை போக்க உதவும் ஒரு இயற்கையான காரணியாக விளங்குகிறது (12).

நன்மை 4: வழுக்கையை தடுத்தல்

வாதுமை கொட்டை எண்ணெய் வழுக்கை பிரச்சனைகளை முற்றிலுமாக போக்க உதவுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நன்மை 5: இயற்கை முறையில் முடியின் நிறத்தை மேம்படுத்தும்

வால்நட்கள் ஒரு இயற்கையான, தலைமுடியை மேம்படுத்தி காட்டும் முடிச்சாயமாக பயன்படுகின்றன; வாதுமை கொட்டை எண்ணெயில் அதிகமான புரதங்கள் அடங்கியுள்ளன. இச்சத்துக்கள் முடியின் நிறத்தை மேம்படுத்தி, முடிக்கு ஆரோக்கியமான பொலிவளிக்க உதவுகின்றன (13).

பயன்படுத்துவது எப்படி?

வால்நட்களை எண்ணெய் வடிவில் தலைமுடிக்கு வாரம் மூன்று முறை தடவுவது அதிகமான பலன்களை அளிக்க உதவுகிறது; இந்த எண்ணெயை தனியாக அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால், நல்ல பலன்களை பெறலாம். வாதுமை பருப்பு எண்ணெயை பயன்படுத்த தொடங்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது ஒவ்வாமை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

வாதுமை கொட்டையின் ஊட்டச்சத்து மதிப்பு – Walnut Nutritional Value in Tamil

அமெரிக்க விவசாய துறையின் (USDA) கருத்துப்படி, தேசிய ஊட்டச்சத்து தரவுதளம், 1 கப் இயற்கையான வால்நட்டில் (30 கிராம்கள்) கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்று கருத்து தெரிவிக்கிறது; வாதுமை கொட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து மதிப்பு விவரங்களாவன:

 • ஆற்றல்: 200 கலோரிகள்
 • கார்போஹைட்ரேட் 3.89 கிராம்கள் (g)
 • சர்க்கரை: 1 g
 • நார்ச்சத்து: 2 g
 • புரதம்: 5 g
 • கொழுப்பு: 20 g
 • கால்சியம்: 20 மில்லிகிராம்கள் (mg)
 • இரும்பு: 0.72 mg
 • சோடியம்: 0 mg

வாதுமை கொட்டைகள் கீழ்க்கண்ட சத்துக்களின் நல்ல ஆதாரங்களாக திகழ்கின்றன:

 • மாங்கனீசு
 • காப்பர்/ தாமிரம்
 • மக்னீசியம்
 • பாஸ்பரஸ்
 • வைட்டமின் B6
 • இரும்பு

பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்,  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை வாதுமை பருப்பில் நிறைந்துள்ளன; இப்பருப்பில் அதிக அளவு புரதமும் அடங்கியுள்ளது. இந்த வாதுமை கொட்டைகள் அதிக கலோரி, அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் ஆகும்; இப்பருப்புகள் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் கொழுப்புகளை கொண்டுள்ளன.

வாதுமை கொட்டையில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து தொகுப்பு திருப்தி மற்றும் வயிறு நிறைந்த உணர்வை அளிக்க பயன்படுகின்றன. சிப்ஸ்கள், வறுத்த பாக்கெட் தீனிகள் போன்ற எளிய கார்போஹைட்ரேட் கொண்ட தீனிகளைக் காட்டிலும் அதிக ஆரோக்கியம் தரும் நொறுக்குத்தீனியாக இந்த வாதுமை பருப்புகள் விளங்குகின்றன.

வாதுமை கொட்டையின் பக்க விளைவுகள் – Side Effects of Walnut in Tamil

வாதுமை பருப்பினால் சில பக்க விளைவுகளும் உண்டாகலாம்; அப்படி வாதுமை கொட்டையினால் உண்டாகும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்

Shutterstock

1. ஒவ்வாமை விளைவுகள்

அமெரிக்க புற்றுநோய் சமூகத்தின் கருத்துப்படி, சில மக்களுக்கு பருப்புகள், பெக்கான்கள் குறித்து ஒவ்வாமை ஏற்படலாம்; இப்படிப்பட்ட மக்கள் கருப்பு வாதுமை கொட்டைகளை தவிர்க்க வேண்டும்; வாதுமை பருப்புகளால் ஒவ்வாமை ஏற்படுவது தான் இவ்வாறு கூறப்படுவதற்கு முக்கிய காரணமாகும் (16). இந்த ஒவ்வாமை விளைவுகளில் மார்பு அல்லது தொண்டையில் இறுக்கம், ஹிவ்ஸ், மூச்சுவிடுவதில் சிரமம், தடிப்புகள் போன்றவை அடங்கும்.

2. பிற மருந்துகளுடன் சேர்ந்து வினைபுரியலாம்

கருப்பு வாதுமை கொட்டைகள் உணவு முறை சப்ளிமெண்ட்டுகளாக விற்கப்படுகின்றன; இவை ஒருவர் எடுத்துக் கொள்ளும் பிற மருந்துகளுடன் சேர்ந்து வினை புரியுமா/ இல்லையா என்பது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் சோதிக்கப்படவில்லை. வால்நட்டில் காணப்படும் டானின்கள், உடலின் மருந்து உறிஞ்சும் திறனை குறைக்கின்றன.

3. சரும புற்றுநோய்

பல மக்கள் உடல் தோலில் ஏற்படும் சிறிய கீறல், வெட்டுக்காயம், சிரங்கு போன்றவற்றை குணப்படுத்த கருப்பு வாதுமையை பயன்படுத்துவர்; ஆனால், பர்டியூ பல்கழைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, இக்கருப்பு வாதுமையில் ஜுக்லோன் எனும் நச்சுத்தன்மை கொண்ட வேதி உறுப்பு உள்ளது . இந்த கருப்பு வாதுமையை தினமும் சருமத்தில் பயன்படுத்தினால், இதில் இருக்கும் விஷத்தன்மை கொண்ட வேதி உறுப்பு, தோலில் மாலிக்னண்ட் கட்டிகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

4. செல்லுலார் DNA -இல் மாற்றங்கள்

நச்சுத்தன்மை மற்றும் அப்ளைடு ஃபார்மாகோலாஜியில் வெளியிடப்பட்ட இதழின் கருத்துப்படி, கருப்பு வால்நட்டில் இருக்கும் ஜுக்லோன், கொலஜென் புரதங்களை உற்பத்தி செய்ய உதவும் செல்களான ஃபைப்ரோபிளாஸ்ட்களை பாதிக்கிறது (17). இந்த வேதிப்பொருள் p53 எனும் புரத வகையை பெரிதும் குறைக்கிறது மற்றும் DNA செல்லில் சரி செய்யமுடியாத பாதிப்பை ஏற்படுத்துவதால், செல்கள் இறந்து போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

5. குதிரை அழற்சி நோய் (Equine Inflammatory Disease)

கருப்பு வாதுமையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குதிரைகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை (18). இது எக்வைன் லாமினிடிஸ் எனும் குதிரை அடிக்குளம்பு அழற்சி நோயை உண்டாக்குகிறது; இது ஒரு அழற்சி நோய் ஆகும். இது குதிரையின் கால்களில் இரத்த செல்களை ஒன்று சேர்த்து, வலி மற்றும் நொண்டி அல்லது நடை தடுமாற்றம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

6. இரும்புச்சத்து குறைபாடு

கருப்பு வால்நட்டில் உள்ள பைடேட்கள், உடலின் இரும்புச்சத்து உறிஞ்சும் திறனை பலமாக பாதிக்கிறது. இரும்பு குறைபாடுகள் நிறுவனத்தின் கருத்துப்படி, பைடேட்கள் உணவிலிருந்து உறிஞ்சப்படும் இரும்புச்சத்தின் அளவை 50 முதல் 60 சதவீதம் குறைக்கின்றன; இது அதீத இரும்புச்சத்து குறைபாடை ஏற்படுத்தலாம்.

7. கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம்

இன்றைய நாட்களில், கருப்பு வால்நட் சப்ளிமெண்ட்டுகள் கிடைக்கின்றன; இந்த சப்ளிமெண்ட்டுகளை வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த சப்ளிமெண்ட்டுகளின் பலம் மாறுபடலாம்; கருப்பு வாதுமை பருப்புகளை அதிகமாக உட்கொண்டால், அதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம். கருப்பு வாதுமையில் இருக்கும் ஜுக்லோன் எனும் காரணியால், உடலில் கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம் ஏற்படலாம்.

8. உடல் திரவத்தை வறட்சியாக்கும்

கருப்பு வாதுமை பருப்புகள், சளி முதலிய உடல் திரவங்களை வறண்டு போக செய்ய வாய்ப்புண்டு; காய்ச்சல் இருக்கும் ஒருவர் இருமலை குணப்படுத்த இவ்வாதுமை பருப்புகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது உடலில் நீர்ச்சத்து இழப்பை உண்டாக்கி, காய்ச்சல் மருந்து உடலால் உறிஞ்சப்படுவதை தடை செய்யும்.

9. சரும தடிப்புகள்

சருமத்தின் மீது கருப்பு வாதுமை கொட்டையை பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் தடிப்புகள் ஏற்படலாம்; வாதுமை பருப்பில் உள்ள வேதி உறுப்புகளால் தோலில் எரிச்சல் உண்டாகலாம். அல்லினா மருத்துவ இணையதளத்தின் கருத்துப்படி, சரும தடிப்புகளால் அரிப்பு மற்றும் சரும அழற்சி ஏற்படலாம்.

10. பிறப்பு குறைபாடுகள்

கருப்பு வால்நட் பருப்புகளில் உள்ள பைடேட்கள் DNA -இல் செல்லுலார் அளவிலான மாற்றங்கள் மற்றும் செல் இறப்பை ஏற்படுத்த காரணமாக திகழ்கின்றன; இந்த வால்நட் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வது பிறப்பு குறைபாடு அல்லது கருவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த காரணமாகலாம். இவை கருக்கலைப்பை கூட ஏற்படுத்தி விடலாம்; பேஸ்லின் ஆரோக்கிய நிறுவனத்தின் கருத்துப்படி, கர்ப்பிணி பெண்கள் கருப்பு வாதுமை கொட்டைகளை உட்கொள்ளக்கூடது. இதே தான் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும், அவர்களும் கருப்பு வால்நட் பருப்புகளை உட்கொள்ளக்கூடாது.

நல்ல வாதுமை கொட்டையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? – How to Choose Good Walnut in Tamil

அக்ரோட் அல்லது அக்ரூட் பருப்புகள் 3 வெவ்வேறு விதமான அளவுகளில் அதாவது சிறிய, மிதமான, பெரிய ஆகியன போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. வால்நட் பருப்பின் வெளிப்புறத்தை, பருப்பை மூடி இருக்கும் சிப்பியை நன்றாக சோதிக்கவும்; துளை அல்லது விரிசல்கள் கொண்ட பருப்புகளை தவிர்க்கவும். மூடி உள்ள பருப்பை தேர்வு செய்து, வாதுமை கொட்டை திரட்சியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வாதுமை கொட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்? – How to Use Walnut in Tamil

வால்நட் பருப்புகளை அப்படியே நேரடியாக நொறுக்குத்தீனிகளாக உட்கொள்ளலாம் அல்லது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். வாதுமை கொட்டைகளை எப்படி பயன்படுத்தலாம் என்ற சுவாரசியமான யோசனைகளை இங்கு காணலாம்:

 • வாழைப்பழம் மற்றும் யோகர்ட் ஆகியவற்றுடன் 2 முதல் 3 வாதுமை கொட்டைகளை சேர்த்து ஆரோக்கியமான ஸ்மூத்தி பானமாக பருகலாம்.
 • வாதுமை பருப்புகளை வறுத்து பொடியாக அரைத்து, அதில் பூண்டு, உப்பு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், சிறிதளவு மிளகு ஆகியவற்றை சேர்த்து பிரட்டில் தடவும் ஸ்பிரட்டை தயாரிக்கலாம்.
 • வாதுமை கொட்டைகள், நறுக்கிய ஆப்பிள், சிவப்பு மற்றும் மஞ்சள் மிளகுகள், பல்லாரி வெங்காயம் போன்றவற்றை சேர்த்து சுவை மிகுந்த சாலட்களை தயாரிக்கலாம்; இதில் கொழுப்பு குறைந்த பூண்டு வினைகிரேட் டிரஸ்ஸிங்கை சேர்த்துக் கொள்ளலாம்.
 • புரதம் நிறைந்த உணவை தயாரிக்க, பதப்படுத்தப்பட்ட டூனா, அவகேடோ,செலரி, ஆப்பிள்கள் போன்றவற்றை தயாரிக்கலாம்; இந்த உணவின் சுவையை அதிகரிக்க வறுத்த வால்நட்ஸ் மற்றும் புதிய எலுமிச்சை சாறை சேர்க்கலாம்.
 • ஒரு கை நிறைய நொறுங்கிய, வறுத்த வால்நட் பருப்புகளை வெண்ணெய் இல்லாத, சர்க்கரை இல்லாத, முழு தானிய பாதாம் ஓட்ஸ் குக்கீ தயாரித்து உண்ணலாம்.
 • வாதுமை கொட்டைகளை கேரமெல், நீல பாலடைக்கட்டி, காளான்கள், பென்னி பாஸ்தா, போர்ட், சுவையான சாலட்கள், ஜுச்சினி, உலர் திராட்சைகள், செர்ரி ஆகியவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
 • எப்பொழுதும் வாதுமை கொட்டைகளை மூடி வைக்க வேண்டும்; உண்ணும் பொழுது மட்டுமே வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது பருப்புகளை புதிதாக வைத்திருக்க பயன்படும்.

வால்நட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை; ஆகவே இந்த பருப்புகளை தினசரி உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

வாதுமை கொட்டையை எப்படி சேமிக்க வேண்டும்? – How to Store Walnut in Tamil

வால்நட் பருப்புகளை காற்று புகமுடியாத, வறண்ட, சூரிய ஒளி படாத இடத்தில் வைத்து சேமிக்கலாம்; இது வாதுமை பருப்புகளை 3 மாதங்கள் வரை சிப்பிக்குள் கெடாமல் வைத்திருக்க உதவும்.

பருப்பை மூடியிருக்கும் சிப்பியை நீக்கினால், வாதுமை கொட்டைகளை குளிர்சாதன பெட்டியில் ஆறு மாதங்கள் வரை சேமிக்கலாம். வால்நட் பருப்புகளை உறைய வைத்து, காற்று  புகாத வகையில் சேமித்து அப்பருப்புகளை ஒரு வருடம் வரை எந்தவொரு சேதமும் இன்றி சேமித்து வைக்கலாம். அக்ரூட் பருப்புகள் உணவின் சுவையை எளிதில் உறிஞ்சி எடுத்துக் கொள்ளக்கூடியவை; ஆகவே அவற்றை குளிர்சாதன பெட்டியில் வெங்காயம், முட்டைக்கோஸ், மீன் போன்ற உணவு பொருட்களிடம் இருந்து தள்ளி வைக்கவும்.

பரிந்துரைக்கப்படும் அளவு:

தினமும் 1 அவுன்ஸ் அளவு வாதுமை கொட்டைகளை உட்கொள்ளலாம்.

1 oz = ¼ கப் = 12 முதல் 14 அரை பருப்புகள், அளவை பொறுத்து மாறுபடும். வாதுமை கொட்டைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எவரும் உட்கொள்ளக்கூடாது; முறையான மருத்துவ கலந்தாய்வுக்கு பின்னர் இப்பருப்புகளை உண்பதே நல்லது.

வாதுமை கொட்டை அதாவது வால்நட் எனும் பருப்பு மனிதர்களுக்கு அள்ளித்தரும் ஆரோக்கிய, சரும மற்றும் தலைமுடி நன்மைகளையும், வால்நட்டின் பயன்கள், அதில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு போன்ற தகவல்களை பற்றி இந்த பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்கள்; இப்பதிப்பு உபயோகமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். வால்நட் பருப்பை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அக்ரூட் பருப்பினால் நீங்கள் அடைந்த பயன்கள் யாவை? வால்நட் பற்றி நீங்கள் அறிந்த வேறு நன்மைகள், பயன்கள் என்ன? என்பது பற்றி கீழே காணப்படும் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

Was this article helpful?
The following two tabs change content below.